Archive for the ‘மோகம்’ Category

பன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன?

ஒக்ரோபர் 22, 2019

பன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன?

Andrea Maria Jeremiah-5

மனோதத்துவ நிபுணராக விரும்பிய ஆண்டிரியா மாரியா ஜெரமையா: ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[ இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள லெவுவன் நகரத்தில் துணை ஆராய்ச்சியாளராக உள்ளார். நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் படித்து, விமன் கிருத்துவ மகளிர் கல்லூரியில் பயின்றார். ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார். மனோதத்துவ நிபுணராக வேண்டும் என்று விரும்பினார்[1]. கத்தோலிக்கக் குடும்பங்களில் அவ்வாறான நாட்டம் சகஜமானது தான், ஏனெனில், அவர்கள் பாவங்களை செய்வதை ஒப்புக் கொள்ளுதல் மற்றும் பாவ மன்னிப்பு போன்ற சடங்குகளை செய்து வருகிறார்கள். பாஸ்டர்களாக விரும்பும் ஆண்களுக்கு அது போதிக்கப் படுகிறது.

Andrea Maria Jeremiah
பாட்டு, நடிப்பு என்று சிறு வயதிலேயே சிறந்தது: எட்டு வயதாக இருக்கும் போதே, பியானோ கற்றுக் கொண்டார். பத்து வயதில் யங் ஸ்டார்ஸ் போன்ற இசைக் குழுவை அமைத்தார்[2]. பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கல்லூரிகளில் நாடகங்களில் நடித்து, மெட்ராஸ் பிளேயர்ஸ் மற்றும் ஐவம் முதலிய நாடகக் குழுக்களை [The Madras Players and EVAM] வைத்திருந்தார். விமன் கிருத்துவ கல்லூரி செனேட்டின் தலைவராகவும் இருந்தார். நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்க ஒரு கம்பெனியையும் [The Show Must Go On (TSMGO Productions)] ஆரம்பித்தார். திரைப்பட அழைப்புகள் வந்தாலும், நடிகை ஆக வேண்டும் என்ற விருப்பம் இல்லை என்றார். ஆனால், நடிகையாகி, இப்பொழுது அவஸ்தைப் படுவது, விதியா,சதியா என்னவென்று அவர் தான் தீர்மானித்தாக வேண்டும்.

Andrea Maria Jeremiah-2

நடிகையானது, படங்களில் நடித்தது: கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது. ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப் பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகத்து 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார். பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.

Andrea Maria Jeremiah-4

20 ஆண்டுகளில் உச்சத்தை எட்டிய ஆண்டிரியா: டிசம்பர் 1985 21ஆம் தேதி பிறந்த ஆண்டிரியா, நடிகை, சிறந்த பாடகி, இசை, நடிப்பு, நடனம் என்று பல துறைகளில் குறுகிய காலத்தில் சிறந்து விளங்கினார். எல்லாமே, சிறிய வயதில் இருந்து ஆரம்பித்த திறமைகள் தான். நன்றாக பயன்படுத்திக் கொண்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடகியாக தனது வேலையை திரைத்துறையில் ஆரம்பித்தார். முதன் முதலில் “நாகமண்டல” என்ற கிரீஸ் கர்னார்டின் நாடகத்தில் அறிமுகமாகி பிறகலழைப்புகள் அதிகரித்ததால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். குறுகிய காலத்தில் தமிழ் திரை உலகில் இருந்து பாடல்கள் சிறப்பாக இருந்ததால், இவருக்கு அதிகமான கிராக்கி இருந்தது. ஏ. ஆர். ரகுமான் குழுவிலும் பாடி வருகிறார்.

Andrea Maria Jeremiah-7

ஒரு நடிகர் / அரசியல்வாதியின் மீது ஆண்டிரியாவின் புகார்: அதுகுறித்து ஆண்ட்ரியா கூறியது, திருமணமான சமயத்திலேயே நான் அரசியல்வாதி நபருடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்திருந்தேன். அவரால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் மன ரீதியாகவும், ஆளானேன். அதனால் சிறிது காலம் நான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தேன் என பகிரங்கமான பேட்டியில் கூறியிருந்தார். எந்த நடிகையும் இப்படி ஒரு விஷயங்களை பகிரங்கமாக மேடையிலோ அல்லது ஊடகங்களிலும் கூட கூற மாட்டார்கள். ஆனால், ஆண்ட்ரியா எந்த துணிச்சலுடன் கூறினார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர் யார்? யார்? என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலை நான் எழுதிய “ப்ரோக்கன் விங்ஸ்” புத்தகத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு உள்ளேன் என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தார். இதனை அந்த அரசியல்வாதியும் கேட்டிருப்பார்.

Andrea Maria Jeremiah-6

மனோதத்துவ நிபுணராக விரும்பிய அவரே மனத்தளவில் பாதிக்கப் பட்ட நிலை: வட சென்னை படத்தில் நடித்ததற்கு பாராட்டுதல்களை பெற்றார்[3]. ஆனால்,பிறகு, படங்களில் நடிப்பதை விட்டு விட்டார். சமீபத்தில் அவர் மருத்துவரிடத்தில் சென்ற போது, தீவிர மன-அழுத்தத்தினால் பாதிக்கப் பட்டது தெரிய வந்தது[4]. பிறகு அவர் அதற்கான காரணத்தையும் சொல்ல முற்பட்டார்[5]. அப்போது அந்த புத்தகத்தில் சோகமாக பல வரிகள் உள்ளது என்று நிகழ்வுக்கு வந்தவர்கள் ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமணம் ஆன ஒரு நபருடன் நான் உறவில் இருந்தேன்[6]. அதனால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு அவரால் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்து இருந்தார்[7]. மேலும் இதிலிருந்து விடுபட சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டேன்[8]. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இந்தப் புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்[9]. அதோடு, அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்க அதுகுறித்த முழுமையான தகவலை தான் “broken wings” புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்[10]. இந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது ‘broken wings’ புத்தகத்தை வருகிற 17ஆம் தேதியன்று தன்னுடைய சமூக வலைத்தளம் பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.

Broken wings book, Andrea

ஊடகங்களின் வெளிப்பாடு[11]: அதோடு அதிர்ச்சியில் உறைந்து இருப்பார் என்று கூறுகின்றனர். சரியாக கடந்த ஒரு மாதமாகவே நான் அவர் யார்? என்று சொல்கிறேன், சொல்கிறேன் என்று புதிர் மேல் சொல்கிறேன், போட்டு கொண்டு அனைவரையும் ஏமாற்றி இருந்தார். அதனால், ரசிகர்கள் கோபம் அடைந்து எப்பதான் சொல்லப்போறீங்க? என கேட்டு வந்தார்கள். இதனால் கோடம்பாக்கத்து ஏரியாவே காத்துக்கொண்டிருக்கிறது எனவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். ஆக மொத்தம் ஆண்ட்ரியாவின் மூலம் ஒரு முக்கிய புள்ளி சிக்க போகிறார். ஆண்ட்ரியாவின் மூலம் ஒரு சிறப்பான சம்பவம் நிகழ போகிறது என கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.

Broken wings book, Andrea-11

நடிக-நடிகையரின் பொறுப்பற்ற பேச்சுகள், நடத்தைகள்: திருமணத்திற்கு முன்பாக பெண்கள் கற்புடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று குஷ்பு சொன்னது, ஒரு நடிகை விபச்சார வழக்கில் மாட்டிக் கொண்டபோது விபச்சாரத்தை ஆதரித்து நடிகைகள் பேசியது, பல பெண்களை மணந்துகொண்ட அல்லது சேர்ந்து வாழ்ந்த கமலஹாசன் போன்றவர் மக்களுக்கு அறிவுரை கூறுவது போன்றவற்றை பொதுமக்கள் நடிகர் நடிகைகள் மீதான வெறுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கின்றனது என்பது தெரிய வருகிறது. தொடர்ந்து நடந்துவரும் பாலியல் குற்றங்கள், செக்ஸ்-கொலைகள், தாம்பத்திய அசிங்கமான கற்பனைக்கும் எட்டாத கொடூர நிகழ்ச்சிகள் முதலியவை திரைப்பட தாக்கம்தான் என்று நீதிமன்றங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றன. அதுமட்டுமில்லாது தினந்தோறும் அத்தகைய அருவருப்பான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றனர். இதனால், நடிகர் நடிகைகள் பற்றிய மக்களுக்கு நல்ல எண்ணமே இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.

Andrea Maria Jeremiah-3 with Aniruddh

சமூகத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?: இந்த பிரச்சனையானது மனோதத்துவ சமூக கலை தொழில்ரீதியாக வேண்டுமா அல்லது வேறு வகையில் தீர்மானிக்கப்பட வேண்டுமா என்பது விவாதங்களுக்கு உட்படுத்தலாம். இருந்தாலும் இப்பொழுது நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறுவதும் அவ்வாறு மாறி ஆட்சிக்கு வரவேண்டுமென்ற ஊடகங்களுக்கு, ஏதோ சமூகமே தம்மால் தான் நடந்து வருகிறது சமூக மக்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள் ஒழுக்கத்தை எல்லாம் போதிப்பது, அதற்கு தனக்குத்தான் தகுதியுள்ளது என்பது போல நடந்து கொள்கிறார்கள். அவர்கள் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை இளைஞர்களது சினிமா மோகத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்ற எல்லாம் செயல்கள் இந்த சினிமா மோகம் வெறி அல்லது ஒரு மனோதத்துவ ரீதியில் ஒழுங்கீனமான ஒரு சிக்கல் குழப்பம் அல்லது நோயிலிருந்து விடுபட மற்ற சமூக அங்கத்தினர்களுக்கு பொறுப்பு உள்ளது. இன்று கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற கம்பெனிகளுக்கு பொறுப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சினிமாகாரர்களுக்கும் பொறுப்பு உள்ளது. இருப்பினும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என்ற நிலை இருக்கும் போது, சமூக அங்கத்தினர்கள் தான் பொறுப்பேறக வேண்டியுள்ளது. குறிப்பாக பெற்றோர் மற்றோர் சமூகத்தில் உள்ள சிறந்த அறிஞர்கள் ஆசிரியர்கள் முதல்வர்கள் தான் அவர்கள் சீரழியாமல் இருக்க பாடுபடவேண்டும். அவர்கள் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும் வாழ்க்கையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற முறையில் பொறுப்போடு செயல்பட வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

22-10-2019.

Broken wings book, Andrea-111

[1] Wikipedia, Andrea Jeremaiah –  https://en.wikipedia.org/wiki/Andrea_Jeremiah

[2] Jeremiah learned classical piano when she was eight. At age 10, she was a part of a Jackson Five-style troupe called Young Stars which formed the base of her early singing and music composing career.

[3] https://www.timesnownews.com/entertainment/south-gossip/article/andrea-jeremiah-opens-up-on-dealing-with-depression-there-were-times-i-wanted-to-run-away/466749

[4] India Today, Andrea says affair with married man pushed her into depression, , Web Desk, Chennai, August 10, 2019UPDATED: August 10, 2019 13:04 IST

[5] https://www.indiatoday.in/movies/regional-cinema/story/andrea-says-affair-with-married-man-pushed-her-into-depression-details-inside-1579433-2019-08-10

Kerala Kamudji, “I was in love with a married man, he abused me”: Andrea Jeremiah opens up about her affair, Saturday 10 August, 2019 | 5:05 PM
https://keralakaumudi.com/en/news/news.php?id=140368&u=i-was-in-love-with-a-married-man-he-abused-me-andrea-jeremiah-opens-up-about-her-affair-140368

[6] Kerala Kamudji, “I was in love with a married man, he abused me”: Andrea Jeremiah opens up about her affair, Saturday 10 August, 2019 | 5:05 PM

[7] https://keralakaumudi.com/en/news/news.php?id=140368&u=i-was-in-love-with-a-married-man-he-abused-me-andrea-jeremiah-opens-up-about-her-affair-140368

[8] India Glitz, married man pushed her into deep depression, Friday, August 9, 2019 • Tamil

[9] https://www.indiaglitz.com/andrea-affair-with-married-man-depression-broken-wings-poem-tamil-news-242014

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamil-actress-andrea-got-threatening-reason-by-politician

[11] https://tamil.behindtalkies.com/reveals-the-actor-name-who-spoled-her-life/

அமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை!

ஓகஸ்ட் 27, 2015

அமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை!

US warning for submitting fake documents

US warning for submitting fake documents

அமெரிக்க தூதரக அறிவுரை மீறி செயல்படும் ஆட்கள், கூட்டங்கள்: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெறுவதற்காக தினமும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பார்கள். இங்கிருந்து அமெரிக்கா செல்பவர்களை போலி ஆவணங்கள் மூலமாக அனுப்பி வைக்கும் மோசடிக்கும்பலும் நீண்ட நாட்களாகவே செயல்பட்டு வருகிறது[1]. அமெரிக்க மோகத்தில் திளைப்பவர்களை மூளைச்சலவை செய்து அவர்களிடம் இருந்து பணத்தையும் இந்த கும்பல் கறந்து விடுகிறது. இதுபோன்று போலி ஆவணங்கள் மூலமாக அமெரிக்கா செல்பவர்கள் தொடர்ந்து போலீசில் சிக்கி வருகிறார்கள். அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் போது மோசடி பேர் வழிகள் மாட்டிக் கொள்கிறார்கள்[2].  ஆகஸ்ட்.12ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததால் கைது செய்யப்பட்டார்[3]. டிசம்பர்.20014ல் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரயாண ஏற்பாடு ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்[4]. அமெரிக்க தூதரகம் இவ்வாறெல்லாம் செய்யாதீர்கள் என்றி அறிவித்திருந்தது[5]. இருப்பினும் தொடர்ந்து கள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதும், சோதனையில் கண்டுபிடிக்கப்படுவதும், சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்படுவதும், தொடர்கதையாக இருக்கிறது.

மலையாள நடிகை நீத்து கைது

மலையாள நடிகை நீத்து கைது

 நடிப்பில் தோற்ற நடிகை நடனமாட ஒப்புக்க்கொண்டது: சென்னையில், 26-08-2015 அன்று, போலி ஆவணம் மூலம், அமெரிக்கா செல்ல முயன்ற துணை நடிகை, கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருவில்லா என்ற ஊரைச் சேர்ந்தவர் துணை நடிகை, நீத்து கிருஷ்ண வாசு [27][6]. சில ஆண்டுகளாக, சென்னையில் தங்கி, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. போதிய வருமானமின்றி தவித்த நீத்து, நடன நிகழ்ச்சிகளில், குத்துப்பாடல்களுக்கு ஆடி வந்தார். பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என, சென்னை வந்த அவருக்கு, நடன மங்கையாக மாறியதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்கா செல்வது என, முடிவு செய்தார். கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த, சுபாஷ், 37, என்பவரின் நட்பு கிடைக்க, அவரையும் அமெரிக்கா அழைத்து செல்ல முடிவு செய்தார்[7]. இருவரும், போதிய ஆவணங்கள் இல்லாததால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்த, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த, செபஸ்டின் தாமஸ், 35, ராஜ், 35, ஆகியோரை அணுகினர்[8].போலி ஆவணங்கள் அவர்கள், நீத்து, சுபாஷ் ஆகியோரை, கணவன் – மனைவி என சித்தரித்து, பத்திரிகை அடித்து, பதிவு திருமணம் செய்து கொண்டது போன்றும், அமெரிக்காவில் நடக்க இருக்கும் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, இருவரும் செல்ல இருப்பது போலும், போலி ஆவணங்கள் தயாரித்து தந்தனர்[9].

US warning for submitting fake documents for getting VISA

US warning for submitting fake documents for getting VISA

போலி ஆவணங்கள் என்றதால் கைதானது: இந்த ஆவணங்கள், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதிகாரிகள் சரிபார்த்தபோது, ஆவணங்கள் போலி என, தெரியவந்தது. மேலும், அமெரிக்காவில், நீத்து, சுபாஷ் பத்மநாபன் தெரிவிப்பது போல், எந்த திருமணமும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்தனர்[10]. ‘நெட்வொர்க் 3’ இதையடுத்து, துாதரக அதிகாரிகள், நீத்து மற்றும் சுபாஷை, சென்னை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயாரிக்கும் கும்பலை சேர்ந்த, செபஸ்டின் தாமஸ் மற்றும் ராஜ் ஆகியோர் தலைமையில் பெரிய அளவில், ‘நெட்வொர்க் 3’ இயங்குவது தெரியவந்தது. 26-08-2015 அன்று, நீத்து, சுபாஷ், செபஸ்டின் தாமஸ் தஞ்சையை/புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜபகர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[11]. ராஜ் தலைமறைவாகி விட்டார்[12]. குஞ்சுமோன் என்ற இன்னொரு தரகரையும் போலீசார் தேடி வருகிறார்கள்[13]. இந்த கும்பலை சுற்றிவளைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்[14]. நடிகை நீத்து கிருஷ்ணா அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட திட்டமிட்டு விசா கேட்டுள்ளார்[15]. விசா வாங்கி தருவதாக அவரிடம் தரகர் கும்பல், ரூ.2 லட்சம் வரை பணம் வாங்கி இருப்பதாக தெரிகிறது[16].

Flora arrested in 2008 for submitting fake documents US VISA

Flora arrested in 2008 for submitting fake documents US VISA

கைதான பிறகு, புலம்பிய நடிகை: காவல் ஆய்வாளர் சத்தியசீலன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகி யோர் விரைந்து சென்று நீத்து கிருஷ்ணாவை பிடித்து விசாரணைக் காக போலீஸ் நிலையத்துக்கு அழைத் துச் சென்றனர். விசாரணையின்போது, “கேரளாவை சேர்ந்த ராஜூ என்ற சினிமா தயாரிப்பாளர் என்னை அணுகி, நீ நன்றாக நடனம் ஆடுகிறாய் அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறினார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை என்றேன். ரூ.2 லட்சம் கொடுத் தால் இடைத்தரகர்கள் மூலம் விசா வாங்கி விடலாம் என்று அவர் கூறிய தின்பேரில் அந்த பணத்தை கொடுத் தேன். இப்படி மாட்டிக் கொள்வேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை”, என்று நீத்து கிருஷ்ணா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்[17]. 2008ல் புளோரா என்ற ஆந்திர நடிகையும் இதே போல கைதானார்[18]. உண்மையில் நடிகைகள் அமெரிக்காவுக்குச் சென்று எப்படி பிழைப்பார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்பதும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படித்தவர்கள், பொறியியல், மருத்துவம் முதலியவற்றைப் படித்தவர்லளே அங்கு செல்வதற்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் சங்கங்கள், அமைப்புகள், உல்லாச விடுதிகள் இவர்களை வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிகிறது. எது எப்படியாகிலும், இவ்வாறு மாட்டிக் கொண்டத்கால், இனி அமெரிக்கா செல்ல இவர்களுக்கு ஜென்மத்திலும் விசா கிடைக்காது என்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

27-08-2015

[1] மாலைமலர், அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம்: கேரள நடிகை அதிரடி கைது பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 26, 11:15 AM IST.

[2] http://www.maalaimalar.com/2015/08/26111557/fake-document-to-US-visa-Keral.html

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/Man-held-for-producing-fake-documents-during-US-visa-interview-in-Chennai/articleshow/48453793.cms

[4]  Tejas helped his clients with forged documents, created on letterheads of firms that did not exist. The rate for such documents, depending on the country, ranged from Rs 1.5 lakh to Rs 4.5 lakh, he said.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Bengaluru-tour-operator-busted-for-US-visa-fraud-in-Chennai/articleshow/45367525.cms

[5]www.http//:chennai.usconsulate.gov/pdfs/consul-desk/visafraud.pdf

[6] தினமணி, போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற கேரள நடிகை கைது, சென்னை, First Published : 27 August 2015 03:10 AM IST

[7] http://timesofindia.indiatimes.com/city/chennai/Malayalam-actress-arrested-for-submitting-forged-documents-to-get-US-visa/articleshow/48682649.cms

[8] தினமலர், அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற துணை நடிகை கைது, ஆகஸ்ட்.27, 2015.03.01.

[9]  வெப்.துனியா, அமெரிக்கா செல்ல போலி விசா வழங்கிய கேரள நடிகை நீத்து கிருஷ்ணா கைது, Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (02:32 IST).

[10] http://www.newindianexpress.com/entertainment/malayalam/Malayalam-Actress-Arrested-for-Forgery-in-US-Visa-Application/2015/08/27/article2995422.ece

[11]  தி இந்து, விசா பெறுவதற்கு போலி ஆவணம் கொடுத்த கேரள நடிகை உட்பட 3 பேர் கைது, Published: August 27, 2015 08:21 ISTUpdated: August 27, 2015 08:22 IST

[12] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/malayalam-actress-neetu-krishna-arrested-115082600053_1.html

[13] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/08/27002234/Malayalam-actress-arrested-in-Chennai.vpf

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1327731

[15] http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/08/27/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article2995976.ece

[16] தினத்தந்தி, அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம் சென்னையில் மலையாள நடிகை கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஆகஸ்ட் 27,2015, 3:15 AM IST, பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 27,2015, 12:22 AM IST.

[17] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7585685.ece

[18] http://www.extramirchi.com/actress/actor-flora-granted-bail-on-us-visa-fake-documents-case/