நடிகர்களின் மனைவிகள், சன்னி லியோன் என்றால், பொறாமைப் படுகின்றனர், அது எதிர்ப்பாக வேறுவிதமாக வெளிப்படுகிறது!
நடிகை–மனைவிகள் பயப்படுவது பொறாமை தான்: ஆங்கிலத்தில் வந்துள்ள செய்தியை, தமிழ் இணைதள ஊடங்கள் மாற்றி-மாற்றி, ஏதோ தாங்களாகவே கண்டு பிடித்து போடுவது போல, தலைப்பை மாற்றி வெளியிட்டுள்ளன[1]. பிளிம்பீட் மற்றும் லைவ்டே, ஆங்கிலத்திலும், தமிழிலும், மற்ற மொழிகளிலும் விசயத்தை வெளியிட்டுள்ளது[2]. ஷாரூக் கானின் மனைவி கௌரி கான், அமீர் கான் மனைவி கிரண் ராவ், சயீஃப் அலி கான் மனைவி கரீனா கபூர். இவர்கள் எல்லோருமே நடிகைகள் தாம். ஆனானப் பட்ட ஷா ருக் கானின் மனைவி கௌரி கான் போன்றவர்களே, இவரைக்கண்டு பயப்படுகின்றனர் என்பது தமாஷாக இருக்கிறது[3]. தனால் தான், சன்னி, உங்க புருஷன்களை ஆன் ஒன்றுன் செய்து விடமாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் போலும்[4]. தன் கணவன் ஒழுங்காக இருக்கிறனா என்று இதுவரை அவர்கள் கண்காணித்தனரா என்று தெரியவில்லை. சன்னி, நிச்சயமாக, மற்ற நடிகைகள் ஆர்த்து பொறாமைப் படும் அளவிற்கு வாட்டம்-சாடமாக இருக்கிறார். கவர்ச்சியாக நடிப்பதில், கைதேர்ந்தவராக இருக்கிறார்.
கரேன்ஜித் கௌர் வோஹ்ரா அன்னி லியோன் ஆன கதை: கரேன்ஜித் கௌர் வோஹ்ரா மே13, 1981ல் பிறந்தவர், பிறகு நடிப்பு, மாடலிங், போர்ன் என்றெல்லாம் தொழிலில் ஈடுப்பட்ட நிலையில் சன்னி லியோனின் பெயர் பிரபலமானது. 2010ல் உலகிலேயே தலைசிறந்த பத்து போர்ன் நடிகைகளில் ஒருவராக இருந்தார். 2011ல் டேனியல் வெபர் [Daniel Weber] என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுமார் 60 படங்களில் நடித்த இவர், இப்பொழுது இந்தியாவில் தங்கி விட்டார். பலவித படங்களில், ஆணுறை விளம்பரம் போன்றவற்றில் துணிச்சலாக நடித்திருக்கிறார். இருப்பினும் “போர்ன்” நடிகை என்பதுதான், எல்லோருடைய மனதிலும் மிஞ்சியிருக்கிறது. உடலுறவு என்பது, நடிகர்-நடிகையர்களையும், அவர்களது மனைவியர்களையும் பயப்பட வைக்கிறது என்று தெர்கிறது. அதே நேரத்தில், “படுத்தால் தான் சான்ஸ்” போன்ற புகார்கள் வெளிப்படையாக வந்து கொண்டிருக்கும் நிலையில், இது மட்டும் எப்படி வித்தியாசமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் பங்களா வாங்கினார் சன்னி![5]: இந்திப் படங்களில் நடித்துவருபவர் சன்னி லியோன். சமீபத்தில் 36-வது பிறந்த நாளை கொண்டாடிய இவர் அமெரிக்காவில் புதிய பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். ஷெர்மன் ஓக்ஸ் என்ற இடத்தில் இவரும் கணவர் டேனியல் வெப்பரும் வாங்கியுள்ள இந்தப் பங்களாவில் 5 பெட்ரூம், நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், கார்டன் என உள்ளன. ‘சன்னியும் நானும் இந்த இடத்தை வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தோம். அது இப்போது நடந்திருக்கிறது. இத்தாலி, ரோம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்து கலைப்பொருட்களை வாங்கி வைத்திருக்கிறோம். பங்களாவை அழகுபடுத்தும் பொருட்களை வாங்குவதற்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார் டேனியல்[6]. வசதியாகத்தான் உள்ளனர் தம்பதியர்!
வாழ்க்கையில் கிடைத்த விலைமதிக்க முடியாத பரிசு எனது கணவர்: “நான் எனது பிறந்தநாளை எப்போதும் பிரம்மாண்டமாக கொண்டாடுவேன். இந்த முறையும் அப்படிச் செய்தேன். எனது இளம்பருவ நாட்கள் மகிழ்ச்சியானவை. எனது பெற்றோருடன் நான் செலவிட்ட நாட்களை மறக்க முடியாது. எனக்கு எனது வாழ்க்கையில் கிடைத்த விலைமதிக்க முடியாத பரிசு எனது கணவர் டேனியல் வெபர்தான். அவர்தான் எனக்கு உறுதுணையாக எப்போதும் இருக்கிறார். இந்த முறை நியூயார்க்கில் எனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடினேன்.” என்றார் சன்னி லியோன்[7]. இவர்களே, இப்படியிருக்கும் போது, நடிகர்களின் மனைவிகள், நடிகைகள் இவரைப் பார்த்து பயப்படுவது தமாஷான விசயம் தான். ஒருவேளை பொறாமையாக இருக்கும். நடிப்பு என்றால், எல்லாமே நடிப்பாக எடுத்துக் கொள்கிறார் சன்னி, ஆனால், அத்தகைய பக்குவம், இந்த செக்யூலார் நடிகைகளுக்கு, நடிகர்களின் மனைவிகளுக்கு வரவில்லை போலும். “வாழ்க்கையில் கிடைத்த விலைமதிக்க முடியாத பரிசு எனது கணவர்”, என்ற நிலையில் இவரிருக்கும் போது, நடிகர்களின் மனைவிகளும் அவ்வாறே இருக்க வேண்டாமோ?
தமிழகத்தில் தாக்கம் ஏன்?[8]: தனக்குப் பிடித்த நடிகர் – நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் தொடங்குவதெல்லாம் 1980, 90களில் ஃபேஷனாக இருந்தது. தங்கள் படத்தை வெற்றிபெற வைப்பதற்காக நடிகர்கள், காசு கொடுத்து ரசிகர் மன்றங்களை நடத்திய காலமெல்லாம் உண்டு. ஆனால், நடிகைகள் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது, த்ரிஷா மற்றும் நயன்தாராவிற்கு ரசிகர் மன்றம் இருக்கிறது. சமீபத்தில் கூட கீர்த்தி சுரேஷுக்கு கூட ரசிகர் மன்றம் திறந்தனர். ஆனால், முதன்முதலாக கவர்ச்சி பட நடிகை ஒருவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர் தமிழ் இளைஞர்கள். கனடா நாட்டைச் சேர்ந்த சன்னி லியோன், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ஆபாசப் படங்களில் நடித்துள்ள அவர் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். தமிழில் கூட ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவருக்கு, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்காவில் உள்ள துத்திக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளனர். சன்னி லியோன் படங்களுடன், அவர்கள் படங்களையும் சேர்த்து பிளக்ஸ் அடித்து ஊரில் நட்டுவைத்து ஆனந்தப்பட்டுள்ளனர் இளைஞர்கள்[9]. நடிகைகளுக்கு கோவில் கட்டியவர்கள், தமிழர், ஆக, இதிலும் முந்தி கொண்டு விட்டனர் போலும்.!!
© வேதபிரகாஷ்
24-05-2017
[1] FilmBeat, Sunny Leone Furious With Wives Of A-list Actors For Not Allowing Their Husbands To Work With Her!, By: Vinod Dsouza, Published: Monday, May 22, 2017, 13:48 [IST]
[2] http://www.filmibeat.com/bollywood/news/2017/sunny-leone-furious-over-wives-of-a-list-actors-for-not-allowing-their-husbands-to-work-with-her-261431.html
[3] India Live today, Most of Bollywood mainstream actor’s wives fear Sunny Leone: Why?, Published by : Staff Reporter, May 22, 2017 3:45 pm
[4] http://movies.indialivetoday.com/2017/05/22/most-of-bollywood-mainstream-actors-wives-fear-sunny-leone-why/
[5] புதியதலைமுறை, அமெரிக்காவில் பங்களா வாங்கினார் சன்னி !, பதிவு செய்த நாள் : May 18, 2017 – 12:17 PMச் மாற்றம் செய்த நாள் : May 18, 2017 – 12:23 PM
[6] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/cinema/21/93532/sunny-leone
[7] தமிழ்.வெப்.துனியா, எனக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத பரிசு ‘அவர்‘: சன்னி லியோன், Published 18-May-2017 11:54 IST
http://tamil.eenaduindia.com/2017/05/18115434/My-Husband-Is-My-Most-Precious-Gift-Birthday-Girl.vpf
[8] தமிழ்.வெப்.துனியா, கவர்ச்சி கடல் நடிகைக்கு ரசிகர் மன்றம், Last Modified: புதன், 10 மே 2017 (15:21 IST).
[9] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/fans-club-for-sunny-leone-117051000038_1.html