சினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்டவர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்!
வழக்கமான செய்தி வந்துள்ள விதம்: காதலர் தினத்தை நெருங்கும் வேளையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, சிறுமியை, அவரது தாயின் உதவியுடன், பாலியல் தொழிலில் தள்ளி சீரழித்த, சினிமா இயக்குனர் உட்பட, மூன்று பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்[1] என்று செய்தி வந்துள்ளது. தமிழக சி.பி.சி.ஐ.டி., விபசார தடுப்பு பிரிவு போலீசாரை, 08-02-2015 அன்று, வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டு, சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த, பாலியல் தரகர் ராஜேஸ்வரி மற்றும் தமிழ் சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு ஆகியோர், 14 வயது சிறுமியை, பாலியல் தொழிலில் சிக்க வைத்து, அவரது வாழ்வை சீரழித்து வருவதாக தெரிவித்தார்[2]. அந்த பெயர் தெரியாத வாலிபர் நல்ல காரியத்தை செய்துள்ளார். இருப்பினும், அந்த 14-வயது சிறுமி அல்லது இளம்பெண் மனபாதிப்பு, மற்ற பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பான நிலைக்கு வர எத்தனை நாள் ஆகும் என்று தெரியவில்லை.
போலீஸாரிடம் சிக்கிய குற்றவாளிகள்: குழந்தைகள் நல கமிட்டி சார்பில் இந்த புகார் கொடுக் கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கரன்சின்கா உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசீனிவாசன், இன்ஸ்பெக்டர் சிவானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்[3]. அதையடுத்து, தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் துணையுடன், சினிமா இயக்குனர் செந்தமிழ் அரசு மற்றும் ராஜேஸ்வரியை, வாடிக்கையாளர்கள் போல், போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது, செந்தமிழ் அரசு, சிறுமியுடன், பாலியல் உறவு கொள்ள, ௧.௫௦ லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும், முன் பணமாக, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்க, போலீசாரும் சம்மதித்தனர்[4]. போலீசாரை, பல இடங்களுக்கு வரவழைத்த செந்தமிழ் அரசு, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, 10 ஆயிரம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்டு, சிறுமியை அனுப்பி வைத்தார்[5]. அப்போது, போலீசார் கையும் களவுமாக, அவரை பிடித்தனர். விசாரணையில், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக, ஆசை வார்த்தை கூறிய செந்தமிழ் அரசு, தாயின் துணையுடன், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி, சீரழித்தது தெரியவந்தது[6].
சினிமா ஆசையில் மகளை நடிக்க வைத்து, பிறகு விபச்சரத்தில் தள்ளிய தாய்: பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு உடன் பிறந்த தங்கை மற்றும் தம்பி உள்ளனர். இவரது தந்தை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. தந்தை இறந்து விட்டதாகவும், இதனால் தாய் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும், அதனால், தன்னுடைய மகளை நடிகை ஆக்க வேண்டும் என்ற பேராசையில் இறங்கி, விபச்சாரத்தில் தள்ளியதாக “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” கூறுகிறது[7]. தாயே நடிகை என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” கூறுகிறது[8], “நடிகை தனது மகளை விபச்சாரத்தில் தள்ளினாள்” என்று தலைப்பிட்டு, இதே செய்தியை கொடுத்துள்ளது[9]. சினிமா உதவி இயக்குனர் ஒருவருடன், தாயார் சேர்ந்து வாழ்ந்தார். குறிப்பிட்ட சிறுமி 9-வது வகுப்பு படித்து வந்தார். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, சிறுமியை சினிமாவில் நடிக்கவைக்க தாயார் முயற்சி மேற்கொண்டார். பலருடன் வாழும் பெண், இப்படி கற்பு பற்றிய சிந்தனை போய், மகளையும் விபச்சாரத்தில் தள்ளுவாள் என்றால், அந்நிலையை மற்ற பெண்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பலருடன் உடலுறவு கொள்வதால் மரத்து விடுவதால், பெண்மையை, தாய்மையை மறந்துவிடுவது வியப்பான விசயமே.
தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கு அனுப்பிய கொடூரன்: சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்ற பெண் தரகர் உதவியுடன், சென்னை போரூரைச் சேர்ந்த செந்தமிழ்அரசு (37) என்பவரை பார்த்தனர். செந்தமிழ்அரசு தான் 2 படங்கள் டைரக்டு செய்து வெளியிட்டு இருக்கிறேன் என்றும், தன்னுடைய புதிய படத்தில் சிறுமியை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பதாகவும் கூறினார்[10]. இதற்காக ரூ.1 லட்சம் தருவதாக சிறுமியின் தாயாரிடம் கூறியதாக தெரிகிறது. கடந்த 1 ஆண்டாக, சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, செந்தமிழ் அரசு பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை விபசாரத்திலும் ஈடுபடுத்தி உள்ளனர்[11]. சிறுமியிடம் விசாரித்தபோது, செந்தமிழ் அரசு, தரகர் ராஜேஸ்வரி மற்றும் தன் தாய் மூன்று பேரும், வலுக்கட்டாயமாக, பலருடன், பாலியல் உறவு கொள்ள வைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து, செந்தமிழ் அரசு உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் 09-02-2015 அன்று கைது செய்தனர். சிறுமி, அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்[12]. அந்த கும்பலிடம் இருந்து, நான்கு அலைபேசிகள் மற்றும், 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன[13]. இவன் ஒரு கிரிமினல், குற்றவாளி கடுமையாகத் தன்டிக்கப் படவேண்டியவன், அவ்வளவுதான்.
இயக்குனர் அல்ல அவன், கற்ப்பழிப்பாளி, சமூக சீர்ப்பழிப்பாளி: இயக்குனர்கள் சங்கத்தில் விசாரித்தபோது, இவர் பிரபலம் ஆனவர் இல்லை என்று தெரிய வந்தது. படங்கள் எதையும் இவர் டைரக்டு செய்யாமல் தவறான தகவல்களை சொல்லி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பிரபல காமெடி நடிகர் ஒருவர், அவரது நண்பர் ஆவார். அந்த காமெடி நடிகரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எது எப்படியிருப்பினும், அவன் ஒரு கற்ப்பழிப்பாளி மற்றும் சமூக சீர்ப்பழிப்பாளி ஆவான். தாய் முறைதவறி நடக்கும் போது, அவள் மகளையும் கெடுக்கத் துணிந்துள்ளாள் என்றாகிறது. ஆனால், இவ்வாறு கெட்டவர்கள், மற்றவர்களைக் கெடுத்துக் கொண்டு போனால், சமூகம் எப்படி உருப்படும் என்று தெரியவில்லை.
பெண்களின் பாலிய உரிமைகள் எதுவரை செல்லும்?: சமூகம் இவ்வாறிருக்கும் போது, எப்படி தார்மீக உணர்வுகளை, சிந்தனைகளை, கருத்துகளை கேலி செய்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் சுதந்திரம் என்று பேசுபவர்கள் இவற்றையும் பெண்களின் உரிமைகள் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. சமீபத்தில் விபச்சாரிகளின் உரிமைகளுக்கு மாநாடு நடத்தி, கோரிய பெண்மணிகள் இப்படி இளம்பெண்கள் சீரழிவதை தவறு என்பார்களா அல்லது தங்களது வியாபாரத்திற்கு இன்னொரு வரவு என்று ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. விவாக ரத்து, பலதார திருமணம், திருமணத்திற்கு வெளியே செக்ஸ்-உடலுறவு, அவற்றை நியாயப்படுத்துக் உக்கால நாரீமணிகள் முதலியவை இனிமேல் என்னாகும், என்ன செய்வார்கள்? தாங்கள் சொன்னது சரியாகிவிட்டது என்று ஆர்ப்பரிப்பார்களா அல்லது சமூகம் கெடுவதைத் தடுப்பார்களா? அவர்களது பெண்களையும், இப்பெண் போல விபச்சாரத்திற்கு அனுப்புவார்களா, இப்படி கேட்பது தவறுதான், இருப்பினும், அவர்களது வெளிப்பாடு எப்படியிருக்கும் என்று ஆராயும் போது, இத்தகைய எண்ணமும் தோன்றுகிறது. இவற்றிற்கெல்லாம் எப்படி கட்டுப்பாடு வரும், எல்லைகள் வரையறுக்கப் படும் என்று தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
11-02-2015
[1] தினமலர், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய், சினிமா இயக்குனர் உட்பட 3 பேர் கைது, 10-02-2015: 23:57.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1181116
[3] http://www.dailythanthi.com/News/State/2015/02/11013658/Having-cinematic-figure-girl-arrested-for-prostitution.vpf
[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=131335
[5] தினகரன், பாலியல் புகாரில் திரைப்பட இயக்குனர் கைது பெண் புரோக்கரும் சிக்கினார், 10-02-2015.
[6] தினத்தந்தி, 14 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளிய சினிமா பிரமுகர் கைது ரூ.1 லட்சத்திற்கு விலைக்கு விற்ற தாயும் சிறையில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்:
புதன், பெப்ரவரி 11,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: புதன், பெப்ரவரி 11,2015, 1:36 AM IST
[7] The girl’s father died when she was young and her mother married another man. It was the zeal to “show off” that her daughter was an actress that made the mother force her child into flesh trade, the officer said.
[8] A Selvaraj, Actress held for forcing daughter into flesh trade, TNN | Feb 11, 2015, 05.33 AM IST
[9] http://timesofindia.indiatimes.com/city/chennai/Actress-held-for-forcing-daughter-into-flesh-trade/articleshow/46194751.cms
[10] The Hindu, Three arrested on prostitution charge, Chennai, February 11, 2015.
[11]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/02/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D/article2663251.ece
[12] http://www.thehindu.com/news/cities/chennai/three-arrested-on-prostitution-charge/article6880406.ece?ref=tpnews
[13] தினமணி, சிறுமிக்கு பாலியல் நிர்பந்தம்: தாய், திரைப்பட இயக்குநர் கைது, By dn, சென்னை; First Published : 11 February 2015 04:03 AM IST.