Archive for the ‘ஸ்ரேயா’ Category

நடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு?

ஒக்ரோபர் 19, 2016

நடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு? 

preity-tabu-shushmita-urmila-etcபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, நர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்தில் தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.

nargis-neha-parveen-asha-suraiyya-nanda

கீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

tamanna-namita-kausalya-anushka-nayan-shreyaசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

திருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.

trisha-X

trisha-X

திருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.

Gautami, Kamal and Akshara

Gautami, Kamal and Akshara

திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.

Lakshmi Rai

காதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.

© வேதபிரகாஷ்

18-10-2016

[1] pinkvilla.com, 11 Bollywood actresses for whom marriage isn’t the only thing in life, February 12, 2016.

[2] http://www.pinkvilla.com/entertainment/discussion/349643/11-bollywood-actresses-whom-marriage-isn-t-only-thing-life

[3] http://www.mtvindia.com/blogs/general/just-in/7-bollywood-divas-whore-willing-to-sacrifice-their-career-for-marriage-52191842.html

[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1629730

[6] புதியதலைமுறை, திருமணமா? அலறும் தமன்னா!, பதிவு செய்த நாள் : April 24, 2016 – 07:41 AM, மாற்றம் செய்த நாள் : April 24, 2016 – 07:44 AM

[7] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/cinema/21/20321/rumours-about-tamanna-marriage/C21

[8] http://m.dinakaran.com/cdetail.asp?Nid=9457

[9]  தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.

[10]http://www.tamilcinemafire.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9/

ஶ்ரீ ராமானுஜர் திரைப்படம், துலுக்கநாச்சியார், சரித்திர ஆதாரங்கள் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்கும் விதம்!

பிப்ரவரி 7, 2014

ஶ்ரீ ராமானுஜர் திரைப்படம், துலுக்கநாச்சியார், சரித்திர ஆதாரங்கள் இல்லாத கட்டுக்கதைகளை வளர்க்கும் விதம்!

மாலிக்ககாபூர் -ரங்கநாதர்-துலுக்கநாச்சி

மாலிக்ககாபூர் -ரங்கநாதர்-துலுக்கநாச்சி

ஶ்ரீராமானுஜர்  திரைப்படம்  உருவாகி  வருகிறது: கடந்த ஜூலை 2013லேயே, “ஶ்ரீ ராமானுஜர்” திரைப்படம் உருவாகி வருவதைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன[1]. “தி ஹிந்து” ஸ்டில்களுடன் சரித்திர ரீதியில் ஒரு குறிப்பையும் கொடுத்ததது[2]. இந்து மதத்தில் தோன்றிய மகான் ஸ்ரீராமானுஜரின் சரித்திரம் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீராமானுஜர் என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தை ஹையகிரீவா சினி ஆர்ட்ஸ் [Hyagreeva Cine Arts] என்ற நிறுவனம் சார்பாக தி.கிருஷ்ணன், பி.ஆர்.சேதுராமன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம், பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது[3]. ரவி.வி.சந்தர் டைரக்ட் செய்கிறார். ஸ்ரீராமானுஜராக கிருஷ்ணன் என்பவர் நடிக்கிறார். இப்படி செய்திகள் தொடர்ந்தன.

கோவிந்தராஜனுக்கு பதிலாக ரங்கநாதன் கட்டுக்கதை

கோவிந்தராஜனுக்கு பதிலாக ரங்கநாதன் கட்டுக்கதை

ராமானுஜராக  நடித்து  இயக்கும் கிருஷ்ணன்: தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர், “நான் பணக்காரக் குடும்பத்திலிருந்து வரவில்லை. இன்றைக்கு ஶ்ரீ ராமனுஜரின் அனுக்கிரகத்தினால் நான் ஒரு கப்பல் கம்பெனியை வெற்றிக்கரமாக நடத்தி வருகின்றேன். இப்படத்தை அவருக்கேக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். இன்றைய இளைஞர்கள் நம்முடைய பாரம்பரியத்தை அறியவேண்டிய அவசியம் உள்ளது”, விளக்கினார். எப்படியிருந்தால் என்ன, பணம் இல்லாமல், சினிமா எடுக்கமுடியாது, சினிமா எடுப்பதால், பணம் இருக்கிறது என்றாகிறது.

ராமானுஜர் ரங்கநாதர்

ராமானுஜர் ரங்கநாதர்

ராமானுஜரின் காலம்: ராமானுஜரின் காலம் 1017-1137 CE என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகிறார்கள். டி. என். சுப்ரமணியம் என்கின்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர் 1077-1197 CE என்று வாதிட்டார். ஏனெனில் குலோத்துங்கன் – II சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜர் விக்கிரகத்தை கடலில் எரிந்ததால், அவன் காலத்தில் ராமானுஜர் இருக்கவேண்டும் என்று வாதிட்டார். ஓய்வு பெற்ற எஸ். ராமசந்திரன் என்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர், குலோத்துங்கன் வைஷ்ணவத்திற்கு விரோதமாக இருந்தான் என்று, “அரி சமயம் மீட்டெடுத்த” என்ற ராஜராஜன் – II மெய்கீர்த்திக் கல்வெட்டைக் குறிப்பிட்டு வாதிடுகிறார். சோழர்கள் வைஷ்ணவத்திற்கு விரோதிகள் அல்லர் என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர்.

ஶ்ரீரங்கநாதர்

ஶ்ரீரங்கநாதர்

சோழர்கள்  வைஷ்ணவ  விரோதிகளா?: அன்னிகேரே (தார்வார்) என்ற இடத்தில் உள்ள கல்வெட்டைக் குறிப்பிட்டு, “குரூரமான சோழன் தன்னுடைய சமய குடும்ப பின்பற்றப்பட்டு வரும் முறைகளை விடுத்து பெலெவோலா என்ற இடத்தில் நுழைந்தான்; ஜைன கோவில்களை அழித்தான்; கங்கமண்டலத்தின் அதிபதியான கங்கபெருமானடி என்ற இடத்தில் கட்டிய கோவிலையும் இடித்தான்”, என்ற தகவல்களை எடுத்துக் காட்டினார். ராஜேந்திர சோழன் – I பெண்களையும், குழந்தைகளையும் கொன்றான்; பெண்களைக் கவர்ந்து கொண்டு சென்றான், என்று ஹோட்டூர் (தார்வார்) கல்வெட்டு ஆதாரமாக சொன்னார். சாளுக்கியனின் சேனாதிபதியான, சாமுண்டராஜனின் ஒரே மகளான நாகளையி மூக்கை அறுத்தான்; அஹவமல்லா என்ற சாளுக்கியனைத் தோற்கடித்தப் பிறகு அவனுடைய வயதிற் சிறிய ராணிகளையும் மற்ற பெண்களையும் கவர்ந்து சென்றான், என்று அவர்களுடைய மெய்க்கீர்தியில் உள்ளது என்று விவரித்தார். அதாவது இவையெல்லாம், சோழர்கள் எப்படி குரூரமானவர்கள் என்பதை காட்டுவ்வதற்காக விளக்கினாராம். அதனால், அவர்கள் வைஷ்ணவத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கலாம் என்ற வாதத்திற்கு பலத்தை ஏற்படுத்துகிறார்[4].

துலுக்கநாச்சி உதாரண சித்திரம்  - ஶ்ரீரங்கம் கோவில்

துலுக்கநாச்சி உதாரண சித்திரம் – ஶ்ரீரங்கம் கோவில்

ஶ்ரீரங்கத்தில் ஒரு  துலுக்கநாச்சியார் / பீவிநாச்சியார்: இது இப்படி இருக்கும் நிலையில், சரித்திர ஆதாரம் இல்லாத “துலுக்க நாச்சியார்” விசயத்தையும் இதில் சேர்த்துள்ளனர். “ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமேஅடைக்கலமாகி விட்டாள். பின்னால் அந்த விக்கிரகத்தை மீட்டுக் கொண்டுவந்தபோது பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து வந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள்[5]. இந்நிகழ்வை நினைவுகூறும் முகத்தான் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசி திருவிழா பகல் பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம் இனத்தவரைப் போன்று லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க
நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும்
நடந்துவருகிறது.   துலுக்க நாச்சியாருக்கு எம்பெருமான் ஒருவனே புகலிடம். அவனின்றி
தனக்கு வேறு கதியில்லை என்ற (சரணாகதி பூண்ட) வைணவ சித்தி
விளைந்ததால் ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்துத் தொழத்தக்கப் பெருமை
பெறுகிறார்”, என்றெல்லாம் குறிப்புகள் காணப்படுகின்றன[6]. ஆனால், இதற்கு ஆதாரங்கள் எவையும் இல்லாமல், வாய்வழி வந்தவை பிறகு எழுதி வைத்ததாகத் தெரிகிறது.  இஸ்லாமியர்களுக்கு உருவ வழியாடு இல்லை என்பதால் இந்தச் சந்நிதியில் துலுக்க நாச்சியார் வண்ணச் சித்திரம் மட்டுமே இருப்பதைப் பார்க்கலாம்[7], என்கிறது ஒரு இணைதளம். இது இந்து கோவில் என்பதால், அத்தகைய விளக்கமே தேவையில்லை. ஒருமசூதியில் அவ்வாறிருந்து, அங்கு விக்கிரகம் இல்லையென்றால், அத்தகைய விளக்கம் பொறுந்தும். எனவே, பொய்கதையை எப்படியெல்லாம் வளர்க்கிறார்கள் என்று தெரிகிறது.

துலுக்கநாச்சி சந்நிதி - ஶ்ரீரங்கம் கோவில்

துலுக்கநாச்சி சந்நிதி – ஶ்ரீரங்கம் கோவில்

மேல்கோட்டையில் இன்னொரு துலுக்க நாச்சியார் / பீவிநாச்சியார்: “இதே போன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்க்கோட்டைதிருநாராயணபுரத்தில் செல்லப்பிள்ளைப் பெருமாளிடம் இரண்டறக் கலந்ததுலுக்க நாச்சியாரின் வரலாறும் மேற்படி நிகழ்வோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும்”, என்றும் அக்குறிப்பு எடுத்துக் காட்டுகிறது. அப்படியென்றால், இரண்டு இடங்களிலும், துலுக்கர்கள் விக்கிரங்களை, கோவில்களை இடித்து எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு இடங்களிலும், இரண்டு துலுக்கநாச்சிகள் ரங்கநாதனிடம் காதல் கொண்டு ஐக்கியமாகி இருக்கவேண்டும். வைணவர்கள் இவ்வாறு கதைகளைக் கட்டி விட்டாலும், துலுக்கர்கள் / முஸ்லிம்கள் இக்கதைகளை ஏற்ருக் கொள்வதில்லை.

Bibi nachiyar sannidhi (2)

துலுக்க  நாச்சியாராக  நடிக்கும்  ஸ்ரேயா: ஏற்கனவே ‘சந்திரா’ படத்தில் மகாராணி சந்திராவதியாக நடித்த ஸ்ரேயா டில்லி பாதுஷாவின் மகள் பீவி நாச்சியாராக நடிக்கிறார்[8]. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா நடிக்கும் நேரடி தமிழ் படம் இது, என்று செய்திகள் அல்லிக் கொட்டுகின்றன. சரி, அந்த பாதுஷா அல்லது மாலிக்காபூராக நடிப்பது யார் என்று சொல்லப்படவில்லை. ஸ்ரேவுக்கு சமமாக ஒரு நடிகர் நடிக்க வருவாரா என்று பார்க்க வேண்டும். ராதாரவி, ஸ்ரீமன், நிழல்கள்ரவி, உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தின் பாடல்களை அமரர் வாலி எழுதிக் கொடுத்து விட்டு போய்விட்டார். இளையராஜா இசை அமைக்கிறார். பிர்மூர் தாமஸ் கேமராமேனாக பணியாற்றுகிறார்.

சாதிகளற்ற  சமுதாயம், எல்லா  மதத்தினருக்கும்   நற்கதிசெக்யூலரிஸத்தில்  திளைக்கும்  விசயங்கள்: சாதிகளற்ற சமுதாயம், எல்லா மதத்தினருக்கும் நற்கதி, பார்ப்பணர் என்ற பெயரில் நிலவிய பாகுபாட்டுக்கு எதிர்ப்பு என புரட்சியாளராய் வாழ்ந்த மகான் ஸ்ரீராமனுஜர்[9] என்கிறது ஒரு இணைதளம். சாதி வேறுபாடற்ற சமுதாயம், எல்லா மதத்தினருக்கும் நற்கதி என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக போதித்த மகனானின் வாழ்க்கையே இந்தப் படம், என்று சிறிது மாற்றிக் கூறுகிறது இன்னொரு இணைதளம். “சாதிகளற்ற சமுதாயம்”, சரிதான், அதென்ன, “எல்லா மதத்தினருக்கும் நற்கதி”? துலுக்கர்கள் அதாவது முகமதியர் அதாவது முஸ்லிம்கள், கிருத்துவர்கள் ஒப்புக் கொள்வார்களா? ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது, நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் வரப்போகும் வரலாற்று காவியம் இது என்கிறார் இயக்குனர் ரவி.வி.சந்தர்[10]. கேமரா மேன், பிரைமஸ் தாஸ் ஒரு கிருத்துவராம், இவர் ராமானுஜரைப் பற்றிய புத்தகங்களைப் படித்துள்ளாராம். இப்படியாக செக்யூலரிஸப் பூச்சும் பூசப்படுகிறது.

வேதபிரகாஷ்

© 07-02-2014


[2] Suganti Krishnmachari, On a visionary and his mission, CHENNAI, July 11, 2013, Updated: July 11, 2013 19:14 IST

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/on-a-visionary-and-his-mission/article4904719.ece

[4] There is evidence to show that the Cholas did not always adhere to dharmic rules, and were capable of barbarity. There is an inscription in Annigere in Dharwad, dated 1071 A.D. which speaks thus of Rajadhi Raja, grandson of Raja Raja the Great, and son of Rajendra Chola: “the wicked Chola, who had abandoned the religious observances of his family, penetrated into the Belvola country, and burnt the Jain temples, which Gangaperumanadi, the lord of Gangamandala, while governing Belvola, had built in Annigerenad.” An inscription in Hottur, Dharwad district, Karnataka, says that Rajendra Chola I slaughtered women and children and seized women. The meikeerthi of Vira Rajendra says he severed the nose of Nagalai, the only daughter of the Chalukya general, Chamundaraja. When Chalukya Ahavamalla was defeated, his chief queens Sattiyavai and Sangappai, other minor queens and many other women were carried away as war booty by Rajendra II, and his meikeerthi refers to this.