40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை
கவர்ச்சிகரமாக, தாராளமாக நடித்த ஸ்வேதா மேனன்: 1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன். மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார். ‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்[1]. பொதுவாக இந்நடிகை மிகவும் கவர்ச்சியாகவும், தாராளமாகவும் நடித்திருப்பது தெரிகிறது. நடிகையைப் பொறுத்த வரையில், அதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் கவர்ச்சியாக, ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை திரையில் ஒருமாதிரியும், நேரில் வேறு மாதிரியும் பார்க்க மாட்டார்கள் என்பது, மனோதத்துவ ரீதியில் உண்மையாகும்.
வெள்ளிக்கிழமை நடந்த படகு போட்டி: ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி 01-11-2013 அன்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது. அதில், ஏராளமானோர், தங்கள் படகுகளுடன், தீரத்தைக் காண்பிக்க போட்டியில் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில், வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன், நடிகை, ஸ்வேதா மேனனும் அமர்ந்திருந்தார். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஸ்வேதா மேனன், மலையாள படங்களில், மிகவும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். அவர் அருகில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., என்.பீதாம்பர குரூப் அமர்ந்திருந்தார். ஒருவர் பாட்டுப்பாட, ஸ்வேதா ஜோராக கைத்தட்டுவதும், கையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தார். ஒரு நிலையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தவர் மைக்கை பீதாம்பரத்திடம் கொடுக்கும் போது, பாய்ந்து இவர் எடுத்துக் கொண்டு ஏதோ பேச ஆரம்பித்தார். எம்.பி “சரி, நீயே பேசம்மா” என்பது போல, கையினால் செய்கை செய்தது போலவும் இருந்தது. இவரது செய்கை பலரை கவர்ந்தது, சுற்றியிருப்பவர் அவரையே பார்த்த விதத்தில் தெரிந்தது.
காங்கிரஸ் எம்.பியின் பாலியல் சில்மிஷம்: படகுப் போட்டியை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பீதாம்பர குரூப் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது வீடியோவில் தெரிந்தது, பிறகு இலேசாக இடித்ததும் தெரிகிறது[2]. நடிகை ஸ்வேதாவை, “சில்மிஷம்’ செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, தர்மசங்கடத்தில் நெளிந்தார். அவர் பக்கம் திரும்பி பார்ப்பதும் தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் கலைந்து சென்றதும், நடிகை, பத்திரிகையாளர்களை சந்தித்தார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[3]. முதலில் பெயரைக் குறிப்பிடவில்லை. மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், “வீடியோ’ காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது[4]. தனது கையை, ஸ்வேதா மேனனைத் தொடுவதற்காக நீட்டியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது[5].
மறுக்கும் எம்.பி: காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் விசயங்களில் மாட்டிக் கொள்வதில் சகஜமாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அசோக் சிங்வி வீடியோ வெளிவந்தது. முன்னர் என்.டி.திவாரி மாட்டிக் கொண்டார். ராகுல் காந்தி மீது கூட அத்தகைய புகார்கள் கொடுக்கப்பட்டன[6], புகைப்படங்களுடன் கிசுகிசுக்கள் வெளியாகின[7]. கேரளாவும் இவ்விசயத்தில் சளைத்தது அல்ல[8]. காங்கிரஸ்காரர்கள் அதிகமாக சிக்கியுள்ளனர், மற்ற கட்சியினரும் உள்ளனர்[9]. ஐஸ்கிரீம் பார்லர் இருந்து, இப்பொழுது சோலார் பெனல் வரை நடிகைகள், செக்ஸ் முதலியன உள்ளன[10]. “இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அவர் மீது தனக்கு மரியாதை உள்ளது, தேர்தல் சமயம் என்பதனால், நான் ஒரு அரசியல்வாதி என்பதாலும் அவ்வாறான புகார் கூறப்படுகிறது[11]. எதிர்கட்சிகளும் ஆதாயம் தேடப் பார்க்கிறது,” என்ற ரீதியில் 73 வயதான பீதம்பர குருப் மறுத்திருக்கிறார்[12].
மாவட்டஆட்சியரிடம்புகார் அளித்தது, புகாரைஏற்கமறுத்தது: சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார்? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார். ஸ்வேதா மேனன் தனது கணவர் ஸ்ரீவல்சன் மேனனுடன், ‘அம்மா’ உள்ளிட்ட திரைப்படத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தனது புகார் தொடர்பாக விவரித்துள்ளார்[13]. அவர் கூறுகையில், “மேடையில் இருந்த என்னை, அந்த எம்.பி., தொட்டுத் தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார்,” என்றார். காங்கிரஸ் எம்.பி. மீதான புகாரை, முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் புகாரை ஏற்க மறுத்தது தனக்கு இன்னும் வேதனையைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரிடமும் புகார் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்[14]. கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம்!
© வேதபிரகாஷ்
02-11-2013
[1] மாலை மலர், அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 02, 2:20 AM IST
[2] http://timesofindia.indiatimes.com/city/kochi/Shweta-Menon-alleges-molestation-Congress-MP-denies-charge/articleshow/25118452.cms
[5] http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article5309249.ece
[6] http://secularsim.wordpress.com/2013/08/09/controversies-regarding-rahul-affairs-with-different-women/
[7] http://secularsim.wordpress.com/2013/08/09/rahul-is-he-married-bachelor-in-love-why-debates-about-his-marital-status/
[9] http://socialterrorism.wordpress.com/2009/12/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/
[10] http://secularsim.wordpress.com/2013/07/21/solar-scam-links-widens-with-politicians-actresses-dons-with-all-shades/
[11] http://www.deccanchronicle.com/131102/news-current-affairs/article/actor-shweta-menon-claims-she-was-insulted-kerala-event
[12] http://www.ndtv.com/article/south/actress-shweta-menon-alleges-molestation-mp-denies-charges-440743