Archive for the ‘ஹஸன்’ Category

கமல்-கவுதமி விவகாரம் – பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம், பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம் (2)

நவம்பர் 2, 2016

கமல்கவுதமி விவகாரம்பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம், பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்  (2)

gautami-took-decision-as-a-mother

என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன்[1]:என் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு விஷயத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மாற்றம் இன்றியமையாது என்பதே அதுவாகும். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவையே. அப்படி நிகழும் மாற்றங்கள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததாக, நாம் முன்னரே முடிவு செய்து வைத்ததாக இருப்பது அவசியமில்லை. நான் தற்போது எடுத்துள்ள முடிவு ஒரு பெண் தனது வாழ்நாளில் எடுக்கக்கூடிய மிகக் கடினமான முடிவாகும். ஆனால், மிக அவசியமான முடிவு. ஏனெனில், முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதுஎன் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்து உள்ளேன்.”

 sandeep-bhatia-and-gautami-married-in-1998-and-divorced-in-1999

அவருடைய படங்களில் அவரது கனவுகளுக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன்[2]:திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாக இருந்தே கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகையாவேன். இப்போதும்கூட அவருடைய சாதனைகள், அவருடைய திறமைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அவர் சவால்களை எதிர்கொண்டபோது எல்லாம் அவருக்கு துணையாக இருந்திருக்கிறேன். அவருடன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நாட்களில் நிறைய தொழில்முறை நுணுக்கங்களைக் கற்று கொண்டிருக்கிறேன். அவருடைய படங்களில் அவரது கனவுகளுக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன். இனிவரும் நாட்களிலும் அவருடைய ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு அவரது படைப்புகள் இருக்கும். நானும் அவற்றை பாராட்டுவேன். இந்த வேளையில் என்னுடைய அதிமுக்கிய முடிவை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணமும் இருக்கிறது. என் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ரசிகர்களாகிய உங்களுக்கு மத்தியிலேயே நான் கவுரவமாக கடத்தியிருக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் அளப்பரியது. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவுமே என் வாழ்நாளின் கடினமான தருணங்களில் எனக்கு பெருந்துணையாக நின்றிருக்கிறது,” என்று கூறிஉள்ளார்[3].  இதுதொடர்பாக செய்தி சேனலுக்கு பேட்டி அளித்து பேசிய கவுதமி, கமல்ஹாசனுடன் பிரிவது என்பது உடனடியாக எடுக்கப்பட்டது கிடையாது, தீவிரமாக யோசித்த பின்னரே இம்முடிவை எடுத்து உள்ளேன், என்றார்[4]. தொடர்ந்து கமல்ஹாசனுடன் திரைப்படங்களில் பணியாற்றுவேன் என்றும் கவுதமி கூறியுள்ளார்[5].

subbulaxmi-kamal-gautami

தனது மகளுக்கு தாயாக இருக்க விரும்பிய கவுதமி: கவுதமி சொல்லியிருக்கும் கீழ்கண்ட வார்த்தைகள் மிக முக்கியமான, உள்ளர்த்தம் கொண்ட, உண்மை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன:

  1. முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
  2. என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன்.
  3. அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும்.
  4. அந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்து உள்ளேன்.

நான்கு வயது குழந்தையோடு கவுதமி 2003ல் கமலிடம் வந்தபோது, சுருதிக்கு 17 வயது மற்றும் அக்ஷராவுக்கு 12 வயது. முன்னமே குறிப்பிட்டப் படி, கமல் மூவரையும் சமமாகவே பாவித்து வளர்த்து வந்தார். இருப்பினும், பெண்கள் வளர-வளர சில வித்தியாசங்கள் ஏற்படத்தான் செய்யும். கமல் ஹஸனுக்கு கோபம் அதிகம், உணர்ச்சி வசப்பட்டு கலாட்டா செய்யும் ஆசாமி. இதனால், பெண்கள் வளர்ப்பதில் பிரச்சினைகள் அதிகமாக இருந்தது. ஒருமுறை பள்ளியில் “அட்மிஷன்” போதுகூட, விண்ணப்படுவத்தில் கொடுக்க வேண்டிய விவரங்களுக்காக எரிச்சலடைந்து, கமல் ஹஸன் கலாட்டா செய்துள்ளார். அந்நிலையில் வந்த கவுதமி அனைவற்றையும் அனுசரித்துக் கொண்டு வாழ்ந்துள்ளார். சுருதியின் “நவநாகரிக போக்கு” கவுதமிக்குப் பிடிக்கவில்லை. எடுத்துக் காட்டியபோது, அவளுக்குப் பிடிக்கவில்லை. மிகவும் ஆபாசமாக, அரைநிர்வாண கோலத்தில் நடிக்கிறாள் என்பது தான் பிரச்சினை. ஆனால், கமல் ஏற்றுக் கொண்டார்.

thevar-he-ram-panchatantram-vasulraja-mbbs

2000-2016 வருடங்களில் கமல் படங்கள் சர்ச்சையில் சிக்கியது, நஷ்டம் ஏற்பட்டது[6]: கமல் ஹஸன் புத்திசாலியாக இருந்தால் கூட, படக்கதை, படத்தின் பெயர், பாடல்கள், படத்தில் மையக்கரு முதலிய விவரங்களில் யார் ஆலோசனைக் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை. தானாக செய்தாரா, யாராவது ஆலோசனை கொடுத்து அல்லது வற்புருத்தி அவ்வாறு செய்தாரா என்பனவெல்லாம் மர்மமாக இருக்கின்றன. எது எப்படியாகிலும், 2000-2016 ஆண்டுகளில் அத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டு, நஷ்டம் ஏற்பட்டது. உதாரணங்களில் சில:

படம் வெளியிட்ட ஆண்டு பிரச்சினை / சர்ச்சை / விளைவு
தேவர் மகன் 1992 தேவர் சமுதாயம் “தங்களை” மிகவும் வன்முறையாளர் போல சித்தரித்திருப்பதை எதிர்த்தது.
ஹே ராம் 2000 விடுதலை போராட்டத்தை எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டதாக எதிர்ப்பு. இசையமைப்பாளர் எல். சுபரமணியம் நீக்கப்பட்டு இளையராஜா இசையமைத்தது.
பஞ்சாமிர்தம் 2002 ஒரு ஆபாச பாட்டை சென்சார் போர்ட் மறுத்ததால், அது நீக்கப்பட்டது.
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் 2004 இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள், படத்தின் பெயருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விருமாண்டி 2004 “சண்டியர்” என்று பெயர் வைத்தர்கு எஸ்.சி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், “விருமாண்டி” என்று மாற்றப்பட்டது. இதுவும் தேவர் சமூகத்தை உயர்த்திக் காட்டும் படம்.
முன்பை எக்ஸ்பிரஸ் 2005 பாட்டாளி மக்கள் கட்சி, படப்பெயருக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
மன்மத அம்பு 2010 இந்துமதத்தை இழிவு படுத்தும் பாடலை “இந்து மக்கள் கட்சி” எதிர்த்தது.
விஸ்வரூபம் 2013 முஸ்லிம் அமைப்புகள் எதிர்த்தன. பல காட்சிகள் நீக்கப் பட்டன. பலத்த நஷ்டம் ஏற்பட்டது.

இதனால், “போத்தீஸ்” போன்ற விளம்பர்த்தில் கூட கமல் நடிக்க நேர்ந்தது. “விஸ்வரூபம்” பிரச்சினையாலும், நஷ்டத்தினாலும், “விஸ்வரூபம்-2” விநியோகத்தில் தயக்கம் காட்டப்பட்டு வருகிறது[7]. அதற்குள் “சபாஷ் நாயுடு” படத்தில் சர்ச்சையும், விபத்தும் ஏற்பட்டு முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் தான் குடும்பப் பிரச்சினையும் தலைத்தூக்கியது.

© வேதபிரகாஷ்

02-11-2016


virumandi-mumbai-express-manmatha-ambu-viswarupam

[1] தி.இந்து, நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: கெளதமி அறிவிப்பு, Published: November 1, 2016 13:59 ISTUpdated: November 1, 2016 13:59 IST.

[2] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article9291086.ece?homepage=true

[3] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/11/01143743/Kamal-Haasan-and-Gautami-no-longer-together.vpf

[4] தினமலர், கமலை பிரிந்தார் கவுதமி – மபனவருத்தத்தில் இந்த முடிவை எடுத்ததாக அறிவிப்பு, நவம்பர். 01, 2016. 14.24.

[5] http://cinema.dinamalar.com/tamil-news/52629/cinema/Kollywood/Kamal—Gautami-life-comes-to-end.htm

[6] http://www.infoqueenbee.com/2013/02/a-list-of-controverisies-of-movies-of.html

[7] http://indiatoday.intoday.in/story/vishwaroopam-2-kamal-haasan-sequel-trouble-release-date/1/733928.html

“வெளியேறுவேன், ஆனால், வெளியேற மாட்டேன்”, கமல் ஹஸன் அடிப்பது ஜோக்கா, காட்டுவது பூஜ்ஜாண்டியா – வெளியேறினால், யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

ஒக்ரோபர் 7, 2013

“வெளியேறுவேன், ஆனால், வெளியேற மாட்டேன்”, கமல் ஹஸன் அடிப்பது ஜோக்கா, காட்டுவது பூஜ்ஜாண்டியா – வெளியேறினால், யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

கமல் ஹஸன் என்ற நடிகன் அல்லது முன்பு உபயோகப்படுத்திய வார்த்தையில் குறிப்ப்டுவதால் கூத்தாடி[1], தமிழகத்தை விட்டு வெளியேறுவேன், இந்தியாவை விட்டு வெளியேறுவேன், என்று அடிக்கடி மிரட்டிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால், யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பதை பார்க்க வேண்டும். ஒரு நடிகன் அப்படி சென்றுவிட்டால் என்னவாகி விடும், குடி முழுகிவிடுமா, விலைவாசி குறைந்து விடுமா, ஊழல் இல்லாமல் போய் விடுமா? சினிமா துறையின் மூலம், இந்திய சமூகத்தை சீரழிப்பதில் இந்நடிகன் பெரும்பங்காற்றிருக்கிறான் என்றால் மிகையாகாது?

கமல் ஹஸனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு எதிப்பு: கமல் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்தது.   இதனால் கமல், நாட்டை விட்டே வெளியேறப்போகிறேன் என்று அறிவித்தார். அப்பொழுது இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் பேசக் கூட நாதியில்லாமல் இருந்தது, இந்த உலக மகா நயனுக்கு! இதையடுத்து கமல் மீது பல்வேறு தரப்பினரும் கவனத்தை திருப்பினர்.   பின்னர் இந்த பிரச்சனைகள் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு படம் திரைக்கு வந்தது, அதாவது, அடிப்படைவாத முஸ்லிம்கள்:ஐத் திருப்தி படுத்திதான், படம் வெளியிடப் பட்டது. இந்தப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து விஸ்வரூபம்-2 படத்தை எடுத்து வருகிறார் கமல்.   இப்படத்திற்கும் ஆரம்பத்திலேயே முஸ்லிம்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.  இப்பொழுதும், அதை எதிர்த்து பேச தைரியம் இல்லாமல், இந்தியாவை விட்டு ஓடிவிடுவேன் என்று பூஜ்ஜாண்டி காட்டுகிறார்!

நான்நாட்டைவிட்டுவெளியேறுவதைநாடுஅனுமதிக்குமா? : கமல்கேள்வி[2]: இந்நிலையில், பெங்களூரு பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்[3],  “நாட்டின் அனைத்து திரைப்பட துறையையும் பாலிவுட் என,அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மொத்த திரைப்படங்களில் 50 சதவீத திரைப்படங்கள், தென்னிந்தியாவிலிருந்து வெளிவருகின்றன. ஹாலிவுட்டை இந்தியாவுக்கு இடமாற்ற வேண்டும் என்பது என் குறிக்கோள்கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்ற கருத்திலிருந்து பின் வாங்க மாட்டேன். நான் நாட்டை விட்டு வெளியேறுவதை நாடு அனுமதிக்குமா?”, என்று கேள்வி எழுப்பினார்[4]. இவர் ஏதோ வெளிநாடு சென்றால், எல்லோரும் “செல்லாதே, செல்லாதே”, என்பது போல இருக்கிறது. வெளிநாடு சென்று வாழும் அளவிற்கு பணம் கொழுத்துக் கிடக்கிறது என்றால், தாராளமாக, யார் வேண்டுமானாலும் செல்வான், இதில் ஆச்சரிப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இந்தியாவை விட்டு வெளியேறமாட்டேன்: தினமணியில், இப்படி சொன்னதாக உள்ளது, “விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடுவதற்கு தொந்தரவு ஏற்பட்டதால், நாட்டைவிட்டு வெளியேறுவதாகக் கூறினேன். என் வார்த்தையை திரும்பப்பெற விரும்பவில்லை; எனக்கு ஏற்பட்ட தொந்தரவை எண்ணி கோபத்தில் அவ்வாறு குறிப்பிட்டேன். இந்தியாவைவிட்டு வெளியேறமாட்டேன்[5]. குறிப்பிட்ட வார்த்தைகளை, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா[6], இந்தியா டுடே நாளிதழ்கள் ஒரே மாதிரி போட்டிருப்பதால், கமல் ஆங்கிலத்தில் பேசியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஆகவே, தமிழில் “வரும், ஆனால் வராது” போன்று, “வெளியேறுவேன், ஆனால், வெளியேற மாட்டேன்”, என்று ஜோக்கடிப்பது போல உள்ளது!

எனக்குப் பிடித்த தலைவர் காந்திதான்: கமல் ஹஸன், “ஒரு வகையில் எல்லோரும் அரசியல்வாதிகள்தான். வாக்களிக்க மட்டுமே கைவிரலில் மை வைத்துக் கொள்வேன். அரசியல் கறையை கை முழுக்க பூசிக் கொள்ள விருப்பம் இல்லை. ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து நான் கருத்துக் கூற முடியாது. ரஜினியையும், கமலையும் உங்களுக்கு பிடிப்பது போல, மகாத்மா காந்தியையும், பெரியாரையும் எனக்குப் பிடிக்கும். காந்தியின் அஹிம்சைக் கொள்கை என்னைக் கவர்ந்துள்ளது. எனக்குப் பிடித்த தலைவர் காந்திதான்”,[7] என்று சொன்னதும் பெரிய ஜோக்குதான்! காந்தியை பிடித்து என்ன பிரயோஜனம், அவர் வழியில் 1% கூட கமல் பின்பற்றவில்லையே? நிஜவாழ்க்கையே அதற்கு அத்தாட்சியாக உள்ளதே!

பெரியாரும், ராமானுஜரும் வெவ்வேறல்ல: கமல், தத்துவம், உதிக்கிறது, “ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தை தட்டியெழுப்பிய சமூகப் போராளி என்பதால், பெரியாரைப் பிடிக்கும். பெரியாரும், ராமானுஜரும் வெவ்வேறல்ல. கடவுள் குறித்து இருவரது கருத்துகளும் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் இருவரின் பணி, நோக்கம், இலக்கு ஆகியவை ஒன்றாக இருந்தன”, என்றார் கமல்ஹாசன். ஆஹா, அரசியல் மை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தாரையே பூச ஆரம்பித்து விட்டது, ஹாலிவுட்டா, பாலிவுட்டா என்று தெரியவில்லையே?

ரஜினி போன்று என் போஸ்டரைப் பயன்படுத்த பாஜகவினரை அனுமதிக்க மாட்டேன் – நடிகர் கமலஹாஸன்!மேலும் திருச்சியில் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தில்  பா...வினர் ரஜினியின் போஸ்டரை பயன் படுத்தியதற்கு ரஜினி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லைஅதே போல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன்.” என்றும் கமல் கூறினார். ஆனால், முஸ்லிம்கள் “கமல் ஹஸன்” என்று போட்டு உறவு கொண்டாடுவதையும், போஸ்டர்கள் ஒட்டுவதையும், எப்படி இந்த செக்யூலரிஸ ஞானப்பழம் ஒப்புக் கொண்டது? இவரது பலதார இல்லை பல பெண்களுடனான உறவுகளை, முஸ்லிம்கள் ஊடகங்கில் கிழி-கிழியென்று கிழித்துள்ள போதும், செக்யூலரிஸ போதையில் மயங்கி கிடந்ததே? அதுவும் மறந்து விட்டதோ? இந்திய சட்டங்களை மீறி, ஏமாற்றி சிக்காமல் இருக்கும் பலபெண்கள் கொண்ட புருஷன் கமல் தான் என்றும் வர்ணித்தனர்.

தமிழகத்தை விட்டு வெளியேறும் முடிவை கமல்கைவிடவேண்டும் : ரஜினி, விஜயகாந்த்வேண்டுகோள்[8]: தமிழகத்தை விட்டு வெளியேறும் எண்ணத்தை கமல் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.   தமிழகத்தை விட்டே தாம் வெளியேற தயார் என கமல் கூறியது மனத்தை ரணமாக் கிவிட்டது.  கலைத்துரைக்கு தன்னை அர்ப்பணித்து விட்ட கமலை அரசு புண்படுத்தியுள்ளது.  உணர்ச்சிகரமான பிரச்சனையில் இரண்டு தரப்பையும் அழைத்து பேசியிருக்க வேண்டும்.  இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கமல் மீண்டு வருவார் என்று விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், கமலை தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முடிவை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தை விட்டு வெளியேறும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நடிகர் அர்ஜூ னும் வலியுறுத்தினார். ஜனவரி போய் அக்டோபர் வந்துள்ளது. இப்பொழுது, உள்ளூர் விவகாரத்தை உலக விவகாரம் ஆகிவிட்டது போலும்!

© வேதபிரகாஷ்

07-10-2013


[1] இவ்வார்த்தை எம்.ஜி.ஆருக்கே திமுகவினர் உபயோகப் படுத்தியுள்ளனர்.

[2] He also said that he had made the statement of “leaving the country” in the wake of initial ban of “Vishwaroopam” earlier this year out of anguish as he was hurt. “I will not take back that word. If I am threatened or troubled again as an artiste, I can leave the country. But can the country leave me?” Kamal Haasan said.

http://www.indianexpress.com/news/kamal-haasan-if-i-am-threatened-again-as-an-artiste-i-can-leave-the-country/1179067/

[3] He also said that he had made the statement of “leaving the country” in the wake of initial ban ofVishwaroopam earlier this year out of anguish as he was hurt.”I will not take back that word. If I am threatened or troubled again as an artiste, I can leave the country. But can the country leave me?” Haasan said.http://indiatoday.intoday.in/story/kamal-haasan-tamil-movie-karnataka-south-india-ramesh-aravind/1/313273.html

[7] தினமணி,  06 October 2013 03:59 AM IST