Posts Tagged ‘அணைப்பு’

நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்!

மார்ச் 29, 2012

நிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்!

 

மகளுக்காக மடிவிரிக்கும் ஶ்ரீதேவி: திரையுலகின் முன்னாள் நடிகையான ஸ்ரீதேவிக்கு மும்பை மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[1]. 13-08-1963ல் பிறந்த ஶ்ரீதேவிக்கு 50 வயதாகிறது. 1970-80களில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. கமல்-ஹஸனுடன்[2] சேர்த்து என்னென்னவோ விவகாரங்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வந்தன. இந்தியில் ஜிதேந்திராவுடன் நெருக்கமாக நடித்துள்ளதால் இருவரையும் இணைத்து செய்திகளும் வந்தன. ஆனல் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த பின்னர் மும்பையில் செட்டிலான ஸ்ரீதேவி இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் ‌காட்டி வருகிறார். இம்முறை தனக்காக அல்ல, தனது மகளுக்காக. ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த பெண் ஜானவியை சினிமாவில் இறக்கும் முயற்சியாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் தனது மகளுக்காக கதை கேட்க ஆரம்பித்துள்ளார்.

ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அறை குறை ஆடையுடன் வந்தாராம்: இந்நிலையில் சமீபகாலமாக நடிகை ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அறை குறை ஆடையுடன் வரத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட ஸ்ரீதேவி அரை குறை ஆடையுடன் வந்துள்ளார். கடந்த வாரத்தில் முமையில் நடந்த லக்மே காட்சியில் தனது மகளுடன் கவர்ச்சி ஆடையில் கலந்து கொண்டார்[3]. பேஷன் ஷோக்களில் மார்பகங்களை 50 டொ 70% காட்டாமல் வரும் நடிகைகளெ இல்லை எனலாம். பிறகென்ன அறை குறை ஆடை / உடை என்பது என்ன என்று தெரியவில்லை. ஐஸ்வர்ய ராயை இங்கு[4] பார்த்து எப்படி அவர் இத்தகைய்ய உடையில் வந்துள்ளார் என்று கேட்கமுடியுமா?

நிர்வாண நடிகைகளை ஏன் மகளிர் அமைப்பினர் எதிர்ப்பதில்லை: மேலும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும் நடிகைகள்[5], நிர்வாணமா நடிக்கத் துடிக்கும்[6] நடிகைகள்[7], நடித்து விட்ட[8] / நடிக்கும் நடிகைகள்[9] – இவர்களைப் பற்றி ஏன் அந்த மகளிர் அமைப்பினர் கண்டுகொள்ளவில்லை, எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதற்கு அங்குள்ள மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று ஆடை அணிந்து வருவதை அவர் தவிர்க்க வேண்டும் என்றும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். கற்பு, ஒழுங்கு முதலிய குணங்களை சினிமா தொழிலில் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை[10]. எந்த நடிகையும் தான் சோரம் போகவில்லை என்று துணிந்து சொல்லுவாளா என்று தெரியவில்லை.  இத்தொழிலில் நன்னடத்தை, நஇயாயம், நேர்மை, தர்மம் முதலியவை எதிர்பார்க்க முடியாது[11].

மும்பை என்றாலே நிர்வாணத்திற்கும், விபச்சாரத்திற்கும் அளவேயில்லை: மும்பை நடிகைகள் அரைகுறையான உடைகளில், குறிப்பாக டூ-பீஸ் உடைகளில் நடிப்பது 70களிலேயெ சர்வ சகஜம்[12]. ஹெலனைப் பார்த்த பிறகு யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. அதற்கு பிறகு “ஏ” படங்களில் அளவிற்கு அதிகமாக உடையைக் குறைத்து நடித்துள்ளனர். வெற்றுடம்பைக் காட்டிய நடிகைகள் அநேக பேர்கள் உள்ளனர். சிமி நிர்வாணமாக நடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. முழுவதுமாக மார்பங்களைக் காட்டி பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்து புகழ் பெற்றவர் பூஜா பட் என்ற நடிகைதான். இப்பொழுது கங்கணா ஒரு மாதிரியாக போஸ் கொடுத்துள்ளார். விபச்சாரத்தை தொழில் ரீதியாக அங்கீகரித்துள்ள நகரம் மும்பை. விபச்சாரம் பெருகுவதற்கும் அது காரணமாக உள்ளது. போலிஹுட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

மகளிர் அமைப்பினர் செய்ய வேண்டியது என்ன? ஆகவே மகளிர் அமைப்பினர் உண்மையிலேயே, இப்பிரச்சினைப் பற்றி கவலைக் கொள்வதாக இருந்தால், அன்னா ஹஜாரே போன்று இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் போராட வேண்டும். மகளிர் அமைப்பினர் முதலில் ஒழுங்காக உடை அணிந்து கொண்டு வரவேண்டும். என்.டி.டி.வி, டைம்ஸ், ஐ.பி.என், எக்ஸ் போன்ற சேனல்களில் விவாதங்களில் பங்கு கொள்ளும் அம்மணிகள், பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் ஒன்றும் கேட்க முடியாது, கேட்கக் கூடாது என்ற ரீதியில் பேசுகிறார்கள். பப், குடி, இரவு நேர ஆட்டங்கள் முதலியவற்றில் பெண்கள் / நடிகைகள்[13] பங்கு கொள்வதை ஆதரிக்கிறார்கள்,பிறகு ஏன் இந்த நாடகம்?

வேதபிரகாஷ்

29-03-2012