Posts Tagged ‘ஆட்டம்’

நயனதாரா, தமன்னா – கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்!

திசெம்பர் 28, 2016

நயனதாரா, தமன்னாகொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்!

nayatara-and-tamanna-attack-suraaj-for-his-sexist-remarks

நடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை: நயனதாரா தொடர்கிறார், “ஆனால், நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொம்மைகளாகப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பணம் செலவழித்து தியேட்டருக்குப் படம் பார்க்க வருகிறார்கள் என்பது போல், அவர் எந்த வகையான ரசிகர்களை மனதில் நினைத்துக்கொண்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆடைகளைக் குறைப்பதற்காகவே நடிகைகள் பணம் பெற்றுக்கொண்டு நடிக்கின்றனர் என்ற கருத்தைக் கூறுவதன் மூலமாக, சினிமாவில் இது மட்டுமே நடக்கிறது என்பதாக, இளைஞர்கள் நினைக்கும் அளவுக்கு சுராஜ் பேசி, அவர்களை தவறாக வழிநடத்துகிறார்ஆடைகளை களையவே நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கின்றனர் என்று சுராஜ் கூறியதன் மூலம், சினிமாவில் இப்படித்தான் நடக்கிறது என்று எல்லோரும் நடிகைகளைப்பற்றி தவறாக நினைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நானும் வணிக படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். டைரக்டர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ, பணம் கொடுத்தார்கள் என்பதற்காகவோ அப்படி நடிக்கவில்லை. கதைக்கு தேவையாகவும், எனக்கு உடன்பாடாகவும் இருந்தால் மட்டுமே நடித்திருக்கிறேன். நடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை”, இவ்வாறு நயன்தாரா கூறினார்.

ranya-rao-response-to-suraajநடிகைகளை பொம்மைகளாகஜடப்பொருளாக பாவிக்கக் கூடாது, பார்க்கக்கூடாது: தமன்னா கூறியதாவது: “நடிகைகள் பற்றி டைரக்டர் சுராஜ் தெரிவித்த கருத்து, என்னை காயப்படுத்தியுள்ளது. கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் என்னிடம் மட்டுமின்றி, சினிமா துறையில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும். நடிகைகளாகிய நாங்கள், ரசிகர்களை சந்தோஷப்படுத்தவே நடிக்கிறோம். அதற்காக எங்களை காட்சி பொம்மைகளாக பார்க்கக்கூடாது. தென்னிந்திய படங்களில் 11 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு பிடித்த உடைகளை அணிகிறேன். நமது நாட்டின் பெண்களை கேவலமாக பேசுவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஒரு தனிநபர் கருத்துகளை வைத்துக்கொண்டு, சினிமா துறையே இப்படித்தான் என்று நினைக்கவேண்டாம்என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்,” இவ்வாறு தமன்னா கூறினார்.   ரசிகர்கள் நிச்சயமாக, இத்தகைய நடிகைகளை பொம்மையாக கருதவில்லை, ஆனால், உயிருள்ள ஆடும் நடிகைகளாகத்தான் கருதுகிறார்கள். அதனால் தான், பார்த்து ரசிக்கிறார்கள், ரசித்து அனுபவிக்கிறார்கள், அனுபவத்தை ரீல்-உலகத்திலிருந்து ரியல் வாழ்க்கைக்கு எடுத்து வர துடிக்கிறார்கள். திரையில் பார்த்தது கிடைக்காமல் இருந்தால் கூட, நேரில் பார்ப்பதை அடையத் தவிக்கிறார்கள். அந்நிலையில் தான், பாலியல் குற்றங்கள் ஏற்படுகின்றன.

ashna-zavaeri-response-to-suraajமன்னிப்பு கேட்ட சுராஜ்[1]: இவ்வாறு இரு நடிகைகளும் விளாசி தள்ளியுள்ளதாக விகடனும் கூறியுள்ளது[2]. அந்த விளாசலில் பணிந்து விட்டார் போலும். இந்நிலையில், இயக்குநர் சுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை மன்னியுங்கள். தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி, அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்”, என இயக்குநர் சுராஜ் கூறியுள்ளார்[3]. மன்னிப்பு கடிதம் ஒன்றை பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளார். சுராஜ் மன்னிப்புக் கோரியுள்ளதால், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது[4]. “நயன்தாரா, தமன்னா கோபத்திற்கு அடிபணிந்த சுராஜ்”  என்று செய்தி வெளியிட்டாலும், கோபம் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்காக வந்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்[5]. “செல்வி…” என்றெல்லாம் தாஜா படுத்தினால்[6] கோபம் தணிந்து விடுமா? தொழில் ரீதியாக, கோபம் எல்லாம் வந்தால் சினிமாவையே மறந்து விட வேண்டியதுதான்.

nikki-galrani-response-to-suraajசுராஜ் போன்ற வக்கிரம் பிடித்த ஆண்கள்: சுராஜ் ஒன்றையும் புதியதாகக் கூறிவிடவில்லை. ஏற்கெனவே, எல்லோருக்கும் தெரிந்த ரகசியத்தைத் தான் சொல்லியிருக்கிறார் என்றும் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கருத்து தெரிவித்துள்ளது[7]. இந்நடிகைகளின் உடை என்ன அப்படி பெண்களை பாதித்து விடப்போகிறாதா என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், சுராஜின் மன்னிப்பு சொதப்பலானது என்றும் விவர்சித்துள்ளது[8]. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இவ்விசயத்தை தலையங்கமாக தீட்டியுள்ளது வியப்பாக உள்ளது. சுராஜின் வார்த்தைகளில் வக்கிரம் தான் வெளிப்படுகிறது. உடை தைக்கும் அந்த தையல்காரனின் ஆதங்கம் கூட, இந்த ஆளின் பேச்சில் இல்லாததை கவனிக்கலாம். காசு கொடுக்கிறோம், அதனால், நாம் சொல்லும்படி அல்லது எதிர்பார்க்கும் ஆடையில் ஆடவேண்டும் என்று நினைப்பது தெரிகிறது. இப்படித்தான் நடிகைகள் பதிலடி கொடுத்துள்ளார்கள். ரன்யா ராவ், அஸ்னா ஜவேரி, நிக்கி கல்ரனி, பிரியா ஆனந்த் முதலியோரும் அவ்வாறுதான், சுராஜை விமர்சித்துள்ளமனர்[9]. மேற்கத்தைய உடை அணிந்தால் குடிக்க வேண்டும், போன்ற சிந்தனை மாற வேண்டும், என்றார் ரன்யா ராவ். நடிகையின் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு, அந்தரங்கம் முதலியவற்றில் டைரக்டர் நுழைய முடியாது என்றார்  அஸ்னா ஜவேரி. நடிகையும் தன்னுடைய குடும்பத்திற்கு பதில் சொல்லவேண்டியுள்ளது என்றார் நிகில் கல்ரனி. சொந்த கருத்துகளை, அவரவர்களுக்குள்ளே வைத்துக் கொள்ளவேண்டும் என்றார் பிரியா ஆனந்த்.

priya-anand-response-to-suraajபெரியார் நிர்வாணத்தை பரிசோதித்தார், ஆனால், பெரியார் பக்தர்கள் திகம்பர சந்நியாசிகளைத் தாக்குகிறார்கள்: சினிமா, நடிகைகள், திராவிடத்துவம் ஆரம்ப காலத்திலிருந்து, நெருங்கிய தொடர்பு, இணைப்பு, மற்றுன் சம்பந்தம் இருப்பதினால், இவ்வாறு அலசப்படுகிறது. உடையில்லாத நிலையை நிர்வாணம் என்றால், அதைக் கண்டு பயப்படுவதா, ஆபாசம் என்பதா, புனிதம் என்று போற்றுவதா, பகுத்தறிவு என்பதா போன்ற கேள்விகள் எழுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “பகுத்தறிவு பகலவன்” போன்றோரே, நிர்வாணத்துடன் பரிசோதனை செய்துள்ளதாக, பெரியாரின் பக்தர்கள் பெருமையோடு சொல்லிக் கொண்டாலும், இதுவரை, ஒரு நிர்வாணப் படத்தையும் வெளிப்படையாக காட்டவில்லை. அதாவது மறைத்துதான் வருகிறார்கள். அதே நேரத்தில் திகம்பர ஜைன சந்நியாசிகள் கால்நடையாக தமிழகத்திற்கு வந்தால் அவர்களை அடிக்கச் செல்கிறார்கள். மகாவீரரை ஆதரிக்கும் திராவிடத்துவம், திகம்பரத்தை எதிர்ப்பதும் முரண்பாடே. உண்ணா விரதம் என்றால், உண்ணும் விரதம் கடைபிடிக்கிறவர்கள் எதிராக அல்லவா செய்து காட்ட வேண்டும். இல்லை, நாங்களும் தீச்சட்டி பிடிப்போம் பாணியில், இவர்களும் நிர்வாண ஊர்வலம் செல்ல வேண்டும். ஆனால், செய்வதில்லையே, சாப்பிடும் விசயத்தைத்தான் செய்து வருகின்றனர்.

suraaj-comments-nayan-tamanna-response-indian-expressநிர்வாணம் காசுக்காக விற்கப்படும் போது, வாங்க மனிதர்களும் இருப்பார்கள்: அது திராவிட சித்தாந்தமாக, மதமாக, சினிமாவாக இருக்கலாம். சினிமாவைப் பொறுத்த வரையில் காட்சிகள் இரு கண்களுக்கு மட்டுமல்லாது அந்தரங்கம் அனங்கமாக அரங்கேறியப் பிறகு, லட்சம்-கோடி கண்களுக்குக் காணிக்கையாகப் படுகிறது. இக்கால தொழிற்நுட்பத்தினால், அடிக்கடி வேண்டும் போதெல்லாம் பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. பிறகு உடலின் கதியென்ன, புனிதம் என்ன, கற்பென்ன. இதை உபயோகப்படுத்தி, புனிதப்போரைத் தொடங்கு, புனிதத்தை உன் புனிதத்தால் வெற்றிகொள், சொர்க்க வாசல் உனக்காக திறந்திருக்கிறது; அதற்குள் நுழைய வேண்டுமானால், இந்த சொர்க்கத்தை அனுபவித்து விடு என்ற கொள்கையிலும் செயல்படும் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். “கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ”, என்று பாட்டைக் கேட்டு 30 ஆண்டுகள் ஆகியிருக்கும் நேரத்தில், இன்றைய காலகட்டத்தில் அதிகமாகத்தான் எதிர்பார்ப்பார்கள்.

© வேதபிரகாஷ்

27-12-2016

film-maker-apologizes-the-hindu-p-3

[1] தி.இந்து, ஆடை சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் இயக்குநர் சுராஜ், Published: December 26, 2016 19:14 ISTUpdated: December 26, 2016 19:16 IST

[2] விகடன், இயக்குநர் சுராஜை விளாசிய நயன்தாரா, தமன்னா..!, Posted Date : 17:55 (26/12/2016); Last updated : 17:59 (26/12/2016)

[3] http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/75974-nayanthara-and-amannaah-against-for-director-suraaj-speech.art

[4] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/article9444486.ece

[5] தமிழ்.வெப்துனியா, நயன்தாரா, தமன்னா கோபத்திற்கு அடிபணிந்த சுராஜ், Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (19:58 IST)

[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/suraj-published-apology-letter-after-nayanthara-and-tamanna-anger-116122600041_1.html

[7] Indian Express, What clothes reveal about films, Second editorial, Tuesday, Chennai, December.27, 2016, p.8

[8] Indian Express, Filmmaker’s comment irks leading ladies: gives flimsy apology, by S. Subhakeerthana, in Chennai Express, Tuesday, Chennai, December.27, 2016, p.4.

[9] Indian Express, Be speaks to few Actresses………., in Chennai Express, Tuesday, Chennai, December.27, 2016, p.4.

அந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்?

நவம்பர் 26, 2013

அந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்?

இந்தியாவை பாதித்து வருகின்ற அந்நியநாட்டுப் பெண்கள்: சரித்திரத்தில் மற்றும் இக்கால நிகழ்வுகளில் எப்படி அயல்நாட்டுப் பெண்கள் இந்தியாவை பாதித்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மையே. அரசியலில் பெண்களை நுழைத்து ஆட்சிகளைக் கவிழ்ப்பது அமெரிக்காவின் வேலையாக இருந்து வந்துள்ளது. இவை இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் இந்தியாவிலேயே காணலாம். பூடான், நேபாள், சிக்கிம்[1] போன்ற நாடுகளில் பெண்களை வைத்து ஆட்சி மாற்றம் மற்றும் அரச வம்சமே பூண்டோடு ஒழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியவிரோத சக்திகள் ஆட்சிக்கு வர வகைசெய்துள்ளது. நேபாளத்தைப் பொறுத்த வரையில், “உலகத்திலேயே ஒரே ஒரு இந்து நாடு” என்ற அங்கீகாரத்தை மாற்றி, அங்கு மாவோயிஸ்ட்டுகள் ஆட்சி ஏற்பட வழிசெய்துள்ளது[2]. இதனால், சீனா ஆதிக்கம் அடைந்து, இந்தி எல்லைகளில் அத்துமீறல்களை செய்து வருகின்றது. அதுமட்டுமல்லாது, ஜிஹாதிகள், போதை மருந்துக்காரர்கள், போலி ரூபாய் நோட்டுகள் விநியோகம், விபச்சாரம் முதலிய வியாபாரங்களை செய்து வருபவர்கள் நேபாளத்தில் சுகமாக இருந்து கொண்டு, பீஹார் மூலம் நுழைந்து இந்தியாவைப் பாதித்து வருகின்றனர். இந்நிலையில் தான், பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோனை தமிழகத்தார் வரவேற்று நிர்வாணத்தை ருசிப்பதற்கு தயார்படுத்தி வரும் வேலைகளை, தமிழர்களே செய்து வருவது வெளியாகியுள்ளது.

இந்து  மக்கள்  கட்சி  எதிர்ப்பு: இந்தச் செய்தி இந்து மக்கள் கட்சி அலுவலகத்தையும் எட்டிய நிலையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் அந்தக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். “சன்னி லியோன் போன்றவர்கள் இங்கே நடிக்க வந்தால், சென்னையில் நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாடும் இடமாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் பண்பாட்டுக்கும் தவறான முன்மாதிரியாக ஆகிவிடும். எனவே சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே செல்போன் சிப்பிகளிலும், இணையதளங்கள் வழியாகவும் வெளியாகும் நீலப்படம் எனும் நஞ்சை தடுக்க வக்கற்றவர்களாக இருந்து வருகிறோம். காரணம், படுக்கையறை என்பது தமிழ்ப்பண்பாட்டில் மட்டுமல்ல, எல்லாக் கலாச்சாரங்களிலும் அந்தரங்கமானது. அது அந்தரங்கமாக இருக்கும் வரைதான் தமிழ்ப்பண்பாட்டை பேணிக்காக்க முடியும். இதனால் நீலப்படம் பார்ப்பதும், அதை எதிர்ப்பதும் நமது பண்பாட்டைக் காப்பதில் முக்கியமான செயல்திட்டம் ஆகும். எனவே நீதிமன்றம் சென்றாவது சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதைத் தடுப்போம்” என்று கூறுகிறார். இது தமிழ் சினிமாவில் தவறான முன்மாதிரியை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனால் சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இந்துமக்கள் கட்சியின் ஆர்பாட்டம் உண்மையோ அல்லது பிரபலம் தேடும் காரியமோ தெரியவில்லை, ஆனால், நீலப்பட நடிகை சன்னி லியோனை, தமிழகத்தில் அனுமதிப்பது ஆபத்தான விசயம் தான்.

புளூ பிளிம் புகழ் சன்னி  லியோன்  யார்?: கனடா நாட்டைச் சேர்ந்த 32 வயது விளம்பர மாடல் சன்னி லியோன். இவர் ட்ரிபிள் எக்ஸ் எனப்படும் பல நீலப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ‘ஜிஸ்ஷும் 2’ என்ற இந்திப்படத்தில் அறிமுகமானதன் மூலம், அதீதக் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தி வெகுஜனச் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நட்சத்திரம் ஆகிவிட்டாலும், நீலப்படங்களில் நடப்பதையும் சன்னி லியோன் நிறுத்தவில்லை என்று தெரியவருகிறது. கடந்த ஆண்டும் இவர் நடித்த நீலப்படங்கள், அமெரிக்க மற்றும் கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தயாநிதி அழகிரி இவரை தமிழகத்திற்கு இறக்குமதி செய்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

கோடம்பாக்கத்தில்  நுழைந்தார்   சன்னி  லியோன்[3]…….. வடகறி  படத்தில்   குத்தாட்டம்,   வடகறியில்  சன்னிலியோன்   இப்படி  வர்ணிக்கும் தமிழ் ஊடகங்கள்: ராஜா ராணி படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த இளம் நாயகன் ஜெய் நடிப்பில் தயாராகி வரும் ‘வடகறி’ படத்தில்தான் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்ட நடனமாட இருக்கிறார். அதாவது ஜெய்யுடன் ஒரு கனவு காட்சியில் நடனக் காட்சியில் ஆடுகிறாராம். சரவண ராஜன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பிரபலத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தநிலையில் ஒரு பாடலுக்குச் சன்னி லியோனை நடனமாட ஒப்பந்தம் செய்திருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்[4]. சன்னியும் தமில் சினிமாவில் நடிக்க சந்தோஷம் என்று டுவிட்டரில் சொல்லியிருக்கிறார்[5]. அவருடைய ரோலைப் பற்றி கேட்டதும் ஒப்புக்கொண்டு திருப்தியைத் தெரிவித்துள்ளாராம்[6]. சரவண ராஜன் சொல்கிறார்[7], அந்நடனக் காட்சி வண்ணமயமாக இருக்கும், ஆபாசமாக இருக்காது! படம் வந்த பிறகுதான் தெரியும்.

 

போர்னோகிராபி  புதிதல்ல  [8]: மூடர் கூடம் என்ற படத்தின் மூலம், தரமான இயக்குனராக விமர்சகர்களால் கொண்டாடப்படும் நவீன், இதில் எதிர்க்க ஒன்றுமில்லை என்கிறார். ஆமாம், நடிகர்களுக்குக் கொண்டாட்டம் தான், புதியதாக இப்படி தாராளமான நடிகைகளுடன் கொண்டாட்டம் போடுவார்கள். “போர்னோகிராபி என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இங்கே வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க தகுந்த படம் என்ற ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்கள் வெளிவந்துகொண்டுதானே இருக்கிறது. அதை நாம் எதிர்க்கவில்லையே? சில்க் ஸ்மீதாவை நாம் ஒரு கலைஞராக கொண்டாடுகிறோம். அவரும் ‘பி’ கிரேட் நீலப்படங்களில் நடித்தவர்தான். சன்னி லியோன் நமது நாட்டில் வந்து முழுநீள நீலப்படங்களில் நடிக்காதவரை அவரை எதிர்க்கத் தேவையில்லை.” என்று கூறும் நவீன் “தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி ஒரு வலிமையான கச்சாப்பொருளாக இருப்பதை நாம் மறந்துவிட்டுப் பேசக் கூடாது” என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல பேசுகிறார். தமிழர்களுக்கு ஏ, பி. சி கிரேட் எல்லாம் தெரியும் போலிருக்கிறது. அவ்வாறே நிர்வாணத்தை பகுத்திருக்கிறார்கள் பொலும், ‘பி’ கிரேட் நீலப்படங்களில் நடித்தவர் சில்க் ஸ்மீதா என்றால், மற்ற நடிகைகள் எந்த கிரேடில் நடித்தார்கள் என்று விள்ளக்கப் படுமா?

© வேதபிரகாஷ்

26-11-2013


[1] ஹோப் குக் என்ற அமெரிக்க பெண்மணி 1963ல் 12வது ராஜாவைக் கல்யாணம் செய்து கொண்டாள். 1973ல் இந்தியாவுடன் சிக்கிம் ஒப்பந்தம் செய்து கொண்டது. விவாகரத்து செய்து கொண்டு தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டாள்.

[2]ஜூன் 1, 2001ல் இளவரசன் தீபேந்திரா ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான். இது சி.ஐ.ஏ.வின் திட்டம் என்றும் கூறப்பட்டது.

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-01/south-asia/29607602_1_royal-massacre-birendra-and-nine-tribhuvan-sadan