Posts Tagged ‘ஒழுக்கம்’

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் -செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)!

நவம்பர் 1, 2015

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல் செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (3)!

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

கவர்ச்சி அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் தொடர்பு இருந்தாலும், ஊடகங்கள் இப்படி கிசு-கிசுக்களை செய்தியாக்க பார்ப்பது தமாஷாகத்தான் இருக்கிறது[1]. ஒரு வருடத்திற்கும் மேலாக ஊதிக்கொண்டிக்கும் செய்தி இன்னும் நிஜ-செய்தியாகவில்லை போலும்[2]. நக்மா வருகிறார் என்றதுமே இருக்கின்ற இருபெரும் நடிகைகள் குஷ்பு மற்றும் விஜயதாரிணி (அரசியல் நடிகை) சந்திக்க பிரச்சினைகள் இருந்ததாக செய்திகள் வந்தன[3]. இனி இளங்கோவனுக்குக் கொண்டாட்டம் தான் போல! நக்மாவைப் பற்றி கமென்ட் அடித்தது போல, நமீதா பற்றி என்ன கமென்ட் அடிப்பார் என்று பார்க்க வேண்டும்[4]. நடிகையை வைத்து, இன்னொரு நடிகையைப் பிடிப்பது என்றெல்லாம் சாதாரணமான அளவில் தான் அரசியல்வாதிகளுக்கு சிந்தனையுள்ளது எனும்போது திகைப்பாக உள்ளது[5]. நல்லவேளை அக்கா நடிகையை வைத்து, தங்கை நடிகையை பிடிப்போம் என்ற அளவுக்கு இருக்கிறது. செய்திகள் தயாரிக்கப்படுகின்றனவா என்ற அளவுக்கு, படிப்பவர்களுக்கு சந்தேகம் வருகின்றது.

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

மறுபடியும் நமீதாசெய்திகளை அள்ளிவீசும் ஊடகங்கள்: குஷ்பு, நக்மாவை தொடர்ந்து, நடிகை நமீதாவையும், காங் கிரசில் சேர்க்கும் முயற்சிக்கு, டில்லி மேலிடம் பச்சைக் கொடி காட்டி உள்ளது[6]. இதையடுத்து, நமீதா தரப்புடன் பேச்சு நடந்து வருவதாக, கட்சி வட்டாரம் தெரிவித்தது. செப்டம்பரில் நமீதா அரசியலில் குதித்து, அமைச்சராகி, மக்களுக்கு சேவை செய்யப் போவதாக செய்தி வெளிவந்தது[7]. அந்த அளவுக்கு தமிழக அரசியல் நிலை மாறிவிட்டது[8]. தமிழக காங்கிரசில், சினிமா நட்சத்திரங்களை சேர்க்க, டில்லி மேலிடம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்றதும், நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கார்த்திக்கை காங்கிரசில் இணையும்படி வலியுறுத்தினர். அதற்கான முயற்சியில், காங்., மீடியா ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி இறங்கினார். சட்டசபை தேர்தலுக்கு முன், தன் முடிவை அறிவிப்பதாக கூறிய கார்த்திக், ‘எஸ்கேப்’ ஆகி விட்டார். இருப்பினும் நடிகர், நடிகையரை இழுக்கும் முயற்சி தொடர்கிறது.

Secular Kusgboo with all religious saris

குஜராத் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நமீதா: முதலில், நடிகை குஷ்புவை இணைத்தனர். அவருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே காங்கிரசில் சேர்ந்திருந்த, நடிகை நக்மாவுக்கு, கடந்த மாதம், அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலர் பதவி அளித்து, தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக்கினர். இதை பார்த்ததும், நடிகை நமீதாவுக்கும் அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது; அதை, நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். அதையடுத்து, அவரை, தி.மு.க.,வுக்கு இழுக்க சிலர் முயன்றனர்; அவர் பிடிகொடுக்கவில்லை. தற்போது, பிரபல நடிகர் ஒருவர் மூலமாக, நமீதாவை காங்கிரசில் சேர்க்க, பேச்சு நடக்கிறது[9]. ‘காங்கிரசில் நமீதா இணைந்தால், அவரது சொந்த மாநிலமான குஜராத் மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்’ என, வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அகில இந்திய காங்., மீடியா ஒருங்கிணைப்பாளர், எஸ்.வி.ரமணி கூறுகையில், ”நமீதாவை காங்கிரசில்சேர்க்க, பேச்சு நடக்கிறது. அவர் காங்கிரசில் இணைந்தால், அவர் மூலம், தமிழக காங்கிரசை வலுப்படுத்தும் திட்டமும் உள்ளது,” என்றார்.

காங்கிரஸ் சண்டை - குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

மே 2014லிலிருந்து செய்யப்பட்டு வரும் முயற்சியா?: தமிழக காங்கிரஸ், 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் என, அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் அறிவித்து விட்டதால், கட்சியை பலப்படுத்தவும், கவர்ச்சி அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், நடிகர்கள் கார்த்திக், பாண்டு, நடிகைகள் நமீதா, தேவயானியை காங்கிரசில் சேர்ப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலில், தமிழக காங்கிரஸ், 39 தொகுதிகளில், தனித்து போட்டியிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக், சமூக சமத்துவ படையின் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவளித்து, அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக, சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் சிரிப்பு நடிகர் பாண்டு ஆகியோரும், பிரசார களத்தில் குதித்தனர்.

இளங்கோவுடன் - முத்தேவியர்- 2015

இளங்கோவுடன் – முத்தேவியர்- 2015

திராவிட கவர்ச்சி அரசியலை பின்பற்ற தீர்மானித்த காங்கிரஸ்: நடிகர், நடிகைகளின் பிரசாரத்திற்கு, காங்கிரஸ் கட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், அ.தி.மு.க., தி.மு.க.,வில் இருக்கும் நட்சத்திர பட்டாளங்களால் வெளிப்படுத்தப்படும் கவர்ச்சி அரசியலைப் போல, தமிழக காங்கிரசிலும் கொண்டு வர வேண்டும் என, இளைஞர் காங்கிரசார் விருப்பம் தெரிவித்தனர். நாடாளும் மக்கள் கட்சியை கலைத்து விட்டு, காங்கிரஸ் கட்சியில், நடிகர் கார்த்திக் இணைந்தால், அவருக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படும் என்றும், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது[10]. இதற்கிடையில் நடிகைகள் நமீதா, தேவயானி ஆகிய இருவரையும், தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரசார் அழைத்தனர். ஆனால், அவர்கள் இருவரும், சின்னத் திரை படப்படிப்புகளில் பிசியாக இருந்ததால், பிரசாரத்திற்கு வர முடியாது என, மறுத்து விட்டனர். இருந்தாலும், கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான ரஞ்சன் குமார், நடிகைகள் இருவரிடமும், காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

பிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா

பிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா

காங்கிரஸின் சினிமா கவர்ச்சி அரசியல் திட்டம்[11] (மே.2014): இதுகுறித்து, தமிழக காங்கிரசார் கூறியதாவது: “லோக்சபா தேர்தல் முடிவில், காங்கிரசின் ஓட்டு சதவீதம் அதிகமாக இருக்கும். அதனால், அடுத்த சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க, திராவிடக் கட்சிகள் போட்டி போடும். ஆனால், 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என, ராகுல் கூறிவிட்டார்.எனவே, கட்சியை பலப்படுத்த, பலதரப்பு மக்களையும் கவரும் வகையில், சினிமா, விளையாட்டு போன்ற புகழ்மிக்க துறையில் பணியாற்றுபவர்களை, கட்சியில் சேர்க்கும் திட்டத்தை வகுத்துள்ளோம். முதல் கட்டமாக, நடிகர்கள் கார்த்திக்கையும், பாண்டுவையும் கட்சியில் சேர்ப்போம். கர்நாடகாவில் இப்படித்தான் நடிகை குத்து ரம்யாவை கட்சியில் சேர்த்து, கட்சிக்கு பலம் சேர்த்தனர். அவருக்கும் எம்.பி.,யாகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தி நடிகை நக்மாவுக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல், நமீதா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், தேவயானி அல்லது அவரது கணவருமான இயக்குனர் ராஜகுமாரனுக்கு, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். எனவே, லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரசில் நடிகர், நடிகைள் பலர் சேருவர்”, இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்

இதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்

குஷ்புவிடம் ஆலோசனை கேட்ட நமீதா (ஏப்ரல்.2014): கடந்த ஏப்ரல் 2014ல் தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் ஒருவழியாக தென் சென்னை லோக்சபா தொகுதியில் வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ். ஒருகட்டத்தில் நடிகை நமீதாவை வேட்பாளராக்கவும் காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டதாக கூறப்பட்டது[12]. தமிழகத்தில் கூட்டணி கட்சி எதுவும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் கட்சியால் தென் சென்னை தொகுதிக்கு வேட்பாளரை கடைசிநிமிடம் வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தொகுதியில் போட்டியிட ராஜாஜியின் பேரன் கேசவன், ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் சி.கே. பெருமாள், மயிலை பெரியசாமி ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை நமீதா தாம் அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்த கையோடு குஷ்புவிடம் ஆலோசனை கேட்டதாகவும், அவரோ, மீரட் தொகுதியில் போட்டியிடும் நக்மாவை பிடித்தால் காங்கிரஸில் சேரலாம் என்று அட்வைஸ் செய்தாராம். நக்மா மூலமாக சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் தொடர்பு நமீதாவுக்குக் கிடைத்தது[13]. ஆனால், முடிவாக எதுவும் நிகழவில்லை.

© வேதபிரகாஷ்

01-11-2015

[1] https://evilsofcinema.wordpress.com/2014/01/08/news-manufacture-with-the-clamorous-actress-namita-new-remix-of-politics-unethical-journalism/

[2] https://evilsofcinema.wordpress.com/2014/01/13/news-manufactured-involving-sexy-actresses-with-political-parties-now-namita/

[3] https://evilsofcinema.wordpress.com/2015/10/17/congress-infight-due-to-actresses-dominating-affairs-in-tamilnadu/

[4] https://evilsofcinema.wordpress.com/2015/10/25/sonia-congress-following-dravidian-glamour-politics-with-actresses/

[5] https://evilsofcinema.wordpress.com/2015/10/25/why-sonia-treads-the-path-of-dravidian-politics-of-cinema/

[6] தினமலர், குஷ்புநக்மாநமீதாநடிகையரைத் தேடி காங்., பயணம், அக்டோபர்.31, 2015.00.29.

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-be-getting-into-politics-namitha-234869.html

[8] தமிழ்.ஒன்.இந்தியா, அரசியலில் குதித்து அமைச்சராக ஆசைஅறிவித்த நமீதா, Posted by: Mayura Akilan, Updated: Thursday, September 3, 2015, 9:14 [IST]

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1376277

[10]  தினமலர், நடிகைகள் நமீதா, தேவயானிக்கு காங்கிரஸ் திடீர் வலை, மே.3, 2014:01.14.

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=966346

[12] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகை நமீதாவை தென் சென்னை வேட்பாளராக்க முயற்சித்த காங்கிரஸ்!!, Posted by: Mathi,Updated: Saturday, April 5, 2014, 13:05 [IST]

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-namitha-will-contest-south-chennai-lse-197314.html#slide54628

Advertisements

குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஒக்ரோபர் 25, 2015

குஷ்பு, நக்மா, விஜயதாரிணிதமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஜெயலலிதா, பெரியார்

ஜெயலலிதா, பெரியார்

சினிமாஅரசியல், அரசியல்சினிமா, திராவிட அரசியலுல் ஒன்றுதான்: தமிழக அரசியல் என்றுமே சினிமா அரசியலாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும், பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகளின் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத அளவில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. பெரியார் சினிமாவை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டாலும், ஆதரவு கொடுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட அவர், சித்தாந்தத்தைப் பரப்புவதில் எத்தகைய யுக்தியையும் கடைபிடிக்கலாம் என்று வற்புருத்தினார். “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகத்தில் நடித்த கணேசனுக்கு “சிவாஜி” பட்டம் கொடுத்தார். ஜெயலலிதா நாட்டியங்களைக் கண்டு ரசித்துள்ளார். அண்ணாதுரை சினிமாவில் ஊறியவர் என்பதால் ஒன்றும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி, எம்ஜியாரை “கூத்தாடி” என்றும் “கூத்தாடி அரசியல்” செய்கிறார் என்றும் கிண்டலடித்து உண்டு.  திமுகவினரும் அவ்வாறே பேசி-எழுதி தூஷித்துள்ளனர். அதே நேரத்தில் தனது மகன், மு.க. முத்துவை எம்ஜியார் போல நடிக்க வைத்து படங்கள் எடுக்கப்பட்டன[1]. பிறகு, ஸ்டாலினை பிரபலப்படுத்த டிவி-சீரியலிலும் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால், அத்தகைய சினிமா-அரசியலைத்தான் திராவிடத் தலைவர்கள் எல்லோருமே செய்து வந்துள்ளனர்.

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

கவர்ச்சி அரசியலில் உழலும் திராவிடக் கட்சிகள்: நேற்றைய திக, திமுக, அதிமுக, ஆனாலும், இன்றைய தேமுதிக முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், சினிமா நடிகர்கள்-நடிகைகள் தாம் உள்ளனர். இன்றைக்கு “கூத்தாடி” என்று யாராவது சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், சம்யம் வரும்போது, கருணாநிதி, ஜெயலலிதாவை சினிமாபை வைத்துக் கொண்டு சாடுவதில் தயங்குவதில்லை. தனது கைவரிசையை, “முரசொலியிலும்” அவ்வப்போது காட்டுவார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் வசனம் பேசிக் கொண்டு, நடித்துக் கொண்டுதான் வருகின்றனர். சினிமாவில், ஓவ்வொருவருக்கும் ஒன்றிற்கு மேலாக ஹீரோயின்கள் இருப்பது போல, நிஜவாழ்விலும் மனைவி, துணைவி என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். குடும்ப வாழ்க்கையினை நடத்துகின்றனர். அவ்வகையில் பார்த்தால், பாமக ஆரம்பித்திலிருந்தே, சினிமா-அரசியலை எதிர்த்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்[2]. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செய்கிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள், மது, சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது[3].

சிவாஜி, பெரியார்

சிவாஜி, பெரியார்

இன்றைக்கு சோனியா காங்கிரஸ் நடத்தும் சினிமா அரசியல்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 20-1-2015 அன்று புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 22-10-2015 அன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாநில மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, விஜயதாரணி, திருநாவுக்கரசர், யசோதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[4]. அரசியல்வாதிகள் சொல்லும் வார்த்தைகளை வைத்தே ஒரு வாரத்திற்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிண்டலடிப்பார்கள் நம் வலைஞர்கள். அதிகம் கிண்டலடிக்கப்படுவது விஜயகாந்த்தான். சிலகாலம் ஸ்டாலின் மாட்டினார். இன்று சிக்கியிருப்பது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விடுவார்களா நம்மவர்கள் சும்மா புகுந்து விளையாடிவிட்டனர்.

சிவாஜி, கருணாநிதி

சிவாஜி, கருணாநிதி

தமிழக காங்கிரஸ் தலைவரின் நடிகையைப் பற்றி அழகு, இளமை வர்ணனை: சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கலந்துகொண்டார். கூடவே, விஜயதாரணி, குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய இளங்கோவன், “சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை. ஆனால் நேரில், நல்ல அழகாகவும்; இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன், என்று கூறினார்[5]. நக்மா பேசுகையில், “அரசும், அமைச்சர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர், கக்கன் போன்றோர், உதாரணமாக இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். கோஷ்டிகள் இல்லாத, காங்கிரசை வளர்க்க வேண்டும் என்றார்[6]. காங்கிரஸின் தலைவராக இருக்கின்றவர், சினிமா நடிகைகள் கட்சிக்குள் வர ஆரம்பித்தவுடன், ரசனையும் மாறிவிட்டது போலும்[7]. நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்[8], சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம் என்றெல்லாம் தலைப்பிட்டு, இதனை செய்தியாக வெளியிட்டிருப்பது காங்கிரஸுக்கு அழகா, அவமானமா என்று தெரியவில்லை.

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

திரிஷா இல்லைன்னா நயன்தாராவா, குஷ்பு இல்லைன்னா நக்மா: இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. விடுவார்களா நம்மவர்கள். சும்மா புகுந்து விளையாடிவிட்டனர். இதுநாள்வரை குஷ்புவை புகுந்த இளங்கோவன் இப்போது நக்மாவை புகழவே, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்[9]. இதுதான் அழகுல மயங்குறதா என்று கிண்டலடித்துள்ள வலைஞர்கள் டுவிட்டரில் சும்மா சகட்டு மேனிக்கு கிண்டலடித்துள்ள வலைஞர்கள் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர் என்று தமிழ்.ஒன்.இந்தியா எடுத்துக் காட்டுகிறது [10]. அரசியலின் ஒழுக்கம், நாணயம், முதலியவை இந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறதே என்று அத்தகைய வலைஞர்-மேதாவிகள் ஏன் கவலைப்படவில்லை என்றால், நிச்சயமாக, அத்தகைய வர்ணனைகளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்ரு தெரிகிறது. இதே, வெறெந்த பெண் அரசியல்வாதி நியமிக்கப்பட்டு, அவர் பதவியேற்று, விழாக்களில் கலந்து கொண்டால், இளங்க்கோவன் அல்லது வெறெந்த அரசியல்வாதியும் இவ்வாறு ரசித்து, வர்ணிப்பாரா என்று தெரியவில்லை. நடிகை என்பதினால் தான் அவ்வாறான விமர்சனம் வந்துள்ளது, அதனை தமிழக ரசிகர்கள் நசிக்கிறார்கள்.

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

இளங்கோவன், நடிகை குஷ்பு, நக்மா உருவப்படங்கள் எரிப்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் தமிழக  காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டு கொளுத்தினர்[11]. ஆக அந்த அளவுக்கு, இந்த நடிகைகளும் உயர்ந்து விட்டார்கள். நேற்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டி அளித்த இருவரும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்[12].

© வேதபிரகாஷ்

25-10-2015

[1] பூக்காரிபிள்ளையோ பிள்ளைசமையல்காரன், அணையாவிளக்கு என்ற படங்களில் மு. க. முத்து, எம்ஜியாரை காப்பியடித்து நடித்தார். எம்ஜியாரைப் போலவே மஞ்சுளாவை முதல் படத்திலேயே ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டார்.

[2]  தினமணி, திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்: ராமதாஸ், By Venkatesan Sr, சென்னை; First Published : 10 February 2013 03:02 PM IST.

[3] http://www.dinamani.com/latest_news/article1457932.ece

[4] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=153570

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம், Posted by: Veera Kumar, Published: Saturday, October 24, 2015, 12:37 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-looks-beautiful-congress-chief-elangovan-238332.html

[7]  தமிழ்.வெப்.துனியா, நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:15 IST)

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/evks-talk-about-actress-nagma-115102300042_1.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நக்மா இல்லைன்னா குஷ்பு…. இளங்கோவனை கிண்டலடிக்கும் வலைஞர்கள், Posted by: Mayura Akilan, Updated: Saturday, October 24, 2015, 17:39 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/social-networkers-critizes-evks-elangovan-238365.html

[11] தினமணி, குஷ்பு, நக்மா உருவப்படம் எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் போராட்டம், By DN, சென்னை,First Published : 23 October 2015 05:41 PM IST.

[12]http://www.dinamani.com/tamilnadu/2015/10/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/article3093693.ece

குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – சரியான யோசனைதான்!

ஒக்ரோபர் 15, 2013

குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – சரியான யோசனைதான்!

குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்  –  இளம் நடிகைகளுக்கு கேயார் அறிவுரை[1]: இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார், “இப்போது இருக்கும் இளம் நடிகைகள் யாரும் தங்களது பட புரொமஷன்களுக்கு கூட வருவதில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதோ இங்கு இருக்கும் குஷ்புவை பற்றி நான் சொல்லியாக வேண்டும். நான் அவரை ஹீரோயினாக வைத்து 6 படங்கள் தயாரித்துள்ளேன். அவர் ஒரு படத்தின் புரொமஷன்களுக்கு கூட வராமல் இருந்தது கிடையாது. அதேமாதிரி அவர் நடிக்கிற படமாக இருந்தாலும் சரி, இல்லாத படமாக இருந்தாலும் சரி, விழா என்று அழைத்தால் உடனே வந்துவிடுவார். அதான் குஷ்பு. இன்றைய புதுநடிகைகள் எல்லாம் அவரைப்பார்த்து அந்த ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்”,  என்றார்[2].

இப்போது இருக்கும் இளம் நடிகைகள் யாரும் தங்களது படபுரொமஷன்களுக்கு கூட வருவதில்லை.  இது மிகவும் கண்டிக்கத் தக்கது: “புரோமஷன்” வேண்டும் என்றால், புரோமஷனுக்கு வரவேண்டும், அதாவது உயர வேண்டுமானால், தூக்க வேண்டும், தூக்கிவிட வேண்டும், என்கிறார். இளம் நடிகைகள் கேட்பார்களா என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.  சினிமாக்காரர்கள் எதனை ஊக்குவித்து, ஆதரித்து, உயர்ந்த, முன்னேற்றமடைய ஆவலுடன் இருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டு, இன்றைய நிலையில், சமூகத்தைக் கெடுப்பதில் தான் முன்னேறியிருக்கிறார்கள். அந்த ரீதியில், இவர்கள் “புரோமஷன்” என்று இறங்கி விட்டால், தலிபான், அல்-குவைதா, அல்-உம்மா, அல்-முஜாஹித்தீன் முதலிய இயக்கங்களே தேவையில்லை, இவர்களே இந்தியாவை அழித்து விடுவார்கள். ஆமாம், தொப்புளைக் கூட காட்ட மாட்டேன் என்ற நஸ்ரியா நசிமைப் பார்த்து ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஏன் கூறவில்லை?

விழா என்று‌ அழைத்தால் உடனே வந்து விடுவார் அதான் குஷ்பு: ஆஹா, கொண்டாட்டம் தான். ஒருவேளை, அந்த மாதிரி விழா என்று இவர் சொல்லவில்லையோ என்னமோ? ஒருவேளை, குஷ்பு வருகிறார் என்று பயந்து விட்டார்களோ என்னமோ? கேயார் அதையெல்லாம் விளக்கமாக சொல்லவில்லையே? “அழைத்தால் உடனே வந்துவிடுவார். அதான் குஷ்பு”, என்றால், இக்கால இளம் நடிகைகளுக்குப் புரியவேண்டுமே? குஷ்புவை வைத்து, ஒரு காலேஜை ஆரம்பித்து விடலாம், அதில் குஷ்பு எப்படி இளம் நடிகைகள் : “புரோமஷன்” வேண்டும் என்றால், புரோமஷனுக்கு வரவேண்டும், “அழைத்தால் உடனே வந்துவிடுவார்”, “ அதான் குஷ்பு”, முதலியவற்றின் மகத்துவத்தை விளக்குவார். அவர்களும் சந்தோஷமாகக் கேட்டுக் கொண்டு நடந்து கொள்வார்கள். இவர் எதிர்பார்க்கும் முறையில் நடந்து கொள்வார்கள். ஒருவேளை, ஒழுக்கத்தில் குஷ்புவைய்யும் மிஞ்சி விடுவார்கள்.

குச்புவிற்காக அலையும் தமிழர்களும்,  குஷ்புவிற்காக ஏங்கும் திராவிடர்களும்! தமிழ்செல்வன் என்ற நண்பர் தனது பதிலில், “ஏனய்யா, அந்தகுச்புவை, குஷ்புவை மறந்து விட்டீர்களே?’, என்று கேட்டிருக்கிறார். சுருக்கமாக சொல்வதானால், “குச்புவிற்காக அலையும் தமிழர்களும், குஷ்புவிற்காக ஏங்கும் திராவிடர்களும்” என்று முடித்துவிடலாம்! போதாகுறைக்கு குஸ்புவை, குஸ்பூவை, குஷ்புவை, குஷ்பூவை, குச்புவை, குச்பூவை, குசுபுவை, குசுபூவை………..திமுக தாங்குமா என்று கருணாநிதியைக் கேட்டுவிட்டார்களாம்! இவ்வாறு, குச்புவிற்காக தமிழர்கள் எப்படி அலைகிறார்கள் என்பது சுருக்கமாக விளக்கப்பட்டது[3]. அப்பொழுது, நமிதா போட்டி வேறு தாங்கமுடியவில்லை[4]. கற்பு பற்றி தீர்ப்பு வந்ததும், இனிமேல் இன் இஷ்டப்படி பேசமுடியும் என்று வேறு ஆர்பரித்தார்[5]. “செக்ஸ் டார்ச்சர்” என்று ஒரு தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்தபோது, கண்டித்தார்[6]. திமுகவில் சேர்ந்தவுடன் குஷ்புவின் அவதாரங்களும் அதிகமாகின[7]. சமீபத்தில் கூட, இவர் பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றி கருத்தைக் கூறியிருக்கிறார்.

செக்ஸ் – எக்ஸ்பர்ட் குஷ்பு சொன்னது[8]: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்டு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.

  • திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
  • இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
  • அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[9].
  • வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
  • ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
  • அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[10].

இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா

© வேதபிரகாஷ்

15-10-2013


[1] தினமலர், சினிமா செய்திகள்

சினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்?

ஓகஸ்ட் 6, 2013

சினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம்,  காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்?

பிரஸ்மீட்,  பேட்டிவிளக்கம்: சேரன் என்ற நடிகர் தனது மகளின் வாழ்க்கைப் பற்றி தந்தையாக கவலைப்படுகிறாரோ இல்லையோ, நடிகரைப் போலத்தான் விளம்பரத்துடன் பேட்டிகள், புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். போதாகுறைக்கு, நடிகையரின் கற்புபற்றி விமர்ச்சித்த தங்கர் பச்சானுடன் முன்பு, இரே ஒரு புகாரில் சிக்கிக் கொன்டதை மறந்து விட்டார் போலும். இப்பொழுது இன்னொரு அமீருடன் அத்தகைய பேட்டி கொடுத்துள்ளார். சேரனை ஆதரித்து ராமதாஸ் பேசியுள்ளார்[1]. இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பிரஸ் மீட் வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை டிவியில் லைவாகப் பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர். சந்துரு என்ற சந்திரசேகர் ஒரு பிரபல டிவி-நிகழ்சி நடனக்காரர். தனது மகள் தாமினி – சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்[2]. சேரன் பேசும்போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்” என்றார். ஆனால் அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். சேரனோ, “கெட்டவனுக்கு மகளை எப்படி கட்டித்தர முடியும்…………….மேலும் எனது மூத்தப் பெண்ணையும்[3] மயக்கப் பார்த்தான்”,  என்றும் பேசினார்[4].

அமீருடைய  ஒழுக்கத்தைப்  பற்றிய  பொன்  மொழிகள்: அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு……. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். ஒரு சினிமாக்காரன்,, அடுத்தவனைப் பற்றி இப்படி பேசலமா? ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும்? இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது? நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா? விஜயகுமார் மகள் விஷயத்தில், யாருக்கு யார் புருஷன், எந்த புருஷனுக்கு யார் மனைவி, குழந்தை யாருக்குப் பிறந்தது, யாருக்கு சொந்ந்தம், என்றெல்லாம் சண்டை போட்டுக் கொண்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.

காதலன்  குடும்பத்தினரின்  பதில்: இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர். இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் கூறியவை அபாண்டமான பழி, எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,” என்றார். சந்துரு கூறும்போது, “தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்,” என்றார்[5]. சேரனின் மகள் தாமினி இப்பொழுது சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்[6]. சந்துரு தாமினியின் நடன நிகழ்சியை ஜூன்.4, 2011 அன்று கண்டு காதல் வயப்பட்டாராம். சேரனிடம் சொன்னபோது, முதலில் ஓப்புக் கொண்டாராம், ஆனால், பிறகு சில ஆண்டுகள் காத்திரு என்றாராம்[7].

தந்தை  –  மகள்  பரஸ்பர  புகார்கள்: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர் சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[8]. இந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார் என்று முடிவு செய்வார்கள். இயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை மக்கள் மத்தியில் காண முடிகிறது. சேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

போலீசாரிடம்  முரண்பட்ட  புகார்கள்: அதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 01-08-2013 தேதி அன்று ஒரு புகாரை அதே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். 20 நாட்களில் முரண்பட்ட 2 புகார்களை தாமினி போலீசில் கொடுத்துள்ளார். இதற்கிடையில் இயக்குநர் சேரன், சந்துரு மீது தனியாக ஒரு புகார் மனுவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து கொடுத்தார். அந்த மனுவில், சந்துரு தவறான பழக்கம் உள்ளவர் என்றும், ஏற்கனவே இரண்டு, மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றும், எனவே அவரால் தனது மகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த 3 புகார் மனுக்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சேரன்,   தாமினி,  சந்துரு  கலந்து  கொண்ட  போலீஸ்  விசாரணை: சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சேரன், தாமினி, சந்துரு ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். தாமினியிடம் விசாரித்தபோது, அவர் திரும்ப, திரும்ப ஒரே கருத்தைதான் சொன்னார். காதலன் சந்துருவுடன் என்னை அனுப்பி வைக்க வேண்டும், அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும், நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், எனது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே முதலில் சந்துரு மீது புகார் கொடுத்து விட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். காதலன் சந்துரு, சேரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும், தாமினி மீது வைத்துள்ள காதல் உண்மையானது என்றும், எனவே தாமினியை தனக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

சேரனின்  தொடர்  குற்றச்  சாட்டுகள்: இயக்குனர் சேரன், மகளின் காதலை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மகளின் காதலன் தவறான பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்ப்பதாகவும் சொன்னார். ஒரு பெண்ணிடம் பழகி ஏமாற்றியதாக சந்துரு மீது சென்னை கே.கே.நகர் போலீசில் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது என்றும், எனது மூத்த மகளை கூட தனது காதல் வலையில் சிக்கவைக்க சந்துரு முயற்சித்தார் என்றும், அவர் நல்லவர் என்றால் ஒரு வருடம் காத்திருந்து, அவருக்கென்று ஒரு நல்ல தொழிலை அமைத்துக்கொண்டு வரட்டும், அதற்கு பிறகு வேண்டுமானால், எனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்றும், இப்போது எனது மகள் படிப்பை தொடர, என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதனால் தாமினியை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே யாருக்கும் இல்லாமல், தாமினியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். ஒரு நாள் காலஅவகாசம் கொடுத்து, நன்றாக தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும்படி, தாமினிக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

தமிழக  போலீசாருக்கு  காதல்  விவகாரங்களை  ஆராய்வது  தவிர  வேறு  வேலை  இல்லை  போலும்: நல்ல வேளை, கருணாநிதி இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும். ஆடிட்டர் ரமேஷ் கொலை விஷயத்தில் பரபரப்பாக சோதனைகள், கைதுகள் செய்யப் பட்டன. ஆனால், அதே வேகத்தில் அடங்கி விட்டது. இப்பொழுது, இந்த காதல்-மோதல் விவகாரம் வெளி வந்துள்ளது. இளவரசன் விஷயம் தாக்கமும் குறைந்து விட்டது. இனி இதை வைத்து ஒரு வாரம் ஓட்டுவார்கள் போலும்!

ஊடகங்களின்  அனுதாபம்,  பரிதாபம்: 2 வழக்குகள் பதிவு இதற்கிடையில் இந்த பிரச்சினையில் அதிரடி திருப்பமாக, தாமினி கொடுத்த 2 புகார்கள் அடிப்படையில் சேரன் மீது கொலை மிரட்டல் வழக்கும், சந்துரு மீது கொலை மிரட்டல் உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் சந்துரு வீட்டுக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி இன்று தெரியும். தாமினியின் ஆதரவு தனக்கு இருப்பதால், சந்துரு தரப்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். சேரனை பொறுத்தமட்டில் இப்போதைக்கு மகள் ஆதரவு அவருக்கு இல்லாவிட்டாலும், ஒரு தகப்பன் என்ற முறையில் அவர் பக்கம் அனுதாபமும், ஆதரவும் கூடுதலாக உள்ளது[9]. இதே ஊடகங்கள் 2004-06 வருடங்களில் சேரனின் மீதான கற்பழிப்பு புகார் பற்றி வரிந்து தள்ளின. ஊடகங்களின் உசுப்பி விடும் வேலை மற்றும் சினிமாக் காரர்களின் விளம்பர யுக்திகள் பற்றியே இவை அலசப்படுகின்றன.

சேரனின்  மீது  முன்பு கற்பழிப்  புகார் (2004): திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை குளிர்பானம் கொடுத்து கற்பழித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் சேரனிடம் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ரகமதுன்னிஷா. இவர் கடந்த 2004ம் ஆண்டு உறையூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னை எனது குடும்பத்தினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். திருச்சியில் சினிமா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த இயக்குனர் சேரனிடம் என்னை அனுப்பினார்கள். என்னைப் பார்த்த சேரன், சினிமாவில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். பின்னர் குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதன் பின்னர் நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னர் விழித்தெழுந்த போதுதான் அவர் என்னைக் கற்பழித்தது தெரிய வந்தது. அதன் பின்னர் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா கட்டியிருப்பதைப் போல தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சேலையை எனக்குப் பரிசாக சேரன் கொடுத்தார். அதன் பின்னர் சிலர் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று இயக்குனர் தங்கர்பச்சானிடம் அறிமுகப்படுத்தினர். அங்கு அவரும் என்னைக் கற்பழித்துவிட்டார் என்று தனது புகாரில் ரகமதுன்னிஷா கூறியிருந்தார்.

2006ல் மறுபடியும் விசாரணை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ரகமதுன்னிஷாவின் தாயார், சகோதரர் மற்றும் நண்பர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பாக திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போலீசார் சேரன், தங்கர்பச்சானிடம் விசாரணையும் நடத்தினர். இருவரும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்து பேட்டியும் கொடுத்தனர்[10]. ஆனால், சேரன், தங்கர் மீதான புகாரில் உண்மையில்லை என்று கூறிய போலீசார் அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை. சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டி எடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ரகமதுன்னிஷாவுக்கு திருச்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜரான ரகமதுன்னிஷா, ரகசிய வாக்குமூலம்கொடுத்துள்ளார். கடந்த 20-06-2006ம் தேதி இந்த வாக்குமூலத்தை ரகமதுன்னிஷா கொடுத்தார். அப்போது சேரன், தங்கர்பச்சான் மீதான தனது புகார்களை உறுதி செய்து கூறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் போலீஸார் மீண்டும் விசாரணைநிடத்தக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் திரையுலகில் மீண்டும் பரபரப்புஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனியார் தொண்டு அமைப்பின் பராமரிப்பில் இருக்கிறார் ரகமதுன்னிஷா என்பது குறிப்பிடத்தக்கது[11].

போலீசிடமிருந்து  கோர்ட்டுக்குச் சென்ற விவகாரம்: 05-08-2013 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தாமினி பெற்றோர்களுடன் செல்ல மறுத்ததால் வழக்கறிஞர் வீட்டிலேயே இருக்கும் படி ஆணையிட்டது[12]. சந்துருவின் தாயார் இந்த ஆள்கொணர்வு மனுவை தாக்குதல் செய்திருந்தார். இவ்வாறு, இந்நிகழ்சிகள் கிரிக்கெட் மாட்ச் கமன்டரி போல ஊடகங்கள் செய்திகளை, உடனுக்குடன் அள்ளி வீசுக்கின்றன. ஐபிஎல் ஶ்ரீனிவாசனைக் கூட மறந்து விட்டார்கள். மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் முழுங்கிவிட்டும் ஆளவிற்கு முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். ஆப்படியென்றால், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை அமுக்கப் பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

களவு – கற்பு முறைகள்,  விதிகள்,  சட்டங்கள் முதலியவற்றை மீறும் தமிழர்கள்,  இந்தியர்கள்: தனிப்பட்ட, கௌரமான சாதாரமான மனிதன் இத்தகைய விஷயங்களைப் பற்றி கூனிக் குருகி வெட்கம் அடைவான். அந்தரங்கள் அம்பலத்தில் அரங்கேற விரும்ப மாட்டான். சம்பந்தப்பட்ட பெண்கள் ஐங்குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு – பற்றி கவலைப் படுவர். நல்லவேலை, ஆண்களுக்கு அத்தகைய இருக்க வேண்டிய ஐங்குணங்கள் பற்றி சொல்லப் படவில்லை. தமிழ் புலவர்கள் அடலேறுகளை மடலேற வைத்து விட்டுவிட்டார்கள் போலும். தந்தை மகளை கட்டுப்பாட்டுடன் வளர்ப்பான். பாரம்பரியத்தின் படி, பொருத்தம் (தொல்காப்பியர் சொன்னபடி) பார்த்து கல்யாணம் செய்து வைப்பான். ஆனால், இன்று ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதற்கு யாரும் வருவதில்லை. நல்ல குணங்கள், பண்புகள் இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதில்லை.

வேதபிரகாஷ்

© 06-08-2013


[7] In her petition, Eswari Ammal submitted that her son fell in love with Dhamini, 20, on June 4, 2011 after witnessing her dance programme. When informed, Cheran had initially agreed for the marriage but later said the couple should wait for a couple of years.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Film-director-Cherans-daughter-case-reaches-HC/articleshow/21621677.cms

நடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்?

ஜூலை 22, 2013

நடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்?

kushboo-leg-raising-before-goddessகுஷ்பு சுந்தர் – தாய், மனைவி, கம்பனி தலைவி, தயாரிப்பாளர், பெருமைக் கொண்ட திமுக அரசியல்வாதி: டுவிட்டரில் தன்னை மேற்குறிப்பிட்டுள்ளபடி அறிவித்துக் கொள்கிறார். குஷ்பு அரசிய பின்னணியை வைத்துக் கொண்டு வியாபாரத்தில் அதிகமாகவே ஈடுபட்டுள்ளார்[1]. திமுகவில் அவரது நிலை சர்ச்சைக்குரியதாகத் தான் இருந்து வருகிறது. சகநடிகைகளுடனான போட்டி முன்பு அதிகமாக இருந்தது[2]. தனது கணவர் சுந்தர் எடுக்கும் படங்களிலிருந்தே அதனை தெரிந்து கொள்ளலாம்.

khushbusundar@khushsundar

Mother,wifey,MD,Actor/producer/politician-a proud DMKian..live n let live,happily :):)

Chennai

பிறகு மற்றவர்களின் பாணியும் பின்பற்றப்படுகிறது[3]. பெண்களின் கற்பைப் பற்றி அசிங்கமாக பேசியதே குச்பு தான்[4]. அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி ஆனபோது, பச்சைத் தமிழர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்[5]. கூட்டணி தர்மம் அவர்களைக் கட்டுப்படுத்தியது போலும்! ஆனால், மற்ற விஷயங்களில் கற்பு காற்றில் பரந்து கொண்டிருக்கும் போது – சென்னை பீடோபைல், முதலிய விவகாரங்கள் -துளிக்கூட கவலைப் படாமல் இருந்து வந்தார்[6]. சமீபத்தில் கூட, இம்மாதிரியான கருத்து குச்பு மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

Khushbu claiming honestyகுஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர்[7]: குஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர் என்ற முறையில் பேசி, நடந்து கொண்டு வருகிறார். அத்தகைய அதிகாரத்தை இந்திய பெண்கள் நடிகைகளுக்கு, அதிலும் குஷ்பு போன்றவர்களுக்கு கொட்டுக்கவில்லை. தானாகவே, ஊடகங்களில் அவ்வாறு பேசி பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்ட நிலையில், உண்மை அறிந்தவர்கள் தட்டிக் கேட்கத்தான் செய்வார்கள், விமர்சிப்பார்கள். அதனால், ஒரு நடிகை தனது நிலையை, கடந்துவந்த வாழ்க்கையை மறந்து, ஏதோ பெண்மையின் சிகரம், இக்கால கண்ணகி என்பது போல பேசுவதால் ஒன்றும் மாறிவிடாது. தரக்குறைவான வார்த்தைக்கள் பிரயோகித்தால், பதிலுக்கு அவ்வாறானவை திரும்பி வரும். எனவே, “பிரபலங்களாக” இருந்தாலும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இவர் ஏற்கெனவே பல சர்ச்சைகளில் தேவையில்லாமல் நுழைந்திருக்கிறார். குறிப்பாக திமுகவில் சேர்ந்த பிறகு, ஏதோ தனக்கு அளவில்லாத அதிகாரம் வந்து விட்டது போல நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்[8].

Khushbu discourse about chastity and protestவயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது!  குஷ்பூ பாய்ச்சல்[9]: டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.

kushboo-with-islamic-christian-border-sareesசேலையில் கடவுள் படம்!  புதிய சர்ச்சையில் குஷ்பு!![10]: தமிழ் அன்னை முன்பு செருப்பு அணிந்து அமர்ந்தது, பெண்களின் கற்பு பற்றி பேசியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்பு, இப்போது புதிதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த முறை அவர் அணிந்த சேலையால் சர்ச்சை உருவாகி இருக்கிறது. அப்படி என்ன ‌சேலை? என்று கேட்கிறீர்களா குஷ்பு அணிந்து வந்த சேலை முழுக்க ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என்று கடவுள்களின் படங்களாக இருந்து உள்ளது. இதனால் அவர் இந்துக்கடவுள்களை அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சி அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றி குஷ்புவிடம் கேட்டால், இதைப்பற்றி நான் கண்டுகொள்ளவே இல்லை. வேலை இல்லாதவர்கள் தான் இதை பெரிதுபடுத்துவார்கள். இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி சிலர் அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக என்ன பிரச்னை ‌வந்தாலும் அதை கண்டுகொள்ளபோவது இல்லை. மேலும் இதுதொடர்பாக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.

Secular Kusgboo with all religious sarisசேர்த்து வைக்க நான் தரகர் கிடையாது : குஷ்பு!!: நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நயன்தாரா-பிரபுதேவா இடையே சமரம் செய்து வைக்க நடிகை குஷ்பு முயற்சி செய்வதாக தவகல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிரபுதேவா-நயன்தாரா இருவருமே என்னுடைய நல்ல நண்பர்கள். அதிலும் பிரபுதேவா என்னுடைய நீண்டநாள் நண்பர். அவர் நடிக்க வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். என்னுடைய ஒரு படத்திற்கு அவர் தான் நடன அமைப்பாளர். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது. நயன்தாரா-பிரபுதேவா விஷயத்திலும் அப்படிதான். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னையோ தெரியவில்லை அது அவர்களுடைய சொந்த விவகாரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஒன்றும் தரகர் கிடையாது. இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்[11].

Khushbu answerable as an exposed actressவிபச்சாரதரகராக / புரோக்கராகத்தான இருப்பவரால் தான் இதுபோல் பேச முடியும்: நடிகைகள் பற்றி டுவிட்டரில் அவதூறாக விமர்சித்துள்ள ஒருவருக்கு, நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[12]. சமீபத்தில் டுவிட்டரில் ஒருவர், நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகள் அவமானப்படுத்துவதாக உள்ளது என குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்தில், நடிகைகள் பற்றி அந்த நபர் அவதூறாக கருத்து பதிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. விபசார தரகராக இருப்பவரால் தான் இது போல் பேச முடியும். நடிகைகளை பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்கள் என்று சராசரி மனிதர்கள் யாரும் குறிப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி ஒரு நபர் கூறியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் விபச்சார புரோக்கராகத்தான இருக்க வேண்டும். அவருக்கும், யாரேனும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட மோதலை அவர் இப்படி ஒட்டுமொத்த நடிகைகளைப்பற்றியும் கருத்து சொல்லியிருக்கிறார். இதுபோன்று நடிகைகள் பற்றி அவதூறு பரப்புபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது போன்ற பிள்ளையை பெற்றதற்காக பெற்றோர் நிச்சயம் வருத்தப்படுவார்கள்[13]. பெண்களை உயர்வாக மதித்து நிறைய ஆண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு, பிண்ணனி பாடகியுமான சின்மயியும்[14] கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

khushbusundar ‏@khushsundar16 JulHe needs a severe punishment but my heart also goes to him for being so seriously retarded..I pity his parents..wat dey will b going thru??
khushbusundar ‏@khushsundar16 JulIf a dog doesn’t bark den he will doubt his ownself..some ppl need 2 remind themselves wat breed dey belong 2..dis man hr is a street dog
khushbusundar ‏@khushsundar16 JulThe guy who tweets about women/actors who sleep around for money,surely must be a pimp..how the hell can he so sure about them otherwise?

 

It is all in the game - no virtue only for moneyநடிகைகள் பணத்திற்குப் படிகிறவர்களா..?- ட்வீட்டர் கருத்துக்கு குஷ்பு,  சின்மயி கண்டனம்[15]: ட்வீட்டரில் நடிகைகள் பற்றி அவதூறாக விமர்சித்துள்ள ஒருவரின் கருத்துக்கு நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், ட்வீட்டரில் ஒருவர், ‘நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக’ கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகளை அவமானப்படுத்துவதாக உள்ளது என நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து குஷ்பு தனது ட்வீட்டரில் அளித்துள்ள பதிலடி………….[16]. ஒரு நபர் தனது டுவிட்டரில் நடிகைகளை விலைமாதுக்களாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தார். குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தவறான வழியில் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நடிகைகள் கொதித்தெழுந்துள்ளனர். அதிலும் நடிகை குஷ்பு ரொம்பவே டென்சனாகியிருக்கிறார். அந்த டுவிட்டர் செய்திக்கு அவர் பதிலளிக்கையில், இது தவறு. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தமாதிரி தவறான செய்தி பரப்புபவர்களை கண்டும் காணாததும் போல் இருக்கக்கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற செய்திகளை வெளியிட அவர்கள் அஞ்ச வேண்டும் என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

Saranya Nag going nude step by step3“பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”: 2005ல் தங்கர் பச்சன் என்ற இயக்குனர்-தயாரிப்பாளர், “பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”, என்று சொன்னபோது, குஷ்பு கோபித்து கண்டனம் தெரிவித்தார். தங்கர் பச்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும், குஷ்பு சமாதானம் ஆகவில்லையாம்[17].

yana-gupta-xபத்திரிக்கை / ஊடக நிருபர்கள் விபச்சாரத் தரகர்கள்: பிப்ரவரி 2013ல், நிருபர்களை விபச்சாரத் தரகர்கள் என்று குறிப்பிட்டதாக செய்திகள் வந்தன[18].  “இன்னொரு மணியம்மை” என்று குமுதத்தில் வெளிவந்த கட்டுரையை எதிர்த்து அவ்வாறு மோசமான வார்த்தைகளை ஊப்பயோகித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டது[19].

குஷ்பு பேய்!

குஷ்பு பேய்!

நடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது இவ்விதமாக இருக்கிறது. கடந்த வாரத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மும்பை நடிகைகள் கைது செய்யப்பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

© 22-07-2013


[17] Thankar Bachan, film director and producer, recently had to face the wrath of actresses including Khushboo for saying that, ‘women who acted mainly for money are akin to prostitutes.’ He later had to apologise, although Khushboo was, reportedly, not pacified.

http://www.rediff.com/movies/2005/sep/26khushboo.htm

கோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை?

ஓகஸ்ட் 26, 2010

கோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை?
திரிஷாவும், குஷ்புவும்: இது ஏதோ திரிஷாவிற்கு எதிராக எழுதப்படுவதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். எப்படி குஷ்பு விமர்சிக்கப் படுகிறாரோ, அதுமாதிரித்தான். பெண், தமிழ்பெண், தெலுங்குப் பெண்……………..இந்தியப் பெண் என்றால் ஒழுங்காகத்தான் இருக்கவேண்டும். இல்லை, நாங்கள் எப்படிவேண்டுமானாலும் இருப்போம் என்றால், பிறகு ஒழுங்கைப் பற்றி, ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைபடவேண்டியதில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரைக் கூறத்தேவையில்லை. ஏனெனில், அப்பொழுதே அந்த தகுதியிழ்ந்த பிறகு, அதைப் பற்றி பேசவேண்டிய அருகதையும் போய் விடுகிறது. இல்லை அவர்கள் நிலையில் இருந்து கொண்டு, நாங்கள் சொல்வதுதான் சரி, நீங்கள் எல்லொரும் பழமைவாதிகள், இக்காலத்தைஒ போன்றவர்கள் என்றால், பிறகு ஏன் அக்காலத்தைப் போல நியாயம், தர்மம், ஒழுங்கு…………………என்றெல்லாம் பேசவேண்டும்?

Chima-Clement-telugu-drugscase

Chima-Clement-telugu-drugscase

நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா? நடிகை திரிஷா ஆவேசம்[1]: இதனால் திரிஷா அதிர்ச்சியானார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “போதை பொருள் கடத்தலில் கைதான நைஜீரிய வாலிபரிடம் எனது செல்போன் நம்பர் இருந்ததாக வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன். அவருக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்று தெரியாது. ஐதராபாத்தில் தங்கி இருந்த தோழி என்னிடம் தொடர்பு கொண்டு என்னைப்பற்றி அவதூறாக வெளியான செய்திகள் பற்றி சொன்னார். நைஜீரிய வாலிபர் போன் புக்கில் எனது பெயர் இல்லை என்றும், எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். போதை பொருள் விவாகரத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்[2].

ramya-trisha-with-Sydney Sladen

ramya-trisha-with-Sydney Sladen

வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன்: மனநிலை பாதிப்பு ஏன் ஏற்படவேண்டும். சினிமாவில் பலருடன் சேர்ந்து நடிக்கும் போது, முத்தம் கொடுக்கும்போது, கட்டிப் பிடிக்கும்போது, ஹாலிவுட்டில் போல படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும்போது………………..மற்றவர்ட்கள் என்ன நினைப்பார்கள்? அப்பொழுது ஏன் மனமுடையவில்லை?
னக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. நான் சினிமாவில் அப்படித்தான் நடிப்பேன், ஆனால் என் பெண்மையைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை, இல்லை சட்டப்படி உரிமையில்லை என்று சொன்னால் என்னாவது?

என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்: ஆக, அரசியல் மாதிரி, சினிமாவிலும் இத்தகைய முறை ஒன்றுள்ளது என்று தெரிகிறது.

மானநஷ்ட வழக்கு தொடுப்பேன் என்று எச்சரிக்கை: “நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனது பெயரை வேண்டும் என்றே இதில் இழுத்து விட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும். சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும். அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது. எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன். எனது மேலாளர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார். வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்”,
இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்[3].

Trisha-mood

Trisha-mood

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா இல்லை “தற்காப்பு இயக்கம் மனத்தில் வேலைசெய்கிறாதா? முன்பு அஃபன்ஸில் போய், இங்கு டிஃபன்ஸில் வந்திருப்பது தெரிகின்றது. தேவையில்லாமால், இத்தகைய விளக்கமும், எச்சரிக்கையும் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லையே?
·         நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
·         இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை.
·         போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு.
·         இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும்
·         சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும்.
·         அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து  மீண்டு வர முயற்சி செய்கிறேன்
கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது.
·         எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன்
·         இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்.

trisha-party-hyderabad

trisha-party-hyderabad

எங்களது தூய்மையை நிரூபிக்க போதை மருந்து பரிசோதனைக்கு நாங்கள் தயார்: இந்த தற்பாப்பு மனோநிலை எப்படியெல்லாம் வேலைசெய்கிறது பாருங்கள். தக்குபதி ரானா, கான்மா ஜெத்மனனி, பூனம் கௌர், நானி முதலிய நடிகைகள், ரசாயன பரிசோதனைக்குத் தயார் என்று சொல்கின்றனர்[4]. நைஜீரிய போதை மருந்து விற்றவனின் செல்போனின் 60ற்கும் மேற்பட்ட நடிக-நடிகைகளில் நெம்பர்கள் இருப்பதனால், போலீஸ் அவர்களையெல்லாம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ராஜா, நானி, திரிஷா, ஹர்ஷகுமார், ஹனிஷ்கா, விமலா ராமன் (ரம்யா கிருஷ்ணனின் சகோதரி), லகடபதி என்ற எம்.பியின் மகன்கள்[5]., மதுஷாலினி, சைரா பானு, உப்பலபதி ரவி சீனிவாஸ், பபி என்கின்ற நந்தூரி உதய்[6] என்று அந்த பட்டியல் நீளுகிறது இந்நிலையில் தமது தூய்மைய நிரூபிக்க இந்த நடிகைகள் இப்படி சவால் விட்டுள்ளனர். நைஜீரிய இளைஞர்களுடன் திரிஷா இருக்கின்ற மாதிரி, பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன[7].

Trisha-party

Trisha-party

இப்படி ஒரு ஆண் / பெண் இருப்பது ஒழுக்கமா?

trisha-party-X

trisha-party-X

இப்படி ஆடி குதிப்பது எந்த வகையில் வரும்?

trisha-பார்டி-XX

trisha-பார்டி-XX

இதை எந்த தாயாராவது ஒப்புக்கொள்வாரா?

trisha-X

trisha-X

இதையும் எந்த ரகத்தில் சேர்ப்பது?

எங்களுக்கு ரீல் லைஃபும், ரியல் லைஃபும் ஒன்று என்றால் அப்படியே இருந்து விட்டு போங்கள், பிறகு அந்த பெண்ணிய……………., ஒழுக்க……………….., முறைகள்…………., குணங்கள்…………….முதலியவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!

இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நடிகருடன் தான் திரிஷா இருந்துள்ளார்.


[1] மாலைச்சுடர், நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா? நடிகை திரிஷா ஆவேசம், ஆகஸ்ட் 23, 2010, http://www.maalaimalar.com/2010/08/23154857/actorss-trisha-statement.html
[2] http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6257

 

[3] சன் டிவிக்காரர்கள், திரிஷா அம்மா சொன்னதை 25-08-2010 மாலை செய்திகளில் விடாமல் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும், நித்யானந்தா மாதிரி, மற்ற நடிகைகளின் விவகாரங்களைப் பற்றி ஒலி/ஒளிபரப்பவில்லை.

[4]DC Correspondent ,  Actors agree to undergo blood tests to prove their innocence, August 23rd, 2010;  http://www.deccanchronicle.com/hyderabad/actors-agree-undergo-blood-tests-prove-their-innocence-624

[5] http://andhracafe.com/index.php?m=show&id=41725

[6] http://www.dailylatestnews.com/2010/08/23/trisha-photographed-nigerians-028128

[7] Read more: http://www.dailylatestnews.com/2010/08/23/trisha-photographed-nigerians-028128#ixzz0xdDQbP00