Posts Tagged ‘கட்டிப் பிடிப்பது’

என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது – இப்படி ஒரு ஆண் சொல்வதில் வியப்புள்ளதா?

ஜனவரி 12, 2017

என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காதுஇப்படி ஒரு ஆண் சொல்வதில் வியப்புள்ளதா?

kavya-madhavan-dilip-marriage

நடிகைநடிகர்கள் பல திருமணங்கள் செய்து கொள்வது: இன்றைக்கு, இணைதள சமூக ஊடகங்களில் உலா வரும் கருத்துக்களை வைத்துக் கொண்டு, செய்திகளை தயாரிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. மலையாள நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகி விட்டதாகவும் அவரை வீட்டில் முடக்கி வைத்து விட்டதாகவும் பரபரப்பு புகார் கிளம்பி இருக்கிறது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது[1]. மலையாள பட உலகில் ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருந்து, காசி, என்மன வானில், சாது மிரண்டா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் காவ்யா மாதவன்[2]. இவர் 2009–ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை மணந்து ஒரு வருடத்திலேயே, அதாவது 2010ல் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்[3]. அதன்பிறகு மலையாள நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் 2016ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்[4]. திலீப்பும் தனது முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டுத்தான் காவ்யா மாதவனை மணந்தார். அவர்கள் மூலம் பிறந்த மீனாக்ஷி என்ற மகள் உள்ளாள் என்பது குறிப்பிடத் தக்கது.

dileep-and-kavya-madhavan-wedding-dileep-kavya-madhavan-meenakshiகாவ்யா நடித்தால் என்ன, நடிக்க விட்டால் என்ன?: காவ்யா மாதவனுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததாகவும் முதல் கணவர் அதற்கு தடைவிதித்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது என்றெல்லாம் கயிறு திரிக்கின்றன. எனவே திலீப், காவ்யா மாதவனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பிறகு காவ்யா மாதவன் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. சினிமாவை விட்டு அவர் விலகி விட்டதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் நடிக்க தடை விதித்து வீட்டில் அவரை முடக்கி வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மஞ்சு வாரியரையும் இதுபோலவே திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க திலீப் அனுமதிக்கவில்லை என்றும் விவாகரத்துக்கு பிறகுதான் சினிமாவில் தற்போது முழுவீச்சில் அவர் நடித்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள். இதற்கு திலீப் மற்றும் காவ்யா மாதவனிடம் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. காவ்யா மாதவனை வீட்டில் யாரும் முடக்கவில்லை என்றும் சினிமாவில் நடிக்காமல் இருப்பது அவர் சுயமாக எடுத்த முடிவு என்றும் நெருக்கமானவர்கள் கூறினார்கள். ஆக, இவர்கள் எல்லொருமே, அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு, கவனித்து, செய்திகளை கொடுக்கிறார்கள் போலும்!

kavya-nishal-chandra-marriageமஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவையும் நடிக்க விடமட்டார்[5]: மலையாள நடிகர் திலீப் நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது படத்தில் மஞ்சுவை நடிக்க வைக்க திலீப்பிடம் பேசினார். அதற்கு திலீப் அளித்த பதில் பலரையும் வியக்க வைத்தது. மஞ்சுவை தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பிய பிரியதர்ஷனிடம் தீலிப் கூறியதாவது, என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது. அவர் நடிக்க மாட்டார் என்றார்[6]. திலீப்பை திருமணம் செய்த பிறகு காவ்யா மாதவன் புதுப்படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு கூட வருவது இல்லை. மஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவை மட்டும் விடவா போகிறார் என்று கேரள ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள். காவ்யா இனி நடிக்க மாட்டார் என மல்லுவுட்டில் கூறப்படுகிறது. நிஷால் சந்திராவை திருமணம் செய்யவிருந்தபோது காவ்யா அளித்த பேட்டியில் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார். அதனால் அவர் தற்போது நடிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. திலீப் தனது மகள் மீனாக்ஷியை, காவ்யா கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார்[7]. பொதுவாக, கேரள நடிகர்கள் கூட இவ்வாறு தங்களது ஆணதிகாரத்தைக் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், கேரளாவில், பெண்ணதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரப்பட்டுள்ளது[8].

kavya-madhavanஎன் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது[9]: நடிகன் மட்டுமல்ல, எவனும் அப்படித்தான் சொல்வான். “என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது” என்றதில் என்ன புதியதாக உள்ளது என்று தெரியவில்லை. எந்த ஆணுமே அப்படித்தான் நினைப்பான் என்பதில், எந்தவித விசித்திரமும் இல்லை. இது ஒரு ஆணின் மற்றும் பெண்ணின் விருப்பம் எல்லோருக்கும் பொருந்தும். ஆனால், இதை தேவையில்லாமல் செய்தியாக்கியுள்ளன[10]. அத்தகைய போக்கை மலையாள மனோரமா எடுத்துக் காட்டியுள்ளது[11]. அதாவது, அதுவும் இதில் சேர்ந்து அதையை வளர்க்க முயல்கின்றது. இணைதளத்தில், இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனது மனைவியைப் பற்றி அடுத்தவர்கள், இப்படி செய்ய வேண்டும் – கூடாது என்று தீர்மானிப்பது வியப்பாக இருக்கிறது[12]. ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் தீர்மானிப்பதும் வினோதமே. இந்த பேச்சை வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன. ஒரு நடிகன், பல நடிகைகளைத் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, நெருக்கமாகத் தான் நடித்து வருகிறான். இப்பொழுதோ, மிகக் கேவலமான முறையில், முத்தம் கொடுத்து, படுக்கையறை காட்சிகளில் கூட நடித்து வருகிறார்கள். அதேபோல, நடிகைகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள். திருமணமான நடிகன் / நடிகை இன்னொரு திருமணம் ஆன / ஆகாத நடிகை / நடிகனைக் கட்டிப் பிடித்து நடிப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இருப்பினும், நடிகனான கணவன் அவ்வாறு நிர்பந்தித்தால், நடிகை ஒப்புக் கொண்டு வாழலாம். அந்நிலையில், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு மறைந்து விடுவது தெரிந்த விசயம் தான். பத்மினி முதல் ராதா வரை அவ்வாறு நடந்துள்ளது.

© வேதபிரகாஷ்

12-01-2017

dilip-manju-warrior-meenakshi-child

[1] தினத்தந்தி, திலீப்பை திருமணம் செய்து கொண்ட காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார்? , பதிவு செய்த நாள்: சனி, ஜனவரி 07,2017, 4:07 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜனவரி 07,2017, 4:07 AM IST.

[2] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2017/01/07040707/Kavya-MadhavanCinemaTo-leaveStepped.vpf

[3] குமரி எக்ஸ்பிரஸ், காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார்?, 4 ஜன., 2017.

[4]http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5/

[5] பிலிமி.பீட்.தமிழ், என் பொண்டாட்டி வேறு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது பிடிக்காது: திலீப் அப்பவே சொன்னாரே!, Posted by: Siva, Published: Tuesday, January 10, 2017, 15:53 [IST]

[6] http://tamil.filmibeat.com/news/has-kavya-madhavan-quit-acting-044204.html

[7] Indian Express, Dileep’s remark after his wedding reflects a misplaced sense of superiority — but not just his own, Written by Soumya Mathew | New Delhi | Updated: November 26, 2016 3:31 pm.

[8] The misplaced sense of patriarchy in his words directed towards ‘protecting the honour’ of a woman who has been affected by rumours that surrounded them, was too obvious to go unnoticed.

http://indianexpress.com/article/blogs/dileep-kavya-madhavan-wedding-manju-warrier-patriarchy-4396137/

[9] சினிமா.உலகம், என் மனைவி வேறொரு ஆணுடன் கட்டி பிடித்து நடிப்பது பிடிக்காதுபிரபல நடிகர், ஜனவரி.10, 2017, by Mahalakshmi.

[10] http://www.cineulagam.com/celebs/06/135192

[11] manoramaonline.com, Dileep-Kavya Madhavan wedding divides the Internet, Saturday 26 November 2016 12:52 PM IST, byOnmanorama Staff

[12] http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/dileep-kavya-madhavan-wedding-divides-the-internet.html

கமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம்

ஏப்ரல் 30, 2013

கமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம்

அந்தரங்கத்தை அரங்கேற்றத் துடிக்கும் கேடுகெட்ட கூத்தாடிகள்

அந்தரங்கத்தை அரங்கேற்றத் துடிக்கும் கேடுகெட்ட கூத்தாடிகள்

கமல் ஹஸன் என்ற சினிமா நடிகன் தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைந்த ஒரு மனிதன். அதனால், தனது தோல்வியை மறைக்க நாத்திகம், சேர்ந்து வாழ்தல், சுதந்திரமான உடலுறவு போன்றவற்றை ஊக்குவித்து வருவது வழக்கமாகி விட்டது. முன்பு “மன்மத அன்பு” என்ற படத்தில் வரும் படலில், தன்னுடைய காமவெறி, பெண்களிடன் தான் கொண்ட உறவு முதலியவற்றை சேர்த்து விவகாரங்களை வைத்தான்[1]. பிறகு சொதப்பலான விளக்கமும் கொடுத்தான்[2]. நடிகைகளும் மன-அழுத்தம், நடிகன்களின் காம வெறியாட்டம் முதலியவற்றைத் தாங்காமல் தற்கொலையிம் செய்து கொண்டுள்ளனர்[3]. சினிமாவில் திருமாவளவன் நடித்துள்ள நிலையில், “கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி என நினைக்கிறார்கள்”, என்று விமர்சனம் செய்தது ஞாபகத்தில் இருக்கலாம்[4]. அரசியல்வாதிக்கு அப்படியொரு ஆசையென்றால், நடிகனுக்கு இப்படியொரு காம வெறி[5]. கட்டிப்பிடித்து முத்தமும் கொடுத்தால், பிரதமர் கூட ஆகிவிடலாம் போலிருக்கிறது[6]. சினிமாகாரர்கள் யோக்கியதை இந்த லட்சணத்தில் உள்ளது[7].

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்.குடும்பப்பழக்கமா

விபச்சாரிகள் நடத்தும் பொது அறிவுப் போட்டி: கிரிக்கெட் சூதாட்டம் ஆகி, விபச்சாரம் ஆகி, போதை மருந்து விற்பனை வழியாகி விட்ட நிலையில், தமிழர்களுக்கு பொது அறிவு புகட்ட, இல்வாழ்க்கையில் கொஞ்சம் கூட ஒழுக்கம் இல்லாத நடிகன்களை வைத்துக் கொண்டு, கேடுகெட்ட விஜய் டிவி ஒரு நிகழ்சி நடத்தி வருகின்றது. அதில் போதாகுறைக்கு நடிகன்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து அவர்கள் யாதோ பெரிய மேதாவிகள் போல காட்டப்படுகிறார்கள். கிரிக்கெட்டில் எப்படி, அரை நிர்வாண பெண்களை ஆட வைக்கிறார்களோ, அதுபோல, இங்கு நடிகன்களை வைத்து தமாஷா காட்டுகிறர்கள். இந்நிலையில் தான், உலக நாயகன் கமல் ஹஸன் தன்னுடைய “துணைவி” அல்லது சேர்ந்து வாழும் நடிகையுடன் வந்து, தன்னுடைய மேதாவித்தனத்தைக் காட்டிக் கொண்டான்.

 

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்

கமல் கட்டிப்பிடிப்பு முத்தம்

கமலைக் கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும்என்பது நிறைவேறாத ஆசை: இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று விஜய் டிவி மீது புகார் அளித்தார்[8]. அந்த புகார் மனுவில், “தமிழகத்தில் மக்கள் அதிகம் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் “நீங்களும் வெல்லலாம்” என்ற பொது அறிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த பிரகாஷ்ராஜும், இல்லற வாழ்க்கையில் தோல்வி அடைந்த மனிதன். அறிவுப் பூர்வமாக இந்நிகழ்சி நடத்துவதற்கே யோக்கியதை இல்லை. கடந்த 15, 16, 17ம் தேதிகளில் ஒளிப்பரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி மற்றும் குடும்ப பெண்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப பெண்களிடம் நடிகர் கமலஹாசன் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நடுத்தர வயது பெண்மணியை பார்த்து, உங்களுக்கு நடிகர் கமலஹாசனை பிடிக்குமா என்று கேட்கிறார். அதற்கு அந்த நடுத்தர வயது பெண்மணி, எனக்கு வெறித்தனமாக பிடிக்கும் என்கிறார். மீண்டும் உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பெண்மணி, கமலை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் என்கிறார், அதுபோலும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறார்[9]. அதுபோல் நடிகை திவ்யதர்ஷினியும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது என தெரிவித்து, கமலை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார்.

 

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy

திருமணம்  செய்து  கொள்ளாமல்   குடும்பம்  நடத்தினால்  என்ன  தவறு: வாணி கணபதி முதல் சிம்ரன் வரை பல நடிகைகளுடன் வாழ்க்கை நடத்திய கமல் ஹஸன், திருமணம் இல்லாமலே இரு பெண்களுக்கும் தந்தையாக இருக்கிறான். அவனுடைய அத்தகைய சாமர்த்தியத்தைப் பற்றி, முஸ்லீம்களே வியந்தனர், பொறாமை கொண்டனர். ஆகவே, இந்நிகழ்சியில், திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது, ஒன்றும் வியப்பான விஷயம் இல்லை, ஏனெனில், அதிலும் உலக மகா நாயகன் திருவாளர் கமல் ஹஸன் தான்.

 

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

முத்தக் கலாச்சாரம் அரங்கத்தில்

கட்டிப்பிடித்து  முத்தம்  கொடுப்பதுதான்  இந்தியநாட்டு  கலாச்சாரமா?: பாவம், இந்து மக்கள் கட்சிக்காரர் நொந்துபோய், இப்படி கேட்டு கேட்டுள்ளார். பொது அறிவு நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியில் ஒரு ஆணை அடுத்தவர் வீட்டு மனைவி அல்லது பெண்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தான் இந்திய நாட்டு கலாச்சாரமா? நாட்டில் பெருகி வரும் பாலியல் பலாத்காரத்திற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் தூண்டுகோலாக இருந்து வருகின்றன[10]. எனவே அன்றைய நிகழ்ச்சிகளில் இந்திய நாட்டு கலாச்சாரத்தை சீரழித்த குற்றத்திற்காக நடிகர்கள் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் கவுதமி, திவ்யதர்ஷினி, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமலுக்கு முத்தமிட்ட நடுத்தர வயது பெண் மற்றும் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்[11].

வேதபிரகாஷ்

30-04-2013


நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)?

ஒக்ரோபர் 3, 2010

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார்?

அன்பு தோழி, மின்சாரம், முதலிய சினிமாக்களில் நடித்த திருமாவளவன்: மின்சாரத்தில் நடித்தபோது சொன்னது: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது? என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன், என்கிறார் திருமாவளவன். ‘மின்சாரம்’ படத்தில், முதல்வராக நடித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். கோவை பிலிம் சிட்டி என்ற பட நிறுவனம் சார்பில் தமிழரசன் தயாரித்து, செல்வகுமார் டைரக்டு செய்துள்ள இந்தப் படத்தில், திருமாவளவன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. பாடல்களை திருமாவளவன் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பெற்றுக்கொண்டார்.

Kaja with other Bigwigs

Kaja with other Bigwigs

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம்: “அன்புள்ள தோழி”யில் நடித்தபோது சொன்னது: கிருபா என்பவர் இயக்கும் “அன்புத் தோழி’ படத்தில் தமிழ் போராளியாக நடிக்கிறார் திருமாவளவன். சென்னையை அடுத்த திரிசூலம் மலைப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் திருமாவளவன் நடித்தார். வெடிகுண்டுகள் வெடிக்கும்போது எதிரிகளிடமிருந்து திருமாவளவன் தப்பிக்க வேண்டும். அத்தகைய காட்சி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டது. மேலும், சில வசனக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. திருமாவளவன் வசனம் பேசி நடித்தார். இது குறித்து இப்படத்தின் இயக்குநர் கிருபா கூறியது: “நல்ல அனுபவமுள்ள நடிகரைப் போல திருமாவளவன் நடிக்கிறார். காதலை மையமாகக் கொண்ட படம் என்றாலும் இதில் முக்கியகேரக்டர்ஒரு போரளியுடையது. அந்த வேடத்தில்தான் திருமாவளவன் நடிக்கிறார். இதில் திருமாவளவனுக்கு ஜோடி இல்லை”, என்றார். “எனக்கு நாடக, சினிமா அனுபவம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றார் திருமாவளவன்.

விளம்பரம் வேண்டும் என்றால் சினிமாவில் நடிக்க வேண்டும்: முதல்வராக ஆசையிருந்தால் சினிமாவில் நடிக்க வேண்டும்: ‘முதலமைச்சராக வேண்டும் என்ற பேராசை காரணமாக, மின்சாரம் படத்தில் அந்த வேடத்தில் நடிக்கவில்லை. இந்த தலைமுறையில், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக விட மாட்டார்கள். அடுத்த தலைமுறையிலாவது ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவர் ஏன் அந்த பதவியில் அமரக்கூடாது? என்ற கேள்வியின் விளைவாகவே அந்த வேடத்தில் நடித்தேன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட வேண்டும் என்றால், சினிமாவில் நடிக்க வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்‘ என்றவரை நிலை மாறியுள்ளது!

முதல்வராக ஆசைப்படும் நடிகர்கள்: நான் முதல்வர் ஆகக்கூடாதா? கேட்பது திருமா, நான் திரையுலகில் நுழைய காரணமாக அமைந்தது அன்புத் தோழி திரைப்படம். அதில் நான் நடித்தது, ஒரு விபத்து. எனக்கு திரைப்பட துறையிலே அரிதாரம் பூச வேண்டும் என்ற ஈடுபாடும், ஈர்ப்பும் இல்லை. மேலும் நிஜத்திலும் சரி, திரையிலும் சரி எனக்கு நடிக்கத் தெரியாது. அதனால்தான் அரசியலிலே என் உழைப்புக்கு தகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. அதுபற்றி நான் கவலைப்படவும் இல்லை. திரைப்பட துறையிலே பொருளீட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. இந்தப் படத்தில் முதல்வர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை தயாரிப்பாளரும், இயக்குனரும் அணுகியபோது, நான் மறுத்தேன். திருமாவளவனுக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்று பரிகசிப்பார்கள் என்றே கூறினேன்.”உங்கள் நன்மதிப்பு பாதிக்காத அளவுக்கு அந்த வேடம் அமைந்திருக்கிறதுஎன்றும், அது ஒரு கருத்துள்ள வேடம் என்றும் சொன்னதாலும், நான் ஒப்புக்கொண்டேன். ஓட்டுப் போடுவதற்கு மட்டுமே நாங்கள் பிறக்கவில்லை. 4 படங்கள் ஓடினால், அதில் நடித்தவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தெளிவே இல்லாதவர்கள் எல்லாம் நாட்டை ஆளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஏன் ஆளக்கூடாது?” என்றார் திருமா[1].

பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி: பிரபல தயாரிப்பாளரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான காஜாமைதீனுக்கு[2] விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் கட்சித் தலைவர் திருமாவளவன். காஜா மைதீன் / காஜா மொய்தீன் தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேருடன் திருமாவளவன் கட்சயில் நேற்று முன்தினம் (29-09-2010) இணைந்தார். இதற்கான இணைப்பு விழா தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மாலை அணிவித்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு கட்சியில் இணைந்தார். காஜாமைதீன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிப்பதாக திருமாவளவன் நிகழ்ச்சியில் அறிவித்தார்.

நம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது:. கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது[3]:தமிழ் மக்களுக்காக பணியாற்ற விடுதலை சிறுத்தைகளுடன் கைகோர்த்துள்ள காஜாமைதீனை வரவேற்கிறேன். அவர் அரசியலில் நல்ல விளைச்சல் தரக்கூடியவர். தமிழக அரசியலில் அமைதி புரட்சி, சாதி முத்திரை குத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அனைத்து தரப்பினரும் இணைகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்படுத்துவதே நமது நோக்கம். அவர்களை அதிகாரத்தில் அமர்த்த போராடுகிறோம். நம்மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என முத்திரைகள் குத்த சதி நடக்கிறது. அதனைக் கட்டுப்பாடு சகிப்புத் தன்மையால் முறியடிக்க வேண்டும். நிறைய பேர் பதவிக்காக பெரிய அரசியல் கட்சிகளில் சேருகிறார்கள். அணியும் மாறுகிறார்கள். அவர்களை போல் மைதீன் சிந்திக்கவில்லை. அதனால்தான் சேரி மக்களைப் பற்றி சிந்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்துள்ளார். இப்போதெல்லாம் ஒரு சில படங்களில் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்து விடுகிறது. அடுத்த முதல்வர் நான்தான் என்கிறார்கள்”.

கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி: சினிமாவில் திருமாவே நடித்துள்ள நிலையில், “கதாநாயகிகளை கட்டிபிடிப்பதே முதல்வருக்கான தகுதி என நினைக்கிறார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் சிறுக சிறுக வலுவாக காலூன்றி வளர்கிறது…” என்றார்.  கூட்டத்தில் வி.சி. குகநாதன், ஆர்.கே. செல்வமணி, டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன் மற்றும் கலைக்கோட்டுதயம், வன்னிஅரசு, சைதை பாலாஜி, கவிஞர் இளங்கோ ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். மாவட்ட செயலாளர்கள் இளஞ்செழியன், வீரமுத்து, கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். காஜாமைதீன் ஏற்கெனெவே நடிகைகளைக் கட்டிப்பிடித்தவர் தாம், ஒருந்டிகையை கல்யாணமே செய்துகொண்டுள்ளார். மற்றவர்களைப் பற்றி அவர்களுக்கேத் தெரியும்!

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார்? நடிகைகளைக் கட்டிப் பிடித்தவர்கள், தைரியமாக வெளியில் வந்து சொல்வார்களா? சினிமாவில் கட்டிப் பிடித்தவர்கள், சினிமாவிற்கு வெளியிலும் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக அத்தகைய பரத்தைத் தனம்,  அரசியலிலும் வந்த் விட்டது. கருணாநிதி காலத்தில், “தொட்டுவிடத் துடிக்கும்” நிலையில், அரை நிர்வாண ஆடைகளில் வந்து பரிசு வாங்குவது, குலுக்கி ஆடுவது முதலியன செய்கிறார்களே, ஏன்? இது நடிப்பா, நாகரிகமா, அரசியலா? மானாட, மயிலாட, மார்பாட, தொடையாட……………….பார்த்தவர்களுக்கு ஆடவில்லையா? சினிமாவை எதிர்த்து, சினிமாக்காரர்களிடல் பணம் வாங்குவது விபச்சாரமா, முதலீடா?


[1] http://thatstamil.oneindia.in/movies/specials/2009/04/08-thiruma-speaks-on-his-cm-role-in-minsaaram.html

[2] http://rojacombines.com/people.htm

Kajamydeen, gained extensive experience as a producer making live action movie in Tamil Language and Mega Television Serial for Tamil Channel Industry, as well as successfully conducted Star night shows with Tamil film celebrities. In 1981 Kajamydeen came to Tamil film industry and. The film Chutti Kulandhai (shrewd kid) which was originally taken in the language telugu, was a critical and box office success in Tamilnadu.. Due to the nature of the film, Kajamydeen’s company took the task of marketing and distributing the picture. In 1984, at the age of 35 kajamydeen, produced and financed the highly successful “Porkalam,” (Goldendays) which was directed by the in famous director Cheran and the film acclaimed the best movie state award.Kajamydeen, Successfully organized the Mega hit Star night show participated by everyone in the tamil film industry includes Kamalhasan and Rajinikanth in the year 2002 in Malaysia and Singapore for the benefit of Film Artist Association. Once again he organized mega hit show at Dubai and London for tamil film producer council during the year 2003.He won the best producer award for five times from FILM FAN club. Kajamydeen was the vice president for the South Indian Film Producer Council in the year 2006-08 and has served as the Treasurer for the same in the year 2004-2006. Again during the year 2008 he has been elected as the Treasurer for the second time and currently holding the post till the year 2010. Currently Kajamydeen is in development with Rajinikanth starring Enthiran as Executive producer.

[3] http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/02-thiruma-blasts-film-heroes.html