Posts Tagged ‘காங்கிரஸ்’

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

நவம்பர் 8, 2016

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

kushboo-supports-ucc-puthiya-thalaimuraiகுஷ்பு ஆதரித்தாலும் காங்கிரஸ் எதிர்க்கிறது: மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு புதிய தலைமுறை ஏட்டியில் தெரிவித்தார். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்[1]. பெண்களின் உரிமைகளை தான் எப்பொழுதுமே ஆதரித்து வருவதால், அவ்வாறு ஆதரிப்பதாகத் தெரிவி்த்தார். ஆனால், உ.பி. தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை மனதில் வைத்துக் கொண்டு பிஜேபி அவ்வாறான பிரச்சினையை எடுத்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், சென்னையில் 31-10-2016 அன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்[2]. குஷ்பு சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், இந்திய ஊடகங்கள் அவரது பேச்சிற்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன.

khusbo-and-nagma-ucc-fightநக்மா குஷ்புவை சாடியது (6-11-2016): சினிமாவில் நடிகைகளாக இருந்தபோதே குஷ்பு, நக்மா இடையே போட்டிதான். இப்போது இருவரும் ஒரே கட்சியில் இணைந்திருப்பதால் ஈகோ பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக கூறப்படுகிறது[3]. ஒரே கட்சியில் இருக்கும் நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக அரசல் புரசலாக தகவல் வெளியானாலும் அது வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெட்டவெளிச்சமானது[4]. அருகருகே அமர்ந்திருந்த போது இருவரும் அப்படி ஒன்றும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதை குஷ்பு தவிர்த்து விட்டார். அதுபற்றி கேள்வி எழுந்தது. ஆனால் திருநாவுக்கரசர் அதை சமாளித்து சமரசம் செய்து வைத்தார். அவர் அறிமுக உரை ஆற்றிவிட்டு புறப்பட்டு சென்றதும் மகளிர் அணியினர் மத்தியில் நக்மா பேச தொடங்கினார். அப்போது சம்பந்தமே இல்லாமல் குஷ்புவை வம்புக்கு இழுத்து சீண்டினார். அவர் பேசும்போது கூறியதாவது[5]: “பொது சிவில் சட்டம் பற்றி பேச குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லீமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிப்பதில்   தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார்? கேட்டால் இந்துவை கல்யாணம் பண்ணியிருக்கேன் என்பார்[6]. அப்படின்னா முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்? ஷரியத் சட்டம் மனிதன் உருவாக்கியது. குரானில்தலாக்பற்றி இல்லை என்று பேசியிருக்கிறார்[7]. அவர் குரானை படிக்கவில்லை. பார்த்து இருக்கவே மாட்டார். தலாக் பற்றி குரானிலும் சொல்லப் பட்டுள்ளது[8]. காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில் ஆர்ப்பாட்டத்துக்கு வருவாராம். மாலையில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு வரமாட்டராம். குஷ்புவின் நடவடிக்கை பற்றி கட்சி மேலிடத்தில் தெரிவிப்பேன்,”. இவ்வாறு நக்மா பேசினார்.காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார் நக்மா.

khusbo-and-nagma-uccகொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு![9]: இது குறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். கூறிய பதில்கள்.

 கேள்வி: மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே?

 பதில்: குஷ்பு என்ன சாப்பிடுகிறாள்? என்ன பேசுகிறாள்? யாருடன் பேசுகிறாள்? என்று என்னைப் பற்றி விமர்சிக்கவே ஒரு கும்பல் இருக்கிறது. நான் அகில இந்திய செயலாளர். எனக்கும் மாநில மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விஷயம். மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு என்னை கூப்பிடவில்லை. அதோடு எனக்கு படப்பிடிப்பு இருந்தது. ஷூட்டிங்கை இடையில் நிறுத்தி விட்டுத்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தேன். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்று விட்டேன்.

 கேள்வி: நக்மா உங்களைப் பற்றி கடுமையாக பேசி இருக்கிறாரே?

 பதில்: நான் கண்ணால் பார்க்கவும் இல்லை. காதால் கேட்கவும் இல்லை. எனவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று அசால்ட்டாக பதில் கூறினார் குஷ்பு[10].

kushboo-supports-ucc-puthiya-thalaimurai-pon-says-she-should-teach-tirivavuதிருநாவுக்கரசரின் மழுப்பலான சமரசவாதம்: காங்கிரஸில் திரைநட்சத்திரங்களான நடிகைகள் நக்மா மற்றும் குஷ்புவுக்கு தேசிய அளவில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் 2 பேரும் தமிழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு பரம எதிரிகளாக நடந்து கொள்கின்றனர். அண்மையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் குஷ்பு. இதற்கு நடிகை நக்மா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது[11]. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்[12], சென்னையில் நடந்த மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் குஷ்பு- நக்மா இடையே எந்த ஒரு மோதலும் இல்லை, குஷ்புவுக்கு எதிராக எந்த கருத்தையும் நக்மா தெரிவிக்கவில்லை[13], ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என்று திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்[14].

thirunaugasarar-kushboob-nagma-long_12443காங்கிரஸும் நடிகைகளும்: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது பொது விவில் சட்டம் விசயத்தில், இப்படி இந்த இரு நடிகைளும் சண்டை போட்டுக் கொள்வது, சித்தாந்த ரீதியில், காங்கிரஸின் நிலைப்பாடு குழப்பமாகத்தான் இருக்கிறது. பெண்ணுரிமை என்றெல்லாம் வாய் கிழிய பேசினால், மதம் என்றால் சரணாகதி ஆவது என்பது காங்கிரஸின் தாஜாபோக்கிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

08-11-2016

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

[1] விகடன், பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு , Posted Date : 11:08 (31/10/2016), Last updated : 12:04 (31/10/2016)

[2] http://www.vikatan.com/news/tamilnadu/70934-khushboo-voices-support-for-uniform-civil-code-tirunavukkarasar-opposes-it.art

[3] தமிழ்.ஒன்.இந்தியா, குரானை படிக்காமலேயே முத்தலாக் பற்றி குஷ்பு பேசுவதா?: நறநற நக்மா, By: Mayura Akilan, Updated: Monday, November 7, 2016, 16:12 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-slams-kushboo-talaq-issue/slider-pf214152-266544.html

[5] தினத்தந்தி, பொது சிவில் சட்டம்; குஷ்புவை சீண்டிய நக்மா கட்சி மேலிடத்தில் புகார் செய்ய முடிவு , பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST.

[6] http://www.dailythanthi.com/News/State/2016/11/06181731/Uniform-civil-code-Nagma-attacks-Khushbu-over-her.vpf

[7] இந்நேரம்.காம், குர்ஆனில் உள்ளது பற்றி குஷ்புவுக்கு என்ன தெரியும்?:நக்மா காட்டம்!, Sunday, 06 November 2016 20:18 Published in தமிழகம்

[8] http://www.inneram.com/news/tamilnadu/10821-nakma-attack-on-kushboo.html

[9] தமிழ்.வெப்துனியா, கொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு!, திங்கள், 7 நவம்பர் 2016 (10:50 IST)

[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/khushboo-answer-about-nakma-s-complaint-116110700007_1.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, குஷ்புநக்மா இடையே எந்த மோதலும் இல்லையேஅடித்து சொல்லும் திருநாவுக்கரசர், By: Mathi, Published: Monday, November 7, 2016, 13:47 [IST]

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/no-rift-bewtween-nagma-kushboo-says-thirunavukkarasan-266570.html

[13] விகடன், குஷ்புநக்மா இடையே மோதலா? திருநாவுக்கரசர் விளக்கம் , Posted Date : 12:10 (07/11/2016), Last updated : 12:40 (07/11/2016).

[14] http://www.vikatan.com/news/tamilnadu/71608-rift-between-kushboo-nagma-tirunavukkarasar-explains.art

குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஒக்ரோபர் 25, 2015

குஷ்பு, நக்மா, விஜயதாரிணிதமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஜெயலலிதா, பெரியார்

ஜெயலலிதா, பெரியார்

சினிமாஅரசியல், அரசியல்சினிமா, திராவிட அரசியலுல் ஒன்றுதான்: தமிழக அரசியல் என்றுமே சினிமா அரசியலாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும், பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகளின் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத அளவில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. பெரியார் சினிமாவை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டாலும், ஆதரவு கொடுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட அவர், சித்தாந்தத்தைப் பரப்புவதில் எத்தகைய யுக்தியையும் கடைபிடிக்கலாம் என்று வற்புருத்தினார். “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகத்தில் நடித்த கணேசனுக்கு “சிவாஜி” பட்டம் கொடுத்தார். ஜெயலலிதா நாட்டியங்களைக் கண்டு ரசித்துள்ளார். அண்ணாதுரை சினிமாவில் ஊறியவர் என்பதால் ஒன்றும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி, எம்ஜியாரை “கூத்தாடி” என்றும் “கூத்தாடி அரசியல்” செய்கிறார் என்றும் கிண்டலடித்து உண்டு.  திமுகவினரும் அவ்வாறே பேசி-எழுதி தூஷித்துள்ளனர். அதே நேரத்தில் தனது மகன், மு.க. முத்துவை எம்ஜியார் போல நடிக்க வைத்து படங்கள் எடுக்கப்பட்டன[1]. பிறகு, ஸ்டாலினை பிரபலப்படுத்த டிவி-சீரியலிலும் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால், அத்தகைய சினிமா-அரசியலைத்தான் திராவிடத் தலைவர்கள் எல்லோருமே செய்து வந்துள்ளனர்.

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

கவர்ச்சி அரசியலில் உழலும் திராவிடக் கட்சிகள்: நேற்றைய திக, திமுக, அதிமுக, ஆனாலும், இன்றைய தேமுதிக முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், சினிமா நடிகர்கள்-நடிகைகள் தாம் உள்ளனர். இன்றைக்கு “கூத்தாடி” என்று யாராவது சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், சம்யம் வரும்போது, கருணாநிதி, ஜெயலலிதாவை சினிமாபை வைத்துக் கொண்டு சாடுவதில் தயங்குவதில்லை. தனது கைவரிசையை, “முரசொலியிலும்” அவ்வப்போது காட்டுவார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் வசனம் பேசிக் கொண்டு, நடித்துக் கொண்டுதான் வருகின்றனர். சினிமாவில், ஓவ்வொருவருக்கும் ஒன்றிற்கு மேலாக ஹீரோயின்கள் இருப்பது போல, நிஜவாழ்விலும் மனைவி, துணைவி என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். குடும்ப வாழ்க்கையினை நடத்துகின்றனர். அவ்வகையில் பார்த்தால், பாமக ஆரம்பித்திலிருந்தே, சினிமா-அரசியலை எதிர்த்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்[2]. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செய்கிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள், மது, சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது[3].

சிவாஜி, பெரியார்

சிவாஜி, பெரியார்

இன்றைக்கு சோனியா காங்கிரஸ் நடத்தும் சினிமா அரசியல்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 20-1-2015 அன்று புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 22-10-2015 அன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாநில மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, விஜயதாரணி, திருநாவுக்கரசர், யசோதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[4]. அரசியல்வாதிகள் சொல்லும் வார்த்தைகளை வைத்தே ஒரு வாரத்திற்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிண்டலடிப்பார்கள் நம் வலைஞர்கள். அதிகம் கிண்டலடிக்கப்படுவது விஜயகாந்த்தான். சிலகாலம் ஸ்டாலின் மாட்டினார். இன்று சிக்கியிருப்பது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விடுவார்களா நம்மவர்கள் சும்மா புகுந்து விளையாடிவிட்டனர்.

சிவாஜி, கருணாநிதி

சிவாஜி, கருணாநிதி

தமிழக காங்கிரஸ் தலைவரின் நடிகையைப் பற்றி அழகு, இளமை வர்ணனை: சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கலந்துகொண்டார். கூடவே, விஜயதாரணி, குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய இளங்கோவன், “சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை. ஆனால் நேரில், நல்ல அழகாகவும்; இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன், என்று கூறினார்[5]. நக்மா பேசுகையில், “அரசும், அமைச்சர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர், கக்கன் போன்றோர், உதாரணமாக இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். கோஷ்டிகள் இல்லாத, காங்கிரசை வளர்க்க வேண்டும் என்றார்[6]. காங்கிரஸின் தலைவராக இருக்கின்றவர், சினிமா நடிகைகள் கட்சிக்குள் வர ஆரம்பித்தவுடன், ரசனையும் மாறிவிட்டது போலும்[7]. நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்[8], சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம் என்றெல்லாம் தலைப்பிட்டு, இதனை செய்தியாக வெளியிட்டிருப்பது காங்கிரஸுக்கு அழகா, அவமானமா என்று தெரியவில்லை.

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

திரிஷா இல்லைன்னா நயன்தாராவா, குஷ்பு இல்லைன்னா நக்மா: இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. விடுவார்களா நம்மவர்கள். சும்மா புகுந்து விளையாடிவிட்டனர். இதுநாள்வரை குஷ்புவை புகுந்த இளங்கோவன் இப்போது நக்மாவை புகழவே, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்[9]. இதுதான் அழகுல மயங்குறதா என்று கிண்டலடித்துள்ள வலைஞர்கள் டுவிட்டரில் சும்மா சகட்டு மேனிக்கு கிண்டலடித்துள்ள வலைஞர்கள் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர் என்று தமிழ்.ஒன்.இந்தியா எடுத்துக் காட்டுகிறது [10]. அரசியலின் ஒழுக்கம், நாணயம், முதலியவை இந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறதே என்று அத்தகைய வலைஞர்-மேதாவிகள் ஏன் கவலைப்படவில்லை என்றால், நிச்சயமாக, அத்தகைய வர்ணனைகளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்ரு தெரிகிறது. இதே, வெறெந்த பெண் அரசியல்வாதி நியமிக்கப்பட்டு, அவர் பதவியேற்று, விழாக்களில் கலந்து கொண்டால், இளங்க்கோவன் அல்லது வெறெந்த அரசியல்வாதியும் இவ்வாறு ரசித்து, வர்ணிப்பாரா என்று தெரியவில்லை. நடிகை என்பதினால் தான் அவ்வாறான விமர்சனம் வந்துள்ளது, அதனை தமிழக ரசிகர்கள் நசிக்கிறார்கள்.

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

இளங்கோவன், நடிகை குஷ்பு, நக்மா உருவப்படங்கள் எரிப்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் தமிழக  காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டு கொளுத்தினர்[11]. ஆக அந்த அளவுக்கு, இந்த நடிகைகளும் உயர்ந்து விட்டார்கள். நேற்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டி அளித்த இருவரும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்[12].

© வேதபிரகாஷ்

25-10-2015

[1] பூக்காரிபிள்ளையோ பிள்ளைசமையல்காரன், அணையாவிளக்கு என்ற படங்களில் மு. க. முத்து, எம்ஜியாரை காப்பியடித்து நடித்தார். எம்ஜியாரைப் போலவே மஞ்சுளாவை முதல் படத்திலேயே ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டார்.

[2]  தினமணி, திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்: ராமதாஸ், By Venkatesan Sr, சென்னை; First Published : 10 February 2013 03:02 PM IST.

[3] http://www.dinamani.com/latest_news/article1457932.ece

[4] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=153570

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம், Posted by: Veera Kumar, Published: Saturday, October 24, 2015, 12:37 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-looks-beautiful-congress-chief-elangovan-238332.html

[7]  தமிழ்.வெப்.துனியா, நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:15 IST)

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/evks-talk-about-actress-nagma-115102300042_1.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நக்மா இல்லைன்னா குஷ்பு…. இளங்கோவனை கிண்டலடிக்கும் வலைஞர்கள், Posted by: Mayura Akilan, Updated: Saturday, October 24, 2015, 17:39 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/social-networkers-critizes-evks-elangovan-238365.html

[11] தினமணி, குஷ்பு, நக்மா உருவப்படம் எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் போராட்டம், By DN, சென்னை,First Published : 23 October 2015 05:41 PM IST.

[12]http://www.dinamani.com/tamilnadu/2015/10/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/article3093693.ece

முப்பெருந்தேவியரின் சண்டை ஆரம்பம்: குஷ்பு, நக்மா மற்றும் விஜயதாரிணி – ராகுல் என்ன செய்யப் போகிறாரோ!

ஒக்ரோபர் 17, 2015

முப்பெருந்தேவியரின் சண்டை ஆரம்பம்: குஷ்பு, நக்மா மற்றும் விஜயதாரிணி ராகுல் என்ன செய்யப் போகிறாரோ!

காங்கிரஸ் சண்டை - குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

நக்மாவுக்கு பொறுப்பு, குஷ்புவுக்கு கடுப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்., மேலிட பொறுப்பாளராக, நடிகை நக்மா நியமிக்கப்பட்டு உள்ளார். அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலராக, நடிகை நக்மா, செயலராக, ஹசீனா சையது ஆகியோர், சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். தேசிய நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு, மாநிலங்களில் கட்சி விவகாரங்களை கவனிக்க, மேலிடப் பொறுப்பு வழங்கப்படுவது, காங்கிரசின் வழக்கம். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில, மகளிர் காங்., மேலிட பொறுப்பாளராக நக்மாவும்; கேரளா மற்றும் லட்சத்தீவு மாநில மேலிட பொறுப்பாளராக, ஹசீனா சையதும் நியமிக்கப்பட்டு உள்ளனர்[1].  சத்தியமூர்த்தி பவனில், 17-10-2015 அன்று காலை நடக்கும் நிகழ்ச்சியில், நக்மா மற்றும் ஹசீனா ஆகிய இருவரும், தமிழக காங்., தலைவர் இளங்கோவன் முன்னிலையில் பொறுப்பேற்கின்றனர். அவர்களை வரவேற்க, தமிழக காங்கிரசார் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிகழ்ச்சியை, அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு புறக்கணிப்பார் என, தகவல் பரவியிருக்கிறது[2]. இதனால், காங்கிரசினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தமிழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “துாத்துக்குடியில், 17ம் தேதி, மண்டல மாநாடு நடக்கிறது. மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், இதில் பங்கேற்கிறார். தமிழக மகளிர் காங்கிரசில் நிலவும் கோஷ்டிப் பூசலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நக்மா, குஷ்பு, ஹசீனா சையது, விஜயதாரணி ஆகியோரை, ஒரே மேடையில் கைகோர்க்க வைக்க, அவர் திட்டமிட்டு உள்ளார்”, இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் சண்டை - இளங்கோவன், விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸ் சண்டை – இளங்கோவன், விஜயதாரிணி, நக்மா

விஜயதாரிணி மதிக்கவில்லை என்று நக்மா காட்டம்: 16-10-2015 அன்று அவர் சென்னைக்கு வருகை தருவதாக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால், அவர் சார்பாக மகளிர் குழு ஒன்றை அனுப்பி வைத்தார்[3]. நேற்று இரவு 7.45மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நடிகை நக்மாவை மகளிர் காங்கிரசார் வரவேற்க சென்றனர். ஆனால் அவர்களை நடிகை நக்மா கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணியை தொடர்பு கொண்டு விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்[4]. இதனிடையே நக்மா தமது ட்விட்டர் பக்கத்தில் தூத்துக்குடி மண்டல மாநாட்டுக்கு தாம் செல்லப்போவதில்லை என பதிவிட்டுள்ளது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உரிய மரியாதை தராததால் தூத்துக்குடியில் இன்று நடைபெறும் மண்டல மாநாட்டை கேன்சல் செய்வதாக தமிழகம், புதுவை மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நடிகை நக்மா தெரிவித்துள்ளார்[6]. இதனால், விஜயதாரிணிக்கும், நக்மாவுக்கும் இடையில் உள்ள புகைச்சலும் வெளிப்பட்டுவிட்டது.

Nagma vs khushboo- Cong-fight started DM

Nagma vs khushboo- Cong-fight started DM

நக்மாவால், குஷ்புவுக்கு செக்கா, இளங்கோவின் அதிகாரம் பறிப்பா?: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் நக்மாவை வைத்து, கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கு, ‘செக்’ வைக்க, கட்சித் தலைவர்கள் சிலர் முயற்சிப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன[7]. கடந்த, 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலுக்கு முன், நடிகை நக்மா, காங்கிரசில் இணைந்தார். அவர், வட மாநிலங்களில் கட்சிக்காக, தீவிர பிரசாரம் மேற்கொண்டதால், அவரது முக்கியத்துவம் கட்சி அறிந்தது. ஆனால், கட்சி படுதோல்வி அடைந்து விட்டது. ஆனாலும், அவர் காங்கிரசிலேயே இருந்தார். இந்நிலையில், அவருக்கு கட்சியில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், நக்மாவுக்குப் பின், காங்கிரசில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவருக்கு, அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழக காங்கிரசில் அவர் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கூடவே, அவர் கட்சியில் தனக்கென ஒரு கோஷ்டியையும் உருவாக்கி வருவதாகவும் தெரிகிறது.

kushboo-leg-raising-before-goddessமுஸ்லிமுக்கு முஸ்லிம் செக்கா, செக்யூலரிஸ விளையாட்டா?: சமீபத்தில், தன் பிறந்த நாள் விழாவை, வெகு விமரிசையாக அவர் கொண்டாட, கட்சியின் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், குஷ்புவின் அசுர வளர்ச்சியும், அவருக்கு கட்சியினர் கொடுக்கும் முக்கியத்துவமும், கட்சித் தலைவர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால், குஷ்புக்கு போட்டியாக, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஹசீனா சையதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியை வழங்குவதோடு, நக்மாவுக்கும் தமிழகத்தில் முக்கியத்துவம் கொடுக்க, மேலிடத்தில் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழக மகளிர் காங்கிரசில், ஏற்கனவே பல கோஷ்டிகள் இருந்தாலும் புதிதாக குஷ்பு கோஷ்டியும் உருவாகி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த, பலரும் டில்லி மேலிடத்தை வலியுறுத்துகின்றனர்.  இதற்காக, டில்லி சென்று தலைமையை வலியுறுத்துகின்றனர். அதற்கேற்றார் போல, நக்மாவை, தமிழகம் மற்றும் ஆந்திர மாநில மகளிர் காங்., மேலிட பொறுப்பாளராக நியமிக்கவும், தேர்தலுக்கு முன், நக்மாவை தமிழகம் அழைத்து வந்து தீவிர பிரசார பயணம் மேற்கொள்ள வைக்கவும், கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி
உள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன[8].

Khushbu answerable as an exposed actressஅகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா: ‘காதலன்’ உள்பட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நக்மா. பல்வேறு இந்திப் படங்களிலும் நடித்த இவர் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசினார். இந்த நிலையில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகிகளின் பட்டியல், துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலின் பேரில்  வெளியிடப்பட்டது. அதில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார்[9]. மேலும் மராட்டிய மாநில முன்னாள் மந்திரி வர்ஷா கெய்க்வாட் உள்பட 11 பேர் பொதுச்செயலாளர் பட்டியலில் இடம் பெற்றனர். டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவராக பர்கா சுக்லாசிங் நியமிக்கப்பட்டார். இவர் டெல்லி மகளிர் ஆணைய தலைவராக பணியாற்றியவர். இதுதவிர அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தி தொடர்பாளர் ஷோபா ஓஜா மகளிர் காங்கிரஸ் தலைவராகவும், ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னர் பிரபாராவின் மகள் சாருலதா டோகாஸ் மராட்டிய மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராகவும், இமாசல பிரதேசத்துக்கு சுசிலா நெகியும், மேற்கு வங்காள மாநில மகளிர் காங்கிரசுக்கு சுப்ரதா தத்தாவும் தலைவராக நியமிக்கப்பட்டனர்[10].

காங்கிரஸ் எம்.எல்.. ஒருவர் நக்மாவுக்கு முத்தமிட்டார் என்று வந்த செய்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?: நக்மா அந்த நபரை நிச்சயம் அடித்து இருக்க வேண்டும்[11]. நானாக இருந்தால் அடித்து இருப்பேன். அரசியலில் நக்மா என்னை விட மூத்தவர். இதையெல்லாம் எப்படி கையாள வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதிர்ஷ்டவசமாக இத்தகைய நிலை எனக்கு இதுவரை ஏற்படவில்லை. தி.மு.க.வில் என்னை போன்ற தொண்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளோம்[12]. ஆனால், இப்பொழுது, இவர் காங்கிரஸில் உள்ளார். மேலும் இப்பொழுது அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார்[13]. ஆக காங்கிரசில் பாதுகாப்பு உள்ளதா, இல்லையா என்ற சர்ச்சையினை குஷ்பு ஏற்படுத்தியுள்ளாரா என்று பார்க்க வேண்டும். தான் திமிர் பிடித்தவள் என்றெல்லாம் வீராப்பு பேசும் குஷ்பு என்ன செய்ய போகிறார் என்றும் கவனிக்க வேண்டும். இதுவரை, இளங்கோவன் குஷ்புவிடம் நெருக்கமாக இருந்திருக்கிறார். இப்பொழுது, நக்மா வந்துவிட்ட பிறகு, தன்னிலையை மாற்றிக் கொள்ளப் போகிறாரா அல்லது விஜயதாரிணி போல சண்டையை ஆரம்பிக்கப் போகிறாரா என்றும் பார்க்க வேண்டும். பாவம், நடிகைகளை வைத்துக் கொண்டு காங்கிரஸ் படாத பாடு படுகின்றது போலும்!

© வேதபிரகாஷ்

17-10-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1365235

[2] தினமலர், நக்மாவுக்கு பொறுப்பு குஷ்பு வெறுப்பு?,அக்டோபர்.17.2015:23.53.

[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173346

[4] தின்னகரன், மகிளிர் காங்கிரஸ் வரவேற்பைப் புறக்கணித்த நக்மா: கோஷ்டி பூசலால் கட்சியில் புகைச்சல், அக்டோபர்ர்.16.20.12.37.

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/no-one-interested-welcome-nagma-tn-congress-237911.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, கட்அடித்த இளங்கோவன், விஜயதாரணிகடுப்பில் தூத்துக்குடி மாநாட்டை கேன்சல் செய்த நக்மா!, Posted by: Vijayalakshmi, Updated: Saturday, October 17, 2015, 11:37 [IST].

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1361315

[8] தினமலர், குஷ்புக்குசெக்வைக்க களமிறங்கும் நக்மா?, அக்டோபர்.10, 20.08.

[9] http://www.maalaimalar.com/2015/10/07050902/General-Secretary-of-the-All-I.html

[10] மாலைமலர், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமனம், மாற்றம் செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 07, 5:08 AM IST; பதிவு செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 07, 5:09 AM IST.

[11] http://www.vikatan.com/news/article.php?aid=26189

[12]  விகடன், நக்மாவுக்கு எம்.எல்.. முத்தம்; நானாக இருந்தால் அடித்திருப்பேன்: நடிகை குஷ்பு ஆவேசம்!, Posted Date : 11:20 (27/03/2014)

Last updated : 11:20 (27/03/2014.

[13] http://www.maalaimalar.com/2015/10/07050902/General-Secretary-of-the-All-I.html

“ஸ்டுபிட்” என்று பொறியியல் வல்லுனரை திட்டிய எம்.பியான கவர்ச்சி நடிகை – அதிகாரம் திமிரை ஏற்றுகிறது, அதிகமான அதிகாரம் மமதையை ஏற்றி சீரழிக்கிறது!

நவம்பர் 7, 2013

“ஸ்டுபிட்” என்று பொறியியல் வல்லுனரை திட்டிய எம்.பியான கவர்ச்சி நடிகை – அதிகாரம் திமிரை ஏற்றுகிறது, அதிகமான அதிகாரம் மமதையை ஏற்றி சீரழிக்கிறது!

குத்துபட ஸ்டைலில் போட்டுத் தாக்கினார் எம்.பி., ரம்யா: – தினமலர், இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[1]. ஆகஸ்ட் 2013ல் காங்கிரஸ் எம்.பியான ரம்யா, முன்னர் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன் என்று வாக்களித்திருந்தார்[2]. கர்நாடக முன்னாள் முதல்வரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான, எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவுப் பெண், ரம்யா. தமிழில், ‘குத்து’ என்ற சினிமா படம் உள்பட, கன்னட படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். முதலில் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த அவர், கடந்த ஆகஸ்ட் 2013ல் தேர்தலில் நின்று ஜெயித்து எம்.பி ஆனார். மாண்டியா தொகுதி, காங்., – எம்.பி.,யான அவர், நேற்று முன்தினம், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஐயையே! சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்!

ஐயையே! சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்!

மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா? என்னால் அப்படி செய்ய முடியாது”, என்று சொல்லி பிரச்சினை கிளப்பி ஒருவாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்[3].

Ramya, mother Ranjitha and S M Krishna

“ஸ்டுபிட்”என்றுபொறியியல்வல்லுனரைதிட்டியஎம்.பியானகவர்ச்சிநடிகை[4]: கனங்குர் என்ற கிராமத்திற்கு அவர் சென்ற போது, அப்பகுதி மக்கள், எம்.பி., ரம்யாவை முற்றுகையிட்டு, தங்கள் கிராமத்திற்கு சரியான குடிநீர் வசதி செய்யப்படவில்லை என, புகார் கூறினார். உடனே, அங்கிருந்த, குடிநீர் வடிகால் வாரியத்தின், மாவட்ட பொறியாளர், அனுமந்தையா என்பவரை தன் அருகில் அழைத்த ரம்யா, குடிநீர் வழங்கப்படாததற்கான காரணத்தை கேட்டார். அதற்கு, அந்த அதிகாரி ஏதோ, பதில் சொல்ல, அதனால் கோபம் கொண்ட ரம்யா, ”முட்டாள். சரிவர தண்ணீர் வழங்க முடியாமல், ஏதோ காரணத்தை கூறி பிதற்றுகிறீர்! ஒழுங்காக தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யுங்கள்,” என, பொதுமக்கள் முன்னிலையில் திட்டியுள்ளார்[5]. இதனால் அந்த அதிகாரி, மிகுந்த மனவேதனை அடைந்தார்[6]. பொதுமக்கள் முன்னிலையில், திட்டு வாங்கிய அவருக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள் குரல் கொடுத்துள்ளனர். ‘எம்.பி., மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்[7].

 

ராஹுல் தான் எனது ஊக்கம், உற்சாகம் எல்லாமே!

ராஹுல் தான் எனது ஊக்கம், உற்சாகம் எல்லாமே!

பாஜக பெ ண்நிர்வாகி வீட்டிற்குச் சென்றதால் காங்கிரஸ்காரர்கள் புகார்: ரம்யா தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்க வீடு-வீடாகச் சென்றுவந்தார். அப்பொழுது மஞ்சுளா ஆனந்த என்ற சப்பனுகுப்பே கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் பீஜேபி பெண் தலைவர் வீட்டைக் கடந்து செல்ல வேண்டியதாயிற்று. அப்பெண்மணி தனது தாயான ரஞ்சிதாவின் நெருங்கிய நண்பராவார, இதனால் மரியாதை நிமித்தமாக அவரது வீட்டிற்கும் சென்று வந்தார். இதனால் மாண்டியா மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் உள்பட சில நிர்வாகிகள் அக்கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரை சந்தித்து ரம்யா மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது[8]. “ரம்யா எம்.பி. இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பாஜக பெண் நிர்வாகி ஒருவரின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். இது கட்சி செயல்பாடுகளுக்கு எதிரானதாகும். மேலும் அவர் அரசு அதிகாரிகளை ஒருமையில் அழைக்கிறார். எனவே ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது[9].

 

பிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா

பிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா

செப்டம்பர் 2012ல் பாரத்பந்த் நடந்த நேரத்தில் சூட்டிங் வைத்த ரம்யா: காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான, இவருக்கும் பிஜேபிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 2012ல் பாரத் பந்த அழைப்பு விடுத்திருந்தபோது, சூட்டிங் நடத்தி தமக்கு எதிராக செயல்படுவதாக பிஜேபிவினர் குற்றஞ்சாட்டினர்[10]. பந்த என்ரு தெரிந்தும், வேண்டுமென்றே சூட்டிங் என்ற பெயரில் கூட்டத்தை சேர்க்கிறார் என்ற புகார் எழுந்தது. அப்பொழுது, பிஜேபிகாரர்கள் கேட்டபோது, வண்டியில் ஏறி சென்று விட்டார். சூட்டிங் கைவிடப்பட்டது. ஆனால், பிஜேபிகாரர்கள் சூட்டிங்கை நிறுத்தினர் என்று “தி ஹிந்து” செய்தி வெளியிட்டது. இப்பொழுது மறுபடியும் தேர்தல் நேரம் என்பதால், காங்கிரஸ்காரர்கள், சூடாகி விட்டனர் போலும்!

 

© வேதபிரகாஷ்

07-11-2013


[1] தினமலர், , பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2013,23:29 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=843878http://www.dinamalar.com/news_detail.asp?id=843878

[4] During her visit to Ganangur village in the taluk, the residents of Indira Nagar Layout complained that they were facing acute shortage of drinking water. They said that the lone tap in the colony was not working. They complained against the indifferent attitude of the officials concerned. Irked, Ramya took Hanumanthaiah to task and called him ‘stupid,’ after the latter failed to provide a proper explanation.  The MP then called up P C Jayanna, the chief executive officer of the ZP, over phone and asked him to resolve the water problem in two weeks’ time. “Stupid, summane burude bidthiya (you only concoct cock-and-bull story). Can’t you provide drinking water to the people?,” the actor-politician said to Hanumanthaiah, assistant executive engineer (AEE) of the Mandya Zilla Panchayat, during her tour in the Mandya parliamentary constituency.

http://www.deccanherald.com/content/367238/ramya-calls-zp-engineer-039stupid039.html

40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை

நவம்பர் 3, 2013

40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை

Swetha Menon - Petambara Kurup

கவர்ச்சிகரமாக, தாராளமாக நடித்த ஸ்வேதா மேனன்: 1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன். மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார். ‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்[1]. பொதுவாக இந்நடிகை மிகவும் கவர்ச்சியாகவும், தாராளமாகவும் நடித்திருப்பது தெரிகிறது. நடிகையைப் பொறுத்த வரையில், அதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் கவர்ச்சியாக, ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை திரையில் ஒருமாதிரியும், நேரில் வேறு மாதிரியும் பார்க்க மாட்டார்கள் என்பது, மனோதத்துவ ரீதியில் உண்மையாகும்.

Swetha Menon - Petambara Kurup-2

வெள்ளிக்கிழமை நடந்த படகு போட்டி: ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி 01-11-2013 அன்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது. அதில், ஏராளமானோர், தங்கள் படகுகளுடன், தீரத்தைக் காண்பிக்க போட்டியில் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில், வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன், நடிகை, ஸ்வேதா மேனனும் அமர்ந்திருந்தார். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஸ்வேதா மேனன், மலையாள படங்களில், மிகவும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். அவர் அருகில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., என்.பீதாம்பர குரூப் அமர்ந்திருந்தார். ஒருவர் பாட்டுப்பாட, ஸ்வேதா ஜோராக கைத்தட்டுவதும், கையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தார். ஒரு நிலையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தவர் மைக்கை பீதாம்பரத்திடம் கொடுக்கும் போது, பாய்ந்து இவர் எடுத்துக் கொண்டு ஏதோ பேச ஆரம்பித்தார். எம்.பி “சரி, நீயே பேசம்மா” என்பது போல, கையினால் செய்கை செய்தது போலவும் இருந்தது. இவரது செய்கை பலரை கவர்ந்தது, சுற்றியிருப்பவர் அவரையே பார்த்த விதத்தில் தெரிந்தது.

sexy-swetha-menon-massage-stills-20_650

காங்கிரஸ் எம்.பியின் பாலியல் சில்மிஷம்: படகுப் போட்டியை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பீதாம்பர குரூப் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது வீடியோவில் தெரிந்தது, பிறகு இலேசாக இடித்ததும் தெரிகிறது[2]. நடிகை ஸ்வேதாவை, “சில்மிஷம்’ செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, தர்மசங்கடத்தில் நெளிந்தார். அவர் பக்கம் திரும்பி பார்ப்பதும் தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் கலைந்து சென்றதும், நடிகை, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[3]. முதலில் பெயரைக் குறிப்பிடவில்லை. மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், “வீடியோ’ காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது[4]. தனது கையை, ஸ்வேதா மேனனைத் தொடுவதற்காக நீட்டியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது[5].

swetha-menon-actress

மறுக்கும் எம்.பி: காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் விசயங்களில் மாட்டிக் கொள்வதில் சகஜமாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அசோக் சிங்வி வீடியோ வெளிவந்தது. முன்னர் என்.டி.திவாரி மாட்டிக் கொண்டார். ராகுல் காந்தி மீது கூட அத்தகைய புகார்கள் கொடுக்கப்பட்டன[6], புகைப்படங்களுடன் கிசுகிசுக்கள் வெளியாகின[7]. கேரளாவும் இவ்விசயத்தில் சளைத்தது அல்ல[8]. காங்கிரஸ்காரர்கள் அதிகமாக சிக்கியுள்ளனர், மற்ற கட்சியினரும் உள்ளனர்[9]. ஐஸ்கிரீம் பார்லர் இருந்து, இப்பொழுது சோலார் பெனல் வரை நடிகைகள், செக்ஸ் முதலியன உள்ளன[10]. “இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அவர் மீது தனக்கு மரியாதை உள்ளது, தேர்தல் சமயம் என்பதனால், நான் ஒரு அரசியல்வாதி என்பதாலும் அவ்வாறான புகார் கூறப்படுகிறது[11]. எதிர்கட்சிகளும் ஆதாயம் தேடப் பார்க்கிறது,” என்ற ரீதியில் 73 வயதான பீதம்பர குருப் மறுத்திருக்கிறார்[12].

swetha-menon-actress-photo

மாவட்டஆட்சியரிடம்புகார் அளித்தது, புகாரைஏற்கமறுத்தது: சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார்? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார். ஸ்வேதா மேனன் தனது கணவர் ஸ்ரீவல்சன் மேனனுடன், ‘அம்மா’ உள்ளிட்ட திரைப்படத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தனது புகார் தொடர்பாக விவரித்துள்ளார்[13]. அவர் கூறுகையில், “மேடையில் இருந்த என்னை, அந்த எம்.பி., தொட்டுத் தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார்,” என்றார். காங்கிரஸ் எம்.பி. மீதான புகாரை, முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் புகாரை ஏற்க மறுத்தது தனக்கு இன்னும் வேதனையைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரிடமும் புகார் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்[14]. கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Swetha menon (4)

இப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம்!

© வேதபிரகாஷ்

02-11-2013


[1] மாலை மலர், அரசு  விழாவில்  நடிகை  ஸ்வேதா  மேனனிடம்  பாலியல்  குறும்பு:   அரசியல்  பிரமுகர்  மீது  கலெக்டரிடம்  புகார், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 02, 2:20 AM IST