கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது–அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்? (3)
பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா ? கமல்ஹாசன் கேள்வி …! கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்வரூபம்” விவகாரத்தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்படியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:
கேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.
கமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.
தலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.
கருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:
- கமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.
- கருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
- “ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.
- “ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா?. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் தன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன. இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
- இந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா?
- ரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.
- “மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.
- ஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே? கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே? ஏன் செய்வதில்லை?
- “நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா? அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா?
- முகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.
கமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இருந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
* சரித்திரம் என்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.
* இந்திய வரலாற்றுப் பேரவை போன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.
* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.
* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,
அந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு” கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].
மாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா?: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.
ராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோடிகளில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு!
அப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].
“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்?” என்று கொக்கரித்தான் அவன்
தமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் . பெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது. |
கதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்
எதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன் மருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது கதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது!
|
ராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்?
எதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா? அவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா? கனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா? |
© வேதபிரகாஷ்
31-03-2017

Akhsayta and sruti – daughters of Kamal
[1] http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_10.html
[2] http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_10.html
[3]https://dravidianatheism.wordpress.com/2009/10/25/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/
[4] https://dravidianatheism.wordpress.com/2009/11/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2/