Posts Tagged ‘சரத்குமார்’

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? சபீதா ராய்-சுகுமாறன் பிரச்சினை – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (1)

மே 4, 2017

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? சபீதா ராய்சுகுமாறன் பிரச்சினைசீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (1)

Sabita Rai - Polymer News created controversy-Sukumaran

பெண்கள் சினிமா, டிவி, விளம்பரம், மாடலிங் முதலியவற்றில் நடிக்க துணிந்து வந்து விட்டது: கடந்த மூன்று நாட்களில் [27-04-2017 முதல் 19-04-2017 வரை] பல நடிகைகளை சம்பந்தப்படுத்துள்ள செய்திகள், திகைப்படைய வைப்பதாக உள்ளது. இன்றைக்கு படிக்கின்ற-படிக்காத, ஏழை-பணக்கார, என்ற வெவ்வேறான நிலைகளில் உள்ள பெண்கள் நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, சினிமா, பாடலிங், விளம்பரம் போன்றவற்றில் தோன்ற, நடிக்க தயாராகி விட்டார்கள். காசுக்காக இன்றைக்கு ஆனானப்பட்ட கமல் ஹஸன் போன்ற நடிகர்களே, விளம்பரத்தில் கூட நடிக்க தயாராகி விட்டார்கள்[1]. தாத்தாவாகி விட்ட அமிதாப் பச்சன் போன்றோரை சொல்லவேண்டாம்[2]. ஆண்களே இப்படியென்றால், பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெண்கள் என்று வரும் போது, நிச்சயமாக கேமரா முன்னால் வரும் போது, பலவிதங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. 1940-50களில் போல எல்லாவற்றையும் மூடிக் கொண்டு விளம்பரத்தில் கூட நடிக்க முடியாது. “காண்டம்” / ஆணுறை விளம்பரங்களில் சன்னி லியோனை மிஞ்சமுடியாது எனலாம், மிஞ்சினால், போர்னோகிராபியாகி விடும்[3].  உடையின் அளவுகள் நிர்ணயிக்கும் போது, சினிமா நடிகையின், மாடலின், விளம்பர நடிகையின் உடல், மார்பு, இடுப்பு, கை-கால்கள் எந்த அளவுக்குக் காட்டவேண்டும் என்ற நியதி அறியப்படுகிறது. பெண்களும் ஒப்புக் கொண்டு தயாராகித் தான் அவ்வாறே காட்ட ஆரம்பிக்கிறார்கள்.

Sabita Rai - Polymer News - controversy-Sukumaran

கேமராவுக்கு முன்னால் செய்ய வேண்டிய சரசம், பின்னால் வேறு மாதிரியாவது நிதர்சனமாகவே இருக்கிறது: அந்நிலையில், மேக்கப்-மேன் தொட்டான், கேமரா-மேன் அட்ஜெஸ்ட் பண்ணான், இயக்குனர் தட்டிக் கொடுத்தார், தயாரிப்பாளர் இடுப்பை வளைத்து அணைத்து பாராட்டினார்…..என்றெல்லாம் ஏற்படும் போது, ஒன்றும் சொல்வதற்கில்லை. கணவன், தந்தை, சகோதரன் கூட ஒன்றும் கேட்க முடியாது. இந்த எல்லைகளையும் மீறி விவரங்கள் நடக்கும் என்பதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. எங்கோ தொலைவில், ஏன் அயல்நாடுகளில், ஓட்டல் அறைகளில் சூட்டிங் நடக்கும் போது, ஒரே ஓட்டலில் எல்லோரும் தங்கியிருக்கும் போது, அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருக்கும் போது, இப்படி – அப்படி நடந்தது என்றாலும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இப்பொழுதுதான், “சினிமாவில் நடிக்க, தொடர்ந்து நடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்கைக்கு வா”, என்று அவர் அழைத்தார், இவர் அழைத்தார் என்று சில நடிகைகள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனால், பல நடிககள் சொல்லாமல் இருக்கிறார்கள். ஆக, இதெல்லாம் தொழியில் சகஜமப்பா, என்று சொல்லக் கூடிய நிலையாகி விட்டது.

Sabita Rai - Polymer News created controversy

27-04-2017 அன்று நள்ளிரவில் நடிகை சபீதாராய் மேனஜரான சுகுமாறன் தெருவில் அடித்துக் கொண்டு சண்டை போட்டனர்: 28-04-2017 அன்று இணைதளங்களில் இவ்வாறான விவரங்கள் வெளியாகின: “நடிகை ராதிகா தயாரித்து நடித்து வரும் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகையின், கள்ளக்காதல் அம்பலமாகியுள்ளது[4]. அந்த தொடரில் ஒரு முக்கிய வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சபீதாராய். அதேபோல், ராதிகாவின்  ரேடான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மேனஜரான சுகுமாறன்.  இவர், சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார்.   இந்நிலையில் 27-04-2017 அன்று நள்ளிரவில் அவரோடு, நடிகை சபீதாராய் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். “என்னை நீதானே வர சொன்னாய்.. பணம் கொடுக்கிறேன் எனக்கூறினாயே.. கொடு….”, எனக்கூறி அவரிடம் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் சுகுமாறனை தாக்கவும் செய்தார். அவரின் சட்டையை கிழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகுமாறன், பதிலுக்கு அவரை தாக்கினார்”.   இப்படியெல்லாம் விவரித்து விட்டு, “அதாவது, சுகுமாறனின் மனைவி வெளியூர் சென்று விட்டதால், நடிகை சபீதாராயை வீட்டிற்கு வரவழைத்து கடந்த இரண்டு நாட்களாக உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், அவருக்கு கொடுப்பதாக கூறிய பணத்தை தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சபீதாராய், சுகுமாறனிடம் சண்டையிட்டது தெரிய வந்துள்ளது”, என்று தமிழ்.வெப்துனியா முடித்துள்ளது[5].   வாணி ராணி தொடரில் கூட இருந்தே குழி பறிப்பது, மற்றவர்களை பற்றி போட்டுக் கொடுப்பது, குழந்தை கடத்தலில் ஈடுபடுவது போன்ற கதாபாத்திரத்தில் சபீதாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, என்றும் எடுத்துக் காட்டுகிறது. இந்த விவகாரம் சின்னத்திரை நடிகர், நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. இணைதளத்தில் இந்த வீடியோவும் உள்ளது[7].

Sabita Rai - Polymer News created controversy-clarification given by her

விவகாரம் வெளிவந்தவுடன் விளக்கம் கொடுத்தது [28-04-2017]: சுகுமாறனின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தியதாகவும், பணத்தகராறு ஏற்பட்டதையடுத்து சுகுமாறன் சபீதாவை வெளியேற்றியதையடுத்து மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தத் தகவல்களை மறுத்துள்ள நடிகை சபீதா ராய், சுகுமாறன் தனக்கு தந்தை போன்றவர் என்றும், தான் கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தரக் கேட்ட போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தமிழ் ஒன் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்[8]. தாங்கள் சண்டையிட்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதில் சில பகுதிகளை எடிட் செய்து சுகுமாறனின் வீட்டருகே வசிக்கும் சில வெளியிட்ட விஷம வீடியோவால் தனது வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் கதறுகிறார் சபீதா[9]. தனக்கு நான்கு மாதத்தில் திருமணமாக உள்ள நிலையில் ஊடகங்களில் வெளியான செய்தியால் மிகுந்த மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் உண்மையை நிரூபிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார். பணத்தை தருவதாக சுகுமாறன் ஒப்பு கொண்டதாகவும் தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ள சபீதா, தாங்கள் இருவரும் சமாதானம் அடைந்து விட்டதாகவும் கூறுகிறார். சண்டை வீடியோ வெளியானதால் தனது திரைத்துறை வாழ்வு பாதிக்கப்கட்டுள்ளதோடு, ராடன் மீடியா நிறுவனமும் பணிநீக்கம் செய்து விட்டதால் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாக கலங்குகிறார் சபீதா.

Radan media - IT raid

ராடன் மீடியா நிறுவனத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ரெயிட்[10]: ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறு வந்த நிலையில், வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு  சம்மன் அனுப்பியது. அதன்படி, 11-04-2017 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆஜரானார்கள். அவர்களிடம் நீண்ட நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில், சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12-04-2017 அன்று பிற்பகல் சோதனையைத் தொடங்கினர்[11]. சென்னை தி.நகரில் உள்ள ராடன் மீடியா அலுவலகத்தில் இந்த சோதனை நடந்தது.  சரத்குமாரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறிய நிலையில், ராதிகாவின் நிறுவனத்தின் சோதனை நடந்தது.  பலதார திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியரின் தனிப்பட்ட வாழ்க்கையினை இங்கு விமர்சிக்க வேண்டாம், என்றாலும், அவர்களது கம்பெனியில் நடப்பதும் சரியாக இல்லை என்று தெரிகிறது. இந்த சமிதா-சுகுமாறன் ஜோடியும் இப்பொழுது “பண விவகாரம்” தான் சண்டைக்குக் காரணம் என்றதால், வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள் போலும்!

© வேதபிரகாஷ்

03-05-2017

Radan media - IT raid- Sarath-Radhika controversy

[1]  தீபாவளி போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தது, கோடிகளை வாங்கியது, தானமாக கொடுத்தேன் என்றது, இல்லை என்று பிறகு மறுத்தது முதலிய விவகாரங்கள்!

[2]   காசிருந்தும், புகழுக்காக நடிப்பது என்பதைத் தவிர வேற்ந்த கொள்கையும் இதில் இல்லை. மோடிக்கு வேண்டுமானால் இலவசமாக நடித்து கொடுத்திருக்கலாம், ஆனால், மற்ற விளம்பரங்களுக்கு காசு வாங்கியுள்ளார்.

[3]  இந்த விளம்பரத்தைக் கூட எதிர்க்கத்தான் செய்தனர், ஆனால், காண்டம் தயாரிப்பு, விற்பனை, உபயோகம் முதலியவை நின்றுவிடவில்லை.

[4] இப்பொழுது “கள்ளக்காதல்” என்றால், சேர்ந்து வாழ்வது, “கணவன் – மனைவி” போல் வாழ்வது போன்ற விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. இதற்கும் உலக நாயகன் கமல் ஹஸன் தான் உதாரணமாக திகழ்ந்துள்ளார்.

[5] தமிழ்.வெப்துனியா, உல்லாசமாக இருந்தாயே..பணத்தைக் கொடுவாணி ராணி நடிகை போட்ட சண்டை(வீடியோ), வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (11:06 IST).

[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tv-actres-fight-with-manager-in-mid-night-video-117042800017_1.html

[7] https://www.youtube.com/watch?v=lL80OjUiVYs

[8] தமிழ்.ஒன்.இந்தியா, நள்ளிரவில் நடுரோட்டில் குடுமிபிடி சண்டைநடந்தது இதுதானாம்! வாணி ராணி நடிகை விளக்கம்!, By: Gajalakshmi, Updated: Saturday, April 29, 2017, 15:31 [IST]

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/vani-rani-serial-actress-sabitta-roi-explains-that-the-deal-281267.html

[10] மாலைமலர், ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை, பதிவு: ஏப்ரல் 11, 2017 14:52; மாற்றம்: ஏப்ரல் 12, 2017 08:32

[11] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/11145215/1079364/Income-Tax-raid-Radaan-Media-office.vpf

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

நவம்பர் 14, 2013

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் அதிக  சம்பளம்  கேட்பது: தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். இப்பொழுது, சின்னத்திரை, பெரியத்திரை என்கிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளவிவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். ராதிகா தரப்பு, கேமராமேன்களுக்கு இப்போதுதான் பத்து சதவீதம் சம்பள உயர்வு அளித்தோம் என்கிறது. ஆனால் கேமராமேன்கள் சங்கம் அதனை ஏற்பதாக இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினால் கேமராமேன்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதுதான் கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனை[1]. இந்த நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் வந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தகராறு செய்வதாக கூறப்பட்டது. இதனால் சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது[2].

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறுகையில், “திரைப்பட படப்பிடிப்பில் வழங்கப்படும் சம்பளம் போன்று நாடக படப்பிடிப்பின் போதும் சம்பளம் வழங்க வேண்டும் என்று சில அமைப்பை சேர்ந்த கேமராமேன்கள் கேட்டு வருகின்றனர். திரைப்படம், வேறு சின்னத்திரை வேறு. இதனால், அதே சம்பளம் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டோம். இதனால், அவர்கள் தகராறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னையில் இனி நடைபெற உள்ள சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். பாதுகாப்பு தருவதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்”, என்றார்[3]. ஆக போலீசர்ருக்கு இனி புதிய கடமைகள் எல்லாம் வந்து விடுகின்றன.

சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து: முன்பு இப்படியெல்லாம் செய்திகள் வந்தன. னிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[4]. திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்[5]. பாவம், தமிழர்கள் இதையெல்லாம் படித்து கவலைப்பட்டனர்.

சலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர். சினிமாவை தொழிலாக்கி, அதை அனுபவிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.  இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார். இப்படியெல்லாம், சலுகைகள் பெறுவதால், சினிமா பார்ப்பவர்களுக்கு எந்த நலனும் இல்லை.

சினிமாக்காரர்கள்  மற்ற தொழில்களில்  ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா தொழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு திணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.

சமூகத்திற்குத்  தேவையான  துறைகளில்  சினிமாக்காரர்கள்  மூலதனம்  போடுவது[6]: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வாதிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.

வியாபாரப் பிரச்சினையை பொது பிரச்சினை ஆக்கமுடியாது: போலீசார் கடமைகளை செய்வது, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்பதெல்லாம் மக்கள் செல்லுத்தும் வரிப்பணத்திலிருந்து நடக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையெடுக்கும் சினிமாக்காரர்கள், இவ்வாறு பாதுகாப்புக் கேட்பது, மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் செயலாகும். அதுமட்டுமல்லாது, மக்கள் சினிமாக்காரர்களால், இரண்டு வழிகளிலும் சுரண்டப் படுவது போல இருக்கிறது. இப்படி இவர்கள் அளவிற்கு மேலாக அரசிடம் சலுகைகள் பெறுவது தடுக்கப் படவேண்டும். ஏனெனில், இவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. ஏழைகளிடமிருந்து பணத்தை உறிஞ்சுபவர்கள்.

© வேதபிரகாஷ்

14-11-2013