Posts Tagged ‘சலுகை’

ஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)!

ஜூன் 4, 2017

ஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)!

GST Kamal Hassan- Suresh and others

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், தமிழக நடிகர்-நடிகையரை வைத்தே, ஜி.எஸ்.டி- விளம்பர குறும்படத்தை விழிப்புணர்விற்காக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இப்பொழுது அவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது மறைமுக வரி மற்றும் நுகர்வோரிடத்திலிருந்து வசூலிக்கப் படுகிறது, என்ற நிலையில், இவர்கள் ஏன் இதனை எதிர்க்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், திரைப்படம் எடுக்க உபயோகிக்கும் உட்பொருட்கள் [Input credit] மற்றும் சேவைகளின் மீதான வரியை [input service credit] வைப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதனை மறந்து, மறைத்து இவர்கள் பேசுவதும் தெரிகிறது. உதாரணத்திற்கு இவர்கள் ரூ.100/- க்கு ரூ.28/- கட்ட வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.20 அல்லது 25 வரை, அல்லது 15 முதல் 20 வரை கிரெடிட் கிடைக்கும் போது, அவற்றை வரவு வைத்துக் கொள்ளும் போது, ரூ.5 / 3 அல்லது ரூ.13 / 8 தான் கட்டவேண்டியிருக்கும். அதாவது, 28% கட்டியது போலக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தினால், ரூ.100/- என்பதனை குறைக்கப் போவதில்லை, அதாவது, அதனை தங்களது லாபவிகிதத்தில் [Profit margin] அடக்கி விடுவர்,

GST Kamal Hassan- ubjected to jokes

சினிமா படங்கள் மீது 28 சதவீத வரி: இந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1-ந் தேதி 2017 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது[1]. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்[2]. இதைத் தொடர்ந்து மற்ற மாநில சினிமா துறையினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

GST Kamal Hassan- and others

28% வரி சினிமாவுக்கு பெரிய தண்டனை: பேட்டியின் போது கமல் ஹஸன் கூறியதாவது: “சினிமாவுக்கு 28 சதவீத வரி விதித்து இருப்பது திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வரியை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த வரி விதிப்பு சினிமா துறைக்கு பெரிய தண்டனையாக இருக்கும். இது எங்களால் கொடுக்க இயலாத வரிச் சுமை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமாவில் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கும்”.

பல முதல்அமைச்சர்களை சினிமா துறை தந்து இருக்கிறது. எனவே இந்த துறையை பாவச்செயல் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சினிமா என்பது சூதாட்டம் அல்ல. சமுதாயத்துக்கு முக்கியமான கலை. இதை தவறாக பயன் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சரியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

அதனால், வரிகுறைப்பு ஏன் செய்யப்பட வேண்டும்? அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே? நிச்சயமாக பாவச்செயல்களில் சினிமா ஈடுபட்டுள்ளது என்பதை நடிகைகளே சாட்சியாக இருக்கிறார்கள். மகாபாரதமே அப்படி-இப்படி என்று பேசியபோது, இது நிச்சயமாக சூதாட்டம் தான்.

GST Kamal Hassan

இந்தி படங்கள் வேறு, பிராந்திய மொழிகள் வேறுறூலக நாகன் தொடர்கிறார், “ஹாலிவுட் படங்கள், இந்தி படங்கள், பிராந்திய மொழி படங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது முறையல்ல. ஹாலிவுட், இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களுக்கு வரிவிதித்து இருப்பது எந்த வகையில் நியாயம். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

அதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்?[3]  நான் இந்தி படங்களுக்கு எதிராக பேசவில்லை. இந்தி படங்களுக்கான சந்தையும், பிராந்திய மொழி படங்களுக்கான சந்தையும் வெவ்வேறானவை. இந்தியாவில் வருடத்துக்கு 2,100 படங்கள் தயாராகின்றன. இதில் 300 படங்கள் மட்டுமே இந்தி படங்கள். மற்றவை பிராந்திய மொழி படங்கள்.

இப்படியெல்லாம் பொய் பேசுவதிலும் உலக நாயகன், கைதேர்ந்தவனாகி விட்டது வியப்புதான். இந்தி படங்களில் நடிக்காதவனோ, தேசிய விருது வாங்காதவனோ பேசினால் பரவாயில்லை, ஆனால், கமல் இப்படி பேசுவது, பச்சைப் புளுகுதான். பிராந்திய மொழிகளில் எடுக்கப் பட்டாலும், அவை மற்ற மொழிகளில் டப்பிங் அல்லது எடுக்கும் போதே, அவ்வாறு எடுக்கின்றனர். கமலின் படங்களும், இந்தியில் அவ்வாறு வெளியானது தெரிந்த விசயமே. மேலும், அரசு தனித்தனியாகத்தான் விருதும் கொடுக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் அங்கு சினிமா தொழில் நலிந்து படங்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது[4].

Kamal Hasan -on- Bahubali

சினிமாவை விட்டு விலகல் – மிரட்டும் கமல் ஹஸன்: கமல் தொடர்ந்து சொன்னது,

பிராந்திய மொழி படங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்[5]. வரிச்சுமையை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்[6].

ஏதோ தத்துவம் போன்று பேசி, வியாபாரத்தை, குறிப்பாக லாபத்தைப் பெருக்கி, சாதாரண மக்களை கொள்ளையடிக்க நடிக்கும் போலித்தனம் தான் இப்பேச்சில் புலப்படுகிறது. இவனுக்கே வேலை இல்லாமல் போய் விடுமாம்! நல்ல தமாஷாதான்! அப்பொழுது, தான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படுமாம்!! என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும்? காசுதான் மிச்சமாகும்.

அதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க் கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும். மேலும் இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, பல மொழி,பல கலாச்சாரம், பல வழிபட்டு முறைகள், பலவிதமான மனிதர்கள் வாழும் நாடு[7]. இங்கு ஒற்றை கலாச்சாரம் என்பதை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்[8].” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

© வேதபிரகாஷ்

04-06-2017

Kamal Hassan - Maya Ravan

[1] சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்புசினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்

[2] http://www.dailythanthi.com/News/State/2017/06/03001106/Service-Tax-Kamal-Hassan-strongly-opposed.vpf

[3] தி.இந்து, ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம், Published: June 3, 2017 08:22 ISTUpdated: June 3, 2017 08:22 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9718870.ece

[5] விகடன், சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்..!’ – கமல், Posted Date : 19:20 (02/06/2017); Last updated : 19:42 (02/06/2017)

[6] http://www.vikatan.com/news/cinema/91172-may-quit-from-cine-industry-says-kamalhassan.html

[7] என்.டி.டிவி, சினிமாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு எங்களை தள்ளிவிடாதீர்கள்கமல்ஹாசன் உருக்கமான பேட்டி, Nabil Ahamed  | June 02, 2017 22:30 IST

[8] http://movies.ndtv.com/tamil/kollywood/dont-make-us-move-away-from-cinema-kamal-haasan-opens-up-1707323

சம்பளப் பிரச்சினை, படப்பிடிப்பு ரத்து, நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பினார்கள்!

செப்ரெம்பர் 1, 2011

சம்பளப் பிரச்சினை, படப்பிடிப்பு ரத்து, நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பினார்கள்!

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்: சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[1]. சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய ஸெல்வன், இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். இவர் ஏற்கனவே ‘மாக்கான்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது, ‘மாயவரம்’ என்ற புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இன்பநிலா நடிக்கிறார். ராம்தேவ் இயக்கும் இப்படத்தை வயலார் ராஜேந்திரன் தயாரிக்கிறார். சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள்

திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை[2] கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

தமிழக மக்களுக்கு வேண்டிய முக்கியமான செய்தி இதுதான். இனிமேல், தராதரத்தை சினிமா பார்ப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம், அவர்கள் எதை வேண்டுமானாலும் காட்டுவார்கள். அடுத்த் வேலைக்கு குடிக்கக் கஞ்சி கூட இல்லாமல் இருந்தாலும் கவலையில்லை. ரூ.100/- கொடுத்து, சினிமாப் பார்த்தே ஆகவேண்டும் என்பதுதான், தமிழகத்தின் பகுத்தறிவுள்ள மக்களின் மனநிலை. இதை பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதலியோர் சொல்லிக் கொடுத்தார்களா  அல்லது அவர்களே கற்றுக் கொண்டார்களா என்று ஆராய்ச்சி செய்யலாம்.

 

வசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும்: சினிமாவில் ரூ 1 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர்களுக்கு இனி வசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20, அதிகபட்சம் ரூ.100 என்ற அடிப்படையில் கட்டண முறையை அரசு மாற்றி நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச்செயலாளர் ஸ்ரீதர், ராமநாதபுரம் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமாறன், செயலாளர் தினேஷ்பாபு, மதுரை நகர் திரையரங்க

சினிமா பார்ப்பவர்கள், ரசிகர்கள் அதேபோல நுகர்வோர் பாணியில், படத்திற்கு ஏற்பத்தான், நாங்களும் காசு கொடுப்போம் என்றால், ஒப்புக் கொள்வார்களா? படம் நன்றாகயில்லை என்றால் தள்ளுபடி கொடுப்பார்களா?

உரிமையாளர் சங்க தலைவர் கஜேந்திரன், சேலம் டி.என்.டி.ராஜா உள்பட தமிழகம் முழுவதும் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 466 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு[3]: வசூல் அடிப்படையில் சம்பளம்: தமிழகத்தில் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். கேளிக்கை வரிவிலக்கு பெற புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதால் திரையரங்க நுழைவு கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே திரைப்பட தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் திரைப்படத்தின் வசூல் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சினிமா பார்க்க ரூ.20, 100 கட்டணம்: இது சம்பந்தமாக வினியோகஸ்தர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து எந்த அடிப்படையில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை நிர்ணயிப்பது என்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் நுழைவு கட்டணத்தை மாற்றி அமைத்து தரும்படி

முதல்வரிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20-ம், அதிகபட்சம் ரூ.100-ம், குளிர்சாதன வசதி செய்யப்படாத சாதாரண திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10-ம், அதிகபட்சம் ரூ.70-ம் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

தியேட்டர்களில் ஏசி வேலை செய்கிறதா இல்லை, அவர்கள் போடுகிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், டிக்கெட்டில் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். ஆகவே, இனி ஏசி போடவில்லை அல்லது வேலை செய்யவில்லை என்றால், அதற்கான பணத்தை வாபஸ் செய்ய வேண்டும்.

பராமரிப்பு செலவை உயர்த்துக: திரையரங்குகளின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டதால் திரையரங்குகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை குளிர்சாதன திரையரங்குகளுக்கு ரூ.5 ஆகவும், சாதாரண திரையரங்குகளுக்கு ரூ.3 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான ‘சி’ உரிமம் பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளாக அரசு நீட்டிக்க வேண்டும்.

நன்றாகவே தெரிகிறது, முதலாளிகள் தங்களது வருமானத்தைப் பெருக்க வேண்டும், அதே நேரத்தில் வரியிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மைதான் வெளிப்படுகிறது. செலவீனங்களை அதிகமாக்கினால், வரியிலிருந்து முதலாளிகளுக்கு வரி குறையலாம். ஆடிட்டர்கள் அதற்கு ஏற்றவாறு கணக்கு எழுதி கொடுப்பார்கள். ஆனால், மக்களிடமிருந்து வசூல் செய்து கொள்கிறார்களே, பிறகு ஏன் இந்த மோசடி?

திரையரங்குகளுக்கான கட்டிட உறுதி சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட தனி பொறியாளர்களிடம் இருந்து பெறுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியை முன்காலத்தில் நடைமுறையில் இருந்ததை போலவே மீண்டும் பின்பற்றி கேளிக்கை வரியை கழித்து மீதமுள்ள தொகையில் வினியோகஸ்தர்களுக்கான பங்கு தொகையை தருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

வேறு உபயோகத்துக்கு….: திரைப்படங்கள் கிடைக்காத காலங்களில் திரையரங்குகளை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு விதிகளுக்குட்பட்டு காலை

9 மணி முதல் இரவு 1.30 மணி வரை எத்தனை காட்சிகளை வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இப்படி எல்லா விதங்களிலும் அவர்களுக்கு சலுகைகள், வரிவிலக்குகள், ஆதாயங்கள் கொடுக்கப் படவேண்டும். ஆனால், படம் பார்ப்பவர்கள் வசதிகள் இல்லாமல் சாக வேண்டும்.

சினிமானை தொழிலாக்கியவர்களும், தொழிலை சினிமாக்கியவர்களும்:சினிமாவிலேயே வளர்ந்து, ஆதிக்கம் பெற்று, ஆட்சிக்கும் வந்தவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதனால், மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் திரைப்பட துறையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. முதல்வர் ஜெயலலிதா திரைத்துறையினரின் நலன் காப்பார் என்று செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் உறுதியளித்தார்[4]. தமிழக சட்டசபையில் இன்று கடந்த திமுக ஆட்சியினரால் திரைப்படத் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட இயலாத நிலை இருப்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதன் மீது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினார்கள்.  கடந்த ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பமே சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியது. மற்ற தயாரிப்பாளர்கள் படங்களை திரையிட முடியவில்லை. தமிழ் பெயருக்கு வரி

விலக்கு என்று அறிவித்து விட்டு அவர்கள் குடும்பம் தயாரித்த தமிழக்கு எந்த சம்பந்தமே இல்லாத எந்திரன் என்ற படத்திற்கு பல கோடி ரூபாய் வரி விலக்கு பெற்றவர்கள். புதிய ஆட்சி அமைந்த பிறகு அந்த நிலைமை இல்லை. சிறிய படத்தயாரிப்பாளர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். திரைவுலகின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இப்படி ஏதோ விவாதிக்கிறார்களே தவிர, சினிமாக்களின் தரம், அவை சமூகத்தின் மீது நல்லமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும், இப்பொழுதைய சந்ததியினர் ஒழுக்கத்துடன், நற்பண்புகளுடன் இருக்கவேண்டும்……….போன்ற எண்ணங்களுடன் விவாதம் நடக்காதது ஏனோ?

 

இதற்கு பதிலளித்து செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கூறியதாவது: திரைப்படத்தை தயாரிப்பதோ, வெளியிடுவதோ தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. திரைப்படங்களை தயாரித்து அதனை வெளியிட முடியாத நிலை இருப்பதாக இந்த துறைக்கு புகார் எதுவும் வரவில்லை. எவ்வளவு தொகையில் படங்கள் தயாரிக்கப்படுகிறது, அதை எப்படி வெளியிடுவது என்பதெல்லாம் தனியார் தயாரிப்பாளர்களின் பொறுப்பாகவே இருந்து வந்துள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை தரமான திரைப்படங்களை தயாரிப்பவர்களுக்கு 7 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிறந்த திரைப்படங்கள் நடிகர், நடிகைகளுக்கு இந்த துறையின் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் திரைப்பட நகரில் பயிற்சி பெறும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர்.

தமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.  இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார்.

 

வேதபிரகாஷ்

01-09-2011