Posts Tagged ‘சினிமா கலகம்’

பல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன்! கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்!

ஜூலை 29, 2017

 

பல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன்! கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்!

Jinson Lonappan - raped Dentist actress 28-07-2017-2-TOI

கேரளாவில் கற்பழிப்புகள் அதிகமாகின்றன: கேரளா படிப்பறிவு கொண்ட மாநிலம் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டாலும், கற்பழிப்பு, பெண்களை இழிவு படுத்துவது போன்ற விவகாரங்களில் மோசமான நிலையில் உள்ளது[1]. கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று பலதடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், பண பலம், மதம் போன்ற காரணிகளால் பல உண்மைகள் மறைக்கப் பட்டு வருகின்றன[2]. ஐஸ்கிரீம் பார்லர், அபயா கன்னியாஸ்திரி, பற்பல பிடோபைல் வழக்குகள் அத்தகைய வகையில் அடக்கம். மல்லுவுட்டும் அரசியல், மதம், அயல்நாட்டு விவகாரங்கள், செக்ஸ் போன்ற விசயங்களால் நாறிக்கிடக்கின்றது. வயதான நடிகர்கள் எல்லோரும் செக்ஸ் கமென்ட் அடிப்பது, பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது, முதலியவை சகஜமாக இருக்கின்றன[3]. படங்களிலும் அத்தகைய வசனங்கள், முதலியன இடம் பெற்றுள்ளன[4]. மம்முட்டி படம் விவகாரத்தில் பெண்கள் கமிஷன் நோட்டிஸும் கொடுத்தது[5]. ஆனால், செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டன[6]. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்றிருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் சொந்தக்காரர்கள், பல தொழிற்சாலைகளில் முதலீடு, என்று கொழுத்தப் பணக்காரர்களாக இருக்கின்றனர். பணம் மற்றும் அரசியல் இவற்றால், எதையும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள்.

Jinson Lonappan - raped Dentist actress-Vedaprakash

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த அமெரிக்க இளம்பெண் [பிப்ரவரி 2016]: கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், கொடுங்கலூரைச் சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன் [Jinson Lonappan / Vinson Lonappan[7] ]. மலையாள திரைப்படங்களில் உதவி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க குடியுரிமைப் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஜான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பல் மருத்துவராக உள்ளார். பணம் எல்லாம் இருந்தும், சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, பிறகு வெறியானது. பணம் செலவிழித்தாவது, நடிகையாகி விட வேண்டும் என்ற அளவுக்கு போதை தலைக்கு ஏறியது. தன் சொந்த ஊரான கேரளாவுக்கு பிப்ரவரி 2016ல் வந்தபோது ஒரு படப்பிடிப்பில் இருந்த ஜின்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் –ஜூன் 2017- ஏற்பட்டபழக்கம் அதிகமானது. அந்த இளம் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை[8]. இவ்விசயம் ஜின்சனுக்குத் தெரிய வந்தது. எனவே சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஜின்சன் லோனப்பன் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்து, நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டார்[9].

Jinson Lonappan - raped Dentist actress 28-07-2017

அமெரிக்க இளம்பெண்ணை ஹாலிவுட் ஸ்டைலில் கிராஸ் போட்டு மயக்கியது: ஜான்சிக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை அறிந்துகொண்ட ஜின்சன், பல நடிகர்கள் இயக்குநர்களுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்களைக் காட்டி அவர்களிடம் சொல்லி ஜான்சிக்கு வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. அதேசமயம், ஜான்சியைத் தன் வலையில் விழ வைக்க தனக்கு அமானுஷ்ய விஷயங்கள் அத்துப்படி என அவரிடம் கதைவிட்ட ஜின்சன், ஜான்சியைப்பற்றி அவரது வீட்டு வேலையாள் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு அதை ஜான்சியிடம் தன் மந்திரசக்தியில் இந்த தகவல்களைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லி அசத்தினார்[10]. காகிதத்தில் கிராஸ் / சிலுவை போட்டு, அவரது பெயர் வரும் படியெல்லாம் வித்தை செய்து கோட்டினான் லோனப்பன்[11]. இதை நம்பி ஜின்சனுடன் நெருக்கமானார் ஜான்சி. நடிப்பு சொல்லித் தருகிறேன், போஸ் கொடுப்பது எப்படி என்றெல்லாம் தொட்டு-தொட்டு கிரக்கத்தை ஏற்படுத்தினான்[12].

Jinson Lonappan - raped Dentist actress 28-07-2017-Malayalamanorama

நிர்வாண புகைப்படம் மற்றும் படுக்கையில் முடித்த கிரக்கம்மோகம்: மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க புகைப்படங்கள் வேண்டும் என கூறி அந்த பெண்ணை வைத்தில்லா [Vyttila] என்ற இடத்தில் ஒரு வீட்டில் வைத்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்[13].  சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று நம்பிய அவள், நிர்வாண போஸும் கொடுத்தாள். பிறகு, கிரக்கத்தில், அவன் கட்டிப்[ பிடிக்க, படுக்கையில் ஐக்கியம் ஆகினர் போலும். இத்தகைய நட்பின் உச்சகட்டமாக, தந்திரமாகப் பேசி பலமுறை ஜான்சியை பாலியல் ரீதியாகவும் ஜின்சன், பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது[14]. தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று ஜான்சியை நம்பவைத்த ஜின்சன், ‘சினிமாவில் நீ புகழ்பெற்றபின் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” எனக்கூறி பலமுறை ஜான்சியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த பெண்ணிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க ஜின்சன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியது[15].   அதுமட்டுமல்லாது, ஒரு முறை அவனது போனில் உள்ள எண்ணிலிருந்து அழைப்பு வந்த போது, அவனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.

Jinson Lonappan - raped Dentist actress-Vedaprakash-2

புகார் கொடுத்த பெண்ணும், கைதான கேமரா மேனும்: ஆக லோனப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இருப்பினும் ஆசைக்காட்டி பணம் வசூலித்ததோடு, படுக்கை வரை சென்று தன்னை தன்றாக ஏமாற்றி விட்டான் என்று தெரிந்து கொண்டாள்[16], சினிமாவுக்கு ஆசைப்பட்ட அமெரிக்க பல் மருத்துவர்[17]. இந்த நிலையில் அந்த இளம் பெண் டாக்டர் 25-07-2017 அன்று, ஜின்சன் லோனப்பன் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ஜின்சன் லோனப்பன் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டதாகவும், ரூ.33 லட்சத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்[18]. இந்த புகாரின் பேரில் ஜின்சன் லோனப்பன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[19]. நிஜவாழ்க்கையை, சினிமா மோகத்தில் தொலைத்த அவள் இனி என்ன செய்வாள் என்று தெரியவில்லை. கற்பு என்பதெல்லாம், இந்த அளவுக்கு இருக்கிறது எனும்போது, சமூகம் எங்கு செல்லுமோ என்று பயமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

29-07-2017

Jinson Lonappan - raped Dentist actress 28-07-2017-1

[1] The Huffington Post, Actor Dileep’s Arrest Exposes The Dark Side Of Malayalam Movie Industry:Misogyny, monopoly, rancour and criminalisation of cinema, 11/07/2017 3:40 PM IST

[2] http://www.huffingtonpost.in/2017/07/11/actor-dileeps-arrest-exposes-the-dark-side-of-malayalam-movie-i_a_23024672/

[3] News.10.com, Women’s Commission Issues Notice To ‘Kasba’ Makers, Mammootty, PTI, Upated:July 20, 2016, 7:44 AM IST.

[4] http://www.news18.com/news/movies/womens-commission-issues-notice-to-kasba-makers-mammootty-1271632.html

[5] The Huffington Post, The Only Thing Worse Than Mammooty’s On-screen Sexism Is His Hypocrisy, A Real Shame,  20/07/2016 9:17 PM IST | Updated 20/07/2016 11:46 PM IST.

[6] http://www.huffingtonpost.in/2016/07/20/the-only-thing-worse-than-mammooty-s-on-screen-sexism-is-his-hyp_a_21435704/

[7] மலையாள மனோரமா “Vinson Lonappan” என்று குறிப்பிடுகிறது.

[8] The Times of India, Kerala: Lensman ‘rapes’ US-based doctor promising movie roles, TNN | Updated: Jul 28, 2017, 09:43 AM IST

[9] http://timesofindia.indiatimes.com/city/kochi/lensman-rapes-us-based-doc-promising-movie-roles/articleshow/59797984.cms

[10] விகடன், சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்! உஷார் பெண்களே, Posted Date : 17:21 (28/07/2017); Last updated : 17:21 (28/07/2017)

[11] Malayalamanorama, Black magic worth Rs 33 lakh for cine-Gods? Cameraman arrested for swindling actress, Thursday 27 July 2017 04:09 PM IST

[12] http://english.manoramaonline.com/news/kerala/2017/07/27/actress-sexual-abuse-photographer-black-magic-swindle.html

[13] தமிழ்.வெப்துனியா, நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணை, உடலுறவுக்கு பயன்படுத்திய புகைப்பட கலைஞர்!!, வெள்ளி, 28 ஜூலை 2017 (17:33 IST)

[14] http://www.vikatan.com/news/tamilnadu/97128-photographer-cheats-woman-by-promising-to-offer-roles-in-cinema.html

[15] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/malayalam-photographer-raped-and-cheated-a-woman-117072800064_1.html

[16] NDTV, Photographer Arrested For Allegedly Raping Aspiring Actress: Police, Press Trust of India | Updated: July 28, 2017 01:06 IST

[17].http://www.ndtv.com/south/photographer-arrested-for-allegedly-raping-aspiring-actress-police-1730136

[18] தினத்தந்தி, கேரள பெண் டாக்டர் கற்பழிப்பு புகைப்பட கலைஞர் கைது, ஜூலை 28, 2017, 04:15 AM.

[19] http://www.dailythanthi.com/News/India/2017/07/28033412/Kerala-woman-doctor-in-rapePhotographer-arrested.vpf

சினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா?

செப்ரெம்பர் 6, 2016

சினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா?

Court raps film makers for obscene songs corrupting youthபொய் வழக்கு போட்டதால் ஜாமீன் கேட்டு மனு: சென்னை மணலியை சேர்ந்தவர் பிரபுகுமார் (வயது 19). இவர் 16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து ஆபாசமாக கேலி செய்ததாக குற்றம் சாட்டி போலீசார் கைது செய்தனர்[1]. ஐபிசி பிரிவு 341 [தவறான தடுப்பு], 294(b) [ஆபாசப் பாட்டுப் பாடுதல்], 506 [மிரட்டுதல்], முதலியவை மற்றும் பொகோசோ சட்டம் பிரிவு 12 [பாலியல் ரீதியில் தொல்லை] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டது[2]. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரபுகுமார் மனு தாக்கல் செய்தார்[3]. இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘16 வயது சிறுமியும், பிரபுகுமாரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இது அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு’ ஆகவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் தரவேண்டும், என்று வாதிட்டார்[4]. காதலித்தால், பையனுக்கு, தெருவில் ஹாயுடன் போகும் போது ஒரு பெண்ணைப் பார்த்து இவ்வாறு ஆபாசப் பாட்டு பாடுவது நாகரிகமானதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதே போல, ஒரு பையன், அவனுடய சகோதரியைப் பார்த்துப் பாடினல், அவன் சும்மா இருப்பானா?

ஆபாச பாட்டு - பாடலாசிரியர்தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுத்த தோரணை: போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சிறுமியும், அவரது தாயாரும் ரோட்டில் நடந்துச் சென்றபோது, அந்த சிறுமியை பார்த்து, ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா… ஓடிப் போயி கல்யாணத்தான் கட்டிக்கலாமா?’ என்று பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்[5]. இதை தட்டிக்கேட்ட அவர்களை தாக்கியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’ என்று வாதிட்டார்[6]. படிக்கும் வயதில், இப்படி, மாணவ-மாணவியர்களுக்கு காதல், இதெல்லாம் தேவையா என்ற கேள்வி எழுகின்றது. இபோழுது காதல்-ஒருதலை காதல், காதல் நாடகம் என்றெல்லாம் சொல்லி, தினம்-தினம் நடந்து வரும் கொலைகளை நினைத்துப் பார்க்கும் போது அவனது மிரட்டலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஆகவே, வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான். அப்பொழுது தான் இது போன்ற மற்ற பையன்களுக்கு பயம் இருக்கும்.

tharai-thappattai- ஆபாசத்தில் மிஞ்சும்நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் சினிமா பாட்டை மட்டும்தான் பாடியுள்ளார். அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்ததாக தெரியவில்லை. மேலும், அவர் கடந்த ஜூலை 24–ந் தேதி 016 முதல் சிறையில் உள்ளார். அதனால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் இந்த வழக்கில் எழவில்லை. அதனால், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன்[7]. எனவே, ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தை கோர்ட்டில் கொடுத்து அவர் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்[8]. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலையிலும், மாலையிலும் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி மனுதாரர் கையெழுத்திட வேண்டும்[9]. மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கு என்பதால், இந்த வழக்கை போலீசார் விரைவாக விசாரித்து முடித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.

ஆபாச பாட்டு - இந்த பாடலை கொஞ்சம் பாருங்கசினிமாக்காரர்களால் ஏற்பட்டு வரும் சீரழிப்பு: இந்த சூழ்நிலையில், திரைப்படத்துறையினரின் செயல்களுக்கு என்னுடைய அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறேன்[10]. இளைய சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்கவேண்டும்[11]. அதற்கு பதிலாக, திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை இடம் பெற செய்வது, வன்முறை காட்சிகளை படமாக்குவது போன்ற செயல்களால், நம்முடைய உயர்ந்த கலாசாரத்தையும், அறநெறியையும் திரைப்படத்துறையினர் சீரழித்து விடுகின்றனர். திரைப்படம் போன்ற ஊடகங்கள், இளைய சமுதாயத்தினரின் வலிமையான ஆசானாக, குருவாக உள்ளது[12]. இந்த ஆசான் சொல்லி கொடுக்கும் பாடம் வாழ்நாளில் எப்போதும் அவர்களுக்கு மறக்காது[13]. எனவே, திரையுலகத்தினர் எப்போதும் தன்னுடைய சமுதாய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்[14]. எதிர்கால தூண்களான இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும். இதன்மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க திரையுலகினர் முன்வர வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[15].

ஆபாச பாட்டு - அழுகைசினிமா, ஆபாசம், பாட்டு, இத்யாதி: சினிமாக்காரர்களுக்கு, இவ்வாறு அறிவுரை கொடுத்த விதத்தில் தான், நீதிபதியின் அக்கரை வெளிப்படுகிறது. ஆபாசப்பாடலை பாடிய பையன் கைது, வழக்கு, சிறை என்றிருக்கும் போது, அதனை எழுதியவனுக்கும், அத்தகைய தண்டனை கொடுக்கவேண்டியது அவசியமாகிறது. தூண்டிவிடுவது யாராக இருந்தாலும், இத்தகைய பாலியல் குற்றங்களில் உரிய முறையில், ஆராய்ந்து, விசாரித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சுமா 30 ஆண்டுகளாக, இத்தகைய ஆபாச பாடல்கள், வசனங்கள், நடனங்கள், காட்சிகள் அதிகமாக, எல்லைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாகுறைக்கு, அத்தகைய ஆபாசமான, கொச்சையான, கொக்கோக, மூன்றாம் தர பாடல்களை எழுதுபவர்கள் கவிஞர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு, பாராப்பட்டு, போற்றப்பட்டு, விருதுகள் இல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். ஏனெனில், தீங்கு செய்ய, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது போலாகிறது.

© வேதபிரகாஷ்

06-09-2016

ஆபாச பாட்டு - ஆபத்து

[1]  மாலைமலர், சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதா?: ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் அதிருப்தி, பதிவு: செப்டம்பர் 03, 2016 12:20.

[2] The issue pertained to the arrest of Prahu Kumar on July 24 for the alleged offence under Sections 341 (wrongful restraint), 294(b) (reciting obscene song), and 506 (criminal intimidation) of the IPC, read with Section 12 (sexual harassment) of the POCSO Act.

http://www.thehindu.com/todays-paper/tp-national/madras-high-court-raps-filmmakers-for-corrupting-young-minds/article9070996.ece

[3] http://www.maalaimalar.com/News/District/2016/09/03122025/1036541/High-court-judge-discontent-for-Obscene-words-in-cinema.vpf

[4] தமிழ்.இந்து, திரைபடத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாதுசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, Published: September 4, 2016 10:02 ISTUpdated: September 4, 2016 10:03 IST

[5] தினகரன், இளைய சமூகத்தினர் மனதில் திரைப்படங்கள் நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டும், Date: 2016-09-04@ 00:43:43

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=243373

[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9072124.ece

[8] பத்திரிக்கை.காம், திரைத்துறையினர் பொறுப்புடன் நடக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை, September 3rd, 2016 by டி.வி.எஸ். சோமு

[9] https://www.patrikai.com/film-industry-responsibly-judge-advice/

[10] தமிழ்.ஒன்.இந்தியா, திரையுலகினர் இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும்ஹைகோர்ட், By: Karthikeyan, Published: Saturday, September 3, 2016, 23:41 [IST]

[11] http://tamil.oneindia.com/news/tamilnadu/the-film-makers-need-social-responsibility-high-court-judge-261941.html

[12] இன்னேர.காம், திரைப்படப் பாடல்கள் எப்படி இருக்க வேண்டும்?: உயர் நீதிமன்றம் அறிவுரை!, Monday, 05 September 2016 16:40 Published in தமிழகம்

[13] http://www.inneram.com/news/tamilnadu/10249-hc-warned-film-songs.html

[14] தினத்தந்தி, சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகள்: சமுதாய பொறுப்புடன் திரைப்படத்துறை செயல்பட வேண்டும்; ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, செப்டம்பர் 04,2016, 5:59 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, செப்டம்பர் 04,2016, 5:59 AM IST.

[15] http://www.dailythanthi.com/News/State/2016/09/04055907/Obscene-words-in-the-lyrics-of-cinema-the-film-community.vpf

மறுபடியும் நடிகை ராதா – உமாதேவி-முனிவேல் பிரச்சினை, ரௌடி வைரம் புழல் சிறையிலிருந்து மிரட்டல்!

ஓகஸ்ட் 22, 2016

மறுபடியும் நடிகை ராதா – உமாதேவி-முனிவேல் பிரச்சினை, ரௌடி வைரம் புழல் சிறையிலிருந்து மிரட்டல்!

Actress Radhas secret life - Nakkeeran

ராதா-பைசூல் விவகாரம் (2013): நடிகைகளைப் பற்றிய செய்திகள் என்றாலே, தமி ஊடகங்கள் செய்திகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பது ஒரு குணாதிசயம் எனலாம். சிறையில் இருந்து செல்போன் மூலம் பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுப்பதாக மறைந்த முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகை ராதா புகார் தெரிவித்துள்ளார் என்ற செய்தி மூலம், மறுபடியும் ராதா வெளிப்பட்டுள்ளார். சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ராதா. தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், அடுத்தடுத்து அவரைப் படங்களில் பார்க்க முடியவில்லை. ஆனால், வழக்கு, புகார், காதல் விவகாரம், மிரட்டல் என தொடர்ந்து ஊடகங்களில் அவரது பெயர் அடிபட்டு வருகிறது என்ற பீடிகையுடன் இப்பொழுது ஆரம்பித்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டு ராதா பைசூல் என்ற தொழில்அதிபர் ஒருவர் மீது போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில், ‘பைசூல் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டதாகவும், இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் கடந்த 6 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும்’ கூறியிருந்தார். மேலும், தன்னை ஆபாசமாக அவர் படம் எடுத்து வைத்துள்ளதாகவும் ராதா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், பிறகு புகாரை வாபஸ் வாங்கியதாகத் தெரிகிறது.

Paisul sister gave complaint against Radha 2013உமாதேவி-முனிவேல் பிரச்சினை, புகார் (ஆகஸ்ட்.2016): அதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக பிரமுகரின் மனைவி உமாதேவி என்பவர் ராதா மீது போலீசில் புகார் அளித்தார்[1]. அதில் அவர், ‘ராதா தன் கணவரை தன்னிடம் இருந்து பிரிக்கப் பார்ப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும்’ தெரிவித்திருந்தார்[2]. உமாதேவின் கணவர் முனிவேல் அதிமுகவை சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது கோடம்பாக்கம் வட்ட துணை செயலாளராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது[3]. மேலும், என் கணவரை 14-08-2016 அன்று முதல் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்தான் என் கணவரை ஏதோ செய்துள்ளார் என்று அச்சமாக உள்ளது. எனவே அவரிடமிருந்து என் கணவரை மீட்டுத்தரவேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஆனால், தன் மீதான இந்தப் புகாரை நடிகை ராதா மறுத்தார். கடந்த ஆகஸ்ட்.11ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில், கோடம்பாக்கம் வட்ட அதிமுக துணை செயலாளராக உள்ள என் கணவர் முனிவேல் சில மாதங்களாக “சுந்தரா டிராவல்ஸ்” படத்தின் கதாநாயகி ராதாவுடன் நெருக்கமாக இருந்தார். அவரை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது முனிவேலை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உமாதேவி, கடந்த 12ம் தேதி தி.நகர் துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்[4]. பின்னர், இந்த வழக்கை விசாரிக்க கோடம்பாக்கம் போலீசாருக்கு பரிந்துரை செய்திருந்தார்[5].

Threat call to actress from Vairam puzhal jailரௌடி வைரம் புழல் சிறையிலிருந்து மிரட்டல் – ராதா புகார்: இந்நிலையில், சிறையில் உள்ள பிரபல ரவுடி வைரம் தன்னை போன் மூலம் மிரட்டுவதாக ராதா புகார் தெரிவித்துள்ளார்[6]. ராதாவை ரவுடி வைரம் மிரட்டும் ஆடியோ வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவி வருகிறது[7]. தனது காதல் விவகாரத்தில் ரவுடி வைரம் தலையிடுவதாக நடிகை ராதா குற்றம் சாட்டியுள்ளார். இவ்வளவு விவகாரங்களுக்குப் பிறகு, என்ன காதல் என்று தெரியவில்லை. 2013ல் இவர் பைசூலுடன் சம்பந்தப் பட்டபோது, பல விவகாரஙளை வெளியிட்டார். பிறகு, அறுபடியும் என்ன காதல், மோதல், மிரட்டல் என்றெல்லாம் புரியவில்லை. மேலும், ‘வைரத்தின் இந்த மிரட்டலால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், புழல் சிறையில் இருக்கும் ஒருவர் செல்போனில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது‘ என்றும் அவர் கூறியுள்ளார்[8]. ஏற்கனவே 8க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கியுள்ள வைரம் மீது கடந்த மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைரம் எப்படி செல்போனில் பேசினார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[9]. 2013 மற்றும் 2014 லேயே இவன் கைது செய்யப்பட்டாத செய்தியுள்ளது[10].

Threat call to actress Radha from Vairam puzhal jail ‘வாட்ஸ்அப்உரையாடல்[11]:  ரௌடி வைரத்தின் உரையாடல் இப்படியுள்ளதாக, ஊடகங்கள் செய்தியைப் போட்டுள்ளன. வழக்கம் போல ஆடியோ-விடியோ புகழ் நக்கீரன், இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளது. “என் பெயர் வைரம். நான் கந்துவட்டி தொழில் செய்கிறேன். தற்போது புழல் சிறையில் இருக்கிறேன். முனிவேலுடன் உனக்கு இருக்கும் தொடர்பை விட்டுவிட வேண்டும். என் பெயரை முனிவேலிடம் சொன்னாலே, உன் பின்னால் வரமாட்டார். ஓடி போய்விடுவார். நான் ரவுடியாக இருந்தாலும், நேர்மையாக நடப்பவன். பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். பிரச்சினையை பெரிதாக்க நினைத்தால் நீ இருக்க மாட்டாய். இப்படி நான் மிரட்டுவதை போலீசில் சொன்னாலும், கவலை இல்லை. உன்னை கொலை செய்கிற அளவுக்கு, நீ பெரிய ஆள் இல்லை[12]. ஒரு சாதாரண நடிகை. என் மீது 16 வழக்குகள் உள்ளன. முனிவேலை நீ கல்யாணம் பண்ணிப்பார். நீ இருக்க மாட்டாய்[13]. முனிவேலும் இருக்க மாட்டார்”, இவ்வாறு ‘வாட்ஸ்-அப்’ உரையாடல் நீடிக்கிறது[14].

actress Radhaமிரட்டலுக்கு ராதாவின் பதில்: இந்த ‘வாட்ஸ்-அப்’ உரையாடலை வெளியிட்டு நடிகை ராதா கூறியதாவது[15]: “ரவுடியிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. புழல் சிறையில் இருந்து பேசுவதாக கூறி என்னை மிரட்டுகிறார். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க உள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்[16]. அந்த ஆடியோ தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அவ்வுரையாடலில், தான் முனிவேலின் மனைவியை சந்திக்கவில்லை, ஆனால், ஒரு நண்பனிடமிருந்து விசயத்தைப் பெற்றதாகக் கூறியுள்ளான்[17]. அவன் புழல் சிறையில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருப்பதால், அங்கிருந்துதான் அவன் பேசியிருக்க வேண்டும் என்றாகிறது[18].

radha-parvin-faizul-fight-bigamy-porn-etc

பிரச்சினை அலசல்: செய்தியின் ஊக்குவிப்பு, நடிகை அம்பந்தப்பட்டுள்ளதால் கிளுகிளுப்பு, என்றெல்லாம் பார்த்தாலும், இப்பிரச்சினை  சமுக பிரஞையுடன் அலச வேண்டியுள்ளது.

  1. தாம்பத்திய உறவுமுறைகளைக் கடந்த விவகாரமா,
  2. ஒரு பெண் / நடிகை அத்தகைய உறவுகளில் தோல்வியடைந்ததால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை அடைந்த சுவபாவமா,
  3. பெண்ணுக்கும்-பெண்ணுக்கும் நடக்கும் மோதலா.
  4. அரசியல் சம்பந்தப்பட்ட விசயமா,
  5. சினிமாவினால் சீரழிந்த கதையா,
  6. இக்கால நாகரிக சமூக பிறழ்சியா.
  7. இனி என்ன நடந்தாலும் ஒன்றும் கவலையில்லை என்ற மனோபாவம் உருவாகிய நிலையா.

என்று எப்படி பார்த்தாலும், கணவன் மனைவி உறாவுமுறைகளை காப்பாற்ற வேண்டிய கடமையுள்ளது. எங்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை, ஒத்துவராது, கட்டுப்படுத்தாது, என்று நடிகைகளோ, அரசியல்வாதிகளோ இருந்துவிட முடியாது. ஊடகங்களில் பொதுசெய்தியாக, மக்களின் கவனத்திற்கு எடித்துவரும் போது, மக்களுக்கு அதிக கடமையுணர்வு ஏற்படுகிறது. ஏனெனில், எல்லோருமே இதே மாதிரி இருந்துவிட முடியாது. எப்படியாவது தார்மீக உணர்வுகளை நுழைக்க வேண்டும், இவர்களை மாற்ற வேண்டும்.

© வேதபிரகாஷ்

22-08-2016

actress Radha failure of married life

[1]வெப்துனியா, பிரபல நடிகையிடமிருந்து என் கணவரை காப்பாற்றுங்கள் : மனைவி கதறல், Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (12:07 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-woman-complaint-against-actress-radha-116081200041_1.html

[3] http://cinema.dinamalar.com/tamil-news/50043/cinema/Kollywood/actress-radha-in-the-movie-sundara-travels-is-now-in-a-issue.htm

[4] தினகரன், அதிமுக நிர்வாகி மாயம் நடிகை ராதா மீது போலீசில் புகார், Date: 2016-08-15@ 00:32:16.

[5] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=238885

[6] தமிழ்.ஒன்.இந்தியா, சிறையில் இருந்தபடி நடிகை ராதாவை செல்போனில் மிரட்டும் பிரபல ரவுடிவைரலாகும் வாட்ஸ் அப் ஆடியோ, By: Jayachitra, Published: Sunday, August 21, 2016, 13:18 [IST]

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-radha-complaints-against-rowdy-260738.html

[8] தினகரன், செல்போன் மூலம் பிரபல ரவுடி கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ராதா புகார், Date: 2016-08-21 10:34:24

[9] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=240292

[10]http://www.dinamani.com/edition_chennai/chennai/2013/07/23/%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article1697449.ece?service=print

[11] தினத்தந்தி, ரவுடியிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறதுநடிகை ராதா பரபரப்பு பேட்டி, பதிவு செய்த நாள்: திங்கள் , ஆகஸ்ட் 22,2016, 2:00 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஆகஸ்ட் 22,2016, 4:15 AM IST.

[12] இந்நேரம்.காம், சிறையிலிருந்து நடிகை ராதாவுக்கு ரவுடி மிரட்டல்:பரபரப்பு ஆடியோ!, திங்கட்கிழமை, 22 August 2016 04:21

[13] http://www.inneram.com/entertainment/movies/10146-threaten-to-actress-radha.html

[14] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/rowdy-threatening-actress-radha-released-audio-116082100006_1.html

[15] வெப்துனியா, சிறையிலிருந்து ரவுடி என்னை மிரட்டுகிறார் : ஆடியோ வெளியிட்ட நடிகை , Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (12:50 IST)

[16] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/08/22020004/Actress-Radha-tabloid-interview.vpf

[17] Deccan Chronicle. Actress gets threat call from Puzhal jail, Published: Aug 22, 2016, 6:13 am IST; Updated: Aug 22, 2016, 6:23 am IST

[18] http://www.deccanchronicle.com/nation/in-other-news/220816/actress-gets-threat-call-from-puzhal-jail.html

நடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்!

ஓகஸ்ட் 11, 2016

நடிக்கனும்னா படுக்க வாகேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்!

tisca-chopra2-750x500

தங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது:  கேஸ்டிங் கௌச் என்று நாகரிகமாக இப்பொழுதெல்லாம் சொல்லப்படுகிறது[1]. அதாவது, பெண்கள் வேலை செய்யும் இடங்களில், தங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும், சலுகை பெற வேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது வழக்கமாகி விட்டது. இந்தியாவில் இது பெரிய இடங்களில் நடப்பதால் தெரியாமல் போகிறது. ஆனால், மேற்கத்தைய நாடுகளில் சகஜமாக இருக்கிறது. பாலிவுட்டைப் பொறுத்த வரையில் முன்னமே இது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன என தெரிகிறது[2]. அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று முன்பு ஒரு செய்தி வந்தது. செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர்சட்டையை  கழட்டிவிட்டு  இளைஞர்கள்  போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது, பிரச்சினையானது[3]. பிஎச்.டி படிக்கும் மாணவியர்களிடம் ஆண் கைய்ட் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது, புகார்கள் செய்வது, முதலியனவும் வழக்கமாகி விட்டன. சில விசயங்கள் வெளியே வருகின்றன, பல விசயங்கள் மறைக்கப்படுகின்றன.

 டிஸ்கா சோப்ரா -சமரசம் - 11-08-2016

நடிகை டிஸ்கா சோப்ரா சொன்ன கதை: சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக, பிரபல இயக்குனருடன் சமரசம் [casting couch] செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டதாக, பிரபல பாலிவுட் நடிகை, டிஸ்கா சோப்ரா [Tisca Chopra], பகிரங்கரமாக தெரிவித்துள்ளார்[4]. இது தான் இப்பொழுது, முக்கியமான செய்தி போன்று ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. கொம்யூன் இந்தியா [Kommune India] என்ற அமைப்பு நிகழ்ச்சியில், கதை சொல்லுதல் என்ற முறையில் முதலையை கிருமிகளிடமிருந்து காத்தல் [Reptile Dysfunction] என்ற தலைப்பில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்[5]. தாரே ஜமீன் பர், தில் தோ பச்சா ஹை ஜி, மை அவுர் சார்லஸ் போன்ற ஹிந்தி படத்தில் நடித்தவர் டிஸ்கா சோப்ராவுக்கு, 42 வயதாகிறது. தன், வாழ்க்கையை கூறும் நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது[6]. அதில், அவர் நகைச்சுவையுடன், தனக்கு திரையுலகத்தில் ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[7]. ஆனால், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு, பலருடன் சமரசம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதை அவர் கூறியுள்ளார்[8]. ஆனால், உண்மையில் அவ்வாறு செய்யவில்லை, தப்பித்து வந்ததாக கூறியுள்ளார்[9]. உண்மையிலேயே முதலையிடமிருந்து தப்பியுள்ளார்[10].

Tisca chopra-b w-2ஆண்களைக் கூட அழைக்கிறார்களாம்; பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். ஆண்களும், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருடன் சமரசம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறியிருந்தார். ஆண்கள் எப்படி சமரசம் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை வயதான பெண்களுக்கு ஒருவேளை மகிழ்ச்சியூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்களோ என்னமோ?. இந்த நிலையில், டிக்ஸா சோப்ரா, ”எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காத போது, ஒரு பிரபல இயக்குனர் அழைத்தார்[11]. ”ஆனால், அவருடைய படத்தில் நடிப்பதற்கு, அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தப்பட்டது,” என, பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்[12]. அந்த இயக்குனர் யார் என்று தெரியவில்லை.

Tisca chopra-b wபிரபலங்களுக்கே இந்த கதி என்றால், சாதாரண நடிகையின் கதி என்ன?: டிஸ்கா சோப்ரா இவர் பிரபல எழுத்தாளர், குஷ்வந்த சிங்கின் பேத்தி முறையாவார் [grand-niece]. ஏர் இந்தியாவின் பைலட் கேப்டன் சஞ்சய் சோப்ராவின் மனைவி. பல அரசுசாரா நிறுவனங்கள், முதலியவற்றுடன் சேர்ந்து கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் முதலியவற்றிற்காக பாராடி வருகிறார். இவருக்கே இந்த நிலை என்றால், மற்ற நடிகைகளின் கதி எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், வருத்தமாகவும், கேவலமாகவும் இருக்கிறது. முன்பு மனீஷா என்ற நடிகை டைரக்டர் சச்சேந்திர சர்மா மீது அத்தகைய புகாரை வைத்தார்[13]. ஒரு மேடை நிகழ்ச்சியில், நடிகை, டைரக்டரை அறைய பெரிய கலாட்டாவே நடந்தது.

Tisca chopraஇளைஞர்களுக்கு எச்சரிக்கை: இக்காலத்தில் இந்திய சமுதாயத்தைக் கெடுக்க பலர், பலவிதமாக வேலை செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. சினிமா, போதை, மேனாட்டு கலாச்சாரம் போன்றவை எல்லைகளை மீறி சென்று கொண்டிருக்கின்றன. பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியனவும், தவறான பாதையில் இழுத்துச் செல்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மோகத்தில் சிக்கிக் கொண்டு, இளம்பெண்களை சீரழித்து வருகின்றனர். அது கொலை போன்ற கொடூரங்கங்களிலும் முடிகின்றன. ஆனால், அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. தினம்-தினம் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால், இப்பிறழ்சிள், சீரழிவுகள், பாலியல் பலாத்காரங்கள், கற்பழிப்புகள், கொலைகள் முதலியன நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இளைஞர்கள் தங்கள் மீது தாங்களே கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு வாழாவிட்டால், இதை விட மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது உறுதி.

© வேதபிரகாஷ்

[1] The casting couchcasting-couch syndrome or casting-couch mentality is the trading of sexual favors by an aspirant, apprentice employee or subordinate to a superior in return for entry into an occupation, or for other career advancement within an organization. The term “casting couch” originated in the motion picture industry, with specific reference to couches in offices that could be used for sexual activity between casting directors or film producers and aspiring actresses or actors.

[2] For those who don’t know, casting couch is basically a system where opportunity or incentive is given to a person in return for sexual favours. And nowhere is this system more prevalent than in the film and entertainment industry. Bollywood especially has a long history of casting couch stories and scandals and despite all the negative attention it has garnered over the years, it is still very much a thing.

http://www.news18.com/news/buzz/actor-tisca-chopra-recalls-her-hilarious-casting-couch-experience-1277905.html

[3] http://english.manoramaonline.com/news/kerala/cherian-philip-lands-in-soup-with-sexist-remark-congress.html

[4] தினமலர், சான்ஸ்க்கு சமரசம் : பாலிவுட் நடிகைபகீர், ஆகஸ்ட்.10.2016, 22.09.

[5]  Ankita Rajeshwari, WATCH: Actor Tisca Chopra shares her experience with the casting couch, August 10, 2016, 11:24 PM IST

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1582785

[7] daily.bhaskar.com, Tisca Chopra Tricked her Way off a Casting Couch Experience; Here’s a List of Some Not-so-Lucky Celebs!, Jasmine Philip | Aug 07, 2016, 17:39PM IST

[8] http://daily.bhaskar.com/news/ENT-BOW-bollywood-casting-couch-5390800-PHO.html

[9] http://www.news18.com/news/buzz/actor-tisca-chopra-recalls-her-hilarious-casting-couch-experience-1277905.html

[10] http://indiatoday.intoday.in/story/tisca-chopra-casting-couch-experience-sexy-bollywood-video-watch/1/733287.html

[11] IndiaToday.in, Tisca Chopra on casting couch and how she tricked her way out of a big Bollywood director’s scheme,  Posted by Devarsi Ghosh New Delhi, August 5, 2016 | UPDATED 23:30 IST

[12] http://blogs.timesofindia.indiatimes.com/everything-social/watch-actor-tisca-chopra-shares-her-experience-with-the-casting-couch/

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1136541

இரண்டு பெண்டாட்டிக் காரன் மூன்றாவதை வைத்துக் கொண்ட நேரத்தில், பிரச்சினை எழ கொலை செய்தது! நடிக-நடிகையர் ஆனாலும், எல்லாமே நிஜம் தான்!!!

பிப்ரவரி 7, 2016

இரண்டு பெண்டாட்டிக் காரன் மூன்றாவதை வைத்துக் கொண்ட நேரத்தில், பிரச்சினை எழ கொலை செய்தது! நடிகநடிகையர் ஆனாலும், எல்லாமே நிஜம் தான்!!!

சசிரேகா, ரமேஷ், லக்கியா

குப்பை தொட்டியில் பெண் பிணம் கண்டெடுக்கப்பட்டது (05-01-2016)[1]: சென்னை போரூர்-மவுண்ட் சாலையில் சின்ன போரூர், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த குப்பைத் தொட்டி அருகே கடந்த மாதம் 5-ந்தேதி, 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டிக்கப்பட்டு இருந்தது. நிர்வாணமாக கிடந்த அவரது உடலில் போர்வை மட்டும் சுற்றப்பட்டு இருந்தது. குப்பைகளை அள்ள வந்த மாநகராட்சி துப்புரவு பணியாளர் சுப்பையா, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராயலா நகர் போலீசார், அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என்பது அடையாளம் தெரியாமல் இருந்தது. அவரது தலையும் எங்கு வீசப்பட்டு உள்ளது என்பது தெரியாமல் போலீசார் தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அந்த பெண்ணை அடையாளம் காண்பதற்காக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மாயமான பெண்களின் புகைப்படத்தை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

செப்டம்பர் 2015ல் புகார் அளித்தவர் மாயம்[2]: முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காணாமல் போன இளம் பெண்கள், திருமணமாகி கணவரை பிரிந்தவர்கள், ஆதரவற்ற இல்லங்களில் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மாயமானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டினார்கள். பிணமாக கிடந்த பெண்ணின் கைரேகைகளை பெங்களூருக்கு எடுத்துச் சென்று, தமிழகத்தில் உள்ள ஆதார் அட்டைகளில் உள்ள பெண்களின் கைரேகைகள் ஏதாவது ஒன்றுடன் அவை ஒத்துப்போகிறதா? என்று சோதனை செய்தனர். ஆனால் அதில் தகவல்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால் சென்னையில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து விசாரிக்க தொடங்கினர்.  அப்போதுதான் மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சினிமா துணை நடிகை சசிரேகா என்பவர் தனது மகனை கடத்தி வைத்துக்கொண்டு தன்னை வைத்து குறும்படம் எடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் பறித்து, தன்னை ஏமாற்றிய கணவர் ரமேஷ்சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்து இருந்தார் என்பது தெரியவந்தது. ஆனால் அதன்பிறகு அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது.

சசிரேகாவை காணவில்லை என்று பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்: தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க சசிரேகா படப்பிடிப்பு விஷயமாக வெளியே சென்று என்றும், வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி ரோசனை 05-01-2016 அன்று சசிரேகாவின் பெற்றோரிடம் விட்டுச்சென்று விட்டனர். சசிரேகாவின் பெற்றோர் ஜனவரி முதல் வாரத்திலிருந்து அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை எனும் போது, சந்தேகம் எழ ரமேஷிடம் கேட்டுள்ளனர். ஆனால், தனக்கு தெரியாது என்றவுடன், சசிரேகாவை காணவில்லை என்று பெற்றோர் ஏற்கெனவே போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்[3]. அவர்கள் சசிரேகாவின் புகைப்படதையும் கொடுத்திருந்தனர். இந்நிலையில் தான், போரூர் அருகே குப்பைத் தொட்டியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண், சினிமா துணை நடிகை என்பது ஒரு மாதத்துக்கு பிறகு அடையாளம் தெரிந்தது. இது தொடர்பாக அவரது கணவர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்[4].

சினிமா துணை நடிகை: ஒரு மாதத்துக்கு பிறகு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த பெண், போரூரை அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்த சசிரேகா (வயது 32) என்பது தெரியவந்தது. சினிமா துணை நடிகையான சசிரேகா, குடும்ப பிரச்சினை காரணமாக மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். ஆனால் அதன்பிறகு அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலையும், போலீஸ் நிலையத்தில் இருந்த சசிரேகாவின் புகைப்படத்தையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் பிணமாக கிடந்தவர் துணை நடிகை சசிரேகாதான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சசிரேகாவின் கணவரும், துணை நடிகருமான ரமேஷ் சங்கர் (35) மற்றும் அவருடைய கள்ளக்காதலி லக்கியா கசிவ் [Lawkiiyaa Kashiiv (30)] ஆகியோரை பிடித்து நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்[5]. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

2011ல் முதல் திருமணம்[6]: மனைவியை கொலை செய்தது ஏன் என்று ரமேஷ்சங்கர் காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். “எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை குரோம்பேட்டை அனகாபுத்துாரில் எனது மனைவி மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தேன். ஏலச்சீட்டு தொழில் செய்து வந்த எனக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது மனைவி, மாமியார் ஆகியோர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். [இதுவே சந்தேகத்தில் தான் உள்ளது] தனிமைப்படுத்தப்பட்ட நான் வடபழனியில் உள்ள எனது சித்தப்பா வீட்டில் தங்கினேன். பணத்தேவை ஏற்பட்டதால் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடம் ரூ.70 லட்சம் வரையில் வசூல் செய்துவிட்டு காவல்துறையினர் தேடியதால் தலைமறைவாகினேன். [அப்படியென்றால், போலீஸாரிடம், இவனைப்பற்றிய விவரங்கள் ஏற்கெனவே இருந்தது என்றாகிறது] இதன் பின்னர் சினிமா ஆசையில் விருகம்பாக்கத்தில் வந்து தங்கிய எனக்கு லக்கியாவின் தொடர்பு கிடைத்தது”.

லக்கியாவின் தொடர்பும், பிரச்சினைகளும்: ரமேஷ் தொடர்ந்து சொன்னது, “தாய்தந்தையை இழந்த இவர் கேரளாவை சேர்ந்தவர். 17 வயதில் அவருக்கு பாட்டி திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததால் அவர் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். கதாநாயகியாக ஆக்குவேன் என்று அவரிடமும் ஆசை காட்டினேன். இதனால் லக்கியா என்னுடனேயே எப்போதும் இருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிரேகாவை மடிப்பாக்கத்தில் வைத்து சந்தித்தேன். அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். எனக்கு சினிமா பிரமுகர்கள் பலரிடம் பழக்கம் இருந்து வந்ததால் அவருக்கு ஓரிரு படங்களில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். இந்தப்பழக்கம் எங்களுக்குள் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். லக்கியாவை தங்கை என்று சசிரேகாவிடம் கூறியிருந்தேன்[7]. உள்ளுக்குள் பென்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இந்த ஆளுக்கு இருக்கிறது என்பது தெளிவாகிறது. முதல் மனைவி தற்கொலை, இரண்டாவது மனைவியுடன் சண்டை என்ற நிலையில், தங்கை என்று சொல்லி மூன்றாவது பெண்ணுடன் தொடர்பு வைப்பானேன்?

சசிரேகாவை இரண்டாவது திருமணம்: சினிமா துணை நடிகரான ரமேஷ்சங்கர், “நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்” என்ற சினிமா படத்தில் நடித்து உள்ளார். ஏற்கனவே திருமணமான அவர், மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் சசிரேகாவை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். சசிரேகாவும் ஏற்கனவே சாலமன் பிரபு என்பவருடன் திருமணமானவர். அவருக்கு ரோஷன் (7) என்ற ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் வசித்து வந்தனர். சசிரேகாவும் “நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்” படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இதற்கிடையில் ரமேஷ் சங்கருக்கு கேரளா துணை நடிகையான லக்கியாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் சசிரேகாவுக்கும், ரமேஷ்சங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைப்பற்றி ஊடகங்கள் மாறுபட்ட விவரங்களைக் கொடுக்கின்றன. 07-02-2016 வரை அத்தகைய விவரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வேதபிரகாஷ்

07-02-2016

[1] தினத்தந்தி, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் சினிமா துணை நடிகை கணவர், கள்ளக்காதலி கைது, மாற்றம் செய்த நாள்: சனி, பெப்ரவரி 06,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, பெப்ரவரி 06,2016, 12:24 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/State/2016/02/07110519/sasirekha-actress-murderFrightened-New-Information.vpf

[3] http://indianexpress.com/article/india/india-news-india/headless-body-recovered-in-chennai-is-that-of-actress-husband-his-girlfriend-arrested/

[4] http://www.ndtv.com/chennai-news/headless-body-found-in-chennai-is-of-tv-actor-sasirekha-husband-arrested-1274628

[5] Arun Janardhanan,  Headless body recovered in Chennai is that of actress; husband, his girlfriend arrested,  Indian Express, Chennai | Published:February 7, 2016 4:10 am

[6] தமிழ்.ஒன்.இந்தியா, நடிகையின் தலையை வெட்டி குப்பை தொட்டியில் வீசிய வில்லன் நடிகர்!!, Posted by: Mayura Akilan, Updated: Saturday, February 6, 2016, 13:23 [IST]

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/case-headless-woman-s-body-solved-246172.html

“யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்பது கமல் ஹஸனுக்கு நன்றாகவே பொருந்தும்!

திசெம்பர் 9, 2015

யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டுஎன்பது கமல் ஹஸனுக்கு நன்றாகவே பொருந்தும்!

2015 வெள்ளம் - பணத்தோட்டம், அண்ணாதுரை

கமல் ஹஸன் சொன்னதாகபர்ஸ்ட் போஸ்ட்டில் வெளியாகியுள்ள செய்தி: கமல் ஹஸன் “பஸ்ட் போஸ்ட்”டில் ஆங்கிலத்தில் சொன்னதும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

‘The entire system has collapsed’: Kamal Haasan sends distress message from Chennai[1]

The unprecedented rains in Chennai have left the city marooned and helpless.

The rich and privileged have not been spared either. However, Kamal Haasan who lives on the posh Eldams Road in Chennai’s Teynampet area is relatively sheltered and safe from the deluge.

But many of his friends and relatives are hugely affected.

Speaking exclusively from his residence in Chennai, Kamal Haasan in an interview with Firstpost said[2], “To describe the situation as calamitous would be an understatement. If this can happen in Chennai can you imagine the plight of the rest of Tamil Nadu?”

“It’s a nightmare for the poor and the middle class. The rich should feel guilty. I  am not so rich and yet I feel guilty when I look outside my window and see how people in my city are suffering,” the actor adds.

He also lashed out at the powers-that-be for neglecting their civic duties. “The entire system has collapsed. It will take Chennai months to get back to normal even when the rains stop. Where is all of the taxpayer’s money going? I don’t take black money. I pay my taxes. What is being done for me and my people with my hard-earned money?”

Questioning the basic tenet of civil existence, the actor asks, “I have no God. And I definitely won’t accept the authority and decisions of the self-appointed Gods— the politicians. The ruling party, whoever they are, don’t mind spending Rs 4000 crore for corporate projects. We are around 120 crore people in the country. Why not distribute all the Rs 4000 crore among us? That would make all Indians tri-crorepatis.”

The actor who is known to stand up for causes is extremely disillusioned by the collapse of the state administration in Tamil Nadu.

He ended the conversation by saying, “I am truly sad and sick. I feel guilty for my being in a comfortable home. I earn very little compared to the government. But now when our state is in distress they are asking for donations to do what we appointed the government to do. Of course I will pay because I am constrained to respect the government’s authority. The reason I pay is not to be perceived as one  the rich who suck on people, because I am not. I love my people truly. All this drama of rich and poor is a farce, though. The politicians give a damn about social equality as long as they remain in power.”

“இதை பேரிடர் என்று சொல்வதே குறைத்து மதீப்பீடு செய்வது போலத்தான். சென்னையில் இப்படி நடக்கிறது என்றால், தமிழகத்தில் மற்ற பகுதிகளின் நிலையென்ன என்பதனை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா?”

“இது ஏழைகளுக்கும், நடுத்தர மக்களும் ஒரு பயங்கரமான நிகழ்வாகும். பணக்காரர்கள் குற்ற உணர்வோடு நினைத்துப் பார்க்கவேண்டும். நானும் பெரிய பணக்காரன் அல்ல, ஆனால், ஜன்னல் வழியாக பார்க்கும் போது, மக்கள் எப்படி அவதிப் படுகிறார்கள்[3] என்று அறிந்து குற்ற உணர்வை அடைகிறேன்.”

“இந்த முழு அமைப்பே (ஆட்சி, நிர்வாகம், வெள்ளத்தடுப்பு வேலைகள்) செயலற்றதாகி விட்டது. மக்களுக்கு வேண்டியவற்றை செய்யவேண்டிய கடமைகளை உதாசீனப்படுத்தும் சக்திகளைக் கண்டிக்கிறேன்.

மழை நின்ற பிறகுக் கூட, சென்னை பழைய நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும். மக்களின் வரிப்பணம் எங்கு செல்கிறது? நான் கருப்புப்பணத்தைப் பெறுவதில்லை. நான் வரிகளைச் செல்லுத்துகிறேன். ஆனால், எனக்கும் என்னுடைய மக்களுக்கும் கஷ்டப்பட்டு சம்பாதித்த அந்த (வரிப்) பணத்தினால் என்ன செய்யப்படுகிறது?”

இதெல்லாம் நிச்சயமாக, தேவையற்ற விமர்சனம் ஆகும். இவர் கருப்புப் பணத்தைப் பெருகிறாரா என்று யாரும் கேட்கவில்லை. இஷ்டப்பட்டால், நிதி கொடுக்கலாம். கொடுப்பவர்கள் எல்லோரும், கருப்புப் பணத்திலிருந்து தான் கொடுக்கிறார்கள் என்பது போல சொன்னதும், அதிகப்பிரசங்கித்தனமாகும்.

“எனக்கு கடவுள் இல்லை[4]. நிச்சயமாக நான் அதிகாரத்தையும் மற்றும் தானே தம்மை கடவுளர்களாக நியமித்துக் கண்ட அரசியல்வாதிகளின் தீர்மானங்களையும் ஒப்புக்கொள்ள மாட்டேன்[5].

ஆட்சி செய்கின்ற கட்சி, எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், ரூ.4,000 கோடிகளை கார்புரேட் திட்டங்களுக்கு செலவு செய்கிறது. இந்நாட்டில் நாம் 120 கோடி மக்கள் இருக்கிறோம். அதனை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கலாமே? அப்படி செய்தாலே அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்களே?”

இதுவும் அபத்தமான பேச்சாகும். அயல்நாட்டு முதலீடு தேவை எனும்போது, அதற்காக ஆகும் செலவை, இவ்வாறு கொச்சைப்படுத்தும் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இவை மோடியை அல்லது யாரை விமர்சிக்கும் வார்த்தைகள் என்று தெரியவில்லை. ஒருவேளை முன்னர் பிஜேபிக்கு ஆதரவாக பேசியதால், இப்பொழுது, காங்கிரசுக்கு ஆதரவாக பேசியுள்ளாரா என்பதை அவர் தான் விளக்கவேண்டும்.

“நான் உண்மையிலேயே வருத்தம் மற்றும் துக்கம் அடைகிறேன். வசதியான வீட்டில் இருப்பதற்கு குற்ற உணர்வை அடைகிறேன். அரசை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நான் மிகக் குறைவாகவே சம்பாதிக்கிறேன். ஆனால், இப்பொழுது நமது மாநிலம் துயரத்தில் இருக்கும் போது, அவர்கள் நிதி கொடுக்குமாறு கேட்கிறார்கள்[6], அதாவது, நம்மால் நியமிக்கப்பட்ட அரசு செய்யவேண்டியதை மற்றவர்களிடத்தில் எதிர்பார்க்கிறார்கள். நான் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஏனெனில், அரசு அதிகாரத்தை மதிக்க கட்டுப்பட்டுள்ளேன்.”

நான் பணம் கொடுப்பதினால், உறிஞ்சி கொடுக்கும் பணக்கார (வர்க்கம்) என்று நினைக்கவேண்டாம்[7], ஏனெனில், நான் பணக்காரன் அல்ல. நான் மக்களை உண்மையாகவே விரும்புகிறேன். இந்த பணக்காரன் – ஏழை, அத்தகைய நிலை இருந்தாகும், அது நாடகம் எல்லாம் பொய்-மாயை. அரசியல்வாதிகள் ஆதிக்கத்தில் இருக்கும் வரை சமூகநீதிக்கு ஒன்றையும் சரியாக செய்வதில்லை”.

சில நடிகர்கள் முந்திகொண்டு விட்டார்கள் என்றதால், பொறாமயுடன் வெளிப்படும் வார்த்தைகள் போறுள்ளன. சமுத்துவம், சமூகநீதி பொருட்பட இங்கு பேச வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், வெள்ளம் எல்லோரையும் சமமாக்கியுள்ளது. இவர் சௌகரியமாக இருக்கிறார் என்றால், கோடிகளில் சம்பாதித்ததால் தான். அப்பணம் ஏழைகளிடமிருந்து தான் உறிஞ்சப்பட்டுள்ளது.

இதை கூர்ந்து வாசித்தால், நிச்சயமாக, ஹஸன் உள்நோக்கத்தோடு, இவ்வாறு பலவிசயங்களை விமர்சித்து, கொச்சைப்படுத்தியும் கூறியுள்ளார். அரசியல்வாதியை மிஞ்சும் அளவிற்கு அவரது பேச்சு இருக்கிறது. அரசு நிர்வாகம் செயலற்றதாகி விட்டது, வரிப்பணம் என்கே போகிறது, அரசு எனக்கு என்ன செய்து விட்டது, ஏழை-பணக்காரன், அரசை ஒப்பிட்டால் …..நான் பணக்காரன் இல்லை, கேட்டால் நிதி கொடுத்துதான் ஆகவேண்டும், ரூ 4,000 கோடிகள் பிரித்துக் கொடுத்தால்……..இவையெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமானவை தாம்.வள்ளுவர் சொன்னது, “யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”, நிச்சயமாக இவருக்குப் பொருந்தும்.

© வேதபிரகாஷ்

09-12-2015

[1] Firstpost, ‘The entire system has collapsed’: Kamal Haasan sends distress message from Chennai, by Subhash K Jha,  Dec 3, 2015 10:24 IST.

[2] http://www.firstpost.com/bollywood/the-entire-system-has-collapsed-kamal-haasan-sends-distress-message-from-chennai-2531358.html

[3] இவர் வசதியாக, சௌகர்யத்துடன் வீட்டில் அனுபவிக்கிறார் என்பதை சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. குற்ற உணர்வு இருந்தால், குடிசௌக்கு வந்தா வாழமுடியும், ஐந்து நடசத்திர ஓலலில் தான் ரூம் போட்டு அனுபவிக்க முடியும்.

[4] இதெல்லாம் கூட, மிக்க மலிவுத்தனமாக, கேவலமாக, கொச்சைத்தனமாக உள்ளது. எப்படி, இத்தகைய கொடுமையான நிலையிலும், சில கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதாயம் தேடப் பார்க்கிறார்களோ, அதுபோலத்தான், இந்த சித்தாந்தியின் பேச்சும் உள்ளது.

[5] ஆனால் அரசை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நான் மிகக் குறைவாகவே சம்பாதிக்கிறேன். ஆனால், இப்பொழுது நமது மாநிலம் துயரத்தில் இருக்கும் போது, அவர்கள் நிதி கொடுக்குமாறு கேட்கிறார்கள், அதாவது, நம்மால் நியமிக்கப்பட்ட அரசு செய்யவேண்டியதை மற்றவர்களிடத்தில் எதிர்பார்க்கிறார்கள். நான் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஏனெனில், அரசு அதிகாரத்தை மதிக்க கட்டுப்பட்டுள்ளேன். என்று சொல்லியுள்ளதை கவனிக்க வேண்டும்.

[6]  ஜெயா முதலிய டிவி-செனல்களில் நிதியுதவி கேட்டு, எந்த வங்கிக் கணக்கில் பணம் போடவேண்டும் முதலியவற்றைப் பார்த்துவிட்டு, மமென்ட் அடித்துள்ளார் என்று தெரிகிறது.

[7] ஒருவேளை, சித்தார்த்தை பேட்டிக் கண்டு, அவரது கருத்து, வெளியிட்டதால், இவருக்கு பொறாமையாகி விட்டது போலும்! இன்னொரு நடிகர் உண்டி குலுக்கியே பணம் சேகரித்துக் கொடுத்துள்ளார். ஆனால், இவர், வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் செய்துள்ளார்.

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது?

திசெம்பர் 9, 2015

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது?

kamal-hassan-srividya

கமல் ஹஸனின் அறிக்கை: தன்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணி செய்யுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ‘நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று?’ என்று தமிழக அரசை நோக்கி, தான் எவ்விதக் கேள்வியும் எழுப்பவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்[2], “நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று என்றுநான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின்னஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும், மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழுவருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவேமாட்டேன். எந்தநிலைமையிலும் என் கடமையைச் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்[3].

 

Vani with Kamal

Vani with Kamal

என் வீட்டிற்கு சிலநாட்களாக செய்தித்தாள் வினியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைப்பேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலைதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப் பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்[4].

 

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy-rare-photos01

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy

என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசி தொடர்புகிடைக்கும் போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்பு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது[5].

 

.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம்[6]: இது நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கும், பலவேறு கட்சிகளுக்கும் ஓட்டுபோடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது என்பதற்கே இவ்விளக்கம்[7].

மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[8]: பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள், தனிமனிதக் கோபங்களை தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[9].

 

Kamal new relationship it is too real, but not so real

Kamal new relationship it is too real, but not so real

தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம்[10]: வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்[11]. தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும்கூட, சூழக் கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவன செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும்தான்“, என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்[12].

கமல காசனின் பிரச்சினை, கமல ஹாசனின் ஆசை, கமல் ஹஸனின் குழப்பம்: வயதாகி விட்டதால், அவ்வப்போது குழம்பிவிடுகிறார் போலும். கமல் ஹஸனுக்கு அகம்பாவம் அதிகமாகவே தான் இருந்து வந்துள்ளது. சென்ற மாதமே தீபாவளி விளம்பரம், நிதியுதவி நாடகம் முதலியவை இவரது முரண்பாடுகளை வெளிக்காட்டின. பாவம், எப்படி பணகஷ்டம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. நான் பணக்காரன் இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார். போதாத இடத்தில் பணத்தைக் கொட்டி மாட்டிக் கொண்டாரா அல்லது வேறெங்காவது செல்கிறதா என்று தெரியவில்லை. தான் என்ற மமதை தான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைய நேர்ந்தது. இதனால், பல பெண்களை தேடியும் அமைதி கிடைக்கவில்லை, மாறாக ஒழுக்கம் தான் கெட்டது. “நல்ல நடிகன்” என்ற பெயருள்ளது, ஆனால், நடிப்பு ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, சுத்தத்தை, மன அமைதியைக் கொடுக்காது. சேவை என்று இறக்கி விட்ட பிறகு, சில ரசிகர்களின் உசுப்பல்களினால், அவ்வப்போது, அரசியல் ஆசை வருகிறது. தேசிய கட்சி ஒன்றில் சேரலாமா என்ற ஆசைக்கூட இருக்கிறது. இந்நிலையில் வெள்ளம் அவரை அதிகமாக குழப்பி விட்டிருக்கிறது. இப்பொழுது சொன்னதை, சொல்லவில்லை, “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைக்கு வந்துள்ளார்.

© வேதபிரகாஷ்

09-12-2015

[1] தமிழ்.இந்து, என்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து நற்பணி செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள், Published: December 7, 2015 14:43 ISTUpdated: December 7, 2015 19:15 IST.

[2] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/i-owe-an-apology-kamal-explanatory-statement-115120700037_1.html

[3]  தினத்தந்தி, ரசிகர்கள் தொடர்ந்து நற்பணிகள் செய்ய வேண்டும் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 3:15 AM IST

பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 12:55 AM IST.

[4] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/12/08005525/Actor-Kamal-Report.vpf

[5]http://www.dinamani.com/tamilnadu/2015/12/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/article3165969.ece

[6]  நியூஸ்.7, .பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம், Updated on December 07, 2015

[7] http://ns7.tv/ta/actor-kamal-hassans-statement-opannerselvam-report.html

[8] வெப்துனியா, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன் – கமல் விளக்க அறிக்கை, திங்கள், டிசம்பர்.7, 2015, 16:28. IST..

[9]  தினமணி, புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்: கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 December 2015 12:12 AM IST.

[10]  விகடன், தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம், Posted Date : 15:07 (07/12/2015), Last updated : 15:07 (07/12/2015).

[11] http://www.vikatan.com/cinema/article.php?aid=56021

[12] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article7957904.ece

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” ஏன் – அரசு தரப்பில் கண்டணம் ஏன்?

திசெம்பர் 9, 2015

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” ஏன் – அரசு தரப்பில் கண்டணம் ஏன்?

2015 வெள்ளம் - பன்னிர்செல்வம், கமல் ஹஸன்

கமல்ஹாசன் தனது விதண்டவாதக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்: வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு[1] நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரிய நடிகர் என்பதற்காக அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது என்று சாடியுள்ள அமைச்சர், அரசியல் சுயலாபம் பெற முயலும் தீயசக்திக்கு கமல்ஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில்[2], ”கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்[3].

1918-ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை. ஒரே நாளில் 40 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்து, வடகிழக்குப் பருவமழை முழுவதும் பெய்யும் மழையைவிட பலமடங்கு கூடுதலான மழை, ஒருசில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது. இதைத் தெரிந்து கொள்ளாமலேயே கமல்ஹாசன் தனது விதண்டவாதக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

 

Kamal family, it is real

Kamal family, it is real

எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கமலஹாசன்: இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, நடிகர் கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று ஒரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது[4]. எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், பிதற்றி இருக்கிறார். கமல்ஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு, எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.  அதைத்தான் முதலமைச்சர் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

 Kamals-controversial-Hugs-and-Kisses-at-Vijay-TV-Show-Neengalum-Vellalam-Oru-Kodi

மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை: ஓ.பன்னீர்செல்வம் தொடர்கிறார், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் அரசு மேற்கொண்டிருக்கும் நிலையில், அரசு நிர்வாகம் செயலற்றுப் போனதாக கமல்ஹாசன் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும். மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது. மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப்பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமல்ஹாசன் விலைபோய்விட்டாரோ என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.”

 

Gautami, Kamal and Akshara

Gautami, Kamal and Akshara

இந்தியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன்: கார்ப்பரேட் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமலஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார். இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்!  அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை[5]. மத்திய அரசின் மீது  அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை, சினிமாத் துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை  தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன். கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இந்தியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன். அப்போது,  அந்தப் பிரச்சனையை தீர்த்துவைத்த முதலமைச்சருக்கு நன்றி கூறியதை மறந்துவிட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார்[6]. இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது[7] என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 2015 வெள்ளம் - தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி

ஜெயலலிதாவின் அரசு, கமல்ஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம் தொடர்கிறார், “வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு தனியாருக்கு அரசு எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் நிவாரண உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாங்களாகவே முன்வந்து நிதியுதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் ஏற்படும்போது பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப்பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமல்ஹாசன் அறியமாட்டாரா? உதாரணத்துக்கு தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாகத் தெரிவித்து, தனது ட்விட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்[8]. தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான். தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, கமல்ஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. கமல்ஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்த அரசு மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள்,” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்[9].

தமிழகம் 1969, 1985, 1996, 1998, 2005, என்று பலமுறை இத்தகைய புயல், வெள்ளம், வரட்சி முதலியவற்றைச் சந்தித்துள்ளது. சென்னையில் வரட்சி நிலவியபோது, நடு ராத்திரி, விடியற்காலை 2 மணி போன்ற நேரங்களில் தெருக்களில் நின்று, டேங்கர் லாரி எப்பொழுது வரும் என்று காத்திருந்து, நான்கு குடங்கள் தண்ணீர் பிடித்து வாழ்க்கை நடத்தியவர்களைப் பற்றி, இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? அப்பொழுது கூட தண்ணிர் விநியோகத்தில் பாரபட்சம் இருக்கத்தான் செய்தது. காசிருந்தவர்கள் அப்படியே லாரிகளையே விலை பேசி, தங்களது வீடுகௐளில் நிரப்பிக் கொண்டனர். அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.அப்பொழுதெல்லாம் இப்பொழுதுள்ளவர்கள் பிறந்து கூட இருக்க மாட்டார்கள். மக்கள் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டுதான் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சினிமாவை வைத்து அரசியல் செய்வதும், அரசியலை வைத்து சினிமா செய்வதும், திராவிடப் பாரம்பரியத்தில் வந்துள்ள அனைவருக்குமே கைவந்த கலை. அதிலும், நாத்திகம், பகுத்தறிவு, சமூகநீதி, ஏழை-பணக்காரன், வர்க்க-போராட்டம் போன்றெல்லாம் பேசுகின்றவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். “பணத்தோட்டம்”[10] போன்றவையெல்லாம் எப்படியிருந்தன என்பது இப்பொழுதுள்ளவர்களுக்குத் தெரியாது.

2015 வெள்ளம் - பணத்தோட்டம், அண்ணாதுரைகஷ்டகாலங்களில் உதவி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பெயர், முகம் எல்லாம் வரவேண்டும் என்று செய்ததில்லை. உணவு, குடிநீர், துணிமணிகள் என்று கொடுத்து உதவியவர்கள் அமைதியாகத்தான் செய்துள்ளனர். குறிப்பாக இளைஞ்சர்கள், சிறுவர்கள் அபாரமான முறையில் உதவி, சேவைகளை செய்துள்ளார்கள். ஆனால், இப்பொழுதைய வெள்ளத்துயரங்களில், சேவை செய்பவர்களுள் பலர் ஆதாயம் தேட முயன்றுள்ளனர், இன்னும், முயன்று வருகின்றனர். “எப்.எம்” ரேடியோ செனல்களின் அருவருப்பான பேச்சுகளைக் கேட்டிருந்தால், நொந்தே போயிருப்பர். மின்சாரம் இல்லாமல் இருப்பவர்களின் கதியை நினைத்துப் பார்த்தால், அதனின் பலனை அனுபவித்துக் கொண்டு பேசுபவர்கள், வாழ்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

09-12-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1403164

[2]  தமிழ்.இந்து, கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கண்டிப்பு, Published: December 5, 2015 19:50 ISTUpdated: December 5, 2015 19:51 IST.

[3]  மாலைமலர், தன்னிலை மறந்து பேசுகிறார் கமல் ஹாசன்: அமைச்சர் .பன்னீர் செல்வம் கண்டனம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 05, 9:08 PM IST.

[4] http://www.maalaimalar.com/2015/12/05210850/minister-Panneerselvam-condemn.html

[5] மாலைமலர், தன்னிலை மறந்து பேசுகிறார் கமல் ஹாசன்: அமைச்சர் .பன்னீர் செல்வம் கண்டனம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 05, 9:08 PM IST.

http://www.maalaimalar.com/2015/12/05210850/minister-Panneerselvam-condemn.html

[6] http://www.maalaimalar.com/2015/12/05210850/minister-Panneerselvam-condemn.html

[7] https://antihidnu.wordpress.com/2015/11/09/kamal-hassan-deepavali-ad-heading-for-controversy/

[8] நிதி வழங்கிய தெலுங்கு நடிகர்கள் விவரம்: அல்லு அர்ஜுன் 25 லட்சம், பிரபாஸ் 15 லட்சம், மகேஷ்பாபு 10 லட்சம், ரவி தேஜா 5 லட்சம்,கல்யாண் ராம் 5 லட்சம், சாய்தரம் தேஜா 3 லட்சம், வருண் தேஜா 3 லட்சம் மற்றும் சம்பூர்ணேஷ் 50 ஆயிரம். தெலுங்கு நடிகர்கள் இதுவரை மொத்தம் 66 லட்சத்து 50 ஆயிரங்களை சென்னை மற்றும் தமிழக மக்களுக்காக அளிக்க முன்வந்திருக்கின்றனர். இது தவிர இன்று மாலை நானி, அல்லரி நரேஷ் உள்ளிட்ட 10 பிரபல நடிகர்கள் பிரபல மால்களில் உண்டியல் ஏந்தி நிதி திரட்டி வருகின்றனர். மேலும் தமிழக மக்களுக்கு உதவ நினைப்போர் ராமாநாயுடு அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த தொகைகளை அனுப்பி உதவுமாறு நடிகர் ராணா கேட்டுக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தவிர மக்களுக்குத் தேவைப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நடிகர் நவ்தீப் தலைமையில் திரட்டி சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.com/news/india/chennai-rain-telugu-actors-helps-tamilnadu-people-241616.html

[9]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7952762.ece?ref=relatedNews

[10] அண்ணாதுரையின் கதை, ஆனால், பிறகு அது திமுகவினருக்கே எதிராக போயிற்று. கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியின் புத்தகத்தில் விவரங்களைக் காணலாம்.

காமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் – முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்!

மார்ச் 17, 2014

காமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் – முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்!

 

காமசூத்ரா மாத்திரை விளம்பரம்

காமசூத்ரா மாத்திரை விளம்பரம்

முதலிறவு  காட்சி ,படுக்கையறை  காட்சிகள்: பாக்யஶ்ரீயை வைத்து ஒரு காட்சியும், “டூப்பை” வைத்து ஒரு காட்சியும் எடுக்கப்பட்டன[1].  பாக்யஶ்ரீ நடிக்கும் காட்சி ஆண்மகன் / புதியதாக திருமணமான மாப்பிள்ளை படுக்கையின் மீது உட்கார்ந்திருக்கும் போது, பெண்மகள் பாலுடன் படுக்கையை நோக்கி வரும் காட்சியாக இருந்தது. இது முதலிறவு காட்சி என்பது எல்லோருக்கும் தெரியும், அதில் என்ன செய்வார்கள் என்பது தெரியும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் இந்திய படங்களில் இத்தகைய தூண்டும்/ஊக்குவிக்கும் காட்சிகளைக் காட்டி வருகிறார்கள்.

 

அனுயாவின் படுக்கையறை காட்சி

அனுயாவின் படுக்கையறை காட்சி

  • மணமகன், மணமகளின் கையைப் பிடித்து வேகமாக கட்டில் பக்கம் இழுப்பது.
  • முந்தானை விலகி மனமகனின் மேலே வந்து விழுவது.
  • மணமனே முந்தானை விலக்குவது, நெஞ்சு விம்புவது, மார்பகங்களைக் காட்டுவது.
  • இடுப்பில் கைகள் மேய்வது, பெண்ணின் மேலே படுப்பது, மேலேயிருந்து கீழாக மூக்க்கை உரசிக்கொண்டு வருவது.
  • கட்டியணைத்துக் கொண்டு, விளக்கை அணைப்பது.
  • உம், ஆ, இச்…….போன்ற சப்தங்கள் வருவது போல கேட்க வைப்பது.
  • கட்டில் ஆடுவது போலக் காட்டுவது.
தமிழ்பட படுக்கையறைக் காட்சி

தமிழ்பட படுக்கையறைக் காட்சி

இப்படி காட்சிகளைக் காட்டித்தான் வருகிறார்கள், இவை இப்பொழுது சின்னத்திரைகளிலும் சாதாரணமாக வந்து விட்டன. ஆகவே, இங்கும் வழக்கம் போல மணமகள் பாலுடன் நெருங்கி வருகிறாள். ஆனால், அவள் கையில் பாலுக்குப் பதிலாக, “காம சூத்ரா” மாத்திரைகள் அடங்கிய டப்பா இருந்தது[2]. பிறகு, “டூப்பை” வைத்து எடுத்த  காட்சி பற்றி இவர்களுக்குத் தெரியாதாம். ஆகவே, இரண்டையும் இணைத்துப் பார்க்கும் போது, பாக்யஶ்ரீ தான் அவ்வாறு நடித்தாள் என்று பார்ப்பவர்கள் நினைப்பார்கள், அதனால், அவளது “இமேஜ்” பாதிக்கப் படும் என்று நிர்மலா புகாரில் குறிப்பிட்டிருந்தார்[3]. முன்னர் தமக்குத் தெரியாமல் காட்சிகளை எடுத்து விட்டனர், கேட்டபோது, அவற்றைக் காட்ட மறுத்து விட்டனர் என்று புகார் கொடுத்துள்ளார்கள்[4].

 

Ad Visser - Kamasutra experience

Ad Visser – Kamasutra experience

காமசூத்ரா விளம்பரம் – ஆபாச  படமா?: நடிகை பாக்யஸ்ரீ தாயார் புகாருக்கு மறுப்பு தெரிவித்து, பட அதிபர் ரவி தேவன் கூறியதாவது[5]: “‘காமசூத்ரா’ விளம்பர படம் ஒன்றை எடுத்து தரும்படி, மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று என்னை அணுகியது. அதன்படி, அதற்கான கதையை தயார் செய்தோம். பின்னர் நடிகை பாக்யஸ்ரீயை விளம்பர படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தோம். முதலிரவுக்கு படுக்கை அறையில் டம்ளரில் பால் கொண்டு செல்வதற்கு பதில், அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம். நடிகை பாக்யஸ்ரீ தாயார் நிர்மலாவின் சம்மதம் பெற்ற பின்னரே, படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்”, என்று விளக்கம் கொடுத்தது உண்மையிலேயே பெண்ணியப் போராளிகள், பெண்ணியவாதிகள், தமிழச்சிகள், தமிழச்சி-வீராங்கனைகள் முதலியோர் சிந்திக்க வேண்டும். பொதுவாக, இவர்கள் எல்லோருமே அமைதியாக இருப்பார்கள் அல்லது விசயம் பெரிதாகும் போது, அனைவருக்கும் தெரிய வரும் போது, ஏதோ அறிக்கை விடவேண்டுமே என்ற ரீதியில் அறிக்கை விட்டு வீடுகளில் முடங்கி விடுவர்.

 

Kamasutra ad - Sweta Menon- is it progress

Kamasutra ad – Sweta Menon- is it progress

 

மர்ம  நபர்கள்  மிரட்டல்: ரவிதேவன் தொடர்ந்து கூறியதாவது, “ஆனால் அதன்பிறகு நிர்மலா காட்சியமைப்புக்கு ஆட்சேபனை கிளப்பினார். நடிக்க பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே மறுத்து இருக்கலாம். நடித்து, முடித்துவிட்டு காட்சிகளை நீக்க சொல்வது வியப்பாக இருக்கிறது. படத்தில் படுக்கையறை காட்சிகளை எடுக்கவில்லை.  பாக்யஸ்ரீயை ஆபாசமாகவும் காட்டவில்லை. தற்போது எனக்கு போனில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. பெரும் தொகை கொடுத்தால் போலீசில் அளித்த புகார் வாபஸ் பெறப்படும் என்று மர்ம நபர்கள் பேசுகின்றனர். போலீசாரிடம் உண்மை விவரங்களை மனுவாக எழுதி கொடுத்துள்ளேன்”, இவ்வாறு படஅதிபர் ரவிதேவன் கூறினார்[6]. இதை அப்படியே இன்னொரு இண்மைதளம் வெளியிட்டுள்ளது[7].

 

Kama sutra condom Puja Bedi

Kama sutra condom Puja Bedi

முதலிரவுக்கு  படுக்கை  அறையில்  டம்ளரில்  பால்  கொண்டு  செல்வதற்கு  பதில்,   அந்த  நிறுவன  காமசூத்ரா  மாத்திரைகளை  எடுத்து  செல்வது  போன்று  காட்சியை  எடுத்தோம்: சரிதான், அதற்குப் பிறகு, என்ன காட்சிகள் எடுத்தார்கள்? இங்கு யார் சொல்வதை எடுத்துக் கொள்வது? தினத்தந்தியில் வெளியிட்டுள்ளது போல அந்த காட்சியோடு நிறுத்திக் கொண்டார்களா அல்லது அதற்குமேல் என்ன காட்சிகள் எடுத்தனர் என்பது யாருக்குத் தெரியும்? “காமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா” என்று ரவி தேவன் கேட்கலாம், ஆனால், அது ஆபாசம் தான் என்று ஏற்கெனவே தஎரிந்த விசயமாக உள்ளது. நடிக்க வந்துவிட்டால், உடம்பைக் காட்டவேண்டும், அறியாத ஆண்மகன் தொட்டால், கட்டிப் பிடித்தால் அதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளவேண்டும். பதிலுக்குக் கட்டிப் பிடி, அவனைப் பிடித்துத் தொங்கு, அவன் மேலே ஏறி உட்கார், கட்டிப் பிடித்து புரளு என்றெல்லாம் சொன்னாலும் நடிக்க வந்த பெண்கள் செய்யத்தான் வேண்டும்.வைடுப்பைக் காட்டு, தொப்புளைக் காட்டு, மார்புப் பிளவைக் காட்டு, மார்பகங்களை ஓரளவிற்கு காட்டு என்றெல்லாம் சொன்னாலும், அதற்கேற்றது போல ஆடைகளை அணிந்து கொண்டு பாட்டுப் பாடி டூயட் ஆடினாலும், ஆபாசம் தெரியத்தான் செய்கிறது. ஆகவே, இங்கு ரவி தேவன், நிர்மலா, பாக்யஶ்ரீ முதலியோருக்கு ஒன்றும் தெரியாது என்று எடுத்துக் கொள்ளலமா அல்லது ரவி தேவன், வேண்டுமென்றே அப்படி மாற்றி வைத்து படம் எடுத்தாரா?

 

Kohinoor condom ad.for what

Kohinoor condom ad.for what

காம சூத்ரா கான்டோம் / ஆணுறை விளம்பரப் படங்கள்: ஏற்கெனவே “காமசூத்ரா” கான்டோம் / ஆணுறை விளம்பரத்தில் பெரிய-பெரிய நடிகைகள் எல்லோரும் நடித்துள்ளார்கள். நிர்வாண போஸ் கொடுத்த பூஜா பேடி[8], ஸ்வேதா மேனன் போன்றோர் எல்லோரும் உணர்ச்சி தூண்டும் வகையில் நடித்துள்ளார்கள்[9]. பூஜா பேடி மற்றும் மார்க் ராபின்ஸன் [Pooja Bedi and Marc Robinson] இவர்களின் “காம சூத்ரா” விளம்பரம் மிகவும் ஆபாசமாக இருந்தது. பச்சையாக செக்ஸ் / உடலுறவுக் காட்சிகளை பிரதிபலித்தது. இதை எதிர்த்தபோது, திரையில் காட்டாமல், அச்சில் / சஞ்சிகைகளில் மட்டும் போட்டுக் கொள்கிறோம் என்று சமரசத்தில் முடிந்தது. 1991ல் “டெபோனைர்” என்ற சஞ்சிகை அட்டைப் படமாக போட்டபோது, சில நாட்களிலேயே எல்லா பிரதிகளும் விற்றுவிட்டனவாம். இதற்குப் பிறகு அனு அகர்வால் மற்றும் விவேக பாபாஜி ஜோடி [ Anu Agarwal and Viveka Babajee] அத்தகைய விளம்பரங்களில் தோன்று காமை இச்சையைத் தூண்டினர். வியாபாரம் பெருகியது, செக்ஸும் பெருகியது. இப்பொழுது கூட, இணைதளங்களில் அவை உள்ளன, அவற்றைப் பார்க்கும் எவரும் அதிலுள்ள ஆபாசத்தை, அசிங்கத்தை, கீழ்த்தரமான பாலியல் / செக்ஸைத் தூண்டும் போக்கை எளிதாக கண்டு தெரிந்து கொள்ளலாம்.

 

பூஜா பேடி காம சூத்ரா விளம்பரம் 1991.

பூஜா பேடி காம சூத்ரா விளம்பரம் 1991.

பட-அதிபர் / டைரக்டரின் மறுப்பு வாதங்களிலும் பல கேள்விகள் எழுகின்றன: அவை விவாதத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

 

பூஜா பேடி காம சூத்ரா விளம்பரம் 1991

பூஜா பேடி காம சூத்ரா விளம்பரம் 1991

கே. சி. ரவி தேவனின் வாதம்

எழும் கேள்விகள் / சந்தேகங்கள்

 “‘காமசூத்ரா’ விளம்பர படம் ஒன்றை எடுத்து தரும்படி, மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று என்னை அணுகியது. இவ்விசயத்தை நிர்மலா-பாக்யஶ்ரீ இவர்களுக்குத் தெரியப்படுத்தப் பட்டதா?
அதன்படி, அதற்கான கதையை தயார் செய்தோம். கதை விவரிக்கப்பட்டதா? ஒப்புக்கொண்டார்களா?
பின்னர் நடிகை பாக்யஸ்ரீயை விளம்பர படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தோம். ஆந்த ஒப்பந்தந்தில் உள்ள சரத்துளில் இவ்விவகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளனவா?
முதலிரவுக்கு படுக்கை அறையில் டம்ளரில் பால் கொண்டு செல்வதற்கு பதில், அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம். “காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது” என்பது சொல்லப்பட்டதா?
நடிகை பாக்யஸ்ரீ தாயார் நிர்மலாவின் சம்மதம் பெற்ற பின்னரே, படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். சம்மதம் தெரிவித்தார், என்றால் பிறகு எதிர்ப்பு ஏன் வரவேண்டும்?
“நடிகை பாக்யஸ்ரீ தாயார் நிர்மலாவின் சம்மதம் பெற்ற பின்னரே, படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்” இவர் இந்த விவகாரங்களை, அதாவது இது “காம சூத்ரா” விளம்பரம் தான் என்று சொல்லி எடுத்தாரா?
ஆனால் அதன்பிறகு நிர்மலா காட்சியமைப்புக்கு ஆட்சேபனை கிளப்பினார். “காட்சியமைப்புக்கு ஆட்சேபனை” எனும்போது, இவர் நடிப்பிற்காக என்று நியாயப்படுத்தினாரா?
நடிக்க பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே மறுத்து இருக்கலாம். “காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை விவகாரத்தைச் சொல்லிருந்தால், மறுத்திருப்பார்கள்!
நடித்து, முடித்துவிட்டு காட்சிகளை நீக்க சொல்வது வியப்பாக இருக்கிறது. விவகாரம் வேறுவிதமாக இருக்கும் போது, பெண்கள் என்ன செய்வார்கள்?
படத்தில் படுக்கையறை காட்சிகளை எடுக்கவில்லை. அந்த படமே – தினத்தந்தியில் வெளியாகியுள்ள – பொய் என்று எடுத்துக் காட்டுகிறது.
பாக்யஸ்ரீயை ஆபாசமாகவும் காட்டவில்லை. அந்த வீடியோவைப் பார்த்தால் தான் தெரியும்.
தற்போது எனக்கு போனில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. பெரும் தொகை கொடுத்தால் போலீசில் அளித்த புகார் வாபஸ் பெறப்படும் என்று மர்ம நபர்கள் பேசுகின்றனர். இதெல்லாம், வேறு விவகாரம், போலீஸ் விசாரித்து உண்மை என்னவென்று சொல்வார்கள்.
போலீசாரிடம் உண்மை விவரங்களை மனுவாக எழுதி கொடுத்துள்ளேன். முழுவதுமாக, தினத்தந்தி வெளியிட்டுள்ளதா என்று தெரியவில்லை.

 

© வேதபிரகாஷ்

17-03-2014

 

 


[1] Ravidevan told Bhagyashree’s mother Nirmala that the actress will have to rehearse for the movie and asked them to come at a house in Kothari Nagar in Valasaravakkam, on Thursday. Nirmala claimed that two scenes in a bride seeing ceremony were shot with Bhagyashree and a dupe. After the shoot, the director told her to proceed for the wedding night scene.

http://m.newindianexpress.com/chennai/279006

[2] வேதபிரகாஷ், செக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது!,

https://evilsofcinema.wordpress.com/2014/03/15/sex-tablets-business-advertisement-degrading-womanhood/

[3] “My daughter was handed over a box containing libido pills (to enhance sex drive), which she was asked to wrap it in her saree to be taken out while nearing the man sitting on the bed,” said Nirmala, adding that she tried to stop the shoot. However, the crew insisted that she should act that scene out. “We fear that they may use the clipping for the promo of the tablets or in porn films. They filmed the sequence by force. This can tarnish my daughter’s image,” Nirmala claimed and charged that the crew refused to allow them to watch the scenes.

http://m.newindianexpress.com/chennai/279006

[4] Nirmala said that the director refused to show them the scenes after they were shot. She also said she saw another crew in the same house shooting some other intimate scenes during the day.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Tricked-into-shooting-shady-scenes-Actor/articleshow/32031589.cms

1, தினத்தந்தி, ‘‘ஆபாசமாகபடம்எடுக்கவில்லை’’ நடிகைபாக்யஸ்ரீதாயார்புகாருக்குபடஅதிபர்ரவிதேவன்மறுப்பு

, சென்னை, 17-03-2014.

[8] The Kamasutra condom ads broke away from traditional advertising in this category with a bold and controversial approach. The ads, featuring Pooja Bedi and Marc Robinson became an instant hit. But the sensual images had the so-called moral brigade up in arms. Finally, the campaign was restricted to print. The October 1991 issue of Debonair magazine sold out in a matter of days. The reason, the issue carried ads, featuring Pooja Bedi and Marc Robinson, for the just-launched Kamasutra Condoms. The Pooja Bedi Kamasutra campaign was followed by campaign featuring famous models like Anu Agarwal and Viveka Babajee. Read more at:http://goodtimes.ndtv.com/PhotoDetail.aspx?Page=8&ID=815&cp

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (2)!

ஜனவரி 13, 2014

நமீதாவை வைத்துக் கொண்டு கவர்ச்சி அரசியல்-செய்தி தயாரிக்கும் தமிழ் ஊடகப் பித்தர்கள் (2)!

நமீதா திமுகவின் பீரங்கி

நமீதா திமுகவின் பீரங்கி

நமீதாவைவைத்துக்கொண்டுகவர்ச்சிஅரசியல்செய்திதயாரித்தவிதம்: திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நமீதா, அங்கு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அரசியல் கட்சி ஒன்றில் சேர இருப்பதாக தெரிவித்தார் என்று “தமிழ் இந்துவே” செய்தியை நமிதாவின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது[1]. அப்போது சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா என்று நமீதா கேட்டதாக செய்திகள் வெளியானது என்றும் அது கூறுகிறது. இதற்கு நமீதா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் என்றும் நீட்டுகிறது. சரத்குமார் கட்சி வைத்திருக்கிறாரா? என்று  சரத்குமாரின் கட்சியை கிண்டலடித்ததாக மீடியாவில் வந்த செய்திக்கு மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார் நமீதா[2]. இதுபற்றி நமீதா ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் என்று அளக்கிறது இன்னொரு ஊடகம்[3]. முன்னர் அவர் அரசியலில் சேருவார் என்று செய்திகளை வெளியிட்டன[4]. “அரசியலில் கலமிரங்கவிருக்கும் நமீதா” என்று வீரகேசரி தலைப்பிட்டுள்ளது[5]. விகடன் தனக்கேயுரிய பாணியில் “அரசியலில் குதிக்கிறார் நமீதா”என்கிறது[6]. தினத்தந்தி, தினகரன்[7], தினமலர் என்று யாரும் நமிதாவை விட்டு வைக்கவில்லை. இந்த கிசுகிசு முடிவதற்குள், இதோ இன்னொன்றை தயார் செய்து விட்டனர்.

Khushboo-in-DMK-decided-stage-managed

Khushboo-in-DMK-decided-stage-managed

திமுக சார்பாக நமீதா பிரச்சாரம்: திமுகவில் சேர்ந்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் நடிகை நமீதா பிரசாரம் செய்யப் போகிறார். விரைவில் இதற்காக அவர் திமுகவில் முறைப்படி சேருவார். இதுதான் இப்போது லேட்டஸ்டாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான செய்தி[8] என்று “டமிள்-ஒன்-இந்தியா” குண்டு போட்டுள்ளது. எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் ரொம்ப சீரியஸாக இது பரவி வருகிறது, என்று சேர்த்தும் சொல்லியிருக்கிறது. “சென்னை ஆன்லைன்” விட்டுவிடுமா, இதோ – வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் நடிகர், நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில், நடிகை நமீதா திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே நமீதா, தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதாகவும், தான் எந்த கட்சியில் சேரப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார், என்று கூட்டியுள்ளது[9]. வழக்கமாக குஷ்புதான் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக களம் இறக்கப்படுவார். இந்த முறை நடிகை நமீதாவை களம் இறக்க திமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்த பரபரப்பு பேச்சு சொல்கிறது. ஏற்கனவே கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரா நமீதா இருக்கிறார். விரைவில் அவர் திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியின்போது நான் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அடுத்த மாதம் நான் சேரவுள்ள கட்சியின் பெயரை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். எனவே அடுத்த மாதவாக்கில் நமீதா திமுகவில் சேரக் கூடும் என்று பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது[10].

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

கலக்கும்-நமீதா-கலங்கும்-திமுக

குஷ்புவா, நமீதாவாதாத்தாகருணாநிதியின்தேர்வு: இப்படி “சரியான போட்டி” வீரப்பன் ஸ்டைலில், இந்த இரண்டு குண்டு நடிகைகளும் இறக்கப்படுவது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. குஷ்பு அப்பொழுது, நான் ஜெயலலிதாவுக்கு எதிராகப் போட்டியிடுவேன் என்று கூட பெரிய குண்டைப் போட்டுப் பார்த்தார். ஆனால், அது புஸ்ஸாகி விட்டது. இப்பொழுது ஸ்டாலின்-அழகிரி சண்டையில் நமீதாவை சேர்த்தால், ஒருவேளை சமமாகி விடும் போலிருக்கிறது. ஆமாம், ஸ்டாலினுக்கு குஷ்பு, அழகிரிக்கு நமீதா என்று பிரசாரம் செய்தால், சகோதரப் பாசம் வந்து விடலாம்.

கலைஞர்_மானாட_மயிலாட

கலைஞர்_மானாட_மயிலாட

கொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு! அழகான, கவர்ச்சிகரமான, உடலைக் கட்டி நடிக்கும் நடிகைகள் எல்லாம், இப்பொழுது திமுக பக்கம் தான்! அவர்கள் நடந்து கொள்ளும் விதமோ, மிகவும் விசித்திரமாக இருக்கிறது. நேற்று, “கிஸ்,கிஸ், கிஸ்கால்……………….”, இரும்பு நடிகையால் பிரச்சினையாம்! குஷ்பு இட்லி சாப்பிட்டு வேலைக்கு வந்த விமானநிலைய அதிகாரிகளுக்கு, இந்த, “கிஸ்,கிஸ், கிஸ்கால் ” நடிகையால் வந்தது பிரச்சினை! நமீதாவுக்கு கொடுக்கப்பட்ட முதல் மரியாதையைப் பார்த்து கால் கடுக்க நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த பயணிகள் கொந்தளித்து விட்டனர். நாங்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கிறோம். நடிகை வந்தால் வரிசையில் நிற்காமல் சிறப்பு விருந்தினரைப் போல் உபசரித்து அனுப்பி வைக்கிறீர்கள். இதற்கு எந்தச் சட்டத்தில் விதி வகுக்கப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் சண்டை பிடித்தனர். இதை எதிர்பாராத பாதுகாப்பு வீரர்கள் தயவு செய்து இதை பெரிதுபடுத்த வேண்டாம். இனிமேல் இப்படி நடக்காது என்று கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். குஷ்புவோ குஷியில் இருக்கிறார், இருந்தார், ஏனெனில் திமுகவில் சேர்ந்து விட்டார்[11].

குஷ்பு பேய்!

குஷ்பு பேய்!

குஷ்புவிடம்  ஒழுக்கத்தை  கற்றுக்கொள்ளுங்கள்  இளம் நடிகைகளுக்கு கேயார் அறிவுரை[12]: இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார்,  “இப்போது   இருக்கும்   இளம் நடிகைகள்   யாரும்  தங்களது பட புரொமஷன்களுக்கு  கூட வருவதில்லை.  இது மிகவும் கண்டிக்கத் தக்கது.  இதோ  இங்கு இருக்கும்  குஷ்புவை  பற்றி  நான்  சொல்லியாக  வேண்டும்நான் அவரை  ஹீரோயினாக  வைத்து  படங்கள் தயாரித்துள்ளேன்.  அவர்  ஒரு  படத்தின் புரொமஷன்களுக்கு  கூட வராமல்  இருந்தது கிடையாதுஅதேமாதிரி  அவர்  நடிக்கிற  படமாக இருந்தாலும் சரி,  இல்லாத படமாக  இருந்தாலும் சரிவிழா என்று அழைத்தால்  உடனே வந்து விடுவார்அதான்   குஷ்பு.  இன்றைய புது நடிகைகள்  எல்லாம் அவரைப் பார்த்து  அந்த  ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்”,  என்றார்[13]. இனிமேல் நமீதாவிடம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று மாற்றிப் பேசுவார் போலும்!

வேதபிரகாஷ்

© 13-01-2014