Posts Tagged ‘செல்ந்பி’

அமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)  

பிப்ரவரி 12, 2018

அமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்கைதுகளும் (2)

Amala Paul - aiming at what-3

நானும் பாதிக்கப் பட்டேன்எவ்வாறு அமெரிக்க நடிகைகள் மற்றும் இந்திய நடிகைக்களுக்கு ஒரே மாதிரி பொறுந்தும்?: பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். இதை ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட நடிகைகள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியதை அடுத்து, அதற்காக சமூக வலைத்தளத்தில், நானும் பாதிக்கப்பட்டேன் என்ற அர்த்தத்தில் மீ டூ (#MeToo) என்ற ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ இந்த ஹேஷ்டேக்கை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏராளமானோர், அதில் தங்கள் பாதிப்புகளை கூறிவருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை, நடிகை அமலா பாலும் பயன்படுத்தியுள்ளார்[1]. அமெரிக்க சமூகம், சமூதாய பழக்க-வழக்கங்கள், பெண்ணிய விவகாரங்கள் முதலியன இந்தியாவை விட முழுமையாக மாறுபட்டதாகும். நடிகைகள் என்று வந்தால், ஒப்பீடே செய்ய முடியாது. போர்ன்-கொக்கோக-நிர்வாண படங்களில் நடிப்பதே அங்கு நிதர்சனமாக உள்ளது. கற்பைப் பற்றி எந்த நடிகையும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனான பட்ட குஷ்புவே, இங்கேயே அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று சொன்னதும், ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற நடிகைகளின் கதக்களை இங்கு விவரிக்க வேண்டிய தேவை இருக்காது. ஆகவே, இதெல்லாம், ஏதோ பெண்ணியப் போராளிகள், பெண்ணுரிமை வீராங்கனைகள் ரீதியில் விளம்பரப் படுத்திக் கொள்ள முடியாது. உண்மையில் இவர்களால் பாதிக்கப்படுவது, சீரழிக்கப்படுவது இந்திய சமுதாயம் தான்!

Amala Paul - aiming at what-2

பிரச்சினைகளில், விவகாரங்களில் சிக்கிக் கொள்வது விளம்பரத்திற்கா அல்லது வேறு விசயமா?: அவர் உபயோகப் படுத்திய “மாமிசத் துண்டு” [a meat loaf] என்ற வார்த்தையே திகைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு இவர் வெறுத்து விட்டாரா அல்லது கதிரேசன் பேசியது அப்படி இருந்ததா? அல்லது இப்ராஹிம் யாதாவது சொன்னாரா? ஒருவேளை மலேசியாவுக்கு சென்றால், யாதாவது நடக்கும் என்று பயந்தாரா? ஒரு கெட்ட, மோசமான, கேவலமான உதாரணம் யாரும் தனக்கு உதாரணமாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள். “உயர்வு நவிற்சிக்காகக்” கூட அத்தகைய பிரயோகம் வராது. அப்படியென்றால், அத்தகைய சகவாசமே இவர்களுக்கு இருந்திருக்கக் கூடாது. பார்ப்பவர்கள் எல்லாம் “கண்ணகி” என்று நினைத்து, மரியாதையுடன் பார்க்க வேண்டும்.  ஆனால், இன்றைய நடிகைகள் அப்படியா உள்ளார்கள்? பார்த்தால் தொட்டுவிட வேண்டும் என்ற ரீதியில் தானே அரைகுறை ஆடைகளுடன், ஆபாசமான குத்தாட்டங்கள் ஆடி வருகிறார்கள். திரைப்படப் பாடல்கள், வசனங்களே அவர்களை சோரம் போன பெண்களைப் போலத் தானே விவரிக்கிறது. அவற்றிற்கெல்லாம், ஒப்புக் கொண்டு தான் ஆட்டம் போட்டு வருகிறார்கள், கோடிகளை அள்ளிச் செல்கிறார்கள். இவரது புகைப்படங்களே அதை மெய்ப்பிக்கின்றனவே?

Amala Paul letter to media- about tax evasion-1

வரியேப்பு பற்றி டிவிட்டரில் விலக்கம் கொடுத்து வெளியிட்ட கடிதம்.

Amala Paul letter to media- about tax evasion-2

தொப்புள் விவக்காரமும், பெண்ணியமும்: அமலாபால் “திருடுப் பயலே-2” படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். “படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது,” என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அப்படியென்றால் காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். மற்றதைக் காட்டினால் என்னாகும் என்று யோசித்திட்ருக்க வேண்டும். ஆனால், செல்ந்பிக்கள் மூலம், அவரே அரைகுறை உடையுடன் தனது உடலைக் காட்டி விட்டார். இப்பொழுதெல்லாம் சினிமாக்காரர்கள் ஆராய்ச்சியிலும் இறங்கி விட்டார்களே. வைரமுத்துவை விட்டாலும், “தொப்புள் ஆராய்ச்சியில்” இறங்கி விடுவார். கமல் ஹஸனிடம் சொன்னால், ஹார்வார்டில், இதைப் பற்றி, பிரமாண்டமாக, ஒரு சொற்பொழிவே கொடுப்பார்! இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அமலாபாலை எடிட்டர் லெலின் பொதுமேடையில் கழுவி ஊற்றியுள்ளார். தொப்புள் சர்ச்சை குறித்தும் பாபி சிம்ஹா நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது நடுங்குவார் என கூறியதை குறிப்பிட்டு, இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்வாரா அமலாபால் என்று பேசியிருக்கிறார். அப்பொழுது கோபம் வரவில்லையா?

Amala Paul - selfie

அமலா பாலின் செல்பி ஆபாசமும், டுவிட்டர் ஹேஷ்டேகும்: ரசிகர்களை கவர்வதற்காக விளம்பரங்களில் நடிகைகள் கவர்ச்சியை அள்ளிவிடத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கு கவர்ச்சி என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். மார்பங்களைக் காட்டித்தான் முன்னேறி வருகிறார்கள். அத்தகைய அப்பட்டமான காட்சிகளுக்கு எந்த பெண்ணிய நடிகையும் எதிர்த்ததில்லை. போட்டிப் போட்டுக் கொண்டுதான், காட்டி-ஆட்டி வருகிறார்கள். இயக்குநர் விஜய்யை பிரிந்த அமலாபால் மீண்டும் நடிப்பை தொடர்கிறார். இந்த நிலையில் கவர்ச்சிக் குளியலில் இறங்கியுள்ளார் அமலா பால் என்று நீட்டுகிறது அந்த ஊடகம். முதற்கட்டமாக தொப்புள், முத்தக்காட்சிக்கு கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளார் அவர். எந்த படத்தில் முத்தம் கொடுத்தார் என்று தெரியவில்லை. போதா குறைக்கு, இவரே அரைகுறை ஆடைகளில் போஸ் கொடுத்து செல்ஃபி படங்களை வெளியிட்டுள்ளார். திரைப்பட சான்ஸுகளுக்கு அவ்வாறு செய்கிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இப்படி தாராளமாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளனவே, இவையெல்லாம் அவரது பெண்மையைப் பாராட்டும்-போற்றும் விதத்திலா உள்ளன? அவர்களை எதிர்த்து ஒன்றும் கூறவில்லையே? “ஹேஷ்டாக்” போடவில்லையே? அப்படியென்றால், அவையெல்லாம் தொழிலுக்கு ஆதாயம், உதவும், விளம்பரம் என்று நினைத்து, ஒப்புக் கொண்டு அமைதியாமார் போலும்!

Amala Paul - aiming at what

பி. ஆங்கிலம் படித்த நவநாகரிகப் பெண்மணி சட்டங்களை மீறலாமா, கைதாகலாமா?: இதெல்லாம் அந்த நடிகைக்குத் தான் தெரியும். விவாகரத்து போன்ற பிரச்சினைகளுக்குப் பிறகு, கார்-இறக்குமதி வரியேப்பு பிரச்சினை வந்தது[2]. பொய்யான பெயர், முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கி ரூ 20 லட்சம் கஸ்டம்ஸ் வரியேய்ப்பு செய்தததால், ஜனவரி 28, 2018 அன்று கைது செய்யப்பட்டு, பிறகு “கன்டிஸனல்” பெயிலில் வெளியே வந்தார்[3].. மெத்தப் படித்த [பி.ஏ ஆங்கிலம்], விவகாரம் அறிந்த இவர் வரிய்யேப்பு செய்ய வேண்டிய அவசியம் அவரது மனப்பாங்கைக் காட்டுகிறது என்றே தோன்றுகிறது[4]. அண்மையில் சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்ததாக நடிகை அமலாபால் மீது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நடிகை அமலாபால் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[5]. எப்படி இருந்தாலும், நடிகைகள் இவற்றையெல்லாம் விளம்பரத்திற்கு செய்கிறார்களா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்த செய்கிறார்களா அல்லது உண்மையிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் செய்கிறார்களா என்று தெரியவில்லை. செய்தி படிக்கும் ரசிகர்களுக்கு, இது ஒரு ரோமாஞ்சன செய்தியாக இருக்கும் என்றுதான் தெரிகிறது. நடிக-நடிகையர் பொது மக்களின் வாழ்க்கையில் பலவிதங்களில் தலையிடுவதால், முதலில் அவர்கள் யோக்கியமாக, ஒழுக்கமாக மற்றும் முன்னுதாரமாக இருக்க வேண்டும், இல்லையென்றால், அவரவர்-தொழில் செய்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். சமூக விசயங்களில் தலையிடக் கூடாது. அவர்கள் தலையிட்டால், பொது மக்களும் தலையிடத்தான் செய்வார்கள், கேள்விகளும் கேட்கப்படத்தான் செய்யும். ஆகவே, அவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லாததினால், இனி பொது மக்களுக்கு அறிவுரை கூறுவதை இவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

© வேதபிரகாஷ்

12-02-2018

Amala Paul -twitter photo

அமலா பாலின் டுவிட்டர் போட்டோ.

Amala Paul - kissing

[1] https://tamil.filmibeat.com/heroines/he-was-ready-trade-me-off-like-meatloaf-says-amala-paul-051757.html

[2] தமிழ்.ஒன்.இந்தியா, அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  டான்ஸ் மாஸ்டர் ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த  போலீசார்,  Updated: Wednesday, January 31, 2018, 19:55 [IST]

 

[3] Times of India, Amala Paul arrested and released on tax evasion case, TNN | Jan 29, 2018, 14:38 IST.

[4] Amala Paul was arrested on Sunday in a tax evasion case for allegedly buying a luxury car in Pondicherry by producing forged documents. However, the actress was immediately released on conditional bail but she must co-operate for the investigation when summoned. Earlier, Amala Paul claimed that she has property in Pondicherry and bought the car only by following the legal procedures. But in the investigation, crime branch found that the documents furnished by Amala were forged. Previously, two Malayalam actors Fahad Faasil and Suresh Gopi were also booked under similar tax evasion charges.

https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/amala-paul-arrested-and-released-on-tax-evasion-case/articleshow/62693985.cms?&utm_source=Articleshow&utm_medium=Organic&utm_campaign=Related_Stories

[5] https://tamil.oneindia.com/news/tamilnadu/actress-amala-paul-sexual-harassment-on-dance-master-310028.html