Posts Tagged ‘சேர்ந்து வாழ்தல்’

கமல்-கவுதமி விவகாரம் – அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள், அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்? (3)

நவம்பர் 2, 2016

கமல்கவுதமி விவகாரம்அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள், அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்? (3)

gautami-says-goodbye

கமலின் நிஜவாழ்க்கைக் கலவி அனுபவங்கள் கொக்கோகமாகவே வெளிப்படுகின்றன: பாட்டெழுதுவது கமலுக்குப் புதிதில்லை… ஏற்கெனவே கவிதைகள் புனைந்திருப்பவர் அவர்.  ஹேராம் போன்ற படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். சற்று இடைவெளிக்குப் பிறகு மன்மதன் அம்பு படத்துக்காக நான்கு பாடல்களை எழுதியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்த படத்தில், கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் கதைப்படி, அவர் நிஷா என்ற பெயர் கொண்ட சினிமா நடிகை. விரக்தியில், அவர் கவிதை எழுதுகிறார். அந்த கவிதையை (பாடலை) நிஜமாக எழுதியவர், கமல்ஹாசன்.

கமலின் அந்தப் பாடல்[1] நடிகை / சக்களத்தி விளக்கம்
கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை
ஸ்ரீவித்யா இந்த பாடலை உன்னிப்பாகப் படிக்கும்போது, காமரசம் மேலோங்கி இருந்தாலும், அதன் பின்னணியில், கமல் தன்னுடைய வாழ்க்கையில் அனம்-உடல் போராட்டங்களுடன் சந்தித்த, எதிர்கொண்ட பெண்களைக் குறித்து எழுதியுள்ளது போலத்தெரிகிறது. அதுமட்டுமல்லாது, அந்த பாடல் வரிகளில், கிரமத்தில், அவர்களது குணாதிசயங்களையும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது எனலாம்.
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
ஸ்ரீபிரியா
கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை
உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை
ஸ்ரீதேவி
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்
கூட்டல் ஒன்றே குறியென்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
சரிகா
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
வாணி கணபதி
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்று
இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.
சிலுக்கு ஸ்மிதா / சிம்ரன்

கமலைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இவ்விவகாரங்கள் எல்லாம் தெரிந்திருந்தன.

shruti-haasan-gautami-fight

கவுதமிகமல் பிரிவுக்குக் காரணம் நடிகையா, காதலா, மகளா, நஷ்டமா?: ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 05-11-1954ல் பிறந்த 63வயதில் உள்ள கமல் ஹஸனுக்கு காதல் வருமா, கத்தரிக்காய் காய்க்குமா என்பது பிரச்சினை அல்ல, இந்த வயதிலும்  அதெல்லாம் தேவையா ஏன்பது தான் கேள்வி. கமல்ஹாசனையும், அவரது காதல் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது[2]என்று தமிழ் ஊடகம் நக்கலடிக்கிறது. ஸ்ரீவித்யாவுடன் இணைத்து பேசியதில் ஆரம்பித்து, சிம்ரன், கவுதமி என வந்து நிற்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர் தனது காதலி/மனைவிகளை பிரியும்போதெல்லாம், அதற்கு காரணமாக இருந்தது இன்னொரு, காதல்தான்[3] என்று கூட்டிச் சொல்கிறது. “பார்த்தச்சாரதி”யானவர் இவர் இப்படி பார்த்து ஓட்டுகிறார் எனும் போது, இனி யார் மாட்டிக் கொள்ளப் போகிறாரோ என்று தெரியவில்லை.

kamal-gautami-break

சந்திரபாபு பாடிய பாட்டு, கமலின் வாழ்க்கைக்கு பொறுத்தமாக உள்ளது இதனை விளக்க வேண்டிய அவசியம் இல்லை!

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மனம் முடிப்பதில்லை

மனம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.

© வேதபிரகாஷ்

02-11-2016

gautami-says-goodbye-to-kamal-hassan

[1] மன்மதன் அம்பு: கமல் பாட்டும்…..வாலியின் பாராட்டும்!, வெள்ளிக்கிழமை, நவம்பர் 19, 2010, http://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/19-vaali-appreciate-kamal-manmathan-ambu-lyrics.html

[2] தமிழ்.ஒன்.இந்தியா, கமல்கவுதமி திடீர் பிரிவுக்கு.. அந்த பிரபல நடிகைதான் காரணமா?, Updated: Tue, Nov 1, 2016, 23:52 [IST]

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-is-the-reason-behind-the-split-between-kamal-gautami-266135.html

 

நடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு?

ஒக்ரோபர் 19, 2016

நடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு? 

preity-tabu-shushmita-urmila-etcபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, நர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்தில் தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.

nargis-neha-parveen-asha-suraiyya-nanda

கீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

tamanna-namita-kausalya-anushka-nayan-shreyaசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

திருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.

trisha-X

trisha-X

திருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.

Gautami, Kamal and Akshara

Gautami, Kamal and Akshara

திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.

Lakshmi Rai

காதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.

© வேதபிரகாஷ்

18-10-2016

[1] pinkvilla.com, 11 Bollywood actresses for whom marriage isn’t the only thing in life, February 12, 2016.

[2] http://www.pinkvilla.com/entertainment/discussion/349643/11-bollywood-actresses-whom-marriage-isn-t-only-thing-life

[3] http://www.mtvindia.com/blogs/general/just-in/7-bollywood-divas-whore-willing-to-sacrifice-their-career-for-marriage-52191842.html

[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1629730

[6] புதியதலைமுறை, திருமணமா? அலறும் தமன்னா!, பதிவு செய்த நாள் : April 24, 2016 – 07:41 AM, மாற்றம் செய்த நாள் : April 24, 2016 – 07:44 AM

[7] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/cinema/21/20321/rumours-about-tamanna-marriage/C21

[8] http://m.dinakaran.com/cdetail.asp?Nid=9457

[9]  தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.

[10]http://www.tamilcinemafire.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9/

சினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்?

ஓகஸ்ட் 6, 2013

சினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம்,  காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்?

பிரஸ்மீட்,  பேட்டிவிளக்கம்: சேரன் என்ற நடிகர் தனது மகளின் வாழ்க்கைப் பற்றி தந்தையாக கவலைப்படுகிறாரோ இல்லையோ, நடிகரைப் போலத்தான் விளம்பரத்துடன் பேட்டிகள், புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். போதாகுறைக்கு, நடிகையரின் கற்புபற்றி விமர்ச்சித்த தங்கர் பச்சானுடன் முன்பு, இரே ஒரு புகாரில் சிக்கிக் கொன்டதை மறந்து விட்டார் போலும். இப்பொழுது இன்னொரு அமீருடன் அத்தகைய பேட்டி கொடுத்துள்ளார். சேரனை ஆதரித்து ராமதாஸ் பேசியுள்ளார்[1]. இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பிரஸ் மீட் வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை டிவியில் லைவாகப் பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர். சந்துரு என்ற சந்திரசேகர் ஒரு பிரபல டிவி-நிகழ்சி நடனக்காரர். தனது மகள் தாமினி – சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்[2]. சேரன் பேசும்போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்” என்றார். ஆனால் அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். சேரனோ, “கெட்டவனுக்கு மகளை எப்படி கட்டித்தர முடியும்…………….மேலும் எனது மூத்தப் பெண்ணையும்[3] மயக்கப் பார்த்தான்”,  என்றும் பேசினார்[4].

அமீருடைய  ஒழுக்கத்தைப்  பற்றிய  பொன்  மொழிகள்: அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு……. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். ஒரு சினிமாக்காரன்,, அடுத்தவனைப் பற்றி இப்படி பேசலமா? ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும்? இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது? நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா? விஜயகுமார் மகள் விஷயத்தில், யாருக்கு யார் புருஷன், எந்த புருஷனுக்கு யார் மனைவி, குழந்தை யாருக்குப் பிறந்தது, யாருக்கு சொந்ந்தம், என்றெல்லாம் சண்டை போட்டுக் கொண்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.

காதலன்  குடும்பத்தினரின்  பதில்: இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர். இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் கூறியவை அபாண்டமான பழி, எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,” என்றார். சந்துரு கூறும்போது, “தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்,” என்றார்[5]. சேரனின் மகள் தாமினி இப்பொழுது சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்[6]. சந்துரு தாமினியின் நடன நிகழ்சியை ஜூன்.4, 2011 அன்று கண்டு காதல் வயப்பட்டாராம். சேரனிடம் சொன்னபோது, முதலில் ஓப்புக் கொண்டாராம், ஆனால், பிறகு சில ஆண்டுகள் காத்திரு என்றாராம்[7].

தந்தை  –  மகள்  பரஸ்பர  புகார்கள்: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர் சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[8]. இந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார் என்று முடிவு செய்வார்கள். இயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை மக்கள் மத்தியில் காண முடிகிறது. சேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

போலீசாரிடம்  முரண்பட்ட  புகார்கள்: அதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 01-08-2013 தேதி அன்று ஒரு புகாரை அதே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். 20 நாட்களில் முரண்பட்ட 2 புகார்களை தாமினி போலீசில் கொடுத்துள்ளார். இதற்கிடையில் இயக்குநர் சேரன், சந்துரு மீது தனியாக ஒரு புகார் மனுவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து கொடுத்தார். அந்த மனுவில், சந்துரு தவறான பழக்கம் உள்ளவர் என்றும், ஏற்கனவே இரண்டு, மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றும், எனவே அவரால் தனது மகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த 3 புகார் மனுக்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சேரன்,   தாமினி,  சந்துரு  கலந்து  கொண்ட  போலீஸ்  விசாரணை: சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சேரன், தாமினி, சந்துரு ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். தாமினியிடம் விசாரித்தபோது, அவர் திரும்ப, திரும்ப ஒரே கருத்தைதான் சொன்னார். காதலன் சந்துருவுடன் என்னை அனுப்பி வைக்க வேண்டும், அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும், நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், எனது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே முதலில் சந்துரு மீது புகார் கொடுத்து விட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். காதலன் சந்துரு, சேரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும், தாமினி மீது வைத்துள்ள காதல் உண்மையானது என்றும், எனவே தாமினியை தனக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

சேரனின்  தொடர்  குற்றச்  சாட்டுகள்: இயக்குனர் சேரன், மகளின் காதலை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மகளின் காதலன் தவறான பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்ப்பதாகவும் சொன்னார். ஒரு பெண்ணிடம் பழகி ஏமாற்றியதாக சந்துரு மீது சென்னை கே.கே.நகர் போலீசில் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது என்றும், எனது மூத்த மகளை கூட தனது காதல் வலையில் சிக்கவைக்க சந்துரு முயற்சித்தார் என்றும், அவர் நல்லவர் என்றால் ஒரு வருடம் காத்திருந்து, அவருக்கென்று ஒரு நல்ல தொழிலை அமைத்துக்கொண்டு வரட்டும், அதற்கு பிறகு வேண்டுமானால், எனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்றும், இப்போது எனது மகள் படிப்பை தொடர, என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதனால் தாமினியை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே யாருக்கும் இல்லாமல், தாமினியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். ஒரு நாள் காலஅவகாசம் கொடுத்து, நன்றாக தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும்படி, தாமினிக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

தமிழக  போலீசாருக்கு  காதல்  விவகாரங்களை  ஆராய்வது  தவிர  வேறு  வேலை  இல்லை  போலும்: நல்ல வேளை, கருணாநிதி இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும். ஆடிட்டர் ரமேஷ் கொலை விஷயத்தில் பரபரப்பாக சோதனைகள், கைதுகள் செய்யப் பட்டன. ஆனால், அதே வேகத்தில் அடங்கி விட்டது. இப்பொழுது, இந்த காதல்-மோதல் விவகாரம் வெளி வந்துள்ளது. இளவரசன் விஷயம் தாக்கமும் குறைந்து விட்டது. இனி இதை வைத்து ஒரு வாரம் ஓட்டுவார்கள் போலும்!

ஊடகங்களின்  அனுதாபம்,  பரிதாபம்: 2 வழக்குகள் பதிவு இதற்கிடையில் இந்த பிரச்சினையில் அதிரடி திருப்பமாக, தாமினி கொடுத்த 2 புகார்கள் அடிப்படையில் சேரன் மீது கொலை மிரட்டல் வழக்கும், சந்துரு மீது கொலை மிரட்டல் உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் சந்துரு வீட்டுக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி இன்று தெரியும். தாமினியின் ஆதரவு தனக்கு இருப்பதால், சந்துரு தரப்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். சேரனை பொறுத்தமட்டில் இப்போதைக்கு மகள் ஆதரவு அவருக்கு இல்லாவிட்டாலும், ஒரு தகப்பன் என்ற முறையில் அவர் பக்கம் அனுதாபமும், ஆதரவும் கூடுதலாக உள்ளது[9]. இதே ஊடகங்கள் 2004-06 வருடங்களில் சேரனின் மீதான கற்பழிப்பு புகார் பற்றி வரிந்து தள்ளின. ஊடகங்களின் உசுப்பி விடும் வேலை மற்றும் சினிமாக் காரர்களின் விளம்பர யுக்திகள் பற்றியே இவை அலசப்படுகின்றன.

சேரனின்  மீது  முன்பு கற்பழிப்  புகார் (2004): திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை குளிர்பானம் கொடுத்து கற்பழித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் சேரனிடம் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ரகமதுன்னிஷா. இவர் கடந்த 2004ம் ஆண்டு உறையூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னை எனது குடும்பத்தினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். திருச்சியில் சினிமா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த இயக்குனர் சேரனிடம் என்னை அனுப்பினார்கள். என்னைப் பார்த்த சேரன், சினிமாவில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். பின்னர் குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதன் பின்னர் நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னர் விழித்தெழுந்த போதுதான் அவர் என்னைக் கற்பழித்தது தெரிய வந்தது. அதன் பின்னர் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா கட்டியிருப்பதைப் போல தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சேலையை எனக்குப் பரிசாக சேரன் கொடுத்தார். அதன் பின்னர் சிலர் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று இயக்குனர் தங்கர்பச்சானிடம் அறிமுகப்படுத்தினர். அங்கு அவரும் என்னைக் கற்பழித்துவிட்டார் என்று தனது புகாரில் ரகமதுன்னிஷா கூறியிருந்தார்.

2006ல் மறுபடியும் விசாரணை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ரகமதுன்னிஷாவின் தாயார், சகோதரர் மற்றும் நண்பர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பாக திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போலீசார் சேரன், தங்கர்பச்சானிடம் விசாரணையும் நடத்தினர். இருவரும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்து பேட்டியும் கொடுத்தனர்[10]. ஆனால், சேரன், தங்கர் மீதான புகாரில் உண்மையில்லை என்று கூறிய போலீசார் அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை. சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டி எடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ரகமதுன்னிஷாவுக்கு திருச்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜரான ரகமதுன்னிஷா, ரகசிய வாக்குமூலம்கொடுத்துள்ளார். கடந்த 20-06-2006ம் தேதி இந்த வாக்குமூலத்தை ரகமதுன்னிஷா கொடுத்தார். அப்போது சேரன், தங்கர்பச்சான் மீதான தனது புகார்களை உறுதி செய்து கூறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் போலீஸார் மீண்டும் விசாரணைநிடத்தக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் திரையுலகில் மீண்டும் பரபரப்புஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனியார் தொண்டு அமைப்பின் பராமரிப்பில் இருக்கிறார் ரகமதுன்னிஷா என்பது குறிப்பிடத்தக்கது[11].

போலீசிடமிருந்து  கோர்ட்டுக்குச் சென்ற விவகாரம்: 05-08-2013 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தாமினி பெற்றோர்களுடன் செல்ல மறுத்ததால் வழக்கறிஞர் வீட்டிலேயே இருக்கும் படி ஆணையிட்டது[12]. சந்துருவின் தாயார் இந்த ஆள்கொணர்வு மனுவை தாக்குதல் செய்திருந்தார். இவ்வாறு, இந்நிகழ்சிகள் கிரிக்கெட் மாட்ச் கமன்டரி போல ஊடகங்கள் செய்திகளை, உடனுக்குடன் அள்ளி வீசுக்கின்றன. ஐபிஎல் ஶ்ரீனிவாசனைக் கூட மறந்து விட்டார்கள். மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் முழுங்கிவிட்டும் ஆளவிற்கு முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். ஆப்படியென்றால், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை அமுக்கப் பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

களவு – கற்பு முறைகள்,  விதிகள்,  சட்டங்கள் முதலியவற்றை மீறும் தமிழர்கள்,  இந்தியர்கள்: தனிப்பட்ட, கௌரமான சாதாரமான மனிதன் இத்தகைய விஷயங்களைப் பற்றி கூனிக் குருகி வெட்கம் அடைவான். அந்தரங்கள் அம்பலத்தில் அரங்கேற விரும்ப மாட்டான். சம்பந்தப்பட்ட பெண்கள் ஐங்குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு – பற்றி கவலைப் படுவர். நல்லவேலை, ஆண்களுக்கு அத்தகைய இருக்க வேண்டிய ஐங்குணங்கள் பற்றி சொல்லப் படவில்லை. தமிழ் புலவர்கள் அடலேறுகளை மடலேற வைத்து விட்டுவிட்டார்கள் போலும். தந்தை மகளை கட்டுப்பாட்டுடன் வளர்ப்பான். பாரம்பரியத்தின் படி, பொருத்தம் (தொல்காப்பியர் சொன்னபடி) பார்த்து கல்யாணம் செய்து வைப்பான். ஆனால், இன்று ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதற்கு யாரும் வருவதில்லை. நல்ல குணங்கள், பண்புகள் இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதில்லை.

வேதபிரகாஷ்

© 06-08-2013


[7] In her petition, Eswari Ammal submitted that her son fell in love with Dhamini, 20, on June 4, 2011 after witnessing her dance programme. When informed, Cheran had initially agreed for the marriage but later said the couple should wait for a couple of years.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Film-director-Cherans-daughter-case-reaches-HC/articleshow/21621677.cms

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (2)?

ஒக்ரோபர் 4, 2010

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (2)?

குறிப்பு: தனிப்பட்ட நபர்கள் முதலியோரை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஆனால், இவர்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், பல நேரங்களில் அறிவுரைக் கூறுவது, பல்கலைக்கழக்ச்ங்களில், ஏதோ பெரிய விஞ்ஞானி, அறிவாளி, மாமேதைகள் போல “டாக்டர்” பட்டங்கள் பெறுவது, கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வருவதால், அவர்களது உண்மைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்ளவேண்டிய நிலையுள்ளது. மேலும் அவர்கள் தமக்குத் தேவையில்லாத விஷயத்தில் கூட மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைகள் விடுவார்கள். அரசியில் என்று வந்துவிடும் போது, எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி……………..என்று பதவிகளுக்கு ஆசைப்படும்போது, மக்களின் வரிப்பணத்தில் வாழும்போது, அனுபவிக்கும்போது, அவர்களைப் பற்றி அம்மக்கள் அறிந்தே ஆகவேண்டும். ஆக, பகுதி-2 தொடர்கிறது[1].

கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள முயன்ற காஜா மைதீன்: 2004-2005களில் இந்த காஜா மைதீனைப் பற்றி பலவிதமான செய்திகள்: “கிடுகிடுத்துப் போயிருக்கிறது கோடம்பாக்கம், இப்படி சொல்கிறது, ஒரு செய்தி –  முன்னணி தயாரிப்பாளர் ஒருவரே கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயல, நம் கதி என்னாகுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் சிறு தயாரிப்பாளர்கள்.  தமிழ் சினிமாவில் பிரபமான பெயர் ரோஜா கம்பைன்ஸ் காஜாமைதீன். ‘பொற்காலம்’, ‘வாஞ்சிநாதன்’ திரைக்கு வரவிருக்கும் ‘பேரரசு’ போன்ற பல படங்களை தயாரித்தவர். கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை தயாரிப்பவரும் இவரே (15 July 2005). ஆனால் பைனான்ஸ் பிரச்சனையால் ‘வேட்டையாடு விளையாடு’ இன்னும் துவங்கப்படாமலே உள்ளது. இந்நிலையில் பைனான்சியர் ஒருவரிடம் 20 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் காஜாமைதீன். இதற்காக காஜாமைதீன் பெயரிலிருந்த நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பைனான்சியர் தனது மனைவி பெயரில் எழுதி வாங்கியிருக்கிறார் இந்த மோசடியால் மனமுடைந்தவர் நாற்பது தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பே அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். டோஸ் சற்று அதிகம் என்பதால் இன்னும் மயக்கம் தெளியவில்லை காஜாமைதீனுக்கு. படம் எடுப்பவர்களை பயப்படவைத்திருக்கிறது இவரது தற்கொலை முயற்சி”! செய்தி தொடர்கிறது……………

தற்கொலை தூண்டுதலுக்கு கமலஹாசன் காரணமா? “கடந்த சில தினங்களுக்கு முன் (ஜூலை 2005) தயாரிப்பாளர் காஜாமைதீன் தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ய, யார் செய்த புண்ணியத்தாலோ உயிருக்கு ஆபத்தின்றி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனாலும் இந்த விவகாரம் பல்வேறு வடிவங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. கந்துவட்டி கும்பல்தான் இதற்கு காரணம், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் ஒத்துழைக்காததே காரணம் என செய்திகள் கசிய, தயாரிப்பாளர்கள் மத்தியில் இது கடும் புயலை கிளப்பியது. இது குறித்து விவாதிக்க தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நேற்று (18 July 2005) நடந்த நிலையில் காஜாமைதீனும் கமலும் சேர்ந்து இன்று அளித்த பேட்டியில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பனிரெண்டு மணிக்கு இரு தரப்பினரிடமிருந்தும் பத்திரிகைகளுக்கு அவசர அழைப்பு வர ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தில் ஆஜராகினார்கள் நிருபர்கள். கமல், காஜாமைதீன் தவிர தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தியாகராஜன், இயக்குனர் கௌதம் ஆகியோரும் அங்கு இருக்க பத்திரிகையாளர்களுக்கு செம ஷாக்”.

தற்கொலை முயற்சி பற்றி காஜா மொய்தீன் விளக்கம்: “இருக்கையிலிருந்து கொஞ்சம் முன் வந்தபடி பேசிய காஜாமைதீன், “சில பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேனே தவிர இதற்கு வேறு யாரும் காரணமல்ல. இனி இது போன்ற தவறான முடிவுகளை எடுக்கமாட்டேன்” என்றார். நடுநாயகமாக அமர்ந்திருந்த கமலிடம் ‘நீங்கள்தான் காரணமென்று செய்திகள் வந்ததே’ என்று நிருபர்கள் கேட்க, பதில் சொல்ல தயாரானார். “யாரும் காரணமல்ல என்று காஜாமைதீனே சொல்லிவிட்டபோது இந்த விவகாரத்தில் என் பெயரை சேர்ப்பது சரியாகாது[2]. அதேபோல் இயக்குனர் கௌதமிற்கும் எனக்கும் எவ்வித பிச்சனையும் இல்லை. அடுத்தவாரம் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் படபிடிப்பு தொடங்கும். இனி பிரச்சனைக்கே வேலை இல்லை. எல்லாம் சுமூகமாக நடக்கும்”, என்று முடிக்க தயாரிப்பாளர்கள் சார்பாக தியாகராஜன் முகத்தில் திருப்தியின் உச்சம். “செவன்த் செனல்” மாணிக்கம் நாராயணன் (முதலில் பட்ஜெட்டிற்காகத் தயங்கினாலும்) மூலம் பிறகு படம் முடிக்கப்பட்டது“[3].

சினிமா குடும்பம்! பிரபல தயாரிப்பாளர் “ரோஜா கம்பைன்ஸ்’ எம். காஜாமைதீனின் அண்ணன் மகன் கஜினி. ஆம்னி (born 16 November 1973) என்கின்ற மீனாட்சி, முன்பு பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். மீனாட்சி ஆமனியாகி தெலுங்கு படங்களில் நடித்து, பிறகு தமிழ் படவுலகில் நுழைந்தார். விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். காஜாமைதீனும், அவரும் காதலித்துத் திருமணம் செய்து 1997ல் கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் முஸ்லீம் மதத்திற்கு மாறிய ஆம்னி / ஆமனி, தனது பெயரையும் ஆயிஷா என்று மாற்றிக் கொண்டார்[4]. இதைத் தவிர மற்ற நடிகர்களும் உறவினர்களாக உள்ளனர்.

ஸ்ரீவித்யா பட்டபாடு: இங்கு கூட, ஸ்ரீவித்யா நிலை ஆமனிக்கு ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில், அவருக்கும் கமலஹாசனுடன் தொடர்பு இருந்தது. கமலஹாசன் அவரை ஏமாற்றினார். ஒரு கிருத்துவ இயக்குனரை திருமணம் செய்து கொண்டு படாத பாடு பட்டார். தனது வீடு, சொத்து முதலியவற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வெல்லவேண்டிய நிலை வந்தது. ஒருநிலையில் பணம் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்ட நிலையும் இருந்தது. இன்று “சேர்ந்து வாழ்கிறோம்” என்று பெருமையாக, சிம்ரன், கௌதமி………………என்று நடிகைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தியவருக்கு அன்று அப்படி “சேர்ந்து வாழ” மனமில்லை போலும்!

குறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் எடுத்தவர் காஜா மைதீன்: பொற்காலம், பெண்ணின் மனதைத் தொட்டு, ஜனா, பாட்டாளி, வாஞ்சிநாதன், தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் காஜா மைதீன். தனது ரோஜா கம்பைன்ஸ் பட நிறுவனம் மூலம் திரைப்படங்களைத்தயாரித்து வந்தார் காஜா மைதீன். குறுகிய காலத்தில் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் காஜா மைதீன். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம்சார்பில், நடிகர் சங்க கடனை அடைக்க வெளிநாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

துபாயில் நிகழ்ச்சிகள், தொடர்பு, மர்மங்கள்: இவரது துபாய் தொடர்பு மர்மமாக உள்ளது. கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார் என்ற நிலையில், அந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக துபாயில் இவர் சில சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது என்பதும் புதிராக உள்ளது. இதனால் துபாயிலிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் மாட்டினார். ஆனால் நடிகர் சங்கத்தின் சார்பில் இவரை துபாயிலிருந்து வரவழைக்க பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று அப்போது செய்திகள் கிளம்பின. தனிப்பட்ட முயற்சியின் காரணமாக அவராகவே துபாயிலிருந்து மீண்டு வந்தார்.

வேதபிரகாஷ்

04-10-2010


[1] வேதபிரகாஷ், நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (1)?,  https://evilsofcinema.wordpress.com/2010/10/03/நடிகைகளைக்-கட்டிப்-பிடிப/

 

[2] http://www.hindu.com/2005/10/31/stories/2005103107080200.htm

Kamal Haasan said that he was in no way a cause for Kaja Moideen’s suicide attempt. After hectic parleys and discussion Kaja Moideen has decided to hand over the project to a person who will finish the project without a hitch. Now everything has fallen in place.

[3] `Seventh Channel’ Manicam Narayanan, a popular name in the film and television circles had taken over the project. According to Manicam Narayanan he is happy to do a film featuring Kamal Haasan. “When Kaja Moideen approached me I was a little bit hesitant as it involves big money. I am a friend of Kamal Haasan for nearly 20 years. But I did not have the opportunity to work with him. Goutham Menon is a very talented director and I am sure he will deliver the goods.”

[4] சினிமா உலகில் மதம் மாறுவது சகஜமாக இருக்கலாம், ஆனால், அவர்களின் குடும்பங்களில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சினைகள் முதலியவற்றை, சமூக ஆராய்ச்சியாளர்கள், மனோதத்துவ ஆய்வாளர்கள் முதலியோர் சரியாக ஆராய்ச்சி செய்வதில்லை.