Posts Tagged ‘ஜெயலலிதா’

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது?

திசெம்பர் 9, 2015

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது?

kamal-hassan-srividya

கமல் ஹஸனின் அறிக்கை: தன்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணி செய்யுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ‘நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று?’ என்று தமிழக அரசை நோக்கி, தான் எவ்விதக் கேள்வியும் எழுப்பவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்[2], “நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று என்றுநான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின்னஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும், மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழுவருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவேமாட்டேன். எந்தநிலைமையிலும் என் கடமையைச் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்[3].

 

Vani with Kamal

Vani with Kamal

என் வீட்டிற்கு சிலநாட்களாக செய்தித்தாள் வினியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைப்பேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலைதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப் பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்[4].

 

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy-rare-photos01

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy

என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசி தொடர்புகிடைக்கும் போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்பு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது[5].

 

.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம்[6]: இது நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கும், பலவேறு கட்சிகளுக்கும் ஓட்டுபோடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது என்பதற்கே இவ்விளக்கம்[7].

மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[8]: பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள், தனிமனிதக் கோபங்களை தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[9].

 

Kamal new relationship it is too real, but not so real

Kamal new relationship it is too real, but not so real

தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம்[10]: வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்[11]. தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும்கூட, சூழக் கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவன செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும்தான்“, என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்[12].

கமல காசனின் பிரச்சினை, கமல ஹாசனின் ஆசை, கமல் ஹஸனின் குழப்பம்: வயதாகி விட்டதால், அவ்வப்போது குழம்பிவிடுகிறார் போலும். கமல் ஹஸனுக்கு அகம்பாவம் அதிகமாகவே தான் இருந்து வந்துள்ளது. சென்ற மாதமே தீபாவளி விளம்பரம், நிதியுதவி நாடகம் முதலியவை இவரது முரண்பாடுகளை வெளிக்காட்டின. பாவம், எப்படி பணகஷ்டம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. நான் பணக்காரன் இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார். போதாத இடத்தில் பணத்தைக் கொட்டி மாட்டிக் கொண்டாரா அல்லது வேறெங்காவது செல்கிறதா என்று தெரியவில்லை. தான் என்ற மமதை தான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைய நேர்ந்தது. இதனால், பல பெண்களை தேடியும் அமைதி கிடைக்கவில்லை, மாறாக ஒழுக்கம் தான் கெட்டது. “நல்ல நடிகன்” என்ற பெயருள்ளது, ஆனால், நடிப்பு ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, சுத்தத்தை, மன அமைதியைக் கொடுக்காது. சேவை என்று இறக்கி விட்ட பிறகு, சில ரசிகர்களின் உசுப்பல்களினால், அவ்வப்போது, அரசியல் ஆசை வருகிறது. தேசிய கட்சி ஒன்றில் சேரலாமா என்ற ஆசைக்கூட இருக்கிறது. இந்நிலையில் வெள்ளம் அவரை அதிகமாக குழப்பி விட்டிருக்கிறது. இப்பொழுது சொன்னதை, சொல்லவில்லை, “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைக்கு வந்துள்ளார்.

© வேதபிரகாஷ்

09-12-2015

[1] தமிழ்.இந்து, என்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து நற்பணி செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள், Published: December 7, 2015 14:43 ISTUpdated: December 7, 2015 19:15 IST.

[2] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/i-owe-an-apology-kamal-explanatory-statement-115120700037_1.html

[3]  தினத்தந்தி, ரசிகர்கள் தொடர்ந்து நற்பணிகள் செய்ய வேண்டும் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 3:15 AM IST

பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 12:55 AM IST.

[4] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/12/08005525/Actor-Kamal-Report.vpf

[5]http://www.dinamani.com/tamilnadu/2015/12/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/article3165969.ece

[6]  நியூஸ்.7, .பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம், Updated on December 07, 2015

[7] http://ns7.tv/ta/actor-kamal-hassans-statement-opannerselvam-report.html

[8] வெப்துனியா, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன் – கமல் விளக்க அறிக்கை, திங்கள், டிசம்பர்.7, 2015, 16:28. IST..

[9]  தினமணி, புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்: கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 December 2015 12:12 AM IST.

[10]  விகடன், தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம், Posted Date : 15:07 (07/12/2015), Last updated : 15:07 (07/12/2015).

[11] http://www.vikatan.com/cinema/article.php?aid=56021

[12] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article7957904.ece

குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஒக்ரோபர் 25, 2015

குஷ்பு, நக்மா, விஜயதாரிணிதமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஜெயலலிதா, பெரியார்

ஜெயலலிதா, பெரியார்

சினிமாஅரசியல், அரசியல்சினிமா, திராவிட அரசியலுல் ஒன்றுதான்: தமிழக அரசியல் என்றுமே சினிமா அரசியலாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும், பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகளின் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத அளவில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. பெரியார் சினிமாவை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டாலும், ஆதரவு கொடுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட அவர், சித்தாந்தத்தைப் பரப்புவதில் எத்தகைய யுக்தியையும் கடைபிடிக்கலாம் என்று வற்புருத்தினார். “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகத்தில் நடித்த கணேசனுக்கு “சிவாஜி” பட்டம் கொடுத்தார். ஜெயலலிதா நாட்டியங்களைக் கண்டு ரசித்துள்ளார். அண்ணாதுரை சினிமாவில் ஊறியவர் என்பதால் ஒன்றும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி, எம்ஜியாரை “கூத்தாடி” என்றும் “கூத்தாடி அரசியல்” செய்கிறார் என்றும் கிண்டலடித்து உண்டு.  திமுகவினரும் அவ்வாறே பேசி-எழுதி தூஷித்துள்ளனர். அதே நேரத்தில் தனது மகன், மு.க. முத்துவை எம்ஜியார் போல நடிக்க வைத்து படங்கள் எடுக்கப்பட்டன[1]. பிறகு, ஸ்டாலினை பிரபலப்படுத்த டிவி-சீரியலிலும் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால், அத்தகைய சினிமா-அரசியலைத்தான் திராவிடத் தலைவர்கள் எல்லோருமே செய்து வந்துள்ளனர்.

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

கவர்ச்சி அரசியலில் உழலும் திராவிடக் கட்சிகள்: நேற்றைய திக, திமுக, அதிமுக, ஆனாலும், இன்றைய தேமுதிக முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், சினிமா நடிகர்கள்-நடிகைகள் தாம் உள்ளனர். இன்றைக்கு “கூத்தாடி” என்று யாராவது சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், சம்யம் வரும்போது, கருணாநிதி, ஜெயலலிதாவை சினிமாபை வைத்துக் கொண்டு சாடுவதில் தயங்குவதில்லை. தனது கைவரிசையை, “முரசொலியிலும்” அவ்வப்போது காட்டுவார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் வசனம் பேசிக் கொண்டு, நடித்துக் கொண்டுதான் வருகின்றனர். சினிமாவில், ஓவ்வொருவருக்கும் ஒன்றிற்கு மேலாக ஹீரோயின்கள் இருப்பது போல, நிஜவாழ்விலும் மனைவி, துணைவி என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். குடும்ப வாழ்க்கையினை நடத்துகின்றனர். அவ்வகையில் பார்த்தால், பாமக ஆரம்பித்திலிருந்தே, சினிமா-அரசியலை எதிர்த்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்[2]. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செய்கிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள், மது, சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது[3].

சிவாஜி, பெரியார்

சிவாஜி, பெரியார்

இன்றைக்கு சோனியா காங்கிரஸ் நடத்தும் சினிமா அரசியல்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 20-1-2015 அன்று புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 22-10-2015 அன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாநில மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, விஜயதாரணி, திருநாவுக்கரசர், யசோதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[4]. அரசியல்வாதிகள் சொல்லும் வார்த்தைகளை வைத்தே ஒரு வாரத்திற்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிண்டலடிப்பார்கள் நம் வலைஞர்கள். அதிகம் கிண்டலடிக்கப்படுவது விஜயகாந்த்தான். சிலகாலம் ஸ்டாலின் மாட்டினார். இன்று சிக்கியிருப்பது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விடுவார்களா நம்மவர்கள் சும்மா புகுந்து விளையாடிவிட்டனர்.

சிவாஜி, கருணாநிதி

சிவாஜி, கருணாநிதி

தமிழக காங்கிரஸ் தலைவரின் நடிகையைப் பற்றி அழகு, இளமை வர்ணனை: சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கலந்துகொண்டார். கூடவே, விஜயதாரணி, குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய இளங்கோவன், “சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை. ஆனால் நேரில், நல்ல அழகாகவும்; இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன், என்று கூறினார்[5]. நக்மா பேசுகையில், “அரசும், அமைச்சர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர், கக்கன் போன்றோர், உதாரணமாக இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். கோஷ்டிகள் இல்லாத, காங்கிரசை வளர்க்க வேண்டும் என்றார்[6]. காங்கிரஸின் தலைவராக இருக்கின்றவர், சினிமா நடிகைகள் கட்சிக்குள் வர ஆரம்பித்தவுடன், ரசனையும் மாறிவிட்டது போலும்[7]. நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்[8], சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம் என்றெல்லாம் தலைப்பிட்டு, இதனை செய்தியாக வெளியிட்டிருப்பது காங்கிரஸுக்கு அழகா, அவமானமா என்று தெரியவில்லை.

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

திரிஷா இல்லைன்னா நயன்தாராவா, குஷ்பு இல்லைன்னா நக்மா: இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. விடுவார்களா நம்மவர்கள். சும்மா புகுந்து விளையாடிவிட்டனர். இதுநாள்வரை குஷ்புவை புகுந்த இளங்கோவன் இப்போது நக்மாவை புகழவே, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்[9]. இதுதான் அழகுல மயங்குறதா என்று கிண்டலடித்துள்ள வலைஞர்கள் டுவிட்டரில் சும்மா சகட்டு மேனிக்கு கிண்டலடித்துள்ள வலைஞர்கள் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர் என்று தமிழ்.ஒன்.இந்தியா எடுத்துக் காட்டுகிறது [10]. அரசியலின் ஒழுக்கம், நாணயம், முதலியவை இந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறதே என்று அத்தகைய வலைஞர்-மேதாவிகள் ஏன் கவலைப்படவில்லை என்றால், நிச்சயமாக, அத்தகைய வர்ணனைகளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்ரு தெரிகிறது. இதே, வெறெந்த பெண் அரசியல்வாதி நியமிக்கப்பட்டு, அவர் பதவியேற்று, விழாக்களில் கலந்து கொண்டால், இளங்க்கோவன் அல்லது வெறெந்த அரசியல்வாதியும் இவ்வாறு ரசித்து, வர்ணிப்பாரா என்று தெரியவில்லை. நடிகை என்பதினால் தான் அவ்வாறான விமர்சனம் வந்துள்ளது, அதனை தமிழக ரசிகர்கள் நசிக்கிறார்கள்.

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

இளங்கோவன், நடிகை குஷ்பு, நக்மா உருவப்படங்கள் எரிப்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் தமிழக  காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டு கொளுத்தினர்[11]. ஆக அந்த அளவுக்கு, இந்த நடிகைகளும் உயர்ந்து விட்டார்கள். நேற்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டி அளித்த இருவரும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்[12].

© வேதபிரகாஷ்

25-10-2015

[1] பூக்காரிபிள்ளையோ பிள்ளைசமையல்காரன், அணையாவிளக்கு என்ற படங்களில் மு. க. முத்து, எம்ஜியாரை காப்பியடித்து நடித்தார். எம்ஜியாரைப் போலவே மஞ்சுளாவை முதல் படத்திலேயே ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டார்.

[2]  தினமணி, திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்: ராமதாஸ், By Venkatesan Sr, சென்னை; First Published : 10 February 2013 03:02 PM IST.

[3] http://www.dinamani.com/latest_news/article1457932.ece

[4] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=153570

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம், Posted by: Veera Kumar, Published: Saturday, October 24, 2015, 12:37 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-looks-beautiful-congress-chief-elangovan-238332.html

[7]  தமிழ்.வெப்.துனியா, நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:15 IST)

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/evks-talk-about-actress-nagma-115102300042_1.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நக்மா இல்லைன்னா குஷ்பு…. இளங்கோவனை கிண்டலடிக்கும் வலைஞர்கள், Posted by: Mayura Akilan, Updated: Saturday, October 24, 2015, 17:39 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/social-networkers-critizes-evks-elangovan-238365.html

[11] தினமணி, குஷ்பு, நக்மா உருவப்படம் எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் போராட்டம், By DN, சென்னை,First Published : 23 October 2015 05:41 PM IST.

[12]http://www.dinamani.com/tamilnadu/2015/10/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/article3093693.ece