Posts Tagged ‘டேக்’

“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்!  

நவம்பர் 4, 2018

காஸ்டிங் கௌச்,” “மீ டூபிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்!  

Akshara Hassan-02-11-2018

காஸ்டிங் கௌச்,” “மீ டூபிறகு, பிரைவேட் போட்டோக்கள்: நடிகைகளுக்கு சான்ஸ் வேண்டுமானால் அல்லது மற்றவர்களின் கவனத்தில் இருக்க வேண்டுமானால், நிர்வாண, முக்காலரை நிர்வாண புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். “அவுத்து போட்டு நடிக்கத் துடிக்கிறார்கள்” என்று முன்னர் 1970களில் ஒருவர் சொன்னது போல, இப்பொழுது, நடிகைகள் ரொம்பவே முன்னேறி விட்டார்கள். ஆபாசமான நடனங்கள், காட்சிகள், படுக்கையறை காட்சிகள் எல்லாம், ஹாலிவுட்டை தோற்கடிக்கும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. இந்திய சென்சார் போர்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. “காஸ்டிங் கௌச்,” “மீ டூ” எல்லாம் அடங்கிய நிலையில், அக்ஷரா ஹஸனின் “டூ பீஸ்” புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகின. அதாவது, அக்ஷராவுக்குத் தெரியாமல், அவை வெளியே வந்திருக்க முடியாது. இருப்பினும், கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை விட மோசமாக, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், படங்கள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பொழுது, மானம்-அவமானம் எல்லாம் போகிறதா, கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெல்லாம் விவாதித்தது இல்லை.

Akshara Hassan-02-11-2018-2

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்ததை பரப்பிய தமிழ் ஊடகங்கள்: இப்பொழுதெல்லாம், நிருபர்கள் வெளியே சென்று செய்திகளை சேகரித்து வருவதில்லை. இணைதளத்தில் மேய்ந்து, கிடைப்பதை வைத்து, செய்திகளை தயாரித்து வெளியிடுகின்றனர். அது உண்மையா-பொய்யா என்பது பற்றி கூட கவலைப்படுவது கிடையாது.

Akshara Haasan, who made her debut in Bollywood opposite Amitabh Bachchanand Dhanush in 2015 film ‘Shamitabh‘ has become the latest victim of cyber-crime as private pictures of hers have gone viral on the internet[1].

These pictures of veteran actor Kamal Haasan‘s daughter in inner-wear have come as a shock to all his fans. The pictures of the young budding starlet have been shared on social media and are spreading like wildfire. It is not confirmed if the pictures are morphed or are actually that of Akshara.

The authenticity of the pictures has not been verified yet. She is not the first actress whose private pictures have gone viral in fact a few months ago even Amy Jackson’s phone was hacked and personal pictures of the actor were leaked on the internet[2].

இதை வைத்து, அப்படியே செய்திகளாக்கி போட்டு வருகின்றன.  சித்தாந்தம், கட்சி சார்பு, ஜாதி-மதம், கவர் கொடித்தான் – கொடுக்கவில்லை போன்றவற்றில் தான் அவர்களது செய்தி வெளியீடுகள் உள்ளன.

Akshara Hassan-02-11-2018.7

அக்ஷரா புராணம் பாடும் ஊடகங்கள்: நடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015- ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார்[3]. அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்[4]. இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது, படங்கள் இல்லை, புக் செய்ய ஆளும் இல்லை என்றாகிறது. நடிப்பு இருந்தால், நடித்து முன்னேறலாம், அத்திறமை இல்லாதவர்கள் தாம், இவ்வாறு கவர்ச்ச்சி என்ற போர்வையில், உடம்பைக் காட்டிப் பிழைக்கின்றனர். இதெல்லாம் நல்ல காரியங்களா, சமூகத்தை கெடுக்கும், சீரழிக்கும், மாசு படுத்தும் விவகாரங்கள் இல்லையா என்றெல்லாம் யார்ம் விவாதிப்பதாகத் தெரியவில்லை. மகள்கள் இவ்வாறு இருக்கும் போது, அப்பன் கமல் ஹஸன் கட்சி தொடங்கி ஏதோ “பெரிய யோக்கியர்” போல ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருப்பது கேவலமாக இருக்கிறது.

Akshara Hassan-02-11-2018.6

முக்கால் நிர்வாண படங்கள் வெளியானது பற்றி அக்ஷராவின் விளக்கம்: இந்நிலையில் அவரது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் நடிகர் கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அக்‌ஷராஹாசனின் புகைப்படம்தானா அல்லது மார்பிங்கா என்பது உறுதி செய்யப்படவில்லை[5]. அதற்கு பதிலளித்திருக்கும் அக்‌ஷராஹாசன், புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்[6]. இதுபோன்று விளம்பரங்களில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்[7]. மேலும் தனது மற்றொரு பதிவில், “இந்த புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை[8]. ஆனால் துரதிர்ஷடவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.

Akshara Hassan-02-11-2018.4

கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது: இதுவே, பெரிய வேடிக்கை, தமாஷா எனலாம். கமல் என்ன ஒழுக்கமானவரா, பெண்மையினைப் போற்றுபவரா, என்று பார்த்தால் உண்மை தெரியும். திருமணம் செய்யாமலே, இந்த இரு பெண்களையும் சரிதா பெற்றெடுத்து, இவர் வளர்த்துக் கொண்டிருந்தார் என்பது தெரிந்த விசயமே. பிறகு, கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர்களை பார்த்துக் கொள்ள செய்தார். வயதாகி விட்டதால், பிரச்சினை ஏற்பட்டதால், அவரும் மகளோடு பிரிந்து சென்று விட்டார். பிறகு, என்ன “கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்” வெங்காயம் போன்ற கோரிக்கைகள் என்று தெரியவில்லை. பொதுவாக, எந்த அப்பனாவது, தன் மகள்தைவ்வாறு பபுகைப்படம் எடுத்துக் கொள்வாளா, அவற்றை வெளியே போட்டு பரப்புவாளா என்று யோசிக்க வேண்டும். அப்படி செய்தால், அந்த அப்பனை எவ்வாறு பொது மக்கள் நினைப்பார்கள் என்பதும் தெரிந்த விசயம் தான். சரி, நாங்கள் நடிகைகள், நடிகர்கள் அப்படித்தான் இருப்போம் என்றால், அப்படியே இருக்க வேண்டும், பிறகு சமூகத்திற்கு வந்து அறிவுரைக் கூறக் கூடாது.

Akshara Hassan-02-11-2018-33

இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும்: இவரே நடிகை, கேமரா உமன், டைரக்டர், தயாரிப்பாளர் என்றிருந்து எடுத்த படங்கள் எப்படி தவறான டேக்குகள் ஆகும் என்று தெரியவில்லை. பிறகு அவற்றை ஏன் சரியான டேக்குகள் போல வெளியிட வேண்டும்? “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்,” அப்படியென்றால், நடிக்கப் போகிறாரா, படம் எடுக்கப் போகிறாரா? சில ஆங்கில ஊடகங்கள் “அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன[9]. அப்படியென்ன அதிர்ச்சி என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவ்வப்பொழுது, ஆபாசமாக ப்நடிக்கும் நடிகைகளுக்கு உப்தேசம் செய்திருக்கலாமே? சினிமாவில் இதைவிட ஆபாசமான, நிர்வாணமான படங்கள், காட்சிகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றானவே, அவற்றைப் பார்த்து அடையாத அதிர்ச்சி, இவற்றில் ஏற்பட்டுள்ளதே, அதிர்ச்சியாக இருக்கிறது[10].

© வேதபிரகாஷ்

04-11-2018

Akshara Hassan-02-11-2018.5

[1] Times of India, Private pictures of Kamal Akshara Haasab leaked on social media, TNN, Updated: Nov.3, 2018. 00:18 IST.

[2] https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/private-pictures-of-kamal-haasans-daughter-akshara-haasan-leaked-on-social-media/articleshow/66477139.cms

[3] நியூஸ்18.ர்கமிழ், இணையத்தில் கசிந்த அந்தரங்க புகைப்படங்கள்: அக்ஷராஹாசன் விளக்கம், Updated: November 3, 2018, 7:31 PM IST.

[4] https://tamil.news18.com/news/entertainment/akshara-haasan-hot-personal-pictures-leaks-on-the-internet-and-went-viral-66197.html

[5] நக்கீரன், இணையத்தில் லீக்கான அக்ஷராஹாசனின் பிரைவேட் புகைப்படங்கள்…., சந்தோஷ் குமார், Published on 03/11/2018 (13:18) | Edited on 03/11/2018 (13:28).

[6] https://nakkheeran.in/cinema/cinema-news/akshara-hassans-private-selfies-leaked-online

[7] தமிழ்.ஏசியா,நெட்.நியூஸ், சமூக வலைத்தளத்தில் லீக்கான கமல் மகள் அக்ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படம்! முகம் சுளிக்கும் ரசிகர்கள்!, By Manimegalai AFirst Published 3, Nov 2018, 5:06 PM IST.

[8] https://tamil.asianetnews.com/cinema/kamalhassan-daugther-akshara-hot-photos-leaked-phm893

[9] Intenational Business Times, Shocking! Akshara Haasan’s private pictures in innerware leak online, Suprno Sarkar, Nov.2 2018, 16:16 IST.

 

[10] https://www.ibtimes.co.in/shocking-akshara-haasans-private-pictures-innerwear-leak-online-784623