Posts Tagged ‘டைரக்டர்’

படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொன்ன – “காஸ்டிங் கவுச்” – டைரக்டரின் கன்னத்தில் நடிகை அறை!

திசெம்பர் 13, 2014

படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொன்ன – “காஸ்டிங் கவுச்” – டைரக்டரின் கன்னத்தில் நடிகை அறை!

காஸ்டிங் கவுச் ஆங்கில படம்.வீடியோ

காஸ்டிங் கவுச் ஆங்கில படம்.வீடியோ

சினிமா உலகத்தில் நடிகநடிகைகள் அடிதடி நிகழ்ச்சிகள்: சினிமா உலகத்தில் நடிக-நடிகைகள் அடித்துக் கொள்வதே சகஜமாகி விட்டது[1]. அவ்வாறு பொது இடங்களில் சண்டை போட்டது, அடித்துக் கொண்டது என்று பெரிய பட்டியலே போடலாம். சன்னி லியோனி என்ற ஆபாச நடிகையை யாரோ ஆபாசமாகப் பேசியதால், சகநடிகர் அவரை அடித்து விட்டார் என்ற இன்னொரொரு செய்தியும் வந்துள்ளது[2]. அந்நடிகை ரொம்ப அடக்க-ஒடுக்கமாக நடிகை போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள் போலும். யோகிதா டான்டேகர் என்ற நடிகை அன்னா ஹஸாரேவுடன் சேர்ந்து செயல்பட்டதால், ஒரு வியாபாரியால் தாக்கப்பட்டுள்ளார். 09-12-2914 (செவ்வாய்கிழமை) ஜூஹு லேனில் அந்த வியாபாரி மற்றும் அவரது காரோட்டி இருவராலும் [businessman Hansraj Surana and his driver Krishna Kumar Vaidyanath], அந்நடிகை தனது காரிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு அடிக்கப்பட்டிருக்கிறார்[3]. முன்னர் கௌர் கான் என்ற நடிகை ஆபாசமாக உடை அணிந்தார் என்று ஒரு முஸ்லிம் இளைஞனால் 30-11-2014 அன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு விழாவில் அறையப்பட்டார்[4].

காஸ்டிங் கவுச் - விளக்கம்

காஸ்டிங் கவுச் – விளக்கம்

காஸ்டிங் கவுச்” – நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுதல்: நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னை ஏமாற்றியதாக, பாலிவுட் டைரக்டர் சச்சேந்திர சர்மாவை, மனீஷா என்ற நடிகை, வியாழக்கிழமை (11-12-2014) அன்று பட விழாவில், ஏராளமானோர் முன்னிலையில், கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்று செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். அந்நடிகை டைரக்டரின் மீது வைத்துள்ள புகார் – “காஸ்டிங் கவுச்” என்பதாகும். நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுதல் என்ற ரீதியில் “காஸ்டிங் கவுச்” [casting couch] என்று அந்த வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்களாம்[5]. இந்த முறை, அடையாளம்-வியாதி, வேலை பார்க்கும் இடத்தில் தனக்குக் கீழேயுள்ள வேலையாள், பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவள் பதவி உயர்வு, அதிக சம்பளம், அல்லது வேறு பலனை எதிர்பார்க்கும் நேரத்தில், மேலேயுள்ள ஆண் அதிகாரி, பதிலுக்கு பாலியல் ரீதியில் எதிர்பார்க்கும் போக்கை அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். முதலில் சினிமாவுலகில் இப்பழக்கம் ஆரம்பித்து, பரவி-பிரபலமாகி, பிறகு மற்ற துறைகளிலும் இருந்து வருகிறது[6] என்று அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் சொல்லப்படுகிறது[7]. சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜம் என்றிருந்தாலும், ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை. நடிகைகள் ஆசையோடு பணம், புகழ் கிடைக்க வேண்டும் என்றுதான் தயாராக வருகிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் உயர்ந்து விடுகிறார்கள், இல்லையென்றால் கீழே விழுந்து விடுகிறார்கள். “டான்ஸ்” ஆடுவதற்கு இம்மாதிரி அழைத்து வரும் இளம் பெண்களில் பலர் சினிமா உலகத்தில் உள்ளும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கேமராமேன்கள் என்று பலரைத் திருப்திப் படுத்த பயன்படுத்தப் படுகிறர்கள். சினிமா-சான்ஸ் இல்லையெனும் போது விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

காஸ்டிங் கவுச் - ஹாலிவுட் ஒப்புதல்

காஸ்டிங் கவுச் – ஹாலிவுட் ஒப்புதல்

அமெரிக்க-ஐரோப்பிய நாகரிகம் எப்படி பெண்களை சீரழிக்கிறது: அமெரிக்க-ஐரோப்பிய நாகரிகம் எப்படி பெண்களை மதிக்கிறது என்று இம்முறையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். ஆனால், பொதுவாக அவர்கள் பெண்கள் உரிமைகள் என்றேல்லாம் பேசி தம்பட்டம் அடித்து ஆர்பாட்டம் செய்து, பறைச்சாற்றிக் கொண்டிருப்பார்கள். பன்னாட்டு கம்பெனிகள் மூலம், இம்முறை ஏற்கெனவே ஐ.டி கம்பெனிகளில் நடந்து வருவதை, இப்பொழுது குறிப்பாக பெயர் சொல்லி செய்திகளில் “காஸ்டிங் கவுச்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதைப் பற்றி இந்திய பெண்ணிய பெண்மணிகள், தமிழச்சிகள் போன்ற வீராங்கனைகள் யாரும் கவலைப்பட மாட்டார்கள். பாராளுமன்றத்திலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், பிஜேபி எம்.எல்.ஏ / எம்.பி செல்போனில் பிரியங்கா படம் / ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்று ஊடகக்காரர்கள் முக்கிய செய்திகளாக வெளியிடுவார்கள்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

நடிகை டைரக்டருடன் மேடையில் வாக்குவாதம்[8]: பாலிவுட்டின் பிரபல டைரக்டர் சச்சேந்திர சர்மா. இவர், ‘மும்பை கேன் டான்ஸ் சலா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், பிரபல குத்தாட்ட நடிகை ராக்கி சாவந்தும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆஷீஷ் சர்மா, பிரசாந்த் நாராயண், ஆதித்ய பஞ்சோலி, சக்தி கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். அடுத்த மாதம் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, மும்பையில் நடந்தது. விழாவுக்கு, ராக்கி சாவந்த், தன் தோழி மனீஷாவுடன் வந்திருந்தார். மனீஷாவும் ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார். மேடையில் சச்சீந்திர சர்மாவும், ராக்கி சாவந்தும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர். விழா நடந்து கொண்டு இருந்தபோது, வேகமாக மேடைக்கு வந்த மனீஷா, டைரக்டர் சச்சேந்திர சர்மாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ‘நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, என்னை ஏமாற்றியது ஏன்?’ என, கேள்வி எழுப்பினார். இருவருக்கும் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த மனீஷா, ஒரு கட்டத்தில், டைரக்டரை, கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

Actress  attacks director NDTV photo

Actress attacks director NDTV photo

இதைப் பார்த்து, அந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சச்சீந்திர சர்மா, ராக்கி சாவத்திடம் என்ன இந்த மாதிரி நடந்து கொள்கிறார் என்று கேட்டு, அவரை மேடையைவிட்டு கீழே இறங்க சொல்லுமாறு கூறினார்[9]. அங்கிருந்தவர்கள் சொல்லியும் மனிஷா குமாரி கேட்கவில்லை. சத்தம் போட்டுக்கொண்டே மீண்டும் அடிக்க வந்தார்[10]. கடும் ஆத்திரமடைந்த டைரக்டர், பதிலுக்கு, மனீஷாவை பிடித்து, மேடைக்கு கீழே தள்ளினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்த மேலும் சில பெண்கள், மனீஷாவை சூழ்ந்து கொண்டு தாக்கினர்; அவரின் தலை முடியை பிடித்து இழுத்தனர். இதனால், அந்த இடமே, பெரும் களேபரம் ஆனது. இதையடுத்து, மனீஷாவும், ராக்கி சாவந்தும், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று தினகரன் கூறுகிறது[11].

 

நடிகை பிறகு அறைந்தார் .நக்கீரன்.

நடிகை பிறகு அறைந்தார் .நக்கீரன்.

பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அடிதடியும்அதில், ‘நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், என் ஆசைக்கு இணங்க வேண்டும், என, டைரக்டர் சச்சேந்திர சர்மா கேட்டார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டார். இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்ற என்னை, ஆட்களை வைத்து தாக்கி விட்டார்’ என, மனீஷாவின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12].

நடிகை புகார், அடிவாங்கிய டைரக்டரின் மனைவியும் புகார்

நடிகை புகார், அடிவாங்கிய டைரக்டரின் மனைவியும் புகார்

ராக்கி சாவந்தும், தன் தோழிக்கு ஆதரவாக அறிக்கை விடுத்துள்ளார். இயக்குனர் சச்சேந்திர சர்மா கன்னத்தில் தனது தோழி அறைந்தது சரிதான் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறினார்[13]. அவர் கூறுகையில், ‘‘மனீஷா செய்தது சரிதான். படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்’’ என்றார். ஆனால், மனீஷாவின் நடவடிக்கை ஒரு ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ என்று இயக்குனர் சச்சேந்திர சர்மா கூறினார். அவர் கூறுகையில், ‘‘அந்த பெண்(மனீஷா) யார் என்றே எனக்குத் தெரியாது. சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடும் புதுமுக நடிகைகள் எல்லாம் இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்ள விரும்புவது வேதனைக்குரியது’’ என்றார்[14]. இதைத் தொடர்ந்து, டைரக்டரின் மனைவி மதுவும், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘என் கணவர் மீது, மனீஷாதவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதோடு, பொது இடத்தில் அவரை தாக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்[15].

© வேதபிரகாஷ்

13-12-2014

[1] http://www.ibtimes.co.in/ranveer-priyanka-kajol-karan-other-bollywood-celebs-reunited-after-their-popular-tiffs-photos-617007

[2] http://www.india.com/showbiz/sunny-leones-co-star-slaps-a-man-for-misbehaving-with-the-sultry-actress-219447/

[3] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Actress-dragged-from-car-slapped-by-businessman/articleshow/45488891.cms

[4] http://time.com/3611558/gauhar-khan-india-raw-star-slap/

[5] http://indianexpress.com/article/entertainment/bollywood/rakhi-sawants-friend-slaps-director-of-mumbai-can-dance-saala-over-casting-couch-121209/

[6] http://www.foxnews.com/entertainment/2011/05/31/casting-couch-nightmares-hollywood-megan-fox-lisa-rinna/

[7] The casting couchcasting-couch syndrome or casting-couch mentality is the trading of sexual favors by an aspirant, apprentice employee or subordinate to a superior in return for entry into an occupation, or for other career advancement within an organization. The term “casting couch” originated in the motion picture industry, with specific reference to couches in offices that could be used for sexual activity between casting directors or film producers and aspiring actresses or actors.

[8] தினமலர், பட விழாவில் டைரக்டரை அறைந்த நடிகை, பதிவு செய்த நாள்
டிச 12,2014 23:13.

[9] நக்கீரன், இயக்குனரின் கன்னத்தில் அறைந்த நடிகையின் தோழிஇயக்குநரும் பதிலுக்கு அடித்து உதைத்தார், வெள்ளிக்கிழமை, 12, டிசம்பர் 2014 (18:22 IST)

[10]  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=134153

[11] தினகரன், ஆடியோ வெளியீட்டு வழாவில் பரபரப்பு: இயக்குனரை அறைந்தார் ராக்கி சாவந்தின் தோழி: ஆசைக்கு இணங்க வலியுறுத்தியதாக புகார், சனிக்கிழமை, 00.59.52, 13-12-2014.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1136541

[13] The actress, whose name is reportedly Manisha, has allegedly accused Sachindra Sharma of offering her a role on condition of what is popularly known as the ‘casting couch,’ and then failing to actually cast her. Rakhi told news agency IANS later, “Yes, she is right, the director asked her for favours to get a role in his film.” http://movies.ndtv.com/bollywood/actress-slaps-rakhi-sawants-director-accuses-him-of-casting-couch-712070

[14] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=122293

[15] http://www.abplive.in/movies/2014/12/12/article453428.ece/Actress-slaps-director-on-stage-accusing-him-of-casting-couch

சம்பளப் பிரச்சினை, படப்பிடிப்பு ரத்து, நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பினார்கள்!

செப்ரெம்பர் 1, 2011

சம்பளப் பிரச்சினை, படப்பிடிப்பு ரத்து, நடிகர்-நடிகைகள் சென்னைக்கு திரும்பினார்கள்!

நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்: சினிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[1]. சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய ஸெல்வன், இப்போது நடிகராகவும் மாறிவிட்டார். இவர் ஏற்கனவே ‘மாக்கான்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது, ‘மாயவரம்’ என்ற புதிய படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இன்பநிலா நடிக்கிறார். ராம்தேவ் இயக்கும் இப்படத்தை வயலார் ராஜேந்திரன் தயாரிக்கிறார். சீர்காழி அருகில் உள்ள திருமுல்லை வாசல் என்ற கிராமத்தில் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள்

திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை[2] கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

தமிழக மக்களுக்கு வேண்டிய முக்கியமான செய்தி இதுதான். இனிமேல், தராதரத்தை சினிமா பார்ப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம், அவர்கள் எதை வேண்டுமானாலும் காட்டுவார்கள். அடுத்த் வேலைக்கு குடிக்கக் கஞ்சி கூட இல்லாமல் இருந்தாலும் கவலையில்லை. ரூ.100/- கொடுத்து, சினிமாப் பார்த்தே ஆகவேண்டும் என்பதுதான், தமிழகத்தின் பகுத்தறிவுள்ள மக்களின் மனநிலை. இதை பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதலியோர் சொல்லிக் கொடுத்தார்களா  அல்லது அவர்களே கற்றுக் கொண்டார்களா என்று ஆராய்ச்சி செய்யலாம்.

 

வசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும்: சினிமாவில் ரூ 1 கோடிக்கு மேல் வாங்கும் நடிகர்களுக்கு இனி வசூல் அடிப்படையில்தான் சம்பளம் தரவேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20, அதிகபட்சம் ரூ.100 என்ற அடிப்படையில் கட்டண முறையை அரசு மாற்றி நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச்செயலாளர் ஸ்ரீதர், ராமநாதபுரம் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமாறன், செயலாளர் தினேஷ்பாபு, மதுரை நகர் திரையரங்க

சினிமா பார்ப்பவர்கள், ரசிகர்கள் அதேபோல நுகர்வோர் பாணியில், படத்திற்கு ஏற்பத்தான், நாங்களும் காசு கொடுப்போம் என்றால், ஒப்புக் கொள்வார்களா? படம் நன்றாகயில்லை என்றால் தள்ளுபடி கொடுப்பார்களா?

உரிமையாளர் சங்க தலைவர் கஜேந்திரன், சேலம் டி.என்.டி.ராஜா உள்பட தமிழகம் முழுவதும் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 466 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு[3]: வசூல் அடிப்படையில் சம்பளம்: தமிழகத்தில் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். கேளிக்கை வரிவிலக்கு பெற புதிய நிபந்தனைகளை விதித்திருப்பதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். திரைப்பட தயாரிப்பு செலவுகள் அதிகரித்து வருவதால் திரையரங்க நுழைவு கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே திரைப்பட தயாரிப்பு செலவை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் சம்பளம் திரைப்படத்தின் வசூல் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

சினிமா பார்க்க ரூ.20, 100 கட்டணம்: இது சம்பந்தமாக வினியோகஸ்தர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து எந்த அடிப்படையில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை நிர்ணயிப்பது என்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் நுழைவு கட்டணத்தை மாற்றி அமைத்து தரும்படி

முதல்வரிடம் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.20-ம், அதிகபட்சம் ரூ.100-ம், குளிர்சாதன வசதி செய்யப்படாத சாதாரண திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.10-ம், அதிகபட்சம் ரூ.70-ம் கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

தியேட்டர்களில் ஏசி வேலை செய்கிறதா இல்லை, அவர்கள் போடுகிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், டிக்கெட்டில் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். ஆகவே, இனி ஏசி போடவில்லை அல்லது வேலை செய்யவில்லை என்றால், அதற்கான பணத்தை வாபஸ் செய்ய வேண்டும்.

பராமரிப்பு செலவை உயர்த்துக: திரையரங்குகளின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டதால் திரையரங்குகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை குளிர்சாதன திரையரங்குகளுக்கு ரூ.5 ஆகவும், சாதாரண திரையரங்குகளுக்கு ரூ.3 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான ‘சி’ உரிமம் பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளாக அரசு நீட்டிக்க வேண்டும்.

நன்றாகவே தெரிகிறது, முதலாளிகள் தங்களது வருமானத்தைப் பெருக்க வேண்டும், அதே நேரத்தில் வரியிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மைதான் வெளிப்படுகிறது. செலவீனங்களை அதிகமாக்கினால், வரியிலிருந்து முதலாளிகளுக்கு வரி குறையலாம். ஆடிட்டர்கள் அதற்கு ஏற்றவாறு கணக்கு எழுதி கொடுப்பார்கள். ஆனால், மக்களிடமிருந்து வசூல் செய்து கொள்கிறார்களே, பிறகு ஏன் இந்த மோசடி?

திரையரங்குகளுக்கான கட்டிட உறுதி சான்றிதழை அங்கீகரிக்கப்பட்ட தனி பொறியாளர்களிடம் இருந்து பெறுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியை முன்காலத்தில் நடைமுறையில் இருந்ததை போலவே மீண்டும் பின்பற்றி கேளிக்கை வரியை கழித்து மீதமுள்ள தொகையில் வினியோகஸ்தர்களுக்கான பங்கு தொகையை தருவது என்று தீர்மானிக்கப்பட்டது.

வேறு உபயோகத்துக்கு….: திரைப்படங்கள் கிடைக்காத காலங்களில் திரையரங்குகளை வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு விதிகளுக்குட்பட்டு காலை

9 மணி முதல் இரவு 1.30 மணி வரை எத்தனை காட்சிகளை வேண்டுமானாலும் நடத்திக்கொள்ள அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இப்படி எல்லா விதங்களிலும் அவர்களுக்கு சலுகைகள், வரிவிலக்குகள், ஆதாயங்கள் கொடுக்கப் படவேண்டும். ஆனால், படம் பார்ப்பவர்கள் வசதிகள் இல்லாமல் சாக வேண்டும்.

சினிமானை தொழிலாக்கியவர்களும், தொழிலை சினிமாக்கியவர்களும்:சினிமாவிலேயே வளர்ந்து, ஆதிக்கம் பெற்று, ஆட்சிக்கும் வந்தவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதனால், மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் திரைப்பட துறையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. முதல்வர் ஜெயலலிதா திரைத்துறையினரின் நலன் காப்பார் என்று செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் உறுதியளித்தார்[4]. தமிழக சட்டசபையில் இன்று கடந்த திமுக ஆட்சியினரால் திரைப்படத் துறைக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும், தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட இயலாத நிலை இருப்பது குறித்தும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதன் மீது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினார்கள்.  கடந்த ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட குடும்பமே சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தியது. மற்ற தயாரிப்பாளர்கள் படங்களை திரையிட முடியவில்லை. தமிழ் பெயருக்கு வரி

விலக்கு என்று அறிவித்து விட்டு அவர்கள் குடும்பம் தயாரித்த தமிழக்கு எந்த சம்பந்தமே இல்லாத எந்திரன் என்ற படத்திற்கு பல கோடி ரூபாய் வரி விலக்கு பெற்றவர்கள். புதிய ஆட்சி அமைந்த பிறகு அந்த நிலைமை இல்லை. சிறிய படத்தயாரிப்பாளர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். திரைவுலகின் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இப்படி ஏதோ விவாதிக்கிறார்களே தவிர, சினிமாக்களின் தரம், அவை சமூகத்தின் மீது நல்லமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும், இப்பொழுதைய சந்ததியினர் ஒழுக்கத்துடன், நற்பண்புகளுடன் இருக்கவேண்டும்……….போன்ற எண்ணங்களுடன் விவாதம் நடக்காதது ஏனோ?

 

இதற்கு பதிலளித்து செய்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் கூறியதாவது: திரைப்படத்தை தயாரிப்பதோ, வெளியிடுவதோ தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. திரைப்படங்களை தயாரித்து அதனை வெளியிட முடியாத நிலை இருப்பதாக இந்த துறைக்கு புகார் எதுவும் வரவில்லை. எவ்வளவு தொகையில் படங்கள் தயாரிக்கப்படுகிறது, அதை எப்படி வெளியிடுவது என்பதெல்லாம் தனியார் தயாரிப்பாளர்களின் பொறுப்பாகவே இருந்து வந்துள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை தரமான திரைப்படங்களை தயாரிப்பவர்களுக்கு 7 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சின்னத்திரை கலைஞர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிறந்த திரைப்படங்கள் நடிகர், நடிகைகளுக்கு இந்த துறையின் சார்பாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் திரைப்பட நகரில் பயிற்சி பெறும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர்.

தமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.  இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார்.

 

வேதபிரகாஷ்

01-09-2011