Posts Tagged ‘தனியார் திரைப்பட கல்லூரி’

கதாநாயகி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி: இயக்குனர் கைது!

மார்ச் 17, 2010
கதாநாயகி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி: இயக்குனர் கைது
மார்ச் 17,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17006

குழந்தை, +2 மகள், மகள், மகன்……………… சினிமாவில் நடிக்க வைக்கவேண்டும், கதாநாயாகியாக்க வேண்டும் என்று பெற்ற தாய்களே தயாராக உள்ளார்கள் என்பதை நினைத்தௌப் பார்க்கும் போது, அவர்கள் – அந்தா தாயார்கள் – தனது மகளை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

உண்மையை சொல்ல போனால், எந்த தாயும் அவ்வாறு விரும்பமாட்டாள், ஏனெனில் ஒரு நிலையில் / இன்றைய சூழ்நிலையில் விபச்சாரத்திற்கு போவதும் நடிகைத் தொழிலும் ஒன்றுதான். ஐங்குணக்களை விடுத்துதான் அவள் வாழ வேண்டும். இருப்பினும் மாதம் லட்சம் கொடுக்கிறேன் என்றால் நம்பி நடீகப் போகிறேன் இல்லை அனுப்புகிறேன் என்று பெண்கள் புறப்பட்டுவிட்டது எதனைக் காட்டுகிறது?

நிச்சயமாக வீட்டுக்கு வீடு கலர்-டிவி, டன் டனா-டன் கொடுத்து, நன்றாகவே சினிமா பித்தை ஏற்றிவிட்டிருப்பது தெரிகிறது.

வென்றுவிட்டார்கள் அந்த தந்தையும், மகனும் – தோற்று விட்டார்கள் இந்த தாயார்களும், மகன்களும்!

வாழ்க தமிழச்சிகள்!

செம்மொழி!!

கனிமொழி!!! [பெண்கள் டிவி சீரியல் பார்க்க வேண்டாம் என்று சொன்னதற்காக]

Important incidents and happenings in and around the world
நடிப்பு சொல்லிக்கொடுக்கும் இயக்குனர்: ராணுவ மேஜரின் மகளை சினிமா கதாநாயகி ஆக்குவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில், சினிமா இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஸ்ரீரங்கனின் மகன் அரவிந்த் மேத்தா(32). பளஸ் 2 படித்த இவர், சினிமா பயிற்சிக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்று நடிகராக முயன்றார்.  வாய்ப்புக் கிடைக்காததால், சொந்த ஊருக்குச் சென்று ப.ஏ., தமிழ் இலக்கியம் படித்தவர், மீண்டும் 2001 – 04ம் ஆண்டில், இயக்குனர் பயிற்சி பெற்றார்.இயக்குனர் வாய்ப்பு தேடிய போது, அதுவும் கிடைக்கவில்லை. இயக்குனராகும் ஆசையில், தி.நகர் அபபுல்லா தெருவில், 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்தார். அங்கு, “ஜீனியஸ்’ என்ற பெயரில் சினிமா பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். அப்பயிற்சி மையத்தில், 5,400 ரூபாய் கட்டணத்தில், ஆறு மாத நடிப்பு, இயக்குனர் பயிற்சி அளித்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். சில படங்களில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.“மிரர் விஷன்’ என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம், “நிலவே வருக’ என்ற புதிய படத்தை எடுப்பதாகவும், அப்படத்திற்கு புதுமுக நடிகர், நடிகைகள் தேவை என விளம்பரம் செய்தார்.

எடுக்காத படமும், பூட்டிய வீடும்: இவ்விளம்பரத்தைப் பார்த்து, திருச்சியில் ராணுவ மேஜராக பணிபுரியும் ரீட்டா(41) என்பவர் அரவிந்த் மேத்தாவை தொடர்பு கொண்டார்.பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகள் ஜெனிபரை, நடிகையாக்குமாறு கேட்டார். ஜெனிபரை ஹீரோயின் ஆக்குவதாக ஒப்புக் கொண்ட அரவிந்த் மேத்தா, படம் தயாரிக்க பணம் வேண்டும் என கேட்டார். தன் மகளை ஹீரோயின் ஆக்குவார் என நம்ப, ரீட்டா முதலில் நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கொடுத்தார். புதிய படத்திற்கு பூஜை போட்ட அரவிந்த் மேத்தா, இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும் படத்தை முடிக்கவில்லை. இதுகுறித்து ரீட்டா ஆறு மாதங்களுக்கு முன் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். விரைவில் படத்தை முடித்து வெளியிடுவதாக அரவிந்த் மேத்தா போலீசாரிடம் உறுதியளித்தார்.இந்நிலையில், கடந்த வாரம் ரீட்டா மீண்டும் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். “முன்பு போலீசில் கூறியபடி, அரவிந்த மேத்தா படத்தை முடித்து வெளியிடவில்லை. அவரது சினிமா பயிற்சி மையமும் மூடப்பட்டுள்ளது’ என, ரீட்டா புகாரில் கூறினார். இதுமட்டுமின்றி, சந்துரு, வெங்கடேசன் ஆகியோரும், அரவிந்த மேத்தா பணம் வாங்கி ஏமாற்றியதாக போலீசில் புகார் செய்தனர்.போலீசார் அபபுல்லா தெருவில் உள்ள அரவிந்த மேத்தா வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் உரிமையாளர், “அரவிந்த மேத்தா மூன்று மாதமாக வாடகை தரவில்லை. அட்வான்சில் கழித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்’ என, போலீசில் கூறினார். அரவிந்த மேத்தாவை போலீசார்  கைது செய்தனர்.

சினிமா மோகத்தால் சீரழிந்த மாணவி! பரபரப்பு தகவல்கள்!!

March 17, 2010

தனியார் திரைப்பட கல்லூரி: சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பிளஸ் 2 மாணவியிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட புதுமுக டைரக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை தி.நகர் அபிபுல்லா ரோட்டில் ஜீனியஸ் பிலிம்ஸ் சிட்டி என்ற பெயரில் தனியார் திரைப்பட கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் பெயர் அரவிந்த் ஜி மேத்தா. இவர் சொந்த தயாரிப்பாக நி‌லவே வருக என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக புதுமுக நடிகர் – நடிகைகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் சினிமா ஆசையில் அரவிந்த்தை சந்தித்தனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் அரவிந்தை அழைத்து விசாரித்ததில், படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாகவும், விரைவில் ரீலிஸ் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

பிளஸ் 2 மகளை நடிகையாக்க விரும்பிய தாயார்! இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த ராணுவ பெண் அதிகாரி ரீட்டா என்பவர் தேனாம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், டைரக்டர் அரவிந்த் பத்திரிகைகளில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து, பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த எனது மகள் ஜெனீபரை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். அரவிந்த்தை பார்த்து பேசியபோது, அவர், எனது மகளை அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக சொன்னார். இதற்காக ரூ.நான்கரை லட்சம் பணமும் கொடுத்தேன். சினிமா படப்பிடிப்பும் நடந்தது. எனது மகளும் கலந்துகொண்டு நடித்தாள். ஆனால் திடீரென்று படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. டைரக்டர் அரவிந்த்தின் அலுவலகமும் பூட்டி கிடக்கிறது. இதனால் எனது மகளின் படிப்பு வீணானதோடு, என்னுடைய பணமும் பறிபோய்விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

டைரக்டர் – அரவிந்தனின் வாக்குமூலம்: இதையடுத்து டைரக்டர் அரவிந்‌தை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனது சொந்த ஊர் மணப்பாறை. நான் திரைப்பட கல்லூரி நடத்தி வருகிறேன். எனது திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி, டைரக்ட் பயிற்சி, இசை பயிற்சி, எடிட்டிங் பயிற்சி போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். 6 மாத பயிற்சிக்கு ரூ.5 ஆயிரமும், ஒரு வருட பயிற்சிக்கு ரூ.9 ஆயிரமும் மாணவ-மாணவிகளிடம் கட்டணம் வசூலித்து வந்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவ – மாணவிகளை வைத்து “நிலவே வருக’ என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்தேன். அதன் டைரக்டரும் நான்தான். போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவி படும் கஷ்டங்களை பின்னணியாக வைத்து இந்த படத்தை எடுத்தேன். ஜெனீபர்தான் கதாநாயகியாக நடித்தார். படம் நன்றாக வளர்ந்தது. கிட்டத்தட்ட படம் முழுக்க எடுத்துவிட்டேன். 4 நாள் சூட்டிங் மட்டுமே பாக்கி இருந்தது. ஏற்கனவே ரூ.14 லட்சம் செலவு செய்துவிட்டேன். மேலும் ரூ.10 லட்சம் தேவைப்பட்டது. அந்த பணத்தை என்னால் புரட்டமுடியவில்லை. அதனால்தான் படத்தை முழுமையாக எடுத்து வெளியிடவும் முடியவில்லை. யாரிடமாவது பைனான்ஸ் வாங்கி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து வந்தேன். ஆனால் அதற்குள் ஜெனீபரின் தாயார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார். இவ்வாறு அரவிந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். அரவிந்த் மீது போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். பிளஸ்2 மாணவி தவிர, 83 வயது மூதாட்டியையும் பாட்டி வேடத்தி்ல் நடிக்க வைப்பதாக கூறி அரவிந்த் ஏமாற்றியிருக்கிறாராம். இதேபோல சினிமா கனவுகளாலும், ஆசையாலும் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் அரவிந்திடம் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி சினிமா இயக்குனர் மீது புகார்கள் குவிகின்றன
மார்ச் 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17045

Important incidents and happenings in and around the world

ரீட்டாவைத் தொடர்ந்து – கரோலின், பானு, நசீமா அக்தர்: கதாநாயகி வாய்ப்பு தருவதாகக் கூறி பெண்ணிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனருக்கு எதிராக மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தனர். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அரவிந்த் மேத்தா தங்களையும் ஏமாற்றியதாக, மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் செய்தனர். நேற்று புகார் அளித்த தரமணி எம்.ஜி.ஆர்., நகர், கலைஞர் தெருவைச் சேர்ந்த கரோலின்(22) கூறியதாவது: விளம்பரத்தைப் பார்த்து அரவிந்தை அணுகிய போது, இரண்டாவது கதாநாயகி ஆக்குவதாகக் கூறி, 35 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார். கடந்த ஜனவரி 22ம் தேதி பணம் கொடுத்தேன். கணேசன் என்பவர் தான் பணத்தை வாங்கிச் சென்றார். பணத்தை பெற்றுக் கொண்ட அரவிந்த், கால்ஷீட் டைரி, ஐ.டி., கார்டு ஆகியவற்றை கொடுத்தார். ஆனால், படப்பிடிப்பை துவக்கவில்லை; போட்டோ ஷூட் கூட நடத்தவில்லை. சில வாரம் கழித்து, ‘எப்போது படப்பிடிப்பு?’ என கேட்ட போது, காலம் கடத்தி வந்தார். மீண்டும் அலுவலகம் சென்று கேட்ட போது, ‘உன்னை சினிமா துறையில் நுழைய விடாமல் செய்து, ஆளையே காலி செய்து விடுவேன்’ என, அரவிந்த் மிரட்டினார். அப்போது அவருடன் இருந்த வாசு, ‘நானும் போலீஸ் தான்; நீ எங்கு வேண்டுமானாலும் போ’ என மிரட்டினார். இவ்வாறு கரோலின் கூறினார்.

பானுவின் அனுபவங்கள்: குழந்தை நட்சத்திரம் ஆக்க ஆசைப்பட்டாராம்!: மூலக்கடை டீச்சர்ஸ் காலனி முதல் தெருவைச் சேர்ந்த பானு(29) என்பவர் கூறியதாவது: கடந்த 2008ம் ஆண்டு குழந்தை நட்சத்திரம் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து, எனது மகள் நந்தினியை நடிக்க வைக்கும் எண்ணத்தில் அரவிந்தை அணுகினேன். என் மகளை நடிக்க வைக்க 15 ஆயிரம் ரூபாய் கேட்டதால், பணம் கொடுத்தேன். ‘இமை தேடும் கண்கள்’ என்ற படத்தில் என் மகள் உட்பட 12 குழந்தைகளை நடிக்க வைப்பதாகக் கூறினார். என் மகளை நடிக்க வைப்பதற்கான தேதியை, மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருந்தார். என்னிடம், ‘உன் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது; உன்னை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக சேர்த்து விடுகிறேன்’ எனக் கூறி, 10 ஆயிரம் ரூபாய் வாங்கினார்.

“ராத்திரிக்கு வா என்று கூட்டது”: ஒரு நாள் அலுவலகத்தில் அரவிந்தின் நண்பர் குட்டியான் பாபு, ‘நான் தான் படத்தின் டைரக்டர். நீ உண்மையிலேயே நடிக்க வேண்டும் என ஆசையிருந்தால், நான் சொல்கிறபடி நட. எனக்கு மட்டும் நீ ஒரு நாள் இரவு கம்பெனி கொடுத்தால், அடுத்த நாளே உன்னையும், உன் மகளையும் நடிகை ஆக்கி விடுவேன்’ என்றார். ‘இதே போன்று எனக்கு கம்பெனி கொடுத்த பலரை நடிகை ஆக்கியிருக்கிறேன்’ என குட்டியான் பாபு கூறினார். பயந்து போன நான், அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். என்னை தொடர்ந்து பஸ் நிலையம் வரை வந்த குட்டியான் பாபு, ‘நான் சொல்கிறபடி நடக்காவிட்டால், உன்னை சினி பீல்டிலேயே வரவிடாமல் செய்து விடுவேன்’ என மிரட்டினார். என் தம்பி சீனிவாசனை, ‘ஆயுள் தண்டனை’ என்ற படத்தில் எஸ்.ஐ., வேடத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, அரவிந்த் 20 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினார். இரண்டு நாள் சாப்பாடு கட்டணமாக 1,800 ரூபாய் வசூலித்தார். இவ்வாறு பானு கூறினார். சீனிவாசனும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியாக புகார் அளித்தார்.

மகனை நடிகனாக்க ஆசைப் பட்ட நசிமா அக்தர்! சி.ஐ.டி., நகரைச் சேர்ந்த நசீமா அக்தர்(35) அளித்த புகாரில் கூறியதாவது: என் மகனை நடிக்க வைக்க 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிய அரவிந்த், மகனுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றார். இதை நம்பி, அரவிந்திடம் 50 ஆயிரம் பணம் கொடுத்தேன். என் மகனை நடிக்க வைக்காததால், அரவிந்திடம் பணத்தை திருப்பிக் கேட்டேன். கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி 6,000 ரூபாய்க்கு செக் கொடுத்தார். வங்கியில் கேட்ட போது, அந்த வங்கிக் கணக்கே இல்லை என தெரிவித்தனர். மற்றொரு வங்கியில் கொடுத்த செக்கும் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. ‘செக் வேண்டாம்; பணமாகக் கொடு’ என கேட்ட போது, ‘இன்னும் ஒருமுறை இங்கே பணம் கேட்டு வந்தால், உன் பிணம் தான் இங்கே இருக்கும்’ என மிரட்டினார். இவ்வாறு நசீமா அக்தர் கூறினார்.

இரண்டாவது கதாயனாக ஆசைப்பட்ட மணிக்குமார்! கிண்டி மடுவங்கரை, புதுத் தெரு மசூதி காலனியைச் சேர்ந்த மணிகுமார்(24) கூறியதாவது: விளம்பரத்தைப் பார்த்து அரவிந்தை அணுகிய போது, ‘தாய் தந்தை தாரம்’ என்ற படத்தை எடுக்கிறேன். உன்னை இரண்டாவது கதாநாயகன் வேடத்தில் நடிக்க வைக்கிறேன்’ எனக் கூறி, 16 ஆயிரம் ரூபாய் கேட்டார். மேக்கப் டெஸ்ட், வாய்ஸ் டெஸ்ட், போட்டோ எடுக்கவும் பணம் கேட்டார். மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். என்னை வைத்து போட்டோ எடுத்தார். அதன் பிறகு, எந்த சரியான பதிலும் சொல்லவில்லை. கடைசியாக ஜனவரி 22ம் தேதி கேட்ட போது, ‘எனக்கு நிறைய ஆள் செல்வாக்கு உள்ளது; உன்னை ஆளே இல்லாமல் செய்து விடுவேன்’ என மிரட்டினார். இவ்வாறு மணிகுமார் கூறினார்.

சினிமா ஆசையை பயன்படுத்திக் கொண்ட சினிமா ஸ்டை மோசடி: அரவிந்த் மேத்தாவுடன், மேலும் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாக புகார் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் முழுமையாக விசாரணை நடத்தினால், மேலும் சிலர் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரவிந்த் மேத்தா, சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம் ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்? சினிமா இயக்குனர் அரவிந்த் மேத்தா மீது நேற்று மேலும் பலர் புகார் கொடுத்தனர். வேலூரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார். சாந்தியைப் போல், தமிழகம் முழுவதும் பலரை அரவிந்த் மேத்தா ஏமாற்றி பணம் வசூலித்துள்ளார். ஏமாந்தவர்களில் மேலும் சிலர் இன்று புகார் செய்ய வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அரவிந்த் மேத்தா, தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்டிருப்பதால், இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது. இக்கும்பல் பல பெண்களை ஆசை வார்த்தை கூறி கற்பழித்திருக்கக் கூடும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் மேத்தாவை, மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு அரவிந்த் மேத்தாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தும் போது, அவரிடம் ஏமாந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் குறித்து மேலும் விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் வழக்கமாக நடப்பது தான். ஏதோ “டிப் ஆஃப் தி ஐஸ் பர்க்” (பனிக்கட்டியின் நுனியைத் தட்டிவிடுவது போல) என்பார்களே அது போல ஒரு துளி தான் சிதறியிருக்கிறது!

கோடம்பாக்கத்தில் இதெல்லாம் 60ற்கும் மேற்பட்ட வருடங்களாக சகஜமாக நடக்குன் விஷயங்கள்தாம்!

இதைப்போல பிரபலமில்லாத, பிரபலமிழந்த, நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பார்கள்………….பல கதைகளை, மன்னிக்கவும், உண்மைகளை முழு விவரங்களுடன் சொல்லுவார்கள்.

கேட்டால் திகைக்கக்கூடியதாக இருக்கும்.

ஏனெனில் அவ்வாறான விஷயங்களில் இப்பொழுதுள்ள பிரபலங்கள் சம்பந்தப் பட்டிருப்பதால்தான்!