பாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா? – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது!
தொப்புளைக் காட்டியது யார்?: முந்தைய பதவில், “நடிகையின் சுயமரியாதை பெரியதா, தமிழக ரசிகர்களின் உரிமை பெரியதா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம், தமிழர்களுக்கு வந்து விட்டது”, என்று குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது தொப்புளைக் காட்டியது நஸ்ரியாவா, இல்லையா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம் வந்து விட்டது போலும்! தமிழர்ட்களுக்கு நன்றக வேண்டும், இத்தகைய செய்திகள் தாம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.
‘இனிக்கஇனிக்க…’ பாடல்காட்சியில்நடித்திருப்பதுநஸ்ரியாதான்: நய்யாண்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நஸ்ரியா ஒரு பாடல் காட்சியில் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை வைத்து முழு பாடலையும் எடுத்திருப்பதாகவும், அந்த பாடல் காட்சி மிகவும் கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் சற்குணம், ‘இனிக்க இனிக்க…’ பாடல் காட்சியில் நான் எந்த இடத்திலும் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாதான், வேறு யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அதாவது, நடித்துள்ளது நஸ்ரியாதான், நடித்த நடிகை தொப்புளைக் காட்டியிருந்தால், அதுவும் நஸ்ரியாதான் என்று விளக்கம் போலும்!
ஒருவேளைதன்னுடையமார்க்கெட்டிங்பப்ளிசிட்டிக்காகசெய்கிறார்போலிருக்கிறது: மேலும் அவர் கூறுகையில், படத்தை எடிட்டிங் செய்யும் போது ஒரு காட்சியில் க்ளோஸ் அப் ஷாட் தேவைப்பட்டது. இதற்காக அவரை படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் CONTENT பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது. நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போ என்று அழைத்த போது[1], “நான் கேரளாவில் இருந்து வரமுடியாது; வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார். ஆனால் நஸ்ரியாவால் மீடியா நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து விட்டு, பாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதையும் தான் கூறிக்கொள்ள விரும்புவதாக அந்தப் படத்தின் இயக்குநர் சற்குணம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்[2]. கமிஷனர் அலுவலகம், நீதிமன்றம் என அவர் போகத் தொடங்கிவிட்ட நிலையில், தன் பக்க விளக்கத்தை மீடியாவுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் சற்குணம். ஒருவேளை தன்னுடைய மார்க்கெட்டிங் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் போலிருக்கிறது, என்றும் கூறியுள்ளார்.
தற்போதுடிரைலரில்வரும்அந்தக்ளோஸ்அப்ஷாட்உறுத்தலாகஇருந்தால்அதைநீக்கவும்தயார்: விஸ்வரூபம் போன்று, இங்கும் ஆரம்பித்து விட்டது போலும். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார், என்றால், திரைப்படத்தில் அப்படியே இருக்குமா? நஸ்ரிமா அப்பொழுது ஒப்புக்க்கொள்வாரா? இல்லை, பிரச்சினையைத் தொடர்வாரா? பேசாமல், நஸ்ரியாவை சென்சார் போர்ட் உறுப்பினராக போட்டு விடலாம். நாடு உருப்பட்டு விடும்.
© வேதபிரகாஷ்
08-10-2013