Posts Tagged ‘தூக்கு’

நடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது!

செப்ரெம்பர் 22, 2016

நடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது!

twists-and-turns-jia-khan-case

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிளம்பியுள்ள கொலையா-தற்கொலையா பிரச்சினை: பாலிவுட் நடிகை ஜியாகான் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அர்த்தத்தில் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது பணம் பெற்று ஆய்வு செய்யும் தனியார் நிறுவனத்தின் முடிவு தான். எனவே, இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஜியா கானின் காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி. இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம் இந்தி நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது[1]. பிரபல இந்தி நடிகை ஜியாகான், தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘கஜினி’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த போது அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தார்[2]. மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பிரச்சினை மறுபடியும், ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

mid-day-cutting-jia-khan-caseஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது: ஜியாகான் 2013–ல் திடீரென்று தூக்கில் பிணமாக தொங்கினார்[3]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியும் ஜியாகானும் தீவிரமாக காதலித்ததும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது[4]. இந்த மனவேதனையால் அவர் தூக்கில் தொங்கி உயிர் இழந்தார் என்றனர். வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளும் இதனை உறுதிபடுத்தினர். ஆனால் ஜியாகான் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறிவந்தனர். இந்த நிலையில் ஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் அறிக்கையை தற்போது சமர்ப்பித்து உள்ளனர். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது. இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jason-payne-james-of-uk-basedதாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தது: நிஷப்த், இந்தி கஜினி உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்தவர் ஜியா கான். 2007ம் ஆண்டு அமிதாப் ஜோடியாக அறிமுகமான இவர், கடந்த 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்ததாகவும், காதலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட மறு மாதமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஜியா கான் வழக்கை விசாரித்த சிபிஐ இது ராபியா கூறுவது போன்று கொலை அல்ல தற்கொலை தான் என்று கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

mothers-charges-jia-khan-caseஜோடிக்கப்பட்ட தற்கொலை என்று இங்கிலாந்து புலனாய்வு நிறுவனம் கூறுவது[5]: சிபிஐ அறிக்கை தாக்கல் செய்த பிறகு ராபியா இங்கிலாந்தை சேர்ந்த பெய்ன் ஜேம்ஸ் [Jason Payne-James of UK-based Forensic Healthcare Services Ltd[6]] என்ற தடயவியல் நிபுணரை அணுகி விசாரிக்குமாறு கூறினார்[7]. அவர் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஜியாவின் சடலத்தின் புகைப்படங்கள், சிசிடிவி வீடியோக்கள், ஜியாவின் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக தங்களது அறிக்கையை பெய்ன் அளித்துள்ளார். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர்[8]. அழுத்தில் உள்ள காயங்களின் அடையாளங்கள் துப்பட்டாவினால் கூட ஏற்பட்டிருக்கலாம், அதாவது, யாராவது, துப்பட்டாவினால், கழுத்தை நெறுத்திருக்கலாம். பிறகு, தற்கொலை செய்து கொண்டது போல, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது.

sooraj-pancholi-abetment-facing-speedy-death-suicide-ht-photoதந்தை-மகன் கூறும் விசயங்கள்: இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா, “இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படும் தனியாருக்குச் சொந்தமானது. எனவே அது ஒருபட்சமான அறிக்கையை அளித்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஜியாவின் மரணம் குறித்து ஆய்வு செய்த பல்வேறு நிறுவனங்கள் அது தற்கொலை தான் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை அறிய நானும் ஆவலாகத் தான் உள்ளேன். ஏனென்றால் என் காதலியை இழந்து நானும் வேதனையில் தான் உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளனர்[9]. சூரஜ் பஞ்சோலி[10], “எந்த குற்றஞ்சாட்டப்பட்டவனும், நீதிமன்றம் விசாரிக்க வேண்டும், விசாரிக்கத் தயார் என்று சொல்ல மாட்டான். ஆனால், நான் தயாராக இருக்கிறேன். இதெல்லாம் என்னுடைய வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, என்னுடைய வழக்கை ஊடகங்கள் தான் விசாரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வழக்கு செல்வதற்கு முன்பே, அவை தீர்ப்பையும் அளிக்கின்றன.” இப்படி ஊடகக்காரர்கள் மீதும் குறைகூறினார்[11].

jiah-khan-funeral

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்?: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவை அப்பொழுதே உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முடியவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது. அத்தகைய தற்கொலை பட்டியக், இந்திய திரைவுலகில் நீண்டு கொண்டே இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

22-09-2016

pancholi-attended-funeral-of-jia-khan

[1] தினத்தந்தி, வழக்கில் புதிய திருப்பம் நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டாரா? இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரபரப்பு தகவல், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST

[2] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/09/22010824/Jiyakan-actress-had-been-killed.vpf

[3] பிலிம்.பீட்.தமிழ், நடிகை ஜியா கான் தற்கொலையில் புதிய திருப்பம்: தடயவியல் நிபுணரின் பகீர் ரிப்போர்ட், Posted by: Siva, Updated: Wednesday, September 21, 2016, 17:44 [IST].

[4] http://tamil.filmibeat.com/news/actress-jiah-khan-s-suicide-case-takes-new-turn-042345.html

[5] Times of India, Jiah Khan’s hanging staged: UK expert, Munish Pandey| Mumbai Mirror | Updated: Sep 20, 2016, 08.38 AM IST.

[6] http://www.payne-james.co.uk/new-role-and-overseas-work/

[7] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Jiah-Khans-hanging-staged-UK-expert/articleshow/54418518.cms

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஜியாகான் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.. காதலர் சூரஜ் நம்பிக்கை, By: Jayachitra, Updated: Thursday, September 22, 2016, 11:46 [IST]

[9] http://tamil.oneindia.com/news/india/jiah-khan-s-hanging-staged-uk-expert-263403.html

[10] The Hindusthan Times, Jiah Khan case: New report suggests suicide was staged, Sooraj Pancholi reacts, HT Correspondent, Hindustan Times, New Delhi, Updated: Sep 21, 2016 14:22 IST

[11] http://www.hindustantimes.com/bollywood/jiah-khan-case-new-report-suggests-suicide-was-staged-sooraj-pancholi-reacts/story-NkyNriCYbnkcgH1l8mYoXK.html

 

ஷோபனா தற்கொலை: நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (1)?

ஜனவரி 12, 2011

வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் நடித்துள்ள ஷோபனா தற்கொலை[1]: நடிகர் வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட நிறைய நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா (வயது 32). திருமணமாகாத இவர், தனது தாயார் வைரம்ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ‘எச்’ பிளாக்கில் வசித்து வந்தார். நேற்று காலை 10.30 மணிkdkg தாயார் ராணி வங்கிக்கு போய்விட்டார். வீட்டில் தனியாக இருந்த ஷோபனா திடீரென்று தற்கொலை முடிவை எடுத்துள்ளார். கதவை உள்பக்கம் சங்கிலியால் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு ஷோபனா உயிரை விட்டுவிட்டார்.  வங்கிக்கு போய்விட்டு திரும்பி வந்த தாயார் ராணி கதவை நீண்டநேரம் தட்டி பார்த்தார். கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். மகள் ஷோபனா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஷோபனாவை எடுத்து சென்றனர். டாக்டர்கள் சோதித்து பார்த்துவிட்டு, ஷோபனா ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர்.

துயரத்தில் சுற்றுப்புறம், உறவினர்கள்: ஷோபனா தற்கொலை மூலம் உயிரைவிட்ட சம்பவம் கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ஷோபனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷோபனாவின் உடலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி சடங்குகள் நடக்கிறது.

ஏன் இந்த தற்கொலை? ஷோபனா தற்கொலை செய்து கொண்டதில் பெரும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் வைரம் ராணி கூறுகையில், “எங்கள் குடும்பமே சினிமா குடும்பம். நானும், நாடகம் மற்றும் சினிமாவில் நடித்துள்ளேன். எனது கணவர் ஜெயராமனும் நாடக நடிகர்தான். எனது மூத்த மகள் ஆனந்தி, டைரக்டர் குருசங்கரை மணந்துகொண்டு தியாகராய நகரில் தனியாக வசிக்கிறாள். ஷோபனா எனக்கு 2-வது மகள். பி.காம். பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். 15 வயதிலிருந்தே அவள் நாடகங்களில் நடித்து வந்தாள்.

மீண்டும் மீண்டும் சிரிப்பு…வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சினிமாவிலும், நாடகங்களிலும் நடித்திருக்கிறாள். நடிகர் வடிவேலுவுடனும் நிறைய படங்களில் ஜோடியாக நடித்துள்ளாள். ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ என்ற டி.வி. சீரியலில் வெண்ணிற ஆடைமூர்த்தியோடு நடித்து ஷோபனா பிரபலமானாள். ‘ஜில்லுன்னு ஒரு காதல்’, ‘சுறா’ உள்பட 100 படங்களில் நடித்துள்ளாள். ‘இளைஞன்’, `சிறுத்தை’ உள்பட அவள் நடித்துள்ள இன்னும் 10 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன[2]. ‘மாமா மாப்ளே’ டி.வி. தொடரிலும் ஷோபனா நடித்துக் கொண்டிருந்தாள்.

காதல் ஏமாற்றம்… ஒரு ஆள் காதலித்து திருமணம் செய்வதாக கூறிவிட்டு, ஷோபனாவை ஏமாற்றிவிட்டான். அது, அவளுடைய மனதில் ஆறாத துயரமாக இருந்தது. நான் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஷோபனா இனிமேல் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள்[3]. ‘சிக்குன்குனியா’ நோயால் பாதிக்கப்பட்டு அவள் அண்மையில் மிகவும் கஷ்டப்பட்டாள். சினிமா, டி.வி. தொடர் படப்பிடிப்புக்கு கூட அவளால் போக முடியவில்லை. என் மகள் மிகவும் நல்லவள். சினிமாவில் நடித்தாலும்கூட அவள் எந்த தப்பும் செய்யாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள். அவளுடன் நடிக்கும் சக நடிகர்-நடிகைகள் மிகவும் நல்ல பெண் ஷோபனா என்று தான் பாராட்டுவார்கள். சினிமா, டி.வி. தொடரில் நடிப்பதற்காக ஷோபனாவுக்கு கிடைக்கும் பணத்தை வங்கி காசோலையாகத்தான் தருவார்கள். அதுபோல கிடைத்த ஒரு காசோலையை வங்கியில் போடுவதற்காக நான் காலை 10.30 மணியளவில் அருகில் உள்ள வங்கிக்கு போனேன். நான் போகும்போது ஷோபனாதான் எனக்கு 2 தோசை சுட்டுக்கொடுத்தாள். டீயும் போட்டுக்கொடுத்தாள். அப்போது அவளுடைய மனதில் எந்தவித சஞ்சலமோ, வருத்தமோ இருந்ததாக தெரியவில்லை.
வங்கியிலிருந்து திரும்பி வந்த தாயார் அதிர்ச்சி: சமையலுக்கு கீரை வாங்கி வைத்திருந்தோம். அந்த கீரையை நறுக்கி வேகவைத்துவிட்டு நான் குளிக்க போகிறேன். அதற்குள் நீங்கள் வந்துடும்மா, என்று ஷோபனா சிரித்துக்கொண்டே என்னை வங்கிக்கு அனுப்பி வைத்தாள். ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, என் மகள் தூக்கில் தொங்கினாள். தூக்கில் இருந்து கீழே இறக்கியபோதுகூட அவளுக்கு உயிர் இருந்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் அவளை பிழைக்க வைத்திருக்கலாம். தூக்கில் இருந்து இறக்கி வைத்து ஒரு மணி நேரம் கழித்துத்தான் அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். இதனால் அவளை காப்பாற்ற முடியவில்லை. அவள் இந்த தற்கொலை முடிவை எடுத்ததற்கு என்ன காரணம்? என்று எனக்கும் புரியாத புதிராக உள்ளது. கடிதம் எதுவும் அவள் எழுதி வைக்கவில்லை…” – இவ்வாறு தாயார் ராணி கண்ணீர்விட்டு கதறி அழுதபடி தெரிவித்தார்.

டைரக்டரை, ஷோபனா காதலித்ததாரா? ‘உங்கள் குழுவில் உள்ள டைரக்டரை, ஷோபனா காதலித்ததாக கூறப்படுகிறதே?’ என்று வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் கேட்டபோது, ‘‘அவர் நல்ல நடிகை மட்டுமல்ல, டிசிப்ளினான பெண். அவரிடம் பேசும்போது நடிப்பு பற்றி மட்டும்தான் பேசுவேன். சொந்த வாழ்க்கை பற்றி கேட்டதில்லை. டைரக்டர் அல்லது வேறு யாரையாவது அவர் காதலித்தாரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது’’ என்றார்[4]. நடிகை ஷோபனாவின் தற்கொலையில் மர்மம் இருப்பதால் போலீசார் அவரிடம் நெருக்கமாக பழகியவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை ஷோபனா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷோபனாவின் சோக முடிவுக்கு காதல் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஷோபனாவின் வீட்டிலிருந்து ஒரு டைரியை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. அதில் ஷோபனா என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஷோபனாவின் தாயார் சமீப காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். அம்மாவும் போய்விட்டால் தனது எதிர்காலம் பற்றிய கவலையில் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஷோபனாவின் திடீர் தற்கொலை தமிழ் சினிமா வட்டாரத்திலும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேதபிரகாஷ்

12-01-2011