Posts Tagged ‘நடனம்’

நயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்!

திசெம்பர் 27, 2016

நயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்!

nayanthara-dressing

நடிகைகளின் குத்தாட்டம் – விவகாரங்கள்: நடிகைகளின் உடை, அத்தகைய உடையோடு, நடனம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அவற்றைப் பற்றிய விமர்சனம் என்று வந்தால், அவர்களுக்கே பொறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது போலும். இப்பொழுதெல்லாம் “குத்தாட்டம்” என்று பெரிய-பெரிய நடிகைகள் ஆடத் தயாராக உள்ளார்கள். அவர்களில் இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகள் வேறு. அந்நிலையில் உள்ளூர் நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார்கள். கோடிகளில் பணம் கொடுப்பதால், நடிப்பதை விட, இப்படி ஆடுவதற்கு முன்னணி நடிகைகளும் தயாராக உள்ளார்கள். நிச்சயமாக பெரியவர்கள் பார்த்தாலே அருவருப்பாக உள்ளநிலையில், அசிங்க ஆட்டமும், ஆபாச பாட்டமும் உள்ளன. ஒரு நடனமாடும் பெண்ணைச் சுற்றி 30-40-50 ஆண்கள் இரையைச் சுற்றி வருவது போன்று வலம் வருவது, முகர்ந்து பார்ப்பது, தூக்கிப் போட்டுப் பிடிப்பது, போன்ற சேட்டைகளுக்கும் குறைவில்லை. சும்மா இருப்பவனையும் உசுப்பி விடும் வகையில் தான் இருக்கின்றன. ஆகவே, அவற்றின் பின்னணியில் உள்ள அனைவருமே அத்தகைய, அசிங்கம், ஆபாசம், அருவருப்பு முதலியவற்றிற்கு பொறுப்பாவார்கள். உடலைக் காட்டத் தயாராகி விட்டநிலையில், இவர்கள் பேச்சும் “பெண்ணுரிமை” பேச்செல்லாம் ஒருமாதிரியாக இருந்தாலும், சமுதாயம் உருப்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட பெண்கள்-ஆண்கள் இரு வகையறாக்களும் மாற வேண்டும்.

helen-jyoti-lakhsmi-dancresஹெலன், ஜோதிலட்சுமி, வகையறாக்களை மிஞ்சிவிட்டார்களா இக்கால நடிகையர்?: “பணம் கொடுத்தால் ஆடைகளை களைவார்கள் என்று நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா, நாங்கள் எல்லோரும் அவிழ்த்து போட்டும் ஆடுபவர்கள் அல்ல,” [We are not strippers – Nayanatara] என்று நயனதாரா காட்டமாக பதில் கூறியுள்ளார்[1].  இதில் பணப்பிரச்சினையா, மானப்பிரச்சினையா என்று தெரியவில்லை[2]. “எல்லோரும் அவிழ்த்து போட்டும் ஆடுபவர்கள் அல்ல,” என்று, “இந்தியா டுடே”வும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[3]. ஆகவே உடை குறைத்து, உடையில்லாமல், நிர்வாணமாக நடிப்பது-ஆடுவது என்ற பிரச்சினை வெளிவந்துள்ளது[4]. இனி விவாதிக்க தயாராகி விடுவார்கள். நடிப்பது அவர்கள் தொழில் எனும்போது, “நாய் வேடம் போட்டால் குரைக்க வேண்டும்”, என்பது போல, “கிளப் டான்ஸர்” எனும் போது, அப்படித்தான் நடிக்க வேண்டும். 30-40  வருடங்களுக்கு முந்தைய ஹெலன் என்ற நடன நடிகையை இவர்கள் மிஞ்சி விட்டார்களா என்று தெரியவில்லை. அதே போல, தென்னிந்திய திரையுலகத்தில், ஜோதிலட்சுமி ஆடாத ஆட்டம் இல்லை. அத்தகைய ஆட்டத்திற்கும், பாட்டிற்கும் ஓடிய படங்களும் உள்ளன.

nayantara-suraaj-tamanna-26-12-2016ஏன் குறைந்த உடை, அரைகுறை உடை, ஏனோதானோ உடைகளில் நடிகைகள் நடிக்கஆட வேண்டும்: “நடிகைகள் குறைந்த உடையில் இருப்பதை ரசிகர்கள் விரும்புகிறார்கள்”, என்ற தொணியில் பேசிய டைரக்டர் சுராஜுக்கு, நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[5]. “ஏனோ-தானோ உடையில் நடித்தால் தான் கிளாமர், அதற்கு நடிகைகள் தயாராக இருக்க வேண்டும்”, என்ற தோணியிலும் நீட்டியுள்ளார்[6].  “நியூஸ்-எக்ஸ்” ஆங்கில செனல், இதைப்பற்றிய விவாதத்தையே 26-12-2016 அன்று வைத்து விட்டது. முதலில், “குறைந்த உடை, அரைகுறை உடை, ஏனோ-தானோ உடைகள்” என்றால், அவை எப்படி வரையறுக்கப்படு, யார் செய்வார்கள், ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. “உடலை மறைக்க ஆடையா, ஆடையை மறைக்க உடையா?”, என்ற நிலையில் தான் நடிகைகள் ஆடி வருகிறார்கள். எது குறைந்தால், எது அதிகமாகும் – நேர் விகிதமா, எதிர் விகிதமா, தலை கீழ் விகிதமா – என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே, கற்பழிப்பு விசயத்தில், பெண்கள் ஆபாசமாக, ஈர்க்கும் வகையில் ஆடை அணிவதால் தான், அத்தகைய குற்றங்கள் ஏற்படுகின்றன, என்று சமூக சேவகி, போலீஸ் அதிகாரி முதலியவர்கள் கருத்துத் தெரிவித்தபோது, நடிகைகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். “நாங்கள் எப்படி ஆடை அணிவது என்பதனை நீங்கள் தீர்மானிக்க முடியாது”, என்றெல்லாம் ஆர்பாட்டத்தோடு கருத்துத் தெரிவித்தார்கள். இப்பொழுது, நடிகைகளுக்கே, அப்பிரச்சினை வந்து விட்டது.

suraj-comment-and-apology-26-12-2016சுராஜ் தெரிவித்த சர்ச்சையான கருத்து: விஷால் – தமன்னா ஜோடியாக நடித்த ‘கத்திச்சண்டை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில், தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக சுராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுராஜ் கூறும்போது, “‘நான் சாதாரண கீழ் வர்க்க ரசிகர்களுக்காக படம் எடுப்பவன். ரசிகர்கள் பணம் கொடுத்து படம் பார்க்க வருகின்றனர். நடிகர்கள் கஷ்டப்பட்டு சண்டைபோடவேண்டும், நடிகைகள் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கதாநாயகிகள் புடவைக்கட்டிக்கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த வகையில்தான் தமன்னாவைகத்திச்சண்டைபடத்தில் கவர்ச்சியாக நடிக்க வைத்தேன். கவர்ச்சியாக நடித்த நடிகைகள்தான் பெரிய கதாநாயகிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். ரூ.1 கோடிக்கு மேல் நடிகைகள் சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் டைரக்டர் சொல்கிறபடி கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். நடிப்புத்திறமையை காட்டுவதற்கு வேறு கதைகளும், டெலிவிஷன் தொடர்களும் இருக்கின்றன. எனது படங்களில் நடிகைகளை கவர்ச்சியாக நடிக்க வைத்துவிடுவேன்,” என்று கூறியிருந்தார்[7].

nayatara-and-tamanna

கமர்ஷியல் படம் என்றால், கிளாமராகத்தான் நடிக்க வேண்டும்: “நடிகைகள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நினைத்தால், அதற்கான படத்தில் நடிக்க வேண்டியதுதான். கமர்ஷியல் படம் என்றால், கிளாமராகத்தான் நடிக்க வேண்டும். கிளாமராக நடித்தவர்கள்தான் இன்றைக்கு முன்னணி ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதற்குப் பிறகு வேண்டுமானால் டி.வி சீரியல்களில் முக்கியமான வேடங்கள் கிடைக்கக்கூடும். கிளாமராக நடிக்கும்போது, ரசிகர்களை உற்சாகப்படுத்தும்விதமாக நடிக்க வேண்டும். அதற்காகத்தான் கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொல்வேன். கத்தி சண்டைபடப்பிடிப்பில் காஸ்ட்யூம் டிசைனர், தமன்னாவின் கால்கள் முழுவதையும் மூடி இருக்கும்படி டிரெஸ் எடுத்துக்கொண்டு வருவார். உடனே நான், ‘அந்த டிரெஸ்சை கொஞ்சம் கட் பண்ணி கொண்டு வாஎன்று சொல்வேன். உடனே காஸ்ட்யூமர், ‘இல்ல சார். மேடம் திட்டுவாங்கஎன்பார். ‘மேடம் கிட்ட போய் சொல்லு. படம் பார்க்கிற ஆடியன்ஸ் என்னை உதைப்பார்கள். ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கறாங்க. நடிக்கச் சொல்லுஎன்று சொல்வேன். எப்படியும் நான் அவர்களை வேலை வாங்கிவிடுவேன்’” என்று பரபரப்பாக பேட்டி கொடுத்திருந்தார்.

tamanna-response-26-12-2016தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா?: இந்த கருத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா, தமன்னா ஆகியோர் டைரக்டர் சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நயன்தாரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு[8]: “சினிமா துறையைச் சேர்ந்த பொறுப்பான ஒருவர் இப்படி கீழ்த்தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார். நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு சுராஜ் யார்?. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக கதாநாயகிகள் ஆடைகளை களைந்துவிடுவார்கள் என்று அவர் கருதுகிறாரா? ஆடைகளை களைபவர்கள் தான் நடிகைகள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர் கதாநாயகிகளை பார்க்கிறாரா?. தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா?. ‘தங்கல், பிங்க்போன்ற இந்தி படங்கள் பெண்களின் பெருமையை பேசக்கூடியவைகளாக இந்தகாலத்தில் திரைக்கு வந்துள்ளன. அவற்றில் பெண்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது பற்றியும், பெண்களுக்கான மரியாதை குறித்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. பெண்களை உயர்வாக  மதித்து படங்கள் வெளியாகும் இந்த காலக்கட்டத்தில், பெண்களை அவமதிக்கும் சுராஜ், எந்த காலக்கட்டத்தை சேர்ந்தவர் என்று புரியவில்லை[9]. நடிகைகள் கவர்ச்சி உடைகளை கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அணிகின்றனர். ரசிகர்கள் கவர்ச்சி பொம்மைகளாக நடிகைகளை பார்க்கத்தான் பணம் கொடுத்து தியேட்டருக்கு வருகிறார்கள் என்று எந்த ரசிகர்களை மனதில் வைத்து சொல்கிறார் என்று புரியவில்லை[10].

 

© வேதபிரகாஷ்

27-12-2016

bollyhood-dance-culture

[1] gulte.com, We are not strippers – Nayanatara, December 26th, 2016, 07:00 PM IST

[2] http://www.gulte.com/movienews/54623/We-are-not-strippers-Nayanatara

[3] Indian today, Nayanthara on director Suraaj’s anti-women remarks: Heroines are not strippers, IndiaToday.in | Written by Srivatsan, New Delhi, December 26, 2016 | UPDATED 19:01 IST

[4] http://indiatoday.intoday.in/story/nayanthara-tamannaah-slam-director-suraaj-for-misogynist-remarks/1/843211.html

[5] thequint.com, Tamil Actresses Slam Director For Asking Them to Dress ‘Skimpily’, December 26, 2016.

[6] https://www.thequint.com/women/2016/12/26/tamanaah-nayanthara-suraj-cinema-tamil-actresses-slam-director-for-asking-them-to-dress-skimpily

[7] தினத்தந்தி, நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா? டைரக்டர் சுராஜ் மீது நயன்தாரா, தமன்னா பாய்ச்சல், பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 27,2016, 1:05 AM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 27,2016, 4:30 AM IST.

[8] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/12/27010541/Nayan-Tamanna-Flow.vpf

[9] தினகரன், நடிகைகள் வெறும் கவர்ச்சிப் பொம்மைகளா?: இயக்குநர் சுராஜ் மீது நயன்தாரா கடும்தாக்கு, Date: 2016-12-27@ 01:13:02

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=268368

பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை?

ஏப்ரல் 26, 2016

பிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை?

can beggars start dancing

மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு எதிரான சட்டமும், மேற்முறையீடும்: மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றியது. இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள்,  நாடக அரங்குகள்,  கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது[1].

India has been haven for pedophilesமாநில சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மஹாராஷ்ட்ர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போலல்லாது, விபச்சாரம் அனுமதிக்கப் பட்டுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூகம் சீரழியும் நிலையில், மது, மாது, நடனம் எல்லாமே முடிவில் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்நிலையில் தான் அச்சாட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. மதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
  2. இரவு30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
  3. மதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
  4. அழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
  5. அழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.
  6. 25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.
  7. 25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
  8. லைசென்ஸ் இல்லாமல் விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் நடைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும், ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[2].

give us money - prostitution or just beggingமார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணை மற்றும் மாநிலத்தில் செய்ய முடியாத நிலை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது[3]. ஆனால், நடைமுறையில் சில பிரச்சினைகள் இருந்ததினால் காலதாமதம் ஆகியது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது[4]. ஆனால், கிளப் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.

neither begggar nor prostituteபெண்ணுரிமை போராட்டங்கள் நடத்தும் பெண்களின் முரண்பாடான போக்கு: மேலும் மஹாராஷ்ட்ரத்தில் தொடர்ந்து பல பிரச்சினைகளை அரசியல் ரீதியில் எழுப்பி, அவற்றை நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் சென்று இத்தனை ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினைகளையும் கிளப்பி வருகின்றனர். சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற போராட்டங்களை சில பெண்கள் இயக்கம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், இதே பெண்ணியக்கங்கள், மஹாராஷ்ட்ரத்தில் விபச்சாரம் கூடாது, பப்-டான்ஸ் கூடாது, பெண்கள் சீரழியக்கூடாது, ஒழுக்கம்-கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கோரி ஏன் ஆர்பாட்டங்களை நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் கற்பு, தூய்மை, தாய்மை, மேன்மை, குடும்பத்தை நடத்தும் தன்மை…..இவையெல்லாம் பிரதானமான, முக்கியமான, வாழ்வாதாரமான பிரச்சினைகளா அல்லது சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற முக்கியமானதா என்று பெண்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. மெத்தப் படித்த நீதிபதிகளும் அத்தகைய முரண்பட்ட போக்கைச் சுட்டிக் காட்டவில்லை.

மும்பை நடன பெண்கள்.6பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து: இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 24-04-2016 அன்று விசாரித்தது[5]. அப்போது, ‘டான்ஸ் பார்’கள் தரப்பில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது’ என, நடனமாடும் பெண்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது[6]. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்பதற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது[7]. மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை. வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்…………,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[8].  தொடர்ந்து, “விபச்சாரம் உள்ளிட்ட வேறு விஷயங்கள் மூலம் பணம் ஈட்டுவதை காட்டிலும், விடுதிகளில் நடனம் ஆடுவது ஆபாசமான, கேவலமான விஷயம் அல்ல என கருத்து தெரிவித்தனர்.  மேலும் விடுதிகளில் நடனமாடுவதை ஒரு கலையாக பார்க்க வேண்டும் என்றும், அது ஆபாசமாக மாறும் பட்சத்தில், அது சட்ட பாதுகாப்பை இழக்கும்”, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[9]. 

 mumbai_dance_bars_dancers_640x360_bbc_nocredit

பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை: மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[10]. மேலும், ‘டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, ‘ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்[11]. உச்சநீதி மன்றம் ஒரு பக்கம்“பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை,” என்று கூறுவதும், இன்னொரு பக்கம் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு கூறுவதும் முரண்பாடாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் இத்தகைய செயலையும், வேலையாக செய்யலாம் என்றால், பிறகு, அத்தொழிலை பள்ளிகளுக்கு அருகில் ஏன் செய்யக் கூடாது என்ற தத்துவத்தை நீதி மன்றம் விளக்கலாமே? பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும்? ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா? யார் “சிறுவன்” அல்லது யார் “வயதுக்கு வந்த பெரியவன்”, குற்றவியல் சட்டத்தின் படி, கற்பழித்தால் கூட அவனை அவ்வாறு கருதி உரிய தண்டனை கொடுப்பதிலேயே அவர்களுக்குள்ள சட்டப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பிறகு இத்தகைய தார்மீக விசயங்களை நீதிபதிகள் ஏன் மாறுபட்ட நசிந்தனைகளுடன் அணுகி குழப்ப வேண்டும்?

© வேதபிரகாஷ்

26-04-2016

[1] http://www.vikatan.com/news/india/63085-better-to-dance-than-to-beg-says-supreme-court.art

[2] விகடன், பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்‘: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!, Posted Date : 18:41 (25/04/2016)

[3] மாலைமலர், வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம், பதிவு: ஏப்ரல் 25, 2016 15:46.

[4] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/license-for-women-dance-bar-supreme-court-116042500041_1.html

[5] வெப்துனியா, பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரிமம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)

[6] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 26,2016 00:24

[7] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 25,2016 15:53.

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/25154616/1008388/Better-to-dance-in-bars-than-beg-on-streets-Supreme.vpf

[9] http://ns7.tv/ta/nasty-not-act-dancing-supreme-court.html

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508964

[11] http://www.dinamalar.com/news_detail.asp?id=1509337

குடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன!

ஏப்ரல் 23, 2016

குடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன!

மும்பை நடன பெண்கள்.5

பம்பாயும், மும்பையும், விபச்சாரமும்: ஆங்கிலேயர் காலத்திலேயே பம்பாய் “சிகப்பு விளக்கு ஏரியா”வை உருவாக்கியது. அப்பொழுது வெள்ளையர்களுக்கு என்று பிரத்யேகமாக அவ்விடம் இருந்தது. மும்பை, கோவா, மங்களூர், கோழிக்கோடு முதலிய துறைமுகங்கள் ஐரோப்பியர் மற்றும் முகலாயர்களின் ஆதிக்கத்தில் வந்தவுடன் அடிமை வியாபாரங்களை இந்த துறைமுகங்கள் மூலம் நடத்தி வந்தனர். மேலும், கப்பற் தலைவன்கள், மீகானன்கள், மாலுமிகள், அந்நிய வியாபாரிகள் முதலியோர்களுக்கு பொழுதுபோக்கிற்காக விபச்சாரம், கேளிக்கை நடனங்கள் முதலியவை நடத்தப்பட்டன. அதற்காக பெண்களையும் வைத்திருந்தனர். “இந்தியர்களும், நாய்களும் அனுமதிக்கப்படமாட்டாது” என்று அறிவிப்புப் பலகையினையும் வைத்தனர். அதாவது, வெள்ளை விபச்சாரிகள், வெள்ளையகளுடன் தான் தொழில் செய்யலாம், கருப்பர்களுடன் அதாவது இந்தியர்களுடன் செய்யக் கூடாது என்ற பொருள்பட அவ்வாறு வைக்கப்பட்டது. இந்தியர்கள் அங்கு சென்றால், உண்மை அவர்களுக்குத் தெரிந்து விடும், ஆகையால் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்வாறு விலக்கி வைத்தார்கள்.

மும்பை நடன பெண்கள்.7

பார்களில் நடனம் ஆட 2005ல் தடை, 2013ல் தடை நீக்கம்: மகராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன. இதற்கு எதிராக மும்பை போலீசார் கடந்த 2005-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இதை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது[1]. இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை. மீண்டும் மதுபார்களில் பெண்கள் நடனமாட அனுமதி வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை முடிவுற்று ஜூலை 15. 2013 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், நீதிபர் எஸ்.எஸ்.நிஜார் அடங்கிய பெஞ்ச், பார்களில் பெண்கள் நடனமாட தடை விதித்த மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ததோடு, மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்[2]. அதாவது, இதுபோல் மராட்டிய மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களிலும் மதுபான பார்களில் பெண்கள் நடனமாடலாம் என்று அனுமதி வழங்கினர்[3].  இந்த தீர்ப்பின் மூலம் மும்பையில் மட்டும் 70,000 நடன மங்கையர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது[4].

மும்பை நடன பெண்கள்.2

File picture: An Indian bar dancer dances during a performance at a dance-bar in Mumbai in India on June 23, 2005. The Supreme Court today ruled that dance bars can be reopened in Mumbai subject to the dance bar owners will now have to apply for a licence to the government. Dance performances in Mumbai bars were banned in 2005. (Manoj Patil/SOLARIS IMAGES)

2016ல் மறுபடியும் உருவெடுத்த பிரச்சினை: மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி இப்பொழுது நடக்கிறது. முன்னர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது வந்தது. பாட்டீல் முதலமைச்சராக இருந்த போது, கெடுபிடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரகசியமாக நடனங்கள் நடப்பது, அவ்வப்போது ரெயிடுகள் நடப்பது போன்றவை நடந்து வந்தன. இங்கு, மும்பை உள்ளிட்ட நகரங்களில், மதுபான பார்களில் பெண்களின் நடன நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இவர்கள், பார்வையாளர்களின் தொந்தரவுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநில அமைச்சரவை, ‘பார்’ நடன பெண்கள் தொடர்பான சட்டத்திருத்தத்துக்கு, மார்ச் 29ம் தேதி, ஒப்புதல் அளித்தது. உடனே, இந்துத்தவ அரசு, தலிபானைப் போல நடந்து கொள்கின்றன. அப்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து விட்டன; அவர்களை நடுத்தெருவில் வைத்து விட்டனர் என்றெல்லாம் விமர்சங்கள் எழுந்தன. இந்த சட்டத்திருத்தம், சட்டசபையில், 11-04-2016 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்புதிய சட்டத்திருத்தம் நிறைவேறி, சட்டமாக அமலுக்கு வந்தால், நடனப் பெண்களை தொடுவது, பணத்தை வீசியெறிவது போன்ற குற்றங்களுக்கு, சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்[5]. சட்ட விரோதமாக, ‘பார்’ மற்றும் பெண்களின் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டால், ‘பார்’ உரிமையாளருக்கு, 25 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.

மும்பை நடன பெண்கள்.4

மும்பையில் மீண்டும் நடன விடுதிகள் (மார்ச். 2016)[6]: 2005ஆம் அண்டு மராட்டிய மாநில அரசு, மும்பை போலீஸ் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து அங்கு செயல்பட்டுவந்த ஆயிரக்கணக்கான நடன விடுதிகளை தடை செய்தது. நடன விடுதிகள் என்கிற பெயரில் அங்கு பாலியல் தொழில், நடப்பதாக அப்போது அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மராட்டிய மாநிலத்தில் நடன விடுதிகளுக்கான உரிமம் வழங்கும் பணியை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்க வேண்டுமென இந்திய உச்சநீதிமன்றம் மார்ச் மாதத் துவக்கத்தில் கூறியிருந்தது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இந்த நடன விடுதிகளின் உள்ளே கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், நடன விடுதிகளின் வாயில்களில் மட்டும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது பரஸ்பர ஒப்புதல், விடுதி சொந்தக்காரர் முதலியோர்களின் விருப்பங்களுக்கு, வற்புருத்தலுக்கு அவை நடந்தால், புகார் கொடுக்கவில்லை என்றால், உள்ளே என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.

மும்பை நடன பெண்கள்.1

நடனம், சினிமா, விபச்சாரம் இவற்றின் சங்கிலி தொடர்புகள்: இந்த விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்கள், இதற்கு தடை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர். இந்த நடன விடுதிகள் செயல்பட துவங்கினால், பெண்கள் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தப்படுவார்கள் என சமூக செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. 1950களிலிருந்தே அத்தகைய நடனங்கள் ஊக்குவிப்பு, சினிமாக்களில் ஆடவைப்பு, பிறகு சிகப்பு விளக்கு பகுதிக்கு ஆள் அனுப்பித்து வைப்பு போன்றாவை நடந்து கொண்டுதான் வந்துள்ளன-வருகின்றன. இந்தி சினிமா தொழில் பொறுத்தவரையில், இது வெளிப்படையான விசயம். பல திரைப்படங்களில் இப்பிரச்சினை வெளிப்படையாகவே காண்பிக்கப்பட்டுள்ளன. முகலாயர் காலத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்ட, இத்தகைய நடனங்கள், கவ்வாலி-நடன கூத்துகள், உக்கா-குடித்து ஆடும் வேசித்தனங்கள், ஆங்கிலேயர் காலத்திலும் ஊக்குவிக்கப்பட்டு, தொடரப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகும் நிலைமை மாறவில்லை. கடத்தல்-இதர குற்றங்களில் ஈடுபட்டு வந்த-வரும் தாதாக்களுக்கு இது ஒரு முக்கியமான வியாபாரமாக இருந்தது-இருக்கிறது.

மும்பை நடன பெண்கள்.3வேலையின்மை பெருகி வரும் காலகட்டத்தில், பெண்கள் இவ்வேலையை செய்யலாம்: இத்தகைய வாதமும் வைக்கப்பட்டது நோக்கத்தக்கது. அப்படியென்றால், விபச்சாரம் ஒரு தொழில் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். பிறகு, “சிகப்பு விளக்கு ஏரியா” என்பதெல்லாம் தேவையில்லை. வழக்கம் போல சித்தாந்த ரீதியில் ஊடகங்களில் பலதரப்பட்ட வாத-விவாதங்களை வைத்துள்ளனர். ஆனால், விபச்சாரிகளாகும் நிலை ஒப்புக்கொள்ளத்தான் படுகிறது[7]. பிறகு, பெண்ணிய வீராங்கனைகள் தார்மமீக ரீதியில் என்ன பேச முடியும்? பெண்மை காக்கப்பட வேண்டுமா இல்லையா என்ற நிலையில் அவர்கள் தெளிவான சிந்தனை கொண்டிருக்கவில்லை என்பதும் வெளிப்படுகிறது. ஒரு பக்கம் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம், அதில் யாரும் தலையிட முடியாது என்கிறார்கள். இன்னொரு பக்கம் உரிமைகள் என்று பேசுபவர்கள் இப்படி பெண்களை நடனமாட அனுமதிக்க முடியாது என்றும் வழக்கு போடுகின்றனர்.

© வேதபிரகாஷ்

23-04-2016

[1] மாலைமலர், மும்பை மதுபான பார்களில் பெண்கள் நடனம் ஆடலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூலை 16, 2013: 11:56 AM IST

[2] தமிழ்.ஒன்.இந்தியா, மும்பை பார்களில் பெண்கள் நடனம்: உச்ச நீதிமன்றம் அனுமதி!, By: Mayura Akilan, Updated: Tuesday, July 16, 2013, 13:58 [IST]

[3] http://www.maalaimalar.com/2013/07/16115647/Dance-bars-reopens-in-Mumbai-S.html

[4] http://tamil.oneindia.com/news/2013/07/16/india-supreme-court-clears-way-running-dance-bars-179252.html

[5] தினமலர், நடன பெண்களை தொட்டால் சிறை, அபராதம் நிச்சயம், ஏப்ரல்.12,, 22016: 01:15.

[6] பிபிசி.தமிழ், மும்பையில் மீண்டும் நடன விடுதிகள், மார்ச்.16, 2016.

http://www.bbc.com/tamil/global/2016/03/160316_dance_bars

[7] http://www.thehindu.com/news/cities/mumbai/a-ban-that-has-pushed-them-to-the-margins/article8399983.ece

அமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை!

ஓகஸ்ட் 27, 2015

அமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை!

US warning for submitting fake documents

US warning for submitting fake documents

அமெரிக்க தூதரக அறிவுரை மீறி செயல்படும் ஆட்கள், கூட்டங்கள்: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெறுவதற்காக தினமும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பார்கள். இங்கிருந்து அமெரிக்கா செல்பவர்களை போலி ஆவணங்கள் மூலமாக அனுப்பி வைக்கும் மோசடிக்கும்பலும் நீண்ட நாட்களாகவே செயல்பட்டு வருகிறது[1]. அமெரிக்க மோகத்தில் திளைப்பவர்களை மூளைச்சலவை செய்து அவர்களிடம் இருந்து பணத்தையும் இந்த கும்பல் கறந்து விடுகிறது. இதுபோன்று போலி ஆவணங்கள் மூலமாக அமெரிக்கா செல்பவர்கள் தொடர்ந்து போலீசில் சிக்கி வருகிறார்கள். அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் போது மோசடி பேர் வழிகள் மாட்டிக் கொள்கிறார்கள்[2].  ஆகஸ்ட்.12ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததால் கைது செய்யப்பட்டார்[3]. டிசம்பர்.20014ல் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரயாண ஏற்பாடு ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்[4]. அமெரிக்க தூதரகம் இவ்வாறெல்லாம் செய்யாதீர்கள் என்றி அறிவித்திருந்தது[5]. இருப்பினும் தொடர்ந்து கள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதும், சோதனையில் கண்டுபிடிக்கப்படுவதும், சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்படுவதும், தொடர்கதையாக இருக்கிறது.

மலையாள நடிகை நீத்து கைது

மலையாள நடிகை நீத்து கைது

 நடிப்பில் தோற்ற நடிகை நடனமாட ஒப்புக்க்கொண்டது: சென்னையில், 26-08-2015 அன்று, போலி ஆவணம் மூலம், அமெரிக்கா செல்ல முயன்ற துணை நடிகை, கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருவில்லா என்ற ஊரைச் சேர்ந்தவர் துணை நடிகை, நீத்து கிருஷ்ண வாசு [27][6]. சில ஆண்டுகளாக, சென்னையில் தங்கி, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. போதிய வருமானமின்றி தவித்த நீத்து, நடன நிகழ்ச்சிகளில், குத்துப்பாடல்களுக்கு ஆடி வந்தார். பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என, சென்னை வந்த அவருக்கு, நடன மங்கையாக மாறியதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்கா செல்வது என, முடிவு செய்தார். கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த, சுபாஷ், 37, என்பவரின் நட்பு கிடைக்க, அவரையும் அமெரிக்கா அழைத்து செல்ல முடிவு செய்தார்[7]. இருவரும், போதிய ஆவணங்கள் இல்லாததால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்த, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த, செபஸ்டின் தாமஸ், 35, ராஜ், 35, ஆகியோரை அணுகினர்[8].போலி ஆவணங்கள் அவர்கள், நீத்து, சுபாஷ் ஆகியோரை, கணவன் – மனைவி என சித்தரித்து, பத்திரிகை அடித்து, பதிவு திருமணம் செய்து கொண்டது போன்றும், அமெரிக்காவில் நடக்க இருக்கும் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, இருவரும் செல்ல இருப்பது போலும், போலி ஆவணங்கள் தயாரித்து தந்தனர்[9].

US warning for submitting fake documents for getting VISA

US warning for submitting fake documents for getting VISA

போலி ஆவணங்கள் என்றதால் கைதானது: இந்த ஆவணங்கள், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதிகாரிகள் சரிபார்த்தபோது, ஆவணங்கள் போலி என, தெரியவந்தது. மேலும், அமெரிக்காவில், நீத்து, சுபாஷ் பத்மநாபன் தெரிவிப்பது போல், எந்த திருமணமும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்தனர்[10]. ‘நெட்வொர்க் 3’ இதையடுத்து, துாதரக அதிகாரிகள், நீத்து மற்றும் சுபாஷை, சென்னை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயாரிக்கும் கும்பலை சேர்ந்த, செபஸ்டின் தாமஸ் மற்றும் ராஜ் ஆகியோர் தலைமையில் பெரிய அளவில், ‘நெட்வொர்க் 3’ இயங்குவது தெரியவந்தது. 26-08-2015 அன்று, நீத்து, சுபாஷ், செபஸ்டின் தாமஸ் தஞ்சையை/புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜபகர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[11]. ராஜ் தலைமறைவாகி விட்டார்[12]. குஞ்சுமோன் என்ற இன்னொரு தரகரையும் போலீசார் தேடி வருகிறார்கள்[13]. இந்த கும்பலை சுற்றிவளைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்[14]. நடிகை நீத்து கிருஷ்ணா அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட திட்டமிட்டு விசா கேட்டுள்ளார்[15]. விசா வாங்கி தருவதாக அவரிடம் தரகர் கும்பல், ரூ.2 லட்சம் வரை பணம் வாங்கி இருப்பதாக தெரிகிறது[16].

Flora arrested in 2008 for submitting fake documents US VISA

Flora arrested in 2008 for submitting fake documents US VISA

கைதான பிறகு, புலம்பிய நடிகை: காவல் ஆய்வாளர் சத்தியசீலன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகி யோர் விரைந்து சென்று நீத்து கிருஷ்ணாவை பிடித்து விசாரணைக் காக போலீஸ் நிலையத்துக்கு அழைத் துச் சென்றனர். விசாரணையின்போது, “கேரளாவை சேர்ந்த ராஜூ என்ற சினிமா தயாரிப்பாளர் என்னை அணுகி, நீ நன்றாக நடனம் ஆடுகிறாய் அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறினார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை என்றேன். ரூ.2 லட்சம் கொடுத் தால் இடைத்தரகர்கள் மூலம் விசா வாங்கி விடலாம் என்று அவர் கூறிய தின்பேரில் அந்த பணத்தை கொடுத் தேன். இப்படி மாட்டிக் கொள்வேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை”, என்று நீத்து கிருஷ்ணா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்[17]. 2008ல் புளோரா என்ற ஆந்திர நடிகையும் இதே போல கைதானார்[18]. உண்மையில் நடிகைகள் அமெரிக்காவுக்குச் சென்று எப்படி பிழைப்பார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்பதும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படித்தவர்கள், பொறியியல், மருத்துவம் முதலியவற்றைப் படித்தவர்லளே அங்கு செல்வதற்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் சங்கங்கள், அமைப்புகள், உல்லாச விடுதிகள் இவர்களை வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிகிறது. எது எப்படியாகிலும், இவ்வாறு மாட்டிக் கொண்டத்கால், இனி அமெரிக்கா செல்ல இவர்களுக்கு ஜென்மத்திலும் விசா கிடைக்காது என்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

27-08-2015

[1] மாலைமலர், அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம்: கேரள நடிகை அதிரடி கைது பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 26, 11:15 AM IST.

[2] http://www.maalaimalar.com/2015/08/26111557/fake-document-to-US-visa-Keral.html

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/Man-held-for-producing-fake-documents-during-US-visa-interview-in-Chennai/articleshow/48453793.cms

[4]  Tejas helped his clients with forged documents, created on letterheads of firms that did not exist. The rate for such documents, depending on the country, ranged from Rs 1.5 lakh to Rs 4.5 lakh, he said.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Bengaluru-tour-operator-busted-for-US-visa-fraud-in-Chennai/articleshow/45367525.cms

[5]www.http//:chennai.usconsulate.gov/pdfs/consul-desk/visafraud.pdf

[6] தினமணி, போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற கேரள நடிகை கைது, சென்னை, First Published : 27 August 2015 03:10 AM IST

[7] http://timesofindia.indiatimes.com/city/chennai/Malayalam-actress-arrested-for-submitting-forged-documents-to-get-US-visa/articleshow/48682649.cms

[8] தினமலர், அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற துணை நடிகை கைது, ஆகஸ்ட்.27, 2015.03.01.

[9]  வெப்.துனியா, அமெரிக்கா செல்ல போலி விசா வழங்கிய கேரள நடிகை நீத்து கிருஷ்ணா கைது, Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (02:32 IST).

[10] http://www.newindianexpress.com/entertainment/malayalam/Malayalam-Actress-Arrested-for-Forgery-in-US-Visa-Application/2015/08/27/article2995422.ece

[11]  தி இந்து, விசா பெறுவதற்கு போலி ஆவணம் கொடுத்த கேரள நடிகை உட்பட 3 பேர் கைது, Published: August 27, 2015 08:21 ISTUpdated: August 27, 2015 08:22 IST

[12] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/malayalam-actress-neetu-krishna-arrested-115082600053_1.html

[13] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/08/27002234/Malayalam-actress-arrested-in-Chennai.vpf

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1327731

[15] http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/08/27/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article2995976.ece

[16] தினத்தந்தி, அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம் சென்னையில் மலையாள நடிகை கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஆகஸ்ட் 27,2015, 3:15 AM IST, பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 27,2015, 12:22 AM IST.

[17] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article7585685.ece

[18] http://www.extramirchi.com/actress/actor-flora-granted-bail-on-us-visa-fake-documents-case/