Posts Tagged ‘நடிகர் சங்கம்’

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

நவம்பர் 14, 2013

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் அதிக  சம்பளம்  கேட்பது: தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். இப்பொழுது, சின்னத்திரை, பெரியத்திரை என்கிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளவிவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். ராதிகா தரப்பு, கேமராமேன்களுக்கு இப்போதுதான் பத்து சதவீதம் சம்பள உயர்வு அளித்தோம் என்கிறது. ஆனால் கேமராமேன்கள் சங்கம் அதனை ஏற்பதாக இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினால் கேமராமேன்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதுதான் கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனை[1]. இந்த நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் வந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தகராறு செய்வதாக கூறப்பட்டது. இதனால் சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது[2].

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறுகையில், “திரைப்பட படப்பிடிப்பில் வழங்கப்படும் சம்பளம் போன்று நாடக படப்பிடிப்பின் போதும் சம்பளம் வழங்க வேண்டும் என்று சில அமைப்பை சேர்ந்த கேமராமேன்கள் கேட்டு வருகின்றனர். திரைப்படம், வேறு சின்னத்திரை வேறு. இதனால், அதே சம்பளம் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டோம். இதனால், அவர்கள் தகராறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னையில் இனி நடைபெற உள்ள சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். பாதுகாப்பு தருவதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்”, என்றார்[3]. ஆக போலீசர்ருக்கு இனி புதிய கடமைகள் எல்லாம் வந்து விடுகின்றன.

சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து: முன்பு இப்படியெல்லாம் செய்திகள் வந்தன. னிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[4]. திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்[5]. பாவம், தமிழர்கள் இதையெல்லாம் படித்து கவலைப்பட்டனர்.

சலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர். சினிமாவை தொழிலாக்கி, அதை அனுபவிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.  இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார். இப்படியெல்லாம், சலுகைகள் பெறுவதால், சினிமா பார்ப்பவர்களுக்கு எந்த நலனும் இல்லை.

சினிமாக்காரர்கள்  மற்ற தொழில்களில்  ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா தொழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு திணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.

சமூகத்திற்குத்  தேவையான  துறைகளில்  சினிமாக்காரர்கள்  மூலதனம்  போடுவது[6]: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வாதிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.

வியாபாரப் பிரச்சினையை பொது பிரச்சினை ஆக்கமுடியாது: போலீசார் கடமைகளை செய்வது, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்பதெல்லாம் மக்கள் செல்லுத்தும் வரிப்பணத்திலிருந்து நடக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையெடுக்கும் சினிமாக்காரர்கள், இவ்வாறு பாதுகாப்புக் கேட்பது, மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் செயலாகும். அதுமட்டுமல்லாது, மக்கள் சினிமாக்காரர்களால், இரண்டு வழிகளிலும் சுரண்டப் படுவது போல இருக்கிறது. இப்படி இவர்கள் அளவிற்கு மேலாக அரசிடம் சலுகைகள் பெறுவது தடுக்கப் படவேண்டும். ஏனெனில், இவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. ஏழைகளிடமிருந்து பணத்தை உறிஞ்சுபவர்கள்.

© வேதபிரகாஷ்

14-11-2013


சினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு!

பிப்ரவரி 23, 2012

சினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு!

சினிமாக்காரர்களின் யோக்கியதை: ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள் வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை[1], அதற்குள் சைப் அலி கான் என்ற நடிகர் இருவரைத் தாக்கி அடித்தற்காக கைது செய்யப்ப் பட்டு பைலில் விடுவிக்கப் பட்ட்ள்ளார். இப்படி இந்தி நடிகர்கள் ஏன் ரௌடியிஸத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களுடைய செல்வாக்கு, பணபலம் மற்றும் அரசியல் பின்னணி என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. மேலும் தாவூத் இப்ராஹிம் போன்ற தீவிரவாதிகளுடன் வேறு தொடர்பு இருப்பதால், அவர்களுக்கு மமதை அதிகமாகவே உள்ளது. இதனால் அடிக்கடி, எந்த இடத்தில் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், குடித்து-அடித்துக் கொள்கிறார்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. போதாகுறைக்கு, ஒரு இந்தி செனல், எப்படி அந்த நடிக-நடிகையர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள் என்று வேறு காட்டுகிறர்கள்.

தாஜ் ஹோட்டலில் கலாட்டா செய்த கான்: தாஜ் ஹோட்டல் என்றாலே 26/11 தீவிரவாத தாக்குதல்தான் நினைவிற்கு வரும். இனி கான் போன்ற நடிகர்களில் கலாட்டாக்களால், இப்படியும் நினைவிற்கு வரலாம். மும்பையில் தாஜ் ஹோட்டலில் சயீப் அலி கான், அவரது தோழியும் நடிகையுமான கரீனா கபூர், அமிர்தா அரோரா மற்றும் பத்து நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை நடுஇரவு தாஜ் ஹோட்டலில் உள்ள ஜப்பானிய ரெஸ்டாரன்டில் உணவருந்தியுள்ளார். அப்போது அவர்கள் சத்தமாகப் பேசி கலாட்டா செய்துள்ளனர்.  அருகில் உணவருந்திக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தொழிலதிபர் இக்பால் சர்மா (44) என்பவர் முதலில் அமைதியாக இருங்கள் என்று நாகரிகமாக ஒரு சிட்டு அனுப்பிக் கேட்டுக் கொண்டார்[2], பிறகு சொல்லியும்ப் பார்த்தார். ஆனால், கான் “அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நூலகத்திற்கு போ”, என்று கிண்டலடித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிறகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சினிமா ஸ்டைலில் எதிர்த்து பேசி அடித்த கான்: அவர்கள் வேறு டேபுளுக்கு மாறி உட்காரச் சென்றபோது, “முட்டாளே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா”, என்று அதட்டிக் கேட்டுள்ளார். ஹோட்டலின் ஆட்களிடம் புகார் செய்து வெளியே செல்ல யத்தனித்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த சயீப் அலி கான் சர்மாவைப் பார்த்து திட்டிபேசியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் இக்பால் சர்மாவை சயீப் அலி கான் தாக்கியதாகக் கூறப்படுகிறது[3]. அதுமட்டுமல்லாது 69 வயதான ராமன் படேல் என்ற அவரது மாமனாரும் தாக்கப்பட்டுள்ளார். இதில் இக்பால் சர்மாவின் மூக்கு உடைந்தது. ராமன் பட்டேல் ஒரு டாக்டர், அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.

போலீசில் புகார் கொடுக்கப்பட்டது – காணாமல் போன கான்: இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. முதலில் போலீசார் அவரைத் தேடியபோது காணவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனெனில் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதாவது அந்நேரத்தில் கான் தனது வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். எப்.ஐ.ஆர் போடப்பட்டதால், கைது செய்வது மாதிரி செய்து, போலீசார் விடுவிக்கிறமாதிரி விட்டுவிட ஏற்பாடு செய்து நாடகம் ஆட ஐடியா சொல்லிக் கொடுத்திருப்பார்.

கைது செய்யப்பட்டு விணையில் விடுவிக்கப்படுதல்: பிறகு மாலை, கொலபா போலீஸ் ஸ்டேஷனில் / அவரது வழக்கறிஞர் முன்னிலையில் சரண்டர் ஆனார். அப்பொழுது தனது கேர்ல் பிரெண்ட் / காதலி கரீனா கபூருடன் வந்ததால், ஏகமான கூட்டம் வேறு சேர்ந்து கொண்டது. அதனால், தொழிலதிபரைத் தாக்கியதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருடன் பிலால் அம்ரோஹி மற்றும் ஷகீல் என்ற இரு நண்பர்களும் கைது செய்யப்ப்பட்டு பைலில் விடுவிக்கப் பட்டனர்[4]. அவர் வெளியே வந்ததும், சர்மா மீது குற்றம் சாட்டினார். அவர் தமது நண்பர்களைக் கிண்டல் செய்தார், நானும் தாக்கப்பட்டேன்  என்று கூறினார்[5]. முன்பு சொல்லாமல், இப்பொழுது சொல்வது விசித்திரமாக இருக்கிறது. கான் இப்பொழுது மன்னிப்புக்ல் கேட்பதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால், “மன்னிப்பு கேட்பதாக இருந்திருந்தால், அப்பொழுதே கேட்டிருக்கலாம். வயதான எனது மாமனாரை தாக்கியபோதே கேட்டிருக்கலாம். இப்பொழுது கேட்டால் ஒப்புக் கொள்ள முடியாது”, என்று சர்மா கூறுகிறார்[6].

சைப் அலி கானின் பிரச்சினை மிக்க வாழ்க்கை: இந்த கான் நவாப் பட்டோடி என்ற கிர்க்கெட் விளையாட்டுக்காரருக்கும் ஷர்மிலா தாகூர் என்ற நடிகைக்கும் பிறந்தவர். அக்டோபர் 1991ல் அமிர்தா சிங் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தனர்[7]. மகனின் பெயர் இப்ராஹிம் அலி கான், பெண்ணின் பெயர் சாரா அலி கான். ஆனால், 2004ல் விவகரத்து செய்தார். கரினா கபூர் என்ற நடிகையுடன் சுற்ற ஆரம்பித்தார். “நாங்கள் சேர்ந்துதான் உள்ளோம். எங்களுக்கு திருமணம் என்பது தேவையில்லை. இன்றைய நிலையில் அதன் அர்த்தமும் மாறியுள்ளது”, என்றெல்லாம் விளக்கமும் அளித்துள்ளார்[8]. தனிப்பட்ட வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், முரட்டு சுபாவம் கொண்ட இவர், அடிக்கடி சண்டை-சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தார். சைப் அலி கான் அடிக்கடி தகராறுகளில் மற்றவர்களை தாக்குதல், அடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார்[9].

வருடம்

செய்த குற்றம், வழக்கு

முடிவு – விடுவிப்பு, விடுதலை

1998 “ஹம் சாத் ஹை” என்ற படபிடிப்பின் போது, கருப்பு நிற பிரசித்தியான மான்களை வேட்டையாடினர் என்று, சல்மான் கான், தபு, சோனாலி பிந்த்ரா மற்றும் நீலம் முதலியோருடன் சிக்கிக் கொண்டார். வழக்குத் தொடரப்பட்டது. சிறை தண்டனை, அபராதம் விதிக்கப் பட்டது[10]. ஆனால், தமக்குள்ள செல்வாக்கினால், வழக்கிலுள்ள குற்றங்களினின்று விடுவிக்கப் பட்டார்[11].
2008 லவ் ஆஜ் கல்” என்ற படபிடிப்பின் போது பாட்டியாலாவில், பவன் சர்மா என்ற போட்டோ-பத்திரிக்கயாளரைத் தாக்கியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. பிறகு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் வழக்கு முடிந்தது[12].
2012 மறுபடியும் ஐந்து நடசத்திர ஹோட்டலில் இப்படி இருவரைத் தாக்கியதற்கு வழக்குப் போடப்பட்டது. கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மக்கள்சினிமாக்காரர்களைப்பற்றிதெரிந்துகொள்ளவேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித்து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் முதலியவற்றை வைத்துக் கொண்டு, தங்களது கெட்ட-தீய குணங்களை மறைத்து போலியான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தை ஏமாற்றி, சீரழித்து வரும் அவர்களது உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

வேதபிரகாஷ்

23-02-2012


[4] Assistant commissioner of police Iqbal Shaikh said the charge was filed against Saif and two unknown others as the women present during the brawl were not involved. The two others arrested were later identified as Bilal Amrohi, the grandson of Kamaal Amrohi (maker of Pakeezah and Meena Kumari’s husband), and Shakeel. They were also granted bail along with Saif.

[7] Khan married actress Amrita Singh in October 1991 After thirteen years of marriage and two children (son Ibrahim Ali Khan and daughter Sara Ali Khan), the couple divorced in 2004. The children live with their mother.

[8] Saif said: “People say that marriage doesn’t affect your career but the fact is it does. Today the whole definition of marriage has changed. We are so well connected, so close that marriage is just a stamp of validation for the society.

http://www.mid-day.com/entertainment/2009/oct/311009-saif-ali-khan-kareena-kapoor-marriage.htm

தமிழ் சினிமா உலகம் – மாறி வரும் காலத்தில், மருவும் குணாதிசயங்கள், பிறழும் ஒழுக்கங்கள், திரளும் குற்றங்கள் (1)

ஜனவரி 31, 2012

தமிழ் சினிமா உலகம் – மாறி வரும் காலத்தில், மருவும் குணாதிசயங்கள், பிறழும் ஒழுக்கங்கள், திரளும் குற்றங்கள் (1).

சினிமாக்காரர்கள் மற்ற தொழில்களில் ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா தொழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு திணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால்

சினிமா செய்திகளுக்கு, எவ்வளவு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது அறிந்ததே. மற்ற நிகழ்ச்சிகளை விட, சினிமா துறையில் என்ன நடக்கிறது என்பது தான் கவலை போலும். சம்பளப்பிரச்சினை, படப்பிடிப்புரத்து, நடிகர்நடிகைகள்சென்னைக்குதிரும்பினார்கள்!, என்ற தலைப்பில் இப்பிரச்சினை விவாதிக்கப் பட்டது. இப்பொழுது, மறுபடியும் தொடர்கிறது[1].

கட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.

சமூகத்திற்குத் தேவையான துறைகளில் சினிமாக்காரர்கள் மூலதனம் போடுவது: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வாதிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.

ரூ.9 கோடியை தர மறுக்கிறார்: விஷால் 5 நாட்களுக்கு முன்னர் … 9 கோடியை தர மறுக்கிறார் என தயாரிப்பாளர்
சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நடிகர்
விஷால் மீது நடிகை ராதிகா புகார்[2]

சோப்பு-சீப்பு-கண்ணாடி போய் நகை-நிலம்-வீடு-ரியல் எஸ்டேட் என்று வரும் அதிரடி விளம்பரங்கள்: முன்பு ஆடம்பரப் பொருட்கள் என கருதப் பட்டு வந்த “சோப்பு-சீப்பு-கண்ணாடி” விளம்பரங்கள் போய், “பிளேட்-சிகரெட்-குடி” என்ற விளம்பரங்களில் வந்து, இப்பொழுது “போய் நகை-நிலம்-வீடு-ரியல் எஸ்டேட்” என்று வரும் அதிரடி விளம்பரங்கள் போலித்தனமாக உள்ளன. சட்டங்கள், விதிகமுறைகள், வரையறைகள், என்றவற்றை விடுத்து “நான் உங்களுக்கு கியாரண்டி” என்று சினிமாக்காரர்கள் கூறுவது மாதிரி விளம்பரங்கள் உள்ளன. சினிமாக்காரர்களே, பண விஷயங்களில், ஒருவருக்கொருவர் மீது அசிங்கமாக வசைபாடி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்; ஏன் நீதிமன்றங்களிலேயே, ஏமாற்றி விட்டார்கள், மோசடி செய்து விட்டார்கள் என்று வழக்குகள் தொடர்கின்றனர்; செக் பௌன்ஸ் / மோசடி பற்றி கேட்கவே வேண்டாம், நூற்றுக்கணக்கான வழக்குகளில் சினிமாக்காரர்கள் வரிசையில் இருக்கிறர்கள். அதிலும் தலைசிறந்தவர்கள், பிரபலமானவர்கள்…………

செக் மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு, ஜாமினில் வரக்கூடிய கைது வாரன்ட் பிறப்பித்து[3], சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு: என்னிடம் இருந்து மகேந்திர குமார் (சினிமா தயாரிப்பாளர்) என்பவர் ஐந்து கோடி ரூபாய் கடன் பெற்றார். கடந்த 2006ம் ஆண்டு டிசம்பரில் வாங்கியிருந்தார். ஒரு பகுதி பணத்தை திருப்பிச் செலுத்தும் வகையில், அதற்கான செக்கையும் அளித்தார். இந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, அவைகள் திரும்பி வந்தன. இதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்பது நன்கு தெரிந்தும், இந்த செக்கை வழங்கியுள்ளார். மாற்றுமுறை ஆவண சட்டப்படி, மகேந்திரகுமாரை தண்டிக்க வேண்டும். நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பணம் என்று வந்து விட்டால், அசோஸியேஷன் / கூட்டம் என்று கும்பல்களை சேர்த்துக் கொண்டு ஆபாசமான, கெட்ட வார்த்தைகளை சொல்லி பேசி, திட்டி, அடித்துக் கொள்ளவும் செய்கின்றனர். இவர்கள் இடத்தில் எப்படி நாணயத்தை, நேர்மையை நம்பிக்கையாக காண முடியும்? இத்தகையோர் எப்படி, அப்படி“நான் உங்களுக்கு கியாரண்டி” என்ற ரீதியில் நடித்துக் காட்ட முடியும்? அதுமட்டுமல்லாது, அத்தகைய அதிரடி விளம்பரங்கள் பிரச்சார ரீதியில் ஈடுபட்டு வருவதால், அப்பாவி மக்களிடமுள்ள கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏமாற்றிப் பறிக்கவும் வழி செய்கின்றன. ஏனெனில், சினிமாக்காரர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் பணம் வரும், வரலாம், ஆனால், சாதாரண மக்களுக்கு அப்படி இல்லை. கஷ்டப்படாமல், வேர்வை சிந்தாமல், குருவி போல சேர்ந்து வந்தால் தான் பணம் கிடைக்கும் / சேரும். இருப்பினும், அவர்களையும் ஏமாற்ற துணிந்து விட்டார்கள்.

இவற்றைவிட, சிலர் விபச்சாரம், திருட்டு விசிடி / டிவிடி, புரோனோகிராபி (புளூ பிளிம்களை விஞ்சியது) கள்ளக்கடத்தல், போதை மருந்து, ஹவாலா, முதலிய மற்ற குற்றங்களிலும் ஈடுப்பட்டுள்ளனர். மும்பை-துபாய், இலங்கை-தென்கிழக்கு ஆசிய நாடுகள், பிரான்ஸ்-கனடா தொடர்புகளில் பல விவகாரங்கள் வெளிப்படுகின்றன. ஒரு நிலையில், இவையெல்லாம் ஒன்றிற்க்கொன்று சம்பந்தப் படும் போது, பிணைந்து வரும் போது, பின்னிப் பிணையும் போது, எல்லாமே ஒன்று என்றச் நிலையும் ஏற்படுகின்றது. தெரிந்தவர்கள், புரிந்து கொண்டவர்கள், எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுப்பவர்கள், சமரசம் செய்து கொள்பவர்கள், எப்படியோ பிழைத்துக் கொள்கிறார்கள். இக்குழுக்கள் பல நேரங்களில் “தமிழர்கள்” என்ற போர்வையில் / பேனரில் செயல்படுகிறார்கள்.

வியாபரங்கள் மாநிலங்களைக் கடக்கும் போது, நாட்டின் எல்லைகளையும் கடக்கின்றன. மாநில அரசியல்வாதிகள் போய், தேசிய அரசியல்வாதிகளின் தொடர்பும் கிடைக்கிறது. நாட்டின் எல்லைகளை கடக்கும் போது, பலவிதமான மனிதர்கள், தாதாக்கள் முதலியோரது தொடர்புகளும் ஏற்படுகின்றன. மறுபடியும் அரசியல்-அதிகார-பணபலக்கூட்டு அனைத்துலக ரீதியில் பெருகுகிறது. பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் அல்லது நடக்க வைக்கலாம் என்ற நிலை ஏற்படுகிறது. ஆக, எப்படி பார்த்தாலும், பணம் தான் பிரதானம் என்ற நிலையை சினிமாக்காரர்கள் உருவாக்கி விட்டார்கள். பிறகு, பண விஷயத்தில் அவர்களுக்கிடையில் எப்படி ஒற்றுமை ஏற்படும்? இந்நிலையில் தான், தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

வேதபிரகாஷ்

31-01-2012


நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)?

மார்ச் 16, 2011

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)?

நடிகைகளின் தற்கொலை பட்டியல் நீள்கிறது: தமிழகத் திரைப்பட சரித்திரத்தில், நடிகைகள் தற்கொலை செய்வது கொள்வது என்பது தொடர்ந்த பட்டியலாக உள்ளது – அந்தக்கால விஜயஸ்ரீ முதல் இக்கால படாபட் ஜெயலட்சுமி, சிலுக்கு சுமிதா வரை ………………….. இதில் பெரும்பாலான முடிவுகள் ஒருதலை காதல், பலரைக் காதலித்தல், காதல் தோல்வி, காதலித்து ஏமாறுவது-ஏமாற்றுவது, திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக / கீப்பாக வைத்துக் கொள்வது, என்ற ரீதியில் தான் இருந்து வருகிறது. சில நடிகைகள் திருமணமே செய்து கொள்ளாமல், சாகும் வரை அப்படியே இருந்துள்ளனர். பெயரைக் குறிப்பிட முடியாத அளவிற்கு, சில மிகப்பெரிய நடிகைகள் கூட தற்கொலை முயற்ச்சிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலாக தூக்கமருந்து மற்றும் தூக்கு போன்ற முறைதான் கையாளப்பட்டிருக்கிறது. அந்நிய நாடுகளைப் போல இன்னும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வதிலை. அதாவது, காதல்-செக்ஸ் போன்ற விஷயத்தில் – கலைகளில், மேனாட்டு கலாச்சாரங்களையும் விஞ்சும் அளவிற்கு இருந்தாலும், உயிர் போக்கும் / உயிரைப் போக்கிக் கொள்ளும் கலையில் இந்தியர்களாகவே அல்லது புராதனமாகவே இருக்கிறார்கள் போலும்! திரைப்பட வரலாற்றிற்கு முன்னர், நாடக காலத்திலும், அத்தகைய தற்கொலை-கொலை முயற்சிகள் இருந்திருகக் கூடும்.

நடிகை தற்கொலை, தற்கொலை முயற்சி, கொலை செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம்: தற்கொலை, கொலை என்ற செய்திகள் பொதுவாக பொதுவாக மக்களின் எண்ணங்களில் இரக்கத்தை ஏற்படுத்தும். “ஐயோ பாவம், இந்த வயதில் இப்படி சாக வேண்டுமா?”, என்றுதான் இரக்கப்படுவர். ஆனால், சினிமா நடிகை எனும்போது, மனப்பாங்கு வேறுவிதமாக இருக்கிறது. சினிமா நடிகை என்றாலே, பொது மக்களுக்கு, குறிப்பாக ஆண்களுக்கு, நிச்சயமாக ஒரு பொழுது போக்கு பொருளாகத்தான் நினைக்கிறார்கள். “ஏதோ இருக்கும் வரை மற்றவர்களை மகிழ்வித்தார்கள், இப்பொழுது போய் விட்டார்கள்”, என்று கூட சாதாரணமாக நினைக்கலாம். இறப்பிலும் ரசிக்கும் உள்ளங்களும் இளசுகள் படங்களைப் பார்த்து சும்மா இருந்துவிடலாம். உண்டு. அதாவது, பொய்யான உலகத்தில் வாழும் அவர்கள் இறந்தாலும், அந்த அளவிற்கு மக்கள் உணர்ச்சிகளை பாதிப்பதில்லை எனலாம். இறந்தவர்களின் படங்களைப் பார்க்கும்போது, அவர்களது குரல், பாடல்களைக் கேட்கும்போது, ஒருவேளை இறவாமல் இருக்கிறார்கள் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தலாம். இறந்த பின்னரும் அவர்களை திரையில் பார்த்து ரசிக்கலாம்.

பார்ப்பதை தொடத்தூண்டும் எண்ணம் உருவாதல் எப்படி? 1970கள் வரையில், நடிகைகளுக்கு ஒருவேலை மரியாதை இருந்திருக்கலாம். அம்மனாக நடித்த நடிகைகள் மதிக்கப் பட்டிருக்கலாம். ஆண் நடிகர்களில் என்.டி.ஆர் ஒரு பெரிய விதிவிலக்கு. பலர் அவரை விஷ்ணு, ராமர், கிருஷ்ணர் என்றுதான் நினைத்துள்ளனர். சென்னை, தி.நகரில் அவர் வீட்டிற்கு வந்து அவரை வணங்கிச் செல்வது சாதாரணமாக இருந்தது. ஆனால், நடிகைகள் அத்தகைய நிலையை அடைய முடியவில்லை. அதுவும், இக்காலத்தில் தொட்டுவிடவும் துடிக்கிறார்கள், சில நேரங்களில் தொட்டும் விடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்களை மக்கள் ஒரு விபச்சாரியாகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். திரையில் எத்தனை ஆண்களுடன், என்னமாய் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, முத்தம் கொடுத்து, எப்படி-எப்படியோ நடிக்கின்றார்களே, அப்படியிருக்கும் போது, நாம் தொட்டால் என்னவாம், என்ற எண்ணம் சாதாரணமாகத் தோண்டுவது இயல்புதான். சங்க இலக்கியத்தில் “பொது மகளிர்” என்ற சொற்றொடரே உள்ளது. மேலும், இப்பொழுதெல்லாம், நடிகைகள் பல பொது நிகழ்சிகள், அரசியல் விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், கும்மாளம் போடுகிறார்கள். அப்பொழுதும் மக்களுக்கு நிஜம்-திரை என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. ஒருவேளை சூட்டிங் பார்த்தவர்கள், இன்னும் அதிகமாகவே தெரிந்து கொண்டிருப்பார்கள். சக-நடிகர்கள் தொட்டுப் பேசுவது, சில நேரங்களில் தூக்கி விடுவது, பிடித்துக் கொள்வது முதலியவற்றை பார்க்கும் போது, அந்நேரங்களில் நடிகைகளின் முகங்களில் எந்த சலனமு இல்லாதிருக்கும் போது, பார்க்கும் மக்களுக்கு அத்தகைய எண்ணம் வருவது சகஜமானதே.

பட்டியலில் சில நடிகைகள் (கொலை / தற்கொலை உட்பட)[1]: சினிமா மோகத்தில் நடிக்க வரும் பெண்கள், பெரும்பாலாக, குறிப்பிட்ட ஆண்களின் கைப்பாவையாக, படுக்கையை அலங்கரிக்க வேண்டியுள்ளது. இல்லை வேறு வகையில் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நடிகையாகி விட்டப் பிறகு, காதல் வந்தால் அல்லது நடிகர் / தயாரிப்பாளர் / டைரக்ரை கல்யாணம் செய்து கொண்டால், நடிப்பை முழுக்குப் போட்ட நடிகைகள் அமைதியாக வாழ்ந்துள்ளனர் எனலாம். ஆனால், மற்றவர்கள் எல்லாம், இத்தகைய மன உலைச்சர்களுக்காகி தற்கொலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு கீழ்கண்டவை கொடுக்கப் படுகின்றன. நடிகை என்றாலே திரைப்பட உலகத்தில் உள்ள எந்த ஆணுக்குமே, சந்தேகம் பலமுறை வருவது சகஜமான விஷயம்தான். அந்நிலையில், ஏதாவது பேச்சுவார்த்தைகளில், விவாதத்தில் முடிந்து சண்டையாகி, பிரச்சினையாகி விடுகிறது.

1974: தமிழ் சினிமா உலகில் முதல் தற்கொலையாக கருதபடுவது 1974ம் ஆண்டு நடந்த நடிகை விஜயஸ்ரீ இன் தற்கொலை ஆகும்..கொலை என கருதப்பட்ட இவரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது[2].

1979: தர்மயுத்தம் படத்தில் ரஜனிகாந்துக்கு தங்கையாக நடித்தவர் நடிகை லக்ஷ்மிஸ்ரீ.. 1979 ம் ஆண்டு காதலர் உறக்கத்தில் இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் லக்ஷ்மிஸ்ரீ..முதலில் சந்தேகங்கள் எழுந்தாலும் இறுதியில் தற்கொலை என்றே தீர்பளிக்கபட்டது[3].

1980: நடிகை ஷோபா 1980களில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை..நிழல் நிஜமாகிறது, பசி, ஏணிப்படிகள்,மூடுபனி, அழியாத கோலங்கள் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது….பசி படத்தில் நடிததற்காக இவருக்கு ஊர்வசி விருது கிடைத்தது..ஆனால் இவருடைய புகழ் சிறிது காலமே நிலைத்தது…துரதிஷ்டவசமாக 1980ம் ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் ஷோபா[4].

1993: திவ்யா பாரதி தன்னுடைய 19வது வயதில் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

2001: பிரதிக்ஷா பெற்றோரின் காதல் எதிர்பாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 2005:ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி – காதல் கைகூடாததால் விபரீத முடிவு

2006: டி.வி. நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி (ஏப்ரல்) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மனதை விட்டு அகலுவதற்குள் ஷர்தா (வயது-21) என்ற இன்னொரு டி.வி. நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 2006: டி.வி.நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பிப்ரவரி 2008: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

2008: பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மே 2008:, தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு, ஜோதிகாவிற்கு திருமணம் ஆனதால், நக்மா தற்கொலை எண்ணங்களுக்குத் தள்ளப்பட்டர். ஆனால், மனம் மாற்றிக்கொண்டு, கிருத்துவரானார்.

ஆகஸ்ட் 2008:  நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.

டிசம்பர் 2008: ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகை பார்கவி தனது காதலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காதலியைக் கொன்ற பின்னர் காதலரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 2010: சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்த சீனிவாசரெட்டியின் மகள் சசிரேகா (வயது 20).

ஜூன் 2010: ஸ்வேதா பாசு தற்கொலை முயற்சி

அக்டோபர் 2010: மீரா ரித்திகா (20), ஏராளமான படங்களில் குரூப் டான்ஸராக வந்துள்ளார். குழந்தையை கவனித்தால் போதும் சினிமாவில் நடனமாடக் கூடாது என்றாராம் கணவர் அஸ்வின். குடித்து விட்டு, ஆண் நண்பர்களுடன் வந்ததைக் கணவன் கண்டித்ததால் துணை நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்[5].

வேதபிரகாஷ்

16-03-2011


[1] தமிழ், தெலுங்கு நடிகைகள் மட்டுமல்லாது, மற்ற மொழி நடிகைகள் சிலரும் சேர்க்கப் பட்டுள்ளன.

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (3)?

ஒக்ரோபர் 14, 2010

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (3)?

விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்: காஜா மைதீன் புராணம் தொடர்கிறது! நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார் காஜா மைதீன். விஜயகாந்த்தை வைத்து சில படங்களையும்எடுத்துள்ளார்[1]. தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பராக விளங்கிய காஜா மைதீன், தற்போது விஜயகாந்த்தை வைத்த பேரரசு என்ற படத்தை எடுத்துள்ளார். கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்திற்கான பூஜையையும் போட்டு மாட்டிக்கொண்டார். பேரரசு படத்தின் போது காஜா மைதீனுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜயகாந்த்துக்கு பேசப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதியை தர முடியாத அளவுக்கு பண நெருக்கடியில் காஜா மைதீன் சிக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக பேரரசு படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனது மைத்துனரின் தயாரிப்பில் சொந்தப் படத்தில் (சுதேசி) நடிக்கப் போய் விட்டார் விஜயகாந்த். திடீரென விஜயகாந்த் தனது சொந்தத் தயாரிப்பில் நடிக்கப் போய் விட்டதால் மனம் உடைந்தார் காஜா மைதீன். அடி மேல் அடியாக, வேட்டையாடு விளையாடு படத்திற்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் அவஸ்தைப்பட்டார். இதனால் அந்தப் படம் பூஜையுடன் நின்றதாம். இந்த நிலையில் தான் பைனான்சியர் ரூபத்தில் பெரும் சிக்கலில் சிக்கினாராம் காஜா மைதீன். கடனைக் கேட்டு நெருக்கிய பைனான்சியர், அதற்கு ஈடாக காஜா மைதீன் மனைவியான நடிகை ஆம்னியின் பெயரில் இருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டார். இதனால் ரொம்பவே நொந்து போய் விட்டார் காஜா மைதீன். இந்த சோகத்தின் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்று 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். காஜா மைதீனுடன் சேர்ந்து அவரது மனைவி ஆம்னியும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

காஜாமைதீன் மனைவி நடிகை ஆம்னியும் தற்கொலை முயற்சி? காஜா மைதீன் தற்கொலைக்கு முயன்றது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில் அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான ஆம்னியும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தற்போது தெரியவந்துள்ளது. கடன் தொல்லை காரணமாக கணவனும், மனைவியுமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். ஆம்னி 10 தூக்கமாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் மயக்க நிலைக்குச் செல்லாமல் உயிர் தப்பினார். ஆனால் காஜா மைதீன் அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிட்டதால் மயக்க நிலைக்குப் போய் விட்டார்.தற்போது காஜா மைதீன் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டார். மயக்கம் தெளிந்து குணமடைந்து வருகிறார். அவரை செய்தியாளர்கள் சிலர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தனர். அப்போது, “தமிழ் சினிமாவைப் பற்றி நான் நிறையவிஷயங்களைச் சொல்ல வேண்டும். ஆனால் எனது உடல் நிலை காரணமாக அதிகம் பேசக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தமிழ் திரையுலக நன்மைக்காக நான் நிறைய பேச வேண்டியுள்ளது. சனிக்கிழமை உங்களிடம் விரிவாகப் பேசுகிறேன்”, என்று கூறினார் காஜா மைதீன்.

ஆமனியும் கமலுக்குத் தெரிந்தவர்தான்: கமல்ஹாசன்-காஜா மொய்தீன் தொடர்புகளின் பின்னணியும் ஆழமானது தான். ஆமனி கமலஹாசனுக்கு தெரிந்தவர்தாம், 19945ல் சுபசங்கல்பம் என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். கமலைப் பொறுத்தவரைக்கும் நடிகைகள் என்றலே கட்டிப்பிடிதான், ஆனால், முதல்வர் ஆகும் ஆசை இல்லை என்கிறார். சுபசங்கல்பத்தில் எப்படி கட்டிப்பிடித்தார் என்று ஆனமியைத்தான் கேட்க வேண்டும்.  ஆமாம், உலகநாயகனாகி விட்டதால், நேராக வேறு பதவிக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையுள்ளது போலும்!

மதுரையைச் சேர்ந்த கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசம்: திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் மிகப் பெரிய பிரச்சினையாக தற்போது கூறப்படுவது கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசம் தான். மிகப் பெரிய திராவிடக் கட்சி ஒன்றின் துணையுடன் சில கந்து வட்டிக்காரர்கள் (குறிப்பாக மதுரையைச் சேர்ந்த ஒரு முக்கியமான புள்ளி) திரையுலகினை ஆட்டிப்படைத்து வருவதாக நீண்ட காலமாகவே முணுமுணுப்பு இருந்துவருகிறது[2]. இந்த கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கி சீரழிந்தவர்கள் பட்டியல் மிகப் பெரியது என்று திரையுலகினர் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றனர். பிரபல தயாரிப்பாளர் ஜீ.வி. கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசத்தால் தான் உயிரையே விட்டார். நடிகை தேவயானி, ரம்பா, கார்த்திக் என பலர் தங்களது சொத்துக்களை இழந்தனர். பலரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி வைத்துமிரட்டி பணத்தையும், சொத்தையும் பறித்துள்ளது. அதுபோன்ற ஒரு கும்பலிடம் தான் தற்போது காஜா மைதீன் மாட்டியுள்ளதாக தெரிகிறது. கடன் தொல்லையிலிருந்து தன்னைக்காப்பாற்ற தனக்கு நெருக்கமான சிலரை காஜா மைதீன் அணுகியபோது அவர்கள் கைவிட்டு விட்டதாகவும்,அதன் காரணமாகவும், சொத்தை இழந்த சோகம் காரணத்தினாலும் தான் காஜா மைதீனும், அவரது மனைவியும் தற்கொலைக்குமுயன்றதாக கூறப்படுகிறது.

ஆம்னி ஆயிஷாவாக மாறிய பிறகு குடும்பப் பிரச்சினைகள்: ஆம்னி தயாரிப்பாளர் காஜா மைதீனை மணந்தபிறகு நடிக்கவில்லை.  இவரது தம்பி சீனிவாஸ். இவருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லீலாவதி என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ப்ரீத்தி என்ற 11 வயது மகள் உள்ளார். சென்னையில் குடித்தனம் செய்து வந்தனர். சீனிவாஸுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி லீலாவதியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இத்தனைக்கும் திருமணத்தின்போது லீலாவதிக்கு அவரது பெற்றோர் ரூ. 7 லட்சம் பணம், 45 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளியை அள்ளிக் கொடுத்துள்ளனர். ஆனால் குடித்து விட்டு வந்து தினசரி மனைவியை அடிப்பது, கூடுதல் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது என இருந்தார் சீனிவாஸ்.

குஷ்புவின் “உல்டா கேஸ்” போல இருக்கிறது: குஷ்பு முஸ்லீமாக இருந்து இந்துவாக மாறி கல்யாணம் செய்து கொண்ட போது, தனது சகோதரர் மூலம், சில பணவிஷயங்களில், குஷ்பு பெயரும் அடிபட்டது. அதாவது குஷ்பு தனது முஸ்லீம் சகோதரருக்கு உதவினாராம். கணவருக்கு அது பிடிக்காமல் இருந்தபோது, ஒதுங்கி விட்டதால், சகோதரருக்கு மன வருத்தம் ஏற்பட்டதாம். இனி ஆம்னி விஷயத்தைப் பார்ப்போம்.

இரு மாநில போலீஸாரிடம் புகார்[3]: கணவரின் கொடுமையைப் பொறுக்க முடியாத லீலாவதி நெல்லூர் போலீஸில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், “எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். எனது தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்கிறார்[4]. இதற்கு அவருடைய தாய் சரோஜாவும், நாத்தனார் நடிகை ஆம்னியும் உடந்தையாக உள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இது குறித்து சென்னை போலீசிலும் புகார் செய்தேன்”, என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆம்னி, தாயார் சரோஜா, சீனிவாஸ் மீது போலீஸார் புகார்ப் பதிவு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். ஆம்னி, சரோஜாவையும் கைது செய்யப் போவதாக கூறியுள்ளனர்[5].

ஆமனி தலைமறைவாகி விட்டாரா? சீனிவாசுக்கு இரண்டு மனைவிகள் – முதல் மனைவி – கே. லீலாவதி, இரண்டாவது – தேவிகலா. முதல் மனைவிக்குத் தெரியாமல், இரண்டாவது திருமணத்தை செய்துள்ளான். இதற்கு ஆமனி உதவியுள்ளதாகத் தெரிகிறது[6]. பெண் போலீஸார் ஆமனியைத் தேடுவதால், தலைமறைவாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது[7].

வேதபிரகாஷ்

14-10-2010


[1] இப்ராஹிம் ராவுத்தர் எங்கே சென்று விட்டார் என்று தெரியவில்லை!

[2] ஆனால், அந்த திராவிட கட்சி எது, திராவிடர்களுக்கு இத்தகைய பாரம்பரியங்கள் உண்டா இல்லையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள் போலும்!

[3] உஷா சௌத்ரி என்பவர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள், தோல்விகள், விவாக ரத்துகள் முதலியன ஏன் வருகின்றன  என்று அலசுகிறார்.

http://www.greatandhra.com/ganews/viewnews.php?id=22592&cat=1&scat=4

கோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை?

ஓகஸ்ட் 26, 2010

கோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை?
திரிஷாவும், குஷ்புவும்: இது ஏதோ திரிஷாவிற்கு எதிராக எழுதப்படுவதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். எப்படி குஷ்பு விமர்சிக்கப் படுகிறாரோ, அதுமாதிரித்தான். பெண், தமிழ்பெண், தெலுங்குப் பெண்……………..இந்தியப் பெண் என்றால் ஒழுங்காகத்தான் இருக்கவேண்டும். இல்லை, நாங்கள் எப்படிவேண்டுமானாலும் இருப்போம் என்றால், பிறகு ஒழுங்கைப் பற்றி, ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைபடவேண்டியதில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரைக் கூறத்தேவையில்லை. ஏனெனில், அப்பொழுதே அந்த தகுதியிழ்ந்த பிறகு, அதைப் பற்றி பேசவேண்டிய அருகதையும் போய் விடுகிறது. இல்லை அவர்கள் நிலையில் இருந்து கொண்டு, நாங்கள் சொல்வதுதான் சரி, நீங்கள் எல்லொரும் பழமைவாதிகள், இக்காலத்தைஒ போன்றவர்கள் என்றால், பிறகு ஏன் அக்காலத்தைப் போல நியாயம், தர்மம், ஒழுங்கு…………………என்றெல்லாம் பேசவேண்டும்?

Chima-Clement-telugu-drugscase

Chima-Clement-telugu-drugscase

நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா? நடிகை திரிஷா ஆவேசம்[1]: இதனால் திரிஷா அதிர்ச்சியானார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “போதை பொருள் கடத்தலில் கைதான நைஜீரிய வாலிபரிடம் எனது செல்போன் நம்பர் இருந்ததாக வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன். அவருக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்று தெரியாது. ஐதராபாத்தில் தங்கி இருந்த தோழி என்னிடம் தொடர்பு கொண்டு என்னைப்பற்றி அவதூறாக வெளியான செய்திகள் பற்றி சொன்னார். நைஜீரிய வாலிபர் போன் புக்கில் எனது பெயர் இல்லை என்றும், எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். போதை பொருள் விவாகரத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்[2].

ramya-trisha-with-Sydney Sladen

ramya-trisha-with-Sydney Sladen

வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன்: மனநிலை பாதிப்பு ஏன் ஏற்படவேண்டும். சினிமாவில் பலருடன் சேர்ந்து நடிக்கும் போது, முத்தம் கொடுக்கும்போது, கட்டிப் பிடிக்கும்போது, ஹாலிவுட்டில் போல படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும்போது………………..மற்றவர்ட்கள் என்ன நினைப்பார்கள்? அப்பொழுது ஏன் மனமுடையவில்லை?
னக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. நான் சினிமாவில் அப்படித்தான் நடிப்பேன், ஆனால் என் பெண்மையைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை, இல்லை சட்டப்படி உரிமையில்லை என்று சொன்னால் என்னாவது?

என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்: ஆக, அரசியல் மாதிரி, சினிமாவிலும் இத்தகைய முறை ஒன்றுள்ளது என்று தெரிகிறது.

மானநஷ்ட வழக்கு தொடுப்பேன் என்று எச்சரிக்கை: “நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனது பெயரை வேண்டும் என்றே இதில் இழுத்து விட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும். சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும். அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது. எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன். எனது மேலாளர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார். வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்”,
இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்[3].

Trisha-mood

Trisha-mood

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா இல்லை “தற்காப்பு இயக்கம் மனத்தில் வேலைசெய்கிறாதா? முன்பு அஃபன்ஸில் போய், இங்கு டிஃபன்ஸில் வந்திருப்பது தெரிகின்றது. தேவையில்லாமால், இத்தகைய விளக்கமும், எச்சரிக்கையும் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லையே?
·         நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
·         இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை.
·         போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு.
·         இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும்
·         சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும்.
·         அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து  மீண்டு வர முயற்சி செய்கிறேன்
கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது.
·         எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன்
·         இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்.

trisha-party-hyderabad

trisha-party-hyderabad

எங்களது தூய்மையை நிரூபிக்க போதை மருந்து பரிசோதனைக்கு நாங்கள் தயார்: இந்த தற்பாப்பு மனோநிலை எப்படியெல்லாம் வேலைசெய்கிறது பாருங்கள். தக்குபதி ரானா, கான்மா ஜெத்மனனி, பூனம் கௌர், நானி முதலிய நடிகைகள், ரசாயன பரிசோதனைக்குத் தயார் என்று சொல்கின்றனர்[4]. நைஜீரிய போதை மருந்து விற்றவனின் செல்போனின் 60ற்கும் மேற்பட்ட நடிக-நடிகைகளில் நெம்பர்கள் இருப்பதனால், போலீஸ் அவர்களையெல்லாம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ராஜா, நானி, திரிஷா, ஹர்ஷகுமார், ஹனிஷ்கா, விமலா ராமன் (ரம்யா கிருஷ்ணனின் சகோதரி), லகடபதி என்ற எம்.பியின் மகன்கள்[5]., மதுஷாலினி, சைரா பானு, உப்பலபதி ரவி சீனிவாஸ், பபி என்கின்ற நந்தூரி உதய்[6] என்று அந்த பட்டியல் நீளுகிறது இந்நிலையில் தமது தூய்மைய நிரூபிக்க இந்த நடிகைகள் இப்படி சவால் விட்டுள்ளனர். நைஜீரிய இளைஞர்களுடன் திரிஷா இருக்கின்ற மாதிரி, பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன[7].

Trisha-party

Trisha-party

இப்படி ஒரு ஆண் / பெண் இருப்பது ஒழுக்கமா?

trisha-party-X

trisha-party-X

இப்படி ஆடி குதிப்பது எந்த வகையில் வரும்?

trisha-பார்டி-XX

trisha-பார்டி-XX

இதை எந்த தாயாராவது ஒப்புக்கொள்வாரா?

trisha-X

trisha-X

இதையும் எந்த ரகத்தில் சேர்ப்பது?

எங்களுக்கு ரீல் லைஃபும், ரியல் லைஃபும் ஒன்று என்றால் அப்படியே இருந்து விட்டு போங்கள், பிறகு அந்த பெண்ணிய……………., ஒழுக்க……………….., முறைகள்…………., குணங்கள்…………….முதலியவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!

இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நடிகருடன் தான் திரிஷா இருந்துள்ளார்.


[1] மாலைச்சுடர், நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா? நடிகை திரிஷா ஆவேசம், ஆகஸ்ட் 23, 2010, http://www.maalaimalar.com/2010/08/23154857/actorss-trisha-statement.html
[2] http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6257

 

[3] சன் டிவிக்காரர்கள், திரிஷா அம்மா சொன்னதை 25-08-2010 மாலை செய்திகளில் விடாமல் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும், நித்யானந்தா மாதிரி, மற்ற நடிகைகளின் விவகாரங்களைப் பற்றி ஒலி/ஒளிபரப்பவில்லை.

[4]DC Correspondent ,  Actors agree to undergo blood tests to prove their innocence, August 23rd, 2010;  http://www.deccanchronicle.com/hyderabad/actors-agree-undergo-blood-tests-prove-their-innocence-624

[5] http://andhracafe.com/index.php?m=show&id=41725

[6] http://www.dailylatestnews.com/2010/08/23/trisha-photographed-nigerians-028128

[7] Read more: http://www.dailylatestnews.com/2010/08/23/trisha-photographed-nigerians-028128#ixzz0xdDQbP00

ஒவ்வொரு நடிகையும் யார்-யாருடன் எந்த நாட்டிற்கு சென்றுள்ளாள், ………..என்ற தகவல்களைத் தருவார்களா?

மே 1, 2010

ஒவ்வொரு நடிகையும் யார்-யாருடன் எந்த நாட்டிற்கு சென்றுள்ளாள், ………..என்ற தகவல்களைத் தருவார்களா?

ரஞ்சிதாவும், நித்யானந்தாவும்: ரஞ்சிதா நித்யானந்தாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாள், பல இடங்களில் கை-கோர்த்துக் கொண்டு நடந்து சென்றுள்ளனர், சேர்ந்தே பயணித்துள்ளனர்…………என்றெல்லாம் செய்திகள்!

“பப்” விஷயம் தோலுரிக்கிறது: ஆனால், கடந்த ஆண்டு (2008) தானே, அந்த “பப்” விவகாரத்தில் எல்லா செக்யூலரிஸ, மனித-உரிமை, மனித-நேய………..மஹான்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு வந்தார்கள் –

  • பெண்களுக்கு எல்லாம் உரிமைகளும் உண்டு,
  • அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்,
  • குடிக்கலாம்,
  • கூத்தடிக்கலாம்,
  • எந்த ஆணுடனும் கைக்கோர்துக் கொண்டு நடக்கலாம்,
  • ஆடலாம்,
  • பாலாம்,
  • ஏன் “டேடிங்” கூட வைத்துக் கொள்ளலாம் என்றார்களே மறந்து விட்டார்களா?

வக்காலத்திற்கு வந்தமுதல் பெரிய பெண்மணி ரேணுகா சௌத்ரி! இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் என்ற பொறுப்பு வேறு!

தேர்தல் சமயத்தில் தனது ஆதரவைக் காட்டிக்கொள்ள, சோனியா மெய்னோவே ரேணுகாவுடன் கைக் கோர்த்துக் கொண்டு நடனம் வேறு ஆடினார்!

PUB -is a place where people come, drink, dance, date………………..with such facilities.

ஊடகங்களில் வெளிப்படையான விபச்சார ஆதரவு: NDTV, TIMES-NOW, IBN, X போன்ற சேனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டிகள், விவாதங்கள்…………எல்லாம் வைத்தார்களே? அதில் இந்திய பெண்மணிகள், ” ஆமாம், நாங்கள் குடிப்போம், கூத்தடிப்போம், எங்களுக்கு எல்லாம் உரிமைகளும் உண்டு …………….”, என்று தைரியமாக பேசினர். ஏன் விஜய் டிவி கூட அத்தகைய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதே?

இ-பில்களை போடுவோம்: அதுமட்டுமா, நாங்கள் இ-பில்கள் கூட போடுவோம் என்றாள் ஒரு படித்த பெண்மணி! அதாவது செக்ஸ் / உடலுறவு வைத்துக் கொள்வோம் (திருமணத்திற்கு முன்பு), கர்ப்பமாகமல் இருக்க அந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்வோம்!

ஞாபகம் வரவில்லையே?

ஆனால், அந்த பிரமோத் முத்தாலிக் கயவனாகி விட்டான். அவன் மீது சாயம் / கிரீஸ் பூசப்பட்டது!

அந்த வழக்குகள் எல்லாம் உள்ளனவே, அவற்றை ஏன் எடுத்து விசாரிக்கக் கூடாது? இதைப் பற்றியல்லாம் கூட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், நீதி மன்றங்கள் அவற்றை எடுத்து ஏன் விசாரிக்கவில்லை? குழ்பு வழக்குகளில் என்ன அப்படி தீராதா ஆர்வம்? இவையென்ன அப்படி முக்கியமான வழக்குகளா? இல்லை அந்த குஷ்புவிற்கு இப்படியொரு “தூய்மையான சான்றிதழ்” (clean chit) கொடுப்பதால், ஏதாவது லாபம் இருக்கிறதா?

வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த குஷ்பு: இதே குஷ்பு அப்பொழுது கூட வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்ததே? அப்பொழுது குஷ்பு தான் ஏன் அவ்வாறு, அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறாள், அதன் பின்னணி என்ன என்று யாரும் கவலைப் படவில்லையே? இரண்டு மகள்களின் தாயாராயிற்றே, அவ்வாறு பொறுப்பில்லாமல் / பொறுப்போடு பேசலாமா / கூடாதா, என்று யாரும் ஆராய்ச்சி செய்யவிலையே? அவள் அவ்வாறுதான் நடந்து கொண்டாளா, அவளது தாயார்-தந்தை தட்டிக் கேட்கவில்லையா? இந்த விவரங்கள் எல்லாம் தெரியவிலையே?

மஹாத்மா காந்தியைப் பற்றி விமஸ்ர்சிக்கலாம், நடிகைகள் பற்றி விமர்சிக்கக் கூடாதா? மஹாத்மா காந்தி பற்றிகூட விவாதங்கள் வருகின்றன. பிறகு, நடிகைகள் பற்றி ஏன் விவாதங்கள் வரக்கூடாது?

நடிகைகள் எல்லோரும் எங்கு போகிறார்கள், யாருடன் கைக்கோர்த்து கொண்டு நடக்கிறார்கள், எந்த ஹோட்டலில் தங்குகிறார்கள், அவர்களின் ரூம்களுக்குள் யார்-யார் சென்று, எத்தனை மணி நேரம் கழித்து வெளிவருகிறார்கள். கதவு திறந்து இருந்ததா / மூடி இருந்ததா? மூடியிருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதையெல்லாம் யாரும் விளக்குவதில்லையே?

அயல்நாடுகளில் ப்டபிடிப்பு / காதல் காட்சிகள்: அயல்நாடுகளில் சென்று படபிடுப்பு செய்வது, காதல் காட்சிகள் என்ற பெயரில் அரை-நிர்வாண கூடல்களைக் காட்டுவது, முதலியன சகஜமாகி விட்டது. உடலுறவுதானம் கொள்வதில்லையே தவிர, அது மாதிரி உதடுகளை வைப்பது, மடிப்பது, ஆ,ஊ….என்று கத்துவது, கை-கால்களை ஆட்டுவது, மடக்குவது……………..எல்லாமே செய்கிறர்கள். பிறகு எப்படி அவர்களுக்கு அப்படித்தான் நடிக்க வேண்டும் என்று தெரிகிறது? தெரியாவிட்டால், யார் சொல்லிக் கொடுப்பது? எப்படி அந்த நெளிவு,வளைவுகள்….எல்லாம் தத்ரூபமாக வருகிறது? முன் அனுபவம் ஊண்டா-இல்லையா? இருந்தால் எங்கு கற்றுக் கொண்டார்கள்? யாரிடம் கற்றுக் கொண்டார்கள்? தமிழச்சிகள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில்லையே?

ரசிகர்கள் கயவர்கள், நடிகைகள் உத்தமிகளா? பிறகு எதற்கு, ரசிகர்கள் நடிகைகளின் மீது பாயத் துடிக்கிறார்கள்?

தொட்டுவிடத் துடிக்கிறார்கள்?

இடுப்பைக் கிள்ளப் பார்க்கிறர்கள்?

குஷ்பு பற்றிய விவரங்கள் என்ன? குஷ்பு லண்டனில், மற்ற இடங்களில் யார்-யாருடன் இருந்தது……………என்ற விவரங்களை சொல்லுவார்களா?

துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா………..நிகழ்ச்சிகளில் நடப்பது என்ன? துபாய்க்குச் சென்று லூட்டியடிக்கிறார்களே? அங்கெல்லாம் எந்த ராத்திரி, எங்கு எப்படி கழித்தனர் என்ற விவகாரங்களை, இதே மாதிரி விளக்குவார்களா?

கருணாநிதி உட்கார்ந்து கொண்டு கூத்தடிப்பதை, நடிகைகள் குலுக்குவதை பார்ப்பது எதில் சேர்த்தி? எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன் -மகள்கள், பேரன் -பேத்திகள்……..பெரிய குடும்பம்! முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன? எப்பொழுது பார்த்தாலும், நடிகைகளுடன் பேச்சு, கூட்டம், ஆட்டம்……..அமைச்சர்களே அத்தகைய நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் எப்படி பார்ப்பது?

ரஞ்சிதாவும், குஷ்புவும்: மௌனமாக இருக்கும் பெண்ணிய வீராங்கனைகள்!

ஏப்ரல் 30, 2010

ரஞ்சிதாவும், குஷ்புவும்: மௌனமாக இருக்கும் பெண்ணிய வீராங்கனைகள்!

ரஞ்சிதாவும், குஷ்புவும் திரைப்பட நடிகைகள்.

நடிகைகள் என்றால், தமிழச்சிகளுக்கு வேண்டிய ஐங்குணங்கள் எல்லாம் இருக்குமா இருக்காதா என்றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போல ஆராய்ய்ச்சி செய்யமுடியாது.

இருவருமே ஒத்த காலத்தில், பிரபலமாக உள்ளனர்.

ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் அடிபடுவது இந்த இரண்டு நடிகைகள் தாம்.

குஷ்புவிற்கு இரண்டு பெண்கள் உள்ளார்கள் [அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்தான்]. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லியபடி அவர்கள் நடக்கப் போகிறார்களா அல்லது அம்மா – குஷ்பு சொல்லியபடி நடக்கப் போகிறார்களா என்பதை உலகம் பார்க்கப் போகிறது.

நீதிமான்கள், நியாயவான்கள், தர்மவான்கள்,…………………….,  நீதிபதிகள், தலமை நீதிபதிகள்…………………, அறிவுள்ளவர்கள், பகுத்தறிவு உள்ளவர்கள்……………………………., பெண்ணியம் பேசும் வீராங்கனைகள்,………………கண்ணகி பெயர் சொல்லி கற்ப்பைத் தூக்கிப் பிடிக்கும் கனவான்கள்……………..இப்படி பட்டாளங்கள், கூட்டங்கள், …………………….நிறையவே உள்ளன.

ஏன் அவர்கள் அமைதி காக்கின்றனர்?

ரஞ்சிதாவை கேவலப் படுத்துகின்றவர்களுக்கு, எப்படி குஷ்பு அந்த வரைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது? இல்லை குஷ்பு ரஞ்சிதாவை விட, எந்த அளவில் உசத்தி?

அதன் பின்னணி என்ன?

இதுவும் அந்த கர்ப்பழிப்பாளர்கள் – ஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால், மதுரை மன்மத பாதிரி டேவிட், வில் ஹியூம் ……………………………….போன்ற வகையில் வருகிறதா?

ஊடக தர்மங்கள் தடுக்கின்றனவா?

ஏன் பாரபட்சம்?

அஜித் தும்பைப் பூவா? எதிராக விழுந்த மலரா?

பிப்ரவரி 26, 2010

அஜித் தும்பைப் பூவா? எதிராக விழுந்த மலரா?

கருணாநிதியின் அறிக்கை வேடிக்கையாக உள்ளது:

எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. “இது தான் சமயம்’ என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர். இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என்னைச் சந்தித்து விளக்கமளித்தார். கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று. தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர். இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும்“,  இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி “சாதாரணன்”  என்றாலும் எதையும் சாதாரணமாகச் சொல்லிவிடமாட்டார்!

  • எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.
  • “இது தான் சமயம்’ என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர்.
  • இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என்னைச் சந்தித்து விளக்கமளித்தார்.
  • கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று.
  • தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர்.
  • இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும்

நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை!

பிப்ரவரி 21, 2010

நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை!

கோலிவுட்டில் அமைதி உடன்படிக்கை!
இனி “அஜித்” சமாசாரம் கிடப்பில் போடப்படும் என்பதால், நடிகர்களும், சங்கக்களும் இந்த பிரச்சினைப் பற்றி ஊடகத்தாரிடம் எதையும் பேசவேண்டாம் என்றும், பிரச்சினையை பெரிதாக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது!
Temporary truce in Kollywood!
By Moviebuzz | Sunday, 21 February , 2010, 12:48

A temporary truce has been brought out after a meeting of various unions of Tamil film industry met on Saturday (Feb 20) to sort out the aftermath of Ajith’s controversial speech at a function organised to felicitate Chief Minister M Karunanidhi.

The meeting chaired by Tamil Film Producers Council president Rama Narayanan, FEFSI president V C Guhanathan, Nadigar Sangam general secretary Radha Ravi, R K Selvamani from Tamil Film Directors Association and representatives of film distributors association, exhibitors and theatre owners association demanded an unconditional apology from Ajith. They also condemned Rajinikanth’s statements on the issue.

Meanwhile Ajith and Rajinikanth kept their cool and refused to make any apology. In an interview to an English newspaper, Ajith struck to what he had said in his speech.

Expanding on the comments made at a function, the actor made it clear: “Let stars choose what causes they want to endorse without making it an issue of loyalty to the state or country,”

The Saturday film industry meeting has temporarily put the “Ajith issue” on the backburner. They requested artistes and associations not to talk to media over the issue and vitiate the matter further.

ajith-rajini-fefsi-20-02-10-2

ajith-rajini-fefsi-20-02-10-2

திருமாவளவன் பேசும் வசனங்கள்: ரஜினிகாந்த், அஜீத் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் தமிழ் இன விரோத செயலாக உள்ளது என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்[1]. திருமாவளவனுக்கே நடிக்கவேண்டும் என்ற ஆசையில் நான்கைந்து படங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அன்புதோழி, மின்சாரம்……என பட்டியல் நீண்டது! ஆனால் அவை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இவரும் மற்றவர்களைப் போல “மக்கள்-டிவியில்” அடிக்கடி பேட்டி என்ற ரீதியில் நடித்து வந்தார். ஒன்றும் எடுபடவில்லை. ஆகவே நடிகர்கள்மீது, அவருக்கு இருக்கும் கோபம் நியாயமானதே!

ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல்: இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: “கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது[2]. அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது”.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல்: “கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும்.

விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது.  விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள்[3]. விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழ் இனஉணர்வுக்கு[4] பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது: இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது. தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது”, என்று தெரிவித்துள்ளார்[5].

தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி: இவ்வாறு பேசுவதில் என்ன அர்த்தம் என்று தமிழ் மக்கள் அறிவார்களா? எல்லொருமே நடிகர்கள், அரசியல்வாதிகள் என்றால், பிறகு எப்படி இந்த தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி முதலியவையெல்லாம் வரும்? இனமானத்தலைவர்கள், இனமான நடிகர்கள் இப்படி நாளுக்கு-நாள் தமிழகத்தில் பெருகிவருவது வியப்பாகவே உள்ளது. இனி செம்மொழிக்கும் இவர்களெல்லாம் ஏதாவது செய்தாலும் செய்வார்கள் போலயிருக்கிறது! கருணாநிதிக்கு விழா என்றால் எல்லா நடிகர்கள்-நடிகைகள் வரவேண்டும் இல்லையென்றால் அது தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி என்றாகிவிடும் என்று மிரட்டுவது வேடிக்கைதான்.

முன்பு பத்திரிக்கையாளர்கள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்த்தோம். இனி அரசியல்வாதிகள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்ப்போம்!


[1] தட் ஈஸ் தமிள், ரஜினிஅஜீத்துக்கு திருமாவளவன் கண்டனம்!, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21, 2010

http://thatstamil.oneindia.in/movies/news/2010/02/thirumavalavan-condemns-ajith-rajin.html

[2] இவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் சென்று கலாட்டசெய்தது, அடித்தது முதலியவற்றை மறந்துவிட்டார் போலயிருக்கிறது. ராஜிவ்காந்தி சிலை உடைத்ததிலும் அவர்கள் பங்குள்ளது.

[3] இத்தகைய வேலைகள் இவருக்கு அத்துப்படி. பாண்டிச்சேரி, காரைக்கால் முதலிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறித்துள்ளது அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். வி.சி கூட்டங்கள் நடத்துவதற்கெல்லாம் பணம் கேட்டிருக்கிறார்கள்.

[4] இப்படி இனம் என்று பேசியே அரசியல் நடத்தும் கூட்டங்கள்தாம் தமிழர்களை உண்மையில் ஏமாற்றி வருவதை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

[5] நக்கீரன், ரஜினி,அஜீத்தின் உள்நோக்கம் புரிந்துவிட்டது: திருமாவளவன் ஆவேசம் , ஞாயிற்றுக்கிழமை, 21, பிப்ரவரி 2010 (8:41 IST); http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27325