Posts Tagged ‘நடிகைகளை சீண்டுதல்’

ரஞ்சிதாவும், குஷ்புவும்: மௌனமாக இருக்கும் பெண்ணிய வீராங்கனைகள்!

ஏப்ரல் 30, 2010

ரஞ்சிதாவும், குஷ்புவும்: மௌனமாக இருக்கும் பெண்ணிய வீராங்கனைகள்!

ரஞ்சிதாவும், குஷ்புவும் திரைப்பட நடிகைகள்.

நடிகைகள் என்றால், தமிழச்சிகளுக்கு வேண்டிய ஐங்குணங்கள் எல்லாம் இருக்குமா இருக்காதா என்றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போல ஆராய்ய்ச்சி செய்யமுடியாது.

இருவருமே ஒத்த காலத்தில், பிரபலமாக உள்ளனர்.

ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் அடிபடுவது இந்த இரண்டு நடிகைகள் தாம்.

குஷ்புவிற்கு இரண்டு பெண்கள் உள்ளார்கள் [அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்தான்]. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லியபடி அவர்கள் நடக்கப் போகிறார்களா அல்லது அம்மா – குஷ்பு சொல்லியபடி நடக்கப் போகிறார்களா என்பதை உலகம் பார்க்கப் போகிறது.

நீதிமான்கள், நியாயவான்கள், தர்மவான்கள்,…………………….,  நீதிபதிகள், தலமை நீதிபதிகள்…………………, அறிவுள்ளவர்கள், பகுத்தறிவு உள்ளவர்கள்……………………………., பெண்ணியம் பேசும் வீராங்கனைகள்,………………கண்ணகி பெயர் சொல்லி கற்ப்பைத் தூக்கிப் பிடிக்கும் கனவான்கள்……………..இப்படி பட்டாளங்கள், கூட்டங்கள், …………………….நிறையவே உள்ளன.

ஏன் அவர்கள் அமைதி காக்கின்றனர்?

ரஞ்சிதாவை கேவலப் படுத்துகின்றவர்களுக்கு, எப்படி குஷ்பு அந்த வரைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது? இல்லை குஷ்பு ரஞ்சிதாவை விட, எந்த அளவில் உசத்தி?

அதன் பின்னணி என்ன?

இதுவும் அந்த கர்ப்பழிப்பாளர்கள் – ஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால், மதுரை மன்மத பாதிரி டேவிட், வில் ஹியூம் ……………………………….போன்ற வகையில் வருகிறதா?

ஊடக தர்மங்கள் தடுக்கின்றனவா?

ஏன் பாரபட்சம்?

நடிகையை கற்பழிக்க முயன்ற தீவிர ரசிகருக்கு சிறை!

ஏப்ரல் 23, 2010
நடிகையை கற்பழிக்க முயன்றவருக்கு சிறை
ஏப்ரல் 23,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18035

புவனேஸ்வர்: பாலிவுட் நடிகை அர்ச்சனா ஜோக்லேகரை கற்பழிக்க முயன்றதாக தொடரப்பட்ட  வழக்கில், குற்றவாளிக்கு 18 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புவனேஸ்வர் விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ஒரிசா, புவனேஸ்வரில் 1997ம் ஆண்டு, ஒரியா மொழி சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இதற்காக நடிகை அர்ச்சனா, புவனேஸ் வரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது,  நடிகையின் தீவிர ரசிகரான புபனா என்பவர், நடிகையிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக லாட்ஜிக்கு வந்து, அவரை கற்பழிக்க முயன்றார். இந்த வழக்கு தொடர்பாக புபனாவை, போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, புவனேஸ்வர் விரைவு கோர்ட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. நீதிபதி ஆதித்யா பிரசாத் சாகு, குற்றம் சாட்டப்பட்ட புபனாவுக்கு 18 மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், அபராதமாக 1,500 ரூபாயும் விதித்தார்.

செக்ஸ் டார்ச்சர் : சீரீயல் டைரக்டருக்கு தடை!

பிப்ரவரி 27, 2010
செக்ஸ் டார்ச்சர் : சீரீயல் டைரக்டருக்கு தடை!

http://cinema.dinamalar.com/tamil-tv-serials/1700/Chinna-thirai-Television-News/TV-artist-association-bans-director-CJ-Basker.htm


TV artist association bans director CJ Basker
கூட்டம் கூட்டியதே விவகாரமாகத்தான் உள்ளது: சின்னத்திரையில் பல சீரியல்களை எடுத்து வெற்றி பெற்றவர் டைரக்டர் சி.ஜே.பாஸ்கர். இவர் தனது தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக சின்னத்திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டமைப்பிற்கு நிறைய புகார்கள் வந்தன. சித்தி, அண்ணாமலை, மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி போன்ற தொடர்களை இயக்கியிருக்கும் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க சின்னத்திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் சின்னத்திரை நடிகர்கள் சங்கம், டைரக்டர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சி.ஜே.பாஸ்கருக்குத் தடை! கூட்ட முடிவில் டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் இயக்கும் தொடர்களில் இனி யாரும் நடிக்கக் கூடாது என்றும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு தடை விதித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குஷ்புவின் தீர்ப்பு! சி.ஜே.பாஸ்கர் மீதான நடவடிக்கை குறித்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவி நடிகை குஷ்பு கூறுகையில், சி.ஜே.பாஸ்கரால் நடிகைகளும், தயாரிப்பாளர்களும் ஏராளமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டு வந்த சி.ஜே.பாஸ்கர் மீது நிறைய நடிகைகள் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்கள். அதன்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நடிகைகளை சீண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், என்றார்.

பாஸ்கர் இயக்கத்தில் நடித்த நடிகைகளின் பட்டியல்: டைரக்டர் சி.‌ஜே.பாஸ்கர் இயக்கத்தில் நடிகைகள் கவுசல்யா, சங்கவி, மல்லிகா, ப்ரீத்தி, தீபா வெங்கட், மஞ்சரி, யுவராணி, நளினி, லதா, மீரா வாசுதேவன், சீதா, வைஷ்ணவி (தற்கொலை செய்து கொண்டவர்), சந்தோஷி, தேவதர்ஷினி, திவ்யதர்ஷினி, தேவி, புவனேஸ்வரி, நீனா, சுஜிதா உள்பட ஏராளமான நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகைகளை சீண்டுதல் என்றால் என்ன? நடிகைகள் எல்லா வேடங்களிலும், உடைகளிலும் நடிக்க வருகின்றனர். கவர்ச்சி என்ற போர்வையில் நிர்வானத்தைக் காட்டுகின்றனர். இதனால், அவர்கள் பொது இடங்களில் வரும்போது, ரசிகர்கள் அவர்களைத் தொட்டுப் பார்க்க விரும்புகின்றனர். சில நேரங்களில் “அருகில் வந்தார், மேலே உரசினார், இடுப்பில் கை வைத்தார், இடுப்பில் கிள்ளினார்…………………”, என்றெல்லாம் புகார்கள், செய்திகள் வருகின்றன. ரசிகர்களே அப்படியென்றால், டைரக்டர்கள் தொடத்தான் செய்வார், அதற்கு மேலும் செல்வார் / செய்வார். அதுமட்டுமல்லாது கற்றுக் கொடுக்கிறேன் என்று “டூயட்” பாடவும் செய்வார், அதாவது, கதாநாயகன் மாதிரி கட்டிப்பிடிக்கவும் செய்வார்! அப்பொழுது கற்றுக்கொள்ளும் நடிகைகள் எந்த அளவிற்கு அனுமதிக்கின்றனர் என்பதிலிருந்து தான் டைரக்டர் செய்வது சீண்டுதலா, செக்ஸா, செக்ஸ் டார்ச்சரா, என்றெல்லாம் தெரியவரும். பிறகு நடிகைகள் எந்த அளவிற்கு அனுமதித்தனர், எங்கு எல்லை மீறினார் அன்று எப்படி தீர்மானிப்பது?

செக்ஸ் டார்ச்சர்: ஆங்கிலத்தில் “செக்ஸ் டார்ச்சர்” என்றால், தமிழில் “பாலியல் கொடுமை” என்று சொல்லலாம். அப்படியானால், கேமராவிற்கு முன்பு, பின்பு, மறைவாக, தனிப்பட்டமுறையில்…………………என்ற பல நிலைகள் வருகின்றன. ஒழுக்கம் என்று பேசினால், இதெல்லாம் நிச்சயமாகப் போலித்தனம் தான். ஆகவே, இவ்வாறு ஏதோ அவர்களுக்கும் உரிமை இருக்கிறது என்று பேசும்போது, மக்கள் இதிலெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது! சுருக்கமாகச் சொன்னால், நடிக்க வந்த நடிகைகள், அதிலும் பல ஆண்கள் தொட்டு நடிக்கவுள்ள நிலைகள், சரசமாடும் நேரங்கள், கட்டிப்பிடுப்பது, முத்தம் இடுவது, இடுப்பு, மார்பு முதலியவற்றைக் காட்டுவது, தொடுவது …………….என்ற நிலை, உடலுறவு கொள்வது போல சப்தங்களை உண்டாக்குவது, தொடுவது, உடம்புகளை ஆட்டுவது, முகங்களை, உதடுகளைக் கோணிக்கொள்வது, கால்மேலே கால் போடுவது………….இப்படியிருக்கும்போது, பார்க்கும் தமிழர்களுக்கும், இவர்களது ஊடல்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. உடலுறவு கொள்ளாததுதான் பாக்கி. விட்டால், அதைசெய்து காட்டுவார்கள் போல. ஏற்கெனவே, ஆஸ்கார், கிராம்மி என்ற தகுதிகள் வந்துவிட்டதால், அதற்கும் துணியத்தான் செய்வார்கள் தமிழர்கள்!

ஆஸ்கார், கிராம்மி என்ற தகுதிகள் வந்துவிட்டபிறகு அதற்கு குறையா? உடலுறவு கொள்லும் நடிப்பு மட்டும் தான் “நடிப்பாக” உள்ளது! மற்றதெல்லாம் உண்மையாகவே உள்ளது. ஆகவே அத்தகைய காட்சிகளில் “நடிக்காததுதான்” பாக்கி. விட்டால், அதைசெய்து காட்டுவார்கள் போல. ஏற்கெனவே, ஆஸ்கார், கிராம்மி என்ற தகுதிகள் வந்துவிட்டதால், அதற்கும் துணியத்தான் செய்வார்கள் தமிழச்சிகள் / தமிழர்கள்!