Posts Tagged ‘நந்தினி’

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (2)!

ஏப்ரல் 7, 2017

நடிகர்நடிகை திருமண வாழ்க்கை, முந்தையபிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்முறிவு, பிரிவுதற்கொலைதொடரும் அவலங்கள் (2)!

Karthikeya- Nandini marriage failure

நடிகைமனைவி கணவனைப் பற்றி கூறுவது: தற்கொலை செய்து கொண்ட கணவன் பற்றி, மனைவி சொல்வது நோக்கது. இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த நந்தினி, “எனது கணவர் கார்த்திகேயன் பலரிடம் பண மோசடி செய்தார். என்னிடம் கூட ரூ.20 லட்சத்தை நகை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தார்[1]. வேலைவாங்கி தருவதாகவும் கூறி சிலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு வெண்ணிலா என்ற வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள அது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்[2]. அதனால் நான் என் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். நான் இன்னும் அவரை நேசிக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.  இறந்த பின்னர், இன்னும் நேசிக்கிறேன் என்பதே புதிராக இருக்கிறது. தீர்மானமாக பிரிந்து வந்த பிறகு, நேசிப்பது என்றால் என்ன என்று புரியவில்லை. இதிலும் ஒன்றும் புதுமையாக இல்லை, கணவன் இறந்து விட்டான், இனி நிம்மதிதான் என்ற போக்கு வெளிப்படுகிறது. பொதுவாக, இறந்தவர் மீது குற்றம் சொல்லமாட்டார்கள், நந்தினி சொல்லியாகி விட்டது, அதாவது, ஒரு தீர்மானத்தோடு இருப்பது தெரிகிறது.

 Karthikeyan - suicide note

தற்கொலை செய்த கொண்ட பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டு: அந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் எழுதியுள்ள கடிதத்தில், “எனது தற்கொலைக்கு தனது மனைவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர்தான் காரணம். அக்கா, அம்மாவை பார்த்துக் கொள்,” என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நந்தினிக்கும், அவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், தனது மகனின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்திகேயனின் தாய் சாந்தி, “எனது மகனின் மரணம் குறித்து நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் புகார் அளிக்க இருக்கிறேன். என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அவரையும், அவரது தந்தையையும் நான் சும்மா விட மாட்டேன்,” என அவர் கூறினார். இந்நிலையில் அதே நாளில் வெளிவந்த செய்தியில், நடிகை ரம்பா விவாகரத்து விவகாரத்தில், கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று மனு போட்டு, வெற்றி பெற்றது தெரிகிறது.

Karthikeyans mothers grudge against Nandini

நடிகை ரம்பா விசயத்தில் சமரசம்[3]: தமிழில் உழவன் என்ற படத்தில் மூலம் நடிகை ரம்பா அறிமுகமானார். சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தமிழரான இந்திரனை காதலித்து திருமணம் செய்து கனாவில் வசித்து வந்தார். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார். அதனிடையே ரம்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இரண்டு பெண் குழந்தைகளுடம் தனியாக வாழ முடியவில்லை கணவருடன் தன்னைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ரம்பாவிடம் உள்ள குழந்தைகளை மீட்டுத்தரக் கோரி இந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கணவன் -மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்க்கவும் அறிவுரை வழங்கி இருந்தது. நடிகை ரம்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்து மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இறுதியில்  இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது[4].

Ramba - divorce resulted in union

திரையுலக தம்பத்தியத்தின் வெற்றி-தோல்விகள் – சில உதாரணங்கள்: ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதை கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவகாரத்துடன் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. மாறுபாடாக இருக்கிறது. இரண்டு செய்திகளும் ஒரே நாளில் வெளிவந்துள்ளதால், அவ்வாறு நோக்கப்படுகிறது. தமிழக சினியுலக தம்பதியரை ஆராய்ந்து பார்த்தால், ஒரு சில தம்பதியரே வெற்றிகரமாக தொடர்ந்து சேர்ந்து வாழ்ந்து, உதாரணத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளனர். அதில், சிவகுமார்-லக்ஷ்மி, ஜெயசங்கர்- போன்ற தம்பதியரைக் குறிப்பிடலாம். இவ்விவகாரங்களில் கமல் ஹஸன் தான் நிச்சயமாக மோசமான உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது,. பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, இரண்டு பெண்களின் தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தாலும், இன்றைக்கு வரை “கணவன்–மனைவி தாம்பத்திய உறவு தோல்வி”யின் சின்னமாகவே திகழ்கிறார். அவ்வாறு மிக மோசமான தோல்வியை அடைந்த பிறகும், “சேர்ந்து வாழும்” இலக்கணத்தை காட்டுகிறேன் என்பது போல, கௌதமியுடன் வாழ்ந்தாலும், அதிலும் தோல்வியை அடைந்து, சாதனையைப் படைத்துள்ளார். இன்று தேவையில்லாமல், பல பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார்.

Sivakumar wife Laksmi

கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் காதல்-மோதல் ஏன்?: கார்த்திகேயன்-நந்தினி தம்பதியர் விவாகரத்திற்குச் செல்லவில்லை, நீதிமன்றத்திற்கு போகவில்லை. இதிலிருந்து இருதரப்பிலிம் பிரச்சினைகள் இருப்பது தெரிகிறது. இருப்பினும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட “ஒவ்வாமை” பூதாகாரமாக பெரிதாகிக் கொண்டிருந்தது. திருமண வாழ்க்கையே பிரிந்து வாழும் வாழ்க்கை நிலையானது. முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள் இருவருக்கும் தெரிந்தும் இருந்தது. இருப்பினும், நந்தினி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது கேள்விகளை எழுப்புகின்றன. “என் மகனின் அழகில் மயங்கிய நந்தினி, அவனை அடைந்தே தீருவேன் என கூறி, ஆடியாட்களை வைத்து அவனை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்”, என்பது உண்மையா-பொய்யா என்று தெரியவில்லை. அது உண்மையாயின், பெண்மையின் சபலம் புலப்படுகிறது. அது “சரவணன்-மீனாக்ஷி” தொடரில் வெளிப்பட்டதாகவும் உள்ளது.

Karthikeyan - suicide note-implicating

பிரிந்து வாழும் பெண்னின் நிலை: எக்காலத்திலும், திருமணம் ஆகி, கணவனைப் பிரிந்து வந்து, வாழும் பெண்ணின் வாழ்க்கை பலவிதங்களில் விமர்சனத்திற்குள்ளாகிறது. ஆனால், சமூகத்தில், இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பணக்காரர்கள் விசயத்தில் கண்டுகொள்ளாமல் இருக்கலாம், ஆனால், மத்திய வர்க்க மற்றும் ஏழைக் குடும்பங்களில் அது பெரிய பிரச்சினையாகிறது. “பந்தம்-முறிவு”, பிரிந்து வாழ்வதினால், நிதர்சனமாகவோ, சட்டப்படியோ முறிந்ததாகாது.

  • சாதாரண, சமூகத்தின் பேச்சிற்கு பயந்து,
  • குடும்ப கௌரவம் காக்கப்பட வேண்டும்,
  • இல்லை பெற்றோர்-சகோதரர்-உறவினர்கள்,
  • “நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற நிலையில் –

உள்ள பெண்கள் தாம் பிரிந்து சென்று மௌனமாக வாழ்ந்து வருகிறார்கள். தனது கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் கூட புகார் கொடுக்காமல் “பெருந்தன்மையோடு” இருந்து விடுகிறாள். குழந்தை, இருந்தால், கூட எந்த உதவியையும் எதுர்பார்க்காமல், அதனையும் வளர்த்து பெரியவனாக்குகிறாள். ஆனால், “தந்தை” என்பவன், தனக்கு சம்பந்தமே இல்லாமல் இருப்பது பல உதாரணங்கள் இருக்கின்றன. இக்காலத்தில் “ஜீவனாம்சம்” கேட்டு வழக்குகள் போடுவதும், அளிக்கப் பட்ட “ஜீவனாம்சம்” போதாது என்று, மேலும் வழக்கு போடும் பெண்கள் இருக்கிறார்கள். அந்நிலையில் “விவாக ரத்து” தேவையாகிறது.

Karthikeya- Nandini marriage failure-suicide

கணவன் தற்கொலை – தீர்வு என்ன?: “விவாக ரத்து” ஆனாலும், பெண்கள் பெரும்பாலும் தனியாகவே இருந்து வாழ்கிறார்கள். நவநாகரிகமான பெண்கள் சிலர் வேண்டுமானால், மறுமணம் செய்து கொள்கின்றனர். சினிமா உலகத்தில் யாரும் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை, கவலைப்படுவதில்லை. ஆனால், இங்கு, ஒரு ஆண், “பிரிவு-தற்கொலை” விசயத்தில் உதாரணமாகி விட்டான். ஒன்று-இரண்டு என்று திருமண உறவுகல் தோல்வி, பணப்பிரச்சினை, இரண்டாவது மனைவி சம்பாதிக்கிறாள், ஆனால், தன்னால் சம்பாதிக்க முடியவில்லை, போதா குறைக்கு இரவில் நேரங்கழித்து வருவதால் ஏற்பட்ட சந்தேகங்கள் முதலியவை அந்த ஆணை கோழையாக்கி விட்டது போலும்.  முன்பே குறிப்பிட்டது போல, திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மனைவி இறந்தால், வரதக்ஷினை போன்ற விவகாரங்களில், கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்டமுள்ளது.  ஆனால், ஆண் தற்கொலை செய்து கொண்டால், எந்த சட்டமும் இல்லை. இவ்வாறு அவலங்கள் தொடருகின்றன. எனவே, சாதாரண மக்கள், இந்த சினிமா-மாயை, திராவிட மாயை, பகுத்தறிவு மாயை முதலியவற்றிலிருந்து வெளியே வரவேண்டும்.

© வேதபிரகாஷ்

06-04-2017

Jaishakar actor

[1] வெப்துனியா, நந்தினியை சும்மா விட மாட்டேந் –  மாமியார் ஆவேசம், புதன், 5 ஏப்ரல் 2017 (11:36 IST)

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/nandhini-s-mother-in-law-revengy-for-her-son-death-117040500015_1.html

[3] தினத்தந்தி, நடிகை ரம்பா கணவர் இந்திரகுமாருடன் சேர்ந்து வாழ சம்மதம் உயர்நீதிமன்றத்தில் மனு, ஏப்ரல் 05, 06:51 PM

[4] http://www.dailythanthi.com/News/State/2017/04/05185117/Rumba-husband-With-Indrakumar-Consent-to-live-together.vpf

 

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (1)!

ஏப்ரல் 6, 2017

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (1)!

Kartikeyan, Nandini marriage

சினிமா உலகத்தில் கணவன் – மனைவி உறவுகள்: ஆரம்ப காலத்திலிருந்தே (1930களிலிருந்தே) நடிகையாக நடிக்க வந்து விட்டால், எப்படி பல ஆண்களுடன் நெருங்கிப் பழக வேண்டியுள்ளது, “நடிப்பு” என்ற முறையிலும், “ஷூட்டிங்”, “டேக்கிங்” போன்ற திரும்ப-திரும்ப செய்யும் சேட்டைகளிலும், சகநடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர், மேக்கப்-மேன் என்று எல்லோரும் தொடுவது, தொட்டுப் பேசுவது, கட்டிக் கொள்வது என்பதெல்லாம் காமிராவுக்கு முன்பு-பின்பு என்ற விவகாரங்கள் இருந்து வருகின்றன. அப்பொழுது மிகக்குறைவு எனும்போது, இப்பொழுது ஒழுங்காக இருப்பவர்கள் “மிகக்குறைவு” என்றாகி விட்டது. நடிகையைத் திருமணம் செய்து கொண்ட ஆணும், நடிகனைத் திருமணம் செய்து கொண்ட பெண்ணும் தனது மனைவி-கணவன் ஒழுக்கமாக இருந்திருக்கிறாளா-இருந்திருக்கிறானா என்று சொல்ல முடியாது. பெண்ணிற்கு “கற்பு” என்று தராதரம் பார்க்கும் போது, ஆணுக்கு அது பார்ப்பதில்லை. பொதுவாக, நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு போன்ற விவகாரங்களில் இதுவரை நடிகைகள் தாம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், ஒருவேளை முதன்முதலாக, ஒரு ஆண் தற்கொலை செய்து கொண்டது இதுவே போலும்!

Kartikeyan, Nandini- not faithful she complains

திருமணம் ஆகி ஒரே வருடத்திற்குள் கருத்து வேறுபாடு தோன்றியது: தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நந்தினி. இந்த தொடரில் இவர் ‘மைனா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் ‘மைனா’ நந்தினி என்று அழைக்கப்பட்டார்[1]. தற்போது மற்றொரு தொலைக் காட்சியில் இவர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ‘வம்சம்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட தமிழ் திரைப் படங்களிலும் நந்தினி நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம்.5, 2016 மதுரையில் கார்த்திக் என்ற கார்த்திகேயனை இவர் காதல் திருமணம் செய்து கொண்டார்[2]. விருகம்பாக்கம் விஎஸ்எஸ் நகரை சேர்ந்த கார்த்திகேயன், தியாகராய நகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளார். கார்த்திகேயன், நந்தினி இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனால் கார்த்திகேயன் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய சாகச நிகழ்ச்சியில் கார்த்திக்கும், நந்தினியும் பங்கேற்றனர். அப்போது, கார்த்திக்குக்கு காலில் அடிப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்புகூட கார்த்திக் தன்னுடைய அம்மா சாந்தியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார், என்கிறது தினத்தந்தி[3]. தற்போது, உடற்பயிற்சிக் கூடத்தை வேறு ஒருவரிடம் அவர் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Nandini- not faithful she complains

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நடிகையின் கணவன்: வடபழனி பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் கார்த்திகேயன் அடிக்கடி தங்குவது வழக்கம். 03-04-2017 அன்று இரவும் அவர் அங்கு தங்கியுள்ளார். 04-03-2017 அன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதுகுறித்து, தங்கும் விடுதி நிர்வாகிகள் விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கதவை திறக்க முயன்றபோது, அது உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கதவை உடைத்துக் கொண்டு போலீஸார் உள்ளே சென்றனர். அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் கார்த்திகேயன் சடலமாக கிடந்தார். உடனடியாக அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Kartik suicide - Nandini accuses him

நந்தினி பலமுறை ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு தாமதமாக வந்துள்ளது பிரச்சினையாகியுள்ளது: இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள விருகம்பாக்கம் போலீஸார் கூறும்போது, “நந்தினிக்கும் அவரது கணவருக்கும் திருமணமான 2-வது மாதத்தில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. நந்தினி பலமுறை ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு தாமதமாக வந்துள்ளார். இதை கார்த்திகேயன் விரும்பாததால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மூன்று பக்க கடிதத்தை கார்த்திகேயன் எழுதி வைத்துள்ளார். அதை கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,” என்றனர். ஆக, புதியதாக எந்த காரணமும் இல்லை. கணவன், நடிகை-மனைவியை நடிக்க ஒப்புக் கொள்கிறான், ஆனால், இரவு மட்டும் நேரத்தோடு வர விரும்புகிறான். தொழில் நிமித்தம் அவளால் முடியவில்லை. இரண்டு மனைவிகளிடமும் தோல்வியுற்ற ஆண், தற்கொலைக்கு சென்று விடுகிறான்.

Kartik suicide - Nandini complains about jim

கார்த்திகேயனின் இறுதி விருப்பம்[4]: இறக்கும் போது கார்த்திகேயன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் நந்தினியின் தந்தை தான் என்று குறிப்பிட்டுள்ளார்[5]. அவர் தனது சகோதரி ரம்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அம்மாவை நீ பார்த்துக்கொள். இத்தனை நாள் பிணமாக வாழ்ந்தேன். இனிமேல் வாழ பிடிக்கவில்லை . என் கவுரவம், மரியாதை போய்விட்டது. என் இறுதி ஆசை, முதல் மனைவி வெண்ணிலாவை புதைத்த இடத்தின் அருகே என்னை புதைத்துவிடு’ என்று குறிப்பிட்டுள்ளார்[6]. இதிலிருந்து, கார்த்திகேயனுக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. இதனை “கள்ளத் தொடர்பு”, என்று சென்னை.ஆன்.லைன் வர்ணிக்கிறது[7]. ஆனால், அவள் தற்கொலை செய்து கொண்டாள், கைது செய்யப்பட்டார் என்றெல்லாம் குறிப்பிட்டாலும், எப்படி வெளியே வந்தார், மறுபடியும் நதினியைத் திருமணம் செய்து கொண்டார் என்ற விவரங்கள் குறிப்பிடப் படவில்லை[8].

Kartik suicide note -pathetic

திருமணம் ஆகி, ஒரே வருடத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டால், மனைவி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?: திருமணம் ஆகி ஒரே வருடத்தில் மனைவி இறந்தால், வரதக்ஷினை போன்ற விவகாரங்களில், கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க சட்டமுள்ளது. மனைவி தரப்பில் புகார் கொடுத்தாலே, கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தினரை கைது செய்யும் அளவுக்கு சட்டநிலை உள்ளது. இங்கு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். மனைவி, நேர்மாறாக, கணவன் பணம் கேட்டு தொல்லைக் கொடுத்ததாக மனைவி கூறுகிறாள்! இதை எப்படி சட்டவல்லுனர்கள் அணுகுவார்கள் அல்லது பெண்ணியப் போராளிகளபேடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை, ஆண் சித்தாந்த போராளிகள் சட்டம் என்றால், எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று வாதிப்பார்களா? ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டமா என்ற பல்லவியைப் பாடுவார்களா? இதையும் “எல்லோருக்கும் ஒரே சட்டம்” என்ற முறையில் வாதிப்பார்களா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

06-04-2017

Kartik suicide note

[1] தி.இந்து, நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை: திருமணமான ஒரு ஆண்டுக்குள் சோகம், Published: April 5, 2017 08:26 ISTUpdated: April 5, 2017 08:34 IST

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9616365.ece

[3] தினத்தந்தி, டி.வி.நடிகை நந்தினி கணவர் தற்கொலைக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள், ஏப்ரல் 05, 11:05 AM

[4] வெப்துனியா, நடிகை நந்தினி கணவர் கார்த்திக்கின் கடைசி விருப்பம்!, புதன், 5 ஏப்ரல் 2017 (17:31 IST).

[5] http://www.dailythanthi.com/News/CinemaNews/2017/04/05110525/Nandinis-husband-tivinatikai-What-is-the-reason-for.vpf

[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-nandini-s-husband-karthik-s-last-option-117040500042_1.html

[7] சென்னை.ஆன்.லைன், நடிகை நந்தினியின் கணவர் தற்கொலை : காரணம் கள்ளத்தொடர்பாம்!, April 05, 2017, Chennai

[8] http://chennaionline.com/article/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

கதாநாயகி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி: இயக்குனர் கைது!

மார்ச் 17, 2010
கதாநாயகி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் மோசடி: இயக்குனர் கைது
மார்ச் 17,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17006

குழந்தை, +2 மகள், மகள், மகன்……………… சினிமாவில் நடிக்க வைக்கவேண்டும், கதாநாயாகியாக்க வேண்டும் என்று பெற்ற தாய்களே தயாராக உள்ளார்கள் என்பதை நினைத்தௌப் பார்க்கும் போது, அவர்கள் – அந்தா தாயார்கள் – தனது மகளை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

உண்மையை சொல்ல போனால், எந்த தாயும் அவ்வாறு விரும்பமாட்டாள், ஏனெனில் ஒரு நிலையில் / இன்றைய சூழ்நிலையில் விபச்சாரத்திற்கு போவதும் நடிகைத் தொழிலும் ஒன்றுதான். ஐங்குணக்களை விடுத்துதான் அவள் வாழ வேண்டும். இருப்பினும் மாதம் லட்சம் கொடுக்கிறேன் என்றால் நம்பி நடீகப் போகிறேன் இல்லை அனுப்புகிறேன் என்று பெண்கள் புறப்பட்டுவிட்டது எதனைக் காட்டுகிறது?

நிச்சயமாக வீட்டுக்கு வீடு கலர்-டிவி, டன் டனா-டன் கொடுத்து, நன்றாகவே சினிமா பித்தை ஏற்றிவிட்டிருப்பது தெரிகிறது.

வென்றுவிட்டார்கள் அந்த தந்தையும், மகனும் – தோற்று விட்டார்கள் இந்த தாயார்களும், மகன்களும்!

வாழ்க தமிழச்சிகள்!

செம்மொழி!!

கனிமொழி!!! [பெண்கள் டிவி சீரியல் பார்க்க வேண்டாம் என்று சொன்னதற்காக]

Important incidents and happenings in and around the world
நடிப்பு சொல்லிக்கொடுக்கும் இயக்குனர்: ராணுவ மேஜரின் மகளை சினிமா கதாநாயகி ஆக்குவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில், சினிமா இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஸ்ரீரங்கனின் மகன் அரவிந்த் மேத்தா(32). பளஸ் 2 படித்த இவர், சினிமா பயிற்சிக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்று நடிகராக முயன்றார்.  வாய்ப்புக் கிடைக்காததால், சொந்த ஊருக்குச் சென்று ப.ஏ., தமிழ் இலக்கியம் படித்தவர், மீண்டும் 2001 – 04ம் ஆண்டில், இயக்குனர் பயிற்சி பெற்றார்.இயக்குனர் வாய்ப்பு தேடிய போது, அதுவும் கிடைக்கவில்லை. இயக்குனராகும் ஆசையில், தி.நகர் அபபுல்லா தெருவில், 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்தார். அங்கு, “ஜீனியஸ்’ என்ற பெயரில் சினிமா பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். அப்பயிற்சி மையத்தில், 5,400 ரூபாய் கட்டணத்தில், ஆறு மாத நடிப்பு, இயக்குனர் பயிற்சி அளித்து வந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். சில படங்களில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.“மிரர் விஷன்’ என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம், “நிலவே வருக’ என்ற புதிய படத்தை எடுப்பதாகவும், அப்படத்திற்கு புதுமுக நடிகர், நடிகைகள் தேவை என விளம்பரம் செய்தார்.

எடுக்காத படமும், பூட்டிய வீடும்: இவ்விளம்பரத்தைப் பார்த்து, திருச்சியில் ராணுவ மேஜராக பணிபுரியும் ரீட்டா(41) என்பவர் அரவிந்த் மேத்தாவை தொடர்பு கொண்டார்.பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகள் ஜெனிபரை, நடிகையாக்குமாறு கேட்டார். ஜெனிபரை ஹீரோயின் ஆக்குவதாக ஒப்புக் கொண்ட அரவிந்த் மேத்தா, படம் தயாரிக்க பணம் வேண்டும் என கேட்டார். தன் மகளை ஹீரோயின் ஆக்குவார் என நம்ப, ரீட்டா முதலில் நான்கு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கொடுத்தார். புதிய படத்திற்கு பூஜை போட்ட அரவிந்த் மேத்தா, இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும் படத்தை முடிக்கவில்லை. இதுகுறித்து ரீட்டா ஆறு மாதங்களுக்கு முன் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். விரைவில் படத்தை முடித்து வெளியிடுவதாக அரவிந்த் மேத்தா போலீசாரிடம் உறுதியளித்தார்.இந்நிலையில், கடந்த வாரம் ரீட்டா மீண்டும் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தார். “முன்பு போலீசில் கூறியபடி, அரவிந்த மேத்தா படத்தை முடித்து வெளியிடவில்லை. அவரது சினிமா பயிற்சி மையமும் மூடப்பட்டுள்ளது’ என, ரீட்டா புகாரில் கூறினார். இதுமட்டுமின்றி, சந்துரு, வெங்கடேசன் ஆகியோரும், அரவிந்த மேத்தா பணம் வாங்கி ஏமாற்றியதாக போலீசில் புகார் செய்தனர்.போலீசார் அபபுல்லா தெருவில் உள்ள அரவிந்த மேத்தா வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் உரிமையாளர், “அரவிந்த மேத்தா மூன்று மாதமாக வாடகை தரவில்லை. அட்வான்சில் கழித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்’ என, போலீசில் கூறினார். அரவிந்த மேத்தாவை போலீசார்  கைது செய்தனர்.

சினிமா மோகத்தால் சீரழிந்த மாணவி! பரபரப்பு தகவல்கள்!!

March 17, 2010

தனியார் திரைப்பட கல்லூரி: சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பிளஸ் 2 மாணவியிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட புதுமுக டைரக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை தி.நகர் அபிபுல்லா ரோட்டில் ஜீனியஸ் பிலிம்ஸ் சிட்டி என்ற பெயரில் தனியார் திரைப்பட கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் பெயர் அரவிந்த் ஜி மேத்தா. இவர் சொந்த தயாரிப்பாக நி‌லவே வருக என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக புதுமுக நடிகர் – நடிகைகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் சினிமா ஆசையில் அரவிந்த்தை சந்தித்தனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் அரவிந்தை அழைத்து விசாரித்ததில், படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாகவும், விரைவில் ரீலிஸ் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

பிளஸ் 2 மகளை நடிகையாக்க விரும்பிய தாயார்! இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த ராணுவ பெண் அதிகாரி ரீட்டா என்பவர் தேனாம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், டைரக்டர் அரவிந்த் பத்திரிகைகளில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து, பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த எனது மகள் ஜெனீபரை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். அரவிந்த்தை பார்த்து பேசியபோது, அவர், எனது மகளை அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக சொன்னார். இதற்காக ரூ.நான்கரை லட்சம் பணமும் கொடுத்தேன். சினிமா படப்பிடிப்பும் நடந்தது. எனது மகளும் கலந்துகொண்டு நடித்தாள். ஆனால் திடீரென்று படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. டைரக்டர் அரவிந்த்தின் அலுவலகமும் பூட்டி கிடக்கிறது. இதனால் எனது மகளின் படிப்பு வீணானதோடு, என்னுடைய பணமும் பறிபோய்விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

டைரக்டர் – அரவிந்தனின் வாக்குமூலம்: இதையடுத்து டைரக்டர் அரவிந்‌தை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனது சொந்த ஊர் மணப்பாறை. நான் திரைப்பட கல்லூரி நடத்தி வருகிறேன். எனது திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி, டைரக்ட் பயிற்சி, இசை பயிற்சி, எடிட்டிங் பயிற்சி போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். 6 மாத பயிற்சிக்கு ரூ.5 ஆயிரமும், ஒரு வருட பயிற்சிக்கு ரூ.9 ஆயிரமும் மாணவ-மாணவிகளிடம் கட்டணம் வசூலித்து வந்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவ – மாணவிகளை வைத்து “நிலவே வருக’ என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்தேன். அதன் டைரக்டரும் நான்தான். போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவி படும் கஷ்டங்களை பின்னணியாக வைத்து இந்த படத்தை எடுத்தேன். ஜெனீபர்தான் கதாநாயகியாக நடித்தார். படம் நன்றாக வளர்ந்தது. கிட்டத்தட்ட படம் முழுக்க எடுத்துவிட்டேன். 4 நாள் சூட்டிங் மட்டுமே பாக்கி இருந்தது. ஏற்கனவே ரூ.14 லட்சம் செலவு செய்துவிட்டேன். மேலும் ரூ.10 லட்சம் தேவைப்பட்டது. அந்த பணத்தை என்னால் புரட்டமுடியவில்லை. அதனால்தான் படத்தை முழுமையாக எடுத்து வெளியிடவும் முடியவில்லை. யாரிடமாவது பைனான்ஸ் வாங்கி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து வந்தேன். ஆனால் அதற்குள் ஜெனீபரின் தாயார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார். இவ்வாறு அரவிந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். அரவிந்த் மீது போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர். பிளஸ்2 மாணவி தவிர, 83 வயது மூதாட்டியையும் பாட்டி வேடத்தி்ல் நடிக்க வைப்பதாக கூறி அரவிந்த் ஏமாற்றியிருக்கிறாராம். இதேபோல சினிமா கனவுகளாலும், ஆசையாலும் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் அரவிந்திடம் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி சினிமா இயக்குனர் மீது புகார்கள் குவிகின்றன
மார்ச் 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=17045

Important incidents and happenings in and around the world

ரீட்டாவைத் தொடர்ந்து – கரோலின், பானு, நசீமா அக்தர்: கதாநாயகி வாய்ப்பு தருவதாகக் கூறி பெண்ணிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனருக்கு எதிராக மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தனர். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அரவிந்த் மேத்தா தங்களையும் ஏமாற்றியதாக, மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் செய்தனர். நேற்று புகார் அளித்த தரமணி எம்.ஜி.ஆர்., நகர், கலைஞர் தெருவைச் சேர்ந்த கரோலின்(22) கூறியதாவது: விளம்பரத்தைப் பார்த்து அரவிந்தை அணுகிய போது, இரண்டாவது கதாநாயகி ஆக்குவதாகக் கூறி, 35 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார். கடந்த ஜனவரி 22ம் தேதி பணம் கொடுத்தேன். கணேசன் என்பவர் தான் பணத்தை வாங்கிச் சென்றார். பணத்தை பெற்றுக் கொண்ட அரவிந்த், கால்ஷீட் டைரி, ஐ.டி., கார்டு ஆகியவற்றை கொடுத்தார். ஆனால், படப்பிடிப்பை துவக்கவில்லை; போட்டோ ஷூட் கூட நடத்தவில்லை. சில வாரம் கழித்து, ‘எப்போது படப்பிடிப்பு?’ என கேட்ட போது, காலம் கடத்தி வந்தார். மீண்டும் அலுவலகம் சென்று கேட்ட போது, ‘உன்னை சினிமா துறையில் நுழைய விடாமல் செய்து, ஆளையே காலி செய்து விடுவேன்’ என, அரவிந்த் மிரட்டினார். அப்போது அவருடன் இருந்த வாசு, ‘நானும் போலீஸ் தான்; நீ எங்கு வேண்டுமானாலும் போ’ என மிரட்டினார். இவ்வாறு கரோலின் கூறினார்.

பானுவின் அனுபவங்கள்: குழந்தை நட்சத்திரம் ஆக்க ஆசைப்பட்டாராம்!: மூலக்கடை டீச்சர்ஸ் காலனி முதல் தெருவைச் சேர்ந்த பானு(29) என்பவர் கூறியதாவது: கடந்த 2008ம் ஆண்டு குழந்தை நட்சத்திரம் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து, எனது மகள் நந்தினியை நடிக்க வைக்கும் எண்ணத்தில் அரவிந்தை அணுகினேன். என் மகளை நடிக்க வைக்க 15 ஆயிரம் ரூபாய் கேட்டதால், பணம் கொடுத்தேன். ‘இமை தேடும் கண்கள்’ என்ற படத்தில் என் மகள் உட்பட 12 குழந்தைகளை நடிக்க வைப்பதாகக் கூறினார். என் மகளை நடிக்க வைப்பதற்கான தேதியை, மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருந்தார். என்னிடம், ‘உன் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது; உன்னை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக சேர்த்து விடுகிறேன்’ எனக் கூறி, 10 ஆயிரம் ரூபாய் வாங்கினார்.

“ராத்திரிக்கு வா என்று கூட்டது”: ஒரு நாள் அலுவலகத்தில் அரவிந்தின் நண்பர் குட்டியான் பாபு, ‘நான் தான் படத்தின் டைரக்டர். நீ உண்மையிலேயே நடிக்க வேண்டும் என ஆசையிருந்தால், நான் சொல்கிறபடி நட. எனக்கு மட்டும் நீ ஒரு நாள் இரவு கம்பெனி கொடுத்தால், அடுத்த நாளே உன்னையும், உன் மகளையும் நடிகை ஆக்கி விடுவேன்’ என்றார். ‘இதே போன்று எனக்கு கம்பெனி கொடுத்த பலரை நடிகை ஆக்கியிருக்கிறேன்’ என குட்டியான் பாபு கூறினார். பயந்து போன நான், அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். என்னை தொடர்ந்து பஸ் நிலையம் வரை வந்த குட்டியான் பாபு, ‘நான் சொல்கிறபடி நடக்காவிட்டால், உன்னை சினி பீல்டிலேயே வரவிடாமல் செய்து விடுவேன்’ என மிரட்டினார். என் தம்பி சீனிவாசனை, ‘ஆயுள் தண்டனை’ என்ற படத்தில் எஸ்.ஐ., வேடத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, அரவிந்த் 20 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினார். இரண்டு நாள் சாப்பாடு கட்டணமாக 1,800 ரூபாய் வசூலித்தார். இவ்வாறு பானு கூறினார். சீனிவாசனும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியாக புகார் அளித்தார்.

மகனை நடிகனாக்க ஆசைப் பட்ட நசிமா அக்தர்! சி.ஐ.டி., நகரைச் சேர்ந்த நசீமா அக்தர்(35) அளித்த புகாரில் கூறியதாவது: என் மகனை நடிக்க வைக்க 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிய அரவிந்த், மகனுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றார். இதை நம்பி, அரவிந்திடம் 50 ஆயிரம் பணம் கொடுத்தேன். என் மகனை நடிக்க வைக்காததால், அரவிந்திடம் பணத்தை திருப்பிக் கேட்டேன். கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி 6,000 ரூபாய்க்கு செக் கொடுத்தார். வங்கியில் கேட்ட போது, அந்த வங்கிக் கணக்கே இல்லை என தெரிவித்தனர். மற்றொரு வங்கியில் கொடுத்த செக்கும் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. ‘செக் வேண்டாம்; பணமாகக் கொடு’ என கேட்ட போது, ‘இன்னும் ஒருமுறை இங்கே பணம் கேட்டு வந்தால், உன் பிணம் தான் இங்கே இருக்கும்’ என மிரட்டினார். இவ்வாறு நசீமா அக்தர் கூறினார்.

இரண்டாவது கதாயனாக ஆசைப்பட்ட மணிக்குமார்! கிண்டி மடுவங்கரை, புதுத் தெரு மசூதி காலனியைச் சேர்ந்த மணிகுமார்(24) கூறியதாவது: விளம்பரத்தைப் பார்த்து அரவிந்தை அணுகிய போது, ‘தாய் தந்தை தாரம்’ என்ற படத்தை எடுக்கிறேன். உன்னை இரண்டாவது கதாநாயகன் வேடத்தில் நடிக்க வைக்கிறேன்’ எனக் கூறி, 16 ஆயிரம் ரூபாய் கேட்டார். மேக்கப் டெஸ்ட், வாய்ஸ் டெஸ்ட், போட்டோ எடுக்கவும் பணம் கேட்டார். மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். என்னை வைத்து போட்டோ எடுத்தார். அதன் பிறகு, எந்த சரியான பதிலும் சொல்லவில்லை. கடைசியாக ஜனவரி 22ம் தேதி கேட்ட போது, ‘எனக்கு நிறைய ஆள் செல்வாக்கு உள்ளது; உன்னை ஆளே இல்லாமல் செய்து விடுவேன்’ என மிரட்டினார். இவ்வாறு மணிகுமார் கூறினார்.

சினிமா ஆசையை பயன்படுத்திக் கொண்ட சினிமா ஸ்டை மோசடி: அரவிந்த் மேத்தாவுடன், மேலும் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்பு உள்ளதாக புகார் கொடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் முழுமையாக விசாரணை நடத்தினால், மேலும் சிலர் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அரவிந்த் மேத்தா, சினிமா பயிற்சி நிறுவனம் என போர்டு வைத்து, வெளிப்படையாகவே மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் மேத்தாவைப் போல சினிமா ஆசை காட்டி, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் பெரிய கும்பல், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரவிந்த் மேத்தாவிடம் ஏமாந்தவர்களைப் போல மேலும் பலர் ஏமாறும் முன், அந்த கும்பலையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்? சினிமா இயக்குனர் அரவிந்த் மேத்தா மீது நேற்று மேலும் பலர் புகார் கொடுத்தனர். வேலூரைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார். சாந்தியைப் போல், தமிழகம் முழுவதும் பலரை அரவிந்த் மேத்தா ஏமாற்றி பணம் வசூலித்துள்ளார். ஏமாந்தவர்களில் மேலும் சிலர் இன்று புகார் செய்ய வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அரவிந்த் மேத்தா, தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்டிருப்பதால், இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது. இக்கும்பல் பல பெண்களை ஆசை வார்த்தை கூறி கற்பழித்திருக்கக் கூடும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் மேத்தாவை, மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு அரவிந்த் மேத்தாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தும் போது, அவரிடம் ஏமாந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் குறித்து மேலும் விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் வழக்கமாக நடப்பது தான். ஏதோ “டிப் ஆஃப் தி ஐஸ் பர்க்” (பனிக்கட்டியின் நுனியைத் தட்டிவிடுவது போல) என்பார்களே அது போல ஒரு துளி தான் சிதறியிருக்கிறது!

கோடம்பாக்கத்தில் இதெல்லாம் 60ற்கும் மேற்பட்ட வருடங்களாக சகஜமாக நடக்குன் விஷயங்கள்தாம்!

இதைப்போல பிரபலமில்லாத, பிரபலமிழந்த, நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பார்கள்………….பல கதைகளை, மன்னிக்கவும், உண்மைகளை முழு விவரங்களுடன் சொல்லுவார்கள்.

கேட்டால் திகைக்கக்கூடியதாக இருக்கும்.

ஏனெனில் அவ்வாறான விஷயங்களில் இப்பொழுதுள்ள பிரபலங்கள் சம்பந்தப் பட்டிருப்பதால்தான்!