Posts Tagged ‘பஞ்சாயத்து’

குழாயடி சண்டையை காட்டும் சன்-டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும், அசிங்கப்படும் ஊடக யோக்கியதையும்!

திசெம்பர் 3, 2016

குழாயடி சண்டையை காட்டும் சன்டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும், அசிங்கப்படும் ஊடக யோக்கியதையும்!

khushboo-plucks-the-collar-of-the-person-on-the-tv-show-fight-scene-sun-tv

குழாயடி சண்டையை காட்டும் சன்டிவியும், நடத்தி வைக்கும் குஷ்புவும்: டிவியில் நடக்கும் ‘குடும்பப் பஞ்சாயத்து’ ஷோக்கள் குறித்து நடிகையும் இயக்குநருமான ஸ்ரீப்ரியாவின் கருத்துகள் இணையத்தை பரபரப்பாக்கியுள்ளது, என்ரு தமிழ் ஊடகங்கள் ஆரம்பித்து விட்டன.  சன்-டிவியில் குஷ்பு நடத்தும் ‘நிஜங்கள்’ என்கிற டாக் ஷோவில் கலந்து கொண்ட கணவன் – மனைவி இருவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ள முயற்சி செய்தனர். இதைத் தடுக்கப் போன குஷ்பு, நடந்த களோபரத்தில் அந்த ஆணின் சட்டையை கொத்தாக பிடித்து விலக்கி விட்டார். போதாகுறைக்கு குஷ்பு அந்த ஆணைத் தள்ளி விட்டு, “போ……போ………போ……..” என்று கத்துவது அசிங்கமாக இருந்தது[1]. “….பார்த்தா அசிங்கமாக இருக்கும்……” என்ற கமென்ட் வேறு. இதைப் பார்க்கும் போதே கேவலமாக இருக்கிறதே? இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.

khushboo-plucks-the-collar-of-the-person-on-the-tv-show-sun-tv

கவுன்சிலிங் (ஆலோசனை) என்ற பெயரில் தொலைக்காட்சிகள் நடத்தும் நிகழ்சிகள் வெட்ககரமானது: நடிகை ஸ்ரீரஞ்சனி தனது பேஸ்புக் பக்கத்தில்[2]இதை விமர்சித்து, “கவுன்சிலிங் (ஆலோசனை) என்ற பெயரில் தொலைக்காட்சிகள் நடத்தும் நிகழ்சிகள் வெட்ககரமானது. நான் இங்கே நடிகை குஷ்பு நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகளை இங்கே பதிவிட்டுள்ளேஎன். அதில் குஷ்பு ஒரு ஆணின் சட்டையை பிடித்து இழுக்கிறார். இதற்கு பெயர்தான் கவுன்சிலிங்கா?[3] இது கொடுமை, தவறானது, தாக்குதல், பாலின பாகுபாடு. இதுபோன்ற நிகழ்ச்சிகளை கண்டு பொதுமக்கள் ஏமாந்துவிடக் கூடாது. இந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது. மேலும், உங்கள் குடும்ப கவுவரத்தை அந்நிகழ்ச்சிகள் வெளிச்சம் போட்டு காட்டி கேவலப்படுத்துகின்றன. அதன் மூலம் அந்த சேனல்கள் காசு சம்பாதிக்கின்றன.”….“டெலிவிஷனில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு அடிக்க பாய்ந்தது தவறு. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நடிகை ரஞ்சனி கூறினார்[4].

pooooo-pooooooooo-shouting-khusboo

நடிகைகள் நடத்தும் குழாயடி பஞ்சாயத்து: நடிகைகள் குஷ்புவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் டெலிவிஷன்களில் குடும்ப தகராறுகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கணவன்-மனைவி தகராறு, வரதட்சணை பிரச்சினைகள், காதல் விவகாரம் என்று பல்வேறு குடும்ப பிரச்சினைகளை இதில் அலசி விவாதிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் காரசார வாக்குவாதம், அழுகை, அடிதடி என்றெல்லாம் போவது உண்டு. சமீபத்தில் குஷ்பு நடத்திய பஞ்சாயத்தில் தகராறு மூண்டு அதில் கலந்து கொண்ட ஒருவரை அவர் சட்டையைப் பிடித்து இழுத்து அடிக்க பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது[5]. இந்த நிகழ்ச்சிகளுக்கு தற்போது திடீர் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகைகள் பஞ்சாயத்தை விமர்சித்து நடிகை ஸ்ரீப்ரியாவும் கருத்து வெளியிட்டார். அவர் கூறும்போது, “குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த நடிகைகளுக்கு தகுதி இல்லை. குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் இருக்கிறார்கள்.” என்றார்.

ranjani-chides-kushboo-for-her-tv-show-dm-02_12_2016_012_030

ரஞ்சனி குஷ்புவை விமர்சித்தது: தற்போது முதல் மரியாதை, கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள முன்னாள் கதாநாயகி ரஞ்சனியும், குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டித்து உள்ளார். டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது: “கவுன்சிலிங் கொடுக்கிறேன் என்று பல்வேறு மொழிகளில் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனை வெட்கக்கேடான நிகழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். தாக்குதல், பாலின பாகுபாடு, பொதுமக்களுக்கான தொல்லைகளாகவே இவை இருக்கின்றன. நடிகைகள் இந்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதன்மூலம் குடும்ப கவரவம் குறைக்கப்படுகிறது. அப்பாவிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். ஏழைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு நடிகைகளுக்கு தகுதி இல்லை. அந்த பணிகளை செய்ய தொண்டு அமைப்புகளும் கோர்ட்டுகளும் இருக்கின்றன. நடிகை குஷ்பு இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து ஆவேசமாக பேசி இருக்கிறார். இதுதான் கவுன்சிலிங்கா? அந்த நபர் கோர்ட்டுக்கு செல்லும் முன்பு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்,”  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

sripriya-twitter-comments-against-khshboo

ஶ்ரீபிரியா முகநூலில் வெளியிட்ட கருத்து[6]: இந்நிலையில் இது போன்ற ஷோக்கள் தொடர்பாக நடிகை ஸ்ரீப்ரியா தனது முகநூலில் இன்று ஒரு கருத்தை எழுதினார் அது இன்னும் பரபரப்பை கிளப்பியுள்ளது[7]. அந்த பேஸ்புக் ஸ்டேட்டஸில் “கணவன் மனைவிக்கும் இடையில் பிரச்னை என்றால் அதை தீர்த்து வைக்க சட்டம் இருக்கிறது. கோர்ட் இருக்கிறது. அதில் கிரிமினல் குற்றங்கள் நடந்தால் தண்டிக்க பலவகையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன[8]. அதையெல்லாம் விட்டு விட்டு கலைஞர்கள் தொலைக்காட்சியில் பஞ்சாயத்து செய்வதை பார்க்க சகிக்கவில்லை[9]. நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் பார்க்க முடியவில்லை / ஜீரணிக்க முடியவில்லை[10]. இதை தயவு செய்து நிறுத்தலாமே?  நாம் இது போன்றவற்றை விடுத்து நமக்குத் தெரிந்த கலை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தலாம், ப்ளீஸ்,என்று எழுதியிருந்தார்[11]. இதை அவரின் நட்புப்பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் எழுதிய ஸ்ரீப்ரியா பின்னர் அதன் திரைச்சொட்டை (ஸ்கீரின் ஷாட்) ட்விட்டரில் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் அக்கௌண்டிலும் இதே பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீப்ரியா,அப்படி இது போன்ற ஆதரவற்ற மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்குமானால் அதை கேமரா இல்லாமல் செய்யலாமே. அவர்களின் பிரச்னை தீர சரியான ஆலோசகரிடமோ அல்லது குடும்பநல ஆலோசகரிடமோ அனுப்பலாமே,” என்றும் ட்விட் எழுதினார். இதற்கும் பலத்த ஆதரவு இருந்தது. சிலர் எதிர் கருத்தும் எழுதினார்கள். ஆனால் அவர்களுக்கு பொறுமையாய் பதிலும் சொல்லிக்கொண்டுதான் இருந்தார்[12].

© வேதபிரகாஷ்

03-12-2016

ranjani-facebook-comments-against-khusboo

[1] https://www.youtube.com/watch?v=aQ-G7YdXLIY

[2] தமிழ்.வெப்துனியா, இதற்கு பெயர்தான் கவுன்சிலிங்கா?. நியுசென்ஸ்குஷ்புவை வாரிய நடிகை ரஞ்சனி, வியாழன், 1 டிசம்பர் 2016 (15:31 IST).

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/actress-ranjini-angru-with-kushbo-tv-programes-116120100043_1.html

[4] தினத்தந்தி, குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில் குஷ்பு அடிக்க பாய்ந்தது தவறு; மன்னிப்பு கேட்க வேண்டும்; நடிகை ரஞ்சனி சொல்கிறார், பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 02,2016, 2:47 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 02,2016, 2:47 AM IST

[5] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/12/02024728/Khushboo-pounced-to-hit-the-wrong-family-on-the-occasion.vpf

[6] விகடன், நாம என்ன நாட்டாமையா?” –டிவி பஞ்சாயத்துகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா கண்டிப்பு!, Posted Date : 10:00 (29/11/2016); Last updated : 15:07 (29/11/2016)

[7] நியூஸ்.7.டிவி, குடும்ப பிரச்சனைகளுக்கு நடிகைகள் தீர்வு சொல்வதற்கு நடிகை ஸ்ரீப்ரியா எதிர்ப்பு!, November 29, 2016.

[8] http://ns7.tv/ta/actors-do-not-judge-issues-other-family-judge-shows.html

[9] http://cinema.dinamalar.com/tamil-news/53546/cinema/Kollywood/Sripriya-oppose-TV-Programs-likes-truth-programs.htm

[10] தி.இந்து, கலைகளுக்கு மட்டும் நடுவராக இருப்போம்: நடிகர்களுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை, Published: November 28, 2016 16:28 IST; Updated: November 28, 2016 16:28 IST

[11] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article9394561.ece

[12] http://www.vikatan.com/news/cinema/73696-actress-sripriya-condemns-tv-programmes-which-deals-with-family-issues.art

டிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா?

நவம்பர் 19, 2016

டிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா?

actresses-cannot-solve-family-problems

actresses-cannot-solve-family-problems

மக்கள் தங்கள் பிர்ச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் நடிகைகள் தீர்த்து வைப்பார்களா?: மக்கள் தங்களது உறவுகளை, தாம்பத்திய முறைகளை, தங்களால் பேண முடியவில்லை என்பதும், சமூகம் பலவழிகளில் சீர்கெட்டு கிடக்கும் போது, குடும்பத்து பெரியவர்கள், பெற்றோர், இல்வாழ்க்கை நலன் விழையும் மற்றோர், உற்ற நண்பர்கள் முதலியவர்களின் பேச்சை கேட்காமல் இருப்பவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர் என்பதும், அந்நிலைகளில் இவர்கள் சரிசெய்ய முடியாததை, சினிமா நடிகைகள் சரிசெய்து வைக்கிறார்கள் என்பது போன்ற நிகழ்ச்சிகளை டிவி-செனல்கள் காட்டி வருவது மிகக் கேவலமாகும். ஒழுக்கமில்லாதவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவது, லஞ்சம் வாங்குபவன் யோக்கியன் போல லஞ்சம் வாங்காதே என்று பிரச்சாரம் செய்வது, விபச்சாரிகள் கற்பைப் பற்றி விவாதிப்பது-பரிந்துரைப்பது போன்றவை எல்லாம் கேவலத்திலும் கேவலமான விசயங்கள். ஆனால், அத்தகையவை மேடைகளில் நடந்து வந்தன. இப்பொழுது, டிவி-செனல்களில் நடந்து வருகின்றன.

actresses-cannot-solve-family-problems-if-they-cannot-solve-theirs

When actresses-cannot-solve-family-problems-if-they-cannot-solve-theirs

நடிகைகளுக்கு குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் யோக்கியதை, அதிகாரம் உள்ளதா?: நடிகைகளின் சொந்த வாழ்க்கையினை விமர்சிக்கக் கூடாது என்று கூட சில அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மற்றவர்களின் சொந்த வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கிறேன் என்று டிவி-ஷோக்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரீதியில் இறங்கி விட்ட போது, அதைத் தட்டிக் கேட்கத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. இதை நடத்தும் நடிகைகள், தங்களை ஏதோ பெரிய ரிஷி-முனி, நீதிபதி, எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் தீர்க்கதரிசி என்பது போல பாவித்துக் கொண்டு, கலந்து கொள்பவர்களுக்கு, ஆலோசனை வழங்குவது, கண்டிப்பது, திட்டுவது போன்றவற்றை எல்லாம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு யார் அத்தகைய அதிகாரத்தைக் கொடுத்தது, அல்லது கலந்து கொள்பவர்களுக்கு அந்த அளவுக்கு அறிவில்லையா, என்பதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

ramba-gives-petition-in-the-family-court

Ramba-gives-petition-in-the-family-court

குடும்ப நீதிமன்றங்களை அவமதிக்கும் டிவி-நிகழ்ச்சிகள்: குடும்ப நீதிமன்றங்களில் நடக்கும் விசயங்கள் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு மற்றும் சிலருக்குத்தான் தெரிகிறது, தெரிய வருகிறது. அங்கு நீதிபதிகள் சட்டதிட்டங்களில் வரையறைகளுக்குள் விவாதித்து, சேர்ந்து வாழத்தான் பெரும்பாலும் அறிவுருத்தப்படுகின்றனர். உறவுகளை பிரிக்க, உடைக்க, விலக்கி வைக்க முயல்வதில்லை. ஆனால், டிவிசெனல்களில் இத்தகைய சமூகப் பிரச்சினைகள், முரண்பாடுகள், பிறழ்வுகள், முதலியவை அலசப்படும் போது, பார்ப்பவர்களுக்கே சங்கடமாக இருக்கிறது. சில நேரங்களில், அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள் உண்மையில் பிரச்சினைகளை தீர்க்க வருகிறார்களா அல்லது விளம்பரத்திற்காக வருகின்றானரா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா அல்லது டிவிசெனல்காரர்களே “செட்டப்” செய்து தயாரித்து வருகின்றானரா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

urvasi-actress-spotted-drunk

urvasi-actress-spotted-drunk

விவாகரத்து பெற்று மறுமணம் செய்து, குடிக்கும் நடிகை மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வது: தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் “கைரளி” செனலில் “ஜீவிதம் சாட்சி” என்று நடத்தி வருகிறார்[1]. நடிகை ஊர்வசி மலையாள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக எழுந்த புகாரின் பேரில் பிரபல நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டிசம்பர் 9, 2016 அன்று விசாரணைக்கு வருகிறது[2].  செபின் என்பவர் “ராயல் காவடியர் பொரட்க்ஷன் போர்ஸ்” [Royal Kavadiyar Protection Force president Shefin] என்ற அமைப்பின் தலைவரான இவர் தான் ஊர்வசியின் மீது புகார் கொடுத்தார்[3]. டிவி நிகழ்ச்சியின் மீது குடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்[4]. 2015ல் கேரள மாநில சட்டசபை பெண்-ஊழியர்கள் கூட்டத்தில், குடித்த நிலையில் பேசும் போது, பிரச்சினை ஏற்பட்டதால், இவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்[5]. மனோஜ் கே. ஜெயன் [Manoj K. Jayan] என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டு எட்டாண்டு வாழ்ந்தார். 2008ல் விவாகரத்து செய்து கொண்டு, 2013ல் சென்னையைச் சேர்ந்த பில்டர் சிவபிரசாத் [Chennai-based builder Sivaprasad] என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

urvasi-actress-blaming-for-her-drinking-habit

Urvasi-actress-blaming-for-her-drinking-habit

ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி: தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக விளங்கியவர் ஊர்வசி[6]. ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்னைகளை அலசும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்[7]. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஊர்வசி கேட்டு, அதை தீர்க்க முயற்சிப்பது வழக்கம்[8]. இந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவர் மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது[9]: “நான் கடந்த சில தினங்களுக்கு முன் ஊர்வசி பங்கேற்று நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்அப்போது ஊர்வசி என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண்களிடம் அவர் மிக மோசமாக நடந்து கொள்கிறார். எனவே இது தொடர்பாக நடிகை ஊர்வசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” குடிபோதையில் இருக்கும் ஒருவர் எப்படி தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும் என்று கேட்டுள்ளது சரியான கேள்விதான்[10]. ஊர்வசி ஏழைகளை கிண்டல் செய்வது போன்று பேசியுள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11]. இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது[12].  இது சம்பந்தமாக மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மோகன்தாஸ் விசாரித்தார்[13]. அதைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்ட ஆலோசகர்கள் ஆகியோர் இது சம்மந்தமாக ஒரு மாதத்திற்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[14]. அதன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது[15].

the-fact-or-reality-khusbooகுஷ்புவும் குடும்ப பஞ்சாயத்து செய்ய வந்து விட்ட நிலை: தமிழ் சினிமாவில் மார்க்கெட் இறங்கியவுடன் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ஆளுங்கட்சி / அதிமுக தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை நடத்தி வந்தார்[16]. இவர் எதிர்க்கட்சியில் இணைந்ததால் வேறு தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார்[17]. குஷ்புவைப் பொறுத்த வரையில், பெண்களின் விசயங்களில், குறிப்பாக பெண்களின் கற்பு போன்ற விவகாரங்களில் சர்ச்சைகள் நிறைந்த கருத்துகளையே வெளியிட்டார். வழக்குகளும் போடப்பட்டன. ஆனால், அரசியல் ஆதரவு இருந்ததால் தப்பித்துக் கொண்டார். திமுக, காங்கிரஸ் என்று கட்சிகள் மாறி தன்னுடைய அரசியல் ஆதரவை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். இருப்பினும், குடும்ப-பாங்கானவர்கள் குஷ்புவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. நடிகை என்றுதான் பார்க்கின்றனரே அன்றி, வேறெந்த விதத்திலும் பார்ப்பதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மற்ற நடிகைகளுக்கும் பொறுந்தும்.

© வேதபிரகாஷ்

19-11-2016

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

[1] தினமலர், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை ஆபாசமாக திட்டுவதாக புகர்: ஊர்வசிக்கு மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ், November 18, 2016, 11:58 [IST].

[2] http://cinema.dinamalar.com/other-news/53207/cinema/otherlanguage/Human-Rights-Commission-seeks-explanation-for-actress-Urvashi.htm

[3] english.manoramaonline, ‘Urvashi was drunk on TV show’: Here’s what landed the actor in trouble, byOnmanorama Staff, Friday 18 November 2016 09:42 AM IST.

[4] The complaint, filed by Royal Kavadiyar Protection Force president Shefin, also accused Urvashi of appearing on the TV show drunk.

http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/urvashi-drunk-misbehavior-tv-show-kerala-human-rights-commission.html

[5] Last year, the actor addressed an event organized by a section of Kerala assembly’s women employees in a drunken stage and the officials had to pack her off.

[6] மக்கள்முரசு, ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி?, Posted on November 18, 2016.

[7] http://makkalmurasu.com/actress-urvashi-trouble-rude-behaviour-talk-tv-show/

[8] தமிழ்.வெப்துபனியா, அசிங்கமாக பேசிய நடிகை ஊர்வசி: டிவி நிகழ்ச்சியில் பரபரப்பு!, வெள்ளி, 18 நவம்பர் 2016 (09:50 IST).

[9] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actor-urvashi-misbehaves-during-tv-show-kerala-rights-panel-seeks-report-116111800003_1.html

[10] பிளிமி.பீட்.தமிழ், ஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி?, Posted by: Siva, Published: Thursday, November 17, 2016, 17:54 [IST].

[11] http://tamil.filmibeat.com/heroines/urvashi-misbehaves-on-television-show-043348.html

[12] தினகரன், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை மோசமாக திட்டுவதாக புகார் : நடிகை ஊர்வசிக்கு ஆணையம் நோட்டீஸ், Date: 2016-11-18@ 00:32:51.

[13] தமிழ்.ஒன்.இந்தியா, மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களை தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, . By: Essaki, Published: Friday, November 18, 2016, 14:34 [IST].

[14] http://tamil.oneindia.com/news/india/actress-urvashi-trouble-267578.html

[15] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=259544

[16] தமிழ்நாடு.நியூஸ், சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு, OCTOBER 21, 2016

[17]http://newstnn.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/