திலீப்பின் கைது தாமதம் ஏன்?: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்?
திலீப்பின் குற்றப்பங்கும், கைதும்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன்பேரில், அவரிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருடைய மேலாளர் அப்புன்னி, டைரக்டர் நாதிர் ஷா ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் வெளியானது. பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியானது. மேலும், கடந்த நவம்பர் மாதம் 2016 திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாக பல்சர் சுனில், போலீசாரிடம் தெரிவித்தான். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான்.
காவ்யா மீதான சந்தேகம், வீடியோ ஆதாரம் திலீப்பை மாட்ட வைத்தது: பல்சர் சுனியின் வாக்குமூலம் முக்கியமாக அமைந்தது. திலீப் குற்றவாளியோடு இருந்த புகைப்படங்களும் முடிவுக்குக் கொண்டு வந்தன. இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவானது. அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர். திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் 10-07-2017 [திங்கட்கிழமை] அன்று கைது செய்யப்பட்டார்[1]. அதாவது, அரசியல், பணபலம் முதலியவற்றைக் கொண்ட “சூபர் ஸ்டார்” வகை திலீப்பை கைது செய்ய, போலீஸாரே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், முதலமைச்சர், திலீப்பிற்கு எதிராக ஊடகங்கள் கொடுக்கும் விவரங்களை மறுத்தார் என்பதும், கைது தாமதத்திற்கு காரணம் ஆகிறது.
திலீப் சதித்திட்டம் தீட்டியதற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: “நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல் வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டது. அது அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்”,இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நடிகைகளை மாறி-மாறி காதலிப்பது, விவாகம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது, வியாபார நோக்கமா, தொழில் தர்மமா, சதிதிட்டமா?
2013லில் போட்ட திட்டம் 2017ல் நிறைவேற்றப்பட்டது[3]: 2013லேயே பாவனாவை பாலியல் ரீதியில் தாக்க திலீப் திட்டம் போட்டதாக, போலீஸார் தெரிவிக்கின்றனர். குமார் என்பவனுடன் கொச்சினில் ஒரு ஓட்டலில் மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 7 2013 காலத்தில் தன்கியிருந்த போது, சுனில் குமார் என்ற அல்சார் சுனி என்பவனிடம் ரூ.1.5 கோடிக்கு திலீப் ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். அதன்படி, ரூ.10,000/-த்தை ஒரு பி.எம்.டபிள்யூ காரில் திரிசூரில் முன்பணமாக கொடுத்தான். பாவானவை பிடிக்க மூன்று இடங்கள்ல் ஒத்திகை பார்க்கப்பட்டது[4]:
- திரிசூர் டென்னிஸ் கிளப் [the Thrissur Tennis Club on November 13, 2016],
- சி.ஐ.எப்.டி ஜங்ஸன், தொப்பும்படி[at CIFT Junction, Thoppumpady, on November 8, 2016], மற்றும்
- தொடுப்புழா [at Thodupuzha on November 14, 2016].
பி. கோபால கிருஷ்ணன் என்கின்ற திலீப்பை 11வது குற்றவாளியாக, குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப் பட்டு, மாஜிஸ்ட்ரேடிடம் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண்ணின் கற்பா, வியாபாரமா – எது முக்கியம் என்றால், வியாபாரம் என்பது போல செய்தி: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதால், சுமார் ரூ.50 கோடி மதிப்பளவிலான படங்கள் பாதியில் நிற்கின்றன, என்று மிக்கக் கவலையோடு “தமிழ்.இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலகம், வரப்போகும் நாட்களில் நடக்கவுள்ள நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்துக் காத்திருக்கிறது. திலீப்பின் அடுத்த வெளியீடாக இருந்தது ‘ராம்லீலா’. அருண் கோபி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜூலை முதல் வாரத்தில் வெளியாவதாக இருந்த ‘ராம்லீலா’வின் வெளியீட்டுத் தேதி ஜூலை 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ரூ.15 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. திலீப்பின் கைதால் இப்படம் இன்னும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேச முயற்சித்தபோது, பதில் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெண்ணைக் கடத்தி கற்பழித்து, ஆபாசம் படம் எடுத்ததைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது விசித்திரமே.
புதிய படங்கள், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்[5]: கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ் குமார் இதுகுறித்துப் பேசும்போது, ”நடிகர் திலீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 4 படங்கள் வெவ்வேறு நிலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரபல ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபுவின் இயக்கத்தில் ‘புரொஃபசர் டிங்கன்’, ரத்தீஷ் அம்பத் இயக்கும் ‘கம்மர சம்பவம்’, திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷா இயக்கும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன. இவற்றில் ‘புரொஃபசர் டிங்கன்’ மற்றும் ‘கம்மர சம்பவம்’ ஆகிய படங்களின் தயாரிப்பு தலா ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் 11-07-2017 [செவ்வாய் கிழமை] நடந்த “அம்மா” கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, [Malayalam actors’ guild Association of Malayalam Movie Artistes (AMMA) ]திலீப் கைதானதை அடுத்து, அவர் கேரள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[6]. இதையெடுத்து திரையூழியர் அமைப்பு சங்கமும் [Kerala Film Producers Association and Film Employees Federation of Kerala (FEFKA)] இவரது அடிப்படை அங்கத்தினர் நிலையை ரத்து செய்தது[7]. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, வெளியே போராட்டம், போலீஸ் பாதுகாப்பு இருந்தன[8].
© வேதபிரகாஷ்
12-07-2017
[1] தினத்தந்தி, நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் பிரபல நடிகர் திலீப் கைது, ஜூலை 11, 2017, 05:45 AM.
[2] http://www.dailythanthi.com/News/India/2017/07/11052200/Actress-Bhavana-is-turning-to-the-issue-of-smugglingPopular.vpf
[3] The Hindu, Plot to assault actor hatched in 2013: SIT, Kochi. July 11, 2017; Updated: July 12, 2017.
[4] http://www.thehindu.com/news/national/kerala/conspiracy-to-assault-female-actor-hatched-in-2013/article19258675.ece
[5] தி.இந்து.தமிழ், நடிகர் திலீப் கைது: ரூ.50 கோடி மதிப்புள்ள படங்கள் என்னவாகும்?, கிருஷ்ணகுமார், Published: July 11, 2017 14:08 ISTUpdated: July 11, 2017 14:10 IST.
[6]http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8250-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article9759387.ece
[7] Indian Express, Malayalam actress abduction case: AMMA disowns Dileep following his arrest, Written by Manoj Kumar R | Bengaluru | Published:July 11, 2017 1:47 pm.
[8] http://indianexpress.com/article/entertainment/malayalam/malayalam-actress-abduction-case-amma-disowns-dileep-following-his-arrest-4745490/