சினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா?
பொய் வழக்கு போட்டதால் ஜாமீன் கேட்டு மனு: சென்னை மணலியை சேர்ந்தவர் பிரபுகுமார் (வயது 19). இவர் 16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து ஆபாசமாக கேலி செய்ததாக குற்றம் சாட்டி போலீசார் கைது செய்தனர்[1]. ஐபிசி பிரிவு 341 [தவறான தடுப்பு], 294(b) [ஆபாசப் பாட்டுப் பாடுதல்], 506 [மிரட்டுதல்], முதலியவை மற்றும் பொகோசோ சட்டம் பிரிவு 12 [பாலியல் ரீதியில் தொல்லை] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டது[2]. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரபுகுமார் மனு தாக்கல் செய்தார்[3]. இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘16 வயது சிறுமியும், பிரபுகுமாரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இது அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு’ ஆகவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் தரவேண்டும், என்று வாதிட்டார்[4]. காதலித்தால், பையனுக்கு, தெருவில் ஹாயுடன் போகும் போது ஒரு பெண்ணைப் பார்த்து இவ்வாறு ஆபாசப் பாட்டு பாடுவது நாகரிகமானதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதே போல, ஒரு பையன், அவனுடய சகோதரியைப் பார்த்துப் பாடினல், அவன் சும்மா இருப்பானா?
தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுத்த தோரணை: போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சிறுமியும், அவரது தாயாரும் ரோட்டில் நடந்துச் சென்றபோது, அந்த சிறுமியை பார்த்து, ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா… ஓடிப் போயி கல்யாணத்தான் கட்டிக்கலாமா?’ என்று பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்[5]. இதை தட்டிக்கேட்ட அவர்களை தாக்கியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’ என்று வாதிட்டார்[6]. படிக்கும் வயதில், இப்படி, மாணவ-மாணவியர்களுக்கு காதல், இதெல்லாம் தேவையா என்ற கேள்வி எழுகின்றது. இபோழுது காதல்-ஒருதலை காதல், காதல் நாடகம் என்றெல்லாம் சொல்லி, தினம்-தினம் நடந்து வரும் கொலைகளை நினைத்துப் பார்க்கும் போது அவனது மிரட்டலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஆகவே, வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான். அப்பொழுது தான் இது போன்ற மற்ற பையன்களுக்கு பயம் இருக்கும்.
நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் சினிமா பாட்டை மட்டும்தான் பாடியுள்ளார். அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்ததாக தெரியவில்லை. மேலும், அவர் கடந்த ஜூலை 24–ந் தேதி 016 முதல் சிறையில் உள்ளார். அதனால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் இந்த வழக்கில் எழவில்லை. அதனால், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன்[7]. எனவே, ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தை கோர்ட்டில் கொடுத்து அவர் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்[8]. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலையிலும், மாலையிலும் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி மனுதாரர் கையெழுத்திட வேண்டும்[9]. மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கு என்பதால், இந்த வழக்கை போலீசார் விரைவாக விசாரித்து முடித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.
சினிமாக்காரர்களால் ஏற்பட்டு வரும் சீரழிப்பு: இந்த சூழ்நிலையில், திரைப்படத்துறையினரின் செயல்களுக்கு என்னுடைய அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறேன்[10]. இளைய சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்கவேண்டும்[11]. அதற்கு பதிலாக, திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை இடம் பெற செய்வது, வன்முறை காட்சிகளை படமாக்குவது போன்ற செயல்களால், நம்முடைய உயர்ந்த கலாசாரத்தையும், அறநெறியையும் திரைப்படத்துறையினர் சீரழித்து விடுகின்றனர். திரைப்படம் போன்ற ஊடகங்கள், இளைய சமுதாயத்தினரின் வலிமையான ஆசானாக, குருவாக உள்ளது[12]. இந்த ஆசான் சொல்லி கொடுக்கும் பாடம் வாழ்நாளில் எப்போதும் அவர்களுக்கு மறக்காது[13]. எனவே, திரையுலகத்தினர் எப்போதும் தன்னுடைய சமுதாய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்[14]. எதிர்கால தூண்களான இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும். இதன்மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க திரையுலகினர் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[15].
சினிமா, ஆபாசம், பாட்டு, இத்யாதி: சினிமாக்காரர்களுக்கு, இவ்வாறு அறிவுரை கொடுத்த விதத்தில் தான், நீதிபதியின் அக்கரை வெளிப்படுகிறது. ஆபாசப்பாடலை பாடிய பையன் கைது, வழக்கு, சிறை என்றிருக்கும் போது, அதனை எழுதியவனுக்கும், அத்தகைய தண்டனை கொடுக்கவேண்டியது அவசியமாகிறது. தூண்டிவிடுவது யாராக இருந்தாலும், இத்தகைய பாலியல் குற்றங்களில் உரிய முறையில், ஆராய்ந்து, விசாரித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சுமா 30 ஆண்டுகளாக, இத்தகைய ஆபாச பாடல்கள், வசனங்கள், நடனங்கள், காட்சிகள் அதிகமாக, எல்லைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாகுறைக்கு, அத்தகைய ஆபாசமான, கொச்சையான, கொக்கோக, மூன்றாம் தர பாடல்களை எழுதுபவர்கள் கவிஞர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு, பாராப்பட்டு, போற்றப்பட்டு, விருதுகள் இல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். ஏனெனில், தீங்கு செய்ய, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது போலாகிறது.
© வேதபிரகாஷ்
06-09-2016
[1] மாலைமலர், சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதா?: ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் அதிருப்தி, பதிவு: செப்டம்பர் 03, 2016 12:20.
[2] The issue pertained to the arrest of Prahu Kumar on July 24 for the alleged offence under Sections 341 (wrongful restraint), 294(b) (reciting obscene song), and 506 (criminal intimidation) of the IPC, read with Section 12 (sexual harassment) of the POCSO Act.
[3] http://www.maalaimalar.com/News/District/2016/09/03122025/1036541/High-court-judge-discontent-for-Obscene-words-in-cinema.vpf
[4] தமிழ்.இந்து, திரைபடத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, Published: September 4, 2016 10:02 ISTUpdated: September 4, 2016 10:03 IST
[5] தினகரன், இளைய சமூகத்தினர் மனதில் திரைப்படங்கள் நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டும், Date: 2016-09-04@ 00:43:43
[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=243373
[7]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9072124.ece
[8] பத்திரிக்கை.காம், திரைத்துறையினர் பொறுப்புடன் நடக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை, September 3rd, 2016 by டி.வி.எஸ். சோமு
[9] https://www.patrikai.com/film-industry-responsibly-judge-advice/
[10] தமிழ்.ஒன்.இந்தியா, திரையுலகினர் இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும் – ஹைகோர்ட், By: Karthikeyan, Published: Saturday, September 3, 2016, 23:41 [IST]
[11] http://tamil.oneindia.com/news/tamilnadu/the-film-makers-need-social-responsibility-high-court-judge-261941.html
[12] இன்னேர.காம், திரைப்படப் பாடல்கள் எப்படி இருக்க வேண்டும்?: உயர் நீதிமன்றம் அறிவுரை!, Monday, 05 September 2016 16:40 Published in தமிழகம்
[13] http://www.inneram.com/news/tamilnadu/10249-hc-warned-film-songs.html
[14] தினத்தந்தி, சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகள்: சமுதாய பொறுப்புடன் திரைப்படத்துறை செயல்பட வேண்டும்; ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, செப்டம்பர் 04,2016, 5:59 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, செப்டம்பர் 04,2016, 5:59 AM IST.
[15] http://www.dailythanthi.com/News/State/2016/09/04055907/Obscene-words-in-the-lyrics-of-cinema-the-film-community.vpf