Posts Tagged ‘பாலிஹுட் ஆன்லைன்’

தொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பு!

மார்ச் 30, 2011

தொடரும் திரிஷா கதைகள் – தீன்மார் பிரபாஸுடன் திரிஷா நள்ளிரவு விருந்து, போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பு!

அரைத்த மாவை அரைக்கும் ஊடகங்கள்: நடிகைகள் பற்றி, ஊடகங்கள் ரொம்பத்தான், அளக்கின்றன. பழையக் கதைகளை மறுபடி-மறுபடி அரைத்துவிடுகின்றன. நான் ஏற்கெனெவே சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இதைப் பற்றி பதிவுசெய்துள்ளதை பார்க்கவும்[1]. எட்டு மாதம் கழித்து அதே கதையை சொல்வதும், திரிஷா மறுப்பதும்[2] ஆச்சரியமே! இப்பொழுது லஹெரேன் – பாலிஹுட் ஆன்லைன் – 24×7 – என்ற டிவி-செனல் அக்கதையை திரும்பவும் ஒரு திரிஷவின் இந்தி படத்துடன் – “கட்டா-மீடா” – இணைத்துச் சொல்கிறது[3]. நார்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. போலீஸார் நடவடிக்கை எடுக்கிறார்களா இல்லை, அராசியல் அழுத்ததினால், விட்டுவிடுகிறார்களா என்றெல்லாம் தெரியவில்லை. த்ரிஷா பற்றி தினமும் ஒரு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக தெலுங்குப் பத்திரிகைகளுக்கு த்ரிஷா என்றாலே தனி உற்சாகம் பிறந்துவிடும் போலிருக்கிறது. சமீபத்தில் த்ரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸும் பங்கேற்ற நள்ளிரவு விருந்து பற்றிய ஸ்பெஷல் கவரேஜாகப் போட்டுத் தாக்கி வருகிறார்கள்.

நெருங்கிய நண்பர்களான த்ரிஷாவும் நள்ளிரவுப் பார்ட்டி[4]; பிரபாஸும் த்ரிஷா நடித்துள்ள தீன் மார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது. இதில் கலந்து கொண்ட த்ரிஷா, அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய்விட்டாராம். அடுத்த சில நிமிடங்களில், விழாவுக்கு வந்திருந்த பிரபாஸும் காணாமல் போய்விட்டாராம். இந்த இருவரையும் ஒரு கூட்டமே தேடிக் கொண்டிருந்ததாம். இருவரின் செல்போன்களும் சுவிட் ஆப் செய்யப்பட்டு விட்டிருந்ததால், என்ன நடந்திருக்கும் என்பதை சுலபமாக யூகித்துக் கொண்டனர்.  பின்னர், படத்தின் தயாரிப்பாளரிடம் விசாரித்ததில், “த்ரிஷாவும் பிரபாஸும் நெருங்கிய நண்பர்கள். ஹைதராபாத் போன்ற நகரில், இந்த மாதிரி சூழலில் நெருங்கிய நண்பர்களான த்ரிஷாவும் பிரபாஸும் எங்கே போயிருக்கப் போகிறார்கள். நிச்சயம் நள்ளிரவுப் பார்ட்டியாகத்தான் இருக்கும். அப்படியே போனாலும், அது இங்கு சகஜம்தான்”, என்றாராம் ஒரே போடாக!

போதைமருந்து கூட்டத்துடன் தொடர்பா? போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நைஜீரிய கும்பலுடன் என்னைத் தொடர்புபடுத்துவதா என ஆவேசமாகக் கேட்டுள்ளார் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷா தொடர்ந்து சிக்கல்களில் மாட்டி வருகிறார்.  சமீபத்தில் ஹைதராபாத்தில் சிக்கிய நைஜீரிய போதை மருந்து கும்பலுக்கும் தெலுங்கு சினிமா புள்ளிகளுக்கும் பெரிய அளவில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பிரபல நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் மற்றும் நண்பர்களும் இதில் சிக்கினர். இந்த நைஜீரிய போதை மருந்து கும்பலின் செல்போனில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட பிரபல நடிகைகளின் நம்பர்களும் இருந்ததாக போலீசார் தகவல் வெளியிட்டனர். தொடர்ந்து த்ரிஷாவிடமும் போனில் விசாரணை நடத்தினர். இதனால் அவருக்கும் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான் என செய்திகள் பரவின.  இந்த நிலையில், நேற்று ஹைதராபாதில் பேட்டியளித்த த்ரிஷா இதுபற்றிக் கூறுகையில், “என்னைப் பற்றி ஆதாரமில்லாமல் வரும் புகார்களை கண்டிக்கிறேன். சமீபத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் என்னை தொடர்பு படுத்தி செய்தி வந்துள்ளது. என்னை பழிவாங்க யாரோ இதனை கிளப்பி விடுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை. தொடர்ந்து அதுபோன்ற கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற கிசு கிசுக்களால் நான் மனம் உடைந்து போய் அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தாய்தான் பக்கபலமாக இருந்துள்ளார். அவர்தான் இத்தகைய வேதனைகளில் இருந்து என்னை வெளியே கொண்டு வருவார்.

நாயகிகளை முதன்மைப்படுத்தும் கதைகள் இல்லை…பழைய கதாநாயகிகள் போல் இப்போதைய நாயகிகள் நடிப்பது இல்லை என விமர்சிக்கின்றனர். பழைய படங்களில் நாயகிகளை முதன்மைபடுத்தி கதைகள் இருந்தன. ஆனால் இப்போது நாயகிகளை கவர்ச்சிப்படுத்திதான் படம் எடுக்கிறார்கள். வில்லியாக நடித்தால் முழு திறமைகளையும் வெளிப்படுத்த முடியும். படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி வில்லி வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறேன். திருமணத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆனால் அது காதல் திருமணமாக இருக்க வேண்டும். . நான் விரும்பும் ஆண் புத்திசாலியாக இருக்க வேண்டும். பேச்சுத் திறமையும் வேண்டும். பேச்சாற்றல் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். கல்யாணம் ஆனால் அழகு போயிவிடும் என்று சில பெண்கள் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை”.

வெற்றி தோல்வி முக்கியமில்லை…சினிமாவில் நிலைத்து நிற்பதுதான் முக்கியம். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. எனது ஒவ்வொரு படத்தையும் புதுப் படமாகவே பார்க்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே இதுவரை அமைந்துள்ளன. குடும்பபாங்கான வேடம், இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தனது கேரக்டர்களையும் மாற்றிக்கொள்கிறேன். உடம்பை அழகாக வைத்துக்கொள்ளவும் அக்கறை காட்டுவேன். அதற்காக தினமும் யோகா உடற்பயிற்சிகள் செய்கிறேன். ஒவ்வொரு நடிகைகளும் இந்தி படங்களில் நடிக்க கனவாக உள்ளது. எனக்கும் அந்த கனவு நிறைவேறிவிட்டது. இந்தியில் நடிப்பதன் மூலம் உலக அளவில் ரசிகர்கள் பெற முடியும். இதனால்தான் பலரும் பாலிவுட்டுக்கு போக விரும்புகிறார்கள்.

வேதபிரகாஷ்

30-03-2011


[1] வேதபிரகாஷ், கோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை?,

https://evilsofcinema.wordpress.com/2010/08/26/why-the-angry-thrisha-does-not-behave-properly/

[2] ………………….., சினிமா: நடிகைகள், விபச்சாரம், குடி, போதை மருந்து, இத்யாதி,

https://evilsofcinema.wordpress.com/2010/08/26/cine-actresses-prostitution-drinking-drugs-etc/