Posts Tagged ‘பிஜேபி’

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

நவம்பர் 8, 2016

பொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா?

kushboo-supports-ucc-puthiya-thalaimuraiகுஷ்பு ஆதரித்தாலும் காங்கிரஸ் எதிர்க்கிறது: மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு புதிய தலைமுறை ஏட்டியில் தெரிவித்தார். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்[1]. பெண்களின் உரிமைகளை தான் எப்பொழுதுமே ஆதரித்து வருவதால், அவ்வாறு ஆதரிப்பதாகத் தெரிவி்த்தார். ஆனால், உ.பி. தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை மனதில் வைத்துக் கொண்டு பிஜேபி அவ்வாறான பிரச்சினையை எடுத்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், சென்னையில் 31-10-2016 அன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்[2]. குஷ்பு சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், இந்திய ஊடகங்கள் அவரது பேச்சிற்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன.

khusbo-and-nagma-ucc-fightநக்மா குஷ்புவை சாடியது (6-11-2016): சினிமாவில் நடிகைகளாக இருந்தபோதே குஷ்பு, நக்மா இடையே போட்டிதான். இப்போது இருவரும் ஒரே கட்சியில் இணைந்திருப்பதால் ஈகோ பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக கூறப்படுகிறது[3]. ஒரே கட்சியில் இருக்கும் நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக அரசல் புரசலாக தகவல் வெளியானாலும் அது வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெட்டவெளிச்சமானது[4]. அருகருகே அமர்ந்திருந்த போது இருவரும் அப்படி ஒன்றும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதை குஷ்பு தவிர்த்து விட்டார். அதுபற்றி கேள்வி எழுந்தது. ஆனால் திருநாவுக்கரசர் அதை சமாளித்து சமரசம் செய்து வைத்தார். அவர் அறிமுக உரை ஆற்றிவிட்டு புறப்பட்டு சென்றதும் மகளிர் அணியினர் மத்தியில் நக்மா பேச தொடங்கினார். அப்போது சம்பந்தமே இல்லாமல் குஷ்புவை வம்புக்கு இழுத்து சீண்டினார். அவர் பேசும்போது கூறியதாவது[5]: “பொது சிவில் சட்டம் பற்றி பேச குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லீமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிப்பதில்   தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார்? கேட்டால் இந்துவை கல்யாணம் பண்ணியிருக்கேன் என்பார்[6]. அப்படின்னா முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்? ஷரியத் சட்டம் மனிதன் உருவாக்கியது. குரானில்தலாக்பற்றி இல்லை என்று பேசியிருக்கிறார்[7]. அவர் குரானை படிக்கவில்லை. பார்த்து இருக்கவே மாட்டார். தலாக் பற்றி குரானிலும் சொல்லப் பட்டுள்ளது[8]. காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில் ஆர்ப்பாட்டத்துக்கு வருவாராம். மாலையில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு வரமாட்டராம். குஷ்புவின் நடவடிக்கை பற்றி கட்சி மேலிடத்தில் தெரிவிப்பேன்,”. இவ்வாறு நக்மா பேசினார்.காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார் நக்மா.

khusbo-and-nagma-uccகொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு![9]: இது குறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். கூறிய பதில்கள்.

 கேள்வி: மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே?

 பதில்: குஷ்பு என்ன சாப்பிடுகிறாள்? என்ன பேசுகிறாள்? யாருடன் பேசுகிறாள்? என்று என்னைப் பற்றி விமர்சிக்கவே ஒரு கும்பல் இருக்கிறது. நான் அகில இந்திய செயலாளர். எனக்கும் மாநில மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விஷயம். மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு என்னை கூப்பிடவில்லை. அதோடு எனக்கு படப்பிடிப்பு இருந்தது. ஷூட்டிங்கை இடையில் நிறுத்தி விட்டுத்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தேன். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்று விட்டேன்.

 கேள்வி: நக்மா உங்களைப் பற்றி கடுமையாக பேசி இருக்கிறாரே?

 பதில்: நான் கண்ணால் பார்க்கவும் இல்லை. காதால் கேட்கவும் இல்லை. எனவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று அசால்ட்டாக பதில் கூறினார் குஷ்பு[10].

kushboo-supports-ucc-puthiya-thalaimurai-pon-says-she-should-teach-tirivavuதிருநாவுக்கரசரின் மழுப்பலான சமரசவாதம்: காங்கிரஸில் திரைநட்சத்திரங்களான நடிகைகள் நக்மா மற்றும் குஷ்புவுக்கு தேசிய அளவில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் 2 பேரும் தமிழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு பரம எதிரிகளாக நடந்து கொள்கின்றனர். அண்மையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் குஷ்பு. இதற்கு நடிகை நக்மா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது[11]. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்[12], சென்னையில் நடந்த மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் குஷ்பு- நக்மா இடையே எந்த ஒரு மோதலும் இல்லை, குஷ்புவுக்கு எதிராக எந்த கருத்தையும் நக்மா தெரிவிக்கவில்லை[13], ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என்று திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்[14].

thirunaugasarar-kushboob-nagma-long_12443காங்கிரஸும் நடிகைகளும்: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது பொது விவில் சட்டம் விசயத்தில், இப்படி இந்த இரு நடிகைளும் சண்டை போட்டுக் கொள்வது, சித்தாந்த ரீதியில், காங்கிரஸின் நிலைப்பாடு குழப்பமாகத்தான் இருக்கிறது. பெண்ணுரிமை என்றெல்லாம் வாய் கிழிய பேசினால், மதம் என்றால் சரணாகதி ஆவது என்பது காங்கிரஸின் தாஜாபோக்கிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

08-11-2016

குஷ்பு, நக்மா, நமீதா - தாங்குமா காங்கிரஸ்

குஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்

[1] விகடன், பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு , Posted Date : 11:08 (31/10/2016), Last updated : 12:04 (31/10/2016)

[2] http://www.vikatan.com/news/tamilnadu/70934-khushboo-voices-support-for-uniform-civil-code-tirunavukkarasar-opposes-it.art

[3] தமிழ்.ஒன்.இந்தியா, குரானை படிக்காமலேயே முத்தலாக் பற்றி குஷ்பு பேசுவதா?: நறநற நக்மா, By: Mayura Akilan, Updated: Monday, November 7, 2016, 16:12 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-slams-kushboo-talaq-issue/slider-pf214152-266544.html

[5] தினத்தந்தி, பொது சிவில் சட்டம்; குஷ்புவை சீண்டிய நக்மா கட்சி மேலிடத்தில் புகார் செய்ய முடிவு , பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST.

[6] http://www.dailythanthi.com/News/State/2016/11/06181731/Uniform-civil-code-Nagma-attacks-Khushbu-over-her.vpf

[7] இந்நேரம்.காம், குர்ஆனில் உள்ளது பற்றி குஷ்புவுக்கு என்ன தெரியும்?:நக்மா காட்டம்!, Sunday, 06 November 2016 20:18 Published in தமிழகம்

[8] http://www.inneram.com/news/tamilnadu/10821-nakma-attack-on-kushboo.html

[9] தமிழ்.வெப்துனியா, கொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு!, திங்கள், 7 நவம்பர் 2016 (10:50 IST)

[10] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/khushboo-answer-about-nakma-s-complaint-116110700007_1.html

[11] தமிழ்.ஒன்.இந்தியா, குஷ்புநக்மா இடையே எந்த மோதலும் இல்லையேஅடித்து சொல்லும் திருநாவுக்கரசர், By: Mathi, Published: Monday, November 7, 2016, 13:47 [IST]

[12] http://tamil.oneindia.com/news/tamilnadu/no-rift-bewtween-nagma-kushboo-says-thirunavukkarasan-266570.html

[13] விகடன், குஷ்புநக்மா இடையே மோதலா? திருநாவுக்கரசர் விளக்கம் , Posted Date : 12:10 (07/11/2016), Last updated : 12:40 (07/11/2016).

[14] http://www.vikatan.com/news/tamilnadu/71608-rift-between-kushboo-nagma-tirunavukkarasar-explains.art

சரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்!

மார்ச் 25, 2012

சரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்!

வரிசையில் நிற்கும் நிர்வாண நடிகைகள்: சரண்யாதான் முந்திவிட்டார் என்று பார்த்தால்[1], ஏற்கெனெவே வரிசையில் நிற்கிறார்கள் நடிகைகள். ஆமாம், நாங்கள் நிர்வாணமாக நடிக்கத் தயார் என்று புறப்பட்டுவிட்டனர். இனி ஆண்கள் கதி அதோ கதிதான். பிஜேபி என்று கலாட்டா செய்பவர்கள், இனி ஜொல்லு விடுவார்களோ அல்லது என்ன செய்வார்களோ தெரியவில்லை. ஆனால், மேன்மேலும், இந்திய சமூகத்தைச் சீரழிக்க இவர்கள் புறப்பட்டு விட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். பணம் கிடைக்கிறது என்ற மயக்கம், புகழ் கூட வரும் என்ற மற்றொரு போதை, கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் என்று பறந்து விடலாம் என்ற மற்றோரு கனவு. கடைசியில் என்னாவார்களோ என்பது காலம் பதில் சொல்லும், ஒருவேளை நாமே அவர்களது நிலையைப் பார்க்க/அறியக் கூடும்.

 

நிர்வாணமாக நடிக்க நடிகைகள் போட்டி: நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்[2]. இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ச்சிபட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள். ஏதோ சேலைக் கட்டிய நடிகைகள் மூடிக்கொண்டு நடிப்பதைப் போல உள்ளது. இப்பொழுது வருகின்ற நடனபாடல்களில் நடிகைள் நிர்வாணத்தையும் மிஞ்சும் வகையில் குலுக்குகிறார்கள்; ஆட்டுகிறார்கள்; முலைகளை 90% காட்டுகிறார்கள்; பிறகென்ன, முழு நிர்வாணம்? அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

ஹாலிவுட் சான்ஸ் கொடுத்தால் அவுத்து காட்டுவேன்: நடிகை லட்சுமி ராய் சமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். இதுபற்றி லட்சுமி ராய் அளித்துள்ள பேட்டியில், பிரியதர்ஷன் இயக்கும் “அரபியும் ஓட்டகமும் பி. மாதவன் நாயரும் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது பிரியதர்ஷன் கொடுத்த டின்னரில் ஜேம்ஸ் கேமரூன் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்தித்து பேசினேன். இந்திய சினிமா பற்றியும், அதற்கான வியாபாரங்களைப் பற்றியும் பிரியதர்ஷனிடம் பேசினார். நான் உங்களது அனைத்து படங்களுக்கும் ரசிகை என்றேன். அவதார் படத்தின் அடுத்த பாகத்தின் திரைக்கதையை எழுதி வருவதாக என்னிடம் தெரிவித்தார். உங்கள் படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். அதற்கு பதிலாக புன்னகையை தந்தார்[3]. மீண்டும் அவரை சந்தித்து பேசுவேன். ஜேம்ஸ் கேமரூனை சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத நேரங்களில் ஒன்று, என்று கூறியுள்ளார்.

நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் – நடிகை பத்மப்ரியா: கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார் என்று நடிகை பத்மப்ரியா கூறியுள்ளார்[4]. தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு மலையாள படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருபவர் நடிகை பத்மப்ரியா. மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பத்மப்ரியா, தற்போது நயிகா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த காலத்து அழகு நடிகை சாரதாவின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். ஜெயராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னைப் பொறுத்தவரை நல்ல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதாக கருதுகிறேன். அதேசமயம், கிளாமராக நடிப்பதிலும் ஆட்சேபனை இல்லை. அப்படி வாய்ப்பு வரவில்லை. இதனால் பெரிய அளவில் நடிக்கவில்லை. ஆனால் அது கஷ்டமான விஷயமும் இல்லை. கதைக்குத் தேவைப்பட்டால் நிர்வாணமாகக் கூட நடிக்கலாம் என்பதுதான் எனது பாலிசி. பெண்களை கவர்ச்சியை விட்டுத் தனித்துப் பார்க்க முடியாது. அதேசமயம், அவர்களை செக்ஸியாக மட்டுமே சித்தரிப்பது என்பதை என்னால் ஏற்க முடியாது, என்று கூறியுள்ளார். அம்மணி நடிப்பை சில காலத்திற்கு ஒத்திப் போட்டிருக்கிறாராம். விரைவில் அமெரிக்காவுக்குப் பறக்கப் போகும் அவர், அங்கு மேற்படிப்பு படிக்கப் போகிறார்.

நிர்வாணத்திற்கும், கவர்ச்சிக்கும் விளக்கம் அளிக்கும் நடிகைகள்: வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள். அதுபோல, கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்றபோது, ஆடை ஜான் குறைந்தால் என்ன, முழம் குறைந்தால் என்ன? ஒரு முழத்துணியை மறைத்து தானே இப்பொழுது நடிக்கிறார்கள்? பிறகு ஜான் சைசில் உடை அணிந்து நடிக்க மாட்டார்களா என்ன? நிர்வாணமாக தீர்மானித்தப் பிறகு என்ன சைஸ் வேண்டிக்க் கிடக்கிறது? பெண்குறியைக் காட்டாமல் போஸ் கொடுப்பது, நடிப்பது என்பதுதான் நிர்வாணம் என்றுள்ளது. அதையும் காட்டத் துணியும் நடிகைகள், நீலப்படத்திலும் நடிக்க தீர்மானித்து விடுவர். நிர்வாண வெள்ளத்தில் மூழ்கி விட்டப் பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என்பார்கள்.

வேதபிரகாஷ்

25-03-2012


[1] வேதபிரகாஷ், தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை!, https://evilsofcinema.wordpress.com/2012/03/23/indian-actresses-go-acting-nude-women-empowerment-or-degradation/