நடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்?
குஷ்பு சுந்தர் – தாய், மனைவி, கம்பனி தலைவி, தயாரிப்பாளர், பெருமைக் கொண்ட திமுக அரசியல்வாதி: டுவிட்டரில் தன்னை மேற்குறிப்பிட்டுள்ளபடி அறிவித்துக் கொள்கிறார். குஷ்பு அரசிய பின்னணியை வைத்துக் கொண்டு வியாபாரத்தில் அதிகமாகவே ஈடுபட்டுள்ளார்[1]. திமுகவில் அவரது நிலை சர்ச்சைக்குரியதாகத் தான் இருந்து வருகிறது. சகநடிகைகளுடனான போட்டி முன்பு அதிகமாக இருந்தது[2]. தனது கணவர் சுந்தர் எடுக்கும் படங்களிலிருந்தே அதனை தெரிந்து கொள்ளலாம்.
khushbusundar@khushsundar Mother,wifey,MD,Actor/producer/politician-a proud DMKian..live n let live,happily :):) Chennai |
பிறகு மற்றவர்களின் பாணியும் பின்பற்றப்படுகிறது[3]. பெண்களின் கற்பைப் பற்றி அசிங்கமாக பேசியதே குச்பு தான்[4]. அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி ஆனபோது, பச்சைத் தமிழர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்[5]. கூட்டணி தர்மம் அவர்களைக் கட்டுப்படுத்தியது போலும்! ஆனால், மற்ற விஷயங்களில் கற்பு காற்றில் பரந்து கொண்டிருக்கும் போது – சென்னை பீடோபைல், முதலிய விவகாரங்கள் -துளிக்கூட கவலைப் படாமல் இருந்து வந்தார்[6]. சமீபத்தில் கூட, இம்மாதிரியான கருத்து குச்பு மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
குஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர்[7]: குஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர் என்ற முறையில் பேசி, நடந்து கொண்டு வருகிறார். அத்தகைய அதிகாரத்தை இந்திய பெண்கள் நடிகைகளுக்கு, அதிலும் குஷ்பு போன்றவர்களுக்கு கொட்டுக்கவில்லை. தானாகவே, ஊடகங்களில் அவ்வாறு பேசி பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்ட நிலையில், உண்மை அறிந்தவர்கள் தட்டிக் கேட்கத்தான் செய்வார்கள், விமர்சிப்பார்கள். அதனால், ஒரு நடிகை தனது நிலையை, கடந்துவந்த வாழ்க்கையை மறந்து, ஏதோ பெண்மையின் சிகரம், இக்கால கண்ணகி என்பது போல பேசுவதால் ஒன்றும் மாறிவிடாது. தரக்குறைவான வார்த்தைக்கள் பிரயோகித்தால், பதிலுக்கு அவ்வாறானவை திரும்பி வரும். எனவே, “பிரபலங்களாக” இருந்தாலும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இவர் ஏற்கெனவே பல சர்ச்சைகளில் தேவையில்லாமல் நுழைந்திருக்கிறார். குறிப்பாக திமுகவில் சேர்ந்த பிறகு, ஏதோ தனக்கு அளவில்லாத அதிகாரம் வந்து விட்டது போல நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்[8].
வயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது! குஷ்பூ பாய்ச்சல்[9]: டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.
சேலையில் கடவுள் படம்! புதிய சர்ச்சையில் குஷ்பு!![10]: தமிழ் அன்னை முன்பு செருப்பு அணிந்து அமர்ந்தது, பெண்களின் கற்பு பற்றி பேசியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்பு, இப்போது புதிதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த முறை அவர் அணிந்த சேலையால் சர்ச்சை உருவாகி இருக்கிறது. அப்படி என்ன சேலை? என்று கேட்கிறீர்களா குஷ்பு அணிந்து வந்த சேலை முழுக்க ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என்று கடவுள்களின் படங்களாக இருந்து உள்ளது. இதனால் அவர் இந்துக்கடவுள்களை அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சி அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றி குஷ்புவிடம் கேட்டால், இதைப்பற்றி நான் கண்டுகொள்ளவே இல்லை. வேலை இல்லாதவர்கள் தான் இதை பெரிதுபடுத்துவார்கள். இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி சிலர் அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக என்ன பிரச்னை வந்தாலும் அதை கண்டுகொள்ளபோவது இல்லை. மேலும் இதுதொடர்பாக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.
சேர்த்து வைக்க நான் தரகர் கிடையாது : குஷ்பு!!: நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காதலை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நயன்தாரா-பிரபுதேவா இடையே சமரம் செய்து வைக்க நடிகை குஷ்பு முயற்சி செய்வதாக தவகல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிரபுதேவா-நயன்தாரா இருவருமே என்னுடைய நல்ல நண்பர்கள். அதிலும் பிரபுதேவா என்னுடைய நீண்டநாள் நண்பர். அவர் நடிக்க வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். என்னுடைய ஒரு படத்திற்கு அவர் தான் நடன அமைப்பாளர். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது. நயன்தாரா-பிரபுதேவா விஷயத்திலும் அப்படிதான். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னையோ தெரியவில்லை அது அவர்களுடைய சொந்த விவகாரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஒன்றும் தரகர் கிடையாது. இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்[11].
விபச்சாரதரகராக / புரோக்கராகத்தான இருப்பவரால் தான் இதுபோல் பேச முடியும்: நடிகைகள் பற்றி டுவிட்டரில் அவதூறாக விமர்சித்துள்ள ஒருவருக்கு, நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[12]. சமீபத்தில் டுவிட்டரில் ஒருவர், நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகள் அவமானப்படுத்துவதாக உள்ளது என குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்தில், நடிகைகள் பற்றி அந்த நபர் அவதூறாக கருத்து பதிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. விபசார தரகராக இருப்பவரால் தான் இது போல் பேச முடியும். நடிகைகளை பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்கள் என்று சராசரி மனிதர்கள் யாரும் குறிப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி ஒரு நபர் கூறியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் விபச்சார புரோக்கராகத்தான இருக்க வேண்டும். அவருக்கும், யாரேனும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட மோதலை அவர் இப்படி ஒட்டுமொத்த நடிகைகளைப்பற்றியும் கருத்து சொல்லியிருக்கிறார். இதுபோன்று நடிகைகள் பற்றி அவதூறு பரப்புபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது போன்ற பிள்ளையை பெற்றதற்காக பெற்றோர் நிச்சயம் வருத்தப்படுவார்கள்[13]. பெண்களை உயர்வாக மதித்து நிறைய ஆண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு, பிண்ணனி பாடகியுமான சின்மயியும்[14] கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
khushbusundar @khushsundar16 JulHe needs a severe punishment but my heart also goes to him for being so seriously retarded..I pity his parents..wat dey will b going thru?? |
khushbusundar @khushsundar16 JulIf a dog doesn’t bark den he will doubt his ownself..some ppl need 2 remind themselves wat breed dey belong 2..dis man hr is a street dog |
khushbusundar @khushsundar16 JulThe guy who tweets about women/actors who sleep around for money,surely must be a pimp..how the hell can he so sure about them otherwise? |
நடிகைகள் பணத்திற்குப் படிகிறவர்களா..?- ட்வீட்டர் கருத்துக்கு குஷ்பு, சின்மயி கண்டனம்[15]: ட்வீட்டரில் நடிகைகள் பற்றி அவதூறாக விமர்சித்துள்ள ஒருவரின் கருத்துக்கு நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், ட்வீட்டரில் ஒருவர், ‘நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக’ கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகளை அவமானப்படுத்துவதாக உள்ளது என நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து குஷ்பு தனது ட்வீட்டரில் அளித்துள்ள பதிலடி………….[16]. ஒரு நபர் தனது டுவிட்டரில் நடிகைகளை விலைமாதுக்களாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தார். குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தவறான வழியில் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நடிகைகள் கொதித்தெழுந்துள்ளனர். அதிலும் நடிகை குஷ்பு ரொம்பவே டென்சனாகியிருக்கிறார். அந்த டுவிட்டர் செய்திக்கு அவர் பதிலளிக்கையில், இது தவறு. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தமாதிரி தவறான செய்தி பரப்புபவர்களை கண்டும் காணாததும் போல் இருக்கக்கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற செய்திகளை வெளியிட அவர்கள் அஞ்ச வேண்டும் என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
“பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”: 2005ல் தங்கர் பச்சன் என்ற இயக்குனர்-தயாரிப்பாளர், “பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”, என்று சொன்னபோது, குஷ்பு கோபித்து கண்டனம் தெரிவித்தார். தங்கர் பச்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும், குஷ்பு சமாதானம் ஆகவில்லையாம்[17].
பத்திரிக்கை / ஊடக நிருபர்கள் விபச்சாரத் தரகர்கள்: பிப்ரவரி 2013ல், நிருபர்களை விபச்சாரத் தரகர்கள் என்று குறிப்பிட்டதாக செய்திகள் வந்தன[18]. “இன்னொரு மணியம்மை” என்று குமுதத்தில் வெளிவந்த கட்டுரையை எதிர்த்து அவ்வாறு மோசமான வார்த்தைகளை ஊப்பயோகித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டது[19].
நடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது இவ்விதமாக இருக்கிறது. கடந்த வாரத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மும்பை நடிகைகள் கைது செய்யப்பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
வேதபிரகாஷ்
© 22-07-2013
[1]https://evilsofcinema.wordpress.com/2009/12/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4/
[2]https://evilsofcinema.wordpress.com/2010/05/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/
[3] http://cinema.dinamalar.com/tamil-news/13038/cinema/Kollywood/somewhere-there-is-chaos—Kushboo.htm
[4]https://evilsofcinema.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/
[5] https://evilsofcinema.wordpress.com/2010/04/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87/
[6]https://evilsofcinema.wordpress.com/2010/04/30/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
[7] http://womanissues.wordpress.com/2013/03/20/khusboo-again-comes-to-deliberate-on-sex-age-rape-etc/
[8]http://dravidianatheism.wordpress.com/2010/05/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/
[9] http://cinema.dinamalar.com/tamil-news/11625/cinema/Kollywood/While-Reducing-age-sexual-compalint-cant-reduce-says-Kushboo.htm
[10] http://cinema.dinamalar.com/tamil-news/9891/cinema/Kollywood/Sari-with-pictures-of-gods-lands-Kushboo-in-new-controversy.htm
[11] http://cinema.dinamalar.com/tamil-news/6878/cinema/Kollywood/I-am-not-mediator-says-kushboo.htm
[13] http://cinema.dinamalar.com/tamil-news/13509/cinema/Kollywood/Kushboo-slams-on-twitter-comment.htm
[15] Posted by: Jayachitra; Updated: Sunday, July 21, 2013, 11:18 [IST]
[16] Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/21/tamilnadu-kushboo-angered-as-individual-makes-derogatory-tweet-179526.html
[17] Thankar Bachan, film director and producer, recently had to face the wrath of actresses including Khushboo for saying that, ‘women who acted mainly for money are akin to prostitutes.’ He later had to apologise, although Khushboo was, reportedly, not pacified.
[18] Khushboo calls reporters a pimp in the Khushboo as another Maniammai controversy;