கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்? (2)
கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபடுவதற்கு மகாபாரதமா காரணம்?: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா? இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா? பள்ளியில் எல்லா மணவர்களையும், ஒவ்வொரு மத இலக்கியத்திலிருந்தும், ஒரு பாட்டு என்று வைத்து படிக்க வைப்பது தெரிந்த விசயமே, பிறகு, இந்த அறிவிஜீவிக்களுக்கு, அவ்வாறே எல்லா மத உதாரணங்களையும் எடுத்துக் கொள்ள ஏன் முடிவதில்லை?
இந்து மக்கள் கட்சி 15-03-2017 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது[1]: “சமீப காலத்தில் கமல் ஹஸன் தொடர்ந்து இந்து–விரோத கருத்துகளை சொல்லிவருகிறார். இப்பொழுதும், தேவையில்லாமல் மகாபாரதத்தை விமர்சித்துள்ளார். இதே போன்று இஸ்லாம் மற்றும் கிருத்துவம் அவற்றின் புத்தகங்களான பைபிள் மற்றும் குரான் பற்றி விமர்சிப்பாரா? பிரமணராகப் பிறந்தும், பிராமண மதத்திற்கும், இந்துமதத்திற்கும் பேசி வருவது அவருக்கு வழக்கமாகி விட்டது. “விஸ்வரூபம்” விவகாரத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அடிபணிந்து போனார். ஆனால், இப்பொழுது இப்படி பேசுகிறார். இதற்காக மன்னிப்பு கோராவிட்டால், அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்”, என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்[2]. இந்துத்துவவாதிகள் எல்லோருமே, இப்படி வழக்குத் தொடர்கிறார்கள், ஆனால், முடிவு என்னாகிறது என்று தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு சமீபத்தைய சரித்திர நிகழ்வுகள், இந்துமதத்தைப் பற்றிய சம்பிராதாயங்கள் முதலியவை தெரியாமல் இருப்பது வருத்ததிற்குரிய விசயமாகிறது.
கமல் பேச்சிற்கு வழக்கு தொடர்ந்தது (14-03-2017): நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், “12-03-2017 அன்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்[3]. இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்[4]. தினமணி கூட, “விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும்[5], என்ன பேசினார் என்று வெளியிடவில்லை. சமீபத்தில் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார், ரசிகர்கள் கூட திகைக்கிறார்கள் என்று முடித்துக் கொண்டது[6].
பார்ப்பன அப்பனுக்கு வைசிய பெண் வக்காலத்து வாங்கியது: புரிய வேண்டும் என்பதற்காகத் தான் இத்தலைப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பார்ப்பனன் – பனியா கும்பல் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது சகஜமாக, ஏதோ ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளது போன்று சில அறிவுஜீவிகள் உரிமையுடன் செய்து வருகிறார்கள். அதேபோல, மற்றவர்களைக் குறிப்பிடாமல் இருப்பது அவர்களது பெருந்தன்மையான “சகிப்புத் தன்மையை”க் காட்டுகிறது எனலாம்! ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு 27-03-2017 அன்று நடைபெற்றது[7]. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது, “மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.” இவ்வாறு அக்ஷராஹாசன் கூறினார்[8]. “எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார்”, என்றதால், அவமதிக்க வேண்டும், இந்துக்களைத் தூண்டிவிட வேண்டும் போன்ற நோக்கில் தான் பேசியிருப்பது வெட்டவெளிச்சமாகிறது. மேலும், “மிகவும் ஆழமாக சிந்தித்து”, இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவனது வக்கிரம், குற்றமனம், இந்துக்களை பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலியவை உள்ளன என்றாகிறது.
பிரனவானந்த கொடுத்த புகார் / தொடுத்த வழக்கு (19-03-2017) நிலுவையில் உள்ளது: பெங்களூரு, மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக 26-03-2017 அன்று பெங்களூரு காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்[9]. அதில், ‘‘நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா கூறியிருந்தார். கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக கூறப்படுவதால், அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை. மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்[10].
© வேதபிரகாஷ்
31-03-2017
[1] Hindusthan Times, PIL filed against Kamal Haasan for alleged derogatory remarks on Mahabharata, Updated: Mar 21, 2017 17:12 IST, KV Lakshmana , Hindustan Times
[2] http://www.hindustantimes.com/india-news/pil-filed-against-kamal-haasan-for-alleged-derogatory-remarks-on-mahabharata/story-oWRYVWjcyzyqKNMqd2MdaM.html
[3] விகடன், மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு!, Posted Date : 20:21 (21/03/2017); Last updated : 09:49 (22/03/2017).
[4] http://www.vikatan.com/news/tamilnadu/84251-valliyur-court-orders-to-submit-investigation-report-on-case-against-kamalhassan.html
[5] தினமணி, விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு, by DIN, Published on 21st March 2017 02.23. IST.
[6]http://www.dinamani.com/tamilnadu/2017/mar/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2670020.html
[7] தி.இந்து, மகாபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்ஷராஹாசன் கருத்து, ம.மோகன், Published: March 28, 2017 11:14 ISTUpdated: March 28, 2017 11:14 IST
[8] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article9604204.ece
[9] தினகரன், மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் கமல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார், 2017-03-27@ 00:37:53
[10]http://www.dinakaran.com/News_detail.asp?Nid=290106&fromNewsdog=1&utm_source=NewsDog&utm_medium=referral