Posts Tagged ‘மழை’

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது?

திசெம்பர் 9, 2015

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” மற்றும் “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைகள் எதைக் காட்டுகிறது?

kamal-hassan-srividya

கமல் ஹஸனின் அறிக்கை: தன்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணி செய்யுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ‘நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று?’ என்று தமிழக அரசை நோக்கி, தான் எவ்விதக் கேள்வியும் எழுப்பவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்[2], “நான் கட்டிய வரிப் பணம் என்னவாயிற்று என்றுநான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின்னஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும், மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழுவருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவேமாட்டேன். எந்தநிலைமையிலும் என் கடமையைச் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான்[3].

 

Vani with Kamal

Vani with Kamal

என் வீட்டிற்கு சிலநாட்களாக செய்தித்தாள் வினியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைப்பேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலைதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப் பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்[4].

 

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy-rare-photos01

tamil-actor-kamal-hassan-with-his-ex-wife-vani-ganapathy

என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசி தொடர்புகிடைக்கும் போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்பு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது[5].

 

.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம்[6]: இது நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கும், பலவேறு கட்சிகளுக்கும் ஓட்டுபோடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக்கூடாது என்பதற்கே இவ்விளக்கம்[7].

மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[8]: பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள், தனிமனிதக் கோபங்களை தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்[9].

 

Kamal new relationship it is too real, but not so real

Kamal new relationship it is too real, but not so real

தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம்[10]: வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்[11]. தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும்கூட, சூழக் கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவன செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும்தான்“, என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்[12].

கமல காசனின் பிரச்சினை, கமல ஹாசனின் ஆசை, கமல் ஹஸனின் குழப்பம்: வயதாகி விட்டதால், அவ்வப்போது குழம்பிவிடுகிறார் போலும். கமல் ஹஸனுக்கு அகம்பாவம் அதிகமாகவே தான் இருந்து வந்துள்ளது. சென்ற மாதமே தீபாவளி விளம்பரம், நிதியுதவி நாடகம் முதலியவை இவரது முரண்பாடுகளை வெளிக்காட்டின. பாவம், எப்படி பணகஷ்டம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. நான் பணக்காரன் இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார். போதாத இடத்தில் பணத்தைக் கொட்டி மாட்டிக் கொண்டாரா அல்லது வேறெங்காவது செல்கிறதா என்று தெரியவில்லை. தான் என்ற மமதை தான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் படுதோல்வி அடைய நேர்ந்தது. இதனால், பல பெண்களை தேடியும் அமைதி கிடைக்கவில்லை, மாறாக ஒழுக்கம் தான் கெட்டது. “நல்ல நடிகன்” என்ற பெயருள்ளது, ஆனால், நடிப்பு ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, சுத்தத்தை, மன அமைதியைக் கொடுக்காது. சேவை என்று இறக்கி விட்ட பிறகு, சில ரசிகர்களின் உசுப்பல்களினால், அவ்வப்போது, அரசியல் ஆசை வருகிறது. தேசிய கட்சி ஒன்றில் சேரலாமா என்ற ஆசைக்கூட இருக்கிறது. இந்நிலையில் வெள்ளம் அவரை அதிகமாக குழப்பி விட்டிருக்கிறது. இப்பொழுது சொன்னதை, சொல்லவில்லை, “மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” போன்ற நிலைக்கு வந்துள்ளார்.

© வேதபிரகாஷ்

09-12-2015

[1] தமிழ்.இந்து, என்னை ஆதரிப்பதையும் விமர்சிப்பதையும் விடுத்து நற்பணி செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள், Published: December 7, 2015 14:43 ISTUpdated: December 7, 2015 19:15 IST.

[2] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/i-owe-an-apology-kamal-explanatory-statement-115120700037_1.html

[3]  தினத்தந்தி, ரசிகர்கள் தொடர்ந்து நற்பணிகள் செய்ய வேண்டும் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 3:15 AM IST

பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 08,2015, 12:55 AM IST.

[4] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/12/08005525/Actor-Kamal-Report.vpf

[5]http://www.dinamani.com/tamilnadu/2015/12/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/article3165969.ece

[6]  நியூஸ்.7, .பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் விளக்கம், Updated on December 07, 2015

[7] http://ns7.tv/ta/actor-kamal-hassans-statement-opannerselvam-report.html

[8] வெப்துனியா, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன் – கமல் விளக்க அறிக்கை, திங்கள், டிசம்பர்.7, 2015, 16:28. IST..

[9]  தினமணி, புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்: கமல்ஹாசன், By சென்னை, First Published : 08 December 2015 12:12 AM IST.

[10]  விகடன், தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம், Posted Date : 15:07 (07/12/2015), Last updated : 15:07 (07/12/2015).

[11] http://www.vikatan.com/cinema/article.php?aid=56021

[12] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article7957904.ece

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” ஏன் – அரசு தரப்பில் கண்டணம் ஏன்?

திசெம்பர் 9, 2015

கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” ஏன் – அரசு தரப்பில் கண்டணம் ஏன்?

2015 வெள்ளம் - பன்னிர்செல்வம், கமல் ஹஸன்

கமல்ஹாசன் தனது விதண்டவாதக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்: வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு[1] நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரிய நடிகர் என்பதற்காக அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது என்று சாடியுள்ள அமைச்சர், அரசியல் சுயலாபம் பெற முயலும் தீயசக்திக்கு கமல்ஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில்[2], ”கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்[3].

1918-ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை. ஒரே நாளில் 40 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்து, வடகிழக்குப் பருவமழை முழுவதும் பெய்யும் மழையைவிட பலமடங்கு கூடுதலான மழை, ஒருசில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது. இதைத் தெரிந்து கொள்ளாமலேயே கமல்ஹாசன் தனது விதண்டவாதக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

 

Kamal family, it is real

Kamal family, it is real

எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கமலஹாசன்: இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, நடிகர் கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று ஒரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது[4]. எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், பிதற்றி இருக்கிறார். கமல்ஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு, எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.  அதைத்தான் முதலமைச்சர் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

 Kamals-controversial-Hugs-and-Kisses-at-Vijay-TV-Show-Neengalum-Vellalam-Oru-Kodi

மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை: ஓ.பன்னீர்செல்வம் தொடர்கிறார், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் அரசு மேற்கொண்டிருக்கும் நிலையில், அரசு நிர்வாகம் செயலற்றுப் போனதாக கமல்ஹாசன் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும். மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது. மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப்பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமல்ஹாசன் விலைபோய்விட்டாரோ என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.”

 

Gautami, Kamal and Akshara

Gautami, Kamal and Akshara

இந்தியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன்: கார்ப்பரேட் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமலஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார். இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்!  அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை[5]. மத்திய அரசின் மீது  அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை, சினிமாத் துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை  தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன். கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இந்தியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன். அப்போது,  அந்தப் பிரச்சனையை தீர்த்துவைத்த முதலமைச்சருக்கு நன்றி கூறியதை மறந்துவிட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார்[6]. இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது[7] என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 2015 வெள்ளம் - தெலுங்கு நடிகர்கள் நிதியுதவி

ஜெயலலிதாவின் அரசு, கமல்ஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம் தொடர்கிறார், “வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு தனியாருக்கு அரசு எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் நிவாரண உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாங்களாகவே முன்வந்து நிதியுதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் ஏற்படும்போது பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப்பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமல்ஹாசன் அறியமாட்டாரா? உதாரணத்துக்கு தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாகத் தெரிவித்து, தனது ட்விட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்[8]. தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான். தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, கமல்ஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. கமல்ஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்த அரசு மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள்,” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்[9].

தமிழகம் 1969, 1985, 1996, 1998, 2005, என்று பலமுறை இத்தகைய புயல், வெள்ளம், வரட்சி முதலியவற்றைச் சந்தித்துள்ளது. சென்னையில் வரட்சி நிலவியபோது, நடு ராத்திரி, விடியற்காலை 2 மணி போன்ற நேரங்களில் தெருக்களில் நின்று, டேங்கர் லாரி எப்பொழுது வரும் என்று காத்திருந்து, நான்கு குடங்கள் தண்ணீர் பிடித்து வாழ்க்கை நடத்தியவர்களைப் பற்றி, இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? அப்பொழுது கூட தண்ணிர் விநியோகத்தில் பாரபட்சம் இருக்கத்தான் செய்தது. காசிருந்தவர்கள் அப்படியே லாரிகளையே விலை பேசி, தங்களது வீடுகௐளில் நிரப்பிக் கொண்டனர். அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.அப்பொழுதெல்லாம் இப்பொழுதுள்ளவர்கள் பிறந்து கூட இருக்க மாட்டார்கள். மக்கள் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டுதான் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சினிமாவை வைத்து அரசியல் செய்வதும், அரசியலை வைத்து சினிமா செய்வதும், திராவிடப் பாரம்பரியத்தில் வந்துள்ள அனைவருக்குமே கைவந்த கலை. அதிலும், நாத்திகம், பகுத்தறிவு, சமூகநீதி, ஏழை-பணக்காரன், வர்க்க-போராட்டம் போன்றெல்லாம் பேசுகின்றவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். “பணத்தோட்டம்”[10] போன்றவையெல்லாம் எப்படியிருந்தன என்பது இப்பொழுதுள்ளவர்களுக்குத் தெரியாது.

2015 வெள்ளம் - பணத்தோட்டம், அண்ணாதுரைகஷ்டகாலங்களில் உதவி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பெயர், முகம் எல்லாம் வரவேண்டும் என்று செய்ததில்லை. உணவு, குடிநீர், துணிமணிகள் என்று கொடுத்து உதவியவர்கள் அமைதியாகத்தான் செய்துள்ளனர். குறிப்பாக இளைஞ்சர்கள், சிறுவர்கள் அபாரமான முறையில் உதவி, சேவைகளை செய்துள்ளார்கள். ஆனால், இப்பொழுதைய வெள்ளத்துயரங்களில், சேவை செய்பவர்களுள் பலர் ஆதாயம் தேட முயன்றுள்ளனர், இன்னும், முயன்று வருகின்றனர். “எப்.எம்” ரேடியோ செனல்களின் அருவருப்பான பேச்சுகளைக் கேட்டிருந்தால், நொந்தே போயிருப்பர். மின்சாரம் இல்லாமல் இருப்பவர்களின் கதியை நினைத்துப் பார்த்தால், அதனின் பலனை அனுபவித்துக் கொண்டு பேசுபவர்கள், வாழ்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

09-12-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1403164

[2]  தமிழ்.இந்து, கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கண்டிப்பு, Published: December 5, 2015 19:50 ISTUpdated: December 5, 2015 19:51 IST.

[3]  மாலைமலர், தன்னிலை மறந்து பேசுகிறார் கமல் ஹாசன்: அமைச்சர் .பன்னீர் செல்வம் கண்டனம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 05, 9:08 PM IST.

[4] http://www.maalaimalar.com/2015/12/05210850/minister-Panneerselvam-condemn.html

[5] மாலைமலர், தன்னிலை மறந்து பேசுகிறார் கமல் ஹாசன்: அமைச்சர் .பன்னீர் செல்வம் கண்டனம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 05, 9:08 PM IST.

http://www.maalaimalar.com/2015/12/05210850/minister-Panneerselvam-condemn.html

[6] http://www.maalaimalar.com/2015/12/05210850/minister-Panneerselvam-condemn.html

[7] https://antihidnu.wordpress.com/2015/11/09/kamal-hassan-deepavali-ad-heading-for-controversy/

[8] நிதி வழங்கிய தெலுங்கு நடிகர்கள் விவரம்: அல்லு அர்ஜுன் 25 லட்சம், பிரபாஸ் 15 லட்சம், மகேஷ்பாபு 10 லட்சம், ரவி தேஜா 5 லட்சம்,கல்யாண் ராம் 5 லட்சம், சாய்தரம் தேஜா 3 லட்சம், வருண் தேஜா 3 லட்சம் மற்றும் சம்பூர்ணேஷ் 50 ஆயிரம். தெலுங்கு நடிகர்கள் இதுவரை மொத்தம் 66 லட்சத்து 50 ஆயிரங்களை சென்னை மற்றும் தமிழக மக்களுக்காக அளிக்க முன்வந்திருக்கின்றனர். இது தவிர இன்று மாலை நானி, அல்லரி நரேஷ் உள்ளிட்ட 10 பிரபல நடிகர்கள் பிரபல மால்களில் உண்டியல் ஏந்தி நிதி திரட்டி வருகின்றனர். மேலும் தமிழக மக்களுக்கு உதவ நினைப்போர் ராமாநாயுடு அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த தொகைகளை அனுப்பி உதவுமாறு நடிகர் ராணா கேட்டுக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தவிர மக்களுக்குத் தேவைப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நடிகர் நவ்தீப் தலைமையில் திரட்டி சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.com/news/india/chennai-rain-telugu-actors-helps-tamilnadu-people-241616.html

[9]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7952762.ece?ref=relatedNews

[10] அண்ணாதுரையின் கதை, ஆனால், பிறகு அது திமுகவினருக்கே எதிராக போயிற்று. கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியின் புத்தகத்தில் விவரங்களைக் காணலாம்.

நடிகை-நடிகர் வாழ்க்கை, வதந்திகள் உருவாக்கம், செய்திகள் தயாரிப்பு, அலையும் ஊடக விபச்சாரிகள் – எல்லோருமே இந்திய கலாச்சார சீர்ப்பழிப்பாளர்கள் தாம்!

செப்ரெம்பர் 14, 2013

நடிகை-நடிகர் வாழ்க்கை, வதந்திகள் உருவாக்கம், செய்திகள் தயாரிப்பு, அலையும் ஊடக விபச்சாரிகள் – எல்லோருமே இந்திய கலாச்சார சீர்ப்பழிப்பாளர்கள் தாம்!

சினேகாபிரசன்னாதம்பதியர்: சினேகா-பிரசன்னா சினிமா தொழிலாளர்கள், திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது தொழில் தர்மத்தின் படி அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இன்று நடிப்பு மட்டுமல்லாது, விளம்பரத்தொழிலில் ஈடுபட அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை விட, விளம்பரத்தொழிலை செய்து வருபவர்கள் அவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் வேறு எந்த வித்தியாசமோ, வேறுபாடோ இருப்பதாகத் தெரியவில்லை. நாத்திகம் பேசும் சத்யராஜ் கூட அவ்வாறு தொழில் செய்து சம்பாதித்து வருகிறார். ஏன் சூர்யா-ஜோதிகா தம்பதியர் கூட அதே தொழிலைத்தான் செய்து வருகிறார்கள். ஆனால், சினேகா-பிரசன்னா தம்பதியர் விசயத்தில் ஊடகக்காரர்கள் நடந்து கொள்வது கேவலமாக இருக்கிறது.

விளம்பரங்களில்கல்லாகட்டும்சினேகா, பிரசன்னா[1]: தலைப்பிட்டு “டமிள்-ஒன்-இந்தியா” என்ற இணைதளம்[2] இப்படி செய்தி வெளியிட்டுள்ளது! பிறகு, மற்றவர்கள் என்ன உண்டி குலுக்குகிறார்களா? சிவா என்கின்ற அந்த ஊடக நபர், இப்படி அதனை விவரித்துள்ளார்[3]: “நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து விளம்பரப் படங்களில் நடிக்கிறார். இதற்காக அவர்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்குகின்றனர். திரைநட்சத்திரங்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடித்து பணம் பார்க்கின்றனர். அதற்கு சினேகா, பிரசன்னா மட்டும் என்ன விதிவிலக்கா. திருமணத்திற்கு பிறகு சினேகா, பிரசன்னாவை ஜோடியாக நடிக்க வைக்க பல விளம்பர நிறுவனங்கள் அழைக்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை சரியாக புரிந்து வைத்துள்ள இந்த ஜோடி விளம்பரப் படங்களில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கின்றனர். இந்த ஜோடி பிரபலமாக உள்ளதால் நிறுவனங்களும் அவர்கள் கேட்கும் தொகையைத் தருகின்றன. அவர்களுக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிகிறதாம். சினேகா படங்களில் நடித்து சம்பாதித்ததைவிட விளம்பரப் படங்களில் தான் அதிகம் சம்பாதித்துள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சினிமா படங்களை விட விளம்பரப் படங்களில் குறைவான நேரத்தில் ஷூட்டிங் முடித்து நிறைய பணமும் சம்பாதிக்கலாமே. நல்ல டெக்னிக் தான்.”
ஊடகக்காரர்கள் என்ன செய்து வருகிறார்கள்?: இந்திய ஊடகக்காரர்கள் இன்று பத்திரிகாதர்மத்தைப் பின்பற்றுவதில்லை. சித்தாந்தம், அரசியல், மதம், ஜாதி, உள்நாட்டு மற்றும் மேனாட்டு எஜமானர்களின் கைகூலிகள், ஒற்றர்கள் என்று தான் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு, யோக்கியதை, தேசப்பற்று, நாகரிகம், பண்பாடு முதலியவை உள்ளதா இல்லையா என்று விவாதிக்கும் அளவில் உள்ளார்கள். அவர்களும் ஊடகத்துறையில் நடித்து வருகின்றனர்; இதற்காக அவர்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்குகின்றனர். பணம் பார்க்கின்றனர். அவ்வாறு நடிக்க வைத்து இந்தியர்களை ஏமாற்ற பல நிறுவனங்கள் அழைக்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை அவர்களும் சரியாக புரிந்து வைத்துக் கொண்டுள்ளனர். உண்மையான செய்திதாளராக, நிருபராக, நியாயமான செய்திகளை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்ற கொள்கையுள்ளவராக இருந்து சம்பாதித்ததைவிட, இவ்வாறு பிரச்சாரம், செய்திகளை உருவாக்குதல், நுழைத்தல், தூண்டிவிடுதல், கெடுத்தல் போன்ற காரியங்களில் தான் அதிகம் சம்பாதித்துள்ள விவரங்களையும் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உழைத்து பத்திரிகாதர்மத்தை விட இவ்வாறு குறைவான நேரத்தில் “ஷூட்டிங் முடித்து, செய்திகளை உருவாக்கி” நிறைய பணமும் சம்பாதிக்கலாமே. நல்ல டெக்னிக் தான், என்று அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மழைபெய்கிறதுஎன்றுகுடைபிடித்துக்கொண்டுஅலையவேண்டும்?: கவர் (கவரில் பணம்) வாங்காமல் வரும் நிருபரும், செய்திகளை போடும் பத்திரிக்கைக்காரரும் குறைவே. மின்-ஊடகக்காரர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நட்சத்திர ஓட்டல்களில் பார்ட்டிகள், பெண்ளுடன் கொண்டாட்டம் முதலியை இவர்களுக்கு உண்டு. அப்பொழுது அவர்கள் கொடுக்கும் செய்திகளே அந்திதான்! பிறகு ஏன் மழை பெய்கிறது என்று குடை பிடித்துக் கொண்டு அலைகிறார்கள்?

சினேகா பற்றிய வதந்தியும், ஊடகக்காரர்களின் அலையும் போக்கும்: நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினேகா படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில், சினேகா பற்றி இணைய தளத்தில் சமீபத்தில் பரபரப்பான தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. நடிகை சினேகா பற்றி இணையதளத்தில் பரபரப்பான தகவல் வெளியானது குறித்து அவரது கணவர் பிரசன்னா பதில் அளித்துள்ளார். தன் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் தகவல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினேகா நேற்று புகார் அளிக்க போவதாக கூறப்பட்டது[4].  ஊடகக்காரர்களுக்கு செல்போன்களில் காலை 10.39க்கு வந்து புகார் கொடுப்பார் என்று எஸ்.எம்.எஸ் அனுப்பட்டதாம்[5]. இதையடுத்து கொட்டும் மழையில் பத்திரிகையாளர்கள், டி.வி. கேமராமேன்கள், கமிஷனர் அலுவலகத்தில் நேற்று திரண்டனர்[6]. இப்படி செய்திகள் வந்துள்ளன.

கொட்டும்மழையில்பத்திரிகையாளர்கள், டி.வி. கேமராமேன்கள்நீண்டநேரம்காத்திருந்ததுஏன்?: போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்தும் சினேகா வராததால் ஏமாற்றம் அடைந்தனர்[7]. நாட்டில் இதுதான், முக்கியமான விசயமா, குறிப்பாக தமிழர்களுக்கு இதுதான் தேவையா? இல்லையென்றால், இவர்கள் ஏன் அங்கு, அவ்வாறு கேவலமாக காத்துக் கிடக்க வேண்டும்? கொட்டும் மழையில் பத்திரிகையாளர்கள், டி.வி. கேமராமேன்கள், கமிஷனர் அலுவலகத்தில் நேற்று திரண்டனர், காத்துக் கிடந்தனர் என்று ஏன் ஓலமிடவேண்டும்? உதாரணத்திற்கு இவர்களது மனைவி அல்லது கணவன் பற்றி இதே மாதிரி விசயம் தெரிய வருகிறது, உடனே இதே மாதிரி திரண்டு வந்து நிற்பார்களா? பிறகு இவ்வாறு அலையும் நோக்கம் என்ன?

சினேகாபற்றிதவறாகஎந்ததகவலும்வெளியாகவில்லைஅதற்குநான்பதிலும்சொல்லவில்லை. கமிஷனர்அலுவலகத்தில்புகார்தரப்போவதாகயாரிடமும்கூறவில்லை: இதுபற்றி பிரசன்னாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, “எனக்கு இதுபோல் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன[8]. இணைய தளத்தில் சினேகா பற்றி தவறாக எந்த தகவலும் வெளியாகவில்லை.  அதற்கு நான் பதிலும் சொல்லவில்லை[9]. கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப் போவதாக யாரிடமும் கூறவில்லை. இணையதள பேஸ்புக் பகுதியில் இதுகுறித்து நான் பதில் அளித்திருப்பதாக கூறுகிறார்கள். பேஸ்புக் பக்கம் நான் சென்று பல நாட்கள் ஆகிறது. அதற்கு எனக்கு நேரமில்லை’ என்று பதில் அளித்தார்[10]. பிறகு, யார் அத்தகைய வதந்தியைப் பரப்பியது? எஸ்.எம்.எஸ் அனுப்பியது யார்? எஸ்.எம்.எஸ் கிடைத்ததும் உடனே வந்து நிற்பானேன்? எல்லாம் தெரிந்தவர்களுக்கு, இது தெரியாமல் போனதா அல்லது இவ்வாறு மறைமுகமாக அழுத்தம் ஏற்படுத்தி, செய்திகளை உருவாக்குகிறார்களா?

சினேகாவையும் ஒரு அதிமுக அமைச்சரையும் இணைத்து ஊடகங்களில் சில செய்திகள் வந்தது, மறைந்தது: சினேகாவையும் ஒரு அதிமுக அமைச்சரையும் இணைத்து ஊடகங்களில் சில செய்திகள் வெளிவந்ததால்[11], அவர் மறுத்து பிரசன்னா விளக்கம் கொடுத்துள்ளார்[12]. ஒரு அதிமுக அமைச்சர் சினேகாவுடன் தொடர்பு கொண்டிருந்ததால், அவரது அமைச்சர் பதவி போயிற்று என்று ஒரு குழுமம் இணைதளத்தில் வெளிட்டதாம். பிரசன்னா உடனே செய்தி வெளியிட்ட அந்த நபருக்கு எதிர்ப்புத் தெரிவித்தாராம்[13]. ஆனால், அந்த நபரோ அது உண்மைதான் என்று வாதிட்டாராம். வதந்தியோ, செய்தியோ, இணைதளத்தில் வைரஸ் போல வேகமாகத்தான் பரவுகிறது[14]. நக்கீரனில் ஏதோ செய்தி போட்டு, எடுத்து விட்டிருக்கிறார்கள்[15]. இருப்பினும் இவ்வாறு உள்ளது[16]:

1.    அமைச்சரோடு இணைத்து … – நக்கீரன்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=107363

2 நாட்களுக்கு முன்பு – அமைச்சர் ஒருவரோடு நடிகை சினேகாவைதொடர்புபடுத்தி சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சில தினங்களுக்கு முன்பு 

நக்கீரன் ஏற்கெனவே பல பிரச்சினைகளில் சிக்கி அவஸ்தைப் பட்ட அனுபவம் உள்ளது. எனவே, ஒருவேளை, நமக்கேன் வம்பு என்று “செய்தியை” நீக்கி விட்டிருக்கலாம். ஆகவே, வதந்திகளை உண்டாக்கி, பொய்களை திரித்து செய்திகளாக மாற்றி, அவற்றை வலிய ஊடகங்களில் வரவைத்து, விற்றுப் பணமாக்கும் இவர்களது காரியங்களுக்கு என்ன பெயர்? ஊடக விபச்சாரம், பத்திரிக்கை வேசித்தனம், என்றெல்லாம் சொல்லலாமா?

© வேதபிரகாஷ்

14-09-2013


[2] சிவா, விளம்பரங்களில்கல்லாகட்டும்சினேகா, பிரசன்னா, Posted by: Siva Published: Sunday, December 16, 2012, 10:42 [IST]

[6] Reporters thronged the Police Commissioner Office in Chennai yesterday morning as they received news that Sneha would be there to lodge a complaint against some people spreading derogatory rumours about her to tarnish her image. However, the actress never arrived and the reporters were fretting and fuming over the waste of time. When some reporters contacted her husband Prasanna over this issue for clarification, he stated that Sneha had no plans to file any such complaint as no such rumours have been spreading now. The reporters then realised that it was handiwork of some mischief-makers. Sneha is currently busy with a couple of films, it may be mentioned here.

[13] Prasanna has come out in support of his beleaguered wife and actress Sneha and has said that they never intended to lodge a complaint with the police against anyone. Prasanna’s explanation was necessitated after reports surfaced in the media linking Sneha to a former Minister in the State Cabinet. A group had linked Sneha’s name with a Minister in Amma’s cabinet who recently lost his post as Minister and had said that his links with the married actress had cost him his post in the Cabinet. Stung and shocked, Prasanna immediately expressed his opposition to the comments by the person but the latter’s retorted immediately that they were writing nothing ‘but the truth’.

http://www.kollytalk.com/cinenews/prasanna-defends-sneha-talks-links-aiadmk-minister-111735.html

[15] “We’re sorry, but there is no nakkheeran.in Web page matching your entry.
Please type the address correctly.”

http://www.nakkheeran.in/users/frmError.aspx?aspxerrorpath=/Users/frmNews.aspx