பாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்! (2)
பெண்ணை தனது மூதாதையர் அல்லத காலத்திற்கு ஏன் நடிக்க வைக்க வேண்டும்?: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா? இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா? ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்போது ‘மர்மயோகி’யை ஆரம்பித்தோம். நாமொன்றும் ஐடியாக்களின் ஊற்று இல்லையே. தோன்றும்போது பார்க்கலாம் என்கிறார் கமல்ஹாசன். இவையெல்லாமும், 70 ஆண்டு கணக்கில் வராது. அரசியலில் புகுந்து குழப்பலாம் என்ற ஆசை வந்தநிலையில், திராவிடத்திற்கு ஆதரவான விமர்சனங்களை வைத்துக் கொண்டு, அதே நேரத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு உதவிக் கொண்டிருப்பது தான் கமலின் இருமுகமாகத் தெரிகிறது.
எதிர்மறை விமர்சனங்கள் இந்தியர்கள் கமலின் அடையாளத்தை கண்டுகொள்ள ஆரம்பித்து வைத்துள்ளன: சந்திர மௌலி “மஹாபாரதம்” எடுக்கலாம் என்ற செய்தி வந்தால், சத்தியராஜின் வெறிப்பேசிற்கு ஆதரவு அளிப்பது, அதற்கு எதிராக பேசுவது, நாத்திகன் என்று சொல்லிக் கொள்வது, இதெல்லாம் தோல்விகளைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், “பாகுபலி” பின்னால் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்கள், தொழிலிலும், மதத்திலும் பற்று கொண்டவர்கள், கடினமாக உழைத்தார்கள், வெற்றியைக் காட்டினார்கள். அதனால் தான் எல்லோரும் நம்பினர். தயாரிப்பாளர்களும் நம்பினர், இரண்டாம் பகுதி வெளி வந்தது, கோடிகளை அள்ளியது, அள்ளிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் பார்ப்பதால் தான் காசு கிடைக்கிறது. எல்லோரும் பார்க்கிறார்கள் என்றால், அப்படத்தில் உள்ளவை இந்திய மக்களை ஈர்க்கின்றன. ஆகவே, இதில் 2000, 70 ஆண்டுகள் என்றெல்லாம் பிரித்துப் பேசவேண்டிய தேவையே இல்லை. அதில் உள்ள உள்நோக்கம் மிக கேவலமாகவும், அருவருப்பாகவும் இருப்பதால், அதைப் பற்றி விவாதிக்கவும் வேண்டியதில்லை. இந்தியர்கள் நிச்சயம், இந்தியாவை, இந்திய மண்ணை விரும்பத்தான் செய்வார்கள். அதனால் தான் கோடானு கோடி மக்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கமலைப் போன்று, நான் இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்றெல்லாம் அவர்கள் பேசுவதில்லை. ஆக, அத்தகைய பிரிவினைவாத பேச்சுகள், விஸ்வரூபம் மற்றும் மருதநாயகம் படங்களை எதிர்ப்பவர்களுக்கு இனிப்பாக இருக்கும், ஆனால், மற்ற 120 கோடி மக்கள் கமலின் பேச்சின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால், இனி அத்தகைய பேச்சுகள் உதவாது, சினிமா பார்க்க அவர்கள் வரமாட்டார்கள், காசும் கிடைக்காது, பொத்தீஸ் / பிக்பாஸ் என்று காலத்தைக் கழிக்க வேண்டியது தான்.
விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?[1]: நவம்பர் 2015ல் கமல் பேசியது, “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது. அதாவது, பாலிவுட் நடிகர்கள், குறிப்பாக கான்கள் பாதையில், இவர் செல்வதை கவனிக்கலாம். இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்று அவர்கள் சொன்னால், இவரும் அதையே தான் சொல்கிறார். “நான் முஸ்லிம்தான்” என்று அந்த கான்கள் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், இந்த தருதலை, நான் நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, ஜிஹாதி தீவிரவாதத்திற்கு அடிபணிந்து விட்டது. ஆனால், விஸ்வரூபம் மூலம் கோடிகள் நஷ்டம் என்று புலம்புவது நின்றபாடில்லை.
தெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அப்பொழுது [2015ல்] கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[2]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[3]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[4]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன்? என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[5]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும்.
ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி: “பிரிவீய்வு” ஷோக்கு தன்னை கூப்பிடவில்லை, அதனால் கமென்ட் செய்யவில்லை என்று முன்னர் சொல்லபட்டது[6]. ஆனால், சத்தியராஜுக்கு ஆதரவாக ஜாதி-இனவெறி ரீதியில் டுவீட் செய்ததை ரசிகர்கள் கண்டு கொண்டார்கள். ஆனால், மூன்று வாரங்கள் பிறகு, இத்தகைய எதிர்மறை விமர்சனங்களையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை[7]. சினிமாவைத் தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் முன்னர் பேசியுள்ளது கவனிக்கத் தக்கது. லட்சக்கணக்கில் “டெக்னிசியன்”கள் / நிபுணர்கள், தொழிற்துறை வேலையாட்கள், தொழிலாளர்கள் இவர்களின் உதவியில்லாமல், கிராபிக்ஸ், ஜோடித்த காட்சிகள், அவற்றிற்கான செட்டிங்குகள் முதலியன உருவாகாது என்று கமலுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அவ்வாறு பேசி, பலரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.
© வேதபிரகாஷ்
14-05-2017
[1] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST
விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு
[2] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.
[3] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.
[4] http://www.maalaimalar.com/2015/11/08024247/Kamal-Hassan-speech-My-toleran.html
[5] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7855849.ece
[6] தினமலர், ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி, மே.13, 2017.
[7] http://cinema.dinamalar.com/tamil-news/59205/cinema/Kollywood/Kamal-speaks-about-Bahubali-2.htm