Posts Tagged ‘ரஜினிகாந்த்’

டிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா?

நவம்பர் 19, 2016

டிவி-ஷோக்களில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் நடிகைகள் – குடும்ப நெறிமுறைகளைப் பற்றி நடிகைகள் தீர்மானிக்க முடியுமா?

actresses-cannot-solve-family-problems

actresses-cannot-solve-family-problems

மக்கள் தங்கள் பிர்ச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் நடிகைகள் தீர்த்து வைப்பார்களா?: மக்கள் தங்களது உறவுகளை, தாம்பத்திய முறைகளை, தங்களால் பேண முடியவில்லை என்பதும், சமூகம் பலவழிகளில் சீர்கெட்டு கிடக்கும் போது, குடும்பத்து பெரியவர்கள், பெற்றோர், இல்வாழ்க்கை நலன் விழையும் மற்றோர், உற்ற நண்பர்கள் முதலியவர்களின் பேச்சை கேட்காமல் இருப்பவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர் என்பதும், அந்நிலைகளில் இவர்கள் சரிசெய்ய முடியாததை, சினிமா நடிகைகள் சரிசெய்து வைக்கிறார்கள் என்பது போன்ற நிகழ்ச்சிகளை டிவி-செனல்கள் காட்டி வருவது மிகக் கேவலமாகும். ஒழுக்கமில்லாதவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவது, லஞ்சம் வாங்குபவன் யோக்கியன் போல லஞ்சம் வாங்காதே என்று பிரச்சாரம் செய்வது, விபச்சாரிகள் கற்பைப் பற்றி விவாதிப்பது-பரிந்துரைப்பது போன்றவை எல்லாம் கேவலத்திலும் கேவலமான விசயங்கள். ஆனால், அத்தகையவை மேடைகளில் நடந்து வந்தன. இப்பொழுது, டிவி-செனல்களில் நடந்து வருகின்றன.

actresses-cannot-solve-family-problems-if-they-cannot-solve-theirs

When actresses-cannot-solve-family-problems-if-they-cannot-solve-theirs

நடிகைகளுக்கு குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் யோக்கியதை, அதிகாரம் உள்ளதா?: நடிகைகளின் சொந்த வாழ்க்கையினை விமர்சிக்கக் கூடாது என்று கூட சில அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் மற்றவர்களின் சொந்த வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்கிறேன் என்று டிவி-ஷோக்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரீதியில் இறங்கி விட்ட போது, அதைத் தட்டிக் கேட்கத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. இதை நடத்தும் நடிகைகள், தங்களை ஏதோ பெரிய ரிஷி-முனி, நீதிபதி, எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் தீர்க்கதரிசி என்பது போல பாவித்துக் கொண்டு, கலந்து கொள்பவர்களுக்கு, ஆலோசனை வழங்குவது, கண்டிப்பது, திட்டுவது போன்றவற்றை எல்லாம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு யார் அத்தகைய அதிகாரத்தைக் கொடுத்தது, அல்லது கலந்து கொள்பவர்களுக்கு அந்த அளவுக்கு அறிவில்லையா, என்பதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

ramba-gives-petition-in-the-family-court

Ramba-gives-petition-in-the-family-court

குடும்ப நீதிமன்றங்களை அவமதிக்கும் டிவி-நிகழ்ச்சிகள்: குடும்ப நீதிமன்றங்களில் நடக்கும் விசயங்கள் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு மற்றும் சிலருக்குத்தான் தெரிகிறது, தெரிய வருகிறது. அங்கு நீதிபதிகள் சட்டதிட்டங்களில் வரையறைகளுக்குள் விவாதித்து, சேர்ந்து வாழத்தான் பெரும்பாலும் அறிவுருத்தப்படுகின்றனர். உறவுகளை பிரிக்க, உடைக்க, விலக்கி வைக்க முயல்வதில்லை. ஆனால், டிவிசெனல்களில் இத்தகைய சமூகப் பிரச்சினைகள், முரண்பாடுகள், பிறழ்வுகள், முதலியவை அலசப்படும் போது, பார்ப்பவர்களுக்கே சங்கடமாக இருக்கிறது. சில நேரங்களில், அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்கள் உண்மையில் பிரச்சினைகளை தீர்க்க வருகிறார்களா அல்லது விளம்பரத்திற்காக வருகின்றானரா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா அல்லது டிவிசெனல்காரர்களே “செட்டப்” செய்து தயாரித்து வருகின்றானரா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன.

urvasi-actress-spotted-drunk

urvasi-actress-spotted-drunk

விவாகரத்து பெற்று மறுமணம் செய்து, குடிக்கும் நடிகை மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வது: தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் “கைரளி” செனலில் “ஜீவிதம் சாட்சி” என்று நடத்தி வருகிறார்[1]. நடிகை ஊர்வசி மலையாள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக எழுந்த புகாரின் பேரில் பிரபல நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டிசம்பர் 9, 2016 அன்று விசாரணைக்கு வருகிறது[2].  செபின் என்பவர் “ராயல் காவடியர் பொரட்க்ஷன் போர்ஸ்” [Royal Kavadiyar Protection Force president Shefin] என்ற அமைப்பின் தலைவரான இவர் தான் ஊர்வசியின் மீது புகார் கொடுத்தார்[3]. டிவி நிகழ்ச்சியின் மீது குடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்[4]. 2015ல் கேரள மாநில சட்டசபை பெண்-ஊழியர்கள் கூட்டத்தில், குடித்த நிலையில் பேசும் போது, பிரச்சினை ஏற்பட்டதால், இவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்[5]. மனோஜ் கே. ஜெயன் [Manoj K. Jayan] என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டு எட்டாண்டு வாழ்ந்தார். 2008ல் விவாகரத்து செய்து கொண்டு, 2013ல் சென்னையைச் சேர்ந்த பில்டர் சிவபிரசாத் [Chennai-based builder Sivaprasad] என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

urvasi-actress-blaming-for-her-drinking-habit

Urvasi-actress-blaming-for-her-drinking-habit

ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி: தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக விளங்கியவர் ஊர்வசி[6]. ஒரு மலையாள தனியார் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்னைகளை அலசும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்[7]. இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து ஊர்வசி கேட்டு, அதை தீர்க்க முயற்சிப்பது வழக்கம்[8]. இந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவர் மனித உரிமை ஆணையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது[9]: “நான் கடந்த சில தினங்களுக்கு முன் ஊர்வசி பங்கேற்று நடத்தும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்அப்போது ஊர்வசி என்னை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண்களிடம் அவர் மிக மோசமாக நடந்து கொள்கிறார். எனவே இது தொடர்பாக நடிகை ஊர்வசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” குடிபோதையில் இருக்கும் ஒருவர் எப்படி தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும் என்று கேட்டுள்ளது சரியான கேள்விதான்[10]. ஊர்வசி ஏழைகளை கிண்டல் செய்வது போன்று பேசியுள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11]. இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது[12].  இது சம்பந்தமாக மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மோகன்தாஸ் விசாரித்தார்[13]. அதைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்ட ஆலோசகர்கள் ஆகியோர் இது சம்மந்தமாக ஒரு மாதத்திற்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[14]. அதன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது[15].

the-fact-or-reality-khusbooகுஷ்புவும் குடும்ப பஞ்சாயத்து செய்ய வந்து விட்ட நிலை: தமிழ் சினிமாவில் மார்க்கெட் இறங்கியவுடன் சின்னத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக ஆளுங்கட்சி / அதிமுக தொலைக்காட்சியில் கேம்ஷோ ஒன்றை நடத்தி வந்தார்[16]. இவர் எதிர்க்கட்சியில் இணைந்ததால் வேறு தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார்[17]. குஷ்புவைப் பொறுத்த வரையில், பெண்களின் விசயங்களில், குறிப்பாக பெண்களின் கற்பு போன்ற விவகாரங்களில் சர்ச்சைகள் நிறைந்த கருத்துகளையே வெளியிட்டார். வழக்குகளும் போடப்பட்டன. ஆனால், அரசியல் ஆதரவு இருந்ததால் தப்பித்துக் கொண்டார். திமுக, காங்கிரஸ் என்று கட்சிகள் மாறி தன்னுடைய அரசியல் ஆதரவை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். இருப்பினும், குடும்ப-பாங்கானவர்கள் குஷ்புவை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. நடிகை என்றுதான் பார்க்கின்றனரே அன்றி, வேறெந்த விதத்திலும் பார்ப்பதில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மற்ற நடிகைகளுக்கும் பொறுந்தும்.

© வேதபிரகாஷ்

19-11-2016

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

[1] தினமலர், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை ஆபாசமாக திட்டுவதாக புகர்: ஊர்வசிக்கு மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ், November 18, 2016, 11:58 [IST].

[2] http://cinema.dinamalar.com/other-news/53207/cinema/otherlanguage/Human-Rights-Commission-seeks-explanation-for-actress-Urvashi.htm

[3] english.manoramaonline, ‘Urvashi was drunk on TV show’: Here’s what landed the actor in trouble, byOnmanorama Staff, Friday 18 November 2016 09:42 AM IST.

[4] The complaint, filed by Royal Kavadiyar Protection Force president Shefin, also accused Urvashi of appearing on the TV show drunk.

http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/urvashi-drunk-misbehavior-tv-show-kerala-human-rights-commission.html

[5] Last year, the actor addressed an event organized by a section of Kerala assembly’s women employees in a drunken stage and the officials had to pack her off.

[6] மக்கள்முரசு, ஆண்களை தரக்குறைவாக பேசிய நடிகை ஊர்வசி?, Posted on November 18, 2016.

[7] http://makkalmurasu.com/actress-urvashi-trouble-rude-behaviour-talk-tv-show/

[8] தமிழ்.வெப்துபனியா, அசிங்கமாக பேசிய நடிகை ஊர்வசி: டிவி நிகழ்ச்சியில் பரபரப்பு!, வெள்ளி, 18 நவம்பர் 2016 (09:50 IST).

[9] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/actor-urvashi-misbehaves-during-tv-show-kerala-rights-panel-seeks-report-116111800003_1.html

[10] பிளிமி.பீட்.தமிழ், ஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி?, Posted by: Siva, Published: Thursday, November 17, 2016, 17:54 [IST].

[11] http://tamil.filmibeat.com/heroines/urvashi-misbehaves-on-television-show-043348.html

[12] தினகரன், டிவி நிகழ்ச்சியில் ஆண்களை மோசமாக திட்டுவதாக புகார் : நடிகை ஊர்வசிக்கு ஆணையம் நோட்டீஸ், Date: 2016-11-18@ 00:32:51.

[13] தமிழ்.ஒன்.இந்தியா, மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களை தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக நடிகை ஊர்வசிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, . By: Essaki, Published: Friday, November 18, 2016, 14:34 [IST].

[14] http://tamil.oneindia.com/news/india/actress-urvashi-trouble-267578.html

[15] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=259544

[16] தமிழ்நாடு.நியூஸ், சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு, OCTOBER 21, 2016

[17]http://newstnn.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/

அஜித் தும்பைப் பூவா? எதிராக விழுந்த மலரா?

பிப்ரவரி 26, 2010

அஜித் தும்பைப் பூவா? எதிராக விழுந்த மலரா?

கருணாநிதியின் அறிக்கை வேடிக்கையாக உள்ளது:

எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. “இது தான் சமயம்’ என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர். இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என்னைச் சந்தித்து விளக்கமளித்தார். கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று. தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர். இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும்“,  இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி “சாதாரணன்”  என்றாலும் எதையும் சாதாரணமாகச் சொல்லிவிடமாட்டார்!

  • எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.
  • “இது தான் சமயம்’ என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர்.
  • இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என்னைச் சந்தித்து விளக்கமளித்தார்.
  • கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று.
  • தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர்.
  • இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும்

நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை!

பிப்ரவரி 21, 2010

நடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை!

கோலிவுட்டில் அமைதி உடன்படிக்கை!
இனி “அஜித்” சமாசாரம் கிடப்பில் போடப்படும் என்பதால், நடிகர்களும், சங்கக்களும் இந்த பிரச்சினைப் பற்றி ஊடகத்தாரிடம் எதையும் பேசவேண்டாம் என்றும், பிரச்சினையை பெரிதாக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது!
Temporary truce in Kollywood!
By Moviebuzz | Sunday, 21 February , 2010, 12:48

A temporary truce has been brought out after a meeting of various unions of Tamil film industry met on Saturday (Feb 20) to sort out the aftermath of Ajith’s controversial speech at a function organised to felicitate Chief Minister M Karunanidhi.

The meeting chaired by Tamil Film Producers Council president Rama Narayanan, FEFSI president V C Guhanathan, Nadigar Sangam general secretary Radha Ravi, R K Selvamani from Tamil Film Directors Association and representatives of film distributors association, exhibitors and theatre owners association demanded an unconditional apology from Ajith. They also condemned Rajinikanth’s statements on the issue.

Meanwhile Ajith and Rajinikanth kept their cool and refused to make any apology. In an interview to an English newspaper, Ajith struck to what he had said in his speech.

Expanding on the comments made at a function, the actor made it clear: “Let stars choose what causes they want to endorse without making it an issue of loyalty to the state or country,”

The Saturday film industry meeting has temporarily put the “Ajith issue” on the backburner. They requested artistes and associations not to talk to media over the issue and vitiate the matter further.

ajith-rajini-fefsi-20-02-10-2

ajith-rajini-fefsi-20-02-10-2

திருமாவளவன் பேசும் வசனங்கள்: ரஜினிகாந்த், அஜீத் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் தமிழ் இன விரோத செயலாக உள்ளது என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்[1]. திருமாவளவனுக்கே நடிக்கவேண்டும் என்ற ஆசையில் நான்கைந்து படங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அன்புதோழி, மின்சாரம்……என பட்டியல் நீண்டது! ஆனால் அவை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இவரும் மற்றவர்களைப் போல “மக்கள்-டிவியில்” அடிக்கடி பேட்டி என்ற ரீதியில் நடித்து வந்தார். ஒன்றும் எடுபடவில்லை. ஆகவே நடிகர்கள்மீது, அவருக்கு இருக்கும் கோபம் நியாயமானதே!

ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல்: இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: “கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது[2]. அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது”.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல்: “கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும்.

விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது.  விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள்[3]. விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழ் இனஉணர்வுக்கு[4] பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது: இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது. தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது”, என்று தெரிவித்துள்ளார்[5].

தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி: இவ்வாறு பேசுவதில் என்ன அர்த்தம் என்று தமிழ் மக்கள் அறிவார்களா? எல்லொருமே நடிகர்கள், அரசியல்வாதிகள் என்றால், பிறகு எப்படி இந்த தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி முதலியவையெல்லாம் வரும்? இனமானத்தலைவர்கள், இனமான நடிகர்கள் இப்படி நாளுக்கு-நாள் தமிழகத்தில் பெருகிவருவது வியப்பாகவே உள்ளது. இனி செம்மொழிக்கும் இவர்களெல்லாம் ஏதாவது செய்தாலும் செய்வார்கள் போலயிருக்கிறது! கருணாநிதிக்கு விழா என்றால் எல்லா நடிகர்கள்-நடிகைகள் வரவேண்டும் இல்லையென்றால் அது தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி என்றாகிவிடும் என்று மிரட்டுவது வேடிக்கைதான்.

முன்பு பத்திரிக்கையாளர்கள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்த்தோம். இனி அரசியல்வாதிகள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்ப்போம்!


[1] தட் ஈஸ் தமிள், ரஜினிஅஜீத்துக்கு திருமாவளவன் கண்டனம்!, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21, 2010

http://thatstamil.oneindia.in/movies/news/2010/02/thirumavalavan-condemns-ajith-rajin.html

[2] இவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் சென்று கலாட்டசெய்தது, அடித்தது முதலியவற்றை மறந்துவிட்டார் போலயிருக்கிறது. ராஜிவ்காந்தி சிலை உடைத்ததிலும் அவர்கள் பங்குள்ளது.

[3] இத்தகைய வேலைகள் இவருக்கு அத்துப்படி. பாண்டிச்சேரி, காரைக்கால் முதலிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறித்துள்ளது அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். வி.சி கூட்டங்கள் நடத்துவதற்கெல்லாம் பணம் கேட்டிருக்கிறார்கள்.

[4] இப்படி இனம் என்று பேசியே அரசியல் நடத்தும் கூட்டங்கள்தாம் தமிழர்களை உண்மையில் ஏமாற்றி வருவதை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

[5] நக்கீரன், ரஜினி,அஜீத்தின் உள்நோக்கம் புரிந்துவிட்டது: திருமாவளவன் ஆவேசம் , ஞாயிற்றுக்கிழமை, 21, பிப்ரவரி 2010 (8:41 IST); http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27325