நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”– “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (4)
சினிமா சான்ஸ் இல்லாத நடிகைகள் செல்பி வெளியிடும் போக்கு: இப்பொழுது, நடிகைகள் அரைகுறையாக, அரை-முக்காலாக, ஏன் முன்–பின் முழு நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் போட்டு அற்பத்தனமான விளம்பரத்தைத் தேட ஆரம்பித்துள்ளனர். ரியா சென் ஒரு சில தமிழ் படங்களில் தான் நடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் களமிறங்கினார். ஆனால் அங்கு ஏமாற்றமே மிஞ்சியது[1]. இந்நிலையில் தற்போது மார்க்கெட்டே இல்லாமல் இருக்கும் இவர், சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை பதிவேற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார்[2]. தங்களைத் தாமே “செல்ஃபி” (சுயப்புகைப்படம் எடுத்தல்) எடுத்து போட்டுக் கொள்கிறார்களா அல்லது தொழிற்நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று, மற்றவர்களை விட்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வைத்து போடுகிறார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். ஆக, பெண்கள் இத்தகைய ஆபாச-விளம்பரத்திற்கும் தயாராகி விட்டார்கள் என்று தெரிகிறது. இதையெல்லாம் பெற்றோர், உற்றோர், மற்றோர், அறிவார்களா அங்கீகரிப்பார்களா, ஒப்புக்கொள்வார்களா என்றெல்லாம் யாராவது விவாதிப்பார்களா என்று தெரியவில்லை. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்-புக் முதலியவற்றில் ஒரு வேளை அவர்களே பார்த்தாலும் “லைக்” போட்டாலும் போடுவார்கள். ஆகவே ஒழுக்கம், கற்பு, தார்மீகம், நியாயம், நேர்மை முதலியவற்றைப் பற்றி இவ்விவகாரங்களில் பேச முடியாது போலும்.
நடிக்க சான்ஸ் இல்லை, போட்டி எனும் போது நடிகைகள் குற்றம் சொல்வது: எப்போதும், சர்ச்சையாக எதையாவது செய்து கொண்டிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். சினிமவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், அரசியல் பக்கம் சென்றார். மோடி உருவப்படம் அணிந்த ஆடை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், அரசியலில் அவரால் சோபிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பற்றி கூறும்போது, அவர் மாதத்திற்கு ஒரு காதலனருடன் அவர் உல்லாசமாக இருக்கிறார் என அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்[3]. தீபிகா படுகோனே முதல் பலரும் ஹாலிவுட்டில் வெற்றி பெறமுடியாத சூழலில், பிரியங்கா சோப்ரா மட்டுமே அங்கு தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனவே, அவர் மீதுள்ள பொறாமையில் ராக்கி இப்படி பேசி வருகிறார் என பாலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்[4]. “மாடல்களாக” அறிமுகம் ஆனாலும், நடிகைகளாக மாறிய நிலையும், நடிகைகளாக இருந்து, சான்ஸ் இல்லாததால், “மாடல்களாகி” விட்ட நடிகைகள் பற்றி விவகாரங்கள் அலசப்பட்டன. அப்பொழுது, “சினிமா சான்ஸுக்கு படுப்பது” [Casting couch] என்ற முறை இருந்தது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. நடிகள் சிலர் வெளிப்படையாக பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டார்கள், வற்புருத்தினார்கள், மறுத்தவர்கள் உதைத்து தூக்கியெறியப்பட்டார்கள், என்று குற்றஞ்சாட்டவும் செய்தனர்.
“கரன் ஜோஹருடன் காபி அருந்துதல்” [Koffee With Karan] என்ற நிகழ்ச்சி மூலம் வெளி வந்த விவகாரங்கள்: பாலிவுட்டில் நடிகைகளுக்கு படங்களில் சான்ஸ் கிடைப்பது, ஏற்படுத்திக் கொடுப்பது, கிடைத்த சான்ஸை தக்க வைத்துக் கொள்வது என்ற எல்லா நிலைகளிலும் பலவித பரிந்துறைகள்[5]. ஆதரவுகள், தாதாக்கள் ஆசி-ஆதரவு என்று பலவித சிபாரிசுகள் தேவைப்படுகின்றன[6]. கங்கனா ரௌத், கரன் ஜோஹரை, “கரன் ஜோஹருடன் காபி அருந்துதல்” [Koffee With Karan] என்ற நிகழ்ச்சியில், “மூவி மாபியா” என்று வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்[7]. இப்பொழுது வரை, தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது டி-கம்பெனி இந்தியத் திரையுகத்தை பலவிதங்களில் ஆட்டிப்படைத்து வருகிறது. “பாவியா” என்ற பிரயோகம், பல நடிகை-நடிகர்களை பாதித்தது. இப்பொழுது நடிகைகள் எல்லோரும் இவ்வாறு புகார் சொல்ல ஆரம்பித்து விட்டனர் என்றெல்லாம் பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கடிந்து கொண்டனர். இது தேசிய அளவில் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது[8]. பாலிவுட்டைப் பொறுத்த வரையில், ஏதாவது ஒரு “காட் பாதர்” இருக்க வேண்டும், இல்லையென்றால், நடிகைக்கு சான்ஸ் கிடைக்காது என்ற நிலவரம் உள்ளது[9]. ஆலியா பட் என்ற இளைய நடிகை இவற்றையெல்லாம் மறுத்தார். இவள் சர்ச்சைகள் பலகொண்ட மஹேஷ் பட்டின் மகள்[10].
பிரியங்கா சோப்ரா கூறும் உண்மைகள்: பிரியங்கா சோப்ரா, “எல்லாவிதமான பரிந்துரைகள், சிபாரிசுகள் எல்லாம், பலவித வடிவங்களில் இருக்கின்றன. சினிமா பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தோம் என்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், எல்லோருமே, சினிமா உலகத்தின் வாயிலில் காலை பதித்துக் கொண்டு பிறந்து விடுவதில்லை. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு பிரயாணம் இருக்கிறது. நானும் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறேன். யாரோ இன்னொரு நடிகையை தயாரிப்பாளருக்கு சிபாரிசு செய்தலால், படங்களிலிருந்து, நான் தூக்கியெறியப் பட்டுள்ளேன். இருப்பினும் அழுது பெற்றுள்ளேன். வெற்றி என்று பிறகு பேசுபவர்களுக்கு இத்தகைய தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கின்றன”, என்று தன் கருத்தை வெளியிட்டார்[11]. பிரியங்கா தாமும் இதனால் பாதிக்கப் பட்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்[12]. அதுமட்டுமல்லாமல், தான் திருப்தியடைந்து விட்டால், ஒரு நிலையில், நடிப்பதையும் விட்டு விடுவேன் என்றார். சிபாரிசு, பரிந்துரைத்தல், ஆதரவு [Nepotism] முதலியவ பலவிதங்களில் செயல்படுகின்றன[13]. பொதுவாக தாய்-தந்தையர் நடிகன்-நடிகை, பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், அரசியல்வாதிகள் என்றெல்லாம் இருக்குன் வரை, அவர்களுக்கு அதிகாரம், ஆளுமை, செல்வாக்கு இருக்கும் வரை, அத்தகையவை தொடரும். ஆனால், பதவி, ஆட்சி, பணம் முதலிய பலங்கள் இல்லை என்றால், சான்ஸும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. அதனால், நடிகைகள் விபச்சாரிகளாகவும் மாறுகின்றனர். இப்பொழுதெல்லாம், அதனையும் சகநடிகைகள் ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு சான்ஸ் இல்லை என்றால், அவர்கள் என்ன செய்வார்கள் என்ற ரீதியில், ஆதரித்தும் குரல் கொடுக்கிறார்கள்.
© வேதபிரகாஷ்
06-05-2017
[1] தமிழ்.வெப்துனியா, மார்க்கெட்டை இழந்த நடிகை இன்ஸ்டாகிராமில் கிளப்பிய புகைப்பட சர்ச்சை!!, செவ்வாய், 2 மே 2017 (13:03 IST)
[2] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/riya-sen-uploaded-nude-photo-in-instagram-117050200015_1.html
[3] தமிழ்.வெப்துனியா, மாதத்திற்கு ஒருவருடன் உல்லாசம் ; பிரபல நடிகையை வம்பிக்கிழுக்கும் ராக்கி சாவந்த், Last Modified: புதன், 3 மே 2017 (15:56 IST)
[4]http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rakhi-sawant-comment-on-piryanka-chopra-117050300035_1.html
[5] Times of India, Priyanka Chopra opens up about nepotism and it’ll shock you!, Pratibha.D| May 1, 2017, 01.18 PM IST
[6] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/priyanka-chopra-opens-up-about-nepotism-and-itll-shock-you/articleshow/58457218.cms
[7] India Today, Priyanka Chopra on nepotism: I was kicked out of films because someone else was recommended, IndiaToday.in | Written by Samrudhi Ghosh, New Delhi, May 1, 2017 | UPDATED 16:37 IST
[8] http://indiatoday.intoday.in/story/priyanka-chopra-nepotism-baywatch-hollywood-debut/1/942749.html
[9] Priyanka Chopra will soon be making her Hollywood debut opposite Dwayne Johnson and Zac Efron in Baywatch. She will be playing the role of Victoria Leeds. The actor who has lately been basking in all the glory and success, however, reveals that there were days when she too faced rejection in Bollywood. Ever since Kangana Ranaut openly spoke about nepotism calling Karan Johar the ‘movie mafia’ of Bollywood in the latest season of the chat show, Koffee With Karan, nearly the entire fraternity has taken sides. While some agreed with the Queen actor, others like Alia Bhatt said it doesn’t matter if you are a star kid, as at the end of the day all that matters is your talent.
Indian Express, Priyanka Chopra on nepotism debate: I was kicked out of films because someone else was recommended to the producer, By: Express Web Desk | New Delhi | Published:May 2, 2017 3:49 pm
[10] மஹேஷ் பட், ஷெரீன் மொஹம்மது அலி மற்றும் நானாபாய் பட் என்ற தம்பதியருக்குப் பிறந்தவர். இவருக்கு ஆலியா பட், பூஜா பட், ராஹுல் பட், ஷெரீன் பட் என்ற மகள்-மகன்களும், முகேஷ் பட், ராபின் பட், ஷைலா பட், ஹீனா பட் முதலிய சகோதர-சகோதரிகள் உள்ளனர். பல மதக் கலப்பினால், தன் குடும்பத்தை “செக்யூலரிஸ” குடும்பம் போன்று காட்டிக் கொண்டாலும், அவரது கருத்துகள் பொதுவாக, இந்துமதத்திற்கு எதிராக இருக்கிறது.
[11] . “All kinds exist. There is nothing wrong in being born into a family that has a legacy. Outsiders don’t have a foot-in-the-door access. Star kids have the insurmountable pressure of living up to the family name. Every star has their individual journey. In mine, I have faced a lot. I have been kicked out of films because someone else was recommended to the producer. I cried and got over it. Eventually, those who are meant to be success stories become that, despite all hindrances,” said Priyanka Chopra.
[12] Mid-day, Priyanka Chopra in an interview with mid-day: I will quit if I am satisfied, By Mohar Basu | Posted 01-May-2017
[13] http://www.mid-day.com/articles/bollywood-news-priyanka-chopra-interview-quit-satisfied-baywatch-hollywood-debut/18212192