Posts Tagged ‘ரேகா’

ஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்!

மார்ச் 10, 2016

ஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்சொன்னது ஜெமினியின் மகள்!

Gamini Ganesan daughter said about him on 08-03-2016ஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்: ”திரையுலகில், என் தந்தை ஜென்டில்மேனாக பார்க்கப்பட்டார்,” என, பிரபல மருத்துவரும், நடிகர் ஜெமினி கணேசனின் மகளுமான கமலா செல்வராஜ் கூறினார்[1]. சென்னை, பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், 08-03-2016 அன்று நடந்த மகளிர் தின விழாவில், அவர் பேசியதாவது: “மருத்துவம் படித்த அனைவருக்கும், நோயாளிகளுக்கு என்ன மருந்து தர வேண்டும் என, உடனடியாக தெரிந்து விடுவதில்லை. துவக்கத்தில் நானும், 120 ரூபாய்க்கு அறை பிடித்து, ‘கிளினிக்துவங்கினாலும், வைத்தியம் பார்க்க தெரியவில்லை. மூத்த டாக்டர்களை கேட்டு தான் சிகிச்சை அளித்தேன். என் தந்தை, சினிமாவில் நடிப்பதை விட்டு, 35 ஆண்டுகளுக்கு பிறகே மருத்துவமனை கட்ட துவங்கினேன். அதனால், அவரிடம் நிறைய பணம் இல்லை; ஆறு கிரவுண்ட் இடம் மட்டும் கொடுத்தார். வங்கியில் கடன் வாங்கி, மருத்துவமனையை கட்டினேன். எனக்கு, அவர் நிறைய செல்வத்தை தரவில்லை; நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுத் தந்தார். திரை உலகில் அவர் ஒரு, ‘ஜென்டில்மேன்என அழைக்கப்பட்டார். அவர் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை[2]. அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர்”, இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாநில பா.ஜ.,தலைவர் தமிழிசை, இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகி சின்மயி, நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் பேசினர்.

Gamini Ganesan familyஜெமினி கணேசன் பலதிறமைகளைக் கொண்ட மனிதன்: ஜெமினி கணேசன் (17 நவம்பர் 1920 –22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார் மற்றும் பல திறமைகள் கொண்டவர். “காதல் மன்னன் “, என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கல்லூரி நாட்களில் அவருக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்பொழுது, நாட்டுநடப்புகளை எழுதி வைத்திருப்பது, அவருக்கு அவற்றில் இருந்த நாட்டத்தைக் காட்டுகிறது[3]. அந்த டைரி குறிப்புகளை வைத்துக் கொண்டு ஆராய்ச்சியே செய்யலாம் போலிருக்கிறது, அத்தனை விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதை அவரது இளைய மகள் மருத்துவர் ஜெயா ஶ்ரீதர் என்பவர் தனது “பழைய நினைவுகள்” பகுதியில் “தி இந்து”வில் குறிப்பிட்டுள்ளார்[4]. பாட்டுப் பாடுவதிலும் திறமையுண்டு. யோகா மாஸ்டர், வேகமாக கார் ஓட்டுபவர் என்று பல திறமைகள் உண்டு. போதாகுறைக்கு தான் “காதல் மன்னன்” ஆகி, நான்கு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டார் போலும்.

Gemini, Pushpavalli, Rekhaஜெமினியின் மனைவிகள்: ஜெமினி கணேசன் 1940லிருந்து 1998 வரை நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஜெமினியின் மனைவிகள் விவரங்கள் கீழ் வருமாறு:

எண் மனைவி / துணைவி பெயர் திருமணம் செய்து கொண்ட ஆண்டு மற்ற விவரங்கள்
1 டி. ஆர். அலமேலு 1940 என்கின்ற பாப்ஜி
2 புஷ்பவள்ளி. 1950 (?) 1954ல் ரேகா பிறந்தார், 1991ல் காலமானார்.
3 சாவித்திரி. 1952 1981ல் காலமானார்.
4 ஜூலியானா ஆன்ட்ரூஸ் 1998 78 வயதில், 36 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டார்[5]

மூன்று மனைகள் மூலம் ஒரு மகன் மற்றும் மகள்கள் என்று பலர் பிறந்துள்ளனர். அவர்கள் எல்லோருமே தத்தம் துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

Juliana Andrews and Gemini Ganesanஜூலியானா ஆன்ட்ரூஸ் விவகாரம் (1998-99): ஜூலியானா ஆன்ட்ரூஸ் [Juliana Andrews] ஜெமினி கணேசனின் காரியதரியாக வேலை பார்த்து வந்ததால், அவருடைய கணக்கு-வழக்குகள் எல்லாம் நன்றாக தெரிந்திருந்தது. ஜெமினுக்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன, அதனால், அவற்றை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில், அவரை வளைத்துப் போட முயற்சித்தார் என்றும் சொல்லப்பட்டது[6]. திருமணம் ஆகி தி.நகர் பிளாட்டில் வசித்து வரும் வேளையிலேயே, ஐந்து மாதங்களில் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. 1999ல் “அப்படியே ஆகட்டும்” என்ற டிவி-சிரியலை எடுப்பதில் வேலை செய்துள்ளார்[7]. இவள் அடித்தாள் என்ற புகார் எல்லாம் இருந்தது. இதனால் ஜெமினி குடிக்க ஆரம்பித்தார். தொந்தரவு தாங்காமல் அமெரிக்காவுக்கு போய்விட்டார் என்றெல்லாம் செய்தி வந்தது[8]. சொத்துப் பிரச்சினையில், ஜூலியானா ஏகபட்ட புகார்களைக் கொடுக்க ஆரம்பித்தார். கருணாநிதியிடமும் மனு கொடுத்தார். தான் சிங்கப்பூரில் வசதியாக வாந்து வந்ததாகவும், ஜெமினி தான் சென்னைக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புருத்தினார் என்றெல்லாம் கூறினார். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய பிறகு கூட, அவர் இருக்கும் இடம் தெரியவில்லை, அவரை சந்திக்க ஜெமினி குடும்பத்தினர் தடுக்கின்றனர் என்றெல்லாம் கூட கூறினார். முடிவாக விவாகரத்து செய்ய்ய ரூ.50 லட்சம் கேட்டதாகவும், ஆனால், ரூ.7 லட்சம் கொடுத்து முடித்து வைத்ததாகவும் செய்திகள் வந்தன[9].

Daughters of Gemini GAnesanஜெமினியின் மனைவி, குடும்பங்கள்: ஜெமினிக்கு நடிகைகளான புஷ்பவள்ளி, சாவித்திரி ஆகியோர் தவிர பாப்ஜி (அலமேலு) என்ற மனைவியும் உண்டு. பாப்ஜியைத்தான் ஜெமினி முதன்முதலில் திருமணம் செய்தார்[10]. பாப்ஜியை மணக்கையில் ஜெமினிக்கு வயது 19. தனது 22வது வயதில் ஒருகுழந்தைக்கு தந்தையானார். பாப்ஜியுடன்தான் கடைசி வரை வாழ்ந்து வந்தார் ஜெமினி. தனது 70வது வயதில் ஜூலியானா என்ற தனது செக்ரடரி பெண்ணைத் திடீர் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்[11]. சில மாதங்கள் அவருடன் தனிக் குடித்தனம் நடத்திவிட்டு மீண்டும் பாப்ஜியிடமே திரும்பி வந்தார். பாப்ஜி மூலம் ஜெமினிக்கு 4 மகள்கள் பிறந்தனர். ஜெமினி கணேசனின் மகள்கள் – டாக்டர் ரேவதி, நாராயணி, டாக்டர் கமலா, நடிகை ரேகா, விஜய சாமூண்டீஸ்வரி, டாக்டர் ஜெயா, முதலியோர். மூத்த மகள் டாக்டர் ரேவதி அமெரிக்காவில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் கமலா செல்வராஜ் சென்னையில் மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் சோதனைக் குழாய் குழந்தைகள் ஆய்வில் உலகப் புகழ்  பெற்றவர். இரண்டாவது மனைவியான புஷ்பவள்ளி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவரை ஜெமினி காதலித்து திருமணம்செய்து கொண்டார். இவர் மூலம் 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தவர் தான் இந்தித் திரையுலகில் தற்போதும் பரபரப்பாக இருக்கும் ரேகா. ஜெமினியின் 3வது மனைவியான நடிகை சாவித்ரி மூலம் விஜய சாமுண்டீஸ்வரி எனற மகளும், விஜய சதீஷ் என்ற மகனும் உள்ளனர். சாவித்ரி மறைவுக்குப் பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று குடியேறி விட்டனர். ஜெமினி கணேசனுடைய அத்தைதான் முத்துலெட்சுமி ரெட்டி[12], என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்[13].

Sridhar, ........Gemini, MGR, NTR, Sivajiஜெமினியும், கருணாநிதியும் சொந்தக்காரர்கள்!: கருணாநிதி தனது பேச்சில், இவ்வாறு கூறிக் கொண்டார். “ஜெமினி கணேசன், 17.11.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தசந்திரம்மாஎன்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. ஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆகவே, எனக்கும், ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா?”, என்று கேட்டு முடித்தார். பிறகு இத்தகைய பார்ப்பன பந்தங்களை வைத்துக் கொண்டுதான், இந்த மனிதர், பார்ப்பனரைகள் வைதே இன்று வரை காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

10-03-2016

[1] தினமலர், எங்கப்பா ஜெமினி கணேசன் எந்தப் பெண்ணையும் தேடிப் போனதில்லை, மார்ச்.9, 2016:00.15,

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1474463

[3] http://www.thehindu.com/mag/2005/04/03/stories/2005040300560500.htm

[4] The Hindu, Pages from the past, Sunday, April.3, 2005. Dr. Jaya Shreedhar, the youngest daughter of Gemini Ganesh, is Health Advisor, Internews Network. Contact her atjaya_shreedhar@vsnl.net

[5] Juliana, whom Gemini Ganesan married to the surprise of his family, friends and fans, lived with him in a flat in T Nagar in Madras for five months before their marriage was on the rocks. Gemini Ganesan’s family had claimed that Juliana had been torturing the star as a result of which he had taken to excessive drinking. It was also alleged that Juliana had demanded Rs 5 million to agree to a separation but Gemini Ganesan’s family agreed to pay only Rs 700,000.

 http://m.rediff.com/news/1999/nov/23gem.htm

[6] http://www.rediff.com/news/1999/nov/27gem.htm

[7] Tamil film legend Gemini Ganesan and Juliana Andrews have announced another joint venture: a TV serial called Appadiye Aakattum. (Let it be so). So? Well, he happens to be 79, Rekha’s dad, and a fourth-time groom; she’s 35; and for the record, Gemini’s first wife is still alive. The couple’s not saying much, but we snatched this gem from Gemini: “If Nelson Mandela can marry at 82, why not I?” He’s even three years younger! India Today, She and I, Anna M.M. Vetticad December 7, 1998 | UPDATED 18:48 IST.

 http://indiatoday.intoday.in/story/tamil-film-legend-gemini-ganesan-juliana-andrews-announce-joint-tv-venture/1/265387.html

[8] Another personality splits up with his wife. Thespian Gemini Ganesan, 79 (superstar Rekha’s father), is rumoured to have fled the country to escape his fourth find, Juliana Andrews, 35. “He’s ill and gone to the US for treatment,” insists a family member. Rubbish, snorts Juliana, who sees this as a ploy to isolate her and force her into a financial settlement. She’s been accused by Gemini’s family of eyeing his wealth, and a young man in the neighbourhood. “I was a well-employed NRI,” she rages in response, “but I gave it all up when Gemini’s first wife (who’s still alive) called me saying if I didn’t come to Chennai, he’d die of a broken heart. I agreed to marry him on humanitarian grounds.” No comments from the hero of this plot. Yet. India Today, Just split, Anna M.M. Vetticad, March 8, 1999, UPDATED 18:06 IST.

[9] http://m.rediff.com/news/1999/nov/23gem.htm

[10] தமிழ்.ஒன்.இந்தியா, காதலிலேயே வாழ்ந்து மறைந்த ஜெமினி!, Published: Tuesday, March 22, 2005, 5:30 [IST]

[11] http://tamil.oneindia.com/news/2005/03/22/gemini1.html

[12] http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=81

[13] ஜெமினியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம், மற்றும் ஜெமினியின் ‘வாழ்க்கைப் படகு’ என்னும் புத்தகம் ஆகியவற்றை தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட, முறையே கே.பாலசந்தர், வாலி, வைரமுத்து ஆகியோர் பெற்று கொள்ளும் விதத்தில்… ரேவதி சுவாமி நாதன், மருத்துவர் கமலா செல்வராஜ், நாராயணி கணேஷ்,  மருத்துவர் ஜெயா ஸ்ரீதர் மற்றும் விஜயா சாமுண்டீஸ்வரி ஆகிய ஜெமினியின் ஐந்து புதல்வியரும் தங்களின் தந்தைக்கு வியத்தகு விழாவாக எடுத்திருந்தனர். அவ்விழாவில், இதை தெரிவித்தார்.

குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)!

ஒக்ரோபர் 25, 2015

குஷ்பு, நக்மா, விஜயதாரிணிதமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)!

காங்கிரஸ் சண்டை - குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா

காங்கிரஸும் நடிகைகளும்[1]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும்  எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.

ஐயையே! சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்!

ஐயையே! சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்!

நக்மாஜோதிகா சகோதரிகளால் சகோதர நடிகர்களும் இழுக்கப்படுவார்களா?: நடிகை நக்மா மூலம், தமிழக காங்கிரசிற்கு வருமாறு நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்து, மகிளா காங்கிரசாரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை வலியுறுத்தி பேசினார். தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர் மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பி உள்ளது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது.

இளங்கோவுடன் - முத்தேவியர்- 2015

இளங்கோவுடன் – முத்தேவியர்- 2015

காங்கிரஸின் விரியும் சினிமாவலை: இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[2], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். ஆனால், அந்த கருத்தை சூர்யா குடும்பத்தினர் எதிர்க்காததால், அது நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது. நடிகை நக்மாவின் முயற்சிக்கு பலன் கிடைத்து, நடிகர் சூர்யா காங்கிரசில் இணைந்தால், கட்சி கட்டாயம் வலுபெறும். ஏற்கனவே, நடிகர் விஜயை கட்சியில் இணைக்க, சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, கட்சியின் துணைத் தலைவர் ராகுலை, நடிகர் விஜய் சந்தித்தார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

இளங்கோ- முத்தேவியர்- 2015

இளங்கோ- முத்தேவியர்- 2015

சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட்[3]: கடந்த 16-ம் தேதி சென்னை வருகை தந்த நக்மா நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தார். தற்போது காங்கிரஸ் மேலிடம் நக்மாவிற்கு ஸ்பெஷல் அசைமண்ட் கொடுத்துள்ளது, அதன்படி தமிழ் சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக மீது அதிருப்தியில் உள்ள சரத்குமார் திமுக பக்கம் போகமுடியாத நிலை உள்ளதால், காங்கிரஸை சரத்குமார் ஆதாரிக்க வைப்பது, இதேபோன்று தனது தங்கை ஜோதிகாவின் கணவர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, அப்பா சிவகுமார் ஆகியாரை காங்கிரசை ஆதரிக்க செய்யும் முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளார். இதற்காக கடந்த 2 தினங்களாக திநகர் ஜோதி வீட்டில் நக்மா முகாமிட்டுள்ளார். இதே போன்று நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமாரையும் நேற்று நக்மா சந்தித்து பேசியுள்ளார். அவரின் மூலம் சில நடிகர்களையும் காங்கிரஸை ஆதரிக்க முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[4].

நக்மாவின் அழகை ரசிக்கும் இளங்கோவன்

நக்மாவின் அழகை ரசிக்கும் இளங்கோவன்

தமிழக ஊடகங்களும் இந்த கவர்ச்சிஅரசியலுக்கு ஜால்ரா போட்டு வருகின்றன: நமீதாவை வைத்துக் கொண்டு, எப்படி தமிழக ஊடகங்கள் கவர்ச்சி-செய்திகளை உருவாக்கின என்று முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன்[5]. நமீதாவைப் பொறுத்த வரையில் தமிழில் அவரால் சரியாகப் பேச முடியாது. எல்லா வார்த்தைகளையும் தமிழில் சொல்ல முடியாததால், ஆங்கிலத்தை உபயோகிப்பார். நமது தமிழ் ஊடகர்கள் அதனை அரைகுறையாகப் புரிந்து கொண்டு செய்திகளை வலிய உருவாக்கி, வெளியிட்டு கதை செய்துள்ளன என்று தான் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நமீதா கவர்ச்சியைக் காட்டினால் காசு கிடைக்கிறது என்பது போல, இவர்கள் இப்படி செய்திகளைக் காட்டினாலும் காசு கிடைக்கும் என்றுதான் அலைகிறார்கள்[6]. பாராளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரசாரம் செய்த ராக்கியை யாரும் மறந்திருக்க முடியாது. ‘சினிமா கவர்ச்சியை வைத்து அரசியல் நடத்த முடியாது’ என்று ராக்கியை காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் விமர்சித்தார். ‘அடுத்தவர்களை ஏமாற்றும் அரசியல் கவர்ச்சியைவிட சினிமா கவர்ச்சி எவ்வளவோ மேல். திக் விஜய் சிங்கிற்கு வயதாகிவிட்டது. அவர் கவர்ச்சியை பற்றி விமர்சிக்கும் வயதை தாண்டிவிட்டார்’ என்று சூடாக பதிலளித்தார் ராக்கி. ஆனால், சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டு கலக்கியிருக்கிறார். ஆக காங்கிரஸ்காரர்கள் வயதானாலும், அழகான, இளமையான பெண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் போலும். இந்த விளக்கம் எல்லாம் அரசியல் களத்தில் / காலத்தில் தான். சினிமாவில் ராக்கி தொடர்ந்து கவர்ச்சி காட்டிவருகிறார். குத்தாட்டமும் போடுகிறார். ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிப்பதில் இவர் எப்போதுமே முன்னணியில்தான் இருக்கிறார்[7]. ஆனால், குஷ்புவும், நக்மாவும் அவ்வாறு செய்ய முடியாது. அவ்வகையில், ராகுல் தனது திட்டத்தில் கவர்ச்சி அரசியலை சேர்த்துள்ளார் போலும். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத்தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு  இளைஞர்கள்  போராட்டம்  நடத்துவது  புதுவிதமானது. கடந்த  காலங்களில்  தேர்தலில்  போட்டியிட  சீட்  பெறுவதற்காக அந்த  பெண்கள்  புதுவிதமாக ரகசிய  போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[8]. திக் விஜய் சிங் போன்று அனுபவ அரசியல்வாதியாகக் கூறியுள்ளாரா அல்லது தமாஷாக கமென்ட் அடித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அம்மணிகள் கொத்தித்து போயுள்ளார்கள்.

© வேதபிரகாஷ்

25-10-2015

[1] https://evilsofcinema.wordpress.com/2015/10/17/congress-infight-due-to-actresses-dominating-affairs-in-tamilnadu/

[2]  இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும்.

[3] தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.

[4] http://www.dinamalarnellai.com/web/news/150

[5] https://evilsofcinema.wordpress.com/2014/01/08/news-manufacture-with-the-clamorous-actress-namita-new-remix-of-politics-unethical-journalism/

[6] https://evilsofcinema.wordpress.com/2014/01/13/news-manufactured-involving-sexy-actresses-with-political-parties-now-namita/

[7] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/10/19172736/GlamourOtherwiseDevelopment.vpf

[8] https://indiancommunism.wordpress.com/2015/10/20/women-stripped-naked-for-seat-in-congress/

குஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஒக்ரோபர் 25, 2015

குஷ்பு, நக்மா, விஜயதாரிணிதமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (1)!

ஜெயலலிதா, பெரியார்

ஜெயலலிதா, பெரியார்

சினிமாஅரசியல், அரசியல்சினிமா, திராவிட அரசியலுல் ஒன்றுதான்: தமிழக அரசியல் என்றுமே சினிமா அரசியலாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும், பகுத்தறிவு பேசும் திராவிடக் கட்சிகளின் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத அளவில் கடந்த 70 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. பெரியார் சினிமாவை எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டாலும், ஆதரவு கொடுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட அவர், சித்தாந்தத்தைப் பரப்புவதில் எத்தகைய யுக்தியையும் கடைபிடிக்கலாம் என்று வற்புருத்தினார். “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” நாடகத்தில் நடித்த கணேசனுக்கு “சிவாஜி” பட்டம் கொடுத்தார். ஜெயலலிதா நாட்டியங்களைக் கண்டு ரசித்துள்ளார். அண்ணாதுரை சினிமாவில் ஊறியவர் என்பதால் ஒன்றும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கருணாநிதி, எம்ஜியாரை “கூத்தாடி” என்றும் “கூத்தாடி அரசியல்” செய்கிறார் என்றும் கிண்டலடித்து உண்டு.  திமுகவினரும் அவ்வாறே பேசி-எழுதி தூஷித்துள்ளனர். அதே நேரத்தில் தனது மகன், மு.க. முத்துவை எம்ஜியார் போல நடிக்க வைத்து படங்கள் எடுக்கப்பட்டன[1]. பிறகு, ஸ்டாலினை பிரபலப்படுத்த டிவி-சீரியலிலும் நடிக்க வேண்டியதாயிற்று. ஆனால், அத்தகைய சினிமா-அரசியலைத்தான் திராவிடத் தலைவர்கள் எல்லோருமே செய்து வந்துள்ளனர்.

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், பெரியார்

கவர்ச்சி அரசியலில் உழலும் திராவிடக் கட்சிகள்: நேற்றைய திக, திமுக, அதிமுக, ஆனாலும், இன்றைய தேமுதிக முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், சினிமா நடிகர்கள்-நடிகைகள் தாம் உள்ளனர். இன்றைக்கு “கூத்தாடி” என்று யாராவது சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், சம்யம் வரும்போது, கருணாநிதி, ஜெயலலிதாவை சினிமாபை வைத்துக் கொண்டு சாடுவதில் தயங்குவதில்லை. தனது கைவரிசையை, “முரசொலியிலும்” அவ்வப்போது காட்டுவார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜவாழ்க்கையிலும் வசனம் பேசிக் கொண்டு, நடித்துக் கொண்டுதான் வருகின்றனர். சினிமாவில், ஓவ்வொருவருக்கும் ஒன்றிற்கு மேலாக ஹீரோயின்கள் இருப்பது போல, நிஜவாழ்விலும் மனைவி, துணைவி என்றெல்லாம் வகைப்படுத்தி வைத்துக் கொண்டுள்ளனர். குடும்ப வாழ்க்கையினை நடத்துகின்றனர். அவ்வகையில் பார்த்தால், பாமக ஆரம்பித்திலிருந்தே, சினிமா-அரசியலை எதிர்த்துள்ளது. திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்[2]. தமிழகத்தில் திராவிட கட்சிகள்தான் ஆடம்பரத்தை அரங்கேற்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசியலை புகுத்தி அதிகாரம் செய்கிறது. தமிழக மக்களுக்கு இலவசங்கள், மது, சினிமா இவை மூன்றும்தான் மக்களுக்கு தரப்பட்டுள்ளது[3].

சிவாஜி, பெரியார்

சிவாஜி, பெரியார்

இன்றைக்கு சோனியா காங்கிரஸ் நடத்தும் சினிமா அரசியல்: அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் தமிழகம், பீகார் மற்றும் புதுவை மாநிலங்களின் மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 20-1-2015 அன்று புதுவை சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 22-10-2015 அன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் மாநில மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, விஜயதாரணி, திருநாவுக்கரசர், யசோதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[4]. அரசியல்வாதிகள் சொல்லும் வார்த்தைகளை வைத்தே ஒரு வாரத்திற்கு டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கிண்டலடிப்பார்கள் நம் வலைஞர்கள். அதிகம் கிண்டலடிக்கப்படுவது விஜயகாந்த்தான். சிலகாலம் ஸ்டாலின் மாட்டினார். இன்று சிக்கியிருப்பது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். விடுவார்களா நம்மவர்கள் சும்மா புகுந்து விளையாடிவிட்டனர்.

சிவாஜி, கருணாநிதி

சிவாஜி, கருணாநிதி

தமிழக காங்கிரஸ் தலைவரின் நடிகையைப் பற்றி அழகு, இளமை வர்ணனை: சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வந்திருந்தார். அதில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் கலந்துகொண்டார். கூடவே, விஜயதாரணி, குஷ்பு ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய இளங்கோவன், “சினிமாவில் நக்மா, அவ்வளவு அழகாக தெரியவில்லை. ஆனால் நேரில், நல்ல அழகாகவும்; இளமையாகவும் இருக்கிறார். இதை நான் புகழ்ச்சிக்காகவோ, மிகைப்படுத்தியோ சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன், என்று கூறினார்[5]. நக்மா பேசுகையில், “அரசும், அமைச்சர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காமராஜர், கக்கன் போன்றோர், உதாரணமாக இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்த தமிழகத்தில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். கோஷ்டிகள் இல்லாத, காங்கிரசை வளர்க்க வேண்டும் என்றார்[6]. காங்கிரஸின் தலைவராக இருக்கின்றவர், சினிமா நடிகைகள் கட்சிக்குள் வர ஆரம்பித்தவுடன், ரசனையும் மாறிவிட்டது போலும்[7]. நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்[8], சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம் என்றெல்லாம் தலைப்பிட்டு, இதனை செய்தியாக வெளியிட்டிருப்பது காங்கிரஸுக்கு அழகா, அவமானமா என்று தெரியவில்லை.

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

குஷ்புவை அப்படி பார்ப்பது ஏனோ

திரிஷா இல்லைன்னா நயன்தாராவா, குஷ்பு இல்லைன்னா நக்மா: இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. விடுவார்களா நம்மவர்கள். சும்மா புகுந்து விளையாடிவிட்டனர். இதுநாள்வரை குஷ்புவை புகுந்த இளங்கோவன் இப்போது நக்மாவை புகழவே, திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படத்தை போட்டு கிண்டலடித்து வருகின்றனர்[9]. இதுதான் அழகுல மயங்குறதா என்று கிண்டலடித்துள்ள வலைஞர்கள் டுவிட்டரில் சும்மா சகட்டு மேனிக்கு கிண்டலடித்துள்ள வலைஞர்கள் மீம்ஸ் போட்டு கலக்கியுள்ளனர் என்று தமிழ்.ஒன்.இந்தியா எடுத்துக் காட்டுகிறது [10]. அரசியலின் ஒழுக்கம், நாணயம், முதலியவை இந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறதே என்று அத்தகைய வலைஞர்-மேதாவிகள் ஏன் கவலைப்படவில்லை என்றால், நிச்சயமாக, அத்தகைய வர்ணனைகளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்ரு தெரிகிறது. இதே, வெறெந்த பெண் அரசியல்வாதி நியமிக்கப்பட்டு, அவர் பதவியேற்று, விழாக்களில் கலந்து கொண்டால், இளங்க்கோவன் அல்லது வெறெந்த அரசியல்வாதியும் இவ்வாறு ரசித்து, வர்ணிப்பாரா என்று தெரியவில்லை. நடிகை என்பதினால் தான் அவ்வாறான விமர்சனம் வந்துள்ளது, அதனை தமிழக ரசிகர்கள் நசிக்கிறார்கள்.

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

விஜயதாரிணியை அப்படி பார்ப்பது ஏனோ

இளங்கோவன், நடிகை குஷ்பு, நக்மா உருவப்படங்கள் எரிப்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 67 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட 38 படகுகளை ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் குளக்கரை சாலையில் திரண்ட அவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்கள் தமிழக  காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோரின் உருவபடங்களையும் தீயிட்டு கொளுத்தினர்[11]. ஆக அந்த அளவுக்கு, இந்த நடிகைகளும் உயர்ந்து விட்டார்கள். நேற்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டி அளித்த இருவரும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தி பேசியதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்[12].

© வேதபிரகாஷ்

25-10-2015

[1] பூக்காரிபிள்ளையோ பிள்ளைசமையல்காரன், அணையாவிளக்கு என்ற படங்களில் மு. க. முத்து, எம்ஜியாரை காப்பியடித்து நடித்தார். எம்ஜியாரைப் போலவே மஞ்சுளாவை முதல் படத்திலேயே ஜோடியாக நடிக்க வைக்கப்பட்டார்.

[2]  தினமணி, திராவிட கட்சிகளுக்கு தெரிந்தது கவர்ச்சி அரசியல் மட்டும்தான்: ராமதாஸ், By Venkatesan Sr, சென்னை; First Published : 10 February 2013 03:02 PM IST.

[3] http://www.dinamani.com/latest_news/article1457932.ece

[4] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=153570

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சினிமாவைவிட நேரில்தான் நக்மா ரொம்ப அழகு: காங். தலைவர் இளங்கோவன் புகழாரம், Posted by: Veera Kumar, Published: Saturday, October 24, 2015, 12:37 [IST].

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nagma-looks-beautiful-congress-chief-elangovan-238332.html

[7]  தமிழ்.வெப்.துனியா, நக்மாவின் அழகை ரசித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2015 (15:15 IST)

[8] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/evks-talk-about-actress-nagma-115102300042_1.html

[9] தமிழ்.ஒன்.இந்தியா, நக்மா இல்லைன்னா குஷ்பு…. இளங்கோவனை கிண்டலடிக்கும் வலைஞர்கள், Posted by: Mayura Akilan, Updated: Saturday, October 24, 2015, 17:39 [IST].

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/social-networkers-critizes-evks-elangovan-238365.html

[11] தினமணி, குஷ்பு, நக்மா உருவப்படம் எரிப்பு: தமிழர் முன்னேற்றப் படையினர் போராட்டம், By DN, சென்னை,First Published : 23 October 2015 05:41 PM IST.

[12]http://www.dinamani.com/tamilnadu/2015/10/23/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/article3093693.ece