Posts Tagged ‘வயிறு’

செக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம்! நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு!

ஒக்ரோபர் 8, 2013

செக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம்!  நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு!

Nazriy-complaint-letter

மதவாதம் மிக்க வாதத்தை வைக்கும் இஸ்லாமிய நடிகை: நஸ்ரியா நசீமின் குற்றச்சாட்டு தீவிரமாகி விட்டது. ஏதோ சினிமாவில் காட்டக் கூடாததைக் காட்டிவிட்டது போல முதலில் சாதாரணமான விசயம் போலிருந்தது[1]. படிப்பை விட்டு நடிக்க வந்துள்ள, இளமையான நடிகை என்று பார்த்தால், விசயம் திசை மாறுகிறது[2]. ஆனால், இப்பொழுது விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, நஸ்ரியா நசீம் திடீரென்று தான் முஸ்லிம், கேரளாவில் பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள், மலையாளத்தில் நல்ல டீசன்டான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன், என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனபோது, விசயம் ஏதோ திசைமாறுவது போலத் தெரிகிறது. தமிழில் டீசன்ஸி இல்லாத வேடங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார்! தமிழர்கள் தாம் பதி சொல்லியாகி வேண்டும்!

Nazriy-complaint-letter2

நஸ்ரியா நசீம் கொடுத்துள்ள புகார் கடிதம்: என்னையும் என் குடும்பத்தாரையும் கேவலமாகப் பேசினார் இயக்குநர் சற்குணம் என்று நடிகை நஸ்ரியா கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

 “நான் கேரளாவில் பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள். தமிழ்- மலையாளத்தில் நல்ல டீசன்டான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன்.தமிழில் தற்போது நய்யாண்டி என்ற படத்தில் நடித்துள்ளேன். அந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது.இந்தப் படத்தில் நான் நடிக்காத ஒரு காட்சி, நான் நடித்தது போல எடுக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரை வைத்து எடுத்த அந்தக் காட்சியை படத்தின் ட்ரைலரில் சேர்த்து யு ட்யூபில் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

படப்பிடிப்பின்போது, குறிப்பிட்ட அந்தக் காட்சி எனக்கும் என் குடும்பத்துக்கும் என் மதத்துக்கும் சரியாக வராது என்று தெரிந்ததால் அந்தக் காட்சியில் நான் நடிக்க மறுத்துவிட்டேன்.

இது தொடர்பாக எனக்கும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்து, முடிவில் அந்தக் காட்சி இல்லாமலேயே பாடலை முடிக்க ஒப்புக் கொண்டார்கள்.

ட்ரைலரைப் பார்த்த பிறகு இயக்குநர் சற்குணத்துக்கு போன் செய்து ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்டேன். உடனே அவர் என்னை மோசமாகத் திட்டினார். என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டியதோடு, நான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார். முதல்வர் அலுவலகத்தில் எனக்கு எதிராகப் புகார் தருவதாகக் கூறி மிரட்டினார்…

இதுகுறித்து தயாரிப்பாளர் கதிரேசனைத் தொடர்பு கொண்ட போது அவர் வேண்டுமென்றே தவிர்த்தார்.

கமிஷனர் அவர்களே, எனக்கும், என் குடும்பத்துக்கும், நான் சார்ந்த மதத்துக்கும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!”,

இவ்வாறு நஸ்ரியா புகார் செய்துள்ளார்[3].

Nazriy-complaint-letter3

நக்கிரனின்கமண்ட்[4]: “இப்படி ஊடகம் மூலமாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்த இருவரில் முதலாவதாக நஸ்ரியா கமிஷ்னர் அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். நஸ்ரியாவிற்காக கமிஷனர் அலுவலகத்தில் பல கேமராக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனகமிஷனர் அலுவலகத்திற்குள் சென்று புகார் கொடுத்துவிட்டு திரும்பி வந்த நஸ்ரியாவிடம் பேட்டியெடுக்க திரண்டிருந்த மீடியாவை கண்டுகொள்ளாமல் காரில் ஏறிச் சென்றுவிட்டார் நஸ்ரியாநஸ்ரியாவின் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என்று இயக்குனர் கூறியிருந்தாலும் இப்போது பப்ளிசிட்டியாகிக்கிடப்பது நய்யாண்டி திரைப்படமும், நஸ்ரியாவின் இடுப்பும் தான்”. இதற்கும் நஸ்ரியா நசீம் எதிர்ப்புத் தெரிவிப்பாரா, புகார் அளிப்பாரா என்று பார்க்க வேண்டும்!

India Elections

சினிமாக்களில் மதவாதம், செக்யூலரிஸம் முதலியன: சமீப காலத்தில் தான் இத்தகைய செக்யூலரிஸவாதங்களில் திரையுலகம் சிக்கியுள்ளது. அதற்கு கமல் ஹஸன் ஏற்கெனவே பலமுறை, மூக்கை நுழைத்து வியாக்கியானம் செய்துள்ளதால், அந்த உலக மகா நாயகனிமன் குட்டு வெளிப்பட்டது. “தசாவதாரம் X விஸ்வரூபம்” என்று அலசினால் அது நன்றாகவே விரியும். முன்னர், ராமஜென்மபூமி விவகாரத்தில் அதிகமாகவே உளறியுள்ளார். ஆனால், மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “விஸ்வரூபம்” கமலுக்கு, இஸ்லாமிய அடிப்படைவாதம் எப்படி வேலை செய்யும் என்று எடுத்துக் காட்டியது. இருப்பினும் தேவையில்லாமல், ஊரைவிட்டு ஓடிவிடுவேன் போன்ற பேச்சுகளை பேசி, அதனை மறைக்க முயற்சி ச்ய்வது வெளிப்பட்டது. இப்பொழுது, இந்த அம்மணி பேசுவது, அசாருத்தீன் பேசியது போலவே உள்ளது. நன்றாக சூதாட்டத்தில் சிக்கி தடை விதித்த போது, “நான் முஸ்லிம் என்றதால் தான், இப்படி செய்கிறார்கள்”, என்று ஒரு இஸ்லாமிய குண்டைப் போட்டார்! அப்பொழுதுதான், ரசிகர்கள் அவரது மதவாதத்தைப் புரிந்து கொண்டனர். இப்பொழுது, இந்த அம்மணி அதே பாணியில் பேசி, எழுதியுள்ளது அதையேத்தான் காட்டுகிறது.

Photographing faceless

முஸ்லிம் பெண்கள் நடிக்க வரக்கூடாது அல்லது முஸ்லிம் நடிகைகளை வைத்து படம் எடுக்கக் கூடாது: சில நாட்கள் முன்னர்தான், ரோஸ்லின் கான் என்ற முஸ்லிம் நடிகை விசயத்தில், அவர் எவ்வளவு தாராளமாக இருக்கிறார், விளம்பரத்திற்காக, தன்னுடைய இணைதளத்தில் புகைப் படங்களை வெளியிட்டுள்ளார் என்றேல்லாம் தெரிய வந்தது[5]. முன்னர் சனாகான் என்ற முஸ்லிம் நடிகையும் ஒரு தினுசாகப் பேசியிருக்கிறார்[6]. எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை, என்றெல்லாம் பேசினார்[7]. இவரும் கேளாவைச் சேர்ந்த முஸ்லிம்தான். பிறகு மும்பை முஸ்லிம் நடிகை ஒருமாதிரி, கேரள முஸ்லிம் நடிகை வேறுமாதிர் இருப்பார்கள் போலிருக்கிறது. இனி, முஸ்லிம்களை வைத்துக் கொண்டு சினிமா எடுக்கும், தயாரிக்கும் மக்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது! இல்லையென்றால், கமல் ஹஸனைப் போல[8] எல்லோரும், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதுதான்! இல்லை, ரஜினி போன்று சித்தாந்தம் பேசி[9] காலம் தள்ள வேண்டும்!

Photographing faceless woman

© வேதபிரகாஷ்

08-10-2013


தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை காட்டி விட்டார்கள் – நடிகை நஸ்ரியா நசீம் புகார்!

ஒக்ரோபர் 8, 2013

தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை காட்டி விட்டார்கள் – நடிகை நஸ்ரியா நசீம் புகார்!

இளம் பெண்கள் நடிக்க வருவது ஏன்?: சினிமாவில் நடிப்பிற்காக நடிகைகள் வருகிறார்கள், பெண்களாக இளம் வயதில் வருகிறார்கள் எனும்போது, அக்கால பருவத்தை, அப்பருவத்தின் உருவத்தை, உருவத்தின் அமைப்பை, அமைப்பின் தன்மையைப் பயன் படுத்திக் கொண்டுதான் நடித்து பணம், புகழ் சம்பாதிக்க வருகிறார்கள். இல்லையென்றால் படிக்கும் வயதில், படித்துக் கொண்டிருக்கும் போதே, படிப்பை விட்டு நடிக்க எந்த இளம் பெண்ணும் வரமாட்டாள். ஆண் நடிகர்கள் சண்டை காட்சிகளில், அபாயகரமான காட்சிகளில் மறுக்கும் போது, பயப்படும் போது, “டூப்” போட்டு நடிக்க வைப்பது காட்சிகளை விறுவிறுப்பாகக் காட்டுவது என்பது நூறாண்டுகளாக நடந்து வருகின்றது. பெண்களும் அவ்வாறே செய்து வந்தனர். முன்பெல்லாம் கற்பழிப்பு, நடனம் போன்ற காட்சிகளில் “டூப்” போடுவார்கள். இதற்காக ஒரு நடிக-நடிகைப் பட்டாளமே இருந்து வருகிறது.

டூப்போடக் கூடாது, “டப்பிங் வாய்ஸ்”, பின்னணி பாடகர்கள் தேவையில்லை என்று சொல்வார்களா?: சொந்த குரலில் பேச முடியாத நடிகைகள் அதிகம். பல மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பேச முடியாத நிலை. எனவே “வாய்ஸ் டப்பிங்” என்பது சாதாரணமாகி விட்டது. இல்லை, “டூப்” போடக் கூடாது, “டப்பிங் வாய்ஸ்” தேவையில்லை, நானே வசனம் பேசுகிறேன் என்று அந்நடிகைகள் ரோஷத்துடன் முன்வருவதில்லை. “எடிட்டிங்”கிலேயே, அம்முறை பல காரணங்களால் கையாளப்படுகிறது. பாடுவதைப் பற்றி கெட்கவே வேண்டாம். அக்காலத்தில் தான், பாடுபவர்களுக்குத் தான் நடிக்க சந்தர்ப்பம் என்று இருந்தது. இன்றோ, நடிகைகளுக்கு காட்டத் தெரிந்தால் தான், நடிக்க சந்தர்ப்பம் என்றுள்ளது. காட்ட முடியாது என்றால், இக்காலத்தில், எந்த தயாரிப்பாளர், இயக்குனர், ஏன் நடிகரே ஒப்புக் கொள்ளமாட்டார். இவ்விசயத்தில் “நான் – வெஜ்” கேடகரிகள் தாம் அதிகம்!

தொப்புளைகாட்டுவதுபோன்றகவர்ச்சிகாட்சியைகாட்டிவிட்டார்கள்– (படிப்பாநடிப்பா): நான் நடிப்பது போல, வேறு நடிகையை பயன்படுத்தி, தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை பதிவு செய்து, “நய்யாண்டி’ பட விளம்பர, “டிரெய்லர்’ வெளியிட்டு விட்டனர்,” என, நடிகர் சங்கத்தில், நடிகை நஸ்ரியா நசீம் புகார் கொடுத்துள்ளார்[1] என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது. எதையதையோ காட்டி நடிக்கும் போது, ஒரு நடிகை இப்படி புகார் செய்கிறாரா என்று வினோதமாக இருந்தது. இவரும் படிப்பை விட்டுவிட்டுத்தான் நடிக்க வந்துள்ளார். அந்த ஆசை இல்லையென்றால், பி.காம் முடித்திருப்பாரே? படிப்புத் தேவையில்லை என்பதால் தானே, “காமாக” நடிக்க வந்திருக்கிறார்!

தமிழகத்திற்குமலையாளநடிகைகள்இறக்குமதி: மலையாள நடிகை நஸ்ரியா நசீம், “நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  கேரளத்தைச் சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை. தமிழுக்காக உயிர் விடும் கூட்டங்கள், வந்தேறிகள் என்று ஓலமிடும் சித்தாந்திகள், இதனை ஏன் கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை. தமிழகத்தில் இத்தகைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே செய்தியாக உள்ளது. முன்பெல்லாம் (30-50 வருடங்களுக்கு முன்னால் கூட) ஒரு குறிப்பிட்ட நடிகையின் நடனம் உள்ளது என்பதற்காகவே, தமிழக ரசிகர்கள் சினிமா பார்ப்பதுண்டு. வீடியோ, கம்ப்யூட்டர் எல்லாம் இல்லாததால், தியேட்டருக்குச் சென்றே பலமுறை பார்ப்பார்கள்.

ராஜாராணிக்குப்பிறகு, “நய்யாண்டி: ரசிகர்களிடம் வரவேற்பு இருந்ததால், “ராஜா ராணி, நய்யாண்டி’ படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் இத்தகைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே செய்தியாக உள்ளது. இதில், “ராஜா ராணி’ படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. “நய்யாண்டி’ படம் வரும், 11ம் தேதி திரையிடப்பட உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ளார்.

கவர்ச்சியாக, தொப்புள்தெரிவதுபோலநடித்தகாட்சி: தமிழக சினிமா வல்லுனர்களின் ரசனையே அலாதியானது. முன்பு ஒரு நடிகையின் தொப்புளைச் சுற்றி பொம்மரம் விட்டு காட்டியதாக படம் வெளியானது. அதையெல்லாம், தமிழனங்கள் சுயமரியாதையோடு பார்த்து ரசித்துள்ளன. இப்பொழுது, “நய்யாண்டி’ படத்திற்காக, “யூ டியூபில்’ வெளியிடப்பட்டுள்ள விளம்பர, “டிரெய்லரில்’ நடிகை நஸ்ரியா நசீம், கவர்ச்சியாக, தொப்புள் தெரிவது போல நடித்த காட்சியும் சேர்க்கப்பட்டிருந்தது. இக்காட்சியில், நஸ்ரியா நடிக்கவில்லை; வேறு நடிகை ஒருவரை, இயக்குனர் நடிக்க வைத்து, “டிரெய்லர்’ வெளியிட்டு, மோசடி செய்து விட்டதாக, நடிகை நஸ்ரியா புலம்புவதாக, தகவல் வெளியானது[2]. நடிகையின் சுயமரியாதை பெரியதா, தமிழக ரசிகர்களின் உரிமை பெரியதா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம், தமிழர்களுக்கு வந்து விட்டது!

என்அனுமதிபெறாமல்இப்படியொருகாட்சியில்என்னைக்காட்டியிருப்பதுஎன்னைஇழிவுப்படுத்தும்செயலாகும்: இதுகுறித்து, நஸ்ரியாவிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது: “பாடல் காட்சியில், கிளாமராக நடிக்க கேட்டனர். நான் முடியாது என, தெரிவித்து விட்டேன். ஆனால், நான் கிளாமராக நடிப்பது போன்ற காட்சியை, “யூ டியூபில்விளம்பர டிரெய்லர் வெளியிட்டு உள்ளனர். இது ஒப்பந்தத்தை மீறிய செயல்
இதுகுறித்து, இயக்குனர் சற்குணத்திடம் கேட்டதற்கு, “ஒப்பந்தப்படி நீங்கள் நடிக்க முடியாது என, கூறியதால், வேறு நடிகையை வைத்து படமாக்கினோம்என, தெரிவித்தார். இந்த மோசடி குறித்து, நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்”, இவ்வாறு, நஸ்ரியா தெரிவித்தார். சினிமாவில் இப்படியெல்லாம் ஒப்பந்தம் போட்டிருந்தால், தமிழகம் உருப்பட்டிருக்குமே? எத்தனையோ இளைஞர்கள் தப்பித்திருப்பார்களே? எத்தனையோ இளைஞிகளின் கற்பு காப்பாற்றப் பட்டிருக்குமே?

நடிகர்சங்கத்தில்நீதிகிடைக்காதபட்சத்தில்நீதிமன்றத்தில்வழக்குதொடரவும்முடிவுசெய்துள்ளேன்: “என் அனுமதி பெறாமல் இப்படியொரு காட்சியில் என்னைக் காட்டியிருப்பது என்னை இழிவுப்படுத்தும் செயலாகும். திரைத்துறையில் எனக்கென ஒரு நற்பெயர் உள்ளது. அதை களங்கப்படுத்தும் விதமாக இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த காட்சிகளை நீக்க உத்தரவிடும் படி கேட்டுக் கொள்கிறேன். என் அனுமதியுடன் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே அதில் இடம் பெறும் என எதிர்பார்க்கிறேன். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். அங்கு இதற்கான நீதி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குதொடரவும் முடிவு செய்துள்ளேன்”, என்றார்[3]. பேஸ்புக்கிலும் இவ்வாறே உள்ளது[4]. நஸ்ரியா தரப்பிலிருந்து வாய் மொழி புகார் மட்டுமே வந்துள்ளதாகவும், மனுவாக புகார் பெறப்பட்டவுடன் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[5]. இதுகுறித்து, இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, இருவரின் மொபைல் போன்களும் “சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தன.

நஸ்ரியாநசீம்  மற்றும் தஸ்லிமா நஸ்.ரீன் பிரச்சினைகள்: இந்தியாவில் இம்மாதிரியான பெயர்கள் கொண்ட பெண்களால் அடிக்கடி பிரச்சினைகள் வருகின்றன. தஸ்லிமா நஸ்.ரீன் பெயரை, நஸ்லிமா தஸ்.ரீன் என்றெல்லாம் போட்டு குழப்பினார்கள். நல்லவேளை, இங்கு நச்ரிமா நஸிம் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அதற்கும் ஒரு புகார் எழுந்திருக்கும். இருவரும் முஸ்லிம்கள் என்று தெரிய வருகிறது. ஒருவேளை, கூடிய சிக்கிரத்தில், முஸ்லிம் பெண்கள் நடிக்கலாமா, கூடாதா என்று கூட விவாதம் வரலாம். சானியா மிர்ஸாவை, குட்டைப் பாவாடைப் போட்டுக் கொண்டு விளையாடக் கூடாது என்றெல்லாம் மிரட்டப் பட்டார். இனி முஸ்லிம் நடிகைகள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம். தஸ்லிமா நஸ்.ரீனின் புடவை, தலைமுடி பிடித்து இழுக்கப்பட்டபோது, தாக்கப் பட்டபோது, யாரும் கண்டுகொள்ளவில்லை. எட்ந்த தமிழனும் வாயைத் திறக்கவில்லை. இனி தொப்புள் பிரச்சினை என்னவாகும் என்று பார்ப்போம்!

© வேதபிரகாஷ்

08-10-2013


[4] On her Facebook page, the actress has posted likewise – I have complained against the producer/director of Naiyaandi to Nadigar Sangham for cheating. They have used a body double to shoot the below scene without my permission. This is against contractual agreements. We will take legal action.

https://www.facebook.com/Nazriya4u