நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? சபீதா ராய்–சுகுமாறன் பிரச்சினை – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (1)
பெண்கள் சினிமா, டிவி, விளம்பரம், மாடலிங் முதலியவற்றில் நடிக்க துணிந்து வந்து விட்டது: கடந்த மூன்று நாட்களில் [27-04-2017 முதல் 19-04-2017 வரை] பல நடிகைகளை சம்பந்தப்படுத்துள்ள செய்திகள், திகைப்படைய வைப்பதாக உள்ளது. இன்றைக்கு படிக்கின்ற-படிக்காத, ஏழை-பணக்கார, என்ற வெவ்வேறான நிலைகளில் உள்ள பெண்கள் நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, சினிமா, பாடலிங், விளம்பரம் போன்றவற்றில் தோன்ற, நடிக்க தயாராகி விட்டார்கள். காசுக்காக இன்றைக்கு ஆனானப்பட்ட கமல் ஹஸன் போன்ற நடிகர்களே, விளம்பரத்தில் கூட நடிக்க தயாராகி விட்டார்கள்[1]. தாத்தாவாகி விட்ட அமிதாப் பச்சன் போன்றோரை சொல்லவேண்டாம்[2]. ஆண்களே இப்படியென்றால், பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெண்கள் என்று வரும் போது, நிச்சயமாக கேமரா முன்னால் வரும் போது, பலவிதங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. 1940-50களில் போல எல்லாவற்றையும் மூடிக் கொண்டு விளம்பரத்தில் கூட நடிக்க முடியாது. “காண்டம்” / ஆணுறை விளம்பரங்களில் சன்னி லியோனை மிஞ்சமுடியாது எனலாம், மிஞ்சினால், போர்னோகிராபியாகி விடும்[3]. உடையின் அளவுகள் நிர்ணயிக்கும் போது, சினிமா நடிகையின், மாடலின், விளம்பர நடிகையின் உடல், மார்பு, இடுப்பு, கை-கால்கள் எந்த அளவுக்குக் காட்டவேண்டும் என்ற நியதி அறியப்படுகிறது. பெண்களும் ஒப்புக் கொண்டு தயாராகித் தான் அவ்வாறே காட்ட ஆரம்பிக்கிறார்கள்.
கேமராவுக்கு முன்னால் செய்ய வேண்டிய சரசம், பின்னால் வேறு மாதிரியாவது நிதர்சனமாகவே இருக்கிறது: அந்நிலையில், மேக்கப்-மேன் தொட்டான், கேமரா-மேன் அட்ஜெஸ்ட் பண்ணான், இயக்குனர் தட்டிக் கொடுத்தார், தயாரிப்பாளர் இடுப்பை வளைத்து அணைத்து பாராட்டினார்…..என்றெல்லாம் ஏற்படும் போது, ஒன்றும் சொல்வதற்கில்லை. கணவன், தந்தை, சகோதரன் கூட ஒன்றும் கேட்க முடியாது. இந்த எல்லைகளையும் மீறி விவரங்கள் நடக்கும் என்பதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. எங்கோ தொலைவில், ஏன் அயல்நாடுகளில், ஓட்டல் அறைகளில் சூட்டிங் நடக்கும் போது, ஒரே ஓட்டலில் எல்லோரும் தங்கியிருக்கும் போது, அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருக்கும் போது, இப்படி – அப்படி நடந்தது என்றாலும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இப்பொழுதுதான், “சினிமாவில் நடிக்க, தொடர்ந்து நடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்கைக்கு வா”, என்று அவர் அழைத்தார், இவர் அழைத்தார் என்று சில நடிகைகள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனால், பல நடிககள் சொல்லாமல் இருக்கிறார்கள். ஆக, இதெல்லாம் தொழியில் சகஜமப்பா, என்று சொல்லக் கூடிய நிலையாகி விட்டது.
27-04-2017 அன்று நள்ளிரவில் நடிகை சபீதாராய் மேனஜரான சுகுமாறன் தெருவில் அடித்துக் கொண்டு சண்டை போட்டனர்: 28-04-2017 அன்று இணைதளங்களில் இவ்வாறான விவரங்கள் வெளியாகின: “நடிகை ராதிகா தயாரித்து நடித்து வரும் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகையின், கள்ளக்காதல் அம்பலமாகியுள்ளது[4]. அந்த தொடரில் ஒரு முக்கிய வில்லி வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சபீதாராய். அதேபோல், ராதிகாவின் ரேடான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மேனஜரான சுகுமாறன். இவர், சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் 27-04-2017 அன்று நள்ளிரவில் அவரோடு, நடிகை சபீதாராய் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். “என்னை நீதானே வர சொன்னாய்.. பணம் கொடுக்கிறேன் எனக்கூறினாயே.. கொடு….”, எனக்கூறி அவரிடம் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் சுகுமாறனை தாக்கவும் செய்தார். அவரின் சட்டையை கிழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சுகுமாறன், பதிலுக்கு அவரை தாக்கினார்”. இப்படியெல்லாம் விவரித்து விட்டு, “அதாவது, சுகுமாறனின் மனைவி வெளியூர் சென்று விட்டதால், நடிகை சபீதாராயை வீட்டிற்கு வரவழைத்து கடந்த இரண்டு நாட்களாக உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், அவருக்கு கொடுப்பதாக கூறிய பணத்தை தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சபீதாராய், சுகுமாறனிடம் சண்டையிட்டது தெரிய வந்துள்ளது”, என்று தமிழ்.வெப்துனியா முடித்துள்ளது[5]. வாணி ராணி தொடரில் கூட இருந்தே குழி பறிப்பது, மற்றவர்களை பற்றி போட்டுக் கொடுப்பது, குழந்தை கடத்தலில் ஈடுபடுவது போன்ற கதாபாத்திரத்தில் சபீதாராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, என்றும் எடுத்துக் காட்டுகிறது. இந்த விவகாரம் சின்னத்திரை நடிகர், நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. இணைதளத்தில் இந்த வீடியோவும் உள்ளது[7].
விவகாரம் வெளிவந்தவுடன் விளக்கம் கொடுத்தது [28-04-2017]: சுகுமாறனின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தியதாகவும், பணத்தகராறு ஏற்பட்டதையடுத்து சுகுமாறன் சபீதாவை வெளியேற்றியதையடுத்து மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தத் தகவல்களை மறுத்துள்ள நடிகை சபீதா ராய், சுகுமாறன் தனக்கு தந்தை போன்றவர் என்றும், தான் கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தரக் கேட்ட போதே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தமிழ் ஒன் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்[8]. தாங்கள் சண்டையிட்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து அதில் சில பகுதிகளை எடிட் செய்து சுகுமாறனின் வீட்டருகே வசிக்கும் சில வெளியிட்ட விஷம வீடியோவால் தனது வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டதாகவும் கதறுகிறார் சபீதா[9]. தனக்கு நான்கு மாதத்தில் திருமணமாக உள்ள நிலையில் ஊடகங்களில் வெளியான செய்தியால் மிகுந்த மனஉளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் உண்மையை நிரூபிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார். பணத்தை தருவதாக சுகுமாறன் ஒப்பு கொண்டதாகவும் தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ள சபீதா, தாங்கள் இருவரும் சமாதானம் அடைந்து விட்டதாகவும் கூறுகிறார். சண்டை வீடியோ வெளியானதால் தனது திரைத்துறை வாழ்வு பாதிக்கப்கட்டுள்ளதோடு, ராடன் மீடியா நிறுவனமும் பணிநீக்கம் செய்து விட்டதால் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாக கலங்குகிறார் சபீதா.
ராடன் மீடியா நிறுவனத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ரெயிட்[10]: ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறு வந்த நிலையில், வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியது. அதன்படி, 11-04-2017 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆஜரானார்கள். அவர்களிடம் நீண்ட நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில், சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12-04-2017 அன்று பிற்பகல் சோதனையைத் தொடங்கினர்[11]. சென்னை தி.நகரில் உள்ள ராடன் மீடியா அலுவலகத்தில் இந்த சோதனை நடந்தது. சரத்குமாரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறிய நிலையில், ராதிகாவின் நிறுவனத்தின் சோதனை நடந்தது. பலதார திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியரின் தனிப்பட்ட வாழ்க்கையினை இங்கு விமர்சிக்க வேண்டாம், என்றாலும், அவர்களது கம்பெனியில் நடப்பதும் சரியாக இல்லை என்று தெரிகிறது. இந்த சமிதா-சுகுமாறன் ஜோடியும் இப்பொழுது “பண விவகாரம்” தான் சண்டைக்குக் காரணம் என்றதால், வேலையிலிருந்து நீக்கி விட்டார்கள் போலும்!
© வேதபிரகாஷ்
03-05-2017
[1] தீபாவளி போத்தீஸ் விளம்பரத்தில் நடித்தது, கோடிகளை வாங்கியது, தானமாக கொடுத்தேன் என்றது, இல்லை என்று பிறகு மறுத்தது முதலிய விவகாரங்கள்!
[2] காசிருந்தும், புகழுக்காக நடிப்பது என்பதைத் தவிர வேற்ந்த கொள்கையும் இதில் இல்லை. மோடிக்கு வேண்டுமானால் இலவசமாக நடித்து கொடுத்திருக்கலாம், ஆனால், மற்ற விளம்பரங்களுக்கு காசு வாங்கியுள்ளார்.
[3] இந்த விளம்பரத்தைக் கூட எதிர்க்கத்தான் செய்தனர், ஆனால், காண்டம் தயாரிப்பு, விற்பனை, உபயோகம் முதலியவை நின்றுவிடவில்லை.
[4] இப்பொழுது “கள்ளக்காதல்” என்றால், சேர்ந்து வாழ்வது, “கணவன் – மனைவி” போல் வாழ்வது போன்ற விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன. இதற்கும் உலக நாயகன் கமல் ஹஸன் தான் உதாரணமாக திகழ்ந்துள்ளார்.
[5] தமிழ்.வெப்துனியா, உல்லாசமாக இருந்தாயே..பணத்தைக் கொடு – வாணி ராணி நடிகை போட்ட சண்டை(வீடியோ), வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (11:06 IST).
[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tv-actres-fight-with-manager-in-mid-night-video-117042800017_1.html
[7] https://www.youtube.com/watch?v=lL80OjUiVYs
[8] தமிழ்.ஒன்.இந்தியா, நள்ளிரவில் நடுரோட்டில் குடுமிபிடி சண்டை… நடந்தது இதுதானாம்! வாணி ராணி நடிகை விளக்கம்!, By: Gajalakshmi, Updated: Saturday, April 29, 2017, 15:31 [IST]
[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/vani-rani-serial-actress-sabitta-roi-explains-that-the-deal-281267.html
[10] மாலைமலர், ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை, பதிவு: ஏப்ரல் 11, 2017 14:52; மாற்றம்: ஏப்ரல் 12, 2017 08:32
[11] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/11145215/1079364/Income-Tax-raid-Radaan-Media-office.vpf