ஜி.எஸ்.டி.வரிவிகிதத்தைக் குறைக்காவிட்டால், நடிப்புத் தொழிலை விட்டுவிடுவேன் என்று மிரட்டும் உலகநாயனும், பாவத்தொழிலான சினிமாத் தொழிலும், வரிசெலுத்த வேண்டும் என்ற தார்மீகமும் (1)!
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால், தமிழக நடிகர்-நடிகையரை வைத்தே, ஜி.எஸ்.டி- விளம்பர குறும்படத்தை விழிப்புணர்விற்காக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இப்பொழுது அவர்களே எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது மறைமுக வரி மற்றும் நுகர்வோரிடத்திலிருந்து வசூலிக்கப் படுகிறது, என்ற நிலையில், இவர்கள் ஏன் இதனை எதிர்க்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது. மேலும், திரைப்படம் எடுக்க உபயோகிக்கும் உட்பொருட்கள் [Input credit] மற்றும் சேவைகளின் மீதான வரியை [input service credit] வைப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதனை மறந்து, மறைத்து இவர்கள் பேசுவதும் தெரிகிறது. உதாரணத்திற்கு இவர்கள் ரூ.100/- க்கு ரூ.28/- கட்ட வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.20 அல்லது 25 வரை, அல்லது 15 முதல் 20 வரை கிரெடிட் கிடைக்கும் போது, அவற்றை வரவு வைத்துக் கொள்ளும் போது, ரூ.5 / 3 அல்லது ரூ.13 / 8 தான் கட்டவேண்டியிருக்கும். அதாவது, 28% கட்டியது போலக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயத்தினால், ரூ.100/- என்பதனை குறைக்கப் போவதில்லை, அதாவது, அதனை தங்களது லாபவிகிதத்தில் [Profit margin] அடக்கி விடுவர்,
சினிமா படங்கள் மீது 28 சதவீத வரி: இந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1-ந் தேதி 2017 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது[1]. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்[2]. இதைத் தொடர்ந்து மற்ற மாநில சினிமா துறையினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
28% வரி சினிமாவுக்கு பெரிய தண்டனை: பேட்டியின் போது கமல் ஹஸன் கூறியதாவது: “சினிமாவுக்கு 28 சதவீத வரி விதித்து இருப்பது திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வரியை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த வரி விதிப்பு சினிமா துறைக்கு பெரிய தண்டனையாக இருக்கும். இது எங்களால் கொடுக்க இயலாத வரிச் சுமை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமாவில் திருட்டு விசிடி புழக்கம் அதிகரிக்கும்”.
பல முதல்–அமைச்சர்களை சினிமா துறை தந்து இருக்கிறது. எனவே இந்த துறையை பாவச்செயல் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சினிமா என்பது சூதாட்டம் அல்ல. சமுதாயத்துக்கு முக்கியமான கலை. இதை தவறாக பயன் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சரியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். |
அதனால், வரிகுறைப்பு ஏன் செய்யப்பட வேண்டும்? அதிகாரம், பணம் உள்ளவர்கள் கேட்கக் கூடது அல்லவே? நிச்சயமாக பாவச்செயல்களில் சினிமா ஈடுபட்டுள்ளது என்பதை நடிகைகளே சாட்சியாக இருக்கிறார்கள். மகாபாரதமே அப்படி-இப்படி என்று பேசியபோது, இது நிச்சயமாக சூதாட்டம் தான். |
இந்தி படங்கள் வேறு, பிராந்திய மொழிகள் வேறுறூலக நாகன் தொடர்கிறார், “ஹாலிவுட் படங்கள், இந்தி படங்கள், பிராந்திய மொழி படங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது முறையல்ல. ஹாலிவுட், இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களுக்கு வரிவிதித்து இருப்பது எந்த வகையில் நியாயம். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களையும், இந்திய படங்களையும் ஒரே அடிப்படையில் வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?
அதேபோல் இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்தி பேசும் மக்களுக்காக எடுக்கும் இந்தி படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் ஒரே வரி என்பது எந்த விதத்தில் நியாயம்?[3] நான் இந்தி படங்களுக்கு எதிராக பேசவில்லை. இந்தி படங்களுக்கான சந்தையும், பிராந்திய மொழி படங்களுக்கான சந்தையும் வெவ்வேறானவை. இந்தியாவில் வருடத்துக்கு 2,100 படங்கள் தயாராகின்றன. இதில் 300 படங்கள் மட்டுமே இந்தி படங்கள். மற்றவை பிராந்திய மொழி படங்கள். |
இப்படியெல்லாம் பொய் பேசுவதிலும் உலக நாயகன், கைதேர்ந்தவனாகி விட்டது வியப்புதான். இந்தி படங்களில் நடிக்காதவனோ, தேசிய விருது வாங்காதவனோ பேசினால் பரவாயில்லை, ஆனால், கமல் இப்படி பேசுவது, பச்சைப் புளுகுதான். பிராந்திய மொழிகளில் எடுக்கப் பட்டாலும், அவை மற்ற மொழிகளில் டப்பிங் அல்லது எடுக்கும் போதே, அவ்வாறு எடுக்கின்றனர். கமலின் படங்களும், இந்தியில் அவ்வாறு வெளியானது தெரிந்த விசயமே. மேலும், அரசு தனித்தனியாகத்தான் விருதும் கொடுக்கிறது. |
ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் அங்கு சினிமா தொழில் நலிந்து படங்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது”[4].
சினிமாவை விட்டு விலகல் – மிரட்டும் கமல் ஹஸன்: கமல் தொடர்ந்து சொன்னது,
“பிராந்திய மொழி படங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்[5]. வரிச்சுமையை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்[6]. |
ஏதோ தத்துவம் போன்று பேசி, வியாபாரத்தை, குறிப்பாக லாபத்தைப் பெருக்கி, சாதாரண மக்களை கொள்ளையடிக்க நடிக்கும் போலித்தனம் தான் இப்பேச்சில் புலப்படுகிறது. இவனுக்கே வேலை இல்லாமல் போய் விடுமாம்! நல்ல தமாஷாதான்! அப்பொழுது, தான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படுமாம்!! என்ன, இப்பொழுது, என்னமோ இவர் நடித்து படங்கள் வரவில்லை என்றால், பொது மக்களுக்கு குடியா முழுகி போய் விடும்? காசுதான் மிச்சமாகும். |
அதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க் கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும். மேலும் இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, பல மொழி,பல கலாச்சாரம், பல வழிபட்டு முறைகள், பலவிதமான மனிதர்கள் வாழும் நாடு[7]. இங்கு ஒற்றை கலாச்சாரம் என்பதை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்[8].” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
© வேதபிரகாஷ்
04-06-2017
[1] சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு “சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்”
[2] http://www.dailythanthi.com/News/State/2017/06/03001106/Service-Tax-Kamal-Hassan-strongly-opposed.vpf
[3] தி.இந்து, ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்: கமல்ஹாசன் ஆதங்கம், Published: June 3, 2017 08:22 ISTUpdated: June 3, 2017 08:22 IST
[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9718870.ece
[5] விகடன், சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்..!’ – கமல், Posted Date : 19:20 (02/06/2017); Last updated : 19:42 (02/06/2017)
[6] http://www.vikatan.com/news/cinema/91172-may-quit-from-cine-industry-says-kamalhassan.html
[7] என்.டி.டிவி, சினிமாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் – கமல்ஹாசன் உருக்கமான பேட்டி, Nabil Ahamed | June 02, 2017 22:30 IST
[8] http://movies.ndtv.com/tamil/kollywood/dont-make-us-move-away-from-cinema-kamal-haasan-opens-up-1707323