Posts Tagged ‘வேட்டையாடு விளையாடு’

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (3)?

ஒக்ரோபர் 14, 2010

நடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (3)?

விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்: காஜா மைதீன் புராணம் தொடர்கிறது! நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார் காஜா மைதீன். விஜயகாந்த்தை வைத்து சில படங்களையும்எடுத்துள்ளார்[1]. தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பராக விளங்கிய காஜா மைதீன், தற்போது விஜயகாந்த்தை வைத்த பேரரசு என்ற படத்தை எடுத்துள்ளார். கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்திற்கான பூஜையையும் போட்டு மாட்டிக்கொண்டார். பேரரசு படத்தின் போது காஜா மைதீனுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜயகாந்த்துக்கு பேசப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதியை தர முடியாத அளவுக்கு பண நெருக்கடியில் காஜா மைதீன் சிக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக பேரரசு படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனது மைத்துனரின் தயாரிப்பில் சொந்தப் படத்தில் (சுதேசி) நடிக்கப் போய் விட்டார் விஜயகாந்த். திடீரென விஜயகாந்த் தனது சொந்தத் தயாரிப்பில் நடிக்கப் போய் விட்டதால் மனம் உடைந்தார் காஜா மைதீன். அடி மேல் அடியாக, வேட்டையாடு விளையாடு படத்திற்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் அவஸ்தைப்பட்டார். இதனால் அந்தப் படம் பூஜையுடன் நின்றதாம். இந்த நிலையில் தான் பைனான்சியர் ரூபத்தில் பெரும் சிக்கலில் சிக்கினாராம் காஜா மைதீன். கடனைக் கேட்டு நெருக்கிய பைனான்சியர், அதற்கு ஈடாக காஜா மைதீன் மனைவியான நடிகை ஆம்னியின் பெயரில் இருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டார். இதனால் ரொம்பவே நொந்து போய் விட்டார் காஜா மைதீன். இந்த சோகத்தின் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்று 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். காஜா மைதீனுடன் சேர்ந்து அவரது மனைவி ஆம்னியும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

காஜாமைதீன் மனைவி நடிகை ஆம்னியும் தற்கொலை முயற்சி? காஜா மைதீன் தற்கொலைக்கு முயன்றது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில் அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான ஆம்னியும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தற்போது தெரியவந்துள்ளது. கடன் தொல்லை காரணமாக கணவனும், மனைவியுமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். ஆம்னி 10 தூக்கமாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் மயக்க நிலைக்குச் செல்லாமல் உயிர் தப்பினார். ஆனால் காஜா மைதீன் அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிட்டதால் மயக்க நிலைக்குப் போய் விட்டார்.தற்போது காஜா மைதீன் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டார். மயக்கம் தெளிந்து குணமடைந்து வருகிறார். அவரை செய்தியாளர்கள் சிலர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தனர். அப்போது, “தமிழ் சினிமாவைப் பற்றி நான் நிறையவிஷயங்களைச் சொல்ல வேண்டும். ஆனால் எனது உடல் நிலை காரணமாக அதிகம் பேசக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தமிழ் திரையுலக நன்மைக்காக நான் நிறைய பேச வேண்டியுள்ளது. சனிக்கிழமை உங்களிடம் விரிவாகப் பேசுகிறேன்”, என்று கூறினார் காஜா மைதீன்.

ஆமனியும் கமலுக்குத் தெரிந்தவர்தான்: கமல்ஹாசன்-காஜா மொய்தீன் தொடர்புகளின் பின்னணியும் ஆழமானது தான். ஆமனி கமலஹாசனுக்கு தெரிந்தவர்தாம், 19945ல் சுபசங்கல்பம் என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். கமலைப் பொறுத்தவரைக்கும் நடிகைகள் என்றலே கட்டிப்பிடிதான், ஆனால், முதல்வர் ஆகும் ஆசை இல்லை என்கிறார். சுபசங்கல்பத்தில் எப்படி கட்டிப்பிடித்தார் என்று ஆனமியைத்தான் கேட்க வேண்டும்.  ஆமாம், உலகநாயகனாகி விட்டதால், நேராக வேறு பதவிக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையுள்ளது போலும்!

மதுரையைச் சேர்ந்த கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசம்: திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் மிகப் பெரிய பிரச்சினையாக தற்போது கூறப்படுவது கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசம் தான். மிகப் பெரிய திராவிடக் கட்சி ஒன்றின் துணையுடன் சில கந்து வட்டிக்காரர்கள் (குறிப்பாக மதுரையைச் சேர்ந்த ஒரு முக்கியமான புள்ளி) திரையுலகினை ஆட்டிப்படைத்து வருவதாக நீண்ட காலமாகவே முணுமுணுப்பு இருந்துவருகிறது[2]. இந்த கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கி சீரழிந்தவர்கள் பட்டியல் மிகப் பெரியது என்று திரையுலகினர் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றனர். பிரபல தயாரிப்பாளர் ஜீ.வி. கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசத்தால் தான் உயிரையே விட்டார். நடிகை தேவயானி, ரம்பா, கார்த்திக் என பலர் தங்களது சொத்துக்களை இழந்தனர். பலரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி வைத்துமிரட்டி பணத்தையும், சொத்தையும் பறித்துள்ளது. அதுபோன்ற ஒரு கும்பலிடம் தான் தற்போது காஜா மைதீன் மாட்டியுள்ளதாக தெரிகிறது. கடன் தொல்லையிலிருந்து தன்னைக்காப்பாற்ற தனக்கு நெருக்கமான சிலரை காஜா மைதீன் அணுகியபோது அவர்கள் கைவிட்டு விட்டதாகவும்,அதன் காரணமாகவும், சொத்தை இழந்த சோகம் காரணத்தினாலும் தான் காஜா மைதீனும், அவரது மனைவியும் தற்கொலைக்குமுயன்றதாக கூறப்படுகிறது.

ஆம்னி ஆயிஷாவாக மாறிய பிறகு குடும்பப் பிரச்சினைகள்: ஆம்னி தயாரிப்பாளர் காஜா மைதீனை மணந்தபிறகு நடிக்கவில்லை.  இவரது தம்பி சீனிவாஸ். இவருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லீலாவதி என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ப்ரீத்தி என்ற 11 வயது மகள் உள்ளார். சென்னையில் குடித்தனம் செய்து வந்தனர். சீனிவாஸுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி லீலாவதியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இத்தனைக்கும் திருமணத்தின்போது லீலாவதிக்கு அவரது பெற்றோர் ரூ. 7 லட்சம் பணம், 45 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளியை அள்ளிக் கொடுத்துள்ளனர். ஆனால் குடித்து விட்டு வந்து தினசரி மனைவியை அடிப்பது, கூடுதல் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது என இருந்தார் சீனிவாஸ்.

குஷ்புவின் “உல்டா கேஸ்” போல இருக்கிறது: குஷ்பு முஸ்லீமாக இருந்து இந்துவாக மாறி கல்யாணம் செய்து கொண்ட போது, தனது சகோதரர் மூலம், சில பணவிஷயங்களில், குஷ்பு பெயரும் அடிபட்டது. அதாவது குஷ்பு தனது முஸ்லீம் சகோதரருக்கு உதவினாராம். கணவருக்கு அது பிடிக்காமல் இருந்தபோது, ஒதுங்கி விட்டதால், சகோதரருக்கு மன வருத்தம் ஏற்பட்டதாம். இனி ஆம்னி விஷயத்தைப் பார்ப்போம்.

இரு மாநில போலீஸாரிடம் புகார்[3]: கணவரின் கொடுமையைப் பொறுக்க முடியாத லீலாவதி நெல்லூர் போலீஸில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், “எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். எனது தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்கிறார்[4]. இதற்கு அவருடைய தாய் சரோஜாவும், நாத்தனார் நடிகை ஆம்னியும் உடந்தையாக உள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இது குறித்து சென்னை போலீசிலும் புகார் செய்தேன்”, என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆம்னி, தாயார் சரோஜா, சீனிவாஸ் மீது போலீஸார் புகார்ப் பதிவு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். ஆம்னி, சரோஜாவையும் கைது செய்யப் போவதாக கூறியுள்ளனர்[5].

ஆமனி தலைமறைவாகி விட்டாரா? சீனிவாசுக்கு இரண்டு மனைவிகள் – முதல் மனைவி – கே. லீலாவதி, இரண்டாவது – தேவிகலா. முதல் மனைவிக்குத் தெரியாமல், இரண்டாவது திருமணத்தை செய்துள்ளான். இதற்கு ஆமனி உதவியுள்ளதாகத் தெரிகிறது[6]. பெண் போலீஸார் ஆமனியைத் தேடுவதால், தலைமறைவாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது[7].

வேதபிரகாஷ்

14-10-2010


[1] இப்ராஹிம் ராவுத்தர் எங்கே சென்று விட்டார் என்று தெரியவில்லை!

[2] ஆனால், அந்த திராவிட கட்சி எது, திராவிடர்களுக்கு இத்தகைய பாரம்பரியங்கள் உண்டா இல்லையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள் போலும்!

[3] உஷா சௌத்ரி என்பவர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள், தோல்விகள், விவாக ரத்துகள் முதலியன ஏன் வருகின்றன  என்று அலசுகிறார்.

http://www.greatandhra.com/ganews/viewnews.php?id=22592&cat=1&scat=4