சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா (2)
நேரம்குறிப்பிடாதஅட்டவணை: நிகழ்ச்சி நிரலில் நேரத்தைக் குறிப்பிடாமல் இருந்ததால், போன் செய்து பேட்டபோது மாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொன்னார்கள். சனிக்கிழமை இரண்டாவது நாளாக திரைப்பட விழா தொடர்ந்தது. நேற்று இருந்த விருவிருப்பு இல்லை. நிகழ்ச்சி நிரலில் நேரத்தைக் குறிப்பிடாமல் இருந்ததால், அரங்கத்தில் வந்துக் கொண்டும், போய் கொண்டும் இருந்தனர். நேற்று போல இளைஞர்களின் கூட்டம் இருந்தது. செக்ஸைக் கடந்த நிலை, பாலியலைத் தாண்டிய ஸ்தானம் எனும் போது, காலத்திற்குக் கட்டுப்படாத நிகழ்ச்சியாகியது போலும்!
Les Chansans D’Amour (Love songs): குறும்படம் என்ற பெயரில் ஒரு பிரெஞ்சு படம் – லெஸ் சான்சன்ஸ் டி-ஆமர் நெடும் நேரம் – மூன்று பகுதிகளாக ஓடிக்கொண்டிருந்தது. நடுநடுவே அந்தகால தியாகராஜ பாகவதர் படம் போல ஏகப்பட்ட பாடல்கள் வேறு! ஆனால், “லெஸ் சான்சன்ஸ் டி-ஆமர்” என்றால் “காதல் பாட்டுகள்” என்று பொருள்! இஸ்மாயில், ஜூலி மற்றும் அலைஸ் என்ற மூன்று நபர்களுக்கிடையே உள்ள உறவைப் பற்றியது. அவ்வுறவை வெளிப்படுத்துவதில் மாறி-மாற்றி பாடும் பாடல்கள் தாம் அவை. 2007 கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்த்நெடுக்கப்பட்ட 20 படங்களில் ஒன்று. 2012 வரை உலகம் முழுவதும் $2,966,934 = ரூ2,96,69,34,856/- அதாவது மூன்று கோடி ஈட்டியுள்ளது[1].
[1] As of 16 January 2012, it had grossed a total of $2,966,934 worldwide — $104,567 in the United States and Canada and $2,862,367 in other territories
அட்டவணையில் உள்ளபடி, வரிசைக்கிரமத்தைப் பின்பற்றவில்லை. சில படங்கள் ஏன் காண்பிக்கப்படவில்லை என்று தெரியவில்லை.
“மிஸ்ஸிங் கலர்” குழுவினரின் பொறுமையினை அது சோதித்தது. “என்ன செய்வது, பிரெஞ்சு படம் என்றாலே அப்படி பெரியதாகத்தான் இருக்கும்”, என்று அவர்களுள் ஒருவர் அலுத்துக் கொண்டார். சிலரின் நிலை நடு-நடுவே வேளியே போவதும், வருவதுமாக இருந்தது.
பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை – தவிர்க்கப் படுகிறது ஏன்?: ஒரு ஆணுக்குள் இருக்கும் பெண்மை, அப்பெண்மை வெளிப்படும், வெளிப்படுத்தும் தன்மைதான் அதிகமாக சித்தரிக்கப்பட்டுள்ளது, படுகிறது. ஆனால், பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை, அந்த ஆண்மை வெளிப்படும் வெளிப்படுத்தும் தன்மை தவிர்க்கப்படும் மர்மம் என்னவென்று தெரியவில்லை.
ரெயின்போவின் தூதுவர்கள்: ரெயின்போவின் தூதுவர்கள் என்ற பட்டியலும் பெரிதாக இருந்தது:
- சரத் குமார் – நடிகர், அரசியல்வாதி
- விஜய பத்ம கோவிந்தராஜன் – திரைப்பட் இயக்குனர்
- ஞானி சங்கரன் – திரைப்பட விமர்சகர், நாடக இயக்குனர்
- பிரியா மேனன் – பத்திரிக்கையாசிரியர், டைம்ஸ் ஆப் இந்தியா.
- சனோபர் சுல்தானா – ரேடியோ ஜாக்கி, சென்னை லைவ் எப்.எம்
- அஸ்வின் ஶ்ரீனிவாஸ் – நடிகர்
இரண்டாவது நாளில் “அடல்ஸ் ஒன்லி” ஆன திரைப்பட விழா: இன்று சனிக்கிழமை, திரையரங்கத்தின் கதவில் “18+only” என்று யாரோ ஒட்டியிருந்தார்கள். ஆனால், மாலை சுமார் 6.40 அளவில் ஒருவர் மனைவி குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தார். நாற்காலிகளில் உட்கார்ந்தும் கொண்டனர். ஆணல்ல-பெண்ணல்ல, அவனல்ல, அவளால்ல, அதுவல்ல, அந்துமல்ல என்றும், ஆணுமுண்டு-பெண்ணும் உண்டு என்ற நிலை, கலப்பு, பாலியலுக்குக் கடந்த நிலை, என்றெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற நிலையில், இந்த பாகுபாடு எப்படி வந்தது என்று தெரியவில்லை.
விவாதம் / கலந்துரையாடல்: ஊடகங்களில் “எல்இபிடி”யினர் சித்தரிக்கப்படும் விதம் பற்றிய விவாதம் / கலந்துரையாடல் தள்ளிப் போய் கொண்டிருந்தது. சாரு நிவேதிதா[2], ரோஸ் வெங்கடேசன், விக்ரந்ட்த் பிரசன்னா மற்றும் பாத்திமா பாபு கலந்து கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
திருநங்கை நடிகை கல்கியை கற்பழிக்க முயற்சி! 2 மர்ம ஆசாமிகள் செய்த கொடுமை!: சனிக்கிழமை இங்கு இப்ப்டி நடக்கும் போது, புதுச்சேரியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. தமிழ் படத்தில் நடித்த திருநங்கை நடிகை கல்கியை இரண்டு மர்ம ஆசாமிகள் இருட்டான பக்குதிக்கு தூக்கிச் சென்று கற்பழிக்க முயற்சி செய்துள்ளனர்[1]. போலீசார் இது தொடர்பாக வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்று குமுறியுள்ளார் திருநங்கை நடிகை கல்கி! நர்த்தகி என்ற தமிழ் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். இவருக்கு வயது 31. இவர் சிறப்பாக நடித்ததற்காக அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது பெற்றார் இவர். இவர் சகோதரி என்ற தொண்டு அமைப்பை நடத்தி திருநங்கைகளுக்கு பலவிதமனா சேவைகளைச் செய்துவருகிறார். இதனை பாராட்டி அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டு இவர் கவுரவிக்கப்பட்டார்[2]. இவர் புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இவர் புதுச்சேரி சென்றுள்ளார்.
[1] சனி, 8 ஜூன் 2013( 17:31 IST )
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1306/08/1130608032_1.htm
[2] அமெரிக்காவிற்கு திருநங்கைளின் மீதுள்ள அக்கரை அலாதியாக உள்ளது.
வேதபிரகாஷ்
© 08-05-2013
[1] As of 16 January 2012, it had grossed a total of $2,966,934 worldwide — $104,567 in the United States and Canada and $2,862,367 in other territories
[2] இப்படி ஆண்கள் ஏன் பென்கள் பெயரை வைத்துக் கொண்டு கதை எழுதுகிறார்கள், எழுதினார்கள் என்று இவ்விஷயத்தில் விவாதிக்க முடியுமா? பெண்கள் பெயரில் கதை அனுப்பினால் பத்திரிக்கைகளில் போடுவார்கள் என்ற நிலை இருந்தது. அத்தகைய கவர்ச்சி இப்பொழுதும் உள்ளது.