Posts Tagged ‘ஸ்லிக்’

முற்றும் திறந்த நிலையில், செக்யூலரிஸ விளிம்பில், எல்லாமே ஒன்று என்ற பக்குவத்தில், குலத்தொழிலைக் கொண்டு சிறக்கும் ஸ்ருதி!

நவம்பர் 15, 2015

முற்றும் திறந்த நிலையில், செக்யூலரிஸ விளிம்பில், எல்லாமே ஒன்று என்ற பக்குவத்தில், குலத்தொழிலைக் கொண்டு சிறக்கும் ஸ்ருதி!

ஸ்ருதி.1

ஸ்ருதி.1

கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன்’’: மும்பையில், ‘‘கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன்’’ என்று நடிகை சுருதிஹாசன் கூறினார் என்று செய்திகள் வந்துள்ளன. எதில் என்ன விசயம் இருக்கிறது, “கதை’ என்று சினிமாவில் இருக்கிறதா என்ன? விபச்சாரி, கிளப் டான்ஸர், பப் டான்ஸார், சேர்ந்து வாழும் வாழ்க்கை, அத்தகைய வாழ்க்கை பலருடன், திருமணம் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, மயக்கும் அழகி, நீச்சல் அழகி, போன்ற கதைகள் இருக்கும் போது, அப்படித்தானே நடிகைகள் நடிப்பார்கள். வேறு மாதிரியாகவா நடிக்க முடியும்? நடிகை சுருதிஹாசனுக்கு பெரிய படங்கள் அமைகின்றன. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தீவிரமாக நடிக்கிறார். கவர்ச்சி அஜித் ஜோடியாக நடித்த ‘வேதாளம்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார், என்று விவரித்துவிட்டு, “கவர்ச்சியில் தாராளமாக நடிப்பதாக சுருதிஹாசன் மீது விமர்சனங்களும் கிளம்பியுள்ளன”, என்கிறது தினத்தந்தி[1]. “கவர்ச்சியில் தாராளமாக நடிப்பது” என்றால் என்ன இதுவரை, யாரும் தாராளமாக செய்யாததை, ஸ்ருதி செய்து விட்டது போல!

ஸ்ருதி - மூக்கு ஆபரேஷன்

ஸ்ருதி – மூக்கு ஆபரேஷன்

நடிப்பு என்பது என் பரம்பரையில் இருக்கிறது – பரம்பரை தொழிலாக்கும், குலத்தொழிலாக்கும்: ஸ்ருதி, இது (நடிப்பது) குறித்து அவர் கூறியதாவது: “பிரபலமாக இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. அதற்காக நான் நடிகையாகவில்லை. நட்சத்திர அந்தஸ்தும் சந்தோஷமானதுதான் அதற்காகவும் நடிக்க வரவில்லை. நடிப்பு என்பது என் பரம்பரையில் இருக்கிறது அந்த ஆர்வத்தில் தான் நடிகையானேன்”. எங்களுக்கு தொழில் கவிதை என்பது போல, இவர் “எங்களுக்கு தொழில் நடிப்பு” என்கிறார் போலும், அந்த நடிப்புத் தொழிலில் கவர்ச்சி தேவையானால், கவர்ச்சி இருக்கும். ஆமாம், அவரது தந்தை கமல் நடிகர்; அம்மா சரிகா நடிகை; சகோதடி அக்ஷயா நடிகை; பெரியப்பா சாருஹாஸன் நடிகர்; அவர் மகள் சுஹாஷினி நடிகை; இப்படி நடிக-நடிகைகள் குடும்பமாகவே இருக்கிறது. பரம்பரை தொழிலாக்கும், குலத்தொழிலாக்கும் என்கிறார், நாளைக்கு இதிலும் இடவொதிக்கீடு வேண்டும் என்பார்களோ? நடிப்பது என்றால், எப்படியும் நடிப்பது தானே? கவர்ச்சியாக நடிப்பது கூட நடிப்புதான். அதாவது, அவ்வாறு நடிப்பது தான் கஷ்டம். அப்படியே இருப்பது சுலபம். கிளாமராக அரைகுறை ஆடைகளுடன் நடிப்பது கடினம், அப்படியே இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆஹா, உலகநாயகனின் மகள், என்னமா விளக்கம் கொடுக்கிறார்?

 

Akhsayta and sruti - daughters of Kamal

Akhsayta and sruti – daughters of Kamal

கவர்ச்சியாக நடிப்பது கஷ்டமானது: ஸ்ருதி தொடர்ந்து விளக்கியது, “கவர்ச்சி பிடிக்குமா, குடும்பப் பாங்கான வேடம் பிடிக்குமா என்று என்னிடம் கேட்கின்றனர். இரண்டையும் சமமாகவே பார்க்கிறேன். நடிக்க வந்த பிறகு எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுதான். கவர்ச்சி என்பது டூயட் பாடுவது, மரத்தை சுற்றி ஓடுவது என்று சாதாரணமாக நினைக்கிறார்கள். அதுவும் கஷ்டமானதுதான் என்பதை யாரும் உணர்வது இல்லை. கவர்ச்சியாக நடிப்பது எளிதானது அல்ல. அதிலும் ரொம்ப சிரமம் இருக்கிறது[2]. அதை குறைத்து மதிப்பிட வேண்டாம்[3]. கதைக்கு என்ன தேவையோ அதுமாதிரி நடிக்க நான் தயார்[4]. கதைக்கு கவர்ச்சி தேவை என்றால் கவர்ச்சியாகவும் நடிப்பேன்[5], என்று ஒரு பெரிய வியாக்யானத்தையே கொடுத்தது, யோசிக்க வைத்தது. இப்படி சொன்னது அதிர்ச்சியாக இருந்தது என்றும் வெப்துனியா எடுத்துக் காட்டுகிறது[6]. எல்லாமே ஒன்று என்ற பக்குவத்தில் வந்துவிட்ட ஸ்ருதியின் தத்துவமே அலாதியானது தான்! “கவர்ச்சி… ஸ்ருதியின் அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட்” என்கிறது, அப்படி என்ன அதிர்ச்சியாகி விட்டது என்று தெரியவில்லை.  தந்தை செக்யூலரிஸத்தில் ஊறியவர் என்றால், மகள் நடிப்பிலேயே செக்யூலரிஸத்தைக் கதைப்பிடிக்கும் விராங்கனையாக மாறியது தெரிகிறது. வயதானாலோ, மார்க்கெட் இல்லாமல் போனாலோ, கவலையே இல்லை, அரசியல் தான் தஞ்சம், அந்த அளவுக்கு பேச்சு இருக்கிறது!

ஸ்ருதி - சித்தார்த் லிவ்விங் இன்

ஸ்ருதி – சித்தார்த் லிவ்விங் இன்

கவர்ச்சியில் முத்துக்குளிக்கும் ஒரு நாயகிஸ்ருதி: “இன்றைய தேதியில் கவர்ச்சியில் முத்துக்குளிக்கும் ஒரு நாயகி யார் என்றால், அது ஸ்ருதி. சமீபத்தில் வெளிவந்த புலி, வேதாளம் படங்களிலும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்திருந்தார். அவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட் இரும்பு இதயம் கொண்டவர்களையே ஒருகணம் உலுக்கிவிடும்”, என்று விளக்கியுள்ளது[7]. தொடர்ந்து, “அப்படி என்ன சொன்னார் ஸ்ருதி…? கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று கூறியுள்ளார் ஸ்ருதி. கதையே இல்லாத படங்களில் ஸ்ருதியின் கவர்ச்சியை வைத்துதான் பில்லப் செய்கிறார்கள். இதுவே அதிகபட்சம். இதில் கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார். அப்படியென்றால் இப்போது நடிப்பதை ஸ்ருதி கவர்ச்சியாகவே நினைக்கவில்லையா? என்னம்மா இப்படி பயமுறுத்துறீங்களேம்மா”, என்று விளக்கத்தை முடித்துள்ளது. குத்தாட்டம் போடக் கூடத் தயார் என்று கவர்ச்சியைக் காட்ட வந்த பிறகு, எதையும் காட்டத்தயார் என்ற நிலைதான் வந்து விட்டது.

 

ஸ்ருதி - ராம்கோபால் புணர்ச்சி

ஸ்ருதி – ராம்கோபால் புணர்ச்சி

ஸ்ருதி தெலுங்கில் எல்லையற்ற கவர்ச்சி அதிர்ச்சியில் கமல்..!!: இத்தலைப்பில் ஒரு நடனகாட்சி விடியோ உள்ளது[8]. அப்பாடல் இந்தியில் உள்ளது. பாவம், ஸ்ருதியைப் பார்த்தவுடன் மயங்கி விட்டார் போலும்! அப்பாடலில் வரும் வார்த்தைகளே கேவலமாக, கொச்சையாக இருக்கின்றன. “சேரி பாஷை” கூட கொஞ்சம் நாகரிகமாக இருக்கும், ஆனால், அவ்வார்த்தைகள் ஆவ்வளவு கேடுகெட்டத்தனமாக இருக்கின்றன. அதில் இந்த ஸ்ருதி நடிகையின் ஆட்டம் வேறு[9]. அந்த கால “ஹெலன்” நடனம் போன்றுள்ளது, ஆடை கூட அப்படித்தான் உள்ளது. அதில் அதிர்ச்சியடையும் படி ஒன்றும் இல்லை. தொழிலில் சேர்த்துவிட்ட தந்தை, இதைப்பற்றியெல்லாம் அதிர்ச்சி படுவார் என்பதெல்லாம் போலித்தனமானது. உண்மையிலேயே அந்த அளவுக்கு “ஒழுக்கம்” முதலியவற்றையெல்லாம் கவனித்திருந்தால், இத்தொழிலுக்கே வந்திருக்க முடியாது. இதென்ன தமிழச்சியின் இலக்கணமா, “அச்சம், படம், நாணம், பயிர்ப்பு, கற்பு” என்றெல்லாம் பேசுவதற்கு, அல்லது பட்டிமன்றம் நடத்துவதற்கு? சங்ககாலத்திலா தமிழர்கள் இருக்கிறார்கள், நவீனகாலத்தில் தானே இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா இருந்தால் போதும், என்று திராடவித்துவ ஞானிகள், முனிவர்கள், ரிஷிக்கள் எல்லோரும் 60 வருடங்களுக்கு முன்னரே எடுத்துக் காட்டி விட்டார்கள். எது இருந்தாலும், இல்லாவிட்டாலும், சினிமா இருந்தால் போதும்.

ஸ்ருதி - ரொமான்ஸ் வித் தனுஷ்

ஸ்ருதி – ரொமான்ஸ் வித் தனுஷ்

பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப் பற்றிய ஏழு சர்ச்சைகள்[10]: எம்.டி.வி.இந்தியா என்ற இணைதளம் மே 2015ல் பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப் பற்றிய ஏழு சர்ச்சைகள் என்று வெளியிட்டது[11]:

  1. The infamous Nose-Job – மற்ற நடிகைகளைப் போலல்லாமல், தைரியமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.
  2. Live-In relationship with Siddharth – ‘Oh My Friend’என்ற படம் ரிலீஸ் ஆனபோது, சித்தார்த்துடன், “சேர்ந்திருந்த வாழ்க்கை” வாழ்ந்ததாக [lived together]ச் சொல்லப்பட்டது.
  3. Leaked pictures – “எவடு”என்ற தெலுங்கு படத்திற்கு ரகசியமாக எடுத்த படங்கள் கசிந்து, அதனால், பரபரப்பு ஏற்பட்டது. டோலிவுட் நடிகலைகளில் மிகவும் தேடபட்ட நடிகை என்ற அந்தஸ்த்தைப் பெற்றது ஸ்ருதி அதன் மூலம் தானாம்!
  4. Affair with Dhanush – தனுஷ் கூட “விவகாரத்தை” வைத்துக் கொண்டது.
  5. Explicit D-Day Posters – ராம்பால் என்ற நடிகருடன் புணர்வதைப் போன்ற காட்சி, போஸ்டர் முதலியன.
  6. Liplock with Tamanna – தமன்னாவுடன் முத்தம் கொடுத்தது.
  7. Stalker Attack – யாரோ வீட்டில் நுழைந்து அவரது உடலைத் தாக்கியது, மாட்டிக்கொண்டது. பாவம், சினிமாக்காய் திருட வந்தவன்.

சர்ச்சைகள் ஏழன்ன, எட்டென்ன? தந்தையை மிஞ்சும் மகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஸ்ருதி - லிப்லாக் தமன்னா

ஸ்ருதி – லிப்லாக் தமன்னா

© வேதபிரகாஷ்

15-11-2015


[1] தினத்தந்தி, கதைக்கு தேவை என்றால் ‘‘கவர்ச்சியாக நடிப்பேன்’’ நடிகை சுருதிஹாசன் பேட்டி, மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 14,2015, 4:15 AM IST; பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 14,2015, 1:53 AM IST.

[2] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/11/14015340/act-Interview-with-actress-curutihacan.vpf

[3] சென்னை.ஆன்.லைன், கவர்ச்சியாக நடிப்பது எளிதானது அல்லநடிகை ஸ்ருதி ஹாசன், Published On : Nov 14, 2015.

[4] http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx?NEWSID=3a365df8-1822-43e8-b64f-82bac1288368&CATEGORYNAME=TFILM

[5] http://olacinema.com/ready-to-act-glamour-role-shurthi-hassan/

[6] வெப்துனியா, கவர்ச்சிஸ்ருதியின் அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட், சனி, 14 நவம்பர் 2015 (12:34 IST)

[7] http://www.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/glamour-shruti-s-shocking-statement-115111400027_1.html

[8] தேடிகோ.காம், ஸ்ருதி தெலுங்கில் எல்லையற்ற கவர்ச்சி அதிர்ச்சியில் கமல்..!!, நவம்பர். 2015.

[9]  http://www.thediko.com/2015/11/shruthi-hot-song-in-telungu.html#sthash.KvmtBpFJ.dpbs

[10] Anish Raul, This ‘Ramaiya Vastavaiya’ girl has had her share of controversies too! 7 Shruti Hassan Controversies That Shocked Bollywood, Posted On 22nd May, 2015 @ 10:18 am.

[11] http://www.mtvindia.com/blogs/general/news/7-shruti-hassan-controversies-that-shocked-bollywood-52194929.html

தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை!

மார்ச் 23, 2012

தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை!


அவுத்துப் போட்டு ஆட துடித்த நடிகை அவுத்தேப் போட்டு விட்டாள்[1]: பேராண்மை படத்தில் நடித்த காதல் சரண்யா தனது பெயரின் முதல் பகுதியை விடுத்தது போல, உடையை அவிழ்த்து நிர்வாணமாக நடித்து தமிழ் படவுலகில் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். கலைக்கல்லூரியில் உண்மையாகவே மாடலுக்காக போஸ் கொடுக்கும் இவர் இம்மாதிரி நடித்துள்ளது வியப்பொன்றும் இல்லை எனப்படுகிறது. தொழிற்நுட்பம் பெருகியுள்ளது, திரைப்பட கலைஞர்கள் ரொம்பவே முன்னேறி விட்டார்கள் என்ற நிலையில், நடிகைகள் மட்டும் தங்களது உடம்பை வைத்துத் தான் சினிமாவில் புகழ் பெற முடியும் என்ற நிலையை இயக்குனர்கள் ஏற்படுத்திவருவது அவர்களின் காமக்குரூர வக்கிரத் தன்மை மற்றும் மனத்தில் மறைந்துள்ள கோக்கோக வெறிதான் என்று புலப்படுகிறது[2]. நடிகைகளைப் பொறுத்த வரைக்கும் பணம் கொடுத்தால் சரி[3]. யானா குப்தா என்ற நடிகை முழு நிர்வாணமாக நடிக்க இரண்டு கோடி கேட்டது தெரிந்த விஷயமே[4]. ஆக சரண்யா எவ்வளவு கேட்டார் அல்லது தீபன் எவ்வளவு கொடுத்தார் என்பது தெரியாது.

நிஜவாழ்க்கையில் தனது சொந்த குழந்தைக்கு முலைப்பால் ஊட்டாத நடிகை சினிமாவில் இயற்கையாக முலையைக் காட்டுவேன் என்றல் அது நடிப்பா?: சில்க்

Clearing the air about her, the actress met the media in the city and said, “I play a fine arts student and even at the time of signing the movie, director Deepan had told me that there is a crucial scene in the movie which requires me to look naked. Though I was initially shocked, he explained that the situation warrants me to look nude and I was finally convinced. It’s an experimental role! It is not a bare body lewd scene as mistaken by most. It has been aesthetically shot with skin matching tight clothes and it will be shown in silhouette. Had it been vulgar or coarse why would the censors clear it with a ‘U’ Certification?” she asks.
Looks like Kadhal Saranya of the Peraanmai fame, who was rechristened ‘Saranya Nag’ has dropped her prefix and is in the news for a bold move: appearing nude in a scene in a movie titled

ஸ்மிதாவைச் சொல்லி[5], முக்கால் நிர்வாணத்தில் நடித்தார் வித்யா பாலன். முலைக் காம்பைத்தான் காட்டவில்லை, மற்றதையெல்லாம் குலுக்கிக் காண்பித்து விட்டார். ஆனால், மார்ச் 8ம் தேதி அனைத்துலக மகளிர் தினத்தில் நடந்த விவாதத்தில் இவர் பெண்களின் உரிமைகள், சுதந்திரத்தைப் பற்றி பேசியது மெய்சிலிர்க்க வைத்தது. ஆக இந்த நடிகையும் வித்யாவை உதாரணமாகச் சொல்லிக் காட்டுவது வினோதமே. நிஜவாழ்க்கையில் தனது சொந்த குழந்தைக்கு முலைப்பால் ஊட்டமாட்டார்கள், ஆனால், சினிமாவில் அக்காட்சி வந்தால், இயற்கையாக நடிக்க முலையைக் காட்டுவேன் என்கிறார்கள். என்னே நடிப்பின் தன்மை?

Sources said that a team of 50 technicians and a group of professional artists were present when the climax was shot[6]. She retorted to a query regarding her exposing in future as well, she said, “If the script demands it, I may consider it. But, it is not that every alternative film I get will have such scripts.For instance, in my next film, Muyal,I play a bubbly college girl. And my role model is Vidya Balan. She was playing homely characters till The Dirty Picture happened. I have heard that she agreed to expose after realising that it was a movie on the south sex siren, Silk Smitha.” Saranya Nag will also be seen in a movie called Bodhai,which is an awareness film that professes ‘say no to drugs’ directed Selva Ganesh.

கதைக்காகத்தான் நிர்வாணமாக நடித்தேன்: இப்படி நியாயப் படுத்தும் நடிகை. கதைக்காகத்தான் நிர்வாணமாக நடித்தேன் என்று நடிகை சரண்யாநாக் கூறினார். தமிழ்படத்தில் நிர்வாணமாக நடித்த சரண்யா நாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “நான் தற்போது மழைக்காலம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறேன். இப்படத்தை தீபன் என்பவர் இயக்கியுள்ளார். அந்த படத்திற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது தீபன் படத்தின் கதைப்படி ஒரு முக்கியமான காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டிய ஒரு நிலையுள்ளது / காட்சி வருகிறது. அதில் நடிக்கும் படி கேட்டார்கள். முதலில் நான் அதிர்ந்து போய் விட்டேன். ஆனால், தீபன் அத்தகைய காட்சிற்கான அவசியத்தை என்னிடம் விளக்கியதும், புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டேன். பரிசோதனைக்காக ஸ்கின் டிரஸ் (உடலை தழுவும் மெல்லிய ஆடை) போட்டு நடித்தேன். அக்காட்சி படமாக்கும் பொழுது 50 கலைஞர்கள், மற்ற நடிகர்கள், தொழிற் விற்பன்னர்கள் இருந்தனர். டைடானிக் படத்தில் நடித்த நடிகை நிர்வாணமாக இருந்தது போல அக்காட்சி இருக்க வேண்டும் என்று விருப்பப் பட்டு எடுக்கப் பட்டதாம்[7]. கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடிக்க வேண்டியதாகி விட்டது[8].  அது ஆபாசமாகக் கருதப் பட்டால், பிறகு சென்சார் போர்ட் எப்படி “யு” சான்றிதழ் கொடுத்துள்ளது என்று கேட்டார்.

வருங்காலத்தில் இதுபோல் நடிக்கமாட்டேன்: நிர்வாண நடிகை புகழ் தொடர்ந்தார், “இதில் நடித்தது பற்றி பலரும் பல விதமாக எழுதிவருகிறார்கள். அதேபோல் நான் நடித்ததை மறுத்ததாக சிலர் எழுதி

தொடர்ந்து இது போல் நடிக்கும் எண்ணமில்லை. வருங்காலத்தில் இதுபோல் நடிக்கமாட்டேன், என்றால், இனி  உடலை தழுவும் மெல்லிய ஆடை போட்டு நடிக்கமாட்டேன், உண்மையாகவே என்னுடைய உடலைக் காட்டி நடிப்பேன் என்கிறாரா?

உள்ளனர். அதுவும் தவறு, தொடர்ந்து இதுபோல் நடிப்பீர்களா? தொடர்ந்து இது போல் நடிக்கும் எண்ணமில்லை. வருங்காலத்தில் இதுபோல் நடிக்கமாட்டேன். இதற்கு முன்பு பேராண்மை படத்தில் நானும் ஒரு நடிகையாக நடித்திருந்தேன். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு சர்டிபிகேட் படம் தந்துள்ளதன் மூலம் இது ஆபாச படம் அல்ல என்பதும் தெளிவாகும். படம் இந்த மாதம் இறுதியில் வெளிவருகிறது”. சென்சார் போர்ட்-காரர்களும் எப்படி சர்ட்பிகேட் கொடுக்கிறார்கள் என்று தெரியும். உண்மையில் “ஏ” கொடுத்திருந்தால் மகிழ்ந்துதான் போயிருப்பார்கள். அக்காட்சி வருகிறது என்றாலே 100 நாட்கள் ஓடிவிடுமே? முன்பு முத்துராமன் நடித்த ஒரு படத்திற்கு “ஏ” சான்ரிதழ் கொடுத்தார்கள். இப்பொழுது எந்த காட்சிகள் வந்த்காலும் கொடுப்பதில்லை, ஏனெனில், எல்லாமே இயற்கையாகவே தோன்றுகிறது சினிமாக் காரர்களுக்கு, இருப்பினும் விபச்சாரம் செய்கிறார்கள் டென்றால் கோபம் வருகிறது, ஆபாசமாக நடிக்கிறார்கள் என்றால், இல்லையென்கிறார்கள்………
வேதபிரகாஷ்

23-03-2012