Posts Tagged ‘அது’

சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா!

ஜூன் 8, 2013

சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா!

Chennai-Rainbow-Film-Festival-2013-Poster2சென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 (Chennai Rainbow film Festival 2013) என்று அல்லயன்ஸ் பிரான்சிஸ்[1] (Alliance Francause de Madras) என்ற பிரெஞ்சு தூதரகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள  அடோர்ட் மிச்செம் அரங்கத்தில் (Adourd Michelm Auditorium) வெள்ளிக்கிழமை 07-06-2013 அன்று குறும்பட திரைவிழா நடந்தது. ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, ஓரின சேர்க்கையாலர், திருநங்கையர், திருக்காளை / திருமகன்[2] என்றெல்லாம் சொல்லப்படுகின்றவர்களுக்கான இயக்கம் [ Lesbian, Gay and Bisexual Transgender (LGBT)] என்று சென்னையில் செயல்பட்டு வரும், “சென்னை தோஸ்த்” இவ்வமைப்பு  இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதைப் பற்றி விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன[3].

The Hindu - news coverage“தி ஹிந்து” ஏப்ரல் 24ம் தேதியிலேயே “மெட்ரோ பிளஸ்”ல் செய்தி வெளியிட்டிருந்தது. இதைத் தவிர “எங்கேஜ்மென்ட்” இன்றைய நிகழ்சியில் போட்டதால், அதைப் பார்த்து வந்தவர்களும் இருந்தார்கள்!

Photo1138புகைப்படக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள், வந்தவர்கள்

Photo1139அல்லயன்ஸ் பிரான்சிஸ் ஆதரவுதரும் நோக்கம்: பிரான்ஸ் தேசத்தில் ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் போன்றோரின் திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறவேற்றப்படுவதால், சட்டரீதியாக அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்படும். சென்றமாதம் (18-05-2013) சனிக்கிழமை பிரெஞ்சு ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்[4]. இது சட்டமானால், ஒப்புதல் அளித்த உலகில் 13ம் நாடாக இருக்கும்.இதை ஒட்டித்தான், இந்த விழாவிற்கு தாங்கள் ஆதரவு கொடுப்பதாக, தூதரகத்தின் இணை இயக்குனர் கூறினார். பிரான்ஸில் இதைப் பற்றி பலவிதமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன[5]. இதை எதிர்ப்பவர்கள் ஆர்பாட்டம் வன்முறையில் முடிந்தது என்று செய்திகள் வந்துள்ளன[6]. வியாழக்கிழமை (06-06-2013) அன்று நடந்த வன்முறையில் ஒரு இடதுசாரி மாணவன் கொல்லப்பட்டுள்ளதால், மேலும் வன்முறை ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன[7]. ஆனால், வெள்ளிக்கிழமை, இந்தியாவில் இந்நிகழ்சி நடக்கிறது.

Anita Ratnam inagurates cutting ribbonபெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை (Pride sans prejudice): பெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை அதாவது முன்னேற்றத்திற்கு உடல் ஊனமோ, குறையோ தவறு என்ற எண்ணம் தேவையில்லை என்ற கோட்பாட்டோடு இருப்பதாக, இந்த விழாவின் அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Chennai-Rainbow-Film-Festival-2013-partners-sponsors-1இந்நிகழ்சியை ஆதரிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன: ஐபிஎம், சென்னை ரென்டாவெஸ், பாக்கெட் பிலிம்ஸ், கலாட்டா, சென்னை லைவ் 104.8, கேஸி, பிங்க் பேஜஸ், தோழி, பெலாக் கனடா, தாய்மரம், தோழமை, என்று நீண்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள பத்துப்பக்க “புரோச்சர்” – விழா அறிவிப்பு, அறிமுகம், நிகழ்சி நிரல், குறும்படங்களின் சுருக்கம் கொண்ட பெரிய புத்தகமே விலையுயர்ந்ததாக இருக்கிறது. பல லட்சங்கள் செலவழித்துக் கொண்டாடப் படுவதும் தெரிகிறது.

Apsara and Anita inagurate CRFF 2013துவக்கவிழாவும் மற்ற தொடர்வுகளும்: துவக்க விழாவை ஆரம்பிக்க பாலு மஹேந்திரா வருவதாக சொல்லப்பட்டது. நேரம் கடந்து கொண்டிருந்தது. வந்தவர்கள் சிலர் இரண்டாவது மாடியில் உள்ள  அரங்கத்திலும், கீழேயும் காத்துக் கிடந்தனர். அரங்கத்தில் இருக்கும் சிலர் கீழே வரவும் தயங்கி அங்கேயே உட்கார்ந்திருந்தனர். திடீரென்று, அரங்கத்தில் இருந்தவர்களை கீழே வருமாறு பணித்தனர். பாலு மஹேந்திரா வராதலால், அனிதா ரத்னம்[8] மற்றும் அப்சரா ரெட்டி[9] என்ற இரு பிரமுகர்களை வைத்து துவக்க விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. பிறகு மேலே அரங்கத்திற்குச் சென்றனர்.

Photo1143அறிமுகமும், ஆரம்பமும்: நிகழ்சியைப் பற்றி அறிமுகம் செய்த பிறகு, விக்ரந்த் பிரசன்னா, வெங்கட்ராமன்[10] அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி[11] முதலியோர் அறிமுகப்படுத்தப் பட்டனர். சிறந்த புகைப்படத்திற்கான விருது கண்ணன் என்பவருக்கு அழைக்கப்பட்டது. பொன்னி அபிநயா என்ற திருநங்கையின் நாட்டிய நிகழ்சியுடன் திரைப்பட விழா ஆரம்பித்தது.

Photo1140குறும்படங்களைப்பற்றியவிமர்சனம்: “மழையுதிர்காலம்” என்ற முதல் குறும்படம், வசனங்கள் இல்லாமல் எப்படி ஒரு ஆண், பெண்ணுணர்வுகளுடன் இருந்து,  பிறகு தீர்மானமாக பெண்ணாகி, வெளியே வருகிறாள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இது காண்பிக்கப்பட்ட உடனே அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி, மற்ற சிலர் வெளியேறி விட்டனர்.

Photo1141“வாடர் / தண்ணீர்” என்ற குறும்படம், எப்படி ஒரு வசதியுள்ள இளைஞன், திடிரென்று ஒரு கால்பந்து வீரன், அடிப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து, அவனுக்கு உதவி ஆனால், நன்றி சொல்ல வந்த அவனுடம் ஏற்படும் உணர்வுகளை பிரதிபலிக்கும் இடங்களில் குழப்பத்துடன் இருப்பது போலக் காண்பிக்கப்படுகிறது. இதைப் பார்த்தப் பிறகு சிலர் வெளியேறி விட்டனர்.

Photo1142“பிட்வீன் த டூ” – “இரண்டிற்கும் இடையில்” என்ற குறும்-நெடும் படம், ஒரு “நியூஸ் ரீல்” அல்லது “டாகுமென்ரி” பிலிம் போல உள்ளது. எப்படி ஒரு திருநங்கை வெற்றிகரமாக உயந்ர்து வாழ்கிறாள் என்பதைக் காட்டினாலும், அதற்கு இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டு, “நியூஸ் ரீல்” போல செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்தப் பிறகும் சிலர் வெளியேறி விட்டனர்.

Rainbow film festival 2013சரவ் சிதம்பரத்தின் சுயவிளக்கம் பேட்டி மாதிரி இருந்தாலும், அவருடைய மனத்தின் வெளிப்பாடு, அழகான தமிழில் நன்றாக, தெளிவாக, உறுதியாக வெளிப்பட்டது. நிச்சயமாக அவரது வெற்றி மற்றவர்களை ஊக்குவிக்கச் செய்யும், தன்னம்பிக்கையை ஊட்டும். மன-உறுதி இல்லாதவர்கள், தன்னம்பிக்கை வேண்டும் என்கின்றவர்கள் இருதடவை, ஏன் மூன்று முறையும் பார்க்கலாம்.

RFF Apsara Reddy 14-04-2012தேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்சி தொடர்ந்தது. கம்ப்யூட்டரை இயக்கிவந்தவர் சரியாக இயக்கவில்லை. ஒர் படம் ஓடி, அடுத்தப் படம் வருவதற்கே நேரம் எடுத்துக் கொண்டார். அந்நேரத்திலேயே, இன்னொரு குறும்படத்தை ஓட்டிவிடலாம் போலிருந்தது.

வேதபிரகாஷ்

© 08-05-2013


[2] திருக்காளை, திருவாடவன், திருவாடு, திருப்புருடன், திருமகன், திருசுந்தரன், முதலியவை உபயோகத்தில் இல்லை, இருப்பினும் ஆர்வலர்களுக்காகக் கொடுக்கப்படுகின்றன.

[7] Left-wingers protested in Paris on Thursday one day after a group of far-right militants beat a leftist student to death in a busy central Paris district. Clement Meric, 19, a student at the prestigious Sciences Po university, was beaten up near St. Lazare station and taken to hospital with head injuries. He was declared dead on Thursday.

http://news.yahoo.com/protests-held-france-left-wing-student-beaten-death-190049074.html

[9] திருநங்கை மற்றும் டெக்கான் குரோனிகல்ஸ் நாலிதழின் உதவி ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.