Posts Tagged ‘சோதனை’

நடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது!

செப்ரெம்பர் 22, 2016

நடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது!

twists-and-turns-jia-khan-case

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிளம்பியுள்ள கொலையா-தற்கொலையா பிரச்சினை: பாலிவுட் நடிகை ஜியாகான் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அர்த்தத்தில் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது பணம் பெற்று ஆய்வு செய்யும் தனியார் நிறுவனத்தின் முடிவு தான். எனவே, இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஜியா கானின் காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி. இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம் இந்தி நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது[1]. பிரபல இந்தி நடிகை ஜியாகான், தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘கஜினி’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த போது அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தார்[2]. மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பிரச்சினை மறுபடியும், ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

mid-day-cutting-jia-khan-caseஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது: ஜியாகான் 2013–ல் திடீரென்று தூக்கில் பிணமாக தொங்கினார்[3]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியும் ஜியாகானும் தீவிரமாக காதலித்ததும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது[4]. இந்த மனவேதனையால் அவர் தூக்கில் தொங்கி உயிர் இழந்தார் என்றனர். வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளும் இதனை உறுதிபடுத்தினர். ஆனால் ஜியாகான் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறிவந்தனர். இந்த நிலையில் ஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் அறிக்கையை தற்போது சமர்ப்பித்து உள்ளனர். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது. இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jason-payne-james-of-uk-basedதாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தது: நிஷப்த், இந்தி கஜினி உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்தவர் ஜியா கான். 2007ம் ஆண்டு அமிதாப் ஜோடியாக அறிமுகமான இவர், கடந்த 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்ததாகவும், காதலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட மறு மாதமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஜியா கான் வழக்கை விசாரித்த சிபிஐ இது ராபியா கூறுவது போன்று கொலை அல்ல தற்கொலை தான் என்று கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

mothers-charges-jia-khan-caseஜோடிக்கப்பட்ட தற்கொலை என்று இங்கிலாந்து புலனாய்வு நிறுவனம் கூறுவது[5]: சிபிஐ அறிக்கை தாக்கல் செய்த பிறகு ராபியா இங்கிலாந்தை சேர்ந்த பெய்ன் ஜேம்ஸ் [Jason Payne-James of UK-based Forensic Healthcare Services Ltd[6]] என்ற தடயவியல் நிபுணரை அணுகி விசாரிக்குமாறு கூறினார்[7]. அவர் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஜியாவின் சடலத்தின் புகைப்படங்கள், சிசிடிவி வீடியோக்கள், ஜியாவின் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக தங்களது அறிக்கையை பெய்ன் அளித்துள்ளார். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர்[8]. அழுத்தில் உள்ள காயங்களின் அடையாளங்கள் துப்பட்டாவினால் கூட ஏற்பட்டிருக்கலாம், அதாவது, யாராவது, துப்பட்டாவினால், கழுத்தை நெறுத்திருக்கலாம். பிறகு, தற்கொலை செய்து கொண்டது போல, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது.

sooraj-pancholi-abetment-facing-speedy-death-suicide-ht-photoதந்தை-மகன் கூறும் விசயங்கள்: இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா, “இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படும் தனியாருக்குச் சொந்தமானது. எனவே அது ஒருபட்சமான அறிக்கையை அளித்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஜியாவின் மரணம் குறித்து ஆய்வு செய்த பல்வேறு நிறுவனங்கள் அது தற்கொலை தான் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை அறிய நானும் ஆவலாகத் தான் உள்ளேன். ஏனென்றால் என் காதலியை இழந்து நானும் வேதனையில் தான் உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளனர்[9]. சூரஜ் பஞ்சோலி[10], “எந்த குற்றஞ்சாட்டப்பட்டவனும், நீதிமன்றம் விசாரிக்க வேண்டும், விசாரிக்கத் தயார் என்று சொல்ல மாட்டான். ஆனால், நான் தயாராக இருக்கிறேன். இதெல்லாம் என்னுடைய வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, என்னுடைய வழக்கை ஊடகங்கள் தான் விசாரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வழக்கு செல்வதற்கு முன்பே, அவை தீர்ப்பையும் அளிக்கின்றன.” இப்படி ஊடகக்காரர்கள் மீதும் குறைகூறினார்[11].

jiah-khan-funeral

நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்?: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவை அப்பொழுதே உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முடியவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது. அத்தகைய தற்கொலை பட்டியக், இந்திய திரைவுலகில் நீண்டு கொண்டே இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

22-09-2016

pancholi-attended-funeral-of-jia-khan

[1] தினத்தந்தி, வழக்கில் புதிய திருப்பம் நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டாரா? இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரபரப்பு தகவல், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST

[2] http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/09/22010824/Jiyakan-actress-had-been-killed.vpf

[3] பிலிம்.பீட்.தமிழ், நடிகை ஜியா கான் தற்கொலையில் புதிய திருப்பம்: தடயவியல் நிபுணரின் பகீர் ரிப்போர்ட், Posted by: Siva, Updated: Wednesday, September 21, 2016, 17:44 [IST].

[4] http://tamil.filmibeat.com/news/actress-jiah-khan-s-suicide-case-takes-new-turn-042345.html

[5] Times of India, Jiah Khan’s hanging staged: UK expert, Munish Pandey| Mumbai Mirror | Updated: Sep 20, 2016, 08.38 AM IST.

[6] http://www.payne-james.co.uk/new-role-and-overseas-work/

[7] http://timesofindia.indiatimes.com/city/mumbai/Jiah-Khans-hanging-staged-UK-expert/articleshow/54418518.cms

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஜியாகான் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.. காதலர் சூரஜ் நம்பிக்கை, By: Jayachitra, Updated: Thursday, September 22, 2016, 11:46 [IST]

[9] http://tamil.oneindia.com/news/india/jiah-khan-s-hanging-staged-uk-expert-263403.html

[10] The Hindusthan Times, Jiah Khan case: New report suggests suicide was staged, Sooraj Pancholi reacts, HT Correspondent, Hindustan Times, New Delhi, Updated: Sep 21, 2016 14:22 IST

[11] http://www.hindustantimes.com/bollywood/jiah-khan-case-new-report-suggests-suicide-was-staged-sooraj-pancholi-reacts/story-NkyNriCYbnkcgH1l8mYoXK.html