Posts Tagged ‘போலீஸ்’

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

நவம்பர் 14, 2013

சினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா?

சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் அதிக  சம்பளம்  கேட்பது: தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். இப்பொழுது, சின்னத்திரை, பெரியத்திரை என்கிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளவிவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். ராதிகா தரப்பு, கேமராமேன்களுக்கு இப்போதுதான் பத்து சதவீதம் சம்பள உயர்வு அளித்தோம் என்கிறது. ஆனால் கேமராமேன்கள் சங்கம் அதனை ஏற்பதாக இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினால் கேமராமேன்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதுதான் கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனை[1]. இந்த நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் வந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தகராறு செய்வதாக கூறப்பட்டது. இதனால் சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது[2].

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறுகையில், “திரைப்பட படப்பிடிப்பில் வழங்கப்படும் சம்பளம் போன்று நாடக படப்பிடிப்பின் போதும் சம்பளம் வழங்க வேண்டும் என்று சில அமைப்பை சேர்ந்த கேமராமேன்கள் கேட்டு வருகின்றனர். திரைப்படம், வேறு சின்னத்திரை வேறு. இதனால், அதே சம்பளம் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டோம். இதனால், அவர்கள் தகராறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னையில் இனி நடைபெற உள்ள சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். பாதுகாப்பு தருவதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்”, என்றார்[3]. ஆக போலீசர்ருக்கு இனி புதிய கடமைகள் எல்லாம் வந்து விடுகின்றன.

சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து: முன்பு இப்படியெல்லாம் செய்திகள் வந்தன. னிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்பினார்கள்[4]. திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்[5]. பாவம், தமிழர்கள் இதையெல்லாம் படித்து கவலைப்பட்டனர்.

சலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர். சினிமாவை தொழிலாக்கி, அதை அனுபவிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது.  இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார். இப்படியெல்லாம், சலுகைகள் பெறுவதால், சினிமா பார்ப்பவர்களுக்கு எந்த நலனும் இல்லை.

சினிமாக்காரர்கள்  மற்ற தொழில்களில்  ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா தொழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு திணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.

சமூகத்திற்குத்  தேவையான  துறைகளில்  சினிமாக்காரர்கள்  மூலதனம்  போடுவது[6]: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வாதிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.

வியாபாரப் பிரச்சினையை பொது பிரச்சினை ஆக்கமுடியாது: போலீசார் கடமைகளை செய்வது, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்பதெல்லாம் மக்கள் செல்லுத்தும் வரிப்பணத்திலிருந்து நடக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையெடுக்கும் சினிமாக்காரர்கள், இவ்வாறு பாதுகாப்புக் கேட்பது, மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் செயலாகும். அதுமட்டுமல்லாது, மக்கள் சினிமாக்காரர்களால், இரண்டு வழிகளிலும் சுரண்டப் படுவது போல இருக்கிறது. இப்படி இவர்கள் அளவிற்கு மேலாக அரசிடம் சலுகைகள் பெறுவது தடுக்கப் படவேண்டும். ஏனெனில், இவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. ஏழைகளிடமிருந்து பணத்தை உறிஞ்சுபவர்கள்.

© வேதபிரகாஷ்

14-11-2013