Archive for the ‘கற்பு’ Category

பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: கேரள அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறை ஜாம்பவான்கள் மோதிக் கொள்வது ஏன்? (2)

ஜூலை 13, 2017

பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: கேரள அரசியல்வாதிகள் மற்றும் திரைத்துறை ஜாம்பவான்கள் மோதிக் கொள்வது ஏன்? (2)

Bhavana case - Dileep - Pinarai Vijayan

கேரளாவில் செக்ஸ் குற்றங்கள் அதிகமாக இருப்பது ஏன்?: கேரளா படிப்பறிவு கொண்ட மாநிலம் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டாலும், கற்பழிப்பு, பெண்களை இழிவு படுத்துவது போன்ற விவகாரங்களில் மோசமான நிலையில் உள்ளது[1]. கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று பலதடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், பண பலம், மதம் போன்ற காரணிகளால் பல உண்மைகள் மறைக்கப் பட்டு வருகின்றன[2]. ஐஸ்கிரீம் பார்லர் [முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டது], அபயா கன்னியாஸ்திரி [கிருய்த்துவ பாதிரிகள் சம்பந்தப் பட்டது], பற்பல பிடோபைல் வழக்குகள் அத்தகைய வகையில் அடக்கம். இதில் ஆளும் கட்சி-எதிர் கட்சி என்ற பாகுபாடு இல்லை எனலாம். செக்யூலரிஸ போர்வை போர்த்திக் கொண்டாலும், கேரளா பொறுத்த வரையில், கம்யூனலிஸ அரசியலைத்தான் நடத்தி வருகிறார்கள். இவ்விவகாரங்கள் வரும்போது, மல்லுவுட்டும் அரசியல், மதம், அயல்நாட்டு விவகாரங்கள், செக்ஸ் போன்ற விசயங்களால் நாறிக்கிடக்கின்றது. வயதான நடிகர்கள் எல்லோரும் செக்ஸ் கமென்ட் அடிப்பது, பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது, முதலியவை சகஜமாக இருக்கின்றன[3]. படங்களிலும் அத்தகைய வசனங்கள், முதலியன இடம் பெற்றுள்ளன[4]. மம்முட்டி படம் விவகாரத்தில் பெண்கள் கமிஷன் நோட்டிஸும் கொடுத்தது[5]. ஆனால், செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டன[6].

Dileep m- great manipulator

கேரள திரைப்படத் துறையும், அரசியலும், நெருங்கிய உறவுகளும்: நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்றிருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் சொந்தக்காரர்கள், பல தொழிற்சாலைகளில் முதலீடு, என்று கொழுத்தப் பணக்காரர்களாக இருக்கின்றனர். இத்தகைய நெருக்கங்களில், பிணைப்புகளில் பரஸ்பர உதவிகள் இருப்பதை மறுக்க முடியாது. பணம் மற்றும் அரசியல் இவற்றால், எதையும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள். பினாராயி விஜயன், முதலமைச்சர் திலீப் சம்பந்தப்படவில்லை என்பது போல ஊடகங்களின் செய்திகளை மறுத்து வந்தார்[7]. இது பொது மக்களை அதிர்ச்சியடைச் செய்தது. பொதுவாக மனித உரிமைகள் என்றேல்லாம் பேசிவரும் கம்யூனிஸ்ட் முதலமைச்சரின் பேச்சு வினோதமாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியினரின் தொடர்புகளும் சந்தேகிக்கப் பட்டன. நிச்சயமாக எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் என்று நன்றாகத் தெரிந்தது. நடிகர் விசயம் என்பதால், இச்செய்தி அனைவரையும் கவர்ந்துள்ளது, நீதி கேட்டு குரல்களும் எழுந்துள்ளன. அதே சாதாரண பெண் என்றால், செய்திகளும் அமுக்கப் பட்டிருக்கும். சென்னிதாலா, திலீபை ஆதரிக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், ஒரு எம்.பி, இரண்டு எம்.எல்.ஏ [ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள்] முதலியோரை சாடினார்[8]. இவ்வழக்கை திசைத் திருப்ப முயன்றதையும் எடுத்துக் காட்டினார்[9].  ஆரம்ப கட்ட புலன் விசாரணையின் போதே, பல்சார் சுனிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்ற பிரனாய் ராய் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்[10]. காங்கிரஸும் கூட்டாட்சி அரசியலில் ஆட்சியில் இருந்ததால், அவர்களுக்கும் ஆதிக்கம் இருக்கும் என்பதும் நிதர்சனம் தான்.

Bhavana case - Dileep with Suni-Chennithala wants apology from Pinarai Vijayan

திரைப்பட சங்கக்களும், அரசியல்வாதிகளும், உறுப்பினர்களும்: மேலும் அவர்கள் “அம்மா”வின் அதிகார ஸ்தானத்தில் இருக்கிறார்கள்[11]. “அம்மா”வும் திலீப்பை ஆதரித்து வருகிறது[12].  கம்யூனிஸ்ட் கட்சி கே.என்.பாலகோபால் [மார்ச்சிஸ்ட் முந்தைய எம்.பி], பி.கே.ஶ்ரீமதி [இப்பொழுதைய எம்.பி], கே.எஸ்.சபரிநாதன் [எம்.எல்.ஏ] போன்றோர் திலீப்பின் செயலைக் கண்டித்துள்ளனர்[13]. வினயன் என்ற இயக்குனர், “திலீப் ஒரு பெரிய சதிதிட்டம் போட்டும் தீரர், மம்முட்டி, மோஹன்லால் என்று அவரது கையில் வெறும் பொம்மைகள் தாம். பின்னணியில் இவர் அதிகாரத்தின் உச்சத்தை எட்டியுள்ளார். மலையாள திரையுலத்தின் முன்னேற்றத்தை அவர் தான் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்,” என்று திலீப்பின் பலத்தை எடுத்துக் காட்டினார்[14]. எப்படி ஒரு திரைப்படத்திற்கு முன்பணம் வாங்கிக் கொண்டும், நடிக்க மறுத்தார் மற்றும் வெளிப்படையாக, தன்னை எதிர்த்தார் என்பதையும் வினயன் சுட்டிக் காட்டினார்[15]. தனது நிலையினை மாற்றவும் செய்தார், அதாவது, திரையுலகில் அந்த அளவுக்கு பலம் பெற்றிருந்தார். பழி வாங்கத்தான் திலீப் அவ்வாறு பாவனாவை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்று தெரியவரும் நிலையில், அவர் அவ்வாறான ஆளாக இருந்தால், அவர் நடிகராக இருக்கவே தகுதியற்றவர்[16]. வஞ்சம், பழிவாங்கும் எண்ணம் ஒரு கலைஞனுக்கு இருக்கக் கூடாது. தனக்கு சாதகமாக இல்லாதவர்களின் மீது அத்தகைய காழ்ப்புணர்வைக் கொண்டிருந்தார் என்ற அரசியல் தீயதாகும், என்றார்[17].

Is there any nexus between politicians and cine actors and members in Kerala

கேரளாவில் அரசியலும், சினிமா துறையும் மோதுகிறதா?: பணம் மற்றும் அதிகாரம் வைத்துக் கொண்டு யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்று இப்பொழுது பினாராய் விஜயன் கூறுகிறார்.  முன்பு அப்படி சொன்னீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும், குற்றவாளி கைது செய்யப்படுவதுதான் முக்கியம் என்றார். மற்றவர்கள் மீதான குற்றம் மெய்ப்பிக்கப் பட்டால், இனி, மேலும் கைது செய்யப்படுவார்கள், என்றார். இதனிடையே, முந்தைய முதலமைச்சர், வி.எஸ். அச்சுத்சானந்தம் மலையாள திரைத்துறையில் உள்ள நிதி பரிமாற்றங்கள் எல்லாம், நன்றாக சோதிக்கப்படவேண்டும். நடிகர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதியான முகேஷ், இன்னோசென்ட் மற்றும் கணேஷ்  இவ்வழக்கில் தமது பொறுப்பை மறுக்க முடியாது. அப்படி செய்தால், மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ள தகுதியை இழப்பார்கள், என்றார்.

©  வேதபிரகாஷ்

13-07-2017

Is there any nexus between politicians and cine actors and members in Kerala-Mohanlal

[1] The Huffington Post, Actor Dileep’s Arrest Exposes The Dark Side Of Malayalam Movie Industry:Misogyny, monopoly, rancour and criminalisation of cinema, 11/07/2017 3:40 PM IST

[2] http://www.huffingtonpost.in/2017/07/11/actor-dileeps-arrest-exposes-the-dark-side-of-malayalam-movie-i_a_23024672/

[3] News.10.com, Women’s Commission Issues Notice To ‘Kasba’ Makers, Mammootty, PTI, Upated:July 20, 2016, 7:44 AM IST.

[4] http://www.news18.com/news/movies/womens-commission-issues-notice-to-kasba-makers-mammootty-1271632.html

[5] The Huffington Post, The Only Thing Worse Than Mammooty’s On-screen Sexism Is His Hypocrisy, A Real Shame,  20/07/2016 9:17 PM IST | Updated 20/07/2016 11:46 PM IST.

[6] http://www.huffingtonpost.in/2016/07/20/the-only-thing-worse-than-mammooty-s-on-screen-sexism-is-his-hyp_a_21435704/

[7] The state’s TV channels relentlessly speculated the possible involvement of Dileep and wanted the government to pursue the larger conspiracy angle even as the chief minister Pinarayi Vijayan dismissed such a possibility and asserted that it was a crime that “originated in the head” of the driver.

http://www.huffingtonpost.in/2017/07/11/actor-dileeps-arrest-exposes-the-dark-side-of-malayalam-movie-i_a_23024672/

[8] OnMalayalaManorama, Dileep arrested, but Congress seeks CM Pinarayi’s apology. Here’s why, Tuesday 11 July 2017 08:09 AM IST, by PTI.

[9] Leader of the Opposition in the state assembly, Ramesh Chennithala said that it should be probed if people’s representatives and office bearers of Association of Malayalam Movie Artistes (AMMA) viz. Innocent, Mukesh and Ganeshkumar, have any role in the conspiracy related to the actor abduction.  “The over-enthusiasm shown by them to protect and defend Dileep is doubtful. It is an MP and two MLAs of the ruling front who have tried to mislead the case. If the conspiracy has to be brought to light fully, their role should be probed. Innocent has no moral right to continue as AMMA president,” Chennithala said in a statement.

http://www.thenewsminute.com/article/politicians-actors-how-kerala-reacting-dileeps-arrest-64994

[10] In a statement here, leader of opposition in the Kerala Assembly Ramesh Chennithala said Vijayan had stated during the initial stage of the probe that there was no conspiracy angle in the case and it  was a “figment of imagination” of the prime accused, ‘Pulsar’ Suni. The Congress leader alleged that this statement of the chief minister had “affected” the investigation.

http://english.manoramaonline.com/news/kerala/2017/07/11/dileep-actress-attack-congress-apology-cm-pinarayi.html

[11]  Three key officer-bearers — an MP and two MLAs backed by the CPM — declared their support for Dileep and were categorical that the actor was being wilfully victimised. In fact, instead of focusing on the conspiracy against the actress, AMMA appeared to have been more interested in the alleged conspiracy against Dileep. The head of FEFKA also dismissed the charges against Dileep as speculative. AMMA even failed to convene a special session to discuss the issue despite requests from a few members. In retrospect, AMMA has unpardonably equated the survivor with the alleged perpetrator (Dileep).

http://www.huffingtonpost.in/2017/07/11/actor-dileeps-arrest-exposes-the-dark-side-of-malayalam-movie-i_a_23024672/

[12] Firstpost, From politicians to actors, how Kerala is reacting to Dileep’s arrest, Tuesday, July 11, 2017, 09.54.

[13] http://www.thenewsminute.com/article/politicians-actors-how-kerala-reacting-dileeps-arrest-64994

[14] Times of India, Dileep is a master manipulator and Mohanlal, Mammootty were just puppets in his hands: Vinayan, Sanjith Sidhardhan| Updated: Jul 11, 2017, 04.28 PM IST.

[15] http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/actor-dileep-is-a-master-manipulator-and-mohanlal-mammootty-were-just-puppets-in-his-hands-vinayan/articleshow/59544962.cms

[16] When it compared to politics, the vendetta existing in cine world is much worse, opined director Vinayan. He was responding to the news of actor Dileep’s arrest in connection with actress abduction and attack case in Kochi. “If the allegations against Dileep are true, he is unfit for the profession. Venegeance is not suitable for an artist. Unfortunately, he nurtures politics of vendetta towards those who are not in his good book,” Vinayan said.

http://english.mathrubhumi.com/news/kerala/cine-world-in-grip-of-vendatta-says-vinayan-1.2076305

[17] english.mathrubhumi.com,Cine world in grip of vendatta, says Vinayan, Published: Jul 10, 2017, 07:28 PM IST.

திலீப்பின் கைது தாமதம் ஏன்?: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்?

ஜூலை 12, 2017

திலீப்பின் கைது தாமதம் ஏன்?: பாவனா பாலியல் பலாத்காரன் வழக்கு: படிப்பறிவு அதிகமாக உள்ள கேரளாவில் பெண்கள் அதிகமாக கற்பழிக்கப்படுவது ஏன்?

Bhavana case - Dileep arrested- 10-07-2017

திலீப்பின் குற்றப்பங்கும், கைதும்: முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப், கடந்த மாதம் போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். அதன்பேரில், அவரிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பு போலீசார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவருடைய மேலாளர் அப்புன்னி, டைரக்டர் நாதிர் ஷா ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. அதையடுத்து, திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. பல்சர் சுனில், திலீப்புக்கு எழுதிய கடிதம் வெளியானது. பல்சர் சுனிலுக்கும், திலீப்பின் மேலாளர் அப்புன்னிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியானது. மேலும், கடந்த நவம்பர் மாதம் 2016 திலீப் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரூ.50 லட்சம் கூலிக்காக, நடிகை பாவனாவை கடத்தியதாக பல்சர் சுனில், போலீசாரிடம் தெரிவித்தான். பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன் நடத்தும் கடையின் ஊழியரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் பல்சர் சுனில் தெரிவித்தான்.

Bhavana case - Dileep with Suni

காவ்யா மீதான சந்தேகம், வீடியோ ஆதாரம் திலீப்பை மாட்ட வைத்தது: பல்சர் சுனியின் வாக்குமூலம் முக்கியமாக அமைந்தது. திலீப் குற்றவாளியோடு இருந்த புகைப்படங்களும் முடிவுக்குக் கொண்டு வந்தன. இதனால், காவ்யா மாதவன் மீதும் சந்தேகம் உருவானது. அவரது கடையில் போலீசார் சோதனை நடத்தினர். திலீப்பை கைது செய்யும் முடிவு, ஒரு வாரத்துக்கு முன்பே, போலீஸ் டி.ஜி.பி. லோகநாத் பெகரா தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக, சிறப்பு விசாரணை குழு தலைவர் தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து, நடிகர் திலீப் 10-07-2017 [திங்கட்கிழமை] அன்று கைது செய்யப்பட்டார்[1]. அதாவது, அரசியல், பணபலம் முதலியவற்றைக் கொண்ட “சூபர் ஸ்டார்” வகை திலீப்பை கைது செய்ய, போலீஸாரே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், முதலமைச்சர், திலீப்பிற்கு எதிராக ஊடகங்கள் கொடுக்கும் விவரங்களை மறுத்தார் என்பதும், கைது தாமதத்திற்கு காரணம் ஆகிறது.

Mollywood acts tough against Dileep - The Hindu- 12-07-2017

திலீப் சதித்திட்டம் தீட்டியதற்கான பின்னணி குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது[2]: “நடிகர் திலீப், அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒருகட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல் வயப்பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2–வது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களை பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தை கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க பல்சர் சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டது. அது அம்பலம் ஆனதால், திலீப் கைது செய்யப்பட்டார்”,இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. நடிகைகளை மாறி-மாறி காதலிப்பது, விவாகம் செய்து கொள்வது, விவாக ரத்து செய்வது, வியாபார நோக்கமா, தொழில் தர்மமா, சதிதிட்டமா?

Plot hatched in 2013 The Hindu- 12-07-2017

2013லில் போட்ட திட்டம் 2017ல் நிறைவேற்றப்பட்டது[3]: 2013லேயே பாவனாவை பாலியல் ரீதியில் தாக்க திலீப் திட்டம் போட்டதாக, போலீஸார் தெரிவிக்கின்றனர். குமார் என்பவனுடன் கொச்சினில் ஒரு ஓட்டலில் மார்ச் 26 மற்றும் ஏப்ரல் 7 2013 காலத்தில் தன்கியிருந்த போது, சுனில் குமார் என்ற அல்சார் சுனி என்பவனிடம் ரூ.1.5 கோடிக்கு திலீப் ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர். அதன்படி, ரூ.10,000/-த்தை ஒரு பி.எம்.டபிள்யூ காரில் திரிசூரில் முன்பணமாக கொடுத்தான். பாவானவை பிடிக்க மூன்று இடங்கள்ல் ஒத்திகை பார்க்கப்பட்டது[4]:

  1. திரிசூர் டென்னிஸ் கிளப் [the Thrissur Tennis Club on November 13, 2016],
  2. சி.ஐ.எப்.டி ஜங்ஸன், தொப்பும்படி[at CIFT Junction, Thoppumpady, on November 8, 2016], மற்றும்
  3. தொடுப்புழா [at Thodupuzha on November 14, 2016].

பி. கோபால கிருஷ்ணன் என்கின்ற திலீப்பை 11வது குற்றவாளியாக, குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப் பட்டு, மாஜிஸ்ட்ரேடிடம் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Bhavana case - Dileep - related news-Malayalam

பெண்ணின் கற்பா, வியாபாரமா எது முக்கியம் என்றால், வியாபாரம் என்பது போல செய்தி: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதால், சுமார் ரூ.50 கோடி மதிப்பளவிலான படங்கள் பாதியில் நிற்கின்றன, என்று மிக்கக் கவலையோடு “தமிழ்.இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மலையாள திரையுலகம், வரப்போகும் நாட்களில் நடக்கவுள்ள நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்துக் காத்திருக்கிறது. திலீப்பின் அடுத்த வெளியீடாக இருந்தது ‘ராம்லீலா’. அருண் கோபி இப்படத்தை இயக்கியுள்ளார். ஜூலை முதல் வாரத்தில் வெளியாவதாக இருந்த ‘ராம்லீலா’வின் வெளியீட்டுத் தேதி ஜூலை 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ரூ.15 கோடியில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. திலீப்பின் கைதால் இப்படம் இன்னும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரிடம் பேச முயற்சித்தபோது, பதில் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு பெண்ணைக் கடத்தி கற்பழித்து, ஆபாசம் படம் எடுத்ததைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது விசித்திரமே.

Bhavana rape case - Dilip arrested-Indian Express- 12-07-2017

புதிய படங்கள், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்[5]: கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ் குமார் இதுகுறித்துப் பேசும்போது, ”நடிகர் திலீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 4 படங்கள் வெவ்வேறு நிலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பிரபல ஒளிப்பதிவாளர் ராமசந்திர பாபுவின் இயக்கத்தில் ‘புரொஃபசர் டிங்கன்’, ரத்தீஷ் அம்பத் இயக்கும் ‘கம்மர சம்பவம்’, திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷா இயக்கும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன. இவற்றில் ‘புரொஃபசர் டிங்கன்’ மற்றும் ‘கம்மர சம்பவம்’ ஆகிய படங்களின் தயாரிப்பு தலா ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் 11-07-2017 [செவ்வாய் கிழமை] நடந்த “அம்மா” கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி, [Malayalam actors’ guild Association of Malayalam Movie Artistes (AMMA) ]திலீப் கைதானதை அடுத்து, அவர் கேரள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[6]. இதையெடுத்து திரையூழியர் அமைப்பு சங்கமும் [Kerala Film Producers Association and Film Employees Federation of Kerala (FEFKA)] இவரது அடிப்படை அங்கத்தினர் நிலையை ரத்து செய்தது[7]. கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, வெளியே போராட்டம், போலீஸ் பாதுகாப்பு இருந்தன[8].

©  வேதபிரகாஷ்

12-07-2017

Bhavana case - Pulsar Suni selfie with Dilip actor- is he lying

[1] தினத்தந்தி, நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் பிரபல நடிகர் திலீப் கைது, ஜூலை 11, 2017, 05:45 AM.

[2] http://www.dailythanthi.com/News/India/2017/07/11052200/Actress-Bhavana-is-turning-to-the-issue-of-smugglingPopular.vpf

[3] The Hindu, Plot to assault actor hatched in 2013: SIT, Kochi. July 11, 2017; Updated: July 12, 2017.

[4] http://www.thehindu.com/news/national/kerala/conspiracy-to-assault-female-actor-hatched-in-2013/article19258675.ece

[5] தி.இந்து.தமிழ், நடிகர் திலீப் கைது: ரூ.50 கோடி மதிப்புள்ள படங்கள் என்னவாகும்?, கிருஷ்ணகுமார், Published: July 11, 2017 14:08 ISTUpdated: July 11, 2017 14:10 IST.

[6]http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8250-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article9759387.ece

[7] Indian Express, Malayalam actress abduction case: AMMA disowns Dileep following his arrest, Written by Manoj Kumar R | Bengaluru | Published:July 11, 2017 1:47 pm.

[8] http://indianexpress.com/article/entertainment/malayalam/malayalam-actress-abduction-case-amma-disowns-dileep-following-his-arrest-4745490/

நடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்?

ஜூலை 3, 2017

நடிகை பாவனா பாலியல் பலாத்காரம் வழக்கு: வலை பெரிதாகிறது, சிக்குவோர் யார்?

women-travelling-in-a-car-be-careful

திலீப்காவ்யா பிரிவுக்கு காரணமாகத்தான் பாவனா கடத்தப் பட்டாரா?: நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி, 2017, படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாவனாவிடம் ஏற்கனவே கார் ஒட்டுனராக பணிபுரிந்த பல்சர் சுனில் இதில் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. எனவே, அவரோடு மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   மேலும், இந்த வழக்கில், நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியானது. படப்பிடிப்புகளில் திலீப், காவ்யா மாதவன் நெருக்கமாக பழகி வருவதை மஞ்சு வாரியாரிடம் சொல்லி அவர்களின் பிரிவுக்கு பாவனா காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்க நடிகர் திலீபின் ஏற்பாட்டில் பாவனா கடத்தப் பட்டார் என்று குற்றம் சாட்டப் படுகிறது. இந்த குற்றச்சாட்டை திலீப் மறுத்து வருகிறார்.

Bhavana case - Pulsar Suni selfie with Dilip actor- is he lying

பல்சார் சுனி, திலீப்பிற்கு மிரட்டல் எழுதியது: அந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பல்சுனி சுனில், நடிகர் திலீப்பிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தனக்கு ஒன்றரை கோடி பணம் தரவில்லையெனில் உண்மையை போலீசாரிடம் கூறுவேன் என கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. எனவே, சமீபத்தில் திலீப்பிடம் போலீசார் 12 மணி நேரம் விசாரணை செய்தனர். இந்நிலையில், அவரின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் நடத்தும் ஆடை நிறுவனத்தில் கடந்த ஜூலை. 1ம் தேதி 2017 போலீசார் திடீர் சோதனை நடத்தினர்[1].  கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலின் நண்பன் ஜின்சன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் இந்த அதிரடி சோதனையை போலீசார் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது[2].

Bhavana case - role of Kavya Madhavan

சிம்கார்டு காவ்யா மாதவன் கம்பெனியில் இருந்ததா? 01-07-2017 அன்று சோதனை:  பாவனாவை கடத்திய போது பல்சர் சுனியும் கூட்டாளிகளும் அவரை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்கள் அடங்கிய மெமரி கார்டு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பல்சர் சுனி போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவன அலுவலகத்தில் செல்போன் மெமரி கார்டை அளித்ததாக கூறியுள்ளார்[3]. கொச்சி அருகே காகநாட்டில் உள்ள நடிகை காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் கடந்த மே 30ம் தேதி போலீஸார் சோதனை நடத்தினர். அங்குள்ள கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா பதிவுகள் பல மணிநேரம் ஆய்வு செய்யப்பட்டன[4]. பாவனா வழக்கில் நடிகர் திலீப்பை தொடர்ந்து, அவரது மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhavana case - Pulsar Suni selfie with Dilip actor- complained to police

திலீப், நாதிர்ஷா கொடுத்த புகார்கள், போலீஸ் 30-06-2017 அன்று விசாரணை: இதனிடையே கேரள மாநில டி.ஜி.பி.யிடம், திலீப் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சிறையில் இருக்கும் சுனில் தன்னை இந்த வழக்கில் இருந்து தப்ப வைப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் எழுதி இருப்பதாக கூறியிருந்தார்[5]. இதேபோல் திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான நாதிர்ஷாவும் போலீசில் கொடுத்த புகாரில், ‘சுனிலின் நண்பர் விஷ்ணு என்பவர் தன்னை தொடர்பு கொண்டார். பாவனா கடத்தல் வழக்கில் திலீப்பை சிக்க வைக்க பலரும் எங்களுக்கு பணம் கொடுக்க தயாராக உள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவரை காப்பாற்ற பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்’ என கூறியிருந்தார். இதே போல் திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கும் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த திலீப், நாதிர்ஷா, அப்புண்ணி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி கொச்சி போலீஸ் கிளப்பில் 30-06-2017 அன்று மதியம் 12.30 மணிக்கு 3 பேரிடமும் கூடுதல் டி.ஜி.பி. சந்தியா தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணையைத் தொடங்கினர்[6]. இவர்களிடம்  நடத்தப்பட்ட விசாரணை நள்ளிரவு 1.05 வரை நீடித்தது. அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். போலீசார் அவர்களிடம் துருவித் துருவி நடத்திய விசாரணையில் இந்த வழக்கு குறித்து மேலும் பல உண்மைகள் வெளிவந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.

Bhavana case - Pulsar Suni selfie with Dilip actor

சிம் கார்டுகளும், செல்பீக்களும்: பிப்ரவரி 2017ல் ஓதனையிட்டபோதே, இரண்டு-மூன்று சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. போலீஸார், பல்சார் சுனில் நண்பன் மனு வீட்டில் சோதனையிட்டபோது, ஒரு சிம் கார்டை கண்டெடுத்தனர்[7]. ஆனால், அதுதான், சுனில் உபயோகித்ததா என்று தெரியவில்லை[8]. பிரியேஷ் வீட்டில் சோதனையிட்டபோதும், இரண்டு மெமரி கார்ட், பென் டிரைவ் முதலியவை கைப்பற்றப்பட்டன என்று தெரிந்தது[9]. சுனி தான் அந்த சிம் கார்டை, டிரைனேஜில் போட்டு விட்டதாக சொன்னான்[10]. பிறகு, எத்தனை சிம்கார்டுகள் இருந்தன, எவற்றில் அப்படங்கள்-வீடியோ இருந்தன என்று தெரியவில்லை. திலீப் தொடர்ந்து, தனக்கு பல்சார் சுனி யாரென்றே தெரியாது என்று சொல்லிவந்த நிலையில், திலீப் நடித்த ஒரு படத்தின் லொகேஷனில் இருந்தது போன்ற செல்ஃபி புகைப்படங்கள் தெரியவந்துள்ளன[11]. இதனால், பாவனா வழக்கில் திலீப்பின் பங்கு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது[12].

© வேதபிரகாஷ்

03-07-2017.

uber-car-driver-rape-delhi-mathura

[1] வெப்துனியா, நடிகை பாவனா கடத்தில் வழக்கில் காவ்யா மாதவனுக்கு தொடர்பா? – போலீசார் விசாரணை, Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (11:41 IST)

[2] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/police-enquiry-with-kavya-madhavan-in-bhavana-case-117070300014_1.html

[3] தி.இந்து.தமிழ், பாவனா கடத்தல் வழக்கு: நடிகை காவ்யா மாதவன் அலுவலகத்தில் சோதனை, Published: July 3, 2017 07:40 ISTUpdated: July 3, 2017 07:46 IST.

http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article9745593.ece

[4]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article9745593.ece

[5] ஈநாடு.இந்தியா, பாவனா கடத்தல் வழக்கு: திலீப்பிடம் போலீசார் 13 மணி நேரம் தீவிர விசாரணை, Published 01-Jul-2017 11:00 IST

http://tamil.eenaduindia.com/Entertainment/OtherEntertainment/2017/07/01110048/Bhavana-Kidnap-case-Police-Interrogated-Actor-Dileep.vpf

[6] http://cinema.dinamalar.com/tamil-news/60673/tamil-news/Why-raid-at-Kavya-Madhavans-office.htm

[7] Manorama.online, Actress attack: police find memory card from Pulsar Suni’s friend’s house, Tuesday 28 February 2017 10:39 PM IST.

[8] http://english.manoramaonline.com/news/kerala/actress-attack-pulsar-suni-phone-memory-card-sim-card.html

[9] Manorama.online, Crucial evidence? Cops find memory cards from house Pulsar Suni visited on night of crime, Saturday 25 February 2017 06:02 PM IST

http://english.manoramaonline.com/news/kerala/memory-card-pen-drive-pulsar-suni-found-actress-attack.html

[10] http://english.manoramaonline.com/news/kerala/memory-card-pen-drive-pulsar-suni-found-actress-attack.html

[11] India Samvad, Bhavana abduction case gets ugly as pics of actor Dileep with accused goes viral, 3 July 2017, 03:06 PM

[12] The alleged involvement of Malayalam superstar Dileep in the infamous abduction and molestation case of actress Bhavana is getting support from the recently surfaced pictures of him with accused Pulsar Suni. The photos surfaced online and quickly went viral on social media. These pictures were then aired on most of the TV channels adding fuel to the speculations that Dileep might be a part of the conspiracy of abduction and molestation of the actress. In the viral picture, Pulsar Suni is seen in a selfie at the shooting locations of one of the films starring Dileep in the lead role. On the other hand, Dileep has maintained his stance that he does not even know anyone by the name Pulsar Suni.

http://www.indiasamvad.co.in/entertainment/photos-of-dileep-with-pulsar-suni-goes-viral-22905

சன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன? – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா?

மே 24, 2017

சன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன? – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா?

Sunny leone-1

சன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன?: என்னத்தான் கவர்ச்சி என்ற பெயரில் உடலைக் காட்டி நடித்தாலும், “போர்னோகிராபி” என்றால் சினிமாகாரர்களே அலறுவது, திகைப்பாக இருக்கிறது. “என்னை முழுமையான நடிகையாக இந்திப் பட உலகம் ஏற்கவில்லை. வெறும் செக்ஸ் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள். என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள்”, என்று வருத்தப்பட்டுள்ளார் சன்னி லியோன்.  எப்பொழுதும் அம்மாதிரி உடலை, குறிப்பாக மார்பகங்களை தாராளமாகக் காட்டிக் கொண்டிருந்தால், பார்ப்பவர்களுக்கு வேறெந்த நினைப்பு வரும்? “செக்ஸ் நடிகை” என்று தான் பார்ப்பார்கள். “……என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள்”, என்று வருத்தப்பட்டுள்ளார் என்றால், யோசிக்க வேண்டியுள்ளது.  நடிகன் என்றால் 30-50 நடிகைகளுடன் நடிக்கத் தான் செய்வான், காதல்-டூயட் என்றால் கட்டிப் புரளுவான், மெலே படுப்பான், முத்தம் கொடுப்பான்……….இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடிகை என்றாலும் அதே நிலைதான். போதாகுறைக்கு, அவர்கள் “குத்தாட்டம்” போடவேண்டும், அந்தாட்டத்தில், நாய், பூனை, புலி போன்று நடந்து, புரண்டு காட்டியாக வேண்டும்.

Sharukh khan and his wife Gauri khan

சன்னி லியோனுடன் தமது கணவர்கள் நடிக்க, மனைவிகள் பயப்பட வேண்டிய அவசியம் என்ன?: அதாவது, சினிமாவில் நடிக்கும் நடிகன் ஒன்றும் உத்தம புருஷனாக இருப்பது அதிசயம். அது போன்று தான் நடிகையின் நிலையும். இருப்பினும், அவர்கள் தாம்பத்தியத்தைத் தாண்டி பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை. சேர்ந்து நடித்தால், படுத்து விடும் நிலையில் சன்னி இல்லை, ஏனெனில், அவர் ஏற்கெனவே நன்றாக சம்பாதித்துள்ளார். ஆகவே, இவர்கள், பயப்படுவது, பணவிசயம் அல்ல. பொறாமை தான். அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்து கொடிகட்டிப் பறந்தவர் சன்னி லியோன். இவரது ஆபாச, செக்ஸ் வீடியோக்கள் இன்னும் ஏக டிமாண்டில் போய்க் கொண்டிருக்கின்றன. ஆபாசப் படங்களில் நடித்து அவார்டெல்லாம் வாங்கியவர் இந்த சன்னி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். திடீரென ஒரு நாள் இந்திப் படங்களில் நடிக்க முடிவு செய்து மும்பைக்கு வந்தார். ஜிஸ்ம் 2 படத்துக்குப் பிறகு இந்தியில் தனக்கென ஒரு இடம்பிடித்துவிட்டார். கோடிகளில் சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்யத் தயாராகத்தான் உள்ளனர். தமிழ், தெலுங்கில் கூட நடித்துவிட்டார் சன்னி.  ஒரு பாட்டில் ஆடுவதற்கே கோடியில் பணம் பெறுகிறார்.

Sunny leone-2

2015ல் சன்னி லியோனின் நிலையும், நடிகர்களின் மனைவிகளும்: இருந்தாலும் அம்மணிக்கு பெரும் வருத்தம் இருக்கிறது. அதுபற்றி அவரே இப்படிக் கூறியுள்ளார்[1]: “இந்திப் படங்களில் பிசியாகத்தான் நடிக்கிறேன். ஆனாலும் பட உலகினரும் ரசிகர்களும் என்னை இழிவாகவே பார்க்கிறார்கள். முழுமையான நடிகையாக என்னை ஏற்கவில்லை. செக்ஸ் நடிகை என்று ஒதுக்குகிறார்கள். இந்தி கதாநாயகர்கள் என்னுடன் நடிக்கக் கூடாது என்று அவர்களின் மனைவிகள் தடைவிதிக்கிறார்கள். அவர்களின் கணவன்மார்களை என் வலையில் விழவைத்து அபகரித்து விடுவேன் என்ற அச்சம் அவர்களுக்கு. நான் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்கள் கணவன்கள் எனக்குத் தேவை இல்லை. எனக்கு கணவன் இருக்கிறார். நான் அந்த மாதிரி ஆளும் அல்ல. என்னவோ அவர்களின் கற்பை நான் அபகரித்துக் கொள்வதைப் போல, சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட எனக்கு வாய்ப்பு தர பயப்படுகின்றன. நான் ஒரு முழுமையான நடிகையாகத் திகழ விரும்புகிறேன். என்னிடம் கவர்ச்சி மட்டுமல்ல, நடிப்புத் திறமையும் உள்ளது. பயன்படுத்த வாய்ப்பு கொடுங்கள்,” என்று கூறியுள்ளார் சன்னி லியோன்[2].

Amir khan and his wife Kiran Rao

படுக்கையறைக்கு போனால், படுத்திருக்கும் பெண்ணிடம் கத்தி இருக்கிறதா இல்லையா என்று சரிபார்க்க வேண்டுமா?: இரண்டாண்டுகளுக்கு முன்னர் அந்த செய்தி என்றால், இரண்டாண்டுகளுக்கு பின்னரும், அதே செய்தியை வெளியிட்டு ஏமாற்றுகிறார்களா அல்லது உண்மையிலேயே அத்தகைய நிலைமை உருவாகியிருக்கிறதா என்று தெரியவில்லை. சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று பாலிவுட்டின் பெரிய நடிகர்களுக்கு அவர்களின் மனைவிமார்கள் உத்தரவிட்டுள்ளார்களாம்[3]. அப்படி மீறி நடித்தால், ‘அதை’ அறுத்து வீசிடுவேன் என்று சூப்பர் ஸ்டாரை மனைவி மிரட்டியதாக செய்தி வெளியிடப்பட்டது[4].  இது ஏதோ தமாஷாக இருக்கிறாது. இப்பொழுது தான், கேரளாவில், ஒரு 23-வயது இளம்பெண் எட்டாண்டுகளாக செக்ஸ் வைத்துக் கொண்டு, திடீரென்று, 19-05-2017 அன்று கத்தியினால், அந்த ஆளின் ஆணுறுப்பை வெட்டிவிட்டதாக வந்துள்ள செய்தி, அதிரடியாக உள்ளது. இனி ஒவ்வொரு ஆணும் படுக்கையறைக்கு போனால், படுத்திருக்கும் பெண்ணிடம் கத்தி இருக்கிறதா இல்லையா என்று சரிபார்த்து விட்டு தான் படுக்க முடியும் போலிருக்கிறது.

Sunny leone-3

2017ல் சன்னி லியோனின் நிலையும், நடிகர்களின் மனைவிகளும்[5]: வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடித்தாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கிறது. மேலும் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து சன்னி கூறியிருப்பதாவது[6], “பாலிவுட் நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள்[7]. காரணம் அவர்களை மனைவிமார்கள் மிரட்டி வைத்துள்ளார்களாம். எனக்கு உங்க புருஷங்க தேவையில்லை என்பதை அவர்களின் மனைவிகளிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்[8]. எனக்கு தங்கமான புருஷன் இருக்கார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் செக்ஸியானவர். அவர் என் தேவைகள் அனைத்தையும் திருப்திகரமாக பூர்த்தி செய்கிறார். எனக்கு யார் புருஷனும் வேண்டாம். எனக்கு வேலை வேண்டும்[9]. அவ்வளவு தான். நான் பணியாற்றும் பல நடிகர்கள் திருமணமானவர்கள். அவர்களின் மனைவிகளை சந்திக்கும்போது எங்களுக்கு இடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுகிறார்கள். ஷாருக்கானின் ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று போன் வந்தபோது ராங் நம்பரை அழைத்துவிட்டார்கள் என நினைத்தேன். ஷாருக்கான் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் சன்னி லியோன்[10].

© வேதபிரகாஷ்

24-05-2017

Sunny leone-4

[1] பிளிமி.பீ.தமிழ், என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள்சன்னி லியோன் வருத்தம், Posted by: Shankariva, Updated: Friday, March 27, 2015, 17:06 [IST].

[2] http://tamil.filmibeat.com/heroines/sunny-leone-is-unhappy-with-hindi-stars-033764.html

[3] லைவ்டே, சன்னி லியோன் கூட நடிச்சாஅதைஅறுத்து வீசிடுவேன்: சூப்பர் ஸ்டாரை மிரட்டிய மனைவி, May 23, 2017

[4] https://liveday.in/cinema/cinema-c2/sunny-leone-2/

[5] Do you know one secret about Sunny Leone? The secret is, the wives of the mainstream actors of Bollywood are not allowing their husbands to act along with Sunny Leone. Hearing strange na? There is another sad side to this happening. Know what? Sadly, this has deprived the actress from getting good quality work. However, Sunny Leone feels that the whole thing is just funny and she has said in an interview, “I was told that a lot of male mainstream actors in Bollywood are scared to work with me because they have a wife or this and that. And I want to tell their wives, ‘I don’t need your husband. I have one husband my own. I love him. He’s hot, he’s sexy. He fulfills all my needs in every manner, emotionally and everything. I don’t want your husband.’ I want to do my job and to go home with My husband, not yours.” “Most of the male artists I worked with are married, and when I meet their wives, I usually get along with them more than the boys,” said Sunny Leone. “But still, I do believe that there is some insecurity for sure,” joked Sunny Leone. “I just want to tell them, “I don’t want your husband or boyfriend. I have the most amazing husband in the world,” Says the 36-Year-old actress. When the makers of the movie ‘Raees’ contacted her to work with Shahrukh Khan for a song, Sunny said, “I thought they dialed a wrong number.”

[6] பிளிமி.பீ.தமிழ், சன்னியுடன் நடிச்ச, சங்க அறுத்துருவேன்: நடிகர்களை மிரட்டும் மனைவிகள்,Posted by: Siva, Updated: Tuesday, May 23, 2017, 10:49 [IST].

[7] சமயம், உங்க புருஷங்க எனக்கு தேவையில்லைசன்னி லியோன்!,  TNN | Updated: May 23, 2017, 04:29PM IST.

[8] “I hope different people in Bollywood industry starting with three Khans (Shahrukh, Aamir and Salman) and others decide to work with me.” “Shahrukh Khan has taken a leap of faith by working with me, giving me a chance. I feel so happy,” said Sunny Leone. Now, we have an advice to the wives of mainstream actors of Bollywood, Please grant sanction to your husbands to work with Sunny Leone. Karenjit Kaur Vohra, that is the actual name of Sunny Leone, and Shahrukh Khan shook a leg for the song ‘Laila Main Laila’ in Raees. Sunny Leone was at the peak of her excitement when Raees film-makers offered her the opportunity to share screen space with Shahrukh Khan. Sunny Leone is a happily married woman with the love of her life Daniel Weber. Many wives of mainstream actors feel insecure to allow their husbands to work with Sunny Leone. It’s good that Sunny Leone has cleared the air about her work and we hope she’ll star with the Khan’s sooner or later.

[9] http://tamil.samayam.com/tamil-cinema/movie-news/no-need-your-husbands-i-have-says-sunny-leone/articleshow/58806390.cms

[10] http://tamil.filmibeat.com/news/bollywood-a-list-actors-wives-warn-them-against-sunny-leone-046429.html

நடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்!

மே 21, 2017

நடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் கஸ்தூeping-around-ரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வதுமுன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்!

Lakhsmi Raai - casting cauche-1

நடிப்பிற்காக நடிகைகளும் ஒல்லியாகுவது, எடை போடுவது முதலியன: தொழிலுக்காக நிரம்பவும் கஷ்டப்படுகிறார்கள், உழைக்கிறார்கள் என்பது போல நடிக-நடிகையர்களின் நடிப்பு சித்தரித்துக் காட்டப்படுகிறது. சமீபகாலத்தில் நடிகர்கள் தான், தாம் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றப் படி, உடம்பை குறைத்துக் கொள்வது- அதிகமாக்கிக் கொள்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இப்பொழுது நடிகைகளும் செய்து வருகிறார்கள் போலும். பாகுபலிக்கு, அனுஷ்கா செய்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுது, ராய் லட்சுமி ராய் முறை போலும். இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார்[1]. “நடிக்க வேண்டும் என்பதற்காக படங்களை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூலி 2 இந்தி படத்தில் பிசியாக இருந்துவிட்டேன். ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். ஜூலி 2 படத்தால் கோலிவுட் மற்றும் டோலிவுட் பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது”.

Lakhsmi Raai - casting cauche-2

நான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம்: லக்ஷ்மி ராய் சொல்கிறார்,நான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம். மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று மம்மூட்டி சாரின் படம். நான் ஒல்லியாக இருப்பதால் அந்த வாய்ப்புகள் கை நழுவிப் போனது. ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன். உடல் எடையை ஏற்றி, ஏற்றி குறைத்ததில் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இந்த காரணத்தால் படப்பிடிப்பு கூட தாமதமானது. என் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன்”, என்கிறார் ராய் லட்சுமி[2]. பாவம், கஷ்டப் பட்டும், பலன் கிடைக்கவில்லை போலும். முன்னர், ராகவா லாரன்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார், இப்பொழுது, சான்ஸ் கிடைப்பதில்லை போலும்!

Lakhsmi Raai - casting cauche-3

முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: கடந்த சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்து வருகின்றனர்[3]. கஸ்தூரிக்கு அடுத்து இவர் இம்மாதிரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது[4]. எல்லா துறைகளிலும் என்ற போது, பெண்கள் எங்கு, ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் கொண்ட வேலைகளில் அத்தகைய நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது. அந்த வரிசையில் நடிகை ராய்லட்சுமி தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது[5]: “அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா?”, என்று தெரிவித்துள்ளார்[6].

Lakhsmi Raai - casting cauche-5

வெளிப்படையாக கருத்தைச் சொன்ன லக்ஷ்மி ராய்: ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, லக்ஷ்மி ராய் தனது உடலைக் காட்டி நடிப்பதில் தயங்கியதில்லை[7]. அதே போல, விசயங்களை சொல்லும் போது, மனம் திறந்து பேசி விடுகிறார். விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், தைரியமாக அவ்வாறான கருத்துகளை சொல்லி விடுகிறார். இரு உடைகள், அதாவாது, “டூ-பீஸ்” தோரணையில் எல்லாம் நடித்த ராய், திரையுலகில் இருக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோனோர், நடிகைகளுடன் படுக்க ஆசைப்படுகின்றனர் என்று கூறினார். அவர்களில் சிலர் தம்முடைய விருப்பங்களை-தேவைகளை தெரிவித்து விடுகின்றனர். நிச்சயமாக, “படுத்தால் சினிமவில் நடிக்க சான்ஸ்” என்ற, “காஸ்டிக் கௌச்” பழக்கம் திரையுலத்தில் உள்ளது என்றார். “கிரேடர் ஆந்திரா டாட் காம்” என்ற இணைதளத்தில் வந்த இந்த விசயத்தை வழக்கம் போல, செய்தியாகப் போட்டுள்ளன மற்ற ஊடகங்கள்[8]. பெரிய நடிகைகள் கூட இதிலிருந்து தப்பவில்லை, விலக்கு அளிக்கப்படவில்லை[9]. அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தமது பெரிய பட்ஜெட், பிரபலமான புராஜெக்ட் என்று எடுக்கும் படங்களில் சான்ஸ் கிடைக்காது[10]. அவ்வாறு வெளியேற்றப்பட்டால், அவர்களது, கதி அதோகதிதான்.

Lakhsmi Raai - casting cauche-4

நடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள்,  அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகள் இத்தகைய பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள் என்றால், அவர்களது சங்கம் மூலமும் பிரச்சினையை எழுப்பலாம்!

© வேதபிரகாஷ்

21-05-2017.

Lakhsmi Raai - casting cauche-6

[1] தமிழ்.பிளிமி.பீட், உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்: ஃபீல் பண்ணும் ராய் லட்சுமி, Posted by: Siva,,Updated: Friday, May 19, 2017, 16:09 [IST]

[2] http://tamil.filmibeat.com/heroines/suffered-mentally-physically-says-raai-laxmi/articlecontent-pf57150-046378.html

[3] தமிழ்.பிளிமி.பீட், படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல், Posted by: Siva, Updated: Thursday, May 18, 2017, 10:43 [IST]

[4] http://tamil.filmibeat.com/heroines/raai-laxmi-talks-about-casting-couch-046357.html

[5] வெப்துனியா, படுக்கையை பகிர மறுத்தால் பட வாய்ப்பு கிடைக்காது; ராய் லட்சுமி, Last Modified: வெள்ளி, 19 மே 2017 (10:47 IST).

[6] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/raai-laxmi-about-actress-film-chance-in-industry-117051800041_1.html

[7] Greater.andhra.com, Some Producers Sleep Around: Lakshmi Rai, May 17 , 2017 | UPDATED 18:13 IST.

[8] Lakshmi Rai shows no inhibition towards showing off skin to please her fans. She also doesn’t hesitate in speaking her mind. She always makes bold statements without worrying about the consequences. In a recent media interview, the actress known for her perfect bikini body revealed that most of the producers in the film industry sleep around with the actresses. “Some filmmakers put emphasis on their personal needs,” she said boldly. She also stated that casting couch really does exist in the movie industry. Lakshmi Rai said a section of producers sleep around with some actresses. One must appreciate for her daring statements. But expectedly, she said she didn’t face it herself. Now, she is being trolled for this last statement.

http://www.greatandhra.com/movies/movie-news/some-producers-sleep-around-lakshmi-rai-81923.html

[9] IndiaGlitz, They enter industry to sleep around: Raai Laxmi, Thursday, May 18, 2017.

[10] Raai Laxmi, the ‘Ammadu Let’s Do Kummudu’ and ‘Tauba Tauba’ sensation, has suggested that the phenomenon of casting couch is commonplace across film industries. While she never faced it herself, Raai speaks from her experience that some people enter the industry only to “sleep around”.  Mostly, fledgling and aspiring actresses are at the receiving end of casting couch. Coming straight from the horse’s mouth is another open secret: even well-known actresses (star heroines?) are not exempt from casting couch.  In case an actress refuses to give in to sexual demands, she is unceremoniously shunted out of the project! In recent times, a couple of actresses have talked about casting couch in Tollywood and other Southern industries.

http://www.indiaglitz.com/they-enter-industry-to-sleep-around-raai-laxmi-telugu-news-185657.html

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? பிரீத்தி ஜெயின் – மதுர் பண்டார்கர் பிரச்சினை – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (2)

மே 4, 2017

நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா? பிரீத்தி ஜெயின் மதுர் பண்டார்கர் பிரச்சினைசீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்! (2)

internet campaign about Sabita Rai

சபிதாசுகுமாறன் பணத்திற்காகக் கூட நாகரிகம் இல்லாமல், அடித்துக் கொள்வார்களா?: உண்மையிலேயே ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில், பாதிக்கப் பட்ட நடிகை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு, சில இணைதளங்கள் சினிமாவைப் பற்றி “கிசு-கிசு” தோரணையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அச்சு-ஊடகங்களும் மூன்று எழுத்து நடிகை, நான்கு எழுத்து நடிகருடன் ஓட்டலில் கும்மாளம், ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம், பார்ட்டி, ….என்றெல்லாம் செய்திகள், புகைப்படங்களும் வெளியிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட நடிகை-நடிகர்கள் சில நேரங்களில் “அது நானில்லை” என்று அறிவித்து மௌனமாகி விடுகிறார்கள். இல்லை, மின்னணுத்துறை வல்லமையுடன்  படங்களை / வீடியோக்களை திரித்தியுள்ளனர், மாற்றியுள்ளனர், என்று புகார் கொடுத்து இருந்து விடுகின்றனர். நடவடிக்கை எடுத்தது, கைதானது என்று சில செய்திகளே வருகின்றன. பெரும்பாலான விசயங்கள் மறக்கப் படுகின்றன. ஆக, சமிதா-சுகுமாறன் பணத்திற்காகக் கூட நாகரிகம் இல்லாமல், அடித்துக் கொள்வார்களா என்று கவனித்தால், அது சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் இவர்களின் நடவடிக்கைகள் மக்களால் நிச்சயமாக கண்காணிக்கப் படும்.

internet campaign about and against Sabita Rai

டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை பாலிமர் தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள்[1]: மேலும் விளக்கம் அளித்துள்ள சபிதா ராய், தனக்கும் ராடான் மீடியா ஊழியருக்கும் நடு ரோட்டில் சண்டை நடந்தது உண்மை தான். ஆனால், அது எதற்காக என்பது குறித்து சேனல் பொய்யான செய்தியை வெளியிட்டுவிட்டது, என்று கூறியுள்ளார்…… எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து பாலிமர் தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை பாலிமர் தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள். பாலிமர் தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் “நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று பேசியதற்கு “இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் – பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் “மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே,” என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்[2]. இதனை நான் நடிகர் சங்கத்தில் விஷால் அண்ணா மற்றும் கார்த்தி அண்ணாவிடம் கொண்டு சென்றேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். நான் தவறு செய்திருந்தால் கூனிகுறுகி நிற்பேன். என் மீது எந்தவொரு தவறுமே இல்லை. வேறு எந்தவொரு தொலைக்காட்சி வெளியிடவில்லை, டி.ஆர்.பிக்காக இப்படியொரு செய்தியை வெளியிட்டு என்னை தவறாக சித்தரித்துவிட்டார்கள். ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார். டி.ஆர்.பிக்காக செய்தார்களா, வேறு காரணத்திற்காக செய்தார்களா என்று ஆராயும் முன், இத்தகைய கண்றாவிகளை தொலைக்காட்சி செனல்கள் காட்டுவதே கேவலமாக இருக்கிறது. முன்னர் +2 தேர்வின் போது, நாளெல்லாம் சன் டிவி நித்தியானந்தா வீடியோவைக் காண்பித்தது[3]. ஆனால், மற்ற பிஷப்-முல்லாக்களின் வீடியோக்களை லெனினும் எடுக்கவில்லை, ஒளிபரப்பவில்லை போலும். ஆக மொத்தம் இவர்களுக்கெல்லாம், சமூக பிரஞை என்றிருந்தால், இத்தகைய கேவலமான செயல்களை செய்ய மாட்டார்கள்.

Madgur Bhandarkar - Preeti Jain

இயக்குனரை கொலை செய்ய முயன்ற நடிகைக்கு [பிரீத்தி ஜெயின்] சிறைத் தண்டனை: பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான மதூர் பண்டார்கர் மீது நடிகை பிரீத்தி ஜெயின் கடந்த 2004ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குனர் மதூர் பண்டார்கரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயின், அவரது கூட்டாளிகள் நரேஷ் பர்தேஷி, ஷிவராம் தாஸ் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை விசாரித்த மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபணமானதால், நடிகை பிரீத்தி ஜெயின் மற்றும் இரண்டு பேருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது[4]. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். நீதிபதி தீர்ப்பு வாசித்த உடனேயே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி, பிரீத்தி ஜெயின் மனு தாக்கல் செய்தார். மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி, பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியதுடன், நான்கு வாரங்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்[5]. இதேபோல் மற்ற இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

Preeti Jain out on bail

அயல்நாட்டில் பிறந்து, வளர்ந்து லண்டனில் படித்து, தில்லியில் பட்டம் வாங்கிய பிரீத்தி ஜெயன் கொலை வழக்கில் சிக்கியது[6]: பிரித்தீயின் தந்தை ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரி, கெய்ரோவில் வேலை செய்தபோது, இவர் அங்கு பிறந்தார். பிறகு ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, பாகிஸ்தான் என்று பல நாடுகளில் குழந்தை பருவம் கழிந்தது. இங்கிலாந்தில் படித்து, தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். மாடலிங் மற்றும் நடிப்பு இவற்றில் அதிக விருப்பம் கொண்டிருந்ததால், 1999ல் தனது பெற்றோர் இறந்தவுடன் மும்பைக்கு வந்தார்[7]. 2004ல் தன்னை மதூர் பண்டார்கர் 1999 மற்றும் 2004 காலத்தில் தன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் மற்றும் தனது படங்களீல் நடிக்க வைக்கிறேன் என்றெல்லாம் ஆசைகாட்டி பலமுறை கற்பழித்ததாக குற்றம் சாட்டினார், வழக்கும் தொடர்ந்தார்[8]. ஆனால், அது 2012ல் உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.  2005ல், இவர் பண்டார்கரை கொலை செய்ய முயற்சித்தார் என்று கீழ்கண்டவர்களின் மீது வழக்குத் தொடரப்பட்டது.

  1. பிரீத்தி ஜெயின்
  2. நரேஷ் பர்தேசி,
  3. சிவராம் தாஸ்,
  4. ….
  5. ….

இப்பொழுது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது[9].

Preeti Jain out on bail- after conviction

சினிமா தொழிலை படிப்பாக சொல்லிக் கொடுப்பது, வேலையாகக் கொள்வது, பென்களின் நிலைமை: நன்றாகப் படித்த, நவநாகரிகமான பிரீத்தி ஜெயின் போன்றவர்களின் நிலைமையே இவ்வாறு இருந்தால், சாதாரணமான பெண்களின் நிலை எப்படியிருக்கும் என்பதனை கவனிக்கலாம். ஆனால், இன்றைய தேதியில், டிவி-சினிமா ஆசைகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் மாடலிங் [விளம்பர நடிப்பு], கம்பெரிங் [நிகழ்ச்சி தொகுப்பாளர்] நடிப்பு போன்ற்வற்றில் ஈடுபட தயாராக இருக்கின்றனர். பணக்கார, நாகரிகமான குடும்பத்தவர் தங்கள் பெண்கள் இவ்வாறான தொழில்களில் ஈடுபடுவதை பெருமையாகவே கருதுகிறார்கள். ஆனால், நடுத்தர வர்க்க  பெண்கள்  அவ்வாறு செய்ய முடியாது. குடும்பமும், சமூகமும் ஒப்புக் கொள்ளமுடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.  இதற்கான பயிற்சிக்காக மத்திய-மாநில அரசுகளின் சினிமா-நடிப்பு முதலியவற்றைக் கற்றுக்கொடுக்கும் பள்ளி-கல்லூரிகள் உள்ளன.  மாணவியர் தயாராக உள்ளார்கள். தவிர தனியார் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களும் இவற்றில் ஈடுபட்டுள்ளனர். ஆக, இதில் படிக்க, பயிற்சி பெற செல்லும் பெண்கள் 100% ஒழுக்கமாக இருக்க முடியுமா என்று சொல்ல முடியாது. இருப்பினும் பெண்கள் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். சினிமா நடிப்புத் தொழில் அடுத்து, தொலைக்காட்சியும் சேர்ந்து விட்டது. செய்தி தயாரிப்பு, வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, என்று பலவாறான துறைகளை ஏற்படுத்தி, வியாபார ரீதியில் லபம் பெறத்தான் அந்நிறுவனங்கள் இருக்கின்றனவே தவிர மற்ற சமூக பிரஞை, தனிமனித ஒழுக்கம், கற்பு போன்றவற்றைப் பற்றி கவலைப்படுவதில்லை. மேலும், இத்தொழில் செய்பவர்கள், அதைப் பற்றி தரக்குறைவாக பேச மாட்டார்கள்; உயர்வாக மதிக்க வேண்டும் என்று தான் உறுதியாக இருப்பார்கள், பிரச்சரம் செய்வார்கள்.

© வேதபிரகாஷ்

03-05-2017

Nadgur Bhandarkar titter - 28-04-2017

[1] சென்னை.ஆன்லைன், டிஆர்பிக்காக என் வாழ்க்கைய நாசமாக்கிட்டாங்கசபிதா ராய் கண்ணீர், May 01, 2017, Chennai

[2]http://chennaionline.com/article/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D

[3]  பிறகு அது போலியாக தயாரிக்கப் பட்டது, என்று நீதிமன்றம் எடுத்துக் காட்டியது. இருப்பினும், நக்கீரன் அதனை வைத்து நன்றாகவே காசு சம்பாதித்தது.

[4] மாலைமலர், நடிகை பிரீத்தி ஜெயினுக்கு ஜாமீன்: சிறைத்தண்டனை 4 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு, பதிவு: ஏப்ரல் 28, 2017 21:06.

[5] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/28210651/1082574/Preeti-Jain-Gets-Bail-and-sentence-suspended-for-4.vpf

[6] Hindusthan Times, Madhur Bhandarkar-Preeti Jain case: Five things we know so far, April.28, 2017. 16.45 IST.

[7] http://www.hindustantimes.com/mumbai-news/madhur-bhandakar-preeti-jain-case-five-things-we-know-so-far/story-fx27FXjZH49hfQGx7n0X0J.html

[8] Indian Express, Who is Preeti Jain? Why did she try to kill Madhur Bhandarkar?, By: Express Web Desk | New Delhi | Published:April 28, 2017 8:44 pm.

[9] http://indianexpress.com/article/entertainment/bollywood/who-is-preeti-jain-why-did-she-try-to-kill-madhur-bhandarkar-4632240/

நடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)!

ஏப்ரல் 8, 2017

நடிகர்நடிகை திருமண வாழ்க்கை, முந்தையபிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்முறிவு, பிரிவுதற்கொலைதொடரும் அவலங்கள் (3)!

MGR - wife Sadanandavati - ammukutti

சினிமாகாரர்கள்நடிகநடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].

MGR - three wives Thangamani, Sadanandavati, Janaki

திராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும்நடிகர்கள்ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.

EVR and wives

பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா?: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.

Karunanidhi and his wives

திராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.

self-respect marrage in front of EVR, Anna, Karu etc

ராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா?: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.

  1. பொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.
  2. சட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.
  3. பெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.
  4. அவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].
  5. ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.
  6. தங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.
  7. விவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.
  8. தாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.
  9. இவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
  10. ஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.

© வேதபிரகாஷ்

06-04-2017

Radhika-Pothen-Sarat etc

[1]  உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.

[2]  எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.

[3]  சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.

[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.

[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.

[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.

[7]  நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]

[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்? (2)

ஏப்ரல் 1, 2017

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்? (2)

Kamal Hassan could not find any relation between the rapists and their scriptures

கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபடுவதற்கு மகாபாரதமா காரணம்?: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா? இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா? பள்ளியில் எல்லா மணவர்களையும், ஒவ்வொரு மத இலக்கியத்திலிருந்தும், ஒரு பாட்டு என்று வைத்து படிக்க வைப்பது தெரிந்த விசயமே, பிறகு, இந்த அறிவிஜீவிக்களுக்கு, அவ்வாறே எல்லா மத உதாரணங்களையும் எடுத்துக் கொள்ள ஏன் முடிவதில்லை?

Mahabharat - Kamal Hassans blabber reached all-PIL

இந்து  மக்கள் கட்சி 15-03-2017 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது[1]: “சமீப காலத்தில் கமல் ஹஸன் தொடர்ந்து இந்துவிரோத கருத்துகளை சொல்லிவருகிறார். இப்பொழுதும், தேவையில்லாமல் மகாபாரதத்தை விமர்சித்துள்ளார். இதே போன்று இஸ்லாம் மற்றும் கிருத்துவம் அவற்றின் புத்தகங்களான பைபிள் மற்றும் குரான் பற்றி விமர்சிப்பாரா? பிரமணராகப் பிறந்தும், பிராமண மதத்திற்கும், இந்துமதத்திற்கும் பேசி வருவது அவருக்கு வழக்கமாகி விட்டது. “விஸ்வரூபம்விவகாரத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அடிபணிந்து போனார். ஆனால், இப்பொழுது இப்படி பேசுகிறார். இதற்காக மன்னிப்பு கோராவிட்டால், அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்”, என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்[2]. இந்துத்துவவாதிகள் எல்லோருமே, இப்படி வழக்குத் தொடர்கிறார்கள், ஆனால், முடிவு என்னாகிறது என்று தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு சமீபத்தைய சரித்திர நிகழ்வுகள், இந்துமதத்தைப் பற்றிய சம்பிராதாயங்கள் முதலியவை தெரியாமல் இருப்பது வருத்ததிற்குரிய விசயமாகிறது.

Kamal Hassan - complaint filed

கமல் பேச்சிற்கு வழக்கு தொடர்ந்தது (14-03-2017): நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், “12-03-2017 அன்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்[3]. இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்[4]. தினமணி கூட, “விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும்[5], என்ன பேசினார் என்று வெளியிடவில்லை. சமீபத்தில் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார், ரசிகர்கள் கூட திகைக்கிறார்கள் என்று முடித்துக் கொண்டது[6].

Father- daughter competing with each other

பார்ப்பன அப்பனுக்கு வைசிய பெண் வக்காலத்து வாங்கியது: புரிய வேண்டும் என்பதற்காகத் தான் இத்தலைப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பார்ப்பனன் – பனியா கும்பல் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது சகஜமாக, ஏதோ ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளது போன்று சில அறிவுஜீவிகள் உரிமையுடன் செய்து வருகிறார்கள். அதேபோல, மற்றவர்களைக் குறிப்பிடாமல் இருப்பது அவர்களது பெருந்தன்மையான “சகிப்புத் தன்மையை”க் காட்டுகிறது எனலாம்! ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு 27-03-2017 அன்று நடைபெற்றது[7]. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது, “மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.”  இவ்வாறு அக்‌ஷராஹாசன் கூறினார்[8]. “எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார்”, என்றதால், அவமதிக்க வேண்டும், இந்துக்களைத் தூண்டிவிட வேண்டும் போன்ற நோக்கில் தான் பேசியிருப்பது வெட்டவெளிச்சமாகிறது. மேலும், “மிகவும் ஆழமாக சிந்தித்து”, இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவனது வக்கிரம், குற்றமனம், இந்துக்களை பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலியவை உள்ளன என்றாகிறது.

Kamal Hassan - Pranavananda complaint filed

பிரனவானந்த கொடுத்த புகார் / தொடுத்த வழக்கு (19-03-2017) நிலுவையில் உள்ளது: பெங்களூரு,  மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை  சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக 26-03-2017 அன்று பெங்களூரு  காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்[9]. அதில், ‘‘நடிகர்  கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா  கூறியிருந்தார். கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக  எந்த ஆதரமும் இல்லை  என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக கூறப்படுவதால், அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள்  என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை.  மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே  வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி  அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்[10].

© வேதபிரகாஷ்

31-03-2017

Shruti hasan - Mayim

[1] Hindusthan Times, PIL filed against Kamal Haasan for alleged derogatory remarks on Mahabharata, Updated: Mar 21, 2017 17:12 IST, KV Lakshmana , Hindustan Times

[2] http://www.hindustantimes.com/india-news/pil-filed-against-kamal-haasan-for-alleged-derogatory-remarks-on-mahabharata/story-oWRYVWjcyzyqKNMqd2MdaM.html

[3] விகடன், மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு!, Posted Date : 20:21 (21/03/2017); Last updated : 09:49 (22/03/2017).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/84251-valliyur-court-orders-to-submit-investigation-report-on-case-against-kamalhassan.html

[5] தினமணி, விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு, by DIN, Published on 21st March 2017 02.23. IST.

[6]http://www.dinamani.com/tamilnadu/2017/mar/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-2670020.html

[7] தி.இந்து, காபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்‌ஷராஹாசன் கருத்து, ம.மோகன், Published: March 28, 2017 11:14 ISTUpdated: March 28, 2017 11:14 IST

[8] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article9604204.ece

[9] தினகரன், மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் கமல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார், 2017-03-27@ 00:37:53

[10]http://www.dinakaran.com/News_detail.asp?Nid=290106&fromNewsdog=1&utm_source=NewsDog&utm_medium=referral

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)

ஏப்ரல் 1, 2017

கமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)

Mahabharat - Rajamaulis dream.3

ராஜமௌலியின் கனவு “பிரம்மாண்டமான மகாபாரதம்”: சமீபத்தில் மகாபாரதம் குறித்த நிலைப்பாட்டில் வெளிப்பட்ட இரு சினிமாக்காரர்களின் கருத்துகளைக் கவனித்தால், அவர்களது யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து  கொள்லலாம். ராஜ மௌலி பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு, “மகாபாரதம் கூட எனது கனவு புராஜெக்ட். ஆனால் அதைத்தான் அடுத்து எடுப்பேனா என்பது எனக்கே தெரியவில்லை. அதை எடுக்க ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்,” என்றார்[1]. ஏற்கனவே மகாபாரதம் படத்திற்காக ஒருசில நடிகர்களை அவர் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் குறிப்பாக கிருஷ்ணர் வேடத்திற்கு ஜூனியர் என்.டி.ஆரை தேர்வு செய்து வைத்ததை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளதையும் இணைத்து பார்க்கும்போது ராஜமவுலியின் அடுத்த படம் மகாபாரதம்தான் என கூறப்படுகிறது[2]. கனவு படமாக மகாபாரதத்தை இயக்க எண்ணி உள்ளாராம். பாகுபலியை விட பிரமாண்டமாக மகாபாரதம் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மாநில அளவிலான படங்களை இயக்கினால் அதற்கான செலவு செய்வது கடினம் என்பதால் ஹாலிவுட்டில் இப்படத்தை இயக்க அவர் எண்ணி இருக்கிறாராம். இப்படத்தை இயக்கத் தொடங்கினால் அடுத்த மூன்று வருடங்களுக்கு தமிழ், தெலுங்கில் பட இயக்கத்துக்கு டாட்டா காட்ட வேண்டி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால், அதே நேரத்தில், “உலக மகாநாயகனின்” நிலையோ இப்படி இருக்கிறது.

Mahabharat - Rajamaulis dream.2

ஆணவப்படுகொலைகள், பெண்ணாதிக்கம் செய்தல், நடிகைகள் கற்பழிப்பு முதலியவற்றிற்கு மகாபாரதம் தான் காரணம் என்பது போல பேசியது[3]: 12-03-2017 அன்று, ஒரு பேட்டியில், சமூகநீதி என்றெல்லாம் பேசப்படுகின்ற நிலையில் ஆணவப்படுகொலைகள் நடப்பது கேவலமானது. சமீபத்தில் நடிகைகள் கற்பழிக்கப் படுவது போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேட்ட போது, இன்று ஊடகங்கள் அதிகமாக இருக்கின்றன, அதனால், (செய்திகள்) பெரிதாக வந்து கொண்டிருக்கின்றன, வர வேண்டும் என்றெல்லாம் பேசி விட்டு, இடையிடையில், மகாபாரத்தைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது[4]. “இன்னும் அந்த மகாபாரத்தில் உள்ள சூதாட்டப் படலத்தை படித்துக் கொண்டிருக்கிறோம், அதிலிருந்து மீண்டு வந்ததாகவே தெரியவில்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம், அதனால் அந்நிகழ்வுகள் ஆச்சரியம் இல்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அந்த ஆளின் அறியாமை அல்லது வேண்டுமென்றே குதர்க்கமாக பேசியது தெரிகிறது. இங்கு “மகாபாரதத்தை”ப் பற்றி இழுத்தது ஏன் என்று தெரியவில்லை. தசாவதாரம் என்று படம் எடுத்து, சரித்திரப் புறம்பான விசயங்களை பரப்பியதால் இந்துவிரோதத்தை சம்பாதித்துக் கொண்டான். “விஸ்வரூபம்” என்ற பெயரை வைத்து, துலுக்கர் சமாசாரத்தை வைத்து படம் எடுத்தபோது, துலுக்கர் இவனை வருத்தெடுத்து விட்டனர். பயந்து போய், அடிபணிந்தான் “உலக மகாநாயகன்”. இப்பொழுது ரூ 60 கோடி நஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், பாகுபலி போன்ற படங்கள் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. ஆக, ராஜமௌலி மகாபாரதம் எடுக்கப் போகிறேன் என்றதும், இவனுக்கு “காண்டாகி” / பொறாமையாகி விட்டது போலும்!

Mahabharat - Kamal Hassans arrogance

கமல் ஹஸனும், தனிமனித வாழ்க்கையும்: கமல் ஹஸன் திறமையான மனிதன் தான், சிறுவயதிலிருந்தே அத்தகையை திறமைகளை வளர்த்து வந்தான். ஆனால், வயதாக, சினிமாத் தொழிலில் ஈடுபட, பெண்களின் ஈடுபாட்டால்-சகவாசத்தால் “காதல் இளவரசன்” குடும்ப விவகாரங்களில் தோல்வியைத்தான் அடைந்தான். கமல் ஹஸனுக்கு –

  1. குடும்பத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியவில்லை,
  2. ஆரம்பத்திலிருந்தே கணவன்–மனைவி சண்டை, தோல்வி,
  3. விவாகரத்து, ………
  4. திருமணம் இல்லாமல் இரு பெண்களைப் பெற்றுக் கொண்டது,
  5. பிறகு அதை சரிசெய்ய முயன்றது,
  6. அவர்களைக் கவனிக்க “ஆயா” போன்று நடிகைகளை வைத்துக் கொண்டது,
  7. “சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்று நடிகைகளுடன் வாழ்ந்தது,
  8. உடல்நலம் சரியாகவில்லை,
  9. சினிமாவில் தனது வியாபாரம் போய்விட்டது மற்றும்
  10. வயதாகி விட்டதால் முன்னர் போன்று நடிக்க முடியவில்லை,

போன்ற காரணங்களினால் கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். “போத்தீஸ்” விளம்பரத்தில் நடிக்கும் அளவில் வந்தாகி விட்டது. ஏதாவது பேசி, மக்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற வேலையில் இறங்கி விட்டார். இல்லை யாராவது அவரை பேச வைக்கிறார்களா, எந்த இயக்கத்தின் சார்பாக அவ்வாறு பேசி வருகிறாரா என்றும் ஆராயத் தக்கது.. “டுவிட்டரில்” தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவது அல்லது அதிகப் பிரசிங்கத் தனமாக உளறுவது முதலியவற்றை இன்று செய்திகளாக மாற்றி வெளியிட ஆரம்பித்து விட்டன ஊடகங்கள்[5]. தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகாபாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[6]. இப்பிரச்சினை “புதிய தலைமுறை” டிவி பேட்டியிலிருந்து தொடங்கியுள்ளது.

Mahabharat - Kamal Hassans blabber reached all-complaint

மகாபாரதத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற மரபு: மகாபாரதப் புத்தகத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. அப்படி புத்தகம் இருந்தாலும், கிடைத்தாலும், நூலகத்திற்கு / அடுத்தவருக்குக் கொடுத்து விடுவர். இதுதான் உண்மை. ஏனெனில், மகாபாரதம் மதநூல் இல்லை, அதில் நல்லது-கெட்டது பற்றிய விவரங்கள் இல்லை, குடும்பங்களைப் பிரிப்பது, சண்டை போடுவது, ஏமாற்றுவது, போசம் செய்வது, அநியாயமாக சிசுக்களைக் கொல்வது, யுத்த தர்மங்களை மீறி குற்றங்கள் புரிவது போன்ற விவரங்கள் தான் உள்ளன[7]. ஜைன-பௌத்த இடைசெருகல்கள் அதிகமாக இருந்தன என்று இன்னொரு இடத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன். பொதுவாக அதனை யாரும் பின்பற்றக் கூடாது என்றுதான் சொல்லி வருகின்றனர். “ராமர் நடந்தது படி நடந்து கொள், கிருஷ்ணர் சொன்னதைக் கேட்டுக் கொள் என்பார்கள்”, அதாவது, கிருஷ்ணர் நடந்தது படி நடந்து கொள்ளலாகாது, சொன்னதை மட்டும் கேட்டுக் கொள், என்பது அதன் பொருள். ஆனால், முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் அதில் அதிக அளவில் விருப்பம் செல்லுத்தினார்கள். ஏனெனில், அத்தகைய கெடுக்கும், சீரழிக்கும், அழிக்கும் முறைகள் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அதனால், முதலில் மகாபாரதம் தோன்றியது, பிறகு ராமாயணம் தோன்றியது என்று கூட மாற்றினார்கள். ஆனால், அவர்களால் இந்துக்களின் நம்பிக்கையை ஒன்றும் செய்யமுடியவில்லை.

Mahabharat - Kamal Hassans blabber reached all

சினிமாக்காரர்ளும் மகாபாரதமும்: அதனால், மகாபாரதத்தை “…….படித்துக் கொண்டிருக்கிறோம்,நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அபத்தமானது. வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பாக பேசிய பேச்சாகும். நிச்சயமாக அதைக் கண்டிக்க வேண்டும், பேசிய கமலுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும். உண்மையில் சினிமாக்காரர்கள் அதை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், அதில் வரும் ஆயிரக்கணக்கான கிளைக்கதைகள், பாத்திரங்கள், வசனங்கள் முதலியவற்றை அப்படியே காப்பியடித்து, மாற்றி, ஏன் தலைகீழாக்கி, சினிமாவாக தயாரித்து வருவது தெரிந்த விசயமே. அப்படி திருடி சம்பாதிக்கும் கயவர்கள் தாங்கள் திருடிய மூலத்தை எப்பொழுதும் சொல்வதில்லை. ஆனால், கேவலப்படும் போது, இவ்வாறு பேசுகிறார்கள். அதனால் தான், பெரும்பாலான சினிமாக்காரர்கள் உருப்படாமல் போகிறார்கள். பெண்மையை, பெண்களை சீரழிப்பதே சினிமாக்காரர்களும், சினிமாக்களும் தான் என்பது தெரிந்த விசயமே. அதுமட்டுமல்லாமல், தினந்தினம் நடிகைகள் இந்த நடிகன் என்னை படுக்க அழைத்தான், அந்த தயாரிப்பாளன் உடலுறவுக்குக் கூப்பிட்டான் என்று விவகாரங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே மனைவி-மக்கள் என்று குடும்பம் நடத்துகிறவனாக இருந்தால், அவன், அன்றே செத்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தான், மானம், ரோஷம், சூடு, சொரணை என்பதெல்லாம் இல்லையே! அந்நிலையில், இவனும் சரியாக இல்லை, இவன் குடும்பமும் ஓழுங்காக இல்லை, என்ற நிலையில் இவ்வாறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு இந்துமதத்திற்கு எதிராகப் பேசி வருவது அயோக்கியத்தனமாகும்.

© வேதபிரகாஷ்

31-03-2017

Mahabharat - Kamal Hassans blabber reached all-complaints

[1] தினகரன், ஹாலிவுட்டில் மகாபாரதம் நான் ராஜமவுலி பிளான், Feb 27, 2017

[2] http://m.dinakaran.com/cdetail.asp?Nid=13251

[3] புதிய தலைமுறை, மகாபாரதம் குறித்து கமல் சொன்னது என்ன?, March 21, 2017 – 07:37 PM

[4] http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/tamilnadu/112/85600/kamal-speech-about-mahabharatham-in-agniparitchai

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு, By: Karthikeyan, Published: Tuesday, March 21, 2017, 23:37 [IST]

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/police-investigate-report-on-case-against-actor-kamalhassan-277559.html

[7] இவ்விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் (உதாரணத்திற்காகக் கொடுக்கப்ப்பட்டுள்ளது, இதிலும் சில தவறான விசயங்கள் உள்ளன):

  1. Mahabharat is an epic of relations. One can find family, societal and political relations explained well in this epic.  There are many relations explained in this epic that a common person will find it difficult to understand. For instance, the Pandavas were born from different Gods, but their father is one. Also, that Draupadi has five husbands, which in today’s time is neither understood not accepted. Such woman in modern times are understood as prostitutes.
  2. After losing the game of gamble, Duryodhan had asked Draupadi to sit on his left thigh. For most people, this is the reason why he is the villain. Although his this action was bad, but according to the tradition that was followed during that time, a king would ask his wife to sit on his left thigh and daughter on the right. This is the reason why religious posters and calendars show the goddesses on the left side. Even in Hindu marriages, the wife is made to sit on the left side.
  3. Most people know that Mahabharat has been written by Ved Vyas. This is not completely true. Ved Vyas is actually not a name, but a surname. This surname was given to those who had all the knowledge od all the Vedas. There have 27 Ved Vyas before Krishnadwaipayan. He was the 28th one who wrote this epic. Since he was born dusky, his name was Krishna (Krishna was dark in colour) and he was born on a dweep (island) and hence dwaipayan.
  4. It is believed that Shrimad Bhagwad Geeta is the only Geeta, which includes the wisdom given by Krishna.  This is true, but there is another fact that there are 10 more Geeta. Vyadh Geeta, Parashar Geeta AND Ashtavakra Geeta is part of those 10 Geeta.
  5. Many people believe that Mahabharat teach about religion. Some people also connect Mahabharat with truth and false. In reality, no instance in Mahabharat proves what is right or wrong. The truth changes in this epic from situation to situation.
  6. One instance of right and wrong comes when Dronacharya asks for Eklavya’s thumb. While most people believe this attitude of Dronacharya to be wrong. But, there was actually nothing wrong in it. According to Mahabharat, once while Dronacharya was bathing in the river, a crocodile had caught him, that time Arjun had saved his life. At that moment, Dronacharya had promised Arjun that he would make him the best bow and arrow shooter. To fulfill this promise, he had asked Eklavya to give his thumb. This proves that there is no definition of what is right and wrong.
  7. There used to be no concept of Zodiac during the time of Mahabharat. The entire astrology was based on the 27 constellations.
  8. The dice that was used to play the game of gamble by Shakuni had only four sides instead of six. However, nothing more than this is known about the dice.
  9. Most people believe that Brahmastra are those weapons that were given by Gods after years of meditation. However, this is not the entire truth. While some Brahmastra are clearly visible, there are some that are only in mantras. Like converting the wheel of a chariot into a chakra.
  10. Involvement of foreigners in Indian battles has been our history. In Mahabharat too, foreigners were involved. While people only believe that it was a war between the Pandavas and Kauravas. There were many Romans and Macedonians had participated in the war.
  11. It is a common known fact that Abhimanyu was killed by the 7 maharathi with a chakravihiyu. According to Maulik Mahabharat, Abhimanyu had fought with bravery and killed Duryodhan’s son out of the 7 maharathis. Angry with this, Dusashan’s son had killed Abhimanyu.
  12. Mahabharat has been written in three phases. In the first phase, 8,800 shlokas were written, in the second phase, 24 thousand shlokas were written and one lakh shlokas were written in the final phase.

http://daily.bhaskar.com/news/JM-13-shocking-facts-about-mahabharat-which-is-why-it-is-not-kept-at-home-4512232-PHO.html

நடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை!

மார்ச் 15, 2017

நடிகை கஸ்தூரி பேட்டி:  தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை!

Kasturi about cast-couch controversy-2

நடிகை கஸ்தூரியிடம் பேட்டி: மார்ச்.8 உலக பெண்கள் தினம் என்பதால், நாளிதழ்கள் பேட்டி கண்டு செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நடிகை கஸ்தூரியிடம் பேட்டி கண்டு  டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. இவர் தமிழ் சினிமாவில் (90 –களில், பிரபுவுடன் சின்னவர் உட்பட) பல படங்களில் நடித்தவர்[1]. ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் கஸ்தூரி நடித்தார்[2]. அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை கஸ்தூரிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது சொந்த விவகாரம் காரணமாக, அதாவது தனது மகள் நடனம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், சென்னைக்கு வந்துள்ளார். “பிரசபவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நடிகைகளை பார்க்கும் போக்கு வினோதமாக இருக்கிறது. ஜெஸ்ஸிகா அல்பா மற்றும் பியான்ஸ் போன்றவர்களைத்தான் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதே போன்ற உருவ அமைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உடம்பில் சுருக்கங்கள், தழும்புகள் அல்லது தொங்கும் முலைகள் என்று இருக்கும் உடம்பை ஏற்றுக்கொள்வதில்லை,” இவ்வாறு வெளிப்படையாகக் கருத்துகளை சொன்னார் [3].

Kasturi about cast-couch controversy-TOI

பெண்கள் படும் பாடு – அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது: அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு [டைம்ஸ் ஆப் இந்தியா] அளித்த பேட்டியில் கூறியதாவது[4]:  “நட்சத்திரங்களின் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்[5]. நடிப்புத் தொழில் சற்று சிரமமான ஒரு தொழில்[6]. நடிப்புத் தொழிலுக்காக நடிகைகள் அதிக உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும். தன்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு நடிகருடன் நடிக்கும் போது, எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். சினிமா மட்டுமல்லாமல்,இது போன்ற செயல்கள் எல்லாத் துறைகளிலும்தான் இருக்கிறது. தங்களுக்கு தோன்றியதையெல்லாம், நட்சத்திரங்கள் செய்ததாக கதை கட்டி விடுகின்றனர். ஆனால் ஆண்கள் உதவியின்றி பெண்களால் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பது உண்மை. நடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக  சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள். பொதுவாக, கதாநாயகிகள் தங்களை அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என சில நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடக்கவில்லை எனில், அந்த நடிகைகளிடமிருந்து பட வாய்ப்புகளை பறித்து விடுவார்கள். எனக்கும் அப்படி ஏற்பட்டுள்ளது.

 Kasturi about cast-couch controversy

தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார்: “தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகரோடு, நான் ஒரு படத்தில் நடித்தேன்[7]. அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டேன்[8]. உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது  காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இது உண்மைதான்,” என கஸ்தூரி கூறினார்[9].  இது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது[10]. தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர் யார் என்று பார்க்கும் போது, சரத்குமார், விஜய்காந்த், என பல பெயர்கள் ஞாபகத்தில் வருகின்றன. அது தெலுகு ஹீரோவா என்று, ஒரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[11]. ராதிகா ஆப்தே குறிபிட்ட அதே நடிகரா என்று இன்னொரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[12]. இதெல்லாம் வழக்கம் போன்ற கிசுகிசு, பரபரப்பு மற்றும் ஊடக வியாபாரத் தனம் என்று தெரிகிறது, ஏனெனில், அந்த நடிகர் யார் என்று சொல்லவில்லை.

கஸ்தூரி அளித்த விளக்கம்[13]: சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் “நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது” என்று கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இது குறித்து கடும் சர்ச்சையும் எழுந்தது. இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “இரண்டு நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன். முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள். இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக ஒரே ஒரு ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள். பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம் தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்கவேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லை,” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி[14].

நடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள்,  அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

© வேதபிரகாஷ்

15-03-2017.

[1] தமிழ்.வெப்துனியா,சினிமா துறையில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ் செய்வது உண்மைதான்: மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி!, ஞாயிறு, 12 மார்ச் 2017 (13:23 IST)

[2] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/for-film-opportunities-in-the-field-of-cinema-doing-adjustment-true-actress-kasthuri-117031200006_1.html

[3] “People have an obsession in the US about looking a certain way after pregnancy. They have Jessica Alba and Beyonce as their role model and want to have the same body structure. They cannot accept their body with stretch marks or sagging breasts. I had just given birth to my son and wanted to be part of the shoot,”

http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/casting-couch-in-filmdom-isnt-a-myth-it-does-exist/articleshow/57593669.cms

[4] தமிழ்.வெப்துனியா, என்னை படுக்கைக்கு அழைந்த அந்த நடிகர்நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி, திங்கள், 13 மார்ச் 2017 (08:54 IST)

[5] லங்காஶ்ரீ, பட வாய்ப்புக்காக நடிகைகளை இப்படித்தான் அழைக்கின்றனர்! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி, 12 மார்ச் 2017 (13:23 IST)

[6] http://news.lankasri.com/entertainment/03/121121

[7] அததெரண, பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பார்கள் – Open Talk, March 13, 2017  10:46:AM

[8] http://tamil.adaderana.lk/news.php?nid=89069

[9] http://www.tamil.webdunia.com/article/star-interview/actress-kasthuri-share-her-experience-117031300009_1.html

[10] Times of India, Casting couch in filmdom isn’t a myth, it does exist,  Mrinalini  Sundar | TNN | Mar 12, 2017, 01.00 AM IST.

[11] http://www.gulte.com/movienews/56528/Telugu-Hero-Asked-Her-To-Sleep-With-Him

[12] https://www.mirchi9.com/movienews/radhika-apte-kasthuri-hinting-person/

[13] தி.இந்து, சக நடிகைகளைப் பற்றி அவதூறாக பேசவில்லை: கஸ்தூரி, Published: March 14, 2017 12:19 ISTUpdated: March 14, 2017 12:19 IST

[14] http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/article9583040.ece